Thursday, April 20, 2006

தரங்கெட்ட பிரச்சாரங்கள் - ஷிஹாபுதீன்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
தரங்கெட்ட பிரச்சாரங்கள் - ஷிஹாபுதீன்
******************************************
எனக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்கபெற்ற இதை இங்கு மக்களின் கருத்துக்காக பதிவு செய்கின்றேன். கோயா ஷிஹாப் என்பவரிம் இருந்து shihabi50@yahoo.co.in என்ற முகவறி மூலம் கிடைக்கபெற்றது .- MUGAVAITHAMIZHAN
**********************************************

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் மீது என்றென்றும் நிலவட்டுமாக.அன்புள்ளமும் நடுநிலைச் சிந்தனையும் கொண்ட எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே,
இலக்கணப் பிழைகள் ஏராளம் இருக்கலாம்.
(இதை எழுதி முடித்த பின்னர்தான் இந்த கேள்வி பதில் -இதுதான் இஸ்லாம்- வெப் சைட்டில் வந்தது என அறிந்தேன். அத்துடன் “EXCELLENT ARTICLE:” என்று குவைத்திலிருந்து SHAHUL HAMEED என்ற எஞ்சினியரும், இது நடுநிலையாளரின் பதில் அல்ல என்று சகோதரர் முகவை தமிழன் என்ற ரயீஸுதீனும் தனது கருத்தை பதிவு செய்திருந்ததை (Ervaadi Yahoo Groops மூலமாக) அறிந்து கொண்டேன்.)

(எஞ்சினியர் ஷhஹுல் ஹமீத் அவர்களே, இது கட்டுரை அல்ல, இதை பழி அல்லது இட்டுக் கட்டுரை எனலாம்)

கடந்த இருபதாண்டு காலமாக தமிழகத்தில் இஸ்லாம் அதன் தூய வடிவில் மக்களை சென்றடைந்து கொண்டிருக்கின்றது. இதனை புரிந்து கொண்ட எம் சகோதரர்கள் இறைவனுக்கு நன்றி சொல்லி அவனை மட்டுமே வணங்கி வழிபடுவதை விட்டும்ஷைத்தானின் அடிச்சுவட்டை பின்பற்றும் போக்கில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு பிறர் மீது (குறிப்பாக பி.ஜெய்னுல் ஆபிதீன் மீது) குற்றச்சாட்டுகளுடன், திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் திரிந்து கொண்டிருக்கின்றனர்.

இதன் தெடர்ச்சியாக சமீபத்தில் உலா வந்து கொண்டிருக்கும் -பி.ஜெ. வை பற்றி- என்ற ஒரு குப்பை கேள்விக்கு, ஒருவர் சில பக்கங்களில் தனது அறிவை அள்ளி அள்ளி வீசியிருக்கின்றhர்.

(இவர் கூறுவது அனைத்தும் உண்மையாயின் அதன் விளைவை பி. ஜெய்னுல் ஆபிதீன் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது முதன் முதலாக நாம் பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்குத் தரும் எச்சரிக்கை.)

வஞ்சபுகழ்ச்சி என்ற வார்த்தையை ஏட்டில் மட்டுமே நாம் படித்திருந்தோம்.
இவரோ ஒருபடி மேலே சென்று தனது பதில் மூலம் வஞ்சபுகழ்ச்சி அணிக்கு தலைவராகலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று வஞ்சபுகழ்ச்சி அணிக்கு தலைவராவதில் பலரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செயல்படுகிhர்கள்.

அறிவு பூர்வமான கேள்விக்கு அருமையான பதிலை தந்துவிட்டோம் என்ற மிதப்பில்இருந்தாலும் அவரது கவனத்திர்காக சிலவற்றை இங்கே தருகின்றேhம்.

கேள்விக்கான பதிலை ஆம் என்ற ஒரேயடியாக சொல்லிவிட முடியாதாம்.
ஆனால் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் என்று பல(த்த) அடியாக அவர் சொல்லும் விதம் பழ்லுல் இலாஹியையே பின்னுக்கு தள்ளிவிட்டது.

பிறை பார்த்தல் ஜகாத் மற்றும் முதஷhபிஹhத் என்று பட்டியலிடும் சகோதரருக்கு இன்னமும் எதுவெல்லாமோ சொல்லவேண்டும் போலிருக்கின்றது.

எதையுமே தனது சட்டமாக பி.ஜெ. சொல்வதில்லை என்பது இவருக்கு மிக நன்றhகத் தெரியும். ஆனால் இவர்களாக திரித்து வளைத்து ஒடித்து அவர் மீது பழிபோடும் திட்டத்தை சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களிடமிருந்து குத்தகைக்கு எடுத்திருப்பது, சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களின் பாவச்சுமையை சற்று தளர்த்துமே தவிர வேறு ஒன்றும் சாதிப்பதர்காக அல்ல.

ஆரம்ப காலத்திலிருந்து பி.ஜெ. எதை ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடிக்கின்றhரோ அதை அவருக்கும்-மக்களுக்கும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் சொல்லத் துணியாதவா,; நேரடியாக இயக்கவியலில் தான் பெற்ற ஞானத்தை எடுத்தியம்ப முற்பட்டு சிலரை பட்டியலிடுகிறhர்.

அபூ அப்தில்லாஹ்-ஜhக் நிர்வாகம் மற்றும் நிர்வாகிகள்-ஹhமித் பக்ரி;-பழ்லுல் இலாஹி;-மொய்தீன் மற்றும் ஜக்கரியா உட்பட பலர் என்கிறhர்.
வக்காலத்து என்றhல் இதுதான்.
நமக்குத் தெரிந்தவரை பி.ஜெ. எதை ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடிக்கின்றhர் என்றhல் அவரது பெயரை பி. இஸட். என்பதை பி.ஜெ. என்று (அன்று அறியாமல் எழுதிவிட்டதை) மாற்ற முற்படவில்லை என்பது தான் (இது உலக விசையம்)அதே சமயம் பிறை-ஜகாத் போன்றவற்றில் முரண்டு பிடிக்கின்றhர் என்றhல் அவற்றை குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரத்தோடு நிரூபிக்க முன்வாருங்கள.; அதை விடுத்து இயக்கமில்லா இயக்கத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அபூ அப்தில்லாஹ், இல்லாமல் போய் கொண்டிருக்கும் இயக்கங்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் பழ்லுல் இலாஹி போன்றவர்களுக்காக ஏன் வக்காலத்து வாங்குகிறhர்?

குர்ஆன் மற்றும் ஹதீஸை வைத்து பி.ஜெ. விடம் அழகிய முறையில் விவாதம் செய்ய சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களே முன்வந்த போது தவ்ஹீதை மந்திரமாகக் கொண்ட இவர்கள் முற்படாதது ஏன்? ஒரு வேளை இவர்களும் வாதத்திறமை என்று சொல்லி நழுவுகிறhர்களோ என்றுதான் எண்ண முடியும்.
இரண்டு விசையங்கள் தான் இதில் உண்மை எனலாம்.
ஒன்று - குர்ஆன் மற்றும் ஹதீஸ் எவரிடமும் தோற்று விடாது (குர்ஆன் - ஹதீஸுக்கு முன்னால் பி.ஜெ. ஒன்றுமேயில்லை).
இரண்டு - சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை விட இவர்கள்தான் தொடை நடுங்கிகள்.
பிறருடைய குறைகளை தருவித் துருவி ஆராயாதீர்கள் என்ற குர்ஆன் வசனம் இவருக்கு மட்டும் பொருந்தாது என்ற முறையிலல்லவா எழுதியுள்ளார்.
நஜhத் ஏட்டை அழிக்க முயற்சி............
ஜhக் இயக்கத்தை அழிக்க முயற்சி............
அரும்பாடு பட்டு தமுமுக வளர்ந்த பின்பு வெளியேறி அதை அழிக்க முயற்சி...... (வளர்த்த பின்பு என்றெழுதாமல் வளர்ந்த பின்பு என்று கவனமாக எழுதியுள்ளார்)என்றெல்லாம் தினமலர் பாணியில் தனது கடமைக்காக (அவரது அறிவு பூர்வமான கேள்விக்குஅவரே) பதில் தந்திருக்கிறhர்.
இவ்வாறெல்லாம் புழுதிகளை எழுதுவதர்காக பெட்டி வாங்கினார் என்று (இவரது சகாக்கள் சொல்வது போல) இவர் மீது நாம் பழி போட மாட்டோம். ஒரு வேளை பெட்டி வாங்கியிருந்தால் ஆங்காங்கே பி.ஜெ. வை (வஞ்சமாய்) புகழ்ந்ததர்காக பாதியை இவரது சகாக்கள் திரும்ப வாங்கிவிடுவார்கள்.
கடைசியாக இவரது -அகழ்வாராய்ச்சி-யின் முடிவை இவ்வாறு எழுதியுள்ளார்.. பி.ஜெ.யின் சமுதாயப் பார்வை மிக பலவீனமானது என்பதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு உதாரணம் என்று அபூ அப்துல்லாவுக்கு ஆள் சேர்க்க முயல்கிறhர்
பி.ஜெ. யின் அரசியல் பார்வை ஜPரோவாகிவிட்டது என்று சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்ததை மேற்கோள் காட்டி -பெயரா-சிரியருக்கு விசுவாசமாக இலக்கியம் படைத்துள்ளார்.
(பி.ஜெ. யின் முன்னாள் சகாக்கள் இப்போது ஷம்ஸுதீன் காஸிமியிடம் ஒப்பந்தம் செய்துவிட்டது தெரியாமல் இருக்காது)வாடகைக்காக குற்றஞ்சாட்டும் பேர்வழிகள் பி.ஜெ. தூங்கியெழும் முன் அவர் கண்ட கனவை இ-மெயில் மூலம் இந்தியாவில் இருக்கும் தனது புதிய சகாக்களுக்கு அனுப்பிவிடுவார்.
தகுதியிருந்தும் தங்களது தரங்கெட்ட பிரச்சாரங்கள் மூலமாக மக்களிடமிருந்து தனியாகிவிட்ட இந்த இந்த இ-மெயில் பேர் வழிகள் தாங்கள் படைப்பதெல்லாம் இலக்கியங்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றhர்கள். தனது ஊர் பெயர் எதுவும் குறிப்பிடாமல் கள்ள வெப் சைட் மூலமாகவும் கருப்பு வெள்ளை பிரதிகள் மூலமாகவும் மக்கள் சேவை செய்து கொண்டிருக்கின்றhர்கள்.
இவர்கள் ஒருவேளை தங்களது இயர் பெயரையே மறந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.பி.ஜெ. போகிற போக்கில ஒன்றுமே புரியவில்லை முடித்திருக்கிறhர். இதே மனோபாவத்துடன் இருப்பதாயின் ஒருக்காலும் புரியப்போவதில்லை.இறுதியாக..... இலக்கணமும்-இலக்கியமும்-நாட்டு நடப்பும்-நன்மையும்-தீமையும் நன்றhகத் தெரிந்த ஒருவர்தான் இதை எழுதியிருக்க வேண்டும்.
நல்லெண்ணத்துடன் எழுதுங்கள். நஜhத்-ஜhக்-தமுமுக-பழ்லுல் இலாஹி என்று பட்டியலிட்டிருப்பது உங்களது வஞ்சனையை வெளிப்படுத்துகிறது.
உங்களுக்காக பிரார்தனை செய்யும் போது பிறருக்காகவும் குறிப்பாக பி.ஜெ. வுக்காகவும் பிரார்தனை செய்யுங்கள்.
வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் ஈடேற்றத்தை வழங்கிடுவானாக.
ஷிஹhபுத்தீன்.

2 comments:

Anonymous said...

Assalamualikkum
Dear brother i Saw ur Artical its very 5n. bcz ur also do that same( who did that b4)I think Mr.pj very close friend for u ist?.you can try to writ nuterly dnt wrg coting to others ok.
Allah Belive all of us .
wasalam

சுல்தான் said...

Assalaamu Alaikhum
Dear brother
I believe you are one of the stark followers of PJ. As per my knowledge and my friends, the article in tamilmuslim.com is given in a right manner not leaning on either side. FYI, I really respect PJ that doesn't mean, you can't tell the truth. If any body tells anything against PJ, you peoples (followers of PJ) branded them as they are against Thowheed and followers TMMK group. Please change this attitude for the sake of Islam & Muslim ummah. Wassalaam