Sunday, March 29, 2009

குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர்!!

குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர்!!

60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் கழிப்பறை கட்டியதில் தான் முன்னேறி இருக்கிறார்கள். மற்ற துறைகளில் தலித்களை விட கல்வி வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீட்டில் மிக மிக பின்தங்கி உள்ளனர் என்று சச்சார் கமிட்டி கூறியது. இதற்கு காரணம் நம் சமுதாயத் தலைவர்களின் தகுதியற்ற தலைமைத்தனமும், நான் என்ற கர்வம், தலைக்கனம் என்ற பிரண்ட் லைன் பத்திரிக்கை செய்தியை மறந்து விட முடியாது. எத்தனை அமைப்புகள் ஆரவாரத்தோடு புறப்பட்டதோ அத்துனை அமைப்புகளும் விழலுக்கு இறைத்த நீராய் வீரியமில்லாமல் வீழ்ந்து கிடக்கின்றனர். சதிக்கார அரசியல் கட்சிகளின் உருட்டல் மிரட்டல்களில் தேர்தல் ஆதரவு, தேர்தல் புறக்கணிப்பு, அந்தர் பல்டி, முன்பு இருந்த இடஒதுக்கீட்டைப் பறித்துக் கொண்ட துரோகத்திற்கு பாராட்டு விழா, சிறைநிறப்பு போராட்டத்தின் வெற்றி, இரண்டு சீட்டுக்கு கூன்பிறையாய் கூனிநின்ற காட்சி இவர்களின் கேலி கூத்துக்களை எழுதினால் ஏடு தாங்காது.

புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது என்பர். இவர்களோ, சுயநலத்தை முன்நிறுத்தி சமுதாயத்தை மேய்ப்பவர்கள் போல் காட்டிக்கொண்டு சமுதாயத்தை ஏய்ப்பவர்களாக இருக்கின்றனர். மற்ற அரசியல் கட்சிகளின் பார்வையில் சர்க்கஸ் கோமாளிகளாக சமுதாயத்தை காட்சி அளிக்க வைத்தனர். ஆன்மீகத்தையும், அரசியலையும் குழப்பி குழப்பத்தின் மொத்த உருவமாய்க் காட்சியளிக்கின்றனர். சமுதாயத்தில் இளைஞர்கள் சமுதாய இயக்கங்களின் குழப்பத்தைக் கண்டு நம்மை ஏமாற்றும் அரசியல் கட்சிகளிலே தஞ்சம் புகுந்து உள்ளனர். இதை மாற்றிட கூட்டு முயற்சியில் இந்திய தேசிய மக்கள் கட்சியை சமூகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, சமுதாய எண்ணங்கள் உணர்வுகளை புரிந்து தலித், கிருஸ்த்துவ, முஸ்லிம்களை அரவணைத்து சென்றிட முதல் பொது அரசியல் கட்சியை (IDMK)யை உருவாக்கி தேர்தல் கமிஷன் அங்கீகாரத்திற்கான வேலைகளை முடித்து, சென்னையில் தலைமையகம் அமைத்து சமுதாயத்தின் பலதரப்பட்ட அமைப்புகள், சங்கங்கள், ஆலிம்கள், இளைஞர்கள், புரவலர்கள், ஜமாத் பொருப்பாளர்களை எல்லாம் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து நம் சமுதாய உள்ளத்து உணர்வுகளை துண்டு பிரசுரம் மூலமாக சிந்தனையைத் தூண்டி அரசியல் சார்பற்ற இயக்கங்களை எல்லாம் ஒன்றிணைத்து எதிர்கால தேர்தலைக் கருத்தில் கொண்டு நம் அரசியல் பலத்தை காட்டிட முயற்சி செய்யும் போது, ஆம், கனிபறிக்க மரம் ஏறும்போது கருநாகம் காலைச் சுற்றுமாம், அது போன்று தேர்தல் வரும்போது எல்லாம் சில்லரைகளுக்காக குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி கொள்கையை கோடிக்கு விற்றவர்கள், வாய்ப்பைத் தவறவிட்டு விட்டு மீண்டும் சமூகத்தின் வாக்கு வலிமையை சிதைக்க, சமூகத்தை அடகு வைக்க, அரசியல் குழப்பம் செய்ய வருகின்றனர்.

இளைஞர்களே எச்சரிக்கை, ஜமாத்தார்களே, சமுதாய இளைஞர்களே, ஆலிம் பெருமக்களே, ஆன்றோர்களே, குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர். சாட்டையடியில் குழப்பவாதிகளின் கொட்டம் அடங்கட்டும். குள்ளநரி செயல்கள் ஒடுங்கட்டும்,


அதன் மூலம் நம் அரசியல் வலிமை பிறக்கட்டும். மற்றவர்கள் நம் அரசியல் வலிமையை உணரட்டும். நம் தனித்தன்மை தமிழ் தரணியில் சிறக்கட்டும். வருங்கால சந்ததிகள் நம்மை போற்றட்டும்.

இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு
9940421595 - 9344510369 - 9443021050

4 comments:

சுட்டிப் பையன் said...

த.மு.மு.க காரர்கள் உண்மையிலேயே தவறு செய்திருந்தால், அவர்களை இறைவன் தண்டிப்பான். அவர்கள் மீது உங்களுக்குள்ள வெறுப்பு வரம்பு மீறச் செய்து விட வேண்டாம் என்று குர்ஆன் வசனத்தை நினைவூட்டி இந்திய தேசிய மக்கள் கட்சி பொறுப்பாளர்களை எசசரிக்க விரும்புகிறேன். இதை எழுதியதற்காக தனிப்பட்ட முறையில் எப்படி என்னைத் தாக்கலாம் என்று சிந்திக்காமல், இறைவனை அஞ்சுங்கள்.

Anonymous said...

த.மு.மு.கவின் உண்மை லீலைகளை உரைத்து உள்ளிர்கள்

Unknown said...

YOU ARE NOT HAVING EVEN A LITTILE BIT ELIGIBLE ALSO TO BLAME OTHER MUSLIM PARTIES.
DON'T YOU HAVE COMMON SENSE?
ARE YOU MUSLIM?
FEAR ALLAH.
BECAUSE YOU PEOPLES ONLY MUSLIM SOCIETY IS GOING DOWN.
DO GOOD FOR THIS SOCIETY OR LEAVE OTHERS TO DO.
DON'T THINK THAT YOU ARE ONLY THE GOOD MAN.

Anonymous said...

நம் சமுதாயம் இந்தளவுக்கு பின்தங்கியதற்க்கும் இந்த முஸ்லீம் அரசியல் கட்சிகளே காரணம்? இவர்கள் சமுதாயத்திற்க்கு என்று எந்த திட்டமும் இல்லை? சமுதாய நிலையை மாற்ற எவ்வகையில் எந்த வகையான முயற்ச்சிகள் எடுக்க வேண்டும் என்ற தூர நோக்கம் கொண்ட சிந்தனையும் இல்லை? இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை ஆதரிக்கும் நமது சமுதாய மக்களில் சிலரும் இதற்க்கு பெறுப்பு? யார் வேண்டுமானாலும், எந்த அடிப்படை சிந்தனையும் இல்லாமல் முஸ்லீம் தலைவர்களாக தேர்தல் நேரத்தில் வலம் வருவார்கள்? இந்த அரசியல் கட்சிகள் முஸ்லீம்கள் பாதிக்கப்படும் போதும், முஸ்லீம்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டிய நேரத்தில் எங்கு ஒளிந்துக் கௌ;கிறார்கள் என்று தெரியவில்லை?

சமுதாய மக்களே உஷார்? என்று நம்முடைய சமுதாயம் இந்த அரசியல் கட்சிகளிடம் உங்களின் திட்டங்கள் என்ன? எவ்வாறு சமுதாயத்தியத்தின் பின்தங்கிய நிலையை போக்க முயற்ச்சி செய்வீர்கள் என்று கேட்குது, அன்று தான் நம்முடைய சமுதாயத்திற்க்கு விடிவுகாலம்.

அதே நேரத்தில் முஸ்லீம் அரசியல் கட்சிகள் முஸ்லீம்களின் பிரச்சனைகளை வலுவாக பேச பின்தங்கக் கூடாது? இதை மற்ற சமுதாய தலைவர்களிடம் கற்றுக் கௌ;ளுங்கள். இந்த முஸ்லீம் தலைவர்களுக்கு தேவைபடுவது எல்லாம் வாக்கு தான்? பிறகு எந்த விஷயத்தை பற்றியும் இவர்கள் நினைப்பதில்லை?

இதை மாற்ற நாம் எல்லோரும் முயற்ச்சி எடுப்போம். மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை எற்படுத்தி சமுதாய அரசியல் துரேகிகள் மற்றும் சுய நலவாதிகளை விரட்டியடிப்போம்.

என்றும் அன்புடன்
சமுதாய காவலன்
அப்துல் காதர்