Thursday, February 24, 2022

The Great Reset மற்றும் The Great Recession

 The Great Reset மற்றும் The Great Recession இந்த இரண்டு வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இவை இரண்டும் விரைவில் நடைபெற்று இந்த உலகை உலுக்கும்.


ரஷ்ய-உக்ரேனிய யுத்தம் என்பது provocation ஆல் நடப்பது அல்ல இது எல்லாமே ஒரு திட்டமிட்ட நாடகம். The Great Reset என்ற உலக ஆட்சிமாற்றத்தை நோக்கிய ஒரு திட்டம் தான் இந்த யுத்தம். இதன் மூலம் ரஷ்யாவின் மீது மேற்குலகம் பொருளாதார தடைகள் விதிப்பது போன்ற நாடகம் நடத்தப்படும் ரசியாவின் சொத்துக்கள் மேற்குலக நாடுகளிலும் அமெரிக்காவிலும் முடக்கப்படும்.


இதன் எதிரொலியாக இம்மாத கடைசியில் ஒரு பெரும் சைபர் யுத்தம் நடத்தப்படும். Cyber Warfare என்பது ரஷ்யா சீனா வடகொரியா ஆகிய நாடுகள் இணைந்து உலகின் அனைத்து நாடுகளையும் முடக்கும். வங்கிகள் பெரிய நிறுவனங்கள், அரசு நிர்வாகங்கள், ராணுவ அமைப்புகள், விமானப் போக்குவரத்து, பங்குச் சந்தை, ரேடார் சிஸ்டம் என அனைத்தும் சைபர் யுத்தத்தால் முடக்கப்படும்.


இதன் எதிரொலியாக எதிர்வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் இவ்வுலகம் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் அதன் பின்னர் பல வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டது போல் ஒரு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு உலகை ஆட்டிப்படைக்கும்.


சில வருடங்களுக்கு முன்னர் அரபு நாடுகளில் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா துணையுடன் நடத்தப்பட்ட அரப் ஸ்பிரிங் எனப்படும் புரட்சியை ஒத்த அதேபோன்ற புரட்சிகள் இந்தியா போன்ற நாடுகளில் ஏற்படுத்தப்படும் இதன் மூலம் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முயல்வார்கள்.


இறுதியாக அமெரிக்க மேற்குலக துணையுடன் கார்ப்பரேட்டுகள் The Great Reset எனப்படும் சதியை அரங்கேற்றம் செய்து உலகம் முழுவதும் ஆட்சிமாற்றம் நிகழ்த்தி கார்ப்பரேட்டுகளின் கையில் உலக நாடுகளின் ஆட்சி செல்லும்.


இதற்கான திட்டங்கள் பல வருடங்களுக்கு முன்னரே துவங்கிவிட்டன. இந்தியாவில் அடிப்படைவாத அமைப்புகள் துணையுடன் அரப் ஸ்பிரிங் ஸ்டைலில் புரட்சி ஏற்படுத்தி அதன்மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முயற்சி செய்வார்கள் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உளவாளிகளும் போராளிகளும் இந்தியாவின் தென் எல்லையான இலங்கையிலிருந்து ஊடுருவ விடப்பட்டு அவர்கள் மூலம் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் பெரும் நாச வேலைகள் நடைபெறும். ஊடுருவலும், ஆயுத கடத்தலும் ஏற்கனவே ஆரம்பித்து நடந்து கொண்டுள்ளன. பாகிஸ்தான் மற்றும் மேற்குலக மெர்சனரிகள் இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி பெரும் நாச வேலைகளை செய்வார்கள் இவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் உள்ள பல பிரிவினைவாத குழுக்களும் மத அடிப்படைவாத குழுக்கள் உதவி செய்வார்கள்.


The Great Reset இந்த சதித் திட்டத்தின் மூலம் இந்தியாவில் குழப்பங்களும் ஆட்சி மாற்றங்களும் வன்முறைகளும் ஏற்படாமல் தடுப்பது மத்திய மாநில அரசுகளின் கையிலும் மத்திய உளவுத் துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் செயல்பாட்டு திறமையிலும் உள்ளது.


முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்

9047507665


https://m.facebook.com/story.php?story_fbid=10161408166903154&id=592838153

Monday, June 21, 2021

மேலப்பாளையம் கா.அ. பழ்லுல் இலாஹி மரணம்
 #இன்னாலில்லாஹி_வ #இன்னா_இலைஹி #ராஜீவூன்.


வளைகுடா நாடுகளின் தமுமுக முன்னாள் அமைப்பாளர் அருமை அண்ணன் மேலப்பாளையம் கா.அ. பழ்லுல் இலாஹி அவர்கள் துபாயில் உடல்நலகுறைவால் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்...


அவர்களின் பிழைகளை இறைவன் மன்னிக்கவும், மறுமை வாழ்வு மற்றும் ‌கப்ர் வாழ்வு சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்வோம். அன்னாரின் குடும்பத்திற்கு அல்லாஹ் பொறுமையை வழங்குவானாக....

Thursday, February 04, 2021

விபச்சார வழக்கிலிருந்து விடுதலை


 
நம் உயிரிலும் மேலான மாநபியின் கண்ணியத்திற்காக நான் குரல் கொடுத்தேன், மாநபியின் மகத்தான துஆவால் இறைவன் என் கண்ணியம் காத்தான் என்னை உயர்த்தினான்.


அவனே உங்களை இழிவு படுத்த கூடியவனாகாவும் உங்களை கண்ணியப்படுத்தகூடியவளாகவும் உள்ளான்!


நேற்று உயர் நீதிமன்ற உத்தரவுப்படி என் மீதான வழக்கிலிருந்து நான் விடுவிக்கப்பட்டேன்.


இறைவன் புறம் நன்மையை நாடி என் மீது அவதூறு பரப்பியவர்கள் அனைவரையும் நான் மனதால் மன்னித்து விட்டேன்.


وَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ‌ۘ اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِيْعًا‌  هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

(நபியே!) அவர்களுடைய (அவதூறான) பேச்சுகள் உம்மைக் கவலையில் ஆழ்த்திவிட வேண்டாம்! கண்ணியம் முழுவதும் திண்ணமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது. அவன் அனைத்தையும் கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 10:65)


எனது கடந்த கஷ்ட்டமான 10 வருட காலங்களில் எனக்கு ஆதரவளித்த வழக்கறிஞர்கள், என்னை உயர்த்தி மேடையில் ஏற்றிய நண்பர்கள், எனது உரவுகள், தோழர்கள் என்னை சந்தேகப்படாமல் நம்பி என்னுடன் பயணித்த எனது மனைவி மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.


முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்

மாநில துணைத் தலைவர்

முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்

தமிழ்நாடு

9047507665

Thursday, February 21, 2019

தேடப்படும் குற்றவாளியாக பீ.ஜெயினுல்லாபுதினை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது!! காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு!!
உயர்நீதீமன்றத்தீல் பீ.ஜே சம்பந்தப்பட்ட வழக்கு விசாரனையின் போது நெல்லை மாநகர காவல்துறை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன் சமர்ப்பித்த எழுத்து மூலமான வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது :

ஐயா பணிந்து சமர்ப்பீப்பதாவது, இந்த வழக்கில் 9 சுதந்திரமான சாட்சிகளை விசரித்ததில் 5 சாட்சிகள் குற்றவாளி பீ.ஜெயினுல்லாபுதீனுக்கு நேரடி தொடர்பிருப்பதாக ஆதாரங்களுடன் கூறியுள்ளார்கள். அவர்களின் வாக்குமூலம் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 161 பிரிவு 3 ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 9 வது குற்றவாளி பீ.ஜெயினுல்லாபுதீன் என்பவன் தலைமறைவாக உள்ளான். அவனை தேடப்படும் குற்றவாளியாக தேடி வருகிறோம். குற்றாவாளி பீ.ஜெயினுல்லாபுதீ னை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. எப்படியும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நன்றி :
அண்ணன் ஃபஸ்லுல் இலாஹி

Thursday, February 18, 2016

மாணவ தலைவர் கண்ணைய குமார் என்ன பேசினார் ?

 
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ தலைவர் கண்ணைய குமார் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து நடந்த மோதல்களும் இந்தியா முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
பலரும், கண்ணைய குமாரின் பேச்சு குறித்து தங்களது கருத்துக்களை சமுக இணைய தளங்களில் தெரிவித்துவருகிறார்கள். ஆனால் பெரும்பாலோருக்கு, கண்ணைய குமார் என்ன பேசினார் என்பது தெரியாது.
சரி, அவர் என்னதான் பேசினார்?
இதோ… அவர் பேசியதன் தமிழாக்கம்:
“எங்களுக்கு தேசபக்தி குறித்து ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து சான்றிதழ் தேவையில்லை. . 80 சதவிகிதத்துக்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகளின் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களை பொறுத்தவரை தேசபக்தியாகும்.
எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இந்த தேசத்தின் அரசியல் சாசனம் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்.
இந்த அரசியலமைப்பின் மீது யாராவது விரல் நீட்டினால், அது சங் பரிவாரத்தின் விரலோ அல்லது வேறு எவருடைய விரலோ, அந்த விரலை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ளவே மாட்டோம்.
ஆனால், ஜண்டேவாலாவிலும், நாக்பூரிலும் கற்பிக்கப்படும் சாசனத்தின் மீது எங்களுக்கு சிறு துளி அளவும் நம்பிக்கை கிடையாது. எங்களுக்கு மனு ஸ்மிருதியின் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை. இந்த தேசத்தில் நிலவும் சாதியவாதத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை.
அண்ணல் அம்பேத்கர்தான் அரசியல் சாசன உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். அவர்தான் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்கிறார், அவர்தான் கருத்துரிமை பற்றிப் பேசுகிறார்.
நாங்களும் எங்கள் அரசியல் சாசன உரிமைகளை எந்த ஒரு காரணத்துக்காகவும் விட்டு கொடுக்கவே மாட்டோம்.
“ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜிஹாதிக்கள் இருக்கிறார்கள், வன்முறையை பரப்புகிறார்கள்” என்று சுப்பிரமணியன் சுவாமி கூறுகிறார். தைரியம் இருந்தால் ஆர்.எஸ் எஸ் அடிவருடிகளை அழையுங்கள். நாங்கள் சவால் விட்டு கேட்கிறோம். ஏபிவிபி தங்களது முழக்கங்களில் “ரத்தத்தால் திலகமிடுவோம்” என்றும், “குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்றும் கூறுகிறார்களே..
இந்த வெட்கங்கெட்டவர்கள் யாருடைய ரத்தத்தை இந்த ஊரில் ஓட விடப் பார்க்கிறார்கள்?
ஆம், நீங்கள் குண்டுகளை வீசியிருக்கிறீர்கள்… . ஆங்கிலேயர்களோடு சேர்ந்துகொண்டு, இந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் மீது குண்டுகளை வீசியிருக்கிறீர்கள். .
இந்த ஊரில் ஏழைகள் தங்கள் பசியைக் குறித்து கவலை கொள்கிறார்கள். பட்டினியில் வாடும் மக்கள் தங்கள் உரிமையைப் பற்றி பேசுகிறார்கள். நீங்கள் அவர்கள் மேல்தான் உங்கள் குண்டுகளை பாய்ச்சுகிறீர்கள். இஸ்லாமியர்கள் மீதும் குண்டுகளை பாய்ச்சுகிறீர்கள். பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடினால், பெண்கள் சீதையைப் போல இருக்க வேண்டும் என்று அவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறீர்கள்.
இந்த நாடு ஜனநாயக நாடுதானே? மாணவர்கள், ஊழியர்கள், ஏழைகள், கூலித்தொழிலாளி மற்றும் விவசாயிகள் ஆனாலும், அம்பானி அல்லது அதானி ஆனாலும் அனைவருக்கும் ஜனநாயக உரிமைகளை ஜனநாயகம் வழங்கியிருக்கிறதே? பெண்களின் உரிமைகள் குறித்து பேசும் போது, நாங்கள் பாரதிய பண்பாட்டை அழிக்க நினைப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். .
ஆம், நாங்கள் சிலவற்றை அழிக்கத்தான் நினைக்கிறோம். சுரண்டல் பண்பாட்டை அழிக்க விரும்புகிறோம். சாதிய பண்பாட்டை அழிக்க நினைக்கிறோம். மனுவாத, பார்ப்பனிய பண்பாட்டை அழிக்க ஆசைப்படுகிறோம்.
இந்த காவி பரிவாரங்கள் உண்மையில் எங்கே பிரச்சனைகளை உருவாக்க ஆரம்பிக்கிறார்கள்? மக்கள் ஜனநாயகத்தை குறித்து பேசும் போதும், செவ்வணக்கத்தோடு, நீல வணக்கத்தை இணைத்து சொல்லும் போதும், மார்க்ஸோடு, அண்ணல் அம்பேத்கரின் பெயரை இணைக்கும் போதும், காவிகள் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.
இந்த காவிக் கும்பல் ஆங்கிலேயர்களின் அடிவருடிகள். ஆர்.எஸ்.எஸின் வரலாறு என்பதே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தோடு பிணைந்திருக்கிறது. இந்த தேசத்துரோகிகள் தான் நம்மிடம் தேசபக்திக்கான சான்றிதழைக் கோருகிறார்கள்.
வேண்டுமென்றால், எனது மொபைலை பரிசோதித்துக் கொள்ளுங்கள் தோழர்களே, என் தாய், சகோதரிகளை பற்றி அசிங்கமான சொற்களில் திட்டி தீர்க்கிறார்கள். பாரத மாதாவை பற்றி பேசுகிறது இந்த கும்பல்.
நான் சொல்கிறேன்… .உங்கள் பாரத மாதாவில் எனது தாய் இல்லை என்றால், பாரத மாதா மீதே எனக்கு உடன்பாடு இல்லை.
என் தாயார் அங்கன்வாடியில் 3000 ரூபாய்க்கு கூலி வேலை செய்கிறார். அந்த வருமானத்தில்தான் எங்கள் குடும்பம் நடக்கிறது. இந்த கும்பல் அவருக்கு எதிராக கெட்ட வார்த்தையில் ஏசுகிறது.
இந்த நாட்டின் ஏழை, தலித், விவசாயிகளின் தாய்மார்கள் யாரையும் இவர்கள் பாரதமாதாவாக ஏற்றுக் கொள்வதில்லை. உங்களுக்கு துணிவிருந்தால் புரட்சி வெல்லட்டும் என்றோ, பகத்சிங் புகழ் ஓங்குக என்றோ, சுகதேவின் புகழ் ஓங்குக, அம்பேத்கரின் புகழ் ஓங்குக என்றோ கூற முடியுமா? அப்பொழுது நம்புகிறோம், காவிக் கும்பலுக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று.
ஆனால், அம்பேத்கரின் 125 வது பிறந்த நாள் கொண்டாடுவதாக நாடகம் ஆடுகிறது காவி கும்பல்.
சாதியம் தான் இந்த நாடு சந்திக்கும் முதன்மையான பிரச்சினை என்று அண்ணல் அம்பேத்கர் கூறினார்.. !
உண்மையாக அக்கறை இருக்குமானால், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்களேன்!
அப்பொழுது நம்புகிறோம், காவிக் கும்பலுக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று.
பல்கலைக்கழக வளாகம் இருப்பதே எதற்காக? சமூகத்தில் நிலவும் சூழலை குறுக்கு விசாரணை செய்வதற்குதானே…?
பல்கலைக்கழகங்கள் இந்த பணியில் தோற்றால், நாடு, நாடாகவே இருக்காது.
இந்த தேசத்தோடு நாங்கள் ஒன்றிப்போனவர்கள். , அம்பேத்கரும், பகத் சிங்கும் இந்நாட்டின் நலனுக்காக கண்ட கனவுகளோடும் நாங்கள் ஒன்றிப் போனவர்கள்.
உணவு, உடை, இருப்பிடம் என அனைத்திலும் சமத்துவத்தை உறுதி செய்வதுதான் எங்கள் லட்சிய கனவு. இந்த கனவுக்காகத்தான் ரோஹித் தன்னுடைய உயிரை கொடுத்தான்.
மத்திய அரசுக்கு நாங்கள் சவால் விடுகிறோம். ஐதரபாத்தில் ரோஹித்துக்கு என்ன நடந்தந்தோ, அதை கண்டிப்பாக ஜே.என்.யூவில் (நேரு பல்கலை) நடக்க விட மாட்டோம்.”
Thanks : Patrikai.com

Friday, February 05, 2016

பல கோடி மதிப்புள்ள கஞ்சா, போதைப்பொருளுடன் எஸ்.டி.பி.ஐ - பி.எஃப்.ஐ நிர்வாகிகள் கைதுஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் இசுலாமிய சொந்தங்களுக்கும், நீதி, நியாயமிக்க மனசாட்சி உடையோருக்கும், இன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ போன்ற பெயர்களில் செயல்பட்டு வரும் அமைப்பினர் எம்.என்.பி யாக இருந்த காலங்களில் இருந்து நான் இவர்களின் தீவிர ஆதரவாளனாகவும், அன்றைய காலங்களில் இவ்வமைப்பினர் காவல்துறையாலும் , உளவுத்துறையாலும் துன்புறுத்தப்பட்டபோது என் கையில் இருந்த ஊடகங்களின் மூலம் இவர்களுக்காக நான் பலத்த குரல் எழுப்பியுள்ளேன். இரத்தின சபாபதி என்ற அதிகாரியால் இவர்கள் மீது வழக்குகள் புனையப்பட்டு இவர்களின் அமைப்பினர் துன்புறுத்தப்பட்டபோது இவர்களுக்காக இணையத்தளங்களின் வாயிலாக இவர்களுக்கு ஆதரவாக பெரிய யுத்தமே நடத்தியவன் நான். எனது எழுத்துக்களின் மூலமும் இவர்களின் வளர்ச்சி இருந்தது என்பது சற்றும் மறுக்க இயலாத உண்மை இவர்கள் இயக்கத்தின் மூத்த தலைவர்களை கேட்டால் தெறியும் நான் இவர்களுக்காற்றிய உதவி எவ்வளவு பாரிய அளவிலானது என்று.SDPI மெம்பர் என ஹிந்துவில் வந்துள்ள செய்தி
 

ஆனால் 2010 ம் வருடத்திற்கு பின்னால் நான் இந்தியாவில் இருந்து இவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவணித்து வந்தபோது தான் இவர்களின் வேறு ஒரு முகம் எனக்கு தெறியவந்தது. இது குறித்து இவர்களின் தலைமைக்கு தெறியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் இவர்களைப்பற்றி யதார்த்தங்களை எனது எழுத்துக்கள் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியதால் என் மீதான பல தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினத் நடத்தினர். மிகச் சமீபத்தில் கடந்த அக்டோபர் மாதம் என் மீது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி என்னை கொல்ல முயன்றபோது நான் காவல்துறையில் அளித்த புகாரிலும் , வாக்குமூலத்திலும் சில விசயங்களை உறுதிப்பட கூறியிருந்தேன் அவற்றில் ஒன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பினர் இலங்கையில் இருந்து கடல் வாயிலாக போதைப்பொருள் , ஆயுதக்கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று.


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் கீழக்கரை அப்துலு் ஹமீதுடன் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நிர்வாகி நவாஸ்கான் 

எனது புகாரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைத்தனர் ஆனால் மூன்று மாதங்களில் முறையாக இல்லாமல் பிழைகளுடன் குண்டர் தடுப்பு சட்டத்திற்கான ஆவணம் தயார் செய்யப்பட்டிருந்ததால் அதை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் 450 க்கும் மேறப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர் அதில் இவ்வமைப்பினரும் விடுவிக்கப்பட்டனர். நான் கொடுத்த வழக்கில் தற்சமயம் பிணையில் உள்ளனர் வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது இன்சா அல்லாஹ் இவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவேன்.


கோடிக்கணக்கான மதிப்புள்ள கஞ்சா கடத்தலில் கைதாகியுள்ளவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ வால் போஸ்ட்டர் 

இந்த வழக்கு குறித்து மேற்படி அமைப்பினரின் ஊதுகுழலான புதிய விடியல் எனும் புத்தகத்தில் 5 பக்கத்திற்கு அவதூறுகளையும், கற்பனைகளையும் தாங்கி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர். அதில் நான் கொடுத்த புகார் பொய் என்றும் எனது வாக்குமூலத்தில் நான் கூறியிருந்த தகவல்கள் அனைத்தும் கட்டுக்கதை என்றும் அப்போதைய எஸ்.பி யான திரு. மயில்வாகணன் மற்றும் எஸ்.ஐ ஜேசுதாஸ் ஆகியோர் என்னுடன் கூட்டு சோ்ந்து அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கற்பனை செய்து எழுதியிருந்தனர் . அத்துடன் என்னை ஒரு சமூக விரோதி என்றும் , விபச்சார ஏஜென்ட் என்றும் என்மீதான வழக்குகளை பட்டியலிட்டு எழுதியிருந்தனர். அத்துடன் என் மீது காவல்துறைக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் பொய்யான பெயர்களில் பல மொட்டை கடிதங்களை போட்டு வந்தனர்.

 


ஆனால் பாருங்கள் தோழர்களே வல்ல இறைவன் எவ்வளவு வல்லமையானவன் என்று? நான் எனது புகாரிலும், வாக்குமூலத்திலும் கூறிய சம்பவங்கள் ஒவ்வொன்றும் உண்மை என நிறுபிக்கும் வகையில் சமீபத்திய நிகழ்வுகளை இறைவன் நடத்தி காட்டி வருகின்றான்.பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினரின் முக்கிய வருமானமே போதைப்பொருள் கடத்தல் மற்றும் கள்ளக்கடத்தல் மூலம்தான் என்பது நிறுபிக்கப்பட்டுள்ளது சகோதரர்களே அதுவும் யாரால் தெறியுமா? பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினராலுயே மிக நோ்மையான அதிகாரி என சான்றளிக்கப்பட்ட கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி மூலமாகவவே உண்மைகள் வெளியே வந்துள்ளன.பி.எப்.ஐ - எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகி நவாஸ்கான்
 

சமீபத்தில் இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பின் முக்கிய நிர்வாகியான இராமநாதபுரம் நேரு நகரில் வசிக்கும் நவாஸ் கான் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இவர்களின் ஆதரவில் தங்கியிருந்த இலங்கையை சோ்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிச்சயமாக நவாஸ்கான் இதற்கு முழு பொறுப்பாக மாட்டார் , காவல்துறை கட்டாயம் முழு விசாரனை செய்து இதில் பின்புலமாகயிருக்குமு் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பின் முக்கிய தலைவர்களையும் , பொருளாதார உதவி செய்பவர்களையும் விரைவில் பிடிக்கும் அப்போது உண்மை தெறிய வரும்.நோ்மைக்கும் உண்மைக்கும் பெயர் போன டி.எஸ்.பி மகேஸ்வரியின் மீது அவர் ஒரு பெண் என்று கூட பாராமல் பல அவதூறுகளை தற்சமயம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் வாரி இறைத்து வருகின்றனர். கடந்த முறை எஸ்.பி மயில்வாகணன் இருக்கும்போது அவரையும் எஸ்.ஐ ஜேசுதாசையும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகள், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என சித்தறித்தனர். தற்போது இருவரும் மாறுதலாகிவிட்டனர் தற்சமயம் திரு. மணிவண்ணன் என்ற ஒரு மிக நோ்மையான அதிகாரி எஸ்.பி. யாக உள்ளார். இவரின் நோ்மைக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினரே சான்றளித்துள்ளனர். இவர்கள்தான் தற்போது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகியான நவாஸ் கானை கையும் களவுமாக கைது செய்துள்ளனர் . இவ்வமைப்பினரின் வீடுகளில் இருந்தே பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்த செய்தி தமிழகத்தின் ஆங்கிலம், தமிழ் என அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிடிபட்டுள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பின் நிர்வாகி நவாஸ்கான் என்பவர் இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கிலும் சிக்காதவர், இவரை காவல்துறையினர் ஆதாரங்களுடன் பிடித்துள்ளனர் என்பதிலிருந்து தெறியவில்லையா இது உண்மை என்று. கையும் களவுமாக மாட்டிக்கொண்டோம் என்றவுடன் தற்போது இவ்வமைப்பினர் இஸ்லாம், முஸ்லிம்கள், பொய் வழக்கு , காவல்துறையினர் காவித்துறையாக மாறிவிட்டனர் இது ஆர்.எஸ்.எஸ் சின் சதி என கூப்பாடு போடுகின்றனர். ஏன் தமிழக காவல்துறையில் ஒரு அதிகாரி கூடவா நோ்மையானவராக இல்லை? அனைவரும் ஆர்.எஸ்.எஸ் சின் கை்ககூலிகளா?

இஸ்லாம், முஸ்லிம்கள், ஜிஹாத் என கோசம் போட்ட இந்த போலி இஹ்வான்களின் முகத்திறை தற்போது கிழிந்துள்ளது. இவர்களின் உண்மை முகம் கஞ்சா, ஹெராயின், போதை, ஆயுதக்கடத்தல் என்பதுதான் என்பதை மக்கள் புறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் தடுத்துள்ள போதை வஸ்த்துக்களை கடத்தி அவற்ற கோடிக்கணக்கில் விற்பதிலேயே இவ்வமைப்பினரின் பொருளாதாரம் இயங்குகிறது என்பதையும் மக்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.காவல்துறையினரும், உளவுத்துறையினரும் ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் நினைப்பதுபோல் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் பத்தோடு பதினொன்றாக ஒரு அமைப்பு இல்லை, இவர்களின் பின்புலும் முழுவதுமாக அலசி ஆறாயப்பட வேண்டிய ஒன்று என்பதையும், இவர்களின் எல்லை தாண்டிய தொடர்புகள் முழுவதுமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும். மாநில , மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நான் இவர்கள் மீது அளித்துள்ள அனைத்து புகார்களையும் ஆய்வு செய்து அவற்றை மறு விசாரனை செய்தால் இவர்களின் முழு குற்ற பிண்ணனியும் தெறிய வரும். இந்திய தேசத்திற்கும், தேச பாதுகாப்பிற்கும் எதிரான அனைத்து காரியங்களையும் செய்து வரும் இவர்கள் தங்களை தற்காத்து கொள்ள இடை இடையே வெள்ள நிவாரனப்பணிகள், நோட:டு புத்தகம், ஸ்கூல் பேக் வழங்குதல் என சில லட்சங்களை செலவு செய்து சமூகப்பணிகள் என்ற பெயரில் புகைப்படங்களையும் , வீடியோக்களையும் எடுத்து வைத்துக்கொண்டு தங்களை சமூக நல இயக்கம் என நீதிமன்றங்களில் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவார்கள் அதற்கு ஆதாரமாக மேற்கூறிய புகைப்படங்களை தாக்கல் செய்வார்கள், நீதியரசர்களும், அதிகாரிகளும் இவ்விசயத்தில் மிக கவணமாக இருக்க வேண்டும்.இராமநாதபுரம் எஸ்.பி மணிவண்ணனின் நேர்மையை பாராட்டும் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர்
 

வெளிநாட்டில் சம்பாதித்து தங்களின் செல்வங்களை வாரி வழங்கும் தோழர்களு அறிந்து கொள்ளுங்கள் இவர்களின் உண்மை முகத்தினை , நாட்டில் தொழில் செய்கிறோம் உங்களுக்கும் பங்கு தருகிறோம் என உங்களிடம் வாங்கிய பணத்தினை கொண்டு இவர்கள் செய்யும் கேவலமான தொழில் என்ன என்று இப்போது புறிகிறதா? சமூகத்தினை போதை பொருட்களை கொண்டும், மத மோதல்களை ஏற்படுத்தியும் அழிக்க நினைக்கும் இவர்களுக்காக உங்களின் சதக்கா, ஜக்காத், பித்ராக்களை வழங்குகின்றீர்கள்? சிந்தியுங்கள் தோழர்களே?

மாவட்ட காவல்துறை நிர்வாகமும், மாநில காவல்துறையும் இந்த வழக்கை இத்துடன் விட்டுவிடாது முழுமையாக விசாரித்து முழு குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். கடல வழியாக கடத்தி வரப்பட்டது தங்கமும், போதைப்பொருள் மட்டும்தானா? இல்லை ஆயுதங்களும் வெடிபொருள்களுமா? அப்படியானால் அவை சென்ற இடம் எங்கே? இவற்றிற்கு பைனான்ஸ் செய்யும் பெரும் முதலைகள் யார் யார்? நவாஸ்கான் ஒரு துருப்புதான் இவனின் பின்புலம் என்ன என்பது குறித்து உரிய விசாரனை நடத்த வேண்டும்.தமிழக முதல்வருடன் டி.எஸ்.பி மகேஸ்வரி அவர்கள்
 

பொய் வழக்கு , போராட்டம் என போஸ்ட்டர் அடித்து ஒட்டி , அநாகரிகமாக பெண் டி.எஸ்.பி. யையும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளையும் இழிவு படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போட்டு வரும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இவர்கள் அழுத்தம் கொடுத்து விசாரனையை நிறுத்தவோ திசை திருப்பவோ முயல்கிறார்கள் என்பதை மாவட்ட , மாநில நிர்வாகங்கள் புறிந்து கொள்ள வுண்டும். இது ஒரு முக்கிய குற்ற வழக்கு, தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதை நினைவில் கொண்டு காவல்துறை செயலாற்ற வேண்டும். இவர்களின் அரசியல் மிரட்டல்களுக்கு ஒரு போதும் காவல்துறை அடிபணியக்கூடாது. காவல்துறையின் நெஞ்சில் ஏறி மிதிக்க வேண்டும் என தங்கள் தொண்டர்களுக்கு பயிற்சியளிப்பவர்கள் இவர்கள் என்பதை காவல்துறை கவணத்தில் கொள்ள வேண்டும். இதன் பிண்ணனியில் இவ்வமைப்பின் முக்கிய மாநில , மாவட்ட நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் காவல்துறையையும் அரசையும் கெட்டு கொள்கிறேன்.
இறுதியாக வெளிநாடுவாழ், உள்நாட்டு இசுலாமிய, மாற்று மத நன்பர்கள் இவர்களின் சாயம் வெளுத்துவிட்டதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கானது பொய் வழக்கல்ல...உண்மையான வழக்காகும், விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் அணைவரும் நோ்மையானவர்கள் என்பதையும் புறிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தின் பெயரில் செயல்படும் இவர்கள் மாபெரும் இஸ்லாமிய விரோத , தேச விரோத சக்திகள் என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  எனது அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருங்கள் இன்னும் முக்கிய ஆதாரங்களுடன் வருகிறேன்.


என்றும் அன்புடன்,

முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
9047507665

Wednesday, August 12, 2015

12.08.2015 வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) நினைவு நாள்
வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 12ம் நாளில் கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.

இக்காலகட்டத்தில், ஆகத்து 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.
வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர்.பெண்களை பாலியல் பலாத்காரம்
செய்து படுகொலை செய்தனர்.கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர்.


வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை தேதி வாரியாக பார்ப்போம் :

20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை

05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை

10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை .

16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல்பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.

26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம்ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

12.08.1990 வீரமுனை அகதிமுகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி
கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.

20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட
வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்களே.

இனப்படுகொலை என்பது எங்கு நடந்தாலும் வண்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஒரே இனத்தை , ஒரே மொழி பேசக்கூடிய மக்களை மதத்தின் பெயரால் கொல்வதென்பது ஏற்றுக்கொள்ள இயலா ஒன்றாகும்.
காத்தான்குடி...காத்தான்குடி என கத்தும் நியாயவான்களே....இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? இவர்கள் காஃபீர்கள் என்றா?

Tuesday, June 23, 2015

விலகல் அறிவிப்பு

தோழர்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டமாக,

தமிழக சிறைகளில் வாடும் ஆயுள்சிறைவாசிகள்,அரசியல் சிறைவாசிகள், அனைவருக்குமான நீதியில் தனித்து புறக்கணிக்கப்பட்ட இசுலாமிய நீண்ட நாள் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கையை குறிப்பாக முன்வைத்து கடந்த 2012ல் தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று படுத்தி ஒரே மேடையில் ஒற்றை முழக்கமாக ”10ஆண்டுகளுக்கு மேல் தமிழக சிறைகளில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகள், ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்” என்ற கோரிக்கையுடன் பல களப்பணிகளையும், சட்ட பணிகளையும் செய்து வரும் தோழர் வழக்கறிஞர் உமர்கயான் அவர்கள் தலைமையிலான இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு கடந்த சில வருடங்களாக நானும் அதில் என்னை இணைத்து கொண்டு அதன் செயல்பாடுகளுக்கு ஆதரவாக ஏதோ என்னால் ஆன ஆதரவினை செய்து வந்தேன்.

10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்க…

இசுலாமிய சிறைவாசிகள் 10 ஆண்டுகள் கழித்து விடுதலைக்கு தகுதியிருந்தும் கடந்த ஆட்சியின் பாரபட்ச போக்கால் விடுதலை செய்யப்படவில்லை கடந்த ஆட்சியின் தவறுகளை கழைந்து இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க..

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் மட்டும் பாரபட்சம் ஏன் தமிழக சிறைகளில் உள்ள இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க

மற்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் முடிவில்லா சிறைவாசம் இல்லாமல் 7.10, ஆண்டுகளில் விடுதலை செய்வதைப்போல் தமிழகத்திலும் வாழும் உரிமையை ஆயுள் சிறைவாசிகளுக்கு அளிக்கவேண்டும்.

அனைத்து சிறைவாசிகளுக்கும் இருப்பது போல் வழிகாவல் இல்லாமல் இசுலாமிய சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு அளிக்கவேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கைவைக்கவேண்டும்.

இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தடையாக முந்தைய ஆட்சியாளர்கள் பாரபட்சத்தோடு பிரப்பித்த அனைத்து அரசானைகளையும் ரத்து செய்ய தமிழக அரசு ரத்து செய்யவேண்டும்.
சிறையில் இனம்புரிய சிறைநோயில் தினம் செத்துக்கொண்டிருக்கும் அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

சாதிய வண் கொடுமைக்கு எதிராக போராடி சிறைபட்டிருக்கும் தோழர் துரைபாண்டி,ஜோதி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சிறையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட,தமிழ்தேசிய விடுதலைப் போராளிகளை விடுதலை செய்யவேண்டும்.

தமிழக சிறைகளில் வாடும் 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்க

சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழீழ அகதிகளை சிறையைவிட கொடுமையான முகாம்களை அடைத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்து அவர்கள் குடும்பத்துடன் சுதந்திரமாக சேர்ந்து வாழ செய்யவேண்டும் சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடவேண்டும் போன்ற இந்த அமைப்பின் நியாயமான கோரிக்கைகளுக்காக எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது அயராது உழைக்கும் தோழர்களாக இவ்வமைப்பில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு உழைத்த தோழர் எமனை சர்புதீன், தோழர் தமிழ்பிரியன் செந்தில், தோழர் சதீஸ் குமார், தோழர் எட்கர் சாலமோன், தோழர் உமர்கயான இவர்களோடு எனது பயனமும் தொடர்ந்தது.

இவர்களின் இவ்வுன்னதமான கோரிக்கை போராட்டங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் அனைத்து சமுதாய அமைப்புகளின் ஆதரவும் இவர்களுக்கு தேவைப்படக்கூடிய ஒரு நிலையில் இவ்வியக்கம் உள்ளது. சிறைக்கொட்டடிகளில் தங்கள் வாழ்வை தொலைத்து வாடி வரும் விளிம்பு நிலை மனிதர்களான சிறைவாசிகளின் விடுதலைக்கான இப்போரோட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதில் எவ்வித கருத்து முரன்பாடுகளும் இல்லை. இவ்விளிம்பு நிலை மனிதர்களுக்கான போராட்டத்தில் தனது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் செலவழித்து போராடி கொண்டிருக்கும் தோழர் உமர்கயானின் தியாகங்களை வார்த்தைகளால் வர்னிக்க இயலாது. சில நல்லுள்ளங்களின் சின்ன சின்ன அன்பளிப்புக்களோடு தனது உழைப்பு முழுவதையும் இதிலேயே செலவழிக்கும் தோழர் உமர்கயான தனது வாகணத்தை முதற்கொண்டு விற்று இதற்காக செலவழித்து கொண்டுள்ளார். அவரின் இப்பயனத்தில் இசுலாமியர்களை வட இசுலாமியர் அல்லாத தமிழ் சொந்தங்கள் இப்போராட்டத்தின் அர்த்தத்தினை உணர்ந்து தங்களையும் இணைத்து கொண்டு போராடி வருகின்றனர்.

எனக்கும் சில மதவாத சித்தாந்த அமைப்புகளுக்குமிடையேயான கருத்து மோதல் இவர்கள் முன்னெடுத்து செல்லும் போராட்டங்களுக்கு இடையூராக உள்ளது. என்னால் எப்போதும் எனது சுயத்தை மாற்றிக்கொள்ள இயலாது. ஆகையினால் இன்றிலிருந்து இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில் ஒருங்கினைப்பாளர், அடிப்படை உறுப்பினர் எட்பட அனைத்து பதவிகள் பொறுப்புக்களில் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன் என்பதை இவ்வமைப்பின் முதன்மை ஒருங்கினைப்பாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் இதன் மூலம் அறிவித்து கொள்கிறேன். இனிமுதல் எனக்கும் இன் அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்துக்கும் எவ்வித தொடர்புகளும் இருக்காது எனவும், அதன் அனைத்து செயல்பாடுகளில் இருந்தும் நான் விலகி நிற்பேன் எனவும் தெறிவித்து கொள்கிறேன். எனது இந்த விலகலின் மூலம் இநி வரும் காலங்களில் நீங்கள் எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாக்க பட மாட்டீர்கள் என நம்புகிறேன். எனது எந்த பதிவுகளிலும் இவ்வமைப்பின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் யாரும் டேக் செய்யப்பட மாட்டீர்கள் எனவும் அதுபோல் இனிவரும் காலங்களில் இவ்வமைப்பினர் யாரும் தங்களது இயக்கம் சம்பந்தப்பட்ட பதிவுகளில் என்னை டேக் செய்ய வேண்டாம் எனவும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

ஆகையால் இன் அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் "சகோதர இயக்கங்களுடனான முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக நமது தனிப்பட்ட செயல்பாடுகள் இருக்ககூடாது" என்ற இவ்வமைப்பின் புதிய கொள்கையின்படி எனது தனிப்பட்ட செயல்பாடுகள் இதன் மூலம் இனி இவ்வமைப்பிற்கு இடையூராகவோ அல்லது முரன்பாடுகளை ஏற்படுத்தும் விதமாகவோ இருக்காது என நம்புகிறேன்.இன் அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தினர் முன்னெடுத்து செல்லும் உன்னதமான அனைத்து போராட்டங்களும் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுகிறேன்.

நன்றி
என்றும் அன்புடன்
முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன்
9047507665

Wednesday, April 01, 2015

பாப்புலர் ஃப்ரன்டும் பொய் மூட்டைகளும் !! 25 லட்ச ரூபாய் நஷ்ட்ட ஈடும்!!

பாப்புலர் ஃப்ரன்டும் பொய் மூட்டைகளும் !! 25 லட்ச ரூபாய் நஷ்ட்ட ஈடும்!!
பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா என்ற அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சேக் முகமது அன்சாரி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஒற்றுமை ஊர்வலத்தில் கலவரம் நடந்ததாகவும், அதில் 4 இந்துக்கள், ஒரு முஸ்லிம் என்று 5 பேர் கொலை செய்யப்பட்டதாகவும், அட்வகேட் ஜெனரல் மூலம் போலீஸ் கமிஷனர் கோர்ட்டுக்கு தகவல் தெரிவித்தார்.ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தில் இப்படி 5 பேர் கொலை செய்யப்பட்டதாக எந்த ஒரு போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அப்படி ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. ஆனால் பொய்யான தகவலை இந்த கோர்ட்டுக்கு தெரிவித்து, எங்கள் அமைப்புக்கு ஊர்வலம் செல்ல அனுமதி வழங்க விடாமல் போலீஸ் கமிஷனர் தடுத்து விட்டார்.இதனால், எங்கள் அமைப்பு இந்த நிகழ்ச்சிக்காக செலவு செய்த ரூ.8 லட்சம் வீணாகி போனது. பொய்யான தகவலை தெரிவித்து, எங்கள் அமைப்புக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எங்கள் அமைப்புக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். பொய் தகவலை கொடுத்து கோர்ட்டை ஏமாற்றிய போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான விசாரணை நடத்தி அவரை தண்டிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பாப்புலர் ஃபரன்ட் அமைப்பின் சார்பில் கூறப்பட்டிருந்தது.

#உண்மையில் நடந்தது என்ன?

கடந்த 2014 ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் நடத்த இருந்த அணிவகுப்பு மற்றும் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதன் பின்னர் 16.02.2014 அன்று ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் மேற்படி அமைப்பினரின் வாக்குறுதிகளை நம்பி , சீறுடை அணிந்து அணிவகுப்பு நடத்தமாட்டோம் பேரணி மட்டும்தான் என்பன போன்ற பொய்யான வாக்குறுதிகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. அந்த அனுமதியில் தெளிவாக :

1) சீறுடை அணிந்து அணிவகுப்பு நடத்த கூடாது .

2) ஆயுதங்கள், கம்பு , லத்தி போன்றவைகளை எடுத்து வரக்கூடாது.

3) குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது

4) டிரமஸ் வாசிக்க கூடாது.

என்ற நிபந்தனைகளுடன் அந்த பேரணியை இராமநாதபுரம் வெளிப்பட்டினம் , சின்னக்கடை நான்கு முனை ரோட்டில் இருந்து சந்தைப்பேட்டை தாஜ் திருமண மஹால் வரை அமைதியாக நடத்தி கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது.

ஆனால் இவை அனைத்தையும் மீறி அனுமதிக்கப்பட்ட இடமான சின்னக்கடை நான்கு முனை ரோட்டில் நடத்தாமல் அங்கிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குமரையா கோவில் மற்றும் இபுறாஹிம் சேட் நகரின் உட்புறத்தில் ஆரம்பித்து தேசிய நெடுஞ்சாலையை மறித்து நடத்த முயன்றனர்.

1) சீறுடை அணிந்தவாறு

2) ஆயுதங்கள், கம்பு , லத்தி போன்றவைகளில் பி.எப்.ஐ கொடியை கட்டி

3) குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவாறு

4) டிரம்ஸ் வாசித்தபடி


அனைத்து நபிந்தனைகளையும் மீறி கலவரத்தில் ஈடுபட் வேண்டும் என்ற ஒரு உள் நோக்கத்துடன் இந்த பேரணி நடத்த முயன்றனர். அப்போது அதை தடுக்க முயன்ற காவல்துறையினர் மீதும், அருகில் இருந்த ஹிந்து கடைகள் மீதும் திட்டமிட்டு பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினரால் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த ஊர்வளத்திற்கு "ஹதீஸ் சொலகிறார்கள்" என கூறி அழைத்து வரப்பட்ட முஸ்லிம் பெண்களையும், குழந்தைகளையும் ஈவிரக்கமில்லாமல் மனித கேடயமாக பயன்படுத்தினர்.இதன் காரனமாக ஹதீஸ் கேட்கும் ஆவலில் வந்திருந்த இசுலாமிய பெண்கள் வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் அடிவாங்கியபடி சிதறி ஓடிய அவலம் நேர்ந்தது. குழந்தைகளும் தப்பவில்லை. காவல்துறையினரை கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு வேடிக்கை பார்க்க வந்திருந்த சில ஹிந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுதான் அங்கு நடந்த உண்மை சம்பவம். மேற்படி அமைப்பின் நிர்வாகிகளுக்கும் பேரணியை அமைதியாக நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை மாறாக தங்கள் அமைப்பின் பெயரும் செய்தியும் இந்தியா முழுவதும் பத்திரிக்கைகளிலும் , தொலைக்காட்சிகளிலும் வரவேண்டும் அதற்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற முன்கூட்டிய திட்டமிடல் இருந்தது. அதன வெளிப்பாடே இவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம். இதன் பின்னர் பேசிய இவர்களின் நிர்வாகி ஒருவர் " இப்ப நாங்கள் வேர்ல்ட் புல்லா ரீச்ச ஆயிட்டம்ல, ஊர்வளம் நடந்திருந்தா கூட எங்க பெயர் இவ்வளவு ரீச் ஆகாது"என கமென்ட் செய்தார்.

இவர்களின் நோக்கம் மீடியா பாப்புலர் ஆக வேண்டும் என்பதாகவே இருந்தது.

அதன் பின்னர் நடந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேற்படி அமைப்பினர் தவறான தகவல்களை அளித்தனர். காவல்துறையும் உளவுத்துறையும் கோட்டை விட்டதால் தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கை ரத்து செய்து நீதிபதி அக்பர் அலி உத்தரவிட்டார்.

நீதிபதி அக்பர் அலி இந்த வழக்கை ரத்து செய்ததன் முக்கிய காரனமாக காட்டப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் இராமநாதபுரம் மாவட்டம் , பெரியபட்டினம் கிராமத்தை சேர்ந்த கலிபுல்லா என்பவர் போலிஸ் தாக்கியதில் கொல்லப்பட்டார் எனற பாப்புலர் பிரன்டின் வாதத்தை மையமாக வைத்து இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன? கலிபுல்லா போலிஸால் படுகொலை செய்யப்பட்டாரா?

இல்லை என்பத நிதர்சனமான உண்மை. இராமநாதபுரம் மாவட்டம் , பெரியபட்டினம் கிராமத்தில் கலிபுல்லா என்பவர் இருந்தது உண்மை இறந்ததும் உண்மை. ஆனால் அவர் பாப்பலர் ஃப்ரன்ட் அமைப்பினரால் நடத்தப்பட்ட கலவரத்தில் போலிஸால் கொல்லப்படவில்லை.

#அப்படியானால் கலிபுல்லா எப்படி இறந்தார்?
உடல் நிலை சரியில்லாத மேற்படி கலிபுல்லாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல்களின் பாதிப்பு முற்றிவிட்டதாகவும் அதனால் சிகிச்சை பெற வேண்டும் என தெறிவித்ததால் மேற்படி கலிபுல்லா உள்நோயாளியாக இராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள ஜவஹர் பாருக் மருத்துவமனையில் 19 நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே இராமநாதபுரம் லேத்தமஸ் பங்களா ரோட்டில் உள்ள கணகமனி மருத்துவமனையில் (டாக்டர் அரவிந்தராஜ்) மீண்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

கலவரம் நடந்த பிப்ரவரி 17 ம் தேதி போலிசால் படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் மேற்படி கலிபுல்லா கணகமனி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தார். அன்று காலை அவரது உடல்நிலை மோசமடையவே மருத்துவர்கள் இவர் பிழைக்க மாட்டார் என் கூறினர் அதனால் அவரது குடும்பத்தினரால் நாங்கள் இவரை வீட்டுக்கு தூக்கி செல்கிறோம், வீட்டில் மரணமடையட்டும் என சொல்லி மருத்துவமனையில் அவரது சகோதரரி எங்கள் சுய விருப்பத்தின் பெயரில் இவரை அழைத்து செல்கிறோம் என மருத்துவமனை நிர்வாகத்திடம் எழுதி கொடுத்துவிட்டு சுமார் 11 மணியளவில் சுயநினைவில'லாத கலிபுல்லாவை ஆம்புலன்சில் அழைத்து சென்றனர்.வீட்டிற்கு சென்றவுடன் அதாவது கலவரம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியபட்டினத்தில் வைத்து மேற்படி கலிபுல்லா நோயின் காரனமாக மரணமடைந்தார்.

ஆனால் நோயின் காரனமாக சுயநினைன்றி மரணமடைந்த கலிபுல்லாவை கலவரத்தில் காவல்துறையால் கொல்லப்பட்டதாக நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்து நீதிமன்றத்தை ஏமாற்றி மேற்படி கலவர வழக்கை தள்ளுபடி செய்ய வைத்துள்ளனர்.

பொய்யான தகவலை தெரிவித்து, எங்கள் அமைப்புக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எங்கள் அமைப்புக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். பொய் தகவலை கொடுத்து கோர்ட்டை ஏமாற்றிய போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான விசாரணை நடத்தி அவரை தண்டிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் மீது :

1) சீறுடை அணிந்து அணிவகுப்பு நடத்த கூடாது .

2) ஆயுதங்கள், கம்பு , லத்தி போன்றவைகளை எடுத்து வரக்கூடாது.

3) குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது

4) டிரமஸ் வாசிக்க கூடாது.

ஆகிய காவல்துறையின் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டு கையொப்பம் இட்டு உறுதி கொடுத்துவிட்டு இவை அனைத்தையும் மீறி கலவரத்தை நடத்தி, காவல்துறையினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து, அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சுகள் செல்லவிடாமல் தடுத்து பல உயிர்களுக்கு சேதம் விளைவித்து நோயினால் இறந்த நபரை காவல்துறை கலவரத்தில் அடித்து படுகொலை செய்ததாக உயர்நீதிமன்றத்தில் பொய்யான தகவலை கூறி உயர் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி பொய்யான , போலியான ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தை ஏமாற்றி வழக்குகளை தள்ளுபடி செய்ய செய்த பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் மீது கமிசனர் ஜார்ஜீம், காவல்துறையும் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?


கமிசனர் ஜார்ஜ் பொய் தகவலை நீதிமன்றத்திற்கு அளிக்கவில்லை ராமநாதபுரம் கலவரத்தில் கொலை செய்யப்பட்டார்கள் என பொய்யான தகவலை வழங்கியது மேற்படி பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் மட்டுமே அந்த தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் வழங்கிய தகவலையே அதாவது ராமநாதபுரத்தில் நடந்த கலவரத்தில் கொலை செய்யப்பட்டார் என்ற தகவலை கமிசனர் ஜார்ஜ் நீதி மன்றத்தில் அளித்துள்ளார்.

ஆகவே பொய் தகவலை நீதி மன்றத்திற்கு வழங்கி , பொய்யான ஆதாரத்தில் தீர்ப்பை பெற்ற பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் மீது காவல்துறையினர் 100 கோடி ரூபாய் நஷ்ட்ட ஈடும், வழக்குகளை ரத்து செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அனுமதியும் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தெர்ர்வார்களா?

பாப்புலர் ஃபரன்ட் அமைப்பினர் காவல்துறையினர் மீது கலவரம் செய்வதற்காக கல் வீசியது. கலவரம் செய்தது, சதி திட்டம் தீட்டியது. கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட கலிபுல்லா நோயினாலேயே இறந்தார் என்பதற்கான ஆதாரங்கள் என அனைத்தையும் நான் வழங்க தயார்.

என்றும் அன்புடன்,

முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
9047507665

Tuesday, September 23, 2014

498 (a) வரதட்சணை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண் டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது

கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது, வரதட்சணை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண் டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, மணிப்பால் கே.எம்.சி., மருத்துவ உதவி பேராசிரியர் டாக்டர் குருகாந்த் ராவுக்கும், டாக்டர் ரஞ்சிதாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15ம் நாள், தாவணகரேயில் உள்ள, தன் பெற்றோர் வீட்டிற்கே போகலாம் என, ரஞ்சிதா, கணவரிடம் வற்புறுத்தி உள்ளார். இதற்கு, ராவ் மறுக்கவே, விவாகரத்து கொடுக்காவிடில், ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கேட்டதாக, பொய் வழக்கு போடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். பின், ரஞ்சிதா, மங்களூரு, 'முல்லர்ஸ்' மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.இதையறிந்த கணவர் ராவ், நேரில் சென்று, தன்னுடன் சேர்ந்து வாழும்படி கேட்ட போது, அதற்கு மறுத்த ரஞ்சிதா, விவாகரத்து கேட்டுள்ளார். அதற்கு ராவ் மறுக்கவே, போலீசில், கணவர் குருகாந்த் ராவ், அவரது தந்தை டாக்டர் ராவ் ஆகியோர், தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாகவும், வரதட்சணை கொடுக்காததால், வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் புகார் கொடுத்தார்.

ரஞ்சிதாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போது, அவர்களும், மகளுக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தனர். டாக்டர் குருகாந்த் ராவ், அவரது பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்திய போது, ரஞ்சிதா கொடுத்துள்ள புகார் தவறானது; திருமண செலவு அனைத்தையும் குருகாந்த் வீட்டினரே ஏற்று கொண்டதும் தெரியவந்தது. உடல் ரீதியாக ரஞ்சிதாவை யாரும் கொடுமைப்படுத்தவில்லை என்பதும் நிரூபணமானது. இதன் அடிப்படையில், ரஞ்சிதா தாக்கல் செய்த புகார், போலியானது என்பது தெரிந்ததால், போலீசார் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதற்கிடையில், ரஞ்சிதா தொடர்ந்த வழக்கால், தன் பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன், தன் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டதால், அவரை தண்டிக்க வேண்டும் என, மங்களூரு, ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில், குருகாந்த் ராவ் மனு தாக்கல் செய்தார். வரதட்சணை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக, விசாரணை நடத்த, ரஞ்சிதாவுக்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையில், அவர் பணியாற்றி வந்த முல்லர்ஸ் மருத்துவமனையிலிருந்து அவர் விலகிவிட்டதால், சம்மனை அவரால் பெற முடியவில்லை.பின், நீதிமன்றம், மங்களூரு பார்கே போலீஸ் ஸ்டேஷனுக்கு உத்தரவிட்டு, ரஞ்சிதாவையும், அவரது பெற்றோரையும் ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்து, கைது செய்ய உத்தரவிட்டது.அதன்படி, தாவணகரே சென்ற மங்களூரு போலீசார், ரஞ்சிதாவையும், அவரது பெற்றோரையும் கைது செய்தனர்.

Thanks Dinamalar

Tuesday, July 08, 2014

ஷரீஆ நீதி மன்றங்களை தடை செய்ய இயலாது - உச்ச நீதிமன்றம் Supreme Court Refused to ban Sharia Courts in India
முஸ்லிம்களின் ஷரீஅத் நீதிமன்றங்கள் சட்டப்படியானவை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது - முஸ்லிம்களின் ஷரீஅத் நீதிமன்றங்கள் தடை செய்யப்பட்டன, முஸ்லிம்களின் சிவில் சட்ட உரிமையை உச்சநீதி மன்றம் தடை செய்து விட்டதை போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்த ஊடகங்கள் முயன்று வருகின்றன. இதன் உண்மை நிலை அறியாத இசுலாமிய சகோதரா்கள் சிலரும் கொந்தளித்து போய் பதிவுகளை இட்டும், தலைவா்கள் பேட்டிகளை வழங்கியும் வருகிறாா்கள். ஆனால் உண்மை நிலைதான் என்ன?


விஸ்வா லோச்சன் மதன் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுவில் முஸ்லிம் சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள், நாட்டின் நீதித்துறைக்கு இணையானவையாக செயல்படுகின்றன.'முஸ்லிம் அமைப்புகளால் நியமிக்கப்படும், 'முப்தி'கள் மற்றும் 'குவாசி'கள் பிறப்பிக்கும் உத்தரவுகளால், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன; பறிக்கப்படுகின்றன. இது, தடுக்கப்பட வேண்டும்' எனவும் ஷரீஅத் நீதிமன்றங்கள் இனி தொடரக்கூடது அவற்றை தடை செய்ய வேண்டும், இவை பிறப்பிக்கும் ஃபத்வா உத்தரவுகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

விஸ்வா லோச்சன் மதன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழங்கிய தீா்ப்பு உண்மையிலேயே ஷரீஅத் நீதிமன்றங்களுக்கோ இசுலாமியா்களுக்கோ எதிரானது அல்ல, அந்த தீா்ப்பின் அடிப்படை என்னவென்றால் அதாவது வேறு வழியில் சொல்வதென்றால் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது புறியாத ஊடகங்களும், வெறு சிலரும் என்னவோ ஷரீஅத் நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் தடை செய்து விட்டது போலவும், இனி ஷரீஅத் நீதிமன்றங்கள் செயல்பட இயலாதது போலவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறாா்கள்.
சரி என்னதான அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது என்றால் அந்த தீா்ப்பின் சாரம்சம் இதுதான் :

முதலாவதாக உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் இந்த ஷரீஅத்தின் அடிப்படையில் நடைபெறக்கூடிய நீதிமன்றங்களை தடை செய்யவில்லை. தனது தீா்ப்பில் கூறியுள்ள சரியான வாா்த்ரத பிரயோகம் என்னவென்றால் :"The court however, refused to declare Dar-ul-Qazas (Islamic courts) or practice of issuing fatwas as illegal, saying it was informal justice delivery system for bringing amicable settlement and it was for the persons concerned to accept, ignore or reject it"
---
 

" இந்த நீதி மன்றம் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களை தடை செய்ய மறுத்துவிட்டது. அத்துடன் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களானது இருதரப்பினருக்கு இடையில் சுமூக தீா்வை ஏற்படுத்தும் ஒரு முறைசாறா நீதிமன்ற அமைப்பு என்றும் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்கள் வழங்கும் தீா்ப்புக்களை ஏற்பதும் , நிராகரிப்பதும் அதை அனுகிய இரு தரப்பினரையே சாரும் என்றும் , தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்கள் வழங்கும் தீா்ப்புக்களை சட்ட விரோதமானது என அறிவிக்க இயலாது என்றும் மறுத்துள்ளது"


இன்னும் உச்ச நீதி மன்றம் தனது தீா்ப்பில் :

தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களானது இந்தியாவின் தகுதி வாய்ந்த எந்த ஒரு சட்டமன்றத்தாலுா அல்லது பாராளுமன்றத்தாலோ உண்டாக்கப்பட்டதோ அல்லது அனுமதிக்கப்பட்டதோ இல்லை எனவும், எனவே தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களினால் வழங்கப்படும் ஃபத்வா அல்லது தீா்ப்பானது இந்தியாவின் எந்த ஒரு சடடத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நீதி அமைப்பினால் அனுமதிக்கப்பட்டதல்லா என்றும் இது இருதரப்பினருக்கு இடையில் சுமூக தீா்வை ஏற்படுத்தும் ஒரு முறைசாறா நீதிமன்ற அமைப்பு மட்டுமே என்றும் இது வழங்கும் தீா்ப்புக்களை ஏற்பதும் , நிராகரிப்பதும் அதை அனுகிய இரு தரப்பினரையே சாரும் எனவும் தெறிவித்துள்ளது. ஆகவே மக்கள் யாரும் அச்சப்படவோ, தேவையற்ற வதந்திகளை பரப்பவோ வேண்டாம். இன்னும் இந்தியாவில் ஜனநாயகமும், நீதியும் உயிருடன்தான் உள்ளன.

இது குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வும், அனைத்து இந்திய தனியாா் சட்ட வாரியத்தின் உறுப்பினரும் ஆன டாக்டா் ஜவாஹிருல்லா அவா்கள் பி.பி.சி தமிழ் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெளிவாக விளக்கியுள்ளாா்.Sunday, July 06, 2014

அன்பு சகோதரர் களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள் (மீள் பதிவு)


அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புனித ரமழான் வாழ்த்துக்கள்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமழான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.

அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.

சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஷகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக் காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தலதில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஷகாத், பித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.

ஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.

ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்ற்சி செய்வோமாக.

வஸ்ஸலாம்
அ. சஜருதீன்
ரியாத் - சௌதி அரேபியா

Monday, May 05, 2014

சதாவதானி செய்குத்தம்பி பாவலர் - இவரைத் தெறியுமா?தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களை ஒரே நேரத்தில் கூர்ந்து கவனித்து, அந்நிகழ்வுகள் தொடர்பான குறுக்குக் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிப்பதை அவதானக் கலை(கிரகித்துக் கொள்ளுதல்) என்று கூறுவர்.

இவ்வாறு 8 விஷயங்களை ஒரே நேரத்தில் கிரகிக்கும் சக்தி படைத்த அறிஞர்களை ‘அஷ்டாவதானி’ என்றும், 10 விஷயங்களை கிரகிப்பவர்களை ‘தசாவதானி’ என்றும் கூறுவதுண்டு.

முதுகில் விழுந்து கொண்டிருக்கும் மல்லிகைப்பூ, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் மணிநாதம் உள்ளிட்டவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் உள் மனத்தில் எண்ணிக் கொண்டே வருவதிலும், எப்போது நிறுத்தி எந்த எண்ணிக்கை குறித்துக் கேட்டாலும் மிகச் சரியாக பதில் சொல்வதும், யாராவது வெண்பாவிற்கான ஈற்றடியினை தந்தால், அந்த ஈற்றடியைக் கொண்டு தளை தட்டாமல் வெண்பா யாத்துச் சொல்வதும் அவதானக் கலைகளில் ஒன்றாகும்.

இப்படி ஒரே நேரத்தில் 100 விஷயங்களை நுட்பமாக கவனித்து அறிந்து, அவை தொடர்பான ஐயங்களுக்கு தக்க பதில் அளிப்பதில் வல்லவராக திகழ்ந்த செய்குத்தம்பி பாவலர் ‘சதாவதானி’ (சதம் என்ற சமஸ்கிருத சொல்லானது தமிழில் நூறு என்ற எண்ணை குறிக்கும்) என்று போற்றப்பட்டார்.

நாஞ்சில் நாட்டு கோட்டாறு அருகேயுள்ள இடலாக்குடியில் ஆமீனா அம்மையார்-பக்கீர் மீரான் சாகிபு தம்பதியரின் மகனாக 31 -7-1874 அன்று செய்குத்தம்பி பிறந்தார்.

அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாள மொழியினை பாடத்திட்டமாக கொண்ட பள்ளிகளே நடந்து வந்தன. பிற்காலத்தில், மிகச் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய செய்குத்தம்பி, இவ்வகை மலையாள மொழிப் பள்ளியில் படித்துத் தேர்ந்தது வியப்புக்குரியது.

இவரது சிந்தனை தமிழ் மேலேயே இருந்தது. இடலாக்குடியை அடுத்த பட்டாரியார் வீதியில் சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத் தமிழ் கற்றார். இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுற்றார். காளமேகப் புலவர், மாம்பழக்கவிச்சிங்க நாவலர் போல அந்தாதியாகவும் சிலேடையாகவும், யமகம், திரிபுகளாகவும் கவிபுனையும் கலை கைவரப் பெற்றார்.

ஞானியார் அப்பாவின் 'மெய்ஞ்ஞானத் திருப்பாடல் திரட்டு' என்னும் நூலை அச்சிட சென்னை 'இட்டா பார்த்தசாரதி நாயுடுவுக்கு' தமிழறிந்த இஸ்லாமியர் ஒருவர் தேவைப்பட்டார். சென்னை சென்று அந்நூலைச் சிறப்புடன் பதிப்பித்த செய்குதம்பிக்கு அப்போது வயது 21.

அவரது அறிவாற்றலைக் கண்டு ஸ்ரீபத்மவிலாசப் பதிப்பகத்திலேயே பிழை திருத்தும் புலவராக அவரை அமர்த்திக் கொண்டனர். மாதம் ரூ.60/- ஊதியமும் பிற வசதிகளும் செய்து கொடுத்தனர்.  

இந்த காலகட்டத்தில்தான், சிந்தையை அள்ளும் சிறந்த காப்பியமாகிய சீறாப்புராணத்துக்கு சீரிய உரையெழுதிப் இவர் பதிப்பித்தார். இதனால் இவரது புகழ் நாடெங்கும் பரவியது. உரை எழுதுதல், பாட்டெழுதுதல், பதிப்பித்தல் மட்டுமின்றி, பல இடங்களில் திருக்குறள், கம்பராமாயணம், சீறாப்புராணம் பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார்.

தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற செய்குத்தம்பி பாவலர் 1907-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் ‘சதாவதான’ நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டி, பலரது பாராட்டுகளைப் பெற்று, இன்று முதல் ‘சதாவதானி செய்குத்தம்பி பாவலர்’ என போற்றப்பட்டார்.

சிறந்த தமிழறிஞராகிய பாவலர், நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி, திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப் பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை நூல்களையும், வசன நடை காவியங்களையும் எழுதியவர்.

ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் இவர் தீவிரமாக பங்கேற்றார். நாஞ்சில் நாட்டில் 1920-ம் ஆண்டு காங்கிரஸ் இயக்கம் தொடங்கப்பட்ட போது இவர் கதர் ஆடைக்கு மாறினார். அந்நாட்களில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் பாவலர் தலைமையில் நடந்தன.

தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாவலர் மீது சிலர் வெறுப்பும் கொண்டனர். நாகர்கோயில் பகுதியில் பேருந்து அதிபராக இருந்த ஒருவரின் பேருந்துகளில், எங்கும், எப்பொழுதும் இலவசமாக ஏறிச் செல்லும் உரிமையுடன் பாவலர் சிறப்பிக்கப்பட்டிருந்தார். பின்னாளில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக, தமது பேருந்துகளில் பயணிக்க கூடாது என்று அந்த அதிபர் பாவலருக்கு தடை விதித்து குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை அவர் சதாவதானம் நிகழ்த்திக் கொண்டிருந்த போது, பாவலரை சிக்க வைக்கும் எண்ணத்துடன் ஓர் அன்பர், விந்தையான வெண்பா ஈற்றடியைக் கொடுத்தார். ‘துருக்கனுக்கு ராமன் துணை’ என்பதுதான் அந்த ஈற்றடி. செய்கு தம்பிப் பாவலர் பிறப்பால் துருக்கியர். முகம்மதிய மதத்தைச் சார்ந்த அவர், இந்த ஈற்றடிக்கு எப்படித்தான் பாடல் எழுதப் போகிறார் என்று சபையினர் திகைப்புடன் காத்திருந்தனர்.

இறுதி அடிக்கு முந்தைய அடியில் ராமபிரானது தம்பிகளான 'பரத, லட்சுமண, சத்' என்று வருமாறு பாவலர் அமைத்தார். இந்த அமைப்பின் மூலம் 'துருக்கனுக்கு ராமன் துணை' என்ற கடைசி அடி 'சத்துருக்கனுக்கு ராமன் துணை' என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய பொருளைப் பெற்றது. சபையினருடன் சேர்ந்து அவரிடம் குறும்பு செய்ய நினைத்தவரும் மனமகிழ்ச்சியுடன் பாவலரைப் பாராட்டினார்.

இவருக்குப் பின்னர் அதிகாரபூர்வமான முறையில் இதுவரை யாருமே ‘சதாவதானம்’ நிகழ்ச்சியை நடத்திக் காட்டியதில்லை என்று கூறப்படுகிறது. தமிழ், தமிழன் என்ற சொற்களின் மெய்ப்பொருளினை, தனது தனித்திறனின் மூலம் உலகுக்கு உணர்த்திய செய்குத்தம்பி பாவலர் 13-2-1950 அன்று காலமானார்.

அறிஞர் பெருமக்கள் பலரும் கலந்து கொண்ட அவரது இறுதி அஞ்சலி கூட்டத்துக்கு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தலைமை தாங்கி, "ஒருமவ தானம் ஒருநூறும் செய்திந்தப் பாரில் புகழ்படைத்த பண்டிதனை-சீரிய செந்தமிழ்ச் செல்வனைச் செய்குத்தம்பி பாவலனை எந்நாள் காண்போம் இனி" என்ற இரங்கற்பாவினைப் பாடினார்.

பாவலர் பிறந்து வாழ்ந்த தெரு இன்றளவும் 'பாவலர் தெரு' என்றே அழைக்கப்படுகிறது. இடலாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 'சதாவதானி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி' என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அங்கு பாவலர் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.

செய்குத்தம்பி பாவலர் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் அருகே உள்ள இடலாக்குடியில் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவு மண்டபத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இங்கு 900 சதுர அடி பரப்பளவில் 125 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. நூல் நிலையமும், படிப்பகமும் செயல்பட்டு வருகின்றன. 31-12-2008 அன்று அவரது நினைவாகச் சிறப்புத் தபால் தலையை வெளியிட்டு இந்திய அரசும் கவுரவித்துள்ளது.  

நன்றி - மாலைமலா்

Saturday, May 03, 2014

ஆதாரம் உள்ள குண்டு வெடிப்புகளை என்ன செய்தீர்கள் ஆபிசர்?

தமிழகத்தில் குண்டுவைக்கப்பட்டதற்கான ஆதாரமிலலை: சி.பி.சி.ஐ.டி.,ஐ.ஜி.,பேட்டி.....
 
ஆதாரம் உள்ள குண்டு வெடிப்புகளை என்ன செய்தீர்கள் ஆபிசர்
 
(1.) அஜ்மீர் தர்க்காவில் அக்டோபர் 11, 2007ல் குண்டு வெடித்து 3 பேர் கொல்லப்பட்டனர்.இது ஹூஜி, எல்-இ-டி அமைப்புகளைச் சேர்ந்த ஜிகாதி பயங்கரவாதிகளின் கைவண்ணம் என்ற புலனாய்வு அதிகாரிகளின் கதையை பத்திரிகைகளும் ஆர்வத்துடன் பரப்பி வந்தன. கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் ஹபீஸ் ஷமீம், குஷிபுர் ரஹ்மான், இம்ரான் அலி ஆகியோர் அடங்குவர்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் போலீஸ் தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் பட்டிதார் என்ற
மூன்று பேரை கைது செய்தது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான குப்தாதான் அந்த குண்டை வெடிக்கச் செய்த மொபைல்
தொலைபேசியையும் சிம் கார்டையும் வாங்கினார்
என்று தெரிய வந்தது. குண்டு வெடிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சுனில் ஜோஷி திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் என்று அறிவிக்கப்பட்டது.
 
 
(2.) மே 18, 2007ல் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் 14 பேர கொல்லப்பட்டனர்; 50 பேர் காயமடைந்தனர்.’உள்ளூர் உதவியுடன் ஹர்கத்-உல்- ஜிகாத்-எ-இஸ்லாமி (HuJI) என்ற அமைப்புதான் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்று ஹைதராபாத் போலீஸ் சொன்னது. 80முஸ்லீம்கள் அடைத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு 25 பேர் குற்றம் செய்ததாக ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டனர். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான மொபைல் போன்-சிம் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன’ என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. ‘பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்- டி.என்.டி. வெடிமருந்து கலவை இந்திய
இராணுவத்தில் பயன்படுத்தும் விகிதத்திலானது’ என்றும் தெரிய வந்தது. இப்ராஹிம் ஜூனைத், ஷோயிப் ஜாகிர்தார், இம்ரான்
கான், முகமது அப்துல் கலீம் உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திரா கல்சங்காரா பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு ரூ 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஜூன் 2010ல் போலீஸ் அறிவித்தது. லோகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டார்.
 
 
(3.) அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த
குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
 
 
4. செப்டம்பர் 8, 2006 அன்று மகராஷ்டிராவின் மாலேகானில் ஒரு மசூதிக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்து 37 பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் காயமடைந்தனர்.சிமி அமைப்பைச் சேர்ந்த சல்மான் பார்சி, பரூக் இக்பால் மக்தூமி, ராயிஸ் அகமது, நூருல் ஹூடா சம்சுதோஹா, ஷபீர் பேட்டரிவாலா ஆகியோர் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.ஆனால், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முகமது ஜாகித் அந்த நாளன்று மாலேகானிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். ஷபீர் மசியுல்லா குண்டு வெடிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பே போலீஸ் காவலில் இருந்தார். நேரடி சாட்சியங்கள் கொடுத்த தகவல்களின் படி குண்டு வைத்தவர்கள் தாடி இல்லாதவர்கள், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக தாடி வைத்திருப்பவர்கள். 2008ம் ஆண்டு 7 பேர் உயிரிழந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சந்தேகம் இந்து பயங்கரவாதிகள் பக்கம் திரும்பியது. இந்த சம்பவத்துக்கும் ஆரம்பத்தில் இந்தியன் முஜாகிதீன் போன்ற குழுக்கள் சந்தேகிக்கப்பட்டன.பின்னர் அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரீய ஜாகரன் மஞ்ச் அமைப்புகளைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் தீர்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் மோட்டர் சைக்கிள் குண்டை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டது. விசாரணையின் போது, ‘மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கும் அவர்தான் வெடிமருந்து கொடுத்தாக’ புரோகித் சொன்னார். ஆனால் ஹைதராபாத்போலீஸ் ஹூஜி உறுப்பினர்களை கைது செய்து வைத்திருந்ததால் இந்த விபரத்தை வெளியிட வேண்டாம் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
(5.) பிப்ரவரி 18, 2007ல் சம்ஜௌதா எக்ஸ்பிரசில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பெரும்பான்மை பாகிஸ்தானியர் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.ஆரம்பத்தில் எல்-இ-டியும் ஜே-இ-எம்மும் குற்றம் சாட்டப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த
அஜ்மத் அலியும் உண்டு.ஆனால், தடயங்கள் வலது சாரி இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களை சுட்டிக் காட்டின. மூன்று மாதங்களுக்குப் பிறகு மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இங்கும் பயன்பட்டிருந்தது ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.
 
(6.) ஜூன் 4, 2008 அன்று, தானே சினிமா குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ்
ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் நிகமும் கைது செய்யப்பட்டனர்.ஜோதா அக்பர் திரைப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பாக அந்த குண்டு வெடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது.
 
(7.) ஏப்ரல் 2006ல் நந்தாதில் உள்ள குண்டு உற்பத்தி பட்டறையில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என் ராஜ்கோண்ட்வாரும் எச் பன்சேவும் தவறுதலாக வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டனர்.ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக்
கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர் இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மசூதிகளில் குண்டுகள் வெடித்தன. நந்தாதில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மசூதிக்கானது என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லீம் ஆண் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.
 
 
(8.) 2002-03ல் போபால் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்கும் கருவி உள்ளூர் இந்துத்துவா தொண்டர்கள் ராம்நாரயன் கல்சங்கரா, மற்றும் சுனில் ஜோஷியுடன் தொடர்புடையவை என்று தெரிந்தன.
 

குண்டுவெடிப்பு, பயங்கரவாதம் என்றால் சினிமா கதைகளில் மட்டுமல்ல நாட்டின் போலீஸ் அமைப்புகளுக்கும் உடனே முசுலீம் இளைஞர்கள்தான்
நினைவுக்கு வருகிறார்கள். இந்த நினைவு பலநூறு அப்பாவி முசுலீம் இளைஞர்களை துன்புறுத்தி வருடக்கணக்கில் சிறையில் அடைப்பது என்று ஒரு பெரும் அடக்குமுறையை அமல்படுத்துகிறது. இந்தியாவின் அதிகார அமைப்புகள் அனைத்தும் இந்துமயமாகி இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்? உண்மையில் இதுதான் குண்டு வெடிப்புகளை விட ஆபத்தான பயங்கரவாதம்! #‎இந்தியர்களை‬ உன்மையே அறிவீர்
 
- சிக்கந்தா் அமீன்