Saturday, July 25, 2009

இலங்கையில் வன்முறை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது

இலங்கையில் வன்முறை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது

இலங்கை, 25.07.2009 சனிக்கிழமை இலங்கையின் கல் (Diamond) வர்த்தகத்தில் சிறந்து விளங்குவது பேருவலை நகரம்.

இங்குள்ள மஹகோட பகுதியில் உள்ள மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளி பிரசித்தி பெற்றதாகும். நேற்று 24.07.2009 இரவு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் திரண்டு வந்து மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியை தாக்கி சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த முஸ்லிம் சகோதரர்களை ஓடஓட விரட்டியடித்து ஆயதங்களால் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் சகோ.மாஹின் உள்ளிட்ட இருவர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர். மேலுர் ஐவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

50 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

பள்ளிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும் காடையர்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை தீ வைத்து எரித்ததோடு மட்டுமல்லாமல் பள்ளிக்கும் இவர்கள் தீவைத்த காரணத்தினால் அங்கிருந்த புனித திருமறைகளும் (குர்ஆன்) மார்க்க விளக்க புத்தகங்களும் பெரும் எண்ணிக்கையில் எரிந்து சாம்பலாகி உள்ளன.

பள்ளிக்கு எதிரில் இருந்த மருந்தகம் (Pharmacy) ஒன்றும் கூட இவ்வன்முறையாளர்களால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தர்ஹா டவுன் என்று அழைக்கப்படும் இங்கு, நேற்று புஹாரி கந்தூரி வைபவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வன்முறையைத் தொடர்ந்து நாளை 26.07.2009 இப்பள்ளியில் நடைபெற இருந்த மார்க்க நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை நடைபெற இருந்த நிகழ்ச்சிகளில் மௌலவி முபாரக் மதனி, மௌலவி இஸ்மாயில் ஸலபி மற்றும் தமிழகத்தை சேர்ந்த சகோதரர் கோவை ஐயூப் ஆகியோர் உரையாற்ற இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது செய்தியாளர்
பேருவலையிலிருந்து இம்தியாஸ்
நன்றி : இஸ்லாமிய தஃவா டாட் காம்

7 comments:

தங்க முகுந்தன் said...

who attacked?

தமிழருவி said...

இது முஸ்லிம்களுக்குள் நடந்த மோதல் போல் தெறிகிறது.

Anonymous said...

தயவு செய்து செய்திகளைப் பிரசுரிக்கும் போது பக்கச் சார்பின்றி வெளியிடுங்கள். இந்தப் பிரச்சினையின் பின்னணி என்ன என்பதையாவது நீங்கள் குறிப்பிட்டிருக்கலாமே.

முகவைத்தமிழன் said...

தர்ஹா வழிபாடு செய்யும் சுன்னத் ஜமாத்தினருக்கும், தெளஹீத் ஜமாத்தினருக்கும் இடையே ஏற்ப்பட்ட மோதல் துப்பாக்கி, ஹேன்ட் கிரனேட் வரை சென்றுள்ளது. பலர் மரனமடைந்துள்ளார்கள்.

இது இரு முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே ஏற்ப்பட்ட பிரச்சினைதான்.

செய்தி : http://www.sundaytimes.lk/090726/News/sundaytimesnews_09.html

http://www.colombopage.com/archive_091/Jul1248532768RA.html

Anonymous said...

நண்பர் முகவைத்தமிழன் அவர்களே!

சுன்னத் ஜமாத் என்பதை ஏன் தர்ஹா வழிபாட்டோடு இணைக்க முயற்சிக்கிறீர்கள். தர்ஹா வழிபாடென்பது இலங்கையைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட பகுதியோடும், ஒரு குறிப்பிட்ட குழுவினரோடும் சம்பந்தப்பட்டது. இலங்கை முஸ்லிம்களில் தௌஹீத்வாதம் பேசுபவர்கள் மிகச்சிலரே. தர்ஹா வழிபாட்டில் ஈடபடுபவர்களும் அவ்வாறான ஒரு குழுவினரே. இங்குள்ள அதிகமான முஸ்லிம்கள் தர்ஹா வழிபாட்டையும் பிஜே வழிபாட்டையும் ஒரே மாதிரியே பார்ப்பவர்கள், எதிர்ப்பவர்கள். எனவே தயவு செய்து சுன்னத் ஜமாத் என்பதை தர்ஹா வழிபாட்டோடு இணைக்க முயற்சிக்கதீர்கள்.

ததஜ, பாளையம்கோட்டை said...

காஃபிர்களும் செய்யாத கொடுமையை செய்த அந்த கயவர்களை முஸ்லீம்கள் என்று எழுதாதீர்கள். இப்படிப்பட்ட இனத்துரோகிகளை சகோதரர்கள் என்று கருதுவதே தவறு.

Thoobaah said...

Assalaamu Alaikum...

தாக்கிய அவர்களை பற்றிய ஆதாரங்களை முன் வைத்து விட்டு ...பிறகு அவர்களை பற்றி ....மக்களுக்கு ...வெளிச்சம் போட்டு காட்டலாம் ....

ஆதாரம் இல்லாமல் குறை கூறுவது ...திட்டுவது ...சரி இல்லை....

தாக்கிய அந்த கூட்டம்...soofi தரீக்கா என்றும், பித்அத் களில் மூழ்கி இருக்கும் சுன்னத் ஜமாஅத் என்றும்...சிலர் கூறுகின்றனர்....

எவரானாலும்...சரி....அவர்களை பற்றிய உண்மைகளை மக்களுக்கு தெரிவித்து....அவர்களை தோலுரிக்கலாம்.....

அவர்களிடம் என்ன தவறு இருக்கு என்று எல்லாருக்கும் தெரியுமே...அதனால் தான் விளக்குவதில்லை ... என்ற நினைப்பில்...இங்கு யாரும்...பொது இடத்தில் கருத்து வைக்காதீர்கள்...

நாம் அக்கூட்டத்தின் கொள்கைகளில் இருக்கோமா இல்லையா என்றே...நம்மில் பலருக்கு தெரியாது.....இது உண்மை.

இஸ்லாமிய அறிவு இல்லாத ...சிலரும்..இக்கருத்துக்களை படிக்கின்றனர்....

ஆக....பார்த்து...பக்குவமாக பேச...எழுதுமாறு...அன்புடன்...
கேட்டுகொள்கிறேன்....