Saturday, July 25, 2009

இலங்கையில் வன்முறை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது

இலங்கையில் வன்முறை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது

இலங்கை, 25.07.2009 சனிக்கிழமை இலங்கையின் கல் (Diamond) வர்த்தகத்தில் சிறந்து விளங்குவது பேருவலை நகரம்.

இங்குள்ள மஹகோட பகுதியில் உள்ள மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளி பிரசித்தி பெற்றதாகும். நேற்று 24.07.2009 இரவு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் திரண்டு வந்து மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியை தாக்கி சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த முஸ்லிம் சகோதரர்களை ஓடஓட விரட்டியடித்து ஆயதங்களால் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் சகோ.மாஹின் உள்ளிட்ட இருவர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர். மேலுர் ஐவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

50 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

பள்ளிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும் காடையர்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை தீ வைத்து எரித்ததோடு மட்டுமல்லாமல் பள்ளிக்கும் இவர்கள் தீவைத்த காரணத்தினால் அங்கிருந்த புனித திருமறைகளும் (குர்ஆன்) மார்க்க விளக்க புத்தகங்களும் பெரும் எண்ணிக்கையில் எரிந்து சாம்பலாகி உள்ளன.

பள்ளிக்கு எதிரில் இருந்த மருந்தகம் (Pharmacy) ஒன்றும் கூட இவ்வன்முறையாளர்களால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தர்ஹா டவுன் என்று அழைக்கப்படும் இங்கு, நேற்று புஹாரி கந்தூரி வைபவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வன்முறையைத் தொடர்ந்து நாளை 26.07.2009 இப்பள்ளியில் நடைபெற இருந்த மார்க்க நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை நடைபெற இருந்த நிகழ்ச்சிகளில் மௌலவி முபாரக் மதனி, மௌலவி இஸ்மாயில் ஸலபி மற்றும் தமிழகத்தை சேர்ந்த சகோதரர் கோவை ஐயூப் ஆகியோர் உரையாற்ற இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது செய்தியாளர்
பேருவலையிலிருந்து இம்தியாஸ்
நன்றி : இஸ்லாமிய தஃவா டாட் காம்

Saturday, July 18, 2009

இஸ்ராவும் மிஃராஜும்

இஸ்ராவும் மிஃராஜும்


நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையானது ஓர் அதிசய நிகழ்வாகும். ஓர் அற்புதமாகவும் மாத்திரமின்றி பல தத்துவங்களையும்- தாத்பரியங்களையும் தன்னகத்தே பொதிந்ததாகவும்- அடிப்படையான பல உண்மைகளை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. நபியவர்களின் இவ்விண்ணுலக யாத்திரை இரு கட்டங்களைக் கொண்டதாக அமைந்தது. மக்காவில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு மேற்கொண்ட பயணம் அதன் முதற் கட்டமாகும். அதனை அல் இஸ்ரா என வழங்குகிறோம். இப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக நபியவர்கள் அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து வானுலகம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டமை அமைந்தது. இதுவே மிஃராஜ் எனப்படுகிறது. இந்த யாத்திரையின் முதற் கட்டத்தை அல்குர்ஆன் கீழ்வருமாறு விளக்குகிறது.

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும். பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

நபியவர்களின் இப்புனித யாத்திரை முஸ்லிம்களின் இரு முக்கிய தலங்களுடன் தொடர்புற்று இருப்பதைக் காண முடிகிறது. அல் மஸ்ஜிதுல் ஹராமும்- அல் மஸ்ஜிதுல் அக்ஸாவுமே இவ்விரு புனித ஸ்தலங்களாகும்.


Sunday, July 12, 2009

நீதிமன்ற காவலில் இருந்த முஸ்லிம் மீது 6 பொய் வழக்கு

திரு. அப்துல் ரசாக் அவர்கள்

மதுரை: வேறு ஒரு வழக்கில் கோர்ட் காவலில் இருந்த போது போலீசார் பொய்யாக பதிவு செய்த 6 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க கோரிய மனு குறித்து டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தைசேர்ந்த மக்கள் விக்டரி இயக்க தலைவர் அப்துல் ரசாக் ( 9443465765) தாக்கல் செய்த ரிட் மனு: நான், ஊனமுற்றவர்கள், விபத்தில் பாதிக்கப்படுவோர், முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். சுய உதவி குழுக்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். ராமநாதபுரத்தில் கடந்தாண்டு நவம்பரில் மழை பெய்து வெள்ளபெருக்கு ஏற்பட்ட போது பாரதிநகர் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். நான் அவர்களை சமாதானப்படுத்தினேன். இதை மனதில் வைத்து என் மீது போலீசார் பொய் வழக்கு போட்டனர். இவ்வழக்கில் நான் முன்ஜாமீன் பெற்றேன். பிறகு 2008 டிச., 5ல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னை போலீசார் கைது செய்தனர். மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் என்னை விடுவிக்கும்படி அன்று மாலை 4 மணிக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையில் " அன்று காலையில் நடந்த மறியல் போராட்டத்தில் கைதாகி ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் போலீஸ் வாகனங்களின் இருக்கைகளை சேதப்படுத்தியதாக,' என் மீது 6 வழக்குகளை போலீசார் பொய்யாக பதிவு செய்தனர். போலீசாருக்கு எதிராக போராடுவதால் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜின்னா ஆஜரானார். நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், ""மனு குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி உள்துறை செயலாளர், டி.ஜி.பி., எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப,'' உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர்

தமிழ்நாடு மாநில முஸ்லிம் லீக் பொதுச் செயலாளராக கே.ஏ.எம். அபூபக்கர் தேர்வு

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற் றது.

மாவட்டங்களில் முஸ்லிம் லீகின் பணிகளை விரிவுபடுத்தவும், தாய்ச் சபையை பலப்படுத்தவும் மாவட்டவாரியாக கலந் தாய்வுக் கூட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட வாய்ப்பு உள்ள தொகுதிகளில் பணி களை முடுக்கிவிட முடிவு செய்யப் பட்டது.

தமிழ்நாடு மாநில இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு துவங்கியது.

மாநில முஸ்லிம் லீகின் அணிகளின் அமைப்பாளர் கள், துணை அமைப்பாளர் கள், குழுக்களின் உறுப்பி னர்கள் சிறப்பு அழைப் பாளர்களாக பங்கேற்றனர்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் முதன்முறையாக நடை பெற்ற இந் நிர்வாகி கள் கூட்டத்தில் இயக்கத் தின் எதிர்கால செயல் திட் டங்கள் விரிவாக ஆலோ சிக்கப்பட்டன.

இந்த ஆலோசனையின் அடிப்படையில் மாவட் டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயல் பாட்டை விரிவுபடுத்தவும், எதிர்கால பணிகளை திட்டமிட்டு அமைக்கவும் மாவட்ட வாரியாக மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், நகர, கிராம, பிரைமரி அளவிலான நிர் வாகிகளை உள்ளடக்கிய கலந்தாய்வு கூட்டங்களை நடத்துவது, சென்னை, வேலூர், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்த மண் டலங்களுக்குள் வருகின்ற மாவட்டங்கள் அம் மண் டலத்தில் உள்ள ஒரு ஊரில் மாவட்டவாரியாக இந்த கலந்தாய்வு கூட்டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் போட்டியிடும் வாய்ப் புள்ள தொகுதிகள் கண்ட றியப்பட்டு அந்த தொகுதி களில் முழு கவனமும் செலுத்தப்பட்டு வாக்கா ளர்களை சரிபார்த்தல், பிரைமரி அமைப்புக் களை ஊர்கள்தோறும் ஏற்படுத் துதல், வீடு வீடாக சென்று முஸ்லிம் லீக் உறுப்பினர் களை சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில செயற்குழு கூட்டத்தை வரும் ஆகஸ்டு மாதம் 2-ம் தேதி ஞாயிற் றுக்கிழமை திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் நடத்துவது என்று இக் கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.

தமிழ்நாடு மாநில இந்திய
யூனியன் முஸ்லிம் லீகிற்கு பொதுச் செயலா ளர் பொறுப்பு பதவியில் இருக்கின்ற கே.எ.எம். முஹம்மது அபூபக்கர் இனி பொதுச் செயலாளராக செயல்படுவார் என இக் கூட்டம் ஏகமனதாக தேர்வு செய்தது.

கூட்டத்தில் கலந்து கொண்டோர் விவரம் வருமாறு- கே.ஏ.எம். முஹம்மது அ
பூபக்கர் - பொதுச் செயலாளர் (பொறுப்பு), வடக்குகோட்டையார் அல்ஹாஜ் வ.மு. செய்யது அஹமது - பொருளாளர். துணைத் தலைவர்கள் வாணியம்பாடி அரூர் அப்துல் காலிக், சேலம் எம்.பி. காதர் ஹ{சேன், திருநெல்வேலி பேட்டை எஸ்.எம். கோதர் மொய் தீன், திருப்பூர் பி.எஸ். ஹம்ஸா. செயலாளர்கள் லால்பேட்டை மவ்லவி ஷபீகுர் ரஹ்மான், இராம நாதபுரம் எம்.எஸ்.ஏ. ஷாஜ ஹான், கடையநல்லூர் நெல்லை அப்துல் மஜீத், காயல் மஹபூப், கமுதி பஷீர். அரசியல்ஆலோசனைக் குழு அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., ஆம்பூர் எச். அப்துல் பாஸித், எம்.எல்.ஏ., சொத்து பாதுகாப்புக்குழு எஸ்.எம். கனி சிஷ்தி, திருவாரூர் எம்.எம். ஜலாலு தீன், கணக்கு தணிக்கைக்குழு பள்ளப்பட்டி எம்.ஏ. மஹபூப் அலி, கம்பம் எம். ஷாகுல் ஹமீது, வாணியம் பாடி முஹம்மது நயீம், சென்னை கே.பி. இஸ்மத் பாஷா. ஒழுங்கு நடவடிக்கைக்குழு வாணியம்பாடி எஸ்.டி. நிஸார்அஹமது, சென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன். அணி அமைப்பாளர்கள் வழக்கறிஞர் அணி வெ. ஜீவகிரிதரன், ஆலிம் அணி மவ்லவி எம். ஹாமித் பக்ரீ, சுதந்திர தொழிலாளர் ய+னியன் கோவை எம்.எஸ். முஹம்மது ரஃபீக், காயிதெ மில்லத் பேரவை - திருப்பூர் எம்.எஸ். சத்தார், சிராஜுல் மில்லத் பேரவை - கோட் டக்குப்பம் வி.ஆர். முஹம்மது இப்ராஹீம், மாணவர் பேரவை - மேலப் பாளையம் எல்.கே. எஸ். மீரான் மைதீன், இளைஞர் அணி- சென்னை கே.எம். நிஜாமுதீன், தொண்டர் அணி - திருச்சி ஜி.எம். ஹாஷிம், மருத்துவர் அணி - கோட்டக்குப்பம் டாக்டர் இக்பால் பாஷா, கொள்ளிடம் ரஷீத் ஜான், முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் இஸ்மாயில், வர்த்தகர் அணி - விழுப் புரம் கே.எம். ஷேக் தாவ+து, ரயில்வே தொழிற்சங்கம் - அப்சல். துணை அமைப்பாளர்கள் விவசாய அணி திருச்சி வி.எம். பாரூக், சிராஜுல் மில்லத் பேரவை துணை அமைப் பாளர் கண்ண மங்கலம் கவிஞர் ஹ{சைன் தாசன், கல்வி மேம்பாட்டு அணி - கவிஞர் ஏ. ஷேக் மதார், மாணவர் பேரவை ஏ.டபிள்ய+. காதர் ஷெரீப், மற்றும் அமீரக காயிதெ மில்லத் பேரவை பொதுச் செயலாளர் குத்தாலம் எம். லியாகத் அலிகான், ஹபீ புர் ரஹ்மான், கோவை அல்ஹாஜ் எல். எம். அப்துல் ஜலீல், சென்னை ஏ.எச். இஸ்மா யில், ப+வை எம். எஸ். முஸ்தபா, நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர், திண்டுக் கல் அல்தாப் உசைன், புதுப் பேட்டை கே.எஸ். முஹம் மது ஆரிப், ரப்பானி அப்துல் குத்தூஸ், காஞ்சி புரம் கே.எம். அப்துல்லா பாஷா, வேலூர் ரஹமத் துல்லாகான். நிறைவாக நாடாளு மன்ற உறுப்பினர் எம்.அப் துர் ரஹ்மான் நன்றி கூறினார்.

Saturday, July 11, 2009

காவல் துறையில் வேலை வாய்ப்பு..!

தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் தமிழ் நாடு காவல் துறயில் இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு இவ்வாண்டு நடைபெறவுள்ளது.


அதன் விதிமுறைகளுக்குட்பட்டு மேற்படி பணியில்(இரண்டாம் நிலை காவலர்) சேர விருப்பமுள்ள நமது சமுதாய இளைஞர்கள் வரும் 29.07.2009 க்குள் இதில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள விலாசத்திற்க்கு விண்ணப்பம் அனுப்பவேண்டும்.


அந்தந்த பிறைமரி தலைவர்/செயலாளர்கள் தங்கள் நகரத்திள் உள்ள இளைஞர்களை விண்ணப்பம் அனுப்ப தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ண்ப்பம் அனுப்பிய இளைஞர்களை,மாவட்டத்தில் ஒரு இடத்தில் ஒன்று கூட்டி பின்பு அறிவிக்கப்படும் தேதியில் தமிழ் நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் ஆணைக்கு இண்ங்க,மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களின் ஆலோசனைப்படி அந்தந்த நகரத்தில் இளைஞர்களுக்கு நான் பயிற்சி அளிக்க உள்ளேன்.
அதற்க்குன்டான முயற்சிகளை அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


தகுதி:1)கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி.



2)வயது 01.07.2009 1ன்று 18 வயது நிறைவு பெற்று இருத்தல்.

30.06.1991 அன்றோ அதற்க்கு முன்னரோ பிற்ந்திருத்தல் வேண்டும்.


3)உயரம் 168செ.மீ மார்பள்வு 81 இருத்தல்மூச்சு அடங்கிய மார்பு விரிவாக்கம் குறைந்தளவு 5 செ.மீ



மேலும் விபரங்களுக்கு எ.சுக்கூர்
செயலாளர்,கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
விருதாச்சலம்,செல்:00919943375559

Thursday, July 09, 2009

முகவை மாவட்ட புதிய ஆட்சித்தலைவர் பதவியேற்பு மக்கள் வாழ்த்து

முகவை மாவட்ட புதிய ஆட்சித்தலைவர் பதவியேற்பு மக்கள் வாழ்த்து


மாவட்ட கலெக்டர் திரு. டி.என்.ஹரிஹரன் அவர்களுக்கு திரு. முகவைத்தமிழன் தனது வாழ்த்துக்களை தெறிவித்தபோது.

இராமநாதபுரம்c,ஜுலை.09-

ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக நிய மிக்கப்பட்டுள்ள டி.என். ஹரிஹரன் இன்று பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டரை இராமநாதபுரம் மாவட்ட நேசனல் ஆல் இந்தியா பாரத் சேவாக் சமாஜ் (PFI) அமைப்பின் மவட்ட சேர்மனும் பி.வி.எம் அறக்கட்டளை நிறுவனருமான திரு. அப்துல் ரசாக், நேசனல் ஆல் இந்தியா பாரத் சேவாக் சமாஜ் (PFI) அமைப்பின் செக்ரட்டரி ஆடிட்டர் திரு. சுந்தர்ராஜன், நேசனல் ஆல் இந்தியா பாரத் சேவாக் சமாஜ் (PFI) அமைப்பின் ஜாய்ன்ட் செக்கரட்டரி திரு. முகம்மது ரைசுதீன் ஆகியோர் நேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சென்று சந்தித்து வரவேற்று தங்கள் வாழத்துக்களை தெறிவித்து கொண்டனர். பின்தங்கிய மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளை இப்பொறுப்பில் இருந்து தாம் மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்கு அனைவரின் முழு ஒத்துழைப்பும் தேவை என்று திரு. டி.என் ஹரிஹரன் அவர்கள் தெறிவித்தார்.

மாவட்ட கலெக்டர் திரு. டி.என்.ஹரிஹரன் அவர்களுக்கு பி.வி.எம் அறக்கட்டளை நிறுவனர் திரு. அப்துல் ரசாக் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெறிவித்தபோது.

இராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சித்தலைவரைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு :

இராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக டி.என். ஹரிஹரன் நியமிக்கப்பட் டுள்ளார். இவர் இன்று (9-ந்தேதி) இராமநாதபுரம் கலெக் டராக பொறுப்பேற்றார். சென்னையை சேர்ந்தவ ரான இவர் கடந்த 92ம் ஆண்டு வேலூரில் பயிற்சி துணை கலெக்டராக பயிற்சி முடித்த பின் 93ம் ஆண்டு கோவில்பட்டி, கொடைக் கானல், சைதாப்பேட்டை ஆகிய கோட்டங்களில் வரு வாய் கோட்டாட்சியராக பணியாற்றி உள்ளார். 97-ல் சென்னை வருவாய் அலுவல ராகவும், 98 முதல் 2001 வரை நாகபட்டினம் மாவட்ட வரு வாய் அலுவலராகவும் பணி யாற்றி உள்ளார்.

மாவட்ட கலெக்டர் திரு. டி.என்.ஹரிஹரன் அவர்களுக்கு அடிட்டர் திரு. சுந்தர்ராஜன் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெறிவித்தபோது.



தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கொள்ளை போன ரூ.7.5 லட்சத்தை விரைந்து நடவடிக்கை எடுத்து திரும்ப பெற்று தந்த மைக்காக இவருக்கு தமி ழக அரசு சார்பில் வீரதீர செயலுக் காக அண்ணா விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக முது நிலை மண்டல மேலாளராக வும், கலால் துறை மண்டல மேலாளராகவும் பதவி வகித் தார்.

நியமனம்

2006ம் ஆண்டு சேலம் மாவட்ட வருவாய் அலுவல ராகவும், அதைத்தொடர்ந்து சென்னையில் மாநில இணை புரோட்டோகால் அலுவலரா கவும் பணிபுரிந்தார். கடந்த 2008ம் ஆண்டு முதல் சென்னை மெட்ரோ குடிநீர் செயல் இயக்குனராக பணி புரிந்து வரும் இவர் தற்போது இராமநாதபுரம் மாவட்ட கலெக் டராக நியமிக்கப்பட்டுள் ளார். இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், சாய்ரித் திக், குமார் என்ற இரு குழந் தைகளும் உள்ளனர்.

Sunday, July 05, 2009

மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராதீர் : மனநல டாக்டர் அறிவுரை

மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராதீர் : மனநல டாக்டர் அறிவுரை

ராமநாதபுரம் : கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மொபைல் போனில் வரும் மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராமல் இருந் தால் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என ராமநாதபுரம் மாவட்ட மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டத் தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்தனர்.

மாணவர்களை போலீசார் விசாரித்ததில் பெண்களின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு முதலில் மிஸ்டு கால் கொடுப்பது அதற்கு எதிர்முனையில் பதில் வந்தபின் நைசாக பேசி தன்வயப்படுத்தி மிரட்ட துவங்குவது தெரியவந்தது.

மாவட்டம் முழுவதும் பெண்களுக்கு இதுபோன்ற மொபைல் போன் மிரட்டல் பரவலாக இருந்தாலும் பல பெண்கள் வெளியே சொல்வதற்கு பயந்து விட்டில் பூச்சிகள் போல் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர்.

பெண்கள் தங்களை எப்படி காத்து கொள்வது என்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறியதாவது: சமூகத்துக்கு எதிரான மனோபவாம் கொண்ட சிறுவர்கள் ,இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். சட்டத்தை மதிக்காமல் ஒருவகையான சுபாவத்துடன் செயல்படும் இவர்கள், வருங்காலத்தில் பெரும் குற்ற செயல்களிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற நபர்களிடம் சிக்காமல் இருக்க பெண்கள் கண்டிப்பாக தெரியாத மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பொதுவாக பள்ளி மாணவிகளில் ஒன்பதாம் வகுப்புமுதல் பிளஸ்2 வரையிலான மாணவிகளை, பெற்றோர்கள் நன்கு கவனித்து கொள்ள வேண்டும். மாணவிகள் வீட்டில் அரவணைப்பு மற்றும் ஆறுதலுக்கு யாரும் இல்லை என கூறி எளிதில் இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கிவிடுவர்.

பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர். தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. தொடர்ந்து யாரேனும் மிரட்டினால் தைரியமாக போலீசாரிடமோ ,மனநல டாக்டர்களையோ அணுகினால் வெளியே தெரியாமல் மிரட்டுபவர்களை எச்சரிக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக மிரட்டுபவர்கள் பயந்து கொண்டு பதில் தருபவர்களைத்தான் மீண்டும் மீண்டும் மிரட்டுவர். எனவே, பெண்கள் தங்களை காத்துக்கொள்ள வெளிநபர்களின் தவறான அணுகுமுறையை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்'என்றார்

நன்றி : தினமலர் (இராமநாதபுரம் மாவட்ட செய்திகள்) 05.07.2009

Wednesday, July 01, 2009

துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர்

துபாய் : துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக அவ‌ச‌ர‌ சிகிச்சைப் பிரிவில் இருந்து வ‌ருகிறார்.

இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல்வேறு ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளை ஆற்றிவ‌ரும் ஈமான் அமைப்பின் குழுவின‌ர் அத‌ன் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா த‌லைமையில் ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ரும் இந்திய‌ர்க‌ளை வார‌ந்தோறும் ச‌ந்தித்து அவ‌ர்க‌ள‌து தேவைக‌ளை நிறைவேற்றி வ‌ருகின்ற‌ன‌ர்.

அவ்வாறு சென்ற‌ பொழுது இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌ கால‌மாக‌ அவ‌ச‌ர சிகிச்சைப் பிரிவில் நினைவிழ‌ந்த‌ நிலையில் சிகிச்சை பெற்று வ‌ரும் த‌க‌வ‌ல் அறிந்து அவ‌ரைப் பார்த்து வ‌ந்த‌ன‌ர்.

இவ‌ர் யார் என்ப‌த‌ற்கான‌ எவ்வித‌ சான்றுக‌ளும் அவ‌ரிட‌ம் இல்லாத‌ நிலையில் ம‌ருத்துவ‌ம‌னியில் சேர்க்க‌ப்ப‌ட்டுள்ளார். இவ‌ரைப் பார்க்கையில் த‌மிழ‌க‌ம், கேர‌ளா, ஆந்திரா உள்ளிட்ட‌ மாநில‌த்தைச் சேர்ந்த‌வ‌ராக‌ இருக்க‌லாம் என‌ க‌ருத்த‌ப்ப‌டுகிற‌து.

த‌மிழ் பேசும் போது ம‌ட்டும் இவ‌ர‌து பார்வை மேலும் கீழும் வ‌ருகிறது. என‌வே இவ‌ர் குறித்து த‌க‌வ‌ல் தெரிந்தால் ஈமான் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹாவை 050 467 4399 / 050 51 96 433 எனும் அலைபேசியில் அல்ல‌து muduvaihidayath@gmail.com என்ற‌ மின்ன‌ஞ்ச‌லிலோ தொட‌ர்பு கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

அவ்வாறு த‌க‌வ‌ல் கிடைக்கும் ப‌ட்ச‌த்தில் இவ‌ர் ப‌த்திர‌மாக‌ அவ‌ர‌து குடும்ப‌த்தாரிட‌ம் சேர்ப்ப‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்ப‌டும்.

Thanks:
Muduvai Hidayath

போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !

போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !
( மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி, துபை )

தமிழகத்தின் நாளைய வரலாற்றை எழுச்சியுடனும் விழிப்புடனும் உருவாக்க வேண்டிய நமது இளைய சமுதாயம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புகையிலை சுவாசத்திலும் மதுவிலும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வதோடு நாளை வரலாற்றை உருவாக்கு முன் இன்றே எங்களை அழித்துக் கொள்கிறோம் என சொல்லாமல் சொல்லும் அவர்களது செயல்பாடுகள் மூத்த குடிமக்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கி வருகின்றன. இன்றைய இளைஞர்கள் வெகு விரைவிலேயே போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போவதற்கு யார் காரணம்? என அலசி ஆராய்வது பேதமைத் தனமாகும்.

சிறு பிள்ளையிடம் கேட்டால் கூட ஆட்சியாளர்கள் தாம் காரணமென்று உடனே சொல்லி விடுவார்கள். தமிழகத்தின் கடந்த கால வரலாற்றை பார்த்தாலே தெரியும்.

1970 க்கு முன்பு ஒரு இளைஞன் ஏதாவதொரு போதை பொருளை பெற வேண்டுமென நினைத்தால் அவ்வளவு எளிதில் அது அவனுக்கு கிடைத்து விடுவதில்லை. இடையில் எத்தனையோ குறுக்கீடுகள் பல நிலையில் அவனை சூழ்ந்து கொள்ளும். இத்தகைய சிரமத் திற்குள்ளும் அதை தேட வேண்டுமா? என்ற கேள்விக் குறியோடு அவன் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு நல் வழிக்கு வந்து விடுவது அன்றைய எதார்த்தமான நிலைபாடு.

ஆனால் இன்றைக்கு எவ்வளவு மாற்றம்? ஒவ்வொரு இளைஞனையும் வழிய தேடிவரும் நிலையில் போதைப் பொருள்கள் காணுமிடமெல்லாம் பாகுபாடில்லாமல் நிரம்பி வழிகிறது. பள்ளிக்கூடம், கல்லூரிகள், மருத்துவமனை வளாகம், பொழுதுபோக்கு கூடங்கள், வீதிகள், தோறும் என இலகுவாக கிடைக்கும் ஒரே விஷயம் கஞ்சா, மது, பீடி, சிகரெட், புகையிலை போன்ற போதைப் பொருள்களே !

இத்தகைய போதைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் அந்நிய சதிகாரர்கள் அல்லர். சாட்சாத் நமது தமிழகத்தை கடந்த 40 ஆண்டு காலமாக ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே ! என சொல்வதற்கு நமக்கு எவ்வளவு வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களான பேரறிஞர் அண்ணாவும் தந்தை பெரியாரும் கண்ட கனவெல்லாம் தமிழகத்தின் இளைஞர்களை ஒழுக்க முள்ள அறிவு ஜீவிகளாக உருவாக்க வேண்டுமென்பது தான்! அதற்காகவே இயக்கம் கண்டு பல சோதனைகளை சந்தித்த அந்த உத்தம தலைவர்களின் அருமைத் தம்பிகள் என தங்களை மார்தட்டிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்கள் நமது இளைஞர்களை போதைக்கு தூண்டுவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்?

அரசின் கஜானாவை நிரப்ப விலை மதிப்பில்லா நமது இளைஞர்களின் குறுதியும், உயிரும் தான் வேண்டுமா? ஊர் தோறும் ஆலயம் அமைப்போம் ! என்ற சொல் மாறி வீதி தோறும் டாஸ்மாக் அமைப்போம் என்றல்லவா முனைப்புக் காட்டுகிறார்கள்.

40 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்குரிய சாதனை களுக்கு மணிமகுடமாய் இருப்பது டாஸ்மாக் தானோ? ஒரு காலத்தில் துண்டு பீடி குடிப்பதற்கே சமூகத்திற்கு பயந்த இளைஞன் இன்று பள்ளிக்கூடம் செல்லும் போதே மது குடித்துவிட்டுப் போகும் அவலங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடம் செல்லும் மாணாக்கரின் நெஞ்சத்தில் கல்விக்கண் திறந்த சரஸ்வதியின் நினைவு வரும் என்பது அந்தக் காலம். இன்றோ டாஸ்மாக்கின் நினைவல்லவோ? வருகிறது.

போதை மனிதனுக்கு கேடு என்று தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. ஆனால் கடவுள் மதம் இவைகளை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் மட்டும் தான் போதைக்கு வெண் சாமரம் வீசுகின்றனர். இப்போது புரிகிறதா? இவர்களின் நாத்திக போக்குக்கு என்ன காரணமென்று போதையின் தீங்கை விவரிக்கும் போது முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இவ்வாறு கூறப்படுகிறது. ‘வீணாக பொருளை விரயம் செய்யாதீர்கள்’ நிச்சயமாக பொருளை விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 17:26,27) வீண் விரயம் என இங்கு குறிப்பிடுவது மேற்குறிப்பிட்ட போதைப் பொருளுக்காக யார் காசை செலவழிக்கிறார்களோ? அதனையே குறிப்பிடுகிறது காசை கரியாக்காதே! என்ற மூத்தோர்களின் வழக்கு சொல்லும் பீடி, சிகரெட், மது போன்றவைகளையே குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் தன்னைத் தானே கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் போது பிடிபட்டால் தற்கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு தண்டிக்கப்படுகிறான். இதை இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.


தற்கொலை முயற்சி என்பதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறது சட்டம்? (Spot Death Suicide) ஒரே நேரத்தில் சாவதா? அல்லது (Slow Motion Suicide) கொஞ்சம் கொஞ்சமாக சாவதா? இரண்டுமே ஒன்று தான் என்றால் புகை மற்றும் மது பழக்கமுடையவர்களை ஏன் இந்த தண்டனை சட்டம் முன் நிறுத்தப்படுவதில்லை?

தற்கொலைக்குப் பயன்படுத்தப்படும் கொடிய விஷப் பொருட்களான அமோனியா, நிகோடின், ஹைட்ரஜன் சயனைடு, மெத்தனால், ஹெக்சாமைன், ஆல்கஹாலில் கலந்துள்ள எத்தனால், பூச்சிக்கொல்லி மருந்தில் கலந்துள்ள ஃபீனால், டி.டி.டி.(D.D.T) விஷம், கார் பேட்டரியில் கலந்துள்ள கேட்மியம், போன்ற பொருட்களைத் தானே பீடி, சிகரெட், மது போன்றவற்றில் கலக்கிறார்கள். இப்பொருட்களை நேரடியாக உட்கொண்டால் (Spot Death Suicide) உடனடி காரணம்! பீடி,சிகரெட்,மதுவாக உட்கொண்டால் (Slow Motion Suicide) மெதுவான மரணம்! இப்படித்தான் மருத்துவ ஆய்வாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.
ஆக தற்கொலை செய்வதும் குற்றமென்றால் செய்ய தூண்டுவதும் குற்றம் தானே? இன்றைக்கு ஆட்சியாளர்கள் இளைஞர்களை (Slow Motion Suicide) மெதுவான மரணத்தின் பக்கம் தூண்டி வரும் போது ஆட்சியாளர்களை யார் தண்டிப்பது?

இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளது பாராட்டிற்குரியது ! (ஆனால் சட்டம் நடைமுறையில் இல்லை என்பது வேறு விஷயம்) அரசின் இந்த முயற்சிக்கு நல்லோர்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் !

பீடி, சிகரெட், மூலம் வரும் ஆபத்துகள் அதை பயன்படுத்துவோருக்கு மட்டும் தான் என்பதல்ல, அவன் இழுத்து விடும் புகையை சுவாசிக்கும் பக்கத்து மனிதனுக்கும் சேர்ந்தே கேடு வருகிறது.

தவறு செய்பவன் ஒருவன் தண்டனையை அனுபவிப்பது மற்றொருவன் என்பது என்ன நியாயம்? புகை பிடிப்போரே கொஞ்சம் சிந்தியுங்கள் ! பொது இடங்களில் நீங்கள் இழுத்து விடும் புகையை சகிக்க் முடியாமல் எத்தனை பேர்கள் முகம் சுளித்து மூக்கை மூடுகின்றனர். அவர்களின் மன உளைச்சலை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

இதைப்பற்றி இஸ்லாத்தின் மாபெரும் தலைவராம் அண்ணல் முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்; “ஒருவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருந்தால் அவன் தன் அருகிலிருப் போருக்கு இடைஞ்சல் செய்ய மாட்டான்’ (நபிமொழி – நூல்:புகாரி) பீடி, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையான முஸ்லிம்களே, உங்களின் செயல் இந்த நபிமொழிக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் உங்களது மறுமை நாளின் நிலையை பற்றி யோசியுங்கள். எனது காசு நான் குடிக்கிறேன் இதை தடுக்க நீ யார் என வீராப்பு பேசுபவர்களைப் பற்றி முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகிறான் ‘உங்கள் கைகளாலேயே (உங்களை) அழிவின் பால் போட்டுக் கொள்ளாதீர்கள்’(அல்குர்ஆன் 2:195) எவ்வளவு அற்புதமான வார்த்தை! பீடி, சிகரெட், மது போன்றவைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை அழித்து வருவதைத் தான் குர்ஆனும் தடுக்கிறது.

மதுவை ஒழிப்பதற்காக போராட்டக் களம் கண்டு கள்ளுக்கடை மறியலில் கைதாகி சிறை சென்ற முதல் பெண்கள் என்ற பெருமை கொண்ட தந்தைப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மாவும் அமைத்து தந்த மது ஒழிப்பு போராட்டக் களம் நாடு முழுவதும் இன்னும் வேகமாக விரிவாக்கம் பெற வேண்டும். தந்தை பெரியாரின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்ல எடுக்கப்பட்ட “பெரியார்” என்ற திரைப்படத்திற்கு ரூபாய் 95 லட்சத்தை மானியமாக வழங்கி பெருமைப்பட்டுக் கொண்டவர்கள் பெரியாரின் உயிர‌ணைய‌ கொள்கையான மது எதிர்ப்புக் கொள்கையை மட்டும் புறந்தள்ளியது ஏன்?

திரைப்படத்திற்கு கொடுத்த 95 லட்சத்தை பசுமைத் தாயகம் போன்ற மது ஒழிப்பு பிரச்சார இயக்கங்களுக்கு கொடுக்கப் பட்டிருந்தால் பெரியாரின் ஆன்மாவாவது இன்றைய திராவிட தம்பிமார்களை மன்னித்திருக்கும்.
ஒரு காலத்தில் இவன் பீடி, சிகரெட், மது குடிப்பவனா? என்று கோபத்துடன் கேட்ட நம் தமிழகத்தில் இன்று இவன் பீடி, சிகரெட், மது குடிக்காதவனா? என வியப்புடன் கேட்கத் தோன்றுகிறது. அந்தளவுக்கு நாட்டில் எங்கும் எப்போதும் போதைப் பொருள்கள் நிரம்பி காணப்படுகின்றன.

ஒவ்வொரு சமூகத்தின் இளைஞர்களுக்கும் ஒழுக்கநெறி வழிகாட்டியாக விளங்கக்கூடிய இறைப்பணியாளர்களில் சிலரும் கூட பீடி, சிகரெட், மது போன்ற போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு போய் விட்ட கன்றாவியை என்னவென்று சொல்வது? மசூதி களின் இமாம்களில் சிலரும், தேவாலயங்களின் பாதிரிமார்களில் சிலரும், கோயில்களின் பூசாரிகளில் சிலரும் கூட பீடி, சிகரெட், பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போய் தாங்கள் செய்யும் இந்த தவற்றை பிறரின் பார்வையில் படும்படியாக செய்யும் இவர்களை முன்னிலைப்படுத்தி இறைவணக்கம் செய்வோர்கள் யோசிக்க வேண்டாமா? இதுபோன்ற தவற்றை செய்யும் ஆன்மீகப் பணியாளர்களை அந்தந்த இறைப்பணித் துவத்திலிருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போது தான் இறைப்பணியும் தூய்மை யடையும். ஒவ்வொரு சமூகத்தின் பொறுப்பாளர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

அற்புதமான ஒரு இளைய சமுதாயத்தை வழி கெடுத்து விட்டதோடு நிற்காமல் அடுத்த தலை முறையையும் வழி கெடுக்கும் முயற்சியிலும் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருவது ஆரோக்கிய மானதல்ல ! நல்லெண்ணம் கொண்டோரும் சிந்தனை வாதிகளும் அவசர,அவசியமாக மது, சிகரெட், பீடி போன்ற தீய செயல்களை எதிர்த்து தீவிர களப் போராட்டம் காண வேண்டிய தருணம் வந்துவிட்டது. இத்தகைய போராட்டத்திற்கு தாய்மார்களின் ஏகோபித்த நல்லாதரவும் கிடைக்கும் ! நாம் காணப்போகும் தீவிர மது ஒழிப்பு போராட்டம் போதையில்லா சமுதாயம் உருவாக்கும் புதிய விடியலாக இருக்கட்டும் !

நன்றி : முதுவை ஹிதாயத்