Thursday, April 20, 2006

பாபர் மசூதி இடிப்பு: பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கூட்டு சதி

பாபர் மசூதி இடிப்பு: பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கூட்டு சதி - லிபரான் கமிஷனில் மத்திய அரசு குற்றச்சாட்டு

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் குறித்து லிபரான் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. அதன் முன்பு மத்திய அரசு தனது இறுதி வாக்கு மூலத்தை எழுத்துப்பூர்வமாக நேற்று சமர்பித்தது. 246 பக்கங்களும், 149 பக்க இணைப்பும் கொண்டதாக வாக்குமூலம் இருந்தது.

அதில் உத்தரபிரதேசத்தில் 1992-ம் ஆண்டு முதல் மந்திரியாக இருந்த கல்யாண்சிங், அவரது மந்திரிகள், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத், சிவசேனா ஆகியவற்றின் தலைவர்கள் ஆகியோர் முன்கூட்டியே திட்டமிட்டு தீட்டிய கூட்டுச்சதியின் விளைவாகவே பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=253092&disdate=4/20/2006

No comments: