இந்திய தேசிய மக்கள் கட்சி 10 தொகுதிகளில் போட்டி
சென்னை: இந்திய தேசிய மக்கள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் குத்புதீன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்ற தேர்தலில் இந்திய தேசிய மக்கள் கட்சி மத்திய சென்னை, வடசென்னை, திருச்சி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, சிவகங்கை, கோவை, வேலூர், நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர் ஆகிய 10 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.
இந்த முடிவு இந்திய தேசிய மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் ஆட்சி மன்ற குழுவில் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தட்ஸ்தமிழ்
Showing posts with label இந்திய தேசிய மக்கள் கட்சி. Show all posts
Showing posts with label இந்திய தேசிய மக்கள் கட்சி. Show all posts
Wednesday, April 01, 2009
இந்திய தேசிய மக்கள் கட்சி 10 தொகுதிகளில் போட்டி
குறிச்சொற்கள்
அரசியல்,
இந்திய தேசிய மக்கள் கட்சி
Sunday, March 29, 2009
குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர்!!
குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர்!!
60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் கழிப்பறை கட்டியதில் தான் முன்னேறி இருக்கிறார்கள். மற்ற துறைகளில் தலித்களை விட கல்வி வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீட்டில் மிக மிக பின்தங்கி உள்ளனர் என்று சச்சார் கமிட்டி கூறியது. இதற்கு காரணம் நம் சமுதாயத் தலைவர்களின் தகுதியற்ற தலைமைத்தனமும், நான் என்ற கர்வம், தலைக்கனம் என்ற பிரண்ட் லைன் பத்திரிக்கை செய்தியை மறந்து விட முடியாது. எத்தனை அமைப்புகள் ஆரவாரத்தோடு புறப்பட்டதோ அத்துனை அமைப்புகளும் விழலுக்கு இறைத்த நீராய் வீரியமில்லாமல் வீழ்ந்து கிடக்கின்றனர். சதிக்கார அரசியல் கட்சிகளின் உருட்டல் மிரட்டல்களில் தேர்தல் ஆதரவு, தேர்தல் புறக்கணிப்பு, அந்தர் பல்டி, முன்பு இருந்த இடஒதுக்கீட்டைப் பறித்துக் கொண்ட துரோகத்திற்கு பாராட்டு விழா, சிறைநிறப்பு போராட்டத்தின் வெற்றி, இரண்டு சீட்டுக்கு கூன்பிறையாய் கூனிநின்ற காட்சி இவர்களின் கேலி கூத்துக்களை எழுதினால் ஏடு தாங்காது.
புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது என்பர். இவர்களோ, சுயநலத்தை முன்நிறுத்தி சமுதாயத்தை மேய்ப்பவர்கள் போல் காட்டிக்கொண்டு சமுதாயத்தை ஏய்ப்பவர்களாக இருக்கின்றனர். மற்ற அரசியல் கட்சிகளின் பார்வையில் சர்க்கஸ் கோமாளிகளாக சமுதாயத்தை காட்சி அளிக்க வைத்தனர். ஆன்மீகத்தையும், அரசியலையும் குழப்பி குழப்பத்தின் மொத்த உருவமாய்க் காட்சியளிக்கின்றனர். சமுதாயத்தில் இளைஞர்கள் சமுதாய இயக்கங்களின் குழப்பத்தைக் கண்டு நம்மை ஏமாற்றும் அரசியல் கட்சிகளிலே தஞ்சம் புகுந்து உள்ளனர். இதை மாற்றிட கூட்டு முயற்சியில் இந்திய தேசிய மக்கள் கட்சியை சமூகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, சமுதாய எண்ணங்கள் உணர்வுகளை புரிந்து தலித், கிருஸ்த்துவ, முஸ்லிம்களை அரவணைத்து சென்றிட முதல் பொது அரசியல் கட்சியை (IDMK)யை உருவாக்கி தேர்தல் கமிஷன் அங்கீகாரத்திற்கான வேலைகளை முடித்து, சென்னையில் தலைமையகம் அமைத்து சமுதாயத்தின் பலதரப்பட்ட அமைப்புகள், சங்கங்கள், ஆலிம்கள், இளைஞர்கள், புரவலர்கள், ஜமாத் பொருப்பாளர்களை எல்லாம் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து நம் சமுதாய உள்ளத்து உணர்வுகளை துண்டு பிரசுரம் மூலமாக சிந்தனையைத் தூண்டி அரசியல் சார்பற்ற இயக்கங்களை எல்லாம் ஒன்றிணைத்து எதிர்கால தேர்தலைக் கருத்தில் கொண்டு நம் அரசியல் பலத்தை காட்டிட முயற்சி செய்யும் போது, ஆம், கனிபறிக்க மரம் ஏறும்போது கருநாகம் காலைச் சுற்றுமாம், அது போன்று தேர்தல் வரும்போது எல்லாம் சில்லரைகளுக்காக குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி கொள்கையை கோடிக்கு விற்றவர்கள், வாய்ப்பைத் தவறவிட்டு விட்டு மீண்டும் சமூகத்தின் வாக்கு வலிமையை சிதைக்க, சமூகத்தை அடகு வைக்க, அரசியல் குழப்பம் செய்ய வருகின்றனர்.
இளைஞர்களே எச்சரிக்கை, ஜமாத்தார்களே, சமுதாய இளைஞர்களே, ஆலிம் பெருமக்களே, ஆன்றோர்களே, குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர். சாட்டையடியில் குழப்பவாதிகளின் கொட்டம் அடங்கட்டும். குள்ளநரி செயல்கள் ஒடுங்கட்டும்,
அதன் மூலம் நம் அரசியல் வலிமை பிறக்கட்டும். மற்றவர்கள் நம் அரசியல் வலிமையை உணரட்டும். நம் தனித்தன்மை தமிழ் தரணியில் சிறக்கட்டும். வருங்கால சந்ததிகள் நம்மை போற்றட்டும்.
இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு
9940421595 - 9344510369 - 9443021050
குறிச்சொற்கள்
அரசியல்,
இந்திய தேசிய மக்கள் கட்சி
Tuesday, April 22, 2008
IDMK கட்சி துவக்க விழா வீடியோ (பகுதி-01)
தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER
.
இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவை மருத்துவர். இராமதாசு, அண்ணன். திருமா வளவன் என முக்கிய புள்ளிகளின் பேச்சுக்கள் தொகுத்து வெளியிடப்படும்.
.
"இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி"
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
Saturday, April 05, 2008
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) உதயம்
அரசியல் அதிகாரத்தை நோக்கி
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி
இந்திய தேசிய மக்கள் கட்சி
(IDMK)
மாபெரும் துவக்க விழா
மற்றும் மத நல்லினக்க விழா அழைப்பிதழ்
சட்டம் இயற்றும் சபைகளில் சங்கமிப்போம் !
வருங்கால சந்ததிகளுக்கு சரித்திரம் படைப்போம்!!
நாள் : 06-04-2008 மாலை 4 மணிக்கு
இடம் : ஹோட்டல் இம்பீரியல்
சிராஜ் மஹால்
எழும்பூர் - சென்னை
தலைமை
M. குத்புத்தீன் ஐபக் M.A
தலைவர் - இந்திய தேசிய மக்கள் கட்சி
வரவேற்புரை
V.S. வரிசைக்கனி
பொதுச்செயலாளர் - இந்திய தேசிய மக்கள் கட்சி
இந்திய தேசிய மக்கள் கட்சியை துவக்கி வைத்து சிறப்புரை
மருத்துவர் அய்யா ச. இராமதாஸ் அவர்கள்
நிறுவனர் - பாட்டாளி மக்கள் கட்சி
வாழ்த்துரை வழங்குபவர்கள்
திரு. தொள். திருமாவளவன் அவர்கள்
தலைவர் - விடுதலை சிறுத்தைகள்
திரு. ஜி.கே மனி MLA
தலைவர் - பாட்டாளி மக்கள் கட்சி
மனித நேய மாண்பாளர்
திரு. ஜே.எம். ஹாரூன் அவர்கள்
பாராளுமன்ற உறுப்பினர்
திரு. சீமான் அவர்கள்
திரைப்பட இயக்குனர்
திரு. தி.சை. மன்சூர் அவர்கள்
பொருளாலர் பாட்டாளி மக்கள் கட்சி
திரு. திருவாடுதுறை ஆதீனம் அவர்கள்
திரு. அக்பர் அலி சையீத் அவர்கள்
திரு. அப்துல் அஜீஸ் அவர்கள்
திரு. முகம்மது அன்சாரி மன்பயி அவர்கள்
இன்னும் சிறப்பு அழைப்பாளர்களாக சமுதாய செம்மல்கள் பலர்
நன்றியுரை
டாக்டர். M. பக்ருதீன் அவர்கள்
சமுதாயச் சொந்தங்கள் அனைவரையும் அலைகடலென திரன்டு வாரீர் என் அழைக்கின்றது

இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்க விழா அழைப்பிதழை முழுமையாக டவுன்லோட் செய்ய இங்கு சொடுக்கவும்.
.
Tuesday, June 12, 2007
கலைஞரின் கவனத்திற்கு....
முத்தமிழ் அறிஞர், தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு!
தாங்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் நிறைவு உரையின் போது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கேரளாவிலும், ஆந்திராவிலும் தருவார்களேயானால் நாமும் தரத் தயார் என்று பேசியது எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கும், எல்லோருக்கும் எல்லாம் இருக்கும் இடம் நோக்கிச் செல்ல என்ற புரட்சிக்கவியின் பாடலுக்கும் எதிரான கருத்து.
பெரியார் பாசறையில் படைக்கலனாய் மிளிர்ந்த நீங்கள் பொறுப்பான முதல்வர் பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பொறுப்பை தட்டிக் கழிப்பது முஸ்லிம்களாகிய எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அரசியல்வாதிகளுக்கு இரண்டு முகம் என்கிற கூற்று நினைவுக்கு வருகிறது.
நாங்கள் இந்தியக் குடிமக்கள், இனத்தால் திராவிடர்கள், மொழியால் தமிழர்கள், வழியால் முஸ்லிம்கள், நாங்கள் தமிழக அரசுக்கு வரி கொடுக்கிறோம், உலக அளவில் அண்ணியச் செலாவணியை ஈட்டித் தருகிறோம், தேர்தல் வாக்குறுதிகள் மீறப்படுவதற்கு மட்டுமே என்ற தங்களின் நிலையை மாற்றி முஸ்லிம் தலைவர்கள் ஏமாறலாம், முஸ்லிம்கள் ஏமாறத் தயாராக இல்லை, காரணம் நெருக்கடிகள் எங்களை நெறிபட வைத்திருக்கிறது.
டாக்டர் கலைஞர் அவர்களே! தமிழக அரசின் வாய்மை வென்றிட, வாக்களித்த எங்களுக்கு மரபுகளை மீறாமல் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக முஸ்லிம்கள் தங்களை முதல்வராக்க வாக்குகளை அளித்திருக்கிறார்கள். தமிழக முஸ்லிம்கள் கேரள முதல்வருக்கோ, ஆந்திர முதல்வருக்கோ வாக்களிக்க வில்லை.
பெரியார் பாசறையில் படைக்கலனாய் மிளிர்ந்த நீங்கள் பொறுப்பான முதல்வர் பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பொறுப்பை தட்டிக் கழிப்பது முஸ்லிம்களாகிய எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அரசியல்வாதிகளுக்கு இரண்டு முகம் என்கிற கூற்று நினைவுக்கு வருகிறது.
நாங்கள் இந்தியக் குடிமக்கள், இனத்தால் திராவிடர்கள், மொழியால் தமிழர்கள், வழியால் முஸ்லிம்கள், நாங்கள் தமிழக அரசுக்கு வரி கொடுக்கிறோம், உலக அளவில் அண்ணியச் செலாவணியை ஈட்டித் தருகிறோம், தேர்தல் வாக்குறுதிகள் மீறப்படுவதற்கு மட்டுமே என்ற தங்களின் நிலையை மாற்றி முஸ்லிம் தலைவர்கள் ஏமாறலாம், முஸ்லிம்கள் ஏமாறத் தயாராக இல்லை, காரணம் நெருக்கடிகள் எங்களை நெறிபட வைத்திருக்கிறது.
டாக்டர் கலைஞர் அவர்களே! தமிழக அரசின் வாய்மை வென்றிட, வாக்களித்த எங்களுக்கு மரபுகளை மீறாமல் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவன்
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தமிழ்நாடு.
குறிச்சொற்கள்
IDMK,
இட ஒதுக்கீடு,
இந்திய தேசிய மக்கள் கட்சி
Wednesday, April 04, 2007
வீழ்வது நாமாக இருப்போம்! வாழ்வது நமது சமுதாயமாக இருக்கட்டும்!! (IDMK RELEASE)

இந்திய தேசிய மக்கள் கட்சியினரால் வெளியிடப்பட்ட அவர்களின் கொள்கை விளக்க உரையின் 2ம் வெளியீடு.
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) சேர்ந்த ஜனாப். குத்புதீன் ஐபெக் அவர்கள் வீழ்வது நாமாக இருப்போம்! வாழ்வது நமது சமுதாயமாக இருக்கட்டும்!! என்ற தலைப்பில் ஆற்றிய உரையினை கேட்பதற்கு இங்கு சொடுக்கவும்.
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்
Monday, March 19, 2007
வஞ்சிக்கப்பட்டோர் வீறு கொண்டு எழட்டும் (IDMK AUDIO)

இந்திய தேசிய மக்கள் கட்சியினரால் வெளியிடப்பட்ட அவர்களின் கொள்கை விளக்க உரையின் முதல் வெளியீடு.
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) சேர்ந்த ஜனாப். குத்புதீன் பெக் அவர்கள் வஞ்சிக்கப்பட்டோர் வீறு கொண்டு எழட்டும் என்ற தலைப்பில் ஆற்றிய உரையினை கேட்பதற்கு இங்கு சொடுக்கவும்.
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்
Subscribe to:
Posts (Atom)