Friday, April 11, 2008

'காயிதே மில்லத்தின் கருத்துரைகள்' நூல் வெளியீட்டு விழா!

'காயிதே மில்லத்தின் கருத்துரைகள்' நூல் வெளியீட்டு விழா!
குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) ஏற்பாடு!

03-04-2008 வியாழக்கிழமை மாலை 7.00 மணியளவில் குவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல், காயிதே மில்லத் (ரஹ்) அரங்கத்தில் குவைத் இ.யூ.மு.லீக்கின் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் கருத்தாழமிக்க நாடாளுமன்ற, சட்டமன்ற உரைகள் மற்றும் பத்திரிகை நேர்காணல்களை மிகவும் சுவையாக தொகுத்து எழுதிய 'கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...!
குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (KKMCC) நடத்திய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 60வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக நிகழ்ந்த இந்நூல் வெளியீட்டு விழாவை குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) ஏற்பாடு செய்திருந்தது.
குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் தலைவர் கொரட்ரபுரம் முஹம்மது ரஃபீக் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் குவைத் இ.யூ.மு.லீக்கின் செயலாளர் சத்திரமனை ஏ. ஹஸன் முஹம்மது, பொருளாளர் ஷாஹின் ஷா மற்றும் தலைமை நிலையச் செயலாளர் ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கேரளா இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பானக்காடு சைய்யத் முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் அவர்கள் இந்நூலை வெளியிட, குவைத் கோல்டன் அல்மாஸ் உணவக அதிபர் முஹம்மது முஸ்தஃபா, குவைத் இ.யூ.மு.லீக்கின் தலைவர் முஹம்மது ஃபாரூக், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க(K-Tic )த்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ மற்றும் துணைத்தலைவர் மவ்லவீ எம். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவி ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்.
கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், கேரள அரசின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான பி.கே. குஞ்சாலி குட்டி, கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி. கார்த்திகேயன், தோமஸ் சாண்டி மற்றும் கேரள முன்னாள் அமைச்சர் சேர்குளம் அப்துல்லாஹ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூலின் தொகுப்பாசிரியரான குவைத் இ.யூ.மு.லீக்கின் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் நூல் குறித்து அறிமுகவுரையாற்றி ஏற்புரையாற்றியதுடன் இவ்விழா இனிதே நிறைவுபெற்றது.
இச்சிறப்பு மிகு விழாவில் மேதகு குவைத் இந்திய தூதர் எம். கணபதி, கேரள தொழிலதிபர் பத்மஸ்ரீ எம்.ஏ. யூஸுஃப் அலீ, குவைத் இந்திய இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் அல்ஹாஜ் முக்தார் மஃரூப், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் காப்பாளர் குழு உறுப்பினர்கள் சோழபுரம் ஜாஹிர், திருபுவனம் ஜாஹிர், காரைக்கால் எஸ்.எம். ஆரிஃப் மரைக்காயர், குவைத், இந்திய அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், குவைத் வாழ் தமிழக மற்றும் கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கர்கள், ஆர்வலர்கள், அனுதாபிகள், பல்வேறு தமிழ் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரங்கம் நிரம்ப கலந்து கொண்டனர்.
குவைத் இ.யூ.மு.லீக்கின் அதிகாரப்பூர்வ வலைப்பூவான www.kuwaitiuml.blogspot.comல் நிகழ்ச்சி குறித்த செய்தியையும், புகைப்படங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மேலதிக விபரங்களுக்கும், தங்களின் கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் iumlkuwait@yahoo.com / iumlkuwait@gmail.com என்ற மின்னஞ்சல்கள் வாயிலாக தொடர்பு கொள்ளும்படியும் குவைத் இ.யூ.மு.லீக்கின் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

செய்தி :
குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML)
வலைப்பூ: www.kuwaitiuml.blogspot.com
மின்னஞ்சல்கள் : iumlkuwait@yahoo.com / iumlkuwait@gmail.com

ரியாத்தில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு

ரியாத்தில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு

QURAN EXPLANATION CLASS
We are glad to inform you that Rowdha Dawa Center is going to start a
Quran Explanation Class (in tamil) weekly for gents (only)
where you can fulfill your dream of reciting glorious Quran properly
with correct pronunciation(Tajweed method) and know the true meaning.

Place: Rowdha Islamic Center
(Exit 10 Rawdha,Riyadh)
Day: (Every) Friday
Duration: 10:15am – 11:30am
Starting Date: 11-04-2008

Those who want to join in this class please do come prepared for the
Jumma prayer.

Jumma Masjid is nearby Rowdha Dawa Center.

For More Information Please contect
0507129963, 0558994867, 012492727 – 221, 235

இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லூரி ஆண்டு விழா

இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லூரி ஆண்டு விழா

இளையான்குடி டாக்டர் ஜாகிர்உசேன் கல்லூரி ஆண்டுவிழா கல்லுõரி ஆட்சிக்குழு தலைவர் முகம்மதுசுபையர் தலைமையில் நடந்தது. கல்லூரி செயலாளர் அப்துல்கரீம் வரவேற்றார். கல்லுõரி முதல்வர் செய்யதுஉசேன் ஆண்டறிக்கை வாசித்தார். 200607ம் கல்வியாண்டில் அழகப்பா பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் ஹாலித் ஏ.புகாரி கேடயங்கள் வழங்கி பேசினார். பரிசு பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர் கவுரவிக்கப்பட்டனர். இக்கல்லூரியில் இளம் பட்ட வகுப்பு அல்லது முதுகலை பட்டபடிப்பு பயிலும் மூன்று ஏழை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது கல்விக்கான முழு செலவுகளையும் சீதக்காதி அறக்கட்டளை ஏற்றுக்கொள் வதாக செயலாளர் அறிவித்தார். இரண்டாம் ஆண்டு ஆங்கில பட்டப்படிப்பு பயிலும் மாற்றுதிறன் கொண்ட மாணவர் நாகநாதன் என்பவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வாங்க நிதிஉதவி அளித்தார். கல்லூரி துணை முதல்வர் நவ்சாத்அலி நன்றி கூறினார்.

இரானுவப் பயிற்சியில் MNP அமைப்பினர்!! நாட்டிற்கு ஆபத்தா?

தீவிரவாத பயிற்சியில் RSS (தினமனி பார்வையில் சமூக சேவையா?)

நடுநிலைவாதம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராக விஷத்தை கக்கி பகையுனர்வை மூட்டிவரும் பத்திரிகைகளில் தற்சமயம் முதலிடம் வகித்து வருவது தினமனி ஆகும், ஃபாசிச சித்தாந்தத்தை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட இப்பத்திரிகையின் ஆசிரியர் குழு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ஒட்டுமொத்தமாக தீவரவாதத்தூடு தொடர்பு படுத்தி செய்திகளை வெளியிடுவதில் முன்னிலை வகிக்கி்ன்றது. இவ்வகையில் கடந்த 10-08-2007 அன்று "முஸ்லிம் இந்தியன் - பெயர் மாறுகின்றது" என்ற தலைப்பில் தினமனியின் குருமூர்த்தி ஐயர் என்ற பார்ப்பன வெறியர் ஒரு துவேஷ கட்டுரையை பதிந்திருந்தார். அந்த கட்டுரைக்கு பதில் அளிக்கும் விதமாக தினமனி மற்றும் குருமூர்த்தி ஐயரின் முகத்திரையை கிழித்து தொங்க விட்டு "இஸ்லாமிய இணையப் பேரவை" என்ற அமைப்பினர் தங்கள் இணையத் தளத்தில் "அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதிந்திருந்தார்கள்.


RSS பென் தீவிரவாதி(தினமனி பார்வையில் சமூக சேவகியா?)

அந்த சூடு மாறுவதற்குள் 10-04-2008 அன்றைய தினமனி இதழில் "படை திரட்டும்' மனிதநீதிப் பாசறை: போலீஸார் கவலை என்ற தலைப்பில் இசக்கி என்ற ஃபாசிச தீவிரவாதி எழுதிய துவேஷ கட்டுரைய வெளியிட்டு தினமனி பத்திரிகை மீண்டும் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான தனது துவேசத்தை வெளிப்படுத்தி உள்ளது.

இவர்களெல்லாம் யார்? உளவுத்துறைக்கு தெறியாதா?

மனித நீதி பாசறை பற்றியோ அல்லது அதன் செயல்பாடு பற்றியோ சிறிதும் அறிவில்லாத இசக்கி என்ற இந்த ஃபாசிஸ்ட் 2004 ம் ஆன்டு துவக்கப்பட்ட மனித நீதிப் பாசறை அமைப்பு என்று எழுதியுள்ளார் இதிலிருந்தே இந்த ஃபாசிஸ்ட்டின் அறீவீனம் வெளிப்படுகின்றது.

//"அல்-உம்மா' அமைப்பு தடை செய்யப்பட்ட பின்பு, வேலைவாய்ப்பற்ற, விரக்தி அடைந்த இஸ்லாமிய இளைஞர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் வகையில் சில அமைப்புகள் ஆங்காங்கே உருவாகி திரைமறைவில் இயங்கி வருகின்றன. //

என்று பீதியை கிளப்பும் விதமாக கட்டுரையை துவக்கியுள்ள இந்த ஃபாசிச விஞ்ஞானி இசக்கி...

//"தீவிரவாதத்தில் உடன்பாடில்லை' என கூறும் இவர்கள், முக்கியமாக மனித உரிமை மீறல்கள், காவல்துறையின் அத்துமீறல்கள் போன்றவற்றுக்கு எதிராக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். //

என்றும் எழுதியுள்ளார், நீயே தீவிரவாதத்தில் உடன்பாடில்லை, மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவு இந்த அமைப்பு போராடுகின்றது என்று எழுதிவிட்டாய் அப்புறம் எதுக்கய்யா இந்த " மனித நீதிப் பாசறையின் ராணுவப் பயிற்சியால்' காவல்துறையினர் கவலை அடைந்துள்ளனர் என்று எழுதுகின்றாய்?

அப்ப இவர்கள்? சமூக சேவகர்களா?


//பயிற்சி பெற்ற இவர்கள் எதிர்காலத்தில் தனிப்படையாக உருவெடுத்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பது சிறப்பு புலனாய்வுப் பிரிவினரின் கருத்து. //

மதுரை, கோவை, இராமநாதபுரம், என தமிழகத்தின் பல பகுதிகளில் பொது இடங்களில் ஆயுதப் பயிற்சி எடுக்கும் இந்துத்துவ தீவிரவாத குழுவான ஆர்.எஸ்.எஸ் சை விட மனித உரிமை மீறல்கள், காவல்துறையின் அத்துமீறல்கள் போன்றவற்றுக்கு எதிராக களமிறங்கி பணியாற்றி வரும் இந்த அமைப்பினர் மோசமானவர்கள் இல்லையே!!

இவர் யார்? தேச பக்தரா?

இந்திய சுதந்திரத்தில் இருந்து தொடங்கி, தேசப்பிதாவை கொன்ற இந்த தீவிரவாதிகள் மீரட், பாகல்பூர், குஜராத் என அப்பாவி மக்களை கொன்று குவித்து .ரத்த ஆற்றை ஓட்டிவரும் இந்த தீவிரவாதிகள் எடுக்கும் பயிற்சியோ அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களோ இந்த கட்டுரையை எழதிய இசக்கியின் கண்களுக்கோ அல்லது உளவுத் துறையின் கண்களுக்கு அதறியவில்லையா?

தேச பாதுகாப்பில்...

கருத்து மோதலில் கொல்லப்பட்ட குமார பான்டியன் என்ற ஃபாசிஸ்ட்டின் உடலை சிடிகளாக்கி, வெறியூட்டும் வாசகங்களுடன் மதக்கலவரத்தை துர்ன்டும் வகையில் பாடல்களாக்கி இசைத்தட்டுக்களாக தமிழகமெங்கும் பரப்பி மதக்கலவரத்துக்கான விஷ வித்துக்களை விதைது வரும் இந்து முன்னனி, இராம கோபாலன் வகையராக்களின் இந்த தேச விரோத செயல்கள் இசக்கியின் கண்களுக்கோ அல்லது உளவுத் துறையின் கண்களுக்கு அதறியவில்லையா?

ஆயுதப் பயிற்சியில் முஸ்லிம்கள் (இந்திய தேசிய கொடியேற்றும் MNP)

ரானுவப்பயிற்சி எடுத்துவரும் மனித நீதிப் பாசறை என்று மக்கள் மத்தியில் பதட்டத்தை ஒருவாக்குமு் வகையில் கட்டுரை எழுதியுள்ள ஃபாசிஸ்ட் இசக்கிக்கு இரானுவ பயிற்சிக்கும் "அணிவகுப்பு" பயிற்சிக்கும் வித்தியாசம் தெறியவில்லையா? இல்லை தெறிந்தும் இசுலாமியர்கள் மேல் அவதுர்றை பரப்ப வேண்டும் என்ற நோக்கில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டதா?

இரானுவ பயிற்சி பெற்ற முஸ்லிம் தீவிரவாதி (MNP பாலர் அணி)

தனிப்படையாக உருவெடுத்தால் நாட்டுக்கு நல்லதல்ல என்று கருதும் உளவுத்துரைக்கும், இதை எழுதிய இசக்கிக்கும் தெறியாதா யார் தனிப்படையாக உருவெடுத்து இரானுவத்தினர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை பிரயோகித்த நாடெங்கும் ஆயிரக்கணக்கில் கொடூர கொலைகளை நிகழ்த்தி வருவது என்று?


எவ்வித ஆயுதங்களும் தரிக்காமல் தங்களது தேச பக்தியை அடையாளம் காட்டும் வகையில் அணிவகுப்பு நடத்தினால் அது தீவிரவாதமா? அப்படியானால் தடை செய்யப்பட்ட ஆயதங்களை தரித்து அரைக்கால் டவுசரில் நாடெங்கும் கொலைவெறி கூப்பாடிட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் சிவசேனா தீவிரவாதிகளை என்னவென்பது?

அடக்குமுறையே உலகில் தலைதுர்க்கும் தீவிரவாதங்களுக்கு அடிக்கல் என்பதை உளவுத்துறைக்கும், காவல்துறைக்கும், ஃபாசிச பத்திரிகை சக்திகளுக்கும் தெறிவித்து கொள்கின்றோம். எங்கெல்லாம் ஃபாசிச பத்திரிகைகளின் எழுத்துக்களுக்கு துனை பூகும் வகையில் அவர்களோடு இணைந்து அடக்குமுறை என்ற பெயரில் அரச பயங்கரவாதம் தலைதூக்குகின்றதோ அங்கெல்லாம் இன் விடுதலை என்ற பெயரில் போராட்டங்களும் வீறு கொண்டு எழும் இதை உணராதவர்கள் அல்ல இந்திய உளவுத்துறையும், காவல் துறையும்.

இந்திய இரானுவத்துக்கெதிரான யுத்தத்தில் முஸ்லிம்கள் (முகவை தமுமுக சச்சார் அறிக்கையை வலியுருத்தி அனிவகுப்பு)


மனித நீதிப் பாசறையினர் இந்த வருடம்தான் அதற்கு திட்டமிட்டுள்ளார்கள் ஆனால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் தமிழகமெங்கும் மிடுக்கோடு பல அணிவகுப்புக்களை நடத்தியு்ளார்கள் அவர்கள் என்ன தீவிரவாதத்திலா ஈடுபடுகின்றார்கள், ஃபாசிஸ்ட் இச்க்கியின் வார்த்தையில் இரானுவ பயிற்சி எடுத்த தமுமுகவினர் என்ன இந்திய இரானுவத்திற்கெதிராகவா யுத்தம் செய்கின்றார்கள்.

பயங்கர ஆயுதங்களோடு அணிவகுத்து செல்லும் முஸ்லிம்கள் (முகவை தமுமுக சச்சார் அறிக்கையை வலியுருத்தி அனிவகுப்பு)

தமிழகமெங்கும் ஆம்புலன்ஸ்கள் மூலமும், இடர்பாடுகளின் போதும் குருமூர்த்தி, இசக்கி வகையராக்களால் தேசபக்தர்களாக ஆடையாளம் காட்டப்படும் தீவிரவாத கும்பலான ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் செய்ய இயலாத மனித நேயப் பணிகளை ஜாதி, மத விரோதங்கள் இன்றி அமையதியாக செய்து வருகின்றார்களே இதுதான் தீவிரவாதமா? இன்று தமுமுக வினர் அரசிலும் அங்கம் வகிக்கின்றார்கள் இவாக்ள் தீவிரவாதிகளா என்ன?

வயதானவர்களையும், பென்களையும், குழந்தைகளையும் கொல்லும் முஸ்லிம்கள் (மருத்துவ சேவையில் முகவை எம்.என்.பி யினர்)

அணிவகுப்பு பயிற்சியையே இரானுவப் பயிற்சி என்று எழுதும் இசக்கிக்கு ஆயதப் பயிற்சி எடுக்கும் ஃபாசிச கும்பல்களை பற்றி ஏன் எழுத இயலவில்லை? தமிழகத்தில் இந்த தேச விரோத கும்பல்களான இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள் செய்ய இயலாத மனித நேயப் பணிகளான இரத்த தானம், ஆம்புலன்ஸ், பேரிடர் மீட்பு, ஏழைகளுக்கு கல்வி உதவி என அனைத்து துறைகளில் தமிழகத்தின் இசுலாமிய அமைப்புகளான மனித நீதிப் பாசறை, தமுமுக, ததஜ போன்ற அமைப்புகள் செய்து வருகின்றதே அதற்காக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பதக்கங்களையும் பாராட்டு பத்திரங்களையும் வாங்கி குவித்து வருகின்றதே இந்த நல்ல காரியங்கள் உளவுத்துறைக்கும், ஃபாசிஸ்ட் இசக்கிக்கும் தெறியாதா என்ன?

மக்களின் இரத்தத்தை ஓட்டும் இரானுவ பயிற்சி பெற்ற முஸ்லிம் பயங்கரவாதிகள் (இரத்த தானம் செய்யும் தமுமுக வினர்)

எஞ்சிய அல்உம்மாவினர் மனித நீதிப் பாசறை போன்ற அமைப்புக்களில் சோந்து விட்டதாக திரு.இசக்கி எழுதியுள்ளார் நல்ல கண்டுபிடிப்பு உளவுத்துரை இவரை பயன்படுத்தி கொள்வது நல்லது. எஞ்சிய அல் உம்மாவினரும், பிடிபட்ட அல் உம்மாவினரும் என்ன ஆனார்கள், அவர்களின் இன்றைய நிலை என்ன என்பது உளவுத்துறைக்கு நன்றாகவே தெறியும், உளவுத்துரை கூறியதாக கதைவிட்டிருக்கும் இந்த ஃபாசிஸ்ட்டையும் மக்கள் மத்தியில் கலவர வித்துக்களை விதைத்து நாட்டில் மாபெரும் மதக் கலவரத்தை உண்டாக்கும் வகையில் கட்டுரைகளை வெளியிட்டு வரும் தினமனி பத்திரிகைகையயும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஏனென்றால் இசுலாமியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் தற்சமயம் மிக விழிப்புணர்வுடன் உள்ளார்கள். அவதுர்று எழுதிய தினமலருக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் சமீபத்தில் நீதிமன்றம் அடித்த ஆப்பு நினைவிருக்கட்டும்.


தமிழகத்தை இடுகாடாக்க முயன்று வரும் தினமலரின் பாதையில் செல்லும் தினமனிக்கும் நாங்கள் கூறிக்கொள்வது என்னவென்றால் சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் தமிழக மக்களை உங்கள் எழுத்துக்களின் மூலம் மத துவேஷத்தை மூட்டி தமிழகத்தை இரத்தக்காடாக்கி விடாதீர்கள். இதுபோன்ற ஃபாசிச தீவிரவாதிகளின் வெறிமூட்டும் எழுத்துக்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்வது நல்லது.

ஓரினத்தின் மீது காரன காரியம் இன்றி ஏவப்படும் அடக்குமுறையும், வகுப்பு வாத்தை தூன்டும் வகையில் ஃபாசிச பத்திரிகைளாளர்களால் வெளியிடப்படும் செய்திகளுமே பயங்கரவாதம் ஆகும்!!


ஃபாசிச பத்திரிகையாளர்களோடு இணைந்து அரசு இயந்திரங்களான உளவுத்துரை, காவல்துறை, இரானுவம் போன்றவற்றின் மூலம் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தினர் மிதும் கட்டவிழ்த்து விடப்படும் வண்முறையும், அரச பய்ஙகரவாதமுமே உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தலைவிரித்தாடும் தீவிரவாதத்திற்கு முக்கிய காரணம் என்பதை தமிழக அரசும், உளவுத்துறையும், ஃபாசிச பத்திரிகை துறையும் உணர வேண்டும் !!

ஜாதி, மத துவேசம் இன்றி நீதியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை இசக்கி போன்ற ஃபாசிச சிந்தனை உள்ள பத்திரிகைளர்கள் சிலரின் துர்ண்டுதலால் குற்றவாளிகளை ஒப்படைத்த பின்பும் கூட ஃபாசிச சக்திகளுடன் கைகோர்த்து பழி வாங்கும் என்னத்தில் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மீது மேற்க்கொண்ட வண்முறைத்தாக்குதலில் ஏற்ப்பட்ட 19 மரனங்களும் அதன் தொடர்ச்சியாக நடத்த முயன்ற இன ஒழிப்பு கலவரங்கலுமே கோவையிலும் அதன் தொடர்ச்சியாக தமிழகமெங்கும் நடந்த வண்முறை வெறியாட்டங்களுக்கும், குண்டு வெடிப்புக்களுக்கும் காரனம் என்பதை அரசும், உளவுத் துறையும் மிக அறிந்தே உள்ளன.

மீண்டும் அதுபோல் ஒரு சம்பவத்தை தமிழகத்தில் அரங்கேற்ற நினைக்கும் அதிகாரிகளின் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இன் மக்களான் எம் இன முஸ்லிம்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை இந்த நாட்டில் நிலைநாட்டவும், எமது தேச பக்தியை வெளிப்படுத்தவும் உரியா நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி

முகவைத்தமிழன்

ஃபாசிச தினமனியின் செய்தி

"படை திரட்டும்' மனிதநீதிப் பாசறை: போலீஸார் கவலை

ப. இசக்கி

திருநெல்வேலி, ஏப். 9: தமிழகம் முழுவதும் மனிதநீதிப் பாசறை அமைப்பினர் மேற்கொண்டு வரும் "ராணுவப் பயிற்சியால்' காவல்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

பயிற்சியின் நிறைவில், சுதந்திர தின நாளான ஆகஸ்ட் 15-ல் மதுரையில் அணிவகுப்பை நடத்தவும் மனிதநீதிப் பாசறை அமைப்பினர் முடிவு செய்துள்ளதாக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்பு "அல்-உம்மா' தீவிரவாத அமைப்பு தடை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பரவி இருந்த அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே வன்முறை மற்றும் வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பால் எஞ்சிய உறுப்பினர்கள் இதர அமைப்புகளில் கலந்து தங்கள் அடையாளத்தை மாற்றிக் கொண்டனர்.

"அல்-உம்மா' அமைப்பு தடை செய்யப்பட்ட பின்பு, வேலைவாய்ப்பற்ற, விரக்தி அடைந்த இஸ்லாமிய இளைஞர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் வகையில் சில அமைப்புகள் ஆங்காங்கே உருவாகி திரைமறைவில் இயங்கி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "மனிதநீதிப் பாசறை' அமைப்பினர், தங்களது வெளிப்படையான செயல்பாடுகளால் தமிழகம் முழுவதும் கிளைகளை உருவாக்கி, நிர்வாகிகளை நியமித்து செயல்பட்டு வருகின்றனர்.

"தீவிரவாதத்தில் உடன்பாடில்லை' என கூறும் இவர்கள், முக்கியமாக மனித உரிமை மீறல்கள், காவல்துறையின் அத்துமீறல்கள் போன்றவற்றுக்கு எதிராக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.

எனினும், இவர்களது நடவடிக்கைகளை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், இவர்களுக்கும் தீவிரவாதத்தின் சாயல் இருப்பதாகவே கருதி அவர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்காணித்து வருகின்றனர்.

சுதந்திர தின அணிவகுப்பு: இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுரையில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இடங்களில் பாசறையை சேர்ந்த இளைஞர்களுக்கு "ராணுவப் பயிற்சி' அளித்து வருவதாக கிடைத்த தகவல் போலீஸôரை கவலைகொள்ளச் செய்துள்ளது.

தென் மாவட்டங்களில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் கடையநல்லூர், செங்கோட்டை, ஏர்வாடி, காயல்பட்டினம், திருவிதாங்கோடு, இடலாக்குடி ஆகிய இடங்களில் உள்ள இளைஞர்களை திரட்டி இந்த பயிற்சியை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நாட்டுக்கு நல்லதல்ல: தமிழ்நாடு முழுவதும் சுமார் 22 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக கொண்டுள்ள இந்த அமைப்பில், மாவட்டத்திற்கு சுமார் 300 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெற்ற இவர்கள் எதிர்காலத்தில் தனிப்படையாக உருவெடுத்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பது சிறப்பு புலனாய்வுப் பிரிவினரின் கருத்து.

இதுகுறித்து மனிதநீதிப் பாசறை அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகி முகம்மது முபாரக் கூறியதாவது:

""நாம் பெற்ற சுதந்திரமானது, இந்து, முஸ்லிம் என வேற்றுமை இல்லாமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபட்டு பெற்று தந்தது. அந்த சுதந்திர உணர்வை எல்லா மக்களிடமும் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் சுதந்திர தினத்தன்று எங்கள் இயக்கத்தின் சார்பில் சீருடை அணிவகுப்பை நடத்த உள்ளோம். புதுதில்லியில் ராணுவத்தினர் நடத்துவது மாதிரிதான் இதுவும். அணிவகுப்பு நடத்தப்படும் இடம் இன்னும் முடிவாகவில்லை.

அணிவகுப்பில் பங்கேற்க மாவட்டத்திற்கு சுமார் 50 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டு, மொத்தம் சுமார் 1,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஏர்வாடியில் உள்ள எங்களுக்குச் சொந்தமான மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. பயிற்சி குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு எழுத்து மூலம் தகவல் தெரிவித்துள்ளோம்'' என்றார் முபாரக்.

Thursday, April 10, 2008

கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்

கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயை தலைமையிடமாகக் கொண்ட
பன்னாட்டு தொழில் நிறுவனமான இடிஏ அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை
இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் கீழக்கரையில் நிருபர்களிடம்
கூறியதாவது :

வள்ளல் சீதக்காதி, உமறுப்புலவர் உட்பட பல புலவர்கள் வாழ்ந்து மறைந்த ஊர்
கீழக்கரையாகும். போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள்
மற்றும் வீரத்தளபதிகள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர்.

இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்பை விளக்கும் வகையில் ஒலி, ஒளி காட்சி
பிரமாண்டமாக அமைக்கப்படும். பழமையை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம்,
கடல்வாழ் உயிரின கண்காட்சியகம், பழமையான கடல் பொருட்கள் இந்த
அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ்
உயிரின கண்காட்சியகமும், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் வகையில்
பிரமாண்ட திருமண மண்டபமும் கட்டப்படும்.

பல கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கான அறிக்கை வெஸ்ட் ஆசியா
நிறுவனங்களின் இயக்குநர் அஹமது ரிபாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திட்ட
அறிக்கை, வரைபட பணிகள் நிறைவடைந்த பின்னர் வேலைகள் துவக்கப்படும்.
இதற்கான செலவை இடிஏ அஸ்கான் குழு நிறுவனங்கள், கீழக்கரை நலச் சங்கம்
உள்ளிட்டவை ஏற்கும் என்றார்.

தகவல் :

கீழக்கரை ஹமீது யாசின்
ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர்
துபாய்

Wednesday, April 09, 2008

இலங்கை மூதூர் றிஷானா நஃபீக் - வழக்கின் மறுவிசாரனை

இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை அளிக்கப்பட்டு இந்த விசயம் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்த விசயம். இது குறித்து நமது வலைப்பதிவிலும் SRILANKA முஸ்லிம் பென்னை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

உலகெங்கும் உள்ள மக்களும், மனித உரிமை அமைப்புகளும் கொடுத்த பாரிய அழுத்தத்தின் காரனமாக இந்த வழக்கை சவுதி அரேபியாவின் அரசாங்கம் திரும்ப விசாரிக்க உத்தரவிட்டு மீண்டும் எந்த நீதி மன்றத்தில் ரிஸானா நஃபீக்கிற்கு மரன தண்டனை விதிக்கப்பட்டதோ அங்கே மறு விசாரனைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று 08-04-2008 அன்று இந்த வழக்கின் விசாரனையின் போது கைகளில் விலங்கிடப்பட்டு இஸ்லாமிய உடையான பர்தா அனிந்த நிலையில் ரிஸானா நஃபீக் நீதி மன்றத்தில் உயர் நீதிபதி திரு. அப்துல்லாஹ் அப்துல் அஜீஸ் அல் ரொசைமி முன் முன்னிலைப்படுத்தப்பட்டார். உயர் நீதிபதி திரு. அப்துல்லாஹ் அப்துல் அஜீஸ் அல் ரொசைமி அவர்கள் தனது உத்தரவில் இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து எதிர்ப்புக்களும் சுப்ரீம் ஜீடிசியல் கவுன்சில் என்ற அமைப்பின் முன்பாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரிஸானா நஃபீக்கின் வழக்குறைஞர் திரு. கதாதிப் ஃபஹத் அல் ஷம்மேரி தெறிவிக்கையில், இந்த வழக்கை மீண்டும் மறு விசாரனைக்காக பழைய இடத்திற்கே (எங்கே தண்டனை வழங்கப்பட்டதோ) அனுப்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.

சவுதி அரேபியாவின் அப்பீல் கோர்ட்டால் ரிஸானா நஃபீக்கின் தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகு சவுதி அரேபியாவின் உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை எடுத்து மறு விசாரனக்கு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய இந்த விசாரனையின் போது ரிஸானா நஃபீக்கால் கொல்லப்பட்டதாக (குழந்தை கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரங்களுமோ அல்லது, பிரேத பரிசோதனை அறிக்கையோ ஒன்றும் இது வரை இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்படவில்லை வெறும் வாதங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கில் ரிஸானா நஃபீக்கிற்கு தண்டனை அளிக்கப்பட்டது குழந்தை பால் குடிக்கும்போது பொறையேறி மூச்சு தினறி இறந்ததாகவே கூறப்படுகின்றது) கூறப்ப்படும் குழந்தையின் தந்தையான திரு. நாயிப் ஜிஸியான் கலப் அல் ஒத்தைபி என்பவரும் உடணிருந்தார்.

தவாத்மியின் பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த தமிழ் பேசக்கூடியவரான ஃபவ்சுல் ரஹ்மான் எனபவர்தான் இந்த விசாரனையின் போது ரிஸானா நஃபீக்கின் மொழி பெயர்ப்பாளராக சேவையாற்றினார்.

இவ்வழக்கின் ஆரம்பத்தில் ரிஸானா நஃபீக்கிற்கு மொழிபெயர்பாளராக பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. நேற்று அந்த பழைய மொழிபெயர்ப்பாளரையும் கோர்ட்டில் ஆஜராக அழைத்திருந்தும் அவர் விசாரனைக்கு வரவில்லை. இந்நிலையில் இதை நீதி மன்ற அவமதிப்பாக கருதி அவர் மீது நடடிவடிக்கைக்கு நீதி மன்றம் உத்தரவிடுமா என்பது தெறியவில்லை. ரிஸானா நஃபீக்கிற்கு மொழி பெயர்ப்பாளராக இருந்த பெயர் குறிப்பிடப்படாத இந்த நபர்தான் ரிஸானா நஃபீக் கொலையை ஒப்புக்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.இவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ரிஸானா நஃபீக்கிற்கு மரன தண்டனை வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் தவாத்மியின் பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த தமிழ் பேசக்கூடியவரான ஃபவ்சுல் ரஹ்மான் என்பவர் ரிஸானா நஃபீக்கிற்கு மொழி பெயர்ப்பாளராக சேவையாற்றுகின்றார்.

ரிஸானா நஃபீக் சிறுமியாக (மைனர்) இருந்தபோது அனைத்து சட்ட விதிமுறைகளும் மீறப்பட்டு சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு அனுப்பபட்டவர் என்பதும் அவர் வந்து இரன்டொரு வாரங்களிலேயே இந்த குற்றம் சுமத்தப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. இலங்கையில் இருந்துதான் அதிகளவில் சிறுமிகளாக இருக்கும் பலர் அரபு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகின்றார்கள். ஆனால் அவ்வாறு வரும் இவர்கள் பலத்த பாலியல் சித்திரவதைகளுக்கும் வண்புணர்வுகளுக்கும் கெடூரங்களுக்கு ஆடபடுத்தப்படுகின்றார்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் முஸ்லிம்கள் என்பது வருந்ததக்க விசயம். இந்த நிகழ்வுகளை தடுக்கவும் முஸ்லிம் பெனகளை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பாமல் தடுக்கவும் இலங்கையில் உள்ள அணைத்து இசுலாமிய அமைப்புகளும் கட்டாயம் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தங்கள் பென் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் அந்நிகழ்வுகளை கண்டு கட்டாயம் சிந்திக்க வேண்டும். உங்கள் பென் மக்கள் வேலைக்கு வரும் நாடுகளில் கட்டாய பாலியல் வண்புனர்வுகளுக்கும் பலவித கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். முக்கியமாக சமுதாய ஆர்வலர்கள் இந்த விசயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம்.


தொடர்புடையது : 09-04-2008 அரப்நியுஸ் பத்திரிகை செய்தி

Tuesday, April 08, 2008

இந்தியக் 'குடியரசின்" இன ஒதுக்கல்

இந்தியக் 'குடியரசின்" இன ஒதுக்கல்


சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்குப் பிணை வழங்க, விடுமுறை என்றும் பாராமல் ஞாயிறு அன்று நீதிமன்றம் கூடியது; சேதுக் கால்வாய் திட்டத்தை வலியுறுத்தி தி.மு.க அரசு அறிவித்த ""பந்த்''ஐத் தடை செய்யவும், நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கூடியது.

இந்திய நீதிமன்றங்களின்/நீதிபதிகளின் இந்த முனைப்பு, எல்லா வழக்குகளுக்கும் கிடைப்பதில்லை; அதிலும் பாதிக்கப்பட்டோர் முசுலீம்களாகவோ, தாழ்த்தப்பட்டோராகவோ இருந்து விட்டால், நீதிமன்றங்களின் இயல்பான வேகம்கூடச் சுணங்கிப் போய்விடும். இப்படிப்பட்ட வழக்குகள் விசாரணை கட்டத்தைத் தாண்டவே பல ஆண்டுகள் ஆகிவிடுவதோடு, குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து தப்பவைக்க அரசாங்கமே குழி பறிக்கும். நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்குகள் கூட, இப்படிப்பட்ட அபாயத்தில்தான் சிக்கிக் கொண்டுள்ளன. பாபர் மசூதி இடிப்பு, மும்பய்க் கலவரம், குஐராத் இனப்படுகொலை, கோவை இந்துவெறி கலவரம் என நீளும் இந்தப் பட்டியலில், ""துலினா படுகொலை வழக்கும்'' சேர்ந்து விட்டது.

அரியானா மாநிலம், ஜஜ்ஜார் நகருக்கு அருகில் உள்ள துலினா புறக்காவல் நிலையம் முன்பாக, வீரேந்தர், தயாசந்த், டோடாராம், ராஜூ, கைலாஷ் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இந்து மதப் பயங்கரவாதிகளாலும், மேல்சாதி வெறியர்களாலும் அக்.15, 2002 அன்று அடித்தே கொல்லப்பட்டனர். ""அந்த ஐந்து இளைஞர்களும் பசு மாட்டைக் கொன்று, அதன் தோலை உரிப்பதாக'' வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் மேல்சாதி வெறியர்களைத் தூண்டிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் இப்படுகொலையைச் செய்தது என்பதும் ஜஜ்ஜார் நகர போலீசார் இதற்குப் பக்கபலமாக இருந்துள்ளனர் என்பதும், இப்படுகொலை நடந்த ஓரிரு நாட்களிலேயே அம்பலமானது.

இப்படுகொலை பற்றி விசாரிக்க அரியானா மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஆர்.ஆர்.பன்ஸ்வால் கமிசனின் விசாரணையில், ""அந்த ஐந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்களுள், வீரேந்திரும், தயாசந்தும் தோல் வியாபாரம் செய்வதற்கு அரசு உரிமம் பெற்றவர்கள்; சம்பவம் நடந்த நாளன்று, அவர்கள் ஏற்கெனவே பதப்படுத்தி வைத்திருந்த தோல்களை விற்பதற்குச் சென்று கொண்டிருந்த பொழுதுதான் வழிமறித்துத் தாக்கப்பட்டனர். ஜஜ்ஜார் நகர போலீசார், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கொலைக் குற்றத்திற்குச் சப்பைக் கட்டும் முகமாகத்தான், "சட்ட விரோதமாக மாட்டுத் தோலை உரித்ததாக' அந்த ஐந்து தாழ்த்தப்பட்டோர் மீதும் பொய் வழக்கு ஜோடித்தனர்'' என்ற உண்மைகள் மீண்டும் சந்தேகத்திடமின்றி நிருபிக்கப்பட்டன.

""தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் தாக்கியவர்கள், போலீசாரைவிட அதிக எண்ணிக்கையில் இருந்ததால்தான், தங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது'' என விசாரணையின் பொழுது கூறி, போலீசார் தங்களைத் தற்காத்துக் கொள்ள முயன்றனர். போலீசாரின் இந்த வடிகட்டிய பொய்யை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட விசாரணை கமிஷன், ""துலினா புறக்காவல் நிலையம் முன்பாக ஒரு பெரும் கும்பல் திரண்டதையும்; அக்கும்பல் இந்து மதவெறியையும், மேல்சாதி வெறியையும் தூண்டிவிடும்படி முழக்கம் போட்டதையும் போலீசார் அனுமதித்தனர். இதன் முடிவில், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

""இப்பிரச்சினை மாலை 6.15க்குத் தொடங்கியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரவு 9.45 மணிக்குத் தொடங்கி 10.15 வரை நடந்திருக்கிறது. இடைப்பட்ட நேரத்தில் அந்தக் கும்பலிடமிருந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் காப்பாற்ற போதிய அவகாசம் இருந்தும் கூட, போலீசார் அக்கும்பலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பன்ஸ்வால் விசாரணைக் கமிசன் குறிப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் கும்பல் தலைமையில் நடந்த கொலைக்கு, அரியானா போலீசுத்துறை உடந்தையாக இருந்துள்ளது. ஆனாலும், ஜஜ்ஜார் நகரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கில், எந்தவொரு போலீசுக்காரன் மீதும் கிரிமினல் குற்றம் சுமத்தப்படவில்லை. ஜஜ்ஜார் நகரின் துணை போலீசு கண்காணிப்பாளர், துலினா புறக்காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் உள்ளிட்ட 13 போலீசு அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை என்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டது. இவ்விசாரணையின் முடிவில், இந்த 13 போலீசு அதிகாரிகளுக்கும் இரண்டு சம்பள உயர்வை நிறுத்தி வைப்பது என்ற "மாபெரும் தண்டனை' அளிக்கப்பட்டது.

இப்படுகொலை, எதிர்பாராதவிதமாக திடீரென நடந்துவிட்ட சம்பவம் அல்ல. இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே, விசுவ இந்து பரிசத்தும் பஜ்ரங்தளும் ""முசுலீம்கள் பசுக்களைக் கொல்கிறார்கள்'' என்ற வதந்தியைப் பரப்பி, ஜஜ்ஜார் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மதக்கலவரங்களை நடத்தி வந்தன. இப்படு கொலை நடந்த மறுநாளே, அவ்விரண்டு அமைப்புகளும், தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் கொன்ற ""எழுச்சியுற்ற இந்துக்களை''ப் பாராட்டி, ஜஜ்ஜார் நகரில் ஊர்வலம் நடத்தின. ""மனித உயிரைவிட, பசுவின் உயிர் விலைமதிப்பற்றது என இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன'' என்பதை மேற்கோளாகக் காட்டி, இப்படுகொலையை நியாயப்படுத்தினார், விசுவ இந்து பரிசத்தின் துணைத் தலைவர் ஆசார்யா கிரிராஜ் கிஷோர். ஆனாலும், இப்படுகொலை தொடர்பாக மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களின் மீதான வன்கொடுமையை நியாயப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் (ஊர்வலம், பத்திரிகை பேட்டி) தொடர்பாகக்கூட, எந்தவொரு ஆர்.எஸ்.எஸ்.காரன் மீதும் வழக்கு போடப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ்.ஐப் போலவே முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைப் பரப்புவதில் முனைப்பாகச் செயல்பட்டுவரும் ""ஆரிய சமாஜம்'' என்ற அமைப்பு, ஜஜ்ஜார் நகரில் பசு பராமரிப்பு மையமொன்றை நடத்தி வருகிறது. ""இம்மையத்தின் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர், தாழ்த்தப்பட்ட இளைஞர்களை அடித்துக் கொல்லும் படித் தூண்டிவிட்டதாக'' சில போலீசார் பன்ஸ்வால் கமிசனிடம் சாட்சியம் அளித்துள்ளனர். எனினும், இப்படுகொலையில் அவர்களின் பங்கு பற்றி எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக, ஆரிய சமாஜம் இப்பசு மையத்தில் நடத்திய சாதி பஞ்சாயத்தில் கலந்துகொண்ட போலீசாரும் அரசு அதிகாரிகளும் இப்படுகொலை தொடர்பாக ""அப்பாவிகளை''க் கைது செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்தனர். இந்த வாக்குறுதிக்கு ஏற்ப, இப்படுகொலையில் நேரடித் தொடர்புடைய, அடையாளம் தெரிந்த 14 ""அப்பாவிகளின்'' பெயர்களை முதல் தகவல் அறிக்கையில்கூட சேர்க்காமல், போலீசார் காப்பாற்றிவிட்டனர்.

இப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டாலும், நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்னும் விசாரணை கட்டத்தையே தாண்டவில்லை. கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழக்கு விசாரணை எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துவதற்குக் கூட அரசு தயாராக இல்லை. இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்ட வீரேந்தரின் தந்தை ரத்தன் சிங், விசாரணை தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த பொழுது, "" வழக்கு முடிந்து விட்டதாக''க் கூறி, அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார், ஒரு போலீசு அதிகாரி.

இவ்வழக்கில் ""நீதி'' நிலை நாட்டப்படுகிறதோ இல்லையோ, ஜஜ்ஜார் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ""அடிமாட்டைக் கூடக் கொல்லக் கூடாது'' என்ற இந்து மதவெறிக் கட்டளையைச் செயல்படுத்துவதில், ஆரிய சமாஜம் இப்படுகொலையைப் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது.

···


துலினா படுகொலை நடப்பதற்கு 15 ஆண்டுகள் முன்பாக, உ.பி. மாநிலம் மீரட் நகருக்கு அருகில் உள்ள ஹாஷிம்புரா பகுதியைச் சேர்ந்த 42 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது, இந்து மதவெறிக் கும்பலுக்கு ஆதரவாக, அரசு பயங்கரவாதிகள் நடத்திய படுகொலை.

பாபர் மசூதிக்குள் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை வழிபட, அக்கோயிலின் கதவை இந்துக்களுக்கு ராஜீவ் காந்தி திறந்துவிட்ட பிறகு, 1987 ஏப்ரல்மே மாதங்களில் உ.பி.யிலும், டெல்லியிலும் இந்துமுசுலீம் மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்தன. அந்தச் சமயத்தில், உ.பி. மாநில பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த போலீசார், ஹாஷிம்புரா பகுதியைச் சேர்ந்த 50 முசுலீம்களைத் துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு சென்றனர். முராத் நகருக்கு அருகில் உள்ள கங்கை கால்வாய்க்குக் கொண்டு செல்லப்பட்ட இவர்கள், நேருக்கு நேராக நிற்க வைக்கப்பட்டுச் சுடப்பட்டனர்; குண்டு பாய்ந்த 50 முசுலீம்களின் உடல்களும் கங்கை நதியில் தூக்கி வீசப்பட்டன. ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட இந்தச் சட்டவிரோதத் துப்பாக்கிச் சூட்டில் 42 முசுலீம்கள் மாண்டு போனார்கள். 20 ஆண்டுகாலமாக நடந்துவரும் இந்தப் படுகொலை பற்றிய வழக்கு, வாய்தாவிசாரணை என்ற ஊறுகாய்ப் பானைக்குள் முடங்கிக் கிடக்கிறது.

இப்படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, கொல்லப்பட்ட முசுலீம்களின் உறவினர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 காக்கிச் சட்டை கிரிமினல்கள் பற்றி சில தகவல்களை அளிக்குமாறு, உ.பி. மாநில லக்னோ போலீசு அதிகாரிகளிடம் கோரியிருந்தனர். ஹாஷிம்புரா படுகொலையை விட, அப்படுகொலையில் தொடர்புடைய 19 போலீசார் பற்றி உ.பி. மாநில அரசு அளித்திருக்கும் தகவல்கள்தான் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.

· இப்படுகொலை அம்பலமானவுடனேயே, அது பற்றி ""சி.பி.சி.ஐ.டி'' விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இவ்விசாரணையில், 19 போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனினும், அந்தப் போலீசாரின் பணி குறித்த பதிவேட்டில் (Service Register), இக்கொலைக் குற்றம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. மாறாக, படுகொலை நடந்த 1987ஆம் ஆண்டில், போலீசாரின் பணி குறித்து தயாரிக்கப்பட்ட வருடாந்திர இரகசிய அறிக்கையில், ""அவர்கள் அந்த ஆண்டில் (1987) மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருப்பதாக''க் குறிப்பிடப்பட்டுள்ளது.

· குற்றம் சுமத்தப்பட்ட இந்த 19 போலீசார் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்படவில்லை. எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

· இப்படுகொலை நடந்து எட்டு ஆண்டுகள் கழித்து 1995இல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், 19 போலீசாரும் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், அடுத்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு விட்டனர்.

""அவர்களின் சேவை உ.பி. அரசிற்குத் தேவைப்படுகிறதென்றும், பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால், போலீசாரின் குடும்பங்கள் வருமானமின்றி வறுமையில் தள்ளப்பட்டதைத் தடுக்கும் முகமாகத்தான் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாகவும்'' காரணம் கூறப்பட்டுள்ளது.

இப்படுகொலையோடு தொடர்புடைய மற்ற போலீசு அதிகாரிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, இப்படுகொலை பற்றிய சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணை அறிக் கையை வெளியிட மறுத்து வருகிறது, உ.பி. அரசு. கொலைக் குற்றவாளிகளுக்கு இதற்கு மேல் ஒரு அரசினால் என்ன பாதுகாப்பு வழங்கிவிட முடியும்? இந்த நயவஞ்சகத்திற்குப் பதிலாக, உ.பி. அரசு வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தால், பாதிக்கப்பட்ட முசுலீம் குடும்பங்களுக்கு வழக்குச் செலவாவது மிச்சமாயிருக்கும்!

இந்திய நீதிமன்றங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றுள், ஒன்றாக இந்த வழக்குகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இந்தியக் "குடியரசில்', தாழ்த்தப்பட்டோரும், முசுலீம்களும் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதற்கான ஆதாரங்களில் ஒன்றுதான், இந்த வழக்குகள்!

· செல்வம்

நன்றி : தமிழரங்கம்

ஒகேனேக்கல் விவகாரம் - அரசிற்கு துனை நிற்போம் MNP தலைவர் அறிவிப்பு

மதுரை ஏப்ரல் 08, மனித நீதிப் பாசறையின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று 07-04-2008 அன்று மதுரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மனித நீதிப் பாசறையின் மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது..

1. நேற்று சேதுக்கால்வாய் திட்டத்தை தடுத்து நிறுத்தியதன் மூலம் தமிழக முன்னேற்றத்திற்கு ஒரு முட்டுக்கட்டை. இன்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தடுத்தி நிறுத்தி தமிழக மக்களின் தாகம் தீர்ப்பதற்கும் ஒரு முட்டுக்கட்டை என தொடர்ந்து தமிழக மக்களுக்கும், தேச ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவித்து வரும் பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதன் விஷயத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் மனித நீதிப் பாசறை உறுதுணையாக நிற்கும்
என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2. கடந்த 2000வது ஆண்டில் பாளை கிரசண்ட் நகர் பள்ளிவாசலில் படுகொலை செய்யப்பட்ட புளியங்குடி அப்துல் ரசீத் வழக்கில் நீதி விசாரனை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும். அவரது மகன் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய கருணைத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. எனவே 2 லட்சம் கருணைத் தொகை, அவரது குடும்பத்திற்கு அரசு வேலை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

3. கடையநல்லூர் சமீபத்தில் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்த மனித நீதிப் பாசறை,மற்றும் அப்பாவி முஸ்லிம்கள் மீதும் தடியடி நடத்திய புளியங்குடி சμக டி.எஸ்.பி. அசோக்குமார், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் மீது தமிழக அμசு துறை சார்ந்த நடவடிக்கையும் இடமாற்றமும் செய்யுமாறு மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது.

4. தமிழக முஸ்லிம்களின் நீண்டநாள் கோரிக்கையான உலமாக்கள் நலவாரியத்தை தமிழக அரசு உடனே ஏற்படுத்த வேண்டும் என இச் செயற்குழு தமிழக அμசைக் கேட்டுக் கொள்கிறது.

Monday, April 07, 2008

துபாயில் மார்க்கச் சொற்பொழிவு

துபாயில் மார்க்கச் சொற்பொழிவு


துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் ( டி பிளாக் ) சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் மார்க்க அறிஞர்களது சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வரும் புதன்கிழமை 09-04-2008 இஷா தொழுகைக்குப் பின்னர் இஸ்லாத்தில் இறைநேசச் செல்வர்கள் எனும் தலைப்பில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மஃரூப் செய்து வருகிறார். மேலதிக விபரங்களுக்கு 050 51 96 433.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈத் அல் அத்ஹா 2007 (GULF CAMP DAMMAM)

"ஈத் அல் அத்ஹா 2007"

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Sunday, April 06, 2008

எங்கே நமது சமுதாயம் செல்கிறது?

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்...

நாம் அன்றாடம் எழுகிறோம், வேலைக்குச் செல்கிறோம். இதில் நமது பிள்ளைகளுக்கு நாம் என்ன முக்கியத்துவம் கொடுக்கிறோம்? அவர்களின் நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்துகிறோமா? சற்று சிந்திக்க அழைக்கிறோம்.

இன்றைய நூற்றாண்டில் பல தொழில் முன்னேற்றங்கள் வளர்ந்து வருகிறது. எதையும் நன்மைக்கே பயன்படுத்தவேண்டுமே தவிர, தீயவைக்கு அடிமை ஆக்கிவிடக் கூடாது. Mobilephone -கைபேசி உலா வருகிறது எங்கும், பள்ளி மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசாங்கம் தடை செய்தும், பல
பெற்றோர்கள், தமது பிள்ளைகளுக்கு கைபேசியை ஒரு fashion-ஆக வாங்கி கொடுக்கிறார்கள். அதனால் ஏறப்டும் விளைவுகளை நாம் சற்று கருத்தில் கொள்ளும் கட்டாயநிலையில் உள்ளோம் இன்று.

கழிந்த சில மாதங்களாக நாம் செய்திகளில் அறிவது: > நமது இஸ்லாமிய மாணவிகள் அன்னிய மதத்தவருடன் சென்று, பிறமத கலாச்சாரப்பாடி திருமணம் செய்துகொள்வது. எங்கே நமது சமுதாயம் செல்கிறது? மிகவும்
வேதனையாக உள்ளது. ஒவ்வொருவரும் அவரது பொறுப்புகள் பற்றி, இறைவனிடம் பதில் கூறியே ஆகவேண்டும்
எனபதை முதலில் நினைவில் கொள்ளவும். பெற்றோர்கள் தான் இதற்கு மூலக்காரணம், தமது பிள்ளைகளின்
விசயத்தில் அஜாக்கிரதையாக உள்ளார்கள். தயவுசெய்து உங்களது பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும்போதும் சரி, பள்ளியிலிருந்து வரும்போதும் சரியே! அவர்களை கண்காணியுங்கள், அவர்களுக்கு நீங்கள் நல்லொழுக்கம்
கற்பியுங்கள், அவர்களுக்கு mobile - கைபேசி கொடுத்து சீரழிக்காதீகள். உங்களது வேலைப் பளுவில் உங்களது பிள்ளைகள், குடும்பத்தையும் சற்று உற்றுப் பாருங்கள் அன்பர்களே! பிழைகளை முளையிலே கிள்ளி எறியவேண்டும். தொழுகையை சரியாகக் கடைபிடிக்க நமது பிள்ளைகளுக்கு ஊக்கமளிப்போம்.
அவர்களது செயல்களில் கவனம் செலுத்துங்கள். இஸ்லாமிய நற்சிந்தனையூட்டும் பாடங்களை அறிவுபூர்வமாக போதிக்கவும், இஸ்லாமிய வகுப்புகளுக்கு அனுப்புங்கள். ஜமாஅத்தார்களும் தமது சமுதாய மக்களை அவ்வப்போது மாநாடுகள் வைத்து, நற்சிந்தனையூட்டவும், வழிதவறாமல் கண்காணிப்பது ஜமாஅத்தார்களது கடமையும்கூட. அப்போது இதுபோன்ற அநாகரீகம் ஏற்பட வாய்ப்புகள் வராது. எனக்குத் தெரிந்த கருத்தை பதிவு செய்துள்ளேன், கூடி சிந்தித்து மேலும் நல்ல வழிகளை கடைபிடிக்கலாம் நமது சமுதாயம். எல்லோரும் ஒற்றுமையாக அணிவகுத்து செயல்படுவோம். இதுபோன்ற தவறுகளிலிருந்து நம்மையும், நமது சமுதாயத்தையும் நாம் பாதுகாப்போம். எல்லாம்வல்ல ரஹ்மான் நமக்கு நேர்வழி காட்டுவானாக! ஆமீன்.

அனைவர்களுக்கும் இம்மடலை அனுப்பி, நல்லொரு சமுதாயத்தை உருவாக்க வழிவகுப்போம்.

அன்புடன் பதிவுசெய்தது,
தாருல்ஸஃபாவிலிருந்து மு.சாதிக்.

Saturday, April 05, 2008

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) உதயம்

ஓர் இறை ஓர் குலம்

அரசியல் அதிகாரத்தை நோக்கி
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி

இந்திய தேசிய மக்கள் கட்சி
(IDMK)

மாபெரும் துவக்க விழா
மற்றும் மத நல்லினக்க விழா அழைப்பிதழ்

சட்டம் இயற்றும் சபைகளில் சங்கமிப்போம் !
வருங்கால சந்ததிகளுக்கு சரித்திரம் படைப்போம்!!


நாள் : 06-04-2008 மாலை 4 மணிக்கு

இடம் : ஹோட்டல் இம்பீரியல்
சிராஜ் மஹால்
எழும்பூர் - சென்னை

தலைமை
M. குத்புத்தீன் ஐபக் M.A
தலைவர் - இந்திய தேசிய மக்கள் கட்சி

வரவேற்புரை
V.S. வரிசைக்கனி
பொதுச்செயலாளர் - இந்திய தேசிய மக்கள் கட்சி

இந்திய தேசிய மக்கள் கட்சியை துவக்கி வைத்து சிறப்புரை

மருத்துவர் அய்யா ச. இராமதாஸ் அவர்கள்
நிறுவனர் - பாட்டாளி மக்கள் கட்சி

வாழ்த்துரை வழங்குபவர்கள்

திரு. தொள். திருமாவளவன் அவர்கள்
தலைவர் - விடுதலை சிறுத்தைகள்

திரு. ஜி.கே மனி MLA
தலைவர் - பாட்டாளி மக்கள் கட்சி

மனித நேய மாண்பாளர்
திரு. ஜே.எம். ஹாரூன் அவர்கள்
பாராளுமன்ற உறுப்பினர்

திரு. சீமான் அவர்கள்
திரைப்பட இயக்குனர்

திரு. தி.சை. மன்சூர் அவர்கள்
பொருளாலர் பாட்டாளி மக்கள் கட்சி

திரு. திருவாடுதுறை ஆதீனம் அவர்கள்

திரு. அக்பர் அலி சையீத் அவர்கள்

திரு. அப்துல் அஜீஸ் அவர்கள்

திரு. முகம்மது அன்சாரி மன்பயி அவர்கள்


இன்னும் சிறப்பு அழைப்பாளர்களாக சமுதாய செம்மல்கள் பலர்

நன்றியுரை

டாக்டர். M. பக்ருதீன் அவர்கள்

சமுதாயச் சொந்தங்கள் அனைவரையும் அலைகடலென திரன்டு வாரீர் என் அழைக்கின்றது

இந்திய தேசிய மக்கள் கட்சி
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி

இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்க விழா அழைப்பிதழை முழுமையாக டவுன்லோட் செய்ய இங்கு சொடுக்கவும்.

.

Thursday, April 03, 2008

துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு

துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு

துபாய் கல்விக்கண்காட்சி ஏப்ரல் 2 முதல் 5 வரை துபாய் உலக வர்த்தக மையம்
அருகேயுள்ள கண்காட்சி அரங்கில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில்
தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மற்றும் திருச்சி,
ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம்,
சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்கள் உட்பட
இந்தியா, வளைகுடா, அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம் குறைந்த செலவில் மருத்துவப் படிப்புகளை
ரஷ்ய பல்கலைக்கழகம் மூலம் வழங்கி வருகிறது. ரஷ்ய் பல்கலைக்கழகம் குறித்த
விபரங்களை தொலைபேசி வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். தொடர்பு எண் சுபாஷ்
: 050 354 1775

இக்கல்வி கண்காட்சியில் வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு வங்கிகள், வளைகுடா
வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவையும்
பங்கேற்றுள்ளன. வேலை தேடும் வளைகுடா பயணம் மேற்கொண்டுள்ள தமிழக
இளைஞர்களுக்கு மிகுந்த பயனுடையதாய் இருக்கும் என கண்காட்சிக்கு
வருகைபுரிந்துள்ள வேலை தேடும் தமிழக இளைஞர் நபீஸ் அஹமது தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் இந்திய மற்றும் வளைகுடா இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து
கொண்டு உயர்கல்வி குறித்த விபரங்களைச் சேகரித்து செல்வதாக சென்னை ஏ.ஜே.
கல்வி ஆலோசனை மைய பிரதிநிதி சுபாஷ் தெரிவித்தார்.

Wednesday, April 02, 2008

அத்வைதம் - NON DUALISM

அத்வைத கொள்கையும் அதன் தோற்றமும், வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆழமான முறையில் அத்வைத கொள்கை பற்றி விளக்கப்பட்டுள்ளது.

.

"அத்வைதம் - NON DUALISM"

டாக்டர் U.L.A அஷ்ரஃப் Phd அவர்கள்

Dr. U.L.A ASHRAF Phd


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



டாக்டர் U.L.A அஷ்ரஃப் அவர்கள்

Tuesday, April 01, 2008

மாபெரும் இஸ்லாமிய ஒரு நாள் 10வது மாநாடு

இறைவனின் திருப்பெயரால்...


மாபெரும் இஸ்லாமிய ஒரு நாள் 10வது மாநாடு

நிகழ்ச்சி ஏற்பாடு - இடம்: ஜூபைல் தஃவா நிலையம் - சவூதி அரேபியா
இன்ஷா அல்லாஹ் வரும்;: 18-04-2008 - வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 8.00 மணி முதல் இரவு 7.30 வரை
உரையாற்றயிருக்கும் தலைப்புகளின் விவரம்:
நபிமார்களும் அழைப்புப் பணியும்
ஹலால் - ஹராம் பேணலின் அவசியம்
ஊடக வலையில் உலக முஸ்லிம்கள்

இத்துடன் :

தற்கால முஸ்லிம்களின் பின்னடைவுக்குப் பெரிதும் காரணம்.. முஸ்லிம்களே! அந்நியர்களே!!

என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

போக்கு வரத்து மற்றும் இதர ஏற்பாடுகளின் விவரம்:

- கேம்ப் களுக்கான வாகன வசதி
- அனைத்து பெண்களுக்கான தனி இட வசதி
- காலை - மதிய உணவு மற்றும் தேனீர் வசதி
- பெறுமதி மிக்க பரிசில் பொருட்கள்

எனவே தமிழறிந்த சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிப்பதுடன் மற்றவர்களுக்கும் தெரிவித்து எல்லாம் வல்ல இறைவனின் அருளினால் அறிவமுதம் பெற்று பயன் பெற்றுச் செல்லுங்கள்.

தொடர்புகளுக்கு:
0553603792 , 0502561645 & 033625500 Ext. 1015, 1026