இஸ்லாமியர்களை அடக்குவதற்காக பொடா சட்டத்தை முதலில் கொண்டு வந்தவர் கருணாநிதி!
திருமாவளவன்
சிதம்பரம், ஏப்.29: மத்தியில் ஆட்சி நடத்திய பா.ஜ.க.வை திருப்திபடுத்தவும் இஸ்லாமியர்களை அடக்குவதற்காகவும் முதன் முதலில் பொடா சட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலில் எனக்கு இங்குள்ள ஈஸ்லாமிய மக்கள் வாக்களித்து அதிக வாக்குகளை பெற்றுத் தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பாக திகழ்கிறது. இஸ்லாமிய மக்கள் நீண்ட நெடுங்காலமாக திமுகவை ஆதரித்து வந்தனர். 4 முறை முதல்வராகவும், ஏறத்தாழ 16 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்த கருணாநிதி இஸ்லாமிய மக்களுக்கு என்ன செய்தார்?
தற்போது வெற்றிபெற்றால் இஸ்லாமியர்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிப்பேன் ஏன்கிறார். காயிதேமில்லத் காலத்திலிருந்து இந்த இடஓதுக்கீடு கோரிக்கை இருந்து வருகிறது. ஏன் அப்போது கருணாநிதி நிறைவேற்றவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இஸ்லாமியர்களுக்கு தனி இடஓதுக்கீடு வழங்க பிற்படுத்தப்பட்டோர் நலவாரிய ஆணையத்தை அமைத்தார். மேலும் இஸ்லாமியர்களின் நீண்டநாள் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்தார்.
முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு வழங்குவதற்கும், பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் பேசி வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு தனி இடஓதுக்கீடு வழங்குவது குறித்து மதரீதியானது ஏன்பதால் நமது சட்டத்தில் இடமில்லை. அப்படி அந்த பெயரில் அமைத்தால் ஒரு வழக்கு மூலம் அதற்கு தடைபெற்று விடலாம். எனவே இக்கோரிக்கையை சிக்கலின்றி நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை அமைத்துள்ளார்.
தற்போது இஸ்லாமியர், தலித் ஓற்றுமை அரசுக்கு தேவை. இஸ்லாமியர்கள் இடஓதுக்கீடு கோரிக்கை குறித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து போராடும். ராணுவத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஓதுக்கீடு கிடையாது. அதுபோன்று முஸ்லிம்களுக்கும் இடஓதுக்கீடு கிடையாது. இதுபோன்று அனைத்து தரப்பிலும் பிரதிநிதித்துவம் கோரி போராட வேண்டும். இஸ்லாமியர்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தியவர் கருணாநிதி. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் கருணாநிதியின் ஆட்சியில் போலீஸார் இஸ்லாமிய மக்களை வேட்டையாடிதை யாரும் மறக்கவில்லை. இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எதிரானவர் கருணாநிதி என்றார் தொல்.திருமாவளவன்.
நன்றி - தினமணி

No comments:
Post a Comment