Showing posts with label பென்கள். Show all posts
Showing posts with label பென்கள். Show all posts

Sunday, July 05, 2009

மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராதீர் : மனநல டாக்டர் அறிவுரை

மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராதீர் : மனநல டாக்டர் அறிவுரை

ராமநாதபுரம் : கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மொபைல் போனில் வரும் மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராமல் இருந் தால் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என ராமநாதபுரம் மாவட்ட மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டத் தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்தனர்.

மாணவர்களை போலீசார் விசாரித்ததில் பெண்களின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு முதலில் மிஸ்டு கால் கொடுப்பது அதற்கு எதிர்முனையில் பதில் வந்தபின் நைசாக பேசி தன்வயப்படுத்தி மிரட்ட துவங்குவது தெரியவந்தது.

மாவட்டம் முழுவதும் பெண்களுக்கு இதுபோன்ற மொபைல் போன் மிரட்டல் பரவலாக இருந்தாலும் பல பெண்கள் வெளியே சொல்வதற்கு பயந்து விட்டில் பூச்சிகள் போல் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர்.

பெண்கள் தங்களை எப்படி காத்து கொள்வது என்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறியதாவது: சமூகத்துக்கு எதிரான மனோபவாம் கொண்ட சிறுவர்கள் ,இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். சட்டத்தை மதிக்காமல் ஒருவகையான சுபாவத்துடன் செயல்படும் இவர்கள், வருங்காலத்தில் பெரும் குற்ற செயல்களிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற நபர்களிடம் சிக்காமல் இருக்க பெண்கள் கண்டிப்பாக தெரியாத மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பொதுவாக பள்ளி மாணவிகளில் ஒன்பதாம் வகுப்புமுதல் பிளஸ்2 வரையிலான மாணவிகளை, பெற்றோர்கள் நன்கு கவனித்து கொள்ள வேண்டும். மாணவிகள் வீட்டில் அரவணைப்பு மற்றும் ஆறுதலுக்கு யாரும் இல்லை என கூறி எளிதில் இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கிவிடுவர்.

பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர். தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. தொடர்ந்து யாரேனும் மிரட்டினால் தைரியமாக போலீசாரிடமோ ,மனநல டாக்டர்களையோ அணுகினால் வெளியே தெரியாமல் மிரட்டுபவர்களை எச்சரிக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக மிரட்டுபவர்கள் பயந்து கொண்டு பதில் தருபவர்களைத்தான் மீண்டும் மீண்டும் மிரட்டுவர். எனவே, பெண்கள் தங்களை காத்துக்கொள்ள வெளிநபர்களின் தவறான அணுகுமுறையை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்'என்றார்

நன்றி : தினமலர் (இராமநாதபுரம் மாவட்ட செய்திகள்) 05.07.2009