Wednesday, December 31, 2008

இஸ்ரேலிய தீவிரவாதத்தை கண்டித்து மதுரையில் PFI ஆர்ப்பாட்டம்


கடந்த சில வருடங்களாக உலகத்தில் மனிதகுல எதிரியான இஸ்ரேல், கடந்த சில நாட்களாக தன்னுடைய தீவிரவாதத்தை பாலஸ்த்தீன் மீது கட்டவிழ்த்துவிடுகின்றது. பல உயிர்களை கொடூரமாக கொன்று வருகிறது.எனவே இதனை கண்டிக்கும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.


அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவில் அங்கம் வகிக்கும் மனித நீதீ பாசறையின் மாவட்ட செயலாளர் K.செய்யது இப்ராஹிம் தலைமை தாங்க மனித நீதீ பாசறையின் மாநில செயற்குழுஉறுப்பினர் A. முஹம்மது யூசுப் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட தலைவர்A.காலித் முஹம்மது, மாவட்ட செயலாளர்S.Pமுஹம்மது நஸ்ருதீன், மத்திய பகுதி தலைவர் M.ஹீரா ஜான் கிழக்கு பகுதி தலைவர் M.லத்தீப் சாஹிப், மேற்கு பகுதிதலைவர் M.அபுதாஹிர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் இதில் திரளாக கலந்துகொண்டனர்.

Sunday, December 28, 2008

குவைத்தில் சமூக நீதி கருத்தரங்கம்

இறைவனின் திருப்பெயரால்...

சமூக நீதி கருத்தரங்கம்

குவைத் தமிழ் தோழமை அமைப்புக்களின் ஆதரவுடன் !
குவைத் தமிழர்கள் விழிப்புணர்வின் ஒரு மைல் கல்லாக !!
ஃபாஸிஸ, பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்க !!!
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் ஒற்றுமைக்காக !!!!
­­­
நாள்: ஜனவரி 1, 2009 நேரம்: மாலை 5:15
இடம்: ஜம்இய்யது இஸ்லாஹ் அரங்கம், ரவ்தா – குவைத்

தலைமை: தொழிலதிபர் A.சுலைமான் பாட்ஷா
(உரிமையாளர், லக்கி ப்ரிண்டர்ஸ், குவைத்)

சிறப்புரையாளர்கள்:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை)
தலைப்பு: சமைப்போம் சகோதரத்துவம் வாரீர் வாரீர் !!

சகோ.M.தமீமுன் அன்ஸாரி M.B.A.
(மாநில செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்)
தலைப்பு: தீவிரவாதமும் பயங்கரவாதமும் - நிழலும் நிஜமும்

நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC), குவைத்
23925612 / 99619827 / 66412875 / 97358846 / 22470159

அறிவமுதம் பருக தமிழர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!
குறிப்பு: For Women Special Place ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஃபஹாஹீல், மங்காஃப், அபூஹலிஃபா, மஹ்பூலா மற்றும் சிட்டி பகுதிகளிலிருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது

அண்ணா தி.மு.கழகத்தின் அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது.

அ.தி.மு.க. இருக்கும் வரை பி.ஜே.பி.யும்.,இந்துத்துவா அமைப்புகளும் தேவையில்லை.
01.01.09 தொடர்கள்

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பி.ஜே.பி. பெருந்தன்மையோடு அறிவித்திருக்கிறது. அந்தக் கட்சி போட்டியிட்டு ஆயிரம் வாக்குகள் சிதறினாலும் அது அண்ணா தி.மு. கழகத்திற்கு நட்டம் என்பது அதற்கு நன்றாகவே தெரியும்.

பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் அருண்ஜேட்லி இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆணித்தரமான வாதத்தை முன்வைத்தார். அ.தி.மு.க.வோடு நல்லுறவு உண்டு. ஆனாலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் வேறு சில கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்து தமது பலத்தைப் பெருக்கிக் கொண்டு டெல்லிக்கு அ.தி.மு.க. வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


ஒருமுறை வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசை அ.தி.மு.க. கவிழ்த்திருக்கிறது. ஆனால், அதனை சொந்த வீட்டுப் பிள்ளை செய்த சுட்டித்தனம் என்றே எடுத்துக் கொண்டது. அ.தி.மு.க. மீது கொண்ட பாசம் எப்போதும் அதற்குப் பட்டுப் போனதில்லை. சோதனையான நேரங்களில் பி.ஜே.பி.க்குக் கரம் கொடுக்க அ.தி.மு.க.வும் தவறியதில்லை. கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில்கூட பி.ஜே.பி. வேட்பாளருக்குத்தான் அ.தி.மு.க. வாக்களித்தது.

எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி. தேவையில்லைதான். அதனால் அந்தக் கட்சி இங்கே காலை ஊன்ற முடியாமல் கண் கலங்கிக் கொண்டிருக்கிறது.

அமரர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. இன்று இல்லை. அதன் உருவமும் சிதைந்துவிட்டது. கொள்கை கோட்பாடுகளும் பறந்து போய்விட்டன. அண்மையில் ஒரிசாவில் ஒரு சாமியாரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். அதனை அவர்களே ஒப்புக் கொண்டனர். பல தலைமுறைகளாக கிறிஸ்துவர்களாக இருக்கும் ஆதிவாசிகளை அந்த சாமியார் இந்துக்களாக ஞானஸ்நானம் செய்ய முயன்றார். சாமியாரின் கொலையை அ.தி.மு.க. தலைமை வன்மையாகக் கண்டித்தது. நியாயம்.

ஆனால், அதனைத் தொடர்ந்து தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஏசுவின் திருத்தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர் வனாந்தரங்களில் தொண்டு செய்ய வந்த சகோதரிகள் கற்பழிக்கப்பட்டனர். மாதக்கணக்கில் சிறுபான்மையின மக்கள் சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள்.

அதனை அ.தி.மு.க. இன்றுவரை கண்டிக்கவில்லை. எனவே, தமிழகத்தைப் பொறுத்த வரையில் அந்தக் கழகம் இருக்கும் வரை பி.ஜே.பி.யும் தேவையில்லை. இந்துத்துவா அமைப்புகளும் தேவையில்லை.

ஏன்? குஜராத்தில் இரண்டாயிரம் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்றைக்கும் அங்கே அந்தப் படுகொலைப் படலங்கள் தொடர்கின்றன.

நரேந்திர மோடியை உலகம் மனித இனப் படுகொலைக் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தி இருக்கிறது.

அதற்காக வாதாடியதில் இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

ஆனால், அடுத்து அதே நரேந்திரமோடிக்கு முடிசூட்டு விழா நடந்தபோது அந்த வைபவத்தில் பங்குகொள்ள தனி விமானத்தில் ஆமதாபாத்திற்குப் பறந்து சென்றவர் செல்வி ஜெயலலிதா. அதனை நாம் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. அதுதான் செல்வி ஜெயலலிதாவின் இயல்பு. அ.தி.மு.க.வின் இன்றைய நடைமுறைக் கோட்பாடு.

தன்னை இந்து சமயத்தின் ஏந்தல் என்பதனை செயல்படுத்திக் காட்டுவதற்கு அவர் என்றும் தயங்கியதில்லை.

மூன்று மாதங்களுக்கு முன்னால் அதே நரேந்திரமோடி சென்னை வந்தார். வேறு விழாவிற்கு வந்த அவரை தமது இல்லத்திற்கு அழைத்தார். 64 வகைப் பதார்த்தங்களுடன் விருந்து வைத்தார். தமிழகத்தின் விருந்தோம்பல் நரேந்திரமோடிக்குத் தெரியவேண்டாமா?

செல்வி ஜெயலலிதா தங்கள் அணிக்கு வந்துவிட்டால், அவரை தங்கள் கோட்பாடுகளுக்கு ஏற்ப சரி செய்து கொள்வோம் என்று ஒரு தலைவர் கூறினார். அதில் ஒரு திருத்தம். இவர்களுடைய உதவி கோரி செல்வி ஜெயலலிதா தூதுவிடவும் இல்லை. மனுப்போடவும் இல்லை.
இவர்கள்தான் அ.தி.மு.க. அரசியல் உறவு கோரி சுவர் ஏறிக் குதித்தார்கள். ஒட்டகத்தின் முதுகைச் சீர்செய்து மான்குட்டி ஆக்கிவிடும் அந்த தலைவரின் கரடி வித்தையைக் காண நாமும் தயாராக இருக்க வேண்டும்.

இவர்கள் குலுக்கப்போகும் கரங்கள் நஞ்சு நிறைந்த முட்புதர்கள் என்று இந்த வாரம் கிறிஸ்துவ மக்களின் குரலான `நம் வாழ்வும்', இளைய இஸ்லாமிய சமுதாயத்தின் சிந்தனையான `மக்கள் உரிமை'யும் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

சிறுபான்மையின மக்கள் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனை நாம் விமர்சிக்க விரும்பவில்லை.


ஆனால், அசைபோட்டால் நமது இதயக் களஞ்சியத்திலிருந்து பசுமையான பல நினைவுகள் துள்ளிக்குதித்து வெளிவருகின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் வெற்றி வீரராக அத்வானி பவனி வந்தார். பல மாநிலங்கள் அந்த பவனிக்குத் தடைவிதித்தன. ஆனால் அன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் இங்கே வெற்றி உலா வந்தார்.

அடுத்து தேசிய ஒருமைப்பாட்டுக் கழகக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா கலந்து கொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அவர் நியாயப்படுத்திப் பேசினார். சிறுபான்மையின மக்கள் கோரும் உரிமைகள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது என்றார். அந்தக் கூட்டத்தில் அத்வானியும் கலந்து கொண்டார். `பாபர் மசூதி இடிப்பிற்கு ஆதரவாக எங்களால் கூட இப்படி வலிமையாக வாதாட முடியாது' என்று, செல்வி ஜெயலலிதாவின் துணிச்சலைப் பாராட்டினார்.

பின்னர் ராமர் கோயிலை எங்கே கட்டுவது என்ற விவாதம் தொடங்கியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்தான் ராமர் பிறந்த இடம். எனவே அங்கே கட்டாமல் இத்தாலியிலா கட்ட முடியும் என்று செல்வி ஜெயலலிதா வினா எழுப்பினார். ஆயிரம் யானை பலம் பெற்றது போல் எழுந்த இந்துத்துவா சக்திகள் பூரித்துப் போயின.

இப்படி இந்து சமய சக்திகளுக்கு மட்டுமல்ல; பி.ஜே.பி.க்கும் அவர்தான் அரசியல் வழிகாட்டியாக வலம் வருகிறார். காலதேவனுக்கு நரைகள் பூத்திருக்கலாம். ஆனால் செல்வி ஜெயலலிதாவின் பெரும்பான்மை வாதங்கள் இளமையானவை. பசுமையானவை. இந்த வாதங்களை அவர் துணிச்சலோடுதான் முன்வைக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கும் மன உறுதியையும் பெற்றிருக்கிறார்.

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கழகம் பெறும் வெற்றி இந்துத்துவா சித்தாந்தத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கூட கருதலாம்.

அண்ணா தி.மு.கழகத்தின் அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது.

தங்கள் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யைவிட அந்த இயக்கம் அ.தி.மு.க.வை அதிகம் நேசிக்கிறது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டார். அப்போது நடந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளில் உலகம் பார்த்தது. அதிர்ந்து போனது.

அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வாஜ்பாய் அரசு தயாராகி வருவதாகச் செய்திகள் வந்தன. வாஜ்பாய் கண்டித்தாலும் அத்வானி கண்டிக்கவில்லை.

`எந்தக் காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசைத் தொடாதே' என்று நாக்பூரிலிருந்து பகிரங்கமாக ஒரு குரல் எழுந்தது. அந்த எச்சரிக்கையை விடுத்தது ஆர்.எஸ்.எஸ். தலைமைதான்.

ஆகவே, திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.விற்குக் குறுக்கே நிற்பதில்லை என்று பி.ஜே.பி. எடுத்துள்ள முடிவு அதன் கண்ணோட்டத்தில் சரியானதுதான்.

எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி.க்கு வேலையில்லைதான். THANKS :SOLAI IN KUMUDAM REPORTER

Saturday, December 27, 2008

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 18 வது பட்டமளிப்பு விழா

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 18 வது பட்டமளிப்பு விழா

மேடையில் முக்கியஸ்த்தர்கள்

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 18வது பட்டமளிப்பு விழா இன்று (27.12.2008) மாலை 2 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநிலை பயின்ற மாணவியர் 302 பேர் இவ்விழாவில் பட்டம் பெற்றனர்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர் நீதியரசர் எம்.ஜே.ஏ. சித்திக் அவர்கள் புது தில்லியில் இருந்து வருகை தந்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தங்கம் பதக்கம் பெற்ற B.Sc. Home Science மாணவி முனிரா அவர்கள்


கல்வி என்பது மனிதனுக்கு வாழ்வாங்கு வாழ்வதற்குறிய அறக்கருத்துக்களையும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அவனுக்குள் விதைப்பதாக இருத்தல் வேண்டும் என்றும், நல்லொழுக்க பண்புகளையும், மனித நேயத்தையும் விதைப்பதுதான் உண்மையான கல்வி என்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி அறிவியல் கருத்துக்களை எடுத்துக் கூறாத சமயம் குற்றமுடையது என்றும், அறிவியல் கருத்தக்களை எடுத்துக்கூறாத சமயம்குருட்டுத்தனமானது என்றும் ஆல்பர்ட்ட ஐன்ஸ்டின் என்ற தத்துவ ஞானி கூறிய கருத்துக்களையும் எடுத்துக்கூறினார். கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் புதிய கண்டுபிடிப்புக்களை உலகுக்கு வழங்கும் ஒப்பற்ற நிறுவனங்களாகும் இந்த அறிவியல் யுகத்தில் அறிவுலகப் பிரம்மாக்களாகவும் திகழ்கின்றன என்று குறிப்பிட்டு பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

கல்லூரித் தாளாளர் மருத்துவர் ரஹ்மத்துன்னிசா அப்துர்ரஹ்மான் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். செயளாலர் திரு. காலித் ஏ.கே புகாரி அவர்கள் விழாவை துவக்கி வைத்தார்கள். டாக்டர் ரஹ்மத்துன்னிசா அப்துர்ரஹ்மான் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். பட்டம் பெறும் மாணவழயருக்கான உறுதி மொழியை கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.சுமையா அவர்கள் வாசித்தார்கள்.மாணவியர் அதனை வழிமொழிந்தார்கள். விழாவை முனைவர் திருமதி நாதிரா கமால் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கில் மாணவியர்களும் அவர்களின் உரவினர்களும், முக்கியஸ்த்தர்களும் பங்கு பெற்றனர். இறுதியில் மாணவியரின் நாட்டுப்பண்ணுடன் விழா முடிவுற்றது.

செய்தி தொகுப்பு : முகவைத்தமிழன்
the thassim beevi abdul kader college for women, kilakarai

U.S. Muslims to Release Open Letter to Obama

Islamic groups to outline suggested policy priorities for new administration
(WASHINGTON, D.C., 12/26/2008) - On Monday, December 29, the American Muslim Taskforce on Civil Rights and Elections (AMT), a coalition of 11 major Islamic organizations, will hold a news conference at the National Press Club in Washington, D.C., to release an open letter to President-elect Obama outlining suggested domestic and foreign policy priorities for the new administration.
WHAT: U.S. Muslims to Offer Suggested Policy Priorities for Obama Administration WHEN: Monday, December 29, 10 a.m.WHERE: National Press Club, Murrow Room, 13th Floor, National Press Club Building, 529 14th Street N.W., Washington, D.C.CONTACT: Muhammad Salim Akhtar, 773-507-5335, E-Mail: bestusa80@hotmail.com
The mission of the American Muslim Taskforce on Civil Rights and Elections is to ensure that American Muslims become full partners in the development and prosperity of the United States, to defend the civil and human rights of all and to build alliances with like-minded fellow citizens on a wide variety of social, political, economic, and moral issues.
AMT is an umbrella organization that includes: American Muslim Alliance (AMA), American Muslims for Palestine (AMP), Council on American-Islamic Relations (CAIR), Islamic Circle of North America (ICNA), Muslim Alliance in North America (MANA), Muslim American Society-Freedom Foundation (MAS-FF), Muslim Student Association-National (MSA-N), Muslim Ummah of North America (MUNA), and United Muslims of America (UMA). Its observer organizations include: Islamic Society of North America (ISNA), Muslim Public Affairs Council (MPAC), and Islamic Educational Center of Orange County (IEC).

Monday, December 22, 2008

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தேசிய அரசியல் மாநாடு...

Saturday, December 20, 2008

மங்களம்பேட்டையில் ஈத் மிலன் சமூக நல்லிணக்க விழா


மங்களம்பேட்டையில் மனித நீதிப் பாசறையின் சார்பாக ஈத் மிலன் சமூக நல்லிணக்க விழா நடைபெற்றது. கடலூர் மாவட்ட எ.ம்.என். பி தலைவர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். நகர் தலைவா'திரு. அபுல் ஹசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மாநில துனைத்தலைவர் தாவா குழு திரு. பஸ்லுர் ரஹ்மான் அவர்களும், அறிவகத்தின் முதல்வர் மௌவி சையது இபுறாஹிம் உஸ்மானி அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.


நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினார்களாக மாவட்ட காவல்துறை துனை கண்கானிகப்பாளர் திரு. என். ராஜேந்திரன் அவர்கள், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குனர் டாக்டர் ஏ.ஏ. ஜமேஸ் அவர்கள், மங்களம்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் திரு. கோபு பிள்ளை அவர்கள், விருத்தாசலம் அரசு வழக்குறைஞர் திரு. இரா. சுப்பிரமணியம் அவர்கள், திரு. ஏ. அக்பர்சா முத்தவல்லி அவர்கள், திரு. எம். அபதுல் பாரி அவர்கள், திரு. சரவன குமரன காவல் ஆய்வாளர் மங்களம்பேட்டை அவர்கள், வழக்கறிஞர் திரு. முகம்மது இபுறாஹிம் அவர்கள், அரசு மருத்துவர்திரு. கதிர் வேல் அவர்கள்,மங்களம்பேட்டை திருச்சபை திரு. மகிமைதாஸ் அவர்கள், திரு. அபிருத்தீன் மன்ப, அவர்கள், திரு. ரிஸ்வர்ன பாசகா அவர்கள் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திரு. ஏ. சாஜஹான் வெர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. வந்திருந்த அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.

News : Mr. Abirudeen Manbayee

Friday, December 19, 2008

புதிய சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் PFI கோரிக்கை

சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் பாப்புலர் ஃபிரண்ட் கோரிக்கை

திரும்பப் பெறப்பட்ட கருப்பு சட்டங்களான தடா, பொடாவில் உள்ள கடுமையான விதிமுறைகளை (ஷரத்துக்களை) சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் மீண்டும் நுழைக்கப்படுகிறது.எனவே சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் தலை
மை கோருகிறது.அரவிருக்கும் சட்ட திருத்தம் காவல்துறைக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தைக் கொடுக்கிறது. குற்றம்சாட்டப்பட்டஅணிர 180 நாட்களுக்கு காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்க அதிகாரம் வழங்குகிறது.தான் குற்றமற்றவர், அப்பாவி என நிரூபிக்கும் பொறுப்பும் குற்றம் சாட்டப்பட்டவரையே சாரும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறப்பட்டால் அவருடன் தீவிரவாதத்தில் தொடர்புள்ளதாக சந்தேகப்படும் இயக்கங்களின் சொத்துக்களை முடக்கவும் அரசாங்கத்திற்கு
அனுமதியளிக்கிறது.

ஏற்கனவே தடா, பொடா போன்ற சட்டங்கள் அமுலில் இருக்கும் போது நடந்ததைப் போன்று, சட்டவிதிமுறை மீறல்களுக்கு இந்த புதிய ச்ரத்துகள் வழிவகுக்கும். எனவே காரணமின்றி தீவிரவாதகுற்றம் சாட்டப்பட்ட உண்மையான அப்பாவிகளுக்கு நேர்கமையான விசாரனை தடுக்கப்படுவதுடன் நீதியும் மறுக்கப்படுகிறது. இதில் ஆறுதலான விஷயம் என்னவெனில் காவல்துறை அதிகாரிகள் முன்பாக கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் அங்கீகரிக்கப்பட்ட சாட்சியமாக சட்டத்திருத்தத்தில் சேர்க்கப்படவில்லை.

தடா, பொடா வழக்குகளை நடுநிலையாக மதிப்பீடு செய்ததில் தெரிய வருவது என்னவெனில் இத்தகைய கடும் ச்ரத்துகள் இருந்தும் இவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களை கோர்ட் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கவில்லை. இவ்வழக்குகளில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் அப்பாவிகள். எனவே இத்தகைய தீவிரவாத சட்டங்கள் பழங்குடியினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரணிக அரசாங்கத்திலும் காவல்துறையிலும் ஊடுறுவியுள்ள சாதிய மதவாத ஃபாசிஸ சக்திகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மை சமுதாய தலைவர்களின் குற்றச்சாட்டை உண்மைப்படுத்துகிறது.


இச்சட்டத் திருத்தத்தை பா.ஜ.க. அரவேற்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கெதிரணிக பயன்படுத்துவதற்காக இத்தகைய கருப்பு சட்டங்களை கொண்டு அரவேண்டும் என்றஅவர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அடிபணிந்து விட்டதற்கானகாரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.

உள்நாட்டு தீவிரவாத கொள்கையான இந்துத்துவாவை கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக நிரணிகரித்ததிலிருந்து காங்கிரடி கட்சியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும்பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.எனவே பா.ஜ.க.வின் இந்துத்துவ திட்டத்தை தழுவும் எந்த முயற்சியும் எதிர்வரும் பாரணிளுமன்றதேர்தலில் ஆளுங்கட்சிக்கு உதவாது. நமது அரசாங்கம் இப்போது அறிவித்துள்ளபடி மும்பை தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாத குழுக்கள்பாகிஸ்தானை அடித்தளமாகக் கொண்டு இயங்குபவை அதை பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டுள்ளது.


குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்தி தண்டிக்க பாகிஸ்தான் மீது சர்வதேச மற்றும் இரணிச்யத்துறை நிர்பந்தங்களை நமது அரசாங்கம் கொடுத்து சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. மும்பை தீவிரவாத செயல்பாடுகளில் இந்தியாவில் உள்ள எந்த தனிநபரோ குழுவோ இதுவரை குற்றம் சாட்டப்படவில்லை. எனவே மும்பை தீவிரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி கருப்பு சட்டங்களை மக்கள் மீது திணிப்பதை நியாயப்படுத்த முடியாது. காவலர்கள், பாதுகாப்பு மற்றும் உளவுநிறுவனங்களில் குறைபாடுகள் இருப்பதால் அதைச் சரிசெய்து மேம்படுத்துவதில்தான் உண்மையான நிவாரணம் உள்ளது.

இதற்காக தேசிய புலனாய்வு நிறுவனம் அமைப்பது நல்ல முயற்சியாக கருத முடியாது. இந்த யோசனை மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் தலையிட மத்திய அரசாங்கத்திற்கு மாநில அரசை விட கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதால் இது நமது கூட்டாட்சி தத்துவத்திற்கே (எதிரணிக) அமை
யும்.பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் கேமரணிவில் நடைபெறும் வழக்கு விசாரனை வெளிப்படையான நேர்மையான விசாரனை முறையாக அமையாது.

எனவே நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய சொந்தக் குடிமக்களையே அச்சுறுத்தி பீதிவயப்படுத்தும் கருப்புச் சட்டங்களை கொண்டுவரத்துடிக்கும் கட்சிகளாக மாறாமல் அந்நிய அடக்குமுறைகள் தலையீடுகளுக்கெதிரணிக நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


இவண்,
இ.எம். அப்துர் ரஹ்மான்,
பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

19.12.2008

Thursday, December 18, 2008

புஷ்ஷுக்கு செருப்படி - தமிழகத்தில் கொண்டாட்டம் - புகைப்படங்கள் !


கொண்டாடுவோம்! இது வீரத்தின் திருநாள்.
ஒரு வெடிகுண்டுத் தாக்குதலை விடவும்
தற்கொலைப்படைத் தாக்குதலை விடவும்
வலிமையானது இந்தத்தாக்குதல்.
வீரம் செறிந்தது இந்த நடவடிக்கை.
மாவீரன் ஸய்தி !
முன்தாதர் அல் ஸய்தி - உண்மையிலேயே ஒரு மாவீரன்தான்.



அமெரிக்க வல்லரசின் இராணுவம்,
அதன் உளவுத்துறைகள்,
அதிபரின் சிறப்புப் பாதுகாப்புப் படைகள்..‏

இவர்களெல்லாம் மூடர்கள் என்றோ முன்யோசனை அற்றவர்கள் என்றோ நாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்க சிப்பாய்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் பொருட்டு, சமீபத்தில் இராக்கில் குழந்தைகளுக்கான பொம்மைத் துப்பாக்கிகளின் விற்பனையைக் கூடத் தடை செய்திருக்கிறது அமெரிக்க இராணுவம்.

நான்கு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இராக்கை சலித்து விட்டது. கொத்துக் குண்டுகள் முதல் அபு கிரைப் வரையிலான எல்லா வழிமுறைகள் மூலமும் இராக்கைக் குதறிவிட்டது. ஷியா, சன்னி, குர்து.. என எல்லா விதமான பிரிவினைகளையும் பயன்படுத்தி இராக் மக்களைத் துண்டாடி விட்டது. பொம்மை ஆட்சியை அமைத்து துரோக பரம்பரையையும் தோற்றுவித்து விட்டது..

‏‏இருப்பினும் “பலான தேதியில் பலான இடத்துக்கு அமெரிக்க அதிபர் வருகிறார்” என்று முன்கூட்டியே அறிவிக்கும் துணிவு அமெரிக்க அரசுக்கு இல்லை. ஊரடங்கிய பின்னிரவு நேரத்தில், வைப்பாட்டி வீட்டுக்கு விஜயம் செய்யும் நாட்டாமையைப் போல பாக்தாத் நகரில் புஷ்ஷை இறக்கியது அமெரிக்க உளவுத்துறை.

அவர் இராக் மக்களிடம் விடை பெறுவதற்கு வந்தாராம்!
2004 ஆம் ஆண்டு இராக்கில் புஷ்ஷின் படைகள் ஆரவாரமாக நுழைந்த அந்த நாளை உலகமே அறிந்திருந்தது. விடை பெறும் நாளோ, இராக் மக்களுக்கே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.‏‏

இரகசியமான இந்த விடையாற்றி வைபவத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு பலமாக இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு கூழாங்கல், ஒரு அழுகிய முட்டை, ஒரு தக்காளி எதையும் அந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தின் அரங்கினுள் ஸய்தி எடுத்துச் சென்றிருக்க முடியாது. இப்படியொரு ஆயுதத்தை ஒரு மனிதன் அணிந்து வரமுடியும் என்று அமெரிக்க உளவுத்துறை எதிர்பார்த்திருக்கவும் முடியாது.
எப்பேர்ப்பட்ட கவித்துவம் பொருந்திய தாக்குதல்! புஷ் கொல்லப்படவில்லை. காயம்படவுமில்லை. செருப்படிக்குத் தப்பி ஒதுங்கி சமாளித்து அந்த மானக்கேடான சூழ்நிலையிலும் மீசையில் மண் ஒட்டியது தெரியாத மாதிரி, அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அமெரிக்கப் பெருமிதம் அடி வாங்காத மாதிரி, கம்பீரமான அசட்டுச் சிரிப்பின் பல வகைகளை நமக்குக் காட்டுகிறார் புஷ்.

சொற்களே தேவைப்படாத படிமங்களாக நம் கண் முன் விரிந்த அந்தக் காட்சி 4 ஆண்டுகளாக இராக்கில் அமெரிக்கா வாங்கி வரும் செருப்படிகள், அதன் அவமானங்கள், அதன் சமாளிப்புகள்.. அனைத்துக்கும் பொழிப்புரை வழங்குகிறது.

நான்காண்டு செருப்படிகளை உள்ளடக்கிய ஒரு செருப்படி. நான்காண்டு விடுதலைப்போருக்குப் பொருத்தமான ஒரு விடையாற்றி. எப்பேர்ப்பட்ட கவித்துவமிக்க காட்சி!

சதாம் தூக்கிலேற்றப்பட்ட காட்சியுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். அதுவரை தன்னை ஆதரித்திராத உலக மக்கள் பலரின் அனுதாபத்தையும் மரியாதையையும் அன்று சதாம் பெறமுடிந்தது. அநீதியான அந்தத் தண்டனைக்கு எதிராக அன்று உலகமே ஆர்த்தெழுந்தது.

ஆனால் அதிபர் புஷ்ஷுக்கு விழும் இந்தச் செருப்படி சொந்த நாட்டு மக்களின் அனுதாபத்தைக்கூட அவருக்குப் பெற்றுத்தரவில்லை. அமெரிக்காவின் அதிகாரத் துப்பாக்கியின் நிழலிலேயே அதன் அதிபர் அம்மணமாக நிற்பதைக் கண்டு அமெரிக்க மக்களே விலா நோகச் சிரிக்கிறார்கள்.

“இந்திய மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்” என்று சில மாதங்கள் முன் புஷ்ஷிடம் வாலைக்குழைத்தாரே மன்மோகன் சிங், அந்த புஷ்ஷுக்கு விழுந்த செருப்படியை அதே இந்திய மக்கள் ரசிக்கிறார்கள். செய்தி கேளவிப்பட்ட மறுகணமே பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள். நாமும் கொண்டாடுவோம்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலை விடவும் கம்பீரமானது இந்த இரட்டைச் செருப்புத் தாக்குதல். சுதந்திரம் என்ற சொல்லை மனித குலத்துக்கு வழங்கிய மெசபடோமிய நாகரீகம், அந்தச் சுதந்திரத்தின் சின்னமாக மாவீரன் ஸெய்தியை உலக மக்களுக்கும், ஒரு ஜோடி செருப்புகளை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் வழங்கியிருக்கிறது.

ஒரு வகையில் இந்தக் காலணிகள் புனிதமானவை

Thanks : VINAVU

புஷ் மீது வீசப்பட்ட ஷூவுக்கு ரூ.47 கோடி விலை!

புஷ் ஷை செருப்பால் நீங்களும் அடிக்க வாய்ப்பு இதோ.

பாக்தாத்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது நிருபரால் வீசப்பட்ட ஷூவுக்கு ரூ.47 கோடி கொடுக்கத் தயாராக இருப்பதாக சவூதி அரேபிய கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார்.

ஈராக்கில் செய்தியாளர்களுக்கு அதிபர் புஷ் பேட்டி அளித்தபோது அவர் மீது ஒரு தொலைக்காட்சி நிருபர் தனது ஷூவை கழற்றி வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷூ வீசிய அந்த நிருபர் முந்தாஸர் ஒரே இரவில் உலகப் புகழ் பெற்றுவிட்டார்.

அவர் செய்தது சரிதான் என்று பொதுமக்கள் கூறி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட அந்த வாலிபரை விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி ஈராக் உள்பட பல்வேறு நாடுகளில் போராட்டம் நடக்கிறது. ஆளுக்கு ஒரு ஷூவை கையில் எடுத்துக்கொண்டு பேரணியாக சென்று ஆங்காங்கே தூணில் ஷூவை தொங்க விடுகிறார்கள். அந்த நிருபருக்கு வீரன் என பட்டம் சூட்டியுள்ளனர்.

அந்த நிருபர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனமும் அறிவித்து விட்டது.

சவூதி அரேபியாவை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் புஷ் மீது வீசப்பட்ட அந்த ஷூவை இப்போது விலை கொடுத்து வாங்க முன் வந்துள்ளார்.
'புஷ் மீது வீசப்பட்ட அந்த ஷூவுக்கு ரூ.47 கோடி கொடுக்கத் தயாராக உள்ளேன்' என்று அவர் கூறியதாக சவூதி அரேபிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னொரு பக்கம், ஷூ வீசிய அந்த வாலிபருக்கு மாவீரன் பட்டம் சூட்டி விருது வழங்கப்போவதாக கூறியிருக்கிறார் லிபியா அதிபர் முகமது கடாபியின் மகள்.

இதற்கிடையே ஷூ வீசிய முந்தாசரை போலீசார் தாக்கியதில் கை உடைந்து பாக்தாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லெபனான் டி.வி. நிறுவனம் ஒன்று அவருக்கு புதிய வேலை தரவும் முன் வந்துள்ளது.
இதற்கிடையே, ஷூ வீசப்பட்ட வீடியோ படங்கள் ஹிட் ஆகியுள்ளன. இணைய தளங்கள் அனைத்திலுமே கிட்டத்தட்ட இந்த ஷூ வீச்சு விவகாரம்தான் பிரதானமாக உள்ளது.யு ட்யூப் இணைய தளத்தில் ஏராளமான வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் குறைந்தது 5 லட்சம் ஹிட்டுகளைப் பெற்றுள்ளனவாம்.

ஈ பே நிறுவனம் இந்த ஷூக்களை ஏலம்விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை நீரிழி நோயாளிகள் சங்கத்துக்கு அளிக்க முன் வந்துள்ளது.

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/1217-saudi-millionaire-to-award-1-million-to-tv.html

****************************************
இத்தளத்திற்க்கு சென்று நீங்களும் புஷ் ஷை செருப்பால் அடிக்கலாம்.

http://www.kroma.no/2008/bushgame/
************************************
READ:-

புஷ் மீது ஷூ வீச்சு: இந்தியர்கள் மீதும் வீசப்பட்டதற்கு சமம்??? !!! – எச்சூரி

காலணி அடி வாங்கிய அதிபர் புஷ் ஷுக்கு கொல்லமாங்குடி குப்பாயி வாழ்த்துப் பாடல்

வீடியோ பாருங்கள். -அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி.. பாக்தாத்தில் அவமானம் - புஷ் மீது ஷூ வீச்சு

Tuesday, December 16, 2008

இந்திய உளவுத்துறையால் நேபாளத்தில் கடத்தப்பட்டவர் மும்பை தாக்குதலில் ஈடுபட்டது அம்பலம்

மும்பாய் தாக்குதலை நடத்திய அஜ்மலை நேபாளத்திலிருந்து கடத்தி வந்தது இந்திய றோ: வழக்கறிஞர் தகவல்
Align Center



இந்தியாவின் மும்பாயில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவராகக் கூறப்படும் அஜ்மலை, நேபாளத்திலிருந்து கடத்தி வந்தது இந்திய உளவு அமைப்பான "றோ" தான் என்று பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த சட்டத்தரணியான சௌத்ரி மொகமட் பரூக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாளேடான த நியூசுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:

மும்பாயில் கைது செய்யப்பட்டு இந்திய பாதுகாப்பு படையின் காவலில் உள்ள நபரின் உண்மையான பெயர் அஜ்மல்.

2007 ஆம் ஆண்டின் ஜூலையில் அஜ்மலை அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டனர். நேபாளத்துக்கு வர்த்தக ரீதியாக சென்றிருந்த அஜ்மல் அங்கிருந்து காணாமல் போனது தெரியவந்தது.

இது தொடர்பாக நேபாள தலைமை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்திருந்தேன். அதனை நேபாளத் தலைமை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

அந்த வழக்கில் நேபாள உள்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நேபாள அரசு மற்றும் இந்திய உளவு அமைப்புக்களை எதிர்த்தரப்பாக குறிப்பிட்டிருந்தேன்.

அஜ்மல் காணாமல் போனது தொடர்பாக நேபாள காவல்துறை, ஐ.நா.வின் நேபாள மனித உரிமைகள் குழு மற்றும் நேபாள மனித உரிமை ஆர்வலர்களிடமும் தெரிவித்திருந்தேன்.

அப்போதே இந்திய உளவு அமைப்பினரால் அஜ்மல் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறியிருந்தேன்.

அஜ்மலை இந்திய உளவு அமைப்பினர் கைது செய்த செய்திகள் ஏற்கெனவே நேபாள ஊடகங்களிலும் வெளிவந்திருக்கிறது. இந்திய உளவு அமைப்பினரால் அஜ்மல் கைது செய்யப்பட்ட செய்தி, அஜ்மலின் குடும்பத்தாருக்கு தெரியும்.

நேபாளத்துக்கு தனது நண்பர்கள் நால்வருடன் அஜ்மல் சென்ற நிலையில்தான் காணாமல் போனார். அஜ்மல் உட்பட நான்கு பேரும் வாரந்தோறும் வர்த்தகம் தொடர்பாக பாகிஸ்தான் ஏயர்லைன்ஸ் வானூர்தி மூலம் நேபாளம் செல்வது வழமையாகும். அஜ்மலின் குடும்பத்தினர் அந்த நால்வரில் சிலரைத் தொடர்பு கொண்டனர்.

நேபாளத்தில்தான் அஜ்மல் காணாமல் போனது குறித்த ஆதாரங்கள் உள்ளன.

இந்திய உளவு அமைப்பினரால் அஜ்மல் கடத்தப்பட்டது குறித்து அனைத்துலக ஊடகவியலாளர்கள் பங்கேற்ற மாநாட்டை நேபாளத்தில் நான் நடத்தியிருந்தேன். அதனை இணையத் தளங்களிலும் வெளியிட்டிருந்தோம்.

நேபாளத்தில் அஜ்மலை கைது செய்த இந்திய உளவுத்துறை நான்கு மணி நேரம் அங்கே காவலில் வைத்து சித்திரவதை செய்த பின்னர் இந்தியா கொண்டு சென்றது.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள அஜ்மல்தான் நேபாளத்தில் கடத்தப்பட்டவர்.

அஜ்மலுக்கும் பரித்கோட்டுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும் அஜ்மலின் உறவினர்களின் தொடர்பு எண்களை அந்த சட்டத்தரணி வெளியிடவில்லை.

இதனிடையே, நேபாளத்தில் இந்திய உளவு அமைப்பினரால் அஜ்மல் கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதை நேபாள அரசு மறுத்துள்ளதாக பாகிஸ்தானிய தொலைக்காட்சியான ஜியோ செய்திகள் கூறுவதாகவும் த நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி : தி நியூஸ்

BUSH - A Cartoon Can Speak Thousand Words


Arabs hail shoe attack as Bush’s farewell gift
Robert H. Reid I AP
BAGHDAD: Iraqis and other Arabs erupted in glee yesterday at the shoe attack on US President George W. Bush. Far from a joke, many in the Middle East saw the act by an Iraqi journalist as heroic, expressing the deep, personal contempt many feel for the American leader they blame for years of bloodshed, chaos and the suffering of civilians.

Images of Bush ducking the fast-flying shoes at a Baghdad press conference, aired repeatedly on Arab satellite TV networks, were cathartic for many in the Middle East, who have for years felt their own leaders kowtow to the American president.

So the sight of an average Arab standing up and making a public show of resentment was stunning. The pride, joy and bitterness it uncorked showed how many Arabs place their anger on Bush personally for what they see as a litany of crimes — chief among them the turmoil in Iraq and tens of thousands of Iraqi deaths since the 2003 US invasion.

The reaction explains in part the relief among Arabs over the election victory of US President-elect Barack Obama, seen as a repudiation of the Bush era. But it also highlights the task Obama will face in repairing America’s image in the Middle East, where distrust of the US has hampered a range of American policies, from containing Iran to pushing the peace process and democratic reform.

Bush “got what he deserves,” said a Jordanian businessman, Raed Mansi, in Amman.

“I hope he got the message loud and clear: That he’s loathed for his wrongdoing, for killing Muslim women and children in Iraq, Afghanistan and Palestine,” the 52-year-old contractor said
Some regional TV channels showed the footage from Sunday’s press conference more than a dozen times in the space of several hours. The scene bounced around Internet networking sites like YouTube and Facebook, showing Iraqi journalist Muntadar Al-Zeidi standing, hurling both his shoes at Bush and shouting in Arabic, “This is a farewell kiss, you dog. This is from the widows, the orphans and those who were killed in Iraq.”

Al-Zeidi was kidnapped once by militants and, separately, detained briefly once by the US military — a story of getting hit from all sides that is bitterly familiar to many Iraqis. Over time, the 28-year-old unmarried Shiite, who works for the private Iraqi TV station Al-Baghdadia, came to hate both the US military occupation and what he views as Iran’s “moral” occupation too, his family told The Associated Press yesterday.

A day after the attack, Al-Zeidi’s three brothers and one sister gathered in Al-Zeidi’s simple, one-bedroom west Baghdad apartment, decorated with a poster of revolutionary icon Che Guevara who is widely lionized in the Middle East.

Family members expressed bewilderment over Al-Zeidi’s action and concern about his treatment in custody. But they also expressed pride over his defiance of an American president who many Iraqis believe has destroyed their country.

“I swear to Allah, he is a hero,” said his sister, who goes by the nickname Umm Firas, as she watched a replay of her brother’s attack on an Arabic satellite station. “May Allah protect him.” The family insisted that Al-Zeidi’s action was spontaneous — perhaps motivated by the political turmoil that their brother had reported on, plus his personal brushes with violence and the threat of death that millions of Iraqis face daily.

Al-Zeidi attained instant hero status around the Arab world. In Baghdad’s Shiite slum of Sadr City, thousands of supporters of Moqtada Sadr burned American flags to protest against Bush and called for the release of Al-Zeidi.

What made Al-Zeidi’s defiance particularly resonant for many was their anger at autocratic Arab leaders who they have considered slavish followers of Bush’s policies in the Middle East.

Monday, December 15, 2008

UNITED STUDENTS FRONT- ன் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்புவிழா


UNITED STUDENTS FRONT- ன் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகம் (13/12/08) சனிக்கிழமை மாலை 4:30 ம்ணியளவில் அதிராம்பட்டினம்,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டிலுள்ள தனலக்ஷ்மி பேங்க் மாடியில், ஹாஜி A.M.K.முகம்மது ஹனீஃப் அவர்கள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் A.முகம்மது அன்வர் M.A.,M.Phill., அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


இதனைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ஹாஜா நஜ்முதீன் அவர்கள் கிராஅத் ஓதினார்,Z. முகம்மது தம்பி அவர்கள் வரவேற்புரையாற்றினார், A.முகம்மது அன்வர் M.A.,M.Phill.,அவர்கள் பணிகளை விளக்கிப் பேசினார், A.M.Kமுகம்மது ஹனீஃப், A.T.அப்துல்லாஹ் B.Com.,D.C.P., மெளலவி, ஷேக் முகம்மது ஆகியோர் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் USF-ஐ வாழ்த்தியும் சிறப்புரையாற்றினர், இறுதியாக, M.சாகுல் ஹமீது நன்ரறியுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும், ஜமாத்தார்களும், பொதுமக்களும் கலந்துக் கொன்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியைன் தஞ்சை தெற்கு மாவ்ட்டச் செயலாளர், S.நிஜாமுதீன் தொகுத்து வழங்கினார்.

அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி. படம். பாக்தாத்தில் அவமானம் - புஷ் மீது ஷூ வீச்சு

இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார்.

பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார்.

அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார்.ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார்.

முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது.2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை.

இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார்.அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.

பதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

THANKS TO : http://thatstamil.oneindia.in/news/2008/12/15/world-bush-on-farewell-visit-to-iraq-dodges-flying.html#cmntTop

பெரியபட்டினத்தில் "ஈத் மிலன்" மாற்று மத சகோதரர்களுடன் கலந்துரையாடல்


டிசம்பர் 14, 2008, இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் இன்று மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஈத் மிலன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. மாற்று மதச் சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழச்சியில் அதிகமான அளவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து அருகில் உள்ள முத்துப்பேட்டை கல்லூரியில் தங்கிப் படிக்கும் மாற்றுமத மாணவர்களும், உள்ளூரைச் சேர்ந்த முக்கிய மாற்று மத பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சரியாக காலை 10.30 மனியளவில் நிகழச்சி ஆம்பமாகியது. நிகழ்ச்சியை துவக்கி வைத்தவர்களாக மாணவர்களுடன் நிகழ்கால பொருளாதார மாற்றங்கள் பற்றியும் இதன் பாதிப்பு பற்றியும் இதில் எந்த அளவிற்கு இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துறையாடினார் ஆசிரியர் காதர் அவர்கள்.


பின்னர் மனித நீதிப் பாசறையின் பெரியபட்டினம் நிர்வாகியான திரு. பீர் முகைதீன் அவர்கள் ஓர் கடவுள் கொள்கை பற்றியும், மாற்று மதங்களில் பின்பற்றப்படும் பல கடவுள் கொள்கை பற்றியும், இஸ்லாத்தின் பார்வையில் கடவுள் கொள்கை, ஏன் கடவுள் பல கடுவள்களாக இருக்க முடியாது என்றும், கட்வுள் என்பது ஒருவராகத்தான் இருக்க முடியும் என்றும் மிக அழுத்தம் திருத்தமாக மாற்று மதத்தினரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அறுமையான ஒரு உரையை நிகழ்த்தினார். தனது உரையின் மூலம் கூடியிருந்த மாற்று மத நன்பர்களிடத்தில் அழைப்பு பனியையும் மேற்கொண்டார்.

அதன் பின்னர் பேச வந்த மனித நீதிப் பாசரை பெரியபட்டனம் பகுதி பொறுப்பாளர் திரு. செய்யத இபுறாஹிம் அவர்கள் தூய இஸ்லாத்தை பற்றியும், இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை போதிக்கவில்லை என்பது குறித்தும், இஸ்லாத்தில் மனித நேயம், மனித உரிமைகள் பேன்றவை குறித்தும், இஸ்லாமிய ஆட்சியாளர்களான அபுபக்கர், உமர் போன்றோர் எப்படி தங்கள் ஆடசியில் மாற்றிமதத்தவர்களிடத்தும் நீதி செலுத்தினர் என்பது குறித்தும் விளக்கினார்.பின்னர் இன்று உலகம் எங்கும் இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்றும், முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்றும் ஊடகங்களின் மூலமாக நடத்தப்பட்டு வரும் பாரிய பிரச்சார யுத்தத்தினை பற்றியும் இதன் பின்னணியில் உள்ள சக்திகள் எது என்பது குறித்தும் சிறப்புறையாற்றினார்.


அதன் பின்னர் மீண்டும் ஆசிரியர் திரு. காதர் அவர்கள் தனது சிறந்த நாவன்மையின் மூலம் இஸ்லாத்தினை பற்றியும், இஸ்லாத்தில் மனிதனை சிந்திக்க சொல்வது குறித்தும் உரையாற்றினார்கள். அதன் பின்னர் பக்கத்து கிராமமான நெய்னார் மரைக்கானை சேர்ந்த ஓய்வு வெற்ற ஆசிரியர் திரு. மனி மாதவன் அவர்கள் சமூக நல்லினக்கத்தை வலியுருத்தும் வகையில் தனது உரையை ஆற்றினார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்தது அனைத்து ஹிந்துக்களும் அல்ல என்றும் ஹிந்துக்களின் பெயரில் அரசியல் செய்யும் ஒரு மதவாத அரசியல் கட்சியே தனது தொண்டர்களை கொண்டு இடித்தது என்றும் இந்தியாவின் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் சில அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் சுய லாபத்திற்காக மத மோதல்களையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தி அரசியல் செய்கின்றார்கள் என்றும் இதனால் நம்மள் பினக்கு வரக்கூடாது நாம் என்றும் ஒற்றுமையாக சகோதரர்களாகவு வாழ வேண்டும் என்றுமு் வலியுருத்தினார்.

அதன் பின்னர் கேள்வி நேரம் நட்நதது . கூடியிருந்த மாற்றுமத சகோதரர்களும், மாற்று மத மாணவர்களும் கேட்ட கேள்விகளுக்கு குறிப்பாக இந்தியாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் அதன் பிண்ணனி குறித்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரு. முகவைத்தமிழன் அவர்கள் சிறப்பாக பதில் அளித்தார்கள். மார்க்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு திரு. செய்யது இபுறாஹி்ம் அவர்களும் மனித நீதிப் பாசறையின் சித்தர்கோட்டை பிரிவு தாவா பொறுப்பாளர் திரு. சஃபீக் அவர்களும் சிறப்பாக பதில் அளித்தார்கள்.

அதன் பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்தக்களை நிகழ்ச்சியை நடத்திய நிர்வாகிகளிடத்தில் எழுத்து மூலமாக தெறிவித்தார்கள். இன்னும் விளக்கம் தேவைப்பட்டவர்களுக்கும் மதிய உணவிற்கு பின்னர் விளக்கம் வளங்கப்பட்டது. பின்னர் நிகழச்சியின் முடிவில் அனைவரும் மிகுந்த மன திருப்பதியுடனும் மகிழச்சியுடனும் கலைந்து சென்றனர்.

ஈத் மிலன் என்ற மாற்று மத சகோதரர்களுக்கான இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை பெரியபட்டினம் மனித நீதிப் பாசரை மற்றும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.

Saturday, December 13, 2008

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்


பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி நிறுவனமும் டவ் இந்தியாவும் இணைந்து இலவச சேவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசம்
ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர் (விட்டமானி) இலவசமாக வழங்கப்படும்.

ஊனமுற்ற சகோதர சகோதரிகள் எவ்வித கட்டனமும் இன்றி இவற்றை இலவசமாக பெறலாம்

வரும் 15-12-2008 காலை முதல் 19-12-2008 வரை இவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்
அலுவலக நேரம் : காலை 9.00 முதல் இரவு 7.00 மனி வரை.

முக்கிய குறிப்பு : இச்சலுகை பெற விரும்புவோர் கட்டாயமாக மதியம் 2.00 மனிக்கு முன்னதாக வர வேண்டும்.

முகவரி : ஹஸ்த்தினாபுரி நகரி (மாலு ஜெய்ன பவன்)
30, வெங்கடாச்சலம் முதலியார் தெரு,
சூளை, சென்னை 600112
சூளை அஞ்சல் அலுவலகம் அருகில்.


தொலைபேசி : 044 - 266919616 / 25322223
திரு. மோஹன் ஜெயின்



தயவு செய்து உங்கள் பகுதியில் ஊனமுற்றோர் யாராவது இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெறிவியுங்கள். ஏழ்மையில் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

Thursday, December 11, 2008

சுவனத்தை நோக்கி ஒரு நாள் மாபொரும் இஸ்லாமிய மாநாடு & கண்காட்சி


Sunday, December 07, 2008

இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம்

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.

வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.

'இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்' என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.'இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது' என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.

அயோத்தியில் ராமர் பிறந்தாரா?அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.

இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, 'அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது. இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும். அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை. இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, 'இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்' எனக் கூறுகிறது.அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும். ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் 'அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்' எனக் குறிப்பிடுகின்றார்.

அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது. இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.

இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும்.

அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.'இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்' என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை. அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும். ''இந்த அயோத்திதான் அந்த அயோத்தி'' என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது.

ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.

நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர். இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?

'பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை.

இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர் பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை 'தி வீக்' (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் 'சன்டே டைம்ஸ்' (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை'' என்று அடித்துக் கூறுகிறார்.'மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்' என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.

இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை.

குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் 'அமர கோஷா' என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், 'இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்' என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட 'ரேடியன்ஸ்' பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார். அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா? இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.

இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார். இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ''கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே'' எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்

.200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.

பாபர் கோவிலை இடிப்பவரா?இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?

பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,''மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்'' என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது. கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை.

ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ''உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்'' என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.அதுதான் போகட்டும்!

முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்''கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்'' என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை. 1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.
**********************************************
பாப‌ர் மசூ‌தி இடி‌க்க‌ப்ப‌ட்ட நினைவு தினத்தையொட்டி, அம்மசூதியை அதே இட‌த்த‌ி‌ல் மீண்டும் க‌‌ட்டி‌த்தர‌ வலியுறுத்தி த‌மிழகம் முழுவது‌‌ம் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இ‌ன்று ர‌யி‌ல் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுபட்டு கைதானார்கள். பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி த‌மிழக‌ம் முழுவது‌ம் ரயில் மறியலில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தம‌ி‌ழ்நாடு துவா‌த் ஜமா‌த் உ‌ள்‌ளி‌ட்ட அமை‌ப்புக‌ள் அறிவித்‌திரு‌ந்தன.

அதன்படி செ‌ன்னை செ‌ன்‌ட்ர‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்த‌ி‌ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக‌த் தலைவ‌ர் எ‌ம்.ஹெ‌ச்.ஜவாஹ‌ிரு‌ல்லாஹ‌் தலைமை‌யி‌ல் நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கூடி, அயோ‌த்‌தி‌யி‌ல் பாப‌ர் மசூ‌தியை ‌‌மீ‌ண்டு‌ம் க‌ட்டி‌த்தர வே‌ண்டு‌ம், பாப‌ர் மசூ‌தி இடி‌ப்பு‌ ‌விவகார‌ம் தொட‌ர்பாக அமை‌க்க‌ப்ப‌ட்ட ‌லிப‌‌‌ர்ஹா‌ன் ‌விசாரணை ஆணை‌ய‌த்த‌ி‌ன் அ‌றி‌க்கை ‌விவர‌ங்களை வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம், பாப‌ர் மசூ‌தி இடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌வா‌ளிக‌ள் அனைவரு‌க்கு‌ம் உடனடியாக த‌ண்டனை வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்பன உ‌ள்‌ளி‌‌ட்ட ப‌ல்வேறு கோ‌‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்த‌ி முழ‌‌க்க‌ங்‌களை எழு‌‌ப்‌பின‌ர்.

பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌ள் ரயில் ம‌றியலில் ஈடுபடுவதற்காக சென்றபோது போலீஸார் அவ‌ர்களை தடு‌த்து நிறுத்தி கைது செ‌ய்தன‌ர்.இதேபோ‌ல் செ‌ன்னை எழு‌ம்பூ‌‌ரிலு‌ம் ம‌றிய‌லி‌ல் ஈடுபட முய‌ன்ற நூ‌ற்று‌‌க்கு‌ம் ‌மே‌ற்ப‌ட்ட இ‌ஸ்லா‌‌மி‌யரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தன‌ர்.

மேலு‌ம் விழுப்புர‌ம், சேல‌ம், ஈரோட,சிவ‌க‌ங்கை, தே‌னி ஆ‌கிய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100000க்கு‌ம் அதிகமானோர் கைது செய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

Saturday, December 06, 2008

ஹஜ் நேரடி ஒலிபரப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும்.அல்லாஹ்வின் பேரருளால் ஹஜ் வணக்க கிரியைகள் தற்போது பீஸ் டிரைன் பிளாகில் நேரடியாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இதை தாங்கள் காண்பதோடு,மற்ற நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.நன்றி
http://www.peacetrain1.blogspot.com/

Friday, December 05, 2008

டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் லால்பேட்டை....!

லால்பேட்டை,டிச-5
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தின‌மான டிசம்பர் 6ஆ‌ம் தேதி லால்பேட்டையில் அனைத்து வர்த்தக நிருவனங்களும் மூடப்பட்டு இருக்கும் என லால்பேட்டை வர்த்தகசங்கம் அறிவித்துள்ளது.
.
1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று முதல் இன்று வரை டிசம்மர் 6 ஆம் தேதி லால்பேட்டையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் அதுபோல் இந்த வருடமும் டிசம்பர் 6 ஆம் தேதி அனைத்து வர்த்தக நிருவனங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று வர்தகசங்கம் அறிவித்துள்ளது.
.
த.மு.மு.க
.
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி தலைமயில் நடைபெரும் ரயில்மறியல் போராட்டத்தில் லால்பேட்டையில் உள்ள த.மு.மு.க. தொண்டர்கள் பொரும்பாலானவர்கள் கலந்துக்கொள்வார்கள் என தமுமுக லால்பேட்டை கிளை அறிவித்துள்ளது.
.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
.
மாவட்ட தலைநகர் கடலூரில் நடைப்பெரும் ஆர்ப்பட்டத்தில் லால்பேட்டையில் உள்ள த.த.ஜ. தொண்டர்கள் அனைவரும் கலந்துக்கொள்வார்கள் என்ரு லால்பேட்டை த.த.ஜ. கிளை அறிவித்துள்ளது.

Thursday, December 04, 2008

ஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப்பு என்ன?

அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித்துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்? (திருக் குர்ஆன் 2:114)
அன்புச் சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.
நீங்கள் ஒரு தனி நபராகவோ ஒரு மக்கள் குழுவினராகவோ இருக்கலாம். மனித சமுதாயத்திற்கு சிந்தனைச் சுதந்திரத்தையும் சிறப்பு அந்தஸ்தையும் கொடுப்பதற்காக, அதனை பல தெய்வக்கொள்கையிலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன், மஸ்ஜிதுகள் நிறுவப்படுகின்றன. இவ்வாறு நிறுவப்பட்டு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப் பின் பாபரி மஸ்ஜித் 1992ம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி ஹிந்துத்துவ வெறியர்களால் இடிக்கப்பட்டது. ஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை புனர் நிர்மாணம் செய்வதற்கு நீங்களும் பல்வேறு வழிகளில் பணியாற்றலாம்!
உங்களின் சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் இதோ சில ஆலோசனைகள்:
1. துஆ
பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் திரும்பவும் கட்டியெழுப்புவதற்கான தேவைகளை நிறைவேற்ற முஸ்லிம் உம்மத்திற்கு உதவி அருளுமாறு எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலாவிடம் துஆ (பிரார்த்தனை) செய்யுங்கள். இதற்கு எதுவும் செலவாகாது, இதற்காக பொது அறிக்கைகள் எதுவும் தேவையில்லை. தினந்தோறும் உங்கள் துஆக்களில் பாபரி மஸ்ஜிதை நினைவுபடுத்திக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
2. உண்மைத் தகவல்களை படியுங்கள்; அதனைப் பற்றி எழுதுங்கள்.
பாபரி மஸ்ஜித் சோக நிகழ்ச்சி பற்றி உங்களுக்கு தெரியாமலிருந்தால், அதைப் பற்றி வாசித்தறியுங்கள். ஷரீஅத்தில் மஸ்ஜித்களின் அந்தஸ்து பற்றியும், பாபரி மஸ்ஜிதின் நிர்மாணம் முதல் நிர்மூலம் வரையிலான வரலாறு பற்றியும் அறியலாம்; இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (இந்திய முஸ்லிம்களின் சம்மேளனம்) என்ன நிலை எடுத்துள்ளது என்பது பற்றி தெளிவடையலாம். இந்துத்துவ சக்திகள் முதலில் அதனை அடையாளப்படுத்தி, அதன் பின்னர் முழு உலகிற்கும் முன்னிலையிலும் அதனை சுக்கு நூறாக தரைமட்டப்படுத்தியது ஏன் என்பது பற்றி அறிய முயலுங்கள். இது அதனை அதே இடத்தில் மீண்டும் நிர்மாணம் செய்வதே மிக முக்கியமாகும் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை உங்களுக்கு தரும்.
இந்திய அரசின் பாதுகாப்பின் கீழ், பாபரி மஸ்ஜிதின் மையப் பகுதியில் ராமர் சிலைகளுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும், பாபரி மஸ்ஜித் இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு சட்டரீதியாகவும், சரித்திரரீதியாகவும் எந்த ஓர் ஆதாரமுமில்லை. மஸ்ஜிதை ஷஹீதாக்கிய கரசேவகர்கள் விசேஷ ரயில்களில் தத்தம் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பதும் முக்கிய குற்றவாளிகள் இன்று மத்தியில் அதிகாரம் செலுத்தி வருகிறார்கள் என்பதும், அதே நேரத்தில் இந்த மனிதாபிமானமில்லாத அக்கிரமத்திற்கெதிராக அமைதி வழியில், சட்டத்திற்குட்பட்டு வீதிகளில் குழுமி கண்டனம் தெரிவித்த முஸ்லிம்களுள் ஏறத்தாழ 2000 பேரை காவல்துறை சுட்டுக் கொன்றதும் அப்பட்டமான உண்மைகளாகும்.
3. நீங்கள் வாழும் பகுதிகளிலுள்ள மஸ்ஜித்களில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
முஸ்லிம்களில் பலதரப்பட்டவர்கள் ஒரே சமயத்தில் மஸ்ஜிதில் ஒன்று கூடுவது வெள்ளிக்கிழமை ஜ“மஆத் தொழுகைக்குத்தான் என்பதால், குத்பா பிரசங்கத்தைப் பயன்படுத்தி, பாபரி மஸ்ஜித் பற்றி விளக்கி கூறலாம்; இயன்ற வழிகளில் பாபரி மஸ்ஜித்துகாக அவர்கள் ஆதரவைக் கோரலாம்.
4. ஊடகங்கள் மூலம் உண்மைச் செய்தியை உலகறியச் செய்யுங்கள்:
பாமர மக்களுக்கு வரும் செய்திகள் எல்லாம் பக்கச் சார்புள்ள முஸ்லிமல்லாத செய்தி ஊடகங்கள் மூலமாக வரும் உண்மைக்கு மாறான திரிக்கப்பட்ட செய்திகள்தான். இந்த நிலையில், பாபரி மஸ்ஜிதின் உண்மை நிலையை மக்கள் முன் எடுத்து வைக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்கு எலக்டிரானிக்/அச்சு ஊடகங்களில் பணியாற்றும் உணர்வுள்ள முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இணையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு, முஸ்லிமல்லாதாருக்கும் பாபரி மஸ்ஜித் உண்மை நிலையை எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைக் கோரலாம்.
5. உங்கள் ஊர்களில்/ நகரங்களில் "பாபரி மஸ்ஜித் புனர் நிர்மாணக் குழுக்களை" நிறுவுங்கள்:
பாபரி மஸ்ஜிதைப்பற்றி மக்களுக்கு அறியத்தருவதற்கும், ஹிந்துத்துவ சக்திகளின் அக்கிரமங்களால் பாதிக்கப்பட்ட உங்கள் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் சட்ட, தார்மீக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் இக்குழுக்கள் பயன்படும். கருத்தரங்குகள், பொது நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, கல்வி நிறுவனங்களில் இது தொடர்பான கூட்டு நிகழ்ச்சிகள், செய்தி மடல்கள் வாயிலாக சமுதாயத்தினருக்கு விழிப்பூட்டுங்கள்.
6. பொது மக்கள் அபிப்ராயத்தை உருவாக்குங்கள்:
மனித உரிமைகள் குழுக்கள், அரசியல் கட்சிகள், திறந்த மனதுள்ள முஸ்லிமல்லாத குழுக்கள் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு பாபரி மஸ்ஜித் விவகாரத்தைப்பற்றிய கருத்தோட்டத்தை அவர்கள் மத்தியில் உண்டாக்குவது முஸ்லிம்களின் பொறுப்பாகும். கருத்தொற்றுமை கொண்டவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் நீதி வேண்டி போராடும் முஸ்லிம்களுக்கு வலுவைக் கொடுக்கும்.
7. ஹிந்துத்வ சக்திகள் மத்தியில் அழைப்புப்பணியும்:
"தேசிய அளவில் மிகப்பெரும் சோக நிகழ்ச்சியான பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு நீங்கள் தான் பொறுப்பாகும். உங்களின் சதித்திட்டத்தின் காரணமாக நீதிக்குப் புறம்பான செயலை நீங்கள் செய்ததாக இந்திய முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள். மரணத்திற்கு பின் வரும் மறுமை நாளில் இறைவனின்," எந்த உரிமையையும், அனுமதியையும் கொண்டு இஸ்லாத்தின் அடையாளமாகிய மஸ்ஜிதை இடித்தீர்கள் ? எனது அடியார்களைக் கொன்று குவித்தீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு எச்சரிக்க வேண்டும். குருட்டு குறிக்கோள்களுக்கு பாடுபடுவதை விடுத்து, எங்களையும்,உங்களையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் பக்கம் திரும்புங்கள் என்ற செய்தியை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நூல்களை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அவர்களின் நேர்வழிக்காக தினமும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
8. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
முஸ்லிம்கள் உறுதியாக நின்று அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் மென்மையான குறிக்கோளற்ற அணுகுமுறையைக் கையாண்டால்,அது இந்தியாவில் அமைதியை நிலவச் செய்யும் எனப் பலர் நம்புகின்றனர். அவர்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துவது என்னவென்றால் அல்லாஹ்வின் அருளால் எங்களின் ஜிஹாத் உணர்வுதான் அவர்கள் ராமர் கோவில் கட்டுவதையும்,ஏனைய மஸ்ஜித்களை தாக்கி அழிப்பதையும்,முஸ்லிம்களை தாக்குவதையும் விட்டு நிறுத்திவைத்திருக்கிறது. இத்தருணத்தில் இவ்விவகாரத்தில் நாம் தளர்வு காட்டினோமென்றால், ஹிந்துத்துவ சக்திகள் தங்கள் அநீதிகளையும், அக்கிரமங்களையும் மறுபடியும் கட்டவிழ்த்து விடுவதற்கு உற்சாகமளிப்பதாய் அமைந்து விடும். எனவே எந்நேரமும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
அல்லாஹ்வின் மீது மட்டும் முழு நம்பிக்கைவைத்து, அல்குர்ஆன், அல்ஸ”ன்னாவின் வழி காட்டுதலின் அடிப்படையில் நாம் உறுதிப்பாட்டுடனும் உத்வேகத்துடனும் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு நமது கருத்தை நிறுவதற்காக மனப்பூர்வமாகவும், மன உறுதி தளராமலும் உழைப்பது கொண்டு மட்டுமே பாபரி மஸ்ஜிதை மீண்டும் புனர் நிர்மாணம் செய்யலாம்!இம்மை மறுமை வெற்றியை அடையலாம்!

முஸ்லிம்களே நாம் விடாமல் நீதிக்காகப் போராடுவோம்.!
அல்லாஹ்வின் ஆணையை ஏற்றுச் செயல்படுவோம்.!
இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் அடையாளங்களையும் பாதுகாக்கவிடப்படும் அழைப்பிற்குத் தயாராக இருப்போம்.
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன.எனவே அவற்றில் அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்" (அல்குர்ஆன் 72:18)

நன்றி: இக்ரஹ்

Wednesday, December 03, 2008

உலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 03

உலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 03, 2008

கருத்தரங்கில் உரையாற்றுகின்றார் மா. காமராசர் அவர்கள் அமர்திருப்பது இடமிருந்து, திரு. நாகேஸ்வரன், திரு. முகவைத்தமிழன், திரு. நூர் அ.தி.மு.க, திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர்.


டிசம்பர் 03, இராமநாதபுரத்தில் உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் கருத்தரங்கம், பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக இந்த நிகழச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கனக்கான உடல் ஊனமுற்றோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிகள் முதலில் இராமநாதபுரம் மத்திய பேரூந்து நிலையத்தின் எதிர்புரம் அமைந்துள்ள "வளர்ச்சித்துறை திருமன மஹாலில்" ஆரம்பமாகியது.




திரு. முகவைத்தமிழன் அவர்கள் ஒரு உடல் ஊனமுற்ற பென்னிற்கு உணவை வழங்கி துவக்கி வைக்கின்றார் அருகில் திரு. நூர், முன்னாள் அ.தி.மு.க பஞ்சாயத்து தலைவர், திரு. குத்புதீன் ஐபக் இ.தே.ம.க


நிகழ்ச்சி சரியாக காலை 10.0 0 மனியளவில் துவங்கியது. ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் திரு. மா. காமராசர் தலைமை தாங்கினார். திரு. நாகசாமி அவர்கள் உதயம் ஊனமுற்றோர் சங்கம், மன்டபம் ஒன்றியம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மெர்சி அறக்கட்டளை - திருவன்னாமலை திரு. ச. செழியன் M.A., M.phil அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.


திரு. டி.ஆர் சந்திரன், ஆலோசகர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. டி. இராதாகிருஷ்னன் அவர்கள், ஆசிரியர் , அரசு மேல்நிலைப்பள்ளி ரெகுநாதபுரம், திரு. மகாலிங்கம் அவர்கள், ஊனமுற்றோர் சங்கம், இராமேஸ்வரம், திரு. ஜி. தமிழரசு அவர்கள் செயலாளர், உதயம் ஊனமுற்றோர் சங்கம், மன்டபம் ஒன்றியம், திரு. காதர் அவர்கள் செயற்குழு உறுப்பினர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. மு.த. முருகேசு அவர்கள், நிறுவனர் அசுரா தொண்டு நிறுவனம், திரு. பா. மனோஜ்குமார் அவர்கள் அன்னை ஊனமுற்றோர் சங்கம், பாம்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


ஆயிரக்கணக்கான ஊனமுற்றோர் பங்கேற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட ஊனமுற்ற பென்கள் கூட்டத்தின் ஒரு பகுதி


பின்னர் இந்நிகழச்சியில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கனக்கானோர் வந்திரந்தனர் அவர்களில் வெளியூர்களில் இருந்து வந்திருந்த 500 க்கும் மேற்ப்பட்ட உடல் ஊனமுற்ற சகோதர, சகோதரிகளுக்கு இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM) மூலமாக மதிய உணவு வழங்கப்பட்டது. இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் திரு. நூர் ஆகியோர் இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM) சார்பாக உணவு பொருட்களை ஊனமுற்றோருக்கு வழங்கினர். பின்னர் கருத்தரங்கின் இறுதியில் திரு. டி. ஆரோக்கியராஜ் திட்ட ஒருங்கினைப்பாளர், இர்வோ தொண்டு நிறுவனம் நன்றியுரை வழங்கினார்.

பின்னர் உலக ஊனமுற்றோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பேரணி நடந்தது இப்பேரணியை மாவட்ட காவல்துறை துனை ஆனையர் (DSP) திரு. மா. மோகன் துரைச்சாமி I.P.S அவர்கள் துவக்கி வைத்தார்கள் இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் அருகிலிருந்து துவங்கிய பேரணி இறுதியாக ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் பொதுச்செயளாலர் திரு. எச்.அப்துல் நஜ்முதீன், பரமக்குடி அவர்கள் முடித்து வைக்க இராமநாதபுரம் அரன்மனை அருகே முடிவுக்கு வந்தது. இப்பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட உடல் ஊணமுற்ற ஆன்களும் பென்களும் திரளாக பங்கேற்றனர்.

இராமநாதபுரம் அரன்மனை முன்பாக உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திரு. கே.ஜி சிவலிங்கம் அவர்கள் , தலைவர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் தலைமை தாங்கினார். திரு. வேல்முருகன் செயளாலர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. முருகானந்தம், து.செயளாலர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. ஜலாலுதீன் அவர்கள், ஊனமுற்றோர் இயக்கம், தேவிபட்டினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு. சோலை முருகன் அவர்கள், செயற்குழு உறுப்பினர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் வரவேற்புரை வழங்கினார்.


பொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள், இடமிருந்து திரு. முகவைத்தமிழன், IDMK, திரு குத்புதீன் ஐபக், IDMK, திரு. நாகேஸ்வரன், தமிழ் பாதுகாப்பு பேரவை, திரு. ரவிச்சந்திர ராமவன்னி, இந்திய தேசிய காங்கிரஸ், திரு. அப்துல் நஜ்முதீன் ஆகியோர்


முகவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ரவிச்சந்திர ராமவன்னி அவர்கள், தலைவர், மாவட்ட பஞ்சாயத்து இராமநாதபுரம்,, திரு. டி.ஆர் சந்திரன் அவர்கள், இர்வோ தொண்டு நிறுவனம், திரு. குத்புதீன் ஐபக், தலைவர், இந்திய தேசிய மக்கள் கட்சி, திரு. நாகேஸ்வரன் அவர்கள், மனித நேய காப்பகம், இராமநாதபுரம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

திரு. எம்.பி. தில்லைபாக்கியம் அவர்கள், ஊனமுற்றோர் சங்கம், இராமேஸ்வரம், திரு. அடைக்கலம் அவர்கள், அன்னை ஊனமுற்றோர் சங்கம், பாம்பன், திரு. ஆதித்யா சேக்கிழார் அவர்கள், மாற்று அமைப்பு, இராமநாதபுரம், திரு. முகவைத்தமிழன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சி, திருமதி. எஸ். புனிதா அவர்கள், மாவட்ட அமைப்பாளர், தேசிய கடலோர பென்கள் இயக்கம், இராமநாதபுரம் மபவட்டம், திரு. ஜஹாங்கீர் அவர்கள், மாவட்ட செயளாலர், இந்திய தேசிய மக்கள் கட்சி, திரு. டி. ஆரோக்கியராஜ் அவர்கள், இர்வோ தொண்டு நிறுவனம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டத்தின் ஒருபகுதி


பின்னர் திரு. மா. காமராசர் அவர்கள், அமைப்பாளர், ஊனமுற்றோர் உரிமை இயக்கம் ஏற்புரை வழங்கினார், இறுதியில் கீழக்கண்ட கோரிக்ககைள் அரசுக்கு வைக்கப்பட்டன.

1. மாநிலம் மாவடடத்தில் அனைத்து அரசு மற்றும் பொது இடங்களில் ஊனமுற்றோருக்காக தடையில்லா சூழலை ஏற்ப்படுத்த வேண்டும்.


2. மாவட்ட அளவில் ஊனமுற்றோர் குறைதீர்ப்புநாள் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட வேண்டும்.


3. ஊனமுற்றோர் பாதுகாப்பு சிறப்பு சட்டம் 1995, பிரிவு 43ல் குறிப்பிட்டுள்ளபடி ஊனமுற்ற நபர் குடும்பத் தைலைவராக இருக்கும் நிலையில் அவர்களுக்கு இருப்பிடத்தை உண்டாக்கும் பொருட்டு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.


4. மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு துறைகளின் வாயிலாக நடைமுறையில் உள்ள சுய தொழில் கடனுதவி திட்டங்களான, பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டங்களை வழங்க வேண்டும்.


5. ஆதி திராவிட வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (THADCO) வாயிலாக ஊனமுற்றோருக்கு கடனுதவி வழங்க வேண்டும்.


6. பாரதப் பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் உரிய பிரதிநிதித்துவம் ஊனமுற்றோருக்கு வழங்க வேண்டும்.


7. டவுன் பஞ்சாயத்து மூலம் வழங்கப்படுகின்ற SGSRY உதவிகள் கிடைக்க செய்ய வேண்டும்.


8. மற்றுமுள்ள அனைத்து திட்டங்களிலும் அரசு உத்தரவின்படி உடல் ஊனமுற்றோருக்கு 3 சதவிகிதம் கிடைக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுருத்தப்பட்டன.


நிகழச்சியின் இறுதியில் திரு. பூமி கனேசன் அவர்கள், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் நன்றியுரை வழங்க பொதுக்கூட்டம் இனிதே முடிவுற்றது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் செய்திருந்தது.

ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தில் இணையவோ அல்லது உதவி செய்யவோ விரும்புவோர் தொடர்புக்கு :

பொது தொடர்பாளர் திரு. மா. காமராசர். அலைபேசி எண் : 9842367354 , 9994539480
திரு. எச். அப்துல் நஜ்முதீன் துனைத் தலைவர். அலைபேசி எண் : 9842388428


இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM)

திரு. நாகேஸ்வரன் அவர்கள். அலைபேசி எண் : 9786960608

Tuesday, December 02, 2008

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் சக்திகளை நடமாட விடாதீர்கள்!!

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் மதவெறிச் சக்திகளை நடமாடவிட்டால் ஆபத்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்

சென்னையில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சென்னை, டிச. 2- மத தீவிரவாத சக்திகளான ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்க் கும்பலை நாட்டில் நடமாட விடாதீர்கள். இதில் கட்சி வேற்றுமை இருக்கக் கூடாது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சாமியார் பெயரை மாற்றிக் கொண்டு

சாமியார் என்றாலே போலிதான். இதில் போலிச்சாமியார் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சாமியார் ஆசிரமம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு பெயரை மாற்றிக் கொள் கின்றான். யார் மகந்த் என்று கேட்டால் அமிர்தானந்த். நம்ம ஊர் மஞ்சக்குடி அய்யர் எப்படி தயானந்த சரஸ்வதி ஆனார்கள் பாருங்கள் - அதுமாதிரி - இவர் யார்?

தயானந்த பாண்டே

வடநாட்டுப் பார்ப்பனர். இவருடைய பெயர் என்னவென்று சொன்னால் தயானந்த பாண்டே. பாண்டே என்றாலே வட நாட்டிலே பீகாரிலே பார்ப்பான் என்று அர்த்தம். தயானந்த பாண்டே திடீரென்று மகந்த் அமிர்தானந்த் ஆகிவிட்டார். அவர் எப்படி ஆனார் என்று இன்றைய விடுதலையைப் பார்த்தீர்களேயானால், நம்முடைய கவிஞர் அவர்கள் அருமையாக எழுதியிருக்கின்றார் - ஒற்றைப் பத்தியிலே.

சாமியாரின் வளமான தொழில்

சங்கராச்சாரியாரின் விலை என்ன? எட்டு ஆண்டுகளுக்கு முன்னாலே இந்திய இராணுவத்தில் விமானப் படையில் பணியாற்றியவர். அதன் பிறகு வாரணாசி - காசிக்கு வந்தார். சாமியார் தொழில் வளமான தொழில் என்பதை உணர்ந்தார். சபலம் தட்டியது. இண்டஸ்ட்ரிலேயே முதல் போடாத இண்டஸ்ட்ரி ஒன்று உண்டு என்று சொன்னால் - அது சாமியார் இண்டஸ்ட்ரிதான் (கைதட்டல்).

ஒன்றுமில்லை. காவிபோட வேண்டும், காவிக்கு வழியில்லை என்றால், வடநாடாக இருந்தால் கோவணம், கோவணமும் கிடைக்கவில்லையென்றால் - உச்சக் கட்டம் - நிர்வாண சாமியார் (கைதட்டல்). வாரணாசியில் ஏகப்பட்ட சங்கராச்சாரியார்கள் அங்கு இருக்கின்றார்கள். பெரிய போட்டி. சங்கராச்சாரியார் பதவியை இவர் விலைக்கு வாங்கினார். சங்கராச்சாரி பதவி ரூபாய் 15 லட்சத்திற்கு

வாரணாசியில் உள்ள ஒரு மடத்திற்கு ரூபாய் 15 லட்சத்திற்கு கொடுத்து அந்த மடத்தின் சங்கராச்சாரியார் பதவியை விலைக்கு வாங்கிவிட்டார். சங்கராச்சாரி பதவி என்பது ஏலம் போடுகின்ற பதவி அல்ல. இவரெல்லாம் கடவுளோடு பேசினாரென்றும், தானே கடவுள் என்றும் சொல்லக் கூடிய அளவிற்கு இருக்கக் கூடியவர்கள். இந்த செய்தியை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

2007 ஆம் ஆண்டு மே மாதம் அய்தராபாத்தில் மெக்கா மசூதி குண்டுவெடித்தது. 2007 அக்டோபர் குவாஜா மொய்கவதீன் சிஷ்டி தர்கா அஜ்மீர் குண்டு வெடித்தது. 2008 மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு. ஆறுபேர் சாவு. 90 பேர் படுகாயம். சாத்வி பிரக்யா சிங் தாகூருக்கு மோட்டார் சைக்கிள் சொந்தம்.

மோட்டர் சைக்கிள் Boldஇல்லை என்றால் துப்பு துலங்கியிருக்காது

அந்த மோட்டார் சைக்கிள் இல்லையென்றால் இந்த துப்புவே வெளியே வந்திருக்காது. பிரக்யா சிங்தாகூருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை சுனில் ஜோஷி என்பவருக்கு 2004-ல் கொடுத்தார். அவர் இறந்தபின் கல்சங்கரா என்பவர் அதைப் பயன்படுத்தி குண்டு வைத்தார். இந்து மிலிட்டரி ஸ்கூல் என்று நடத்துகிறார்கள். நாம் யாராவது முஸ்லிம் மிலிட்டரி ஸ்கூல் நடத்தினால் அனுமதிப்பார்களா? அதை விடுவார்களா?

இந்து மிலிட்டரி ஸ்கூல்

ஆனால், இந்து மிலிட்டரி ஸ்கூல் நடத்தி நூற்றுக் கணக்கில் வன்முறையாளர்களை, தீவிரவாதிகளை பயங்கரவாதிகளை, மதவெறியர்களை உருவாக்கி அனுப்புகிறார்கள் என்று சொன்னால், அது சாதாரணமா? அது மட்டுமல்ல, பிரக்யாசிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் சிறீகாந்த் பிரசாத் புரோகித், தயானந்த் பாண்டே (சங்கராச்சாரியார்) உள்பட பத்துப்பேர் கைது செய்யப்பட்டனர். நண்பர்களே, இந்த நேரத்திலே செய்தி முதலில் ஒன்று, இரண்டு என்று வந்தவுடனே இதை சாதாரணமாகக் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தார்கள்.

முதலில் வீரம் பேசியவர்கள்

செய்தி நிறைய வந்தவுடனே என்ன சூழ்நிலை? இனிமேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொன்னவுடனே முதலில் வீரம் பேசினார்கள். தீவிரவாதமா? ஆகா, யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேசினார்கள்.

உண்மைகளை விசாரிக்கும் குழு

இப்பொழுது அடுத்தபடியாக அத்வானி சொல்லுகின்றார் - அதெல்லாம் சங்பரிவார்க்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அடுத்து பி.ஜே.பி.யினுடைய தலைவர் ராஜ்நாத் சிங் சொல்லுகின்றார் - அவர்கள் எல்லாம் நிரபராதிகள். உடனே இதைப்பற்றி காவல்துறை எடுத்து விசாரிக்கிறது.

விசாரிக்கிறபொழுது உண்மைகளை வரவழைக்கிறார்கள். இன்னும் கேட்டால் உண்மையைக் கண்டறியக் கூடிய பரி சோதனைகளை எல்லாம் நடத்துகின்றார்கள். இவ்வளவும் செய்த பிற்பாடு அவர்கள் உண்மையை வரவழைக்க முயன்ற நேரத்திலே பல தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புபடுத்தி வந்து கொண்டிருக்கின்றன. இந்த விசாரணையைத் தடை செய்ய வேண்டும் என்கிற அளவிற்குப் போகிறார்கள்.

அதுமட்டுமல்ல, இதை நிறுத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றார்கள். எந்த அளவுக்கு என்றால், இப்படி நிறைய செய்திகளை சொல்லலாம். ஒன்றே ஒன்றைநான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மிலிட்டரியைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று

பி.ஜே.பி. யினர் சொல்லுகின்றார்கள். நீங்கள் மிலிட்டரியையும், மிலிட்டரி அதிகாரிகளையும் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று நடைமுறையில் என்ன செய்திருக்கின்றார்கள்?. ரிட்டையர் கூறுகிறார்கள் ரிட்டையர் ஆனவன் அங்கு அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கின்றான். துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக் கின்றான். இன்னும் வரிசையாகச் சொல்லவேண்டுமானால், ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஒரு நாவல் படிக்கிற மாதிரி அவ்வளவு சுவையாக இருக்கிறது. பரபரப்போடு அவ்வளவு செய்திகள் இருக்கின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னாலே டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதியிருந்தார்கள். இன்றைக்கு காலையிலே வந்திருக்கின்ற டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூட எழுதியிருக் கின்றார்கள். அதை எடுத்துச் சொல்லுகின்றார்.

Mind your words B.J.P leaders should not shoot off their mouths.

நல்ல அறிவுரையை ஜாடையாக சொல்லுகின்றார். நீ போய் முட்டாள்தனமாக உளறிவிடாதே. நிறைய விஷயம் வர இருக்கிறது. அதனால் நீ ஜாக்கிரதையாக இரு. வாயைப் பொத்திக்கொண்டிரு. நீ வெளியே வந்து சொல்ல ஆரம்பித்தால் எல்லாம்போய் விடும். பல தகவல்கள் இன்னும் வெளியே வர இருக்கின்றன என்று அவர்களுக்கு உதவி பண்ணுவதற்காகத்தான் ரொம்பத் தெளிவாகச் சொன்னார். இங்கே இதைத் தொடர்ந்தால் உள்நாட்டு யுத்தம் வரும் என்று பேசக் கூடிய அளவுக்கு இருந்தால் இப்படி பேசியவர் வெளியே இருக்கலாமா? தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண்டும் (கைதட்டல்).

மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப்போல தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் என்று சொல்வதா? அல்லது இஸ்லாமியர்கள் என்று சொல்லுவதா? அல்லது கிறித்தவர்கள் என்று சொல்லுவதா?

இராணுவத்தைக் கைக்கொள்வார்களாம்?

ஆகவே உள்நாட்டு யுத்தத்தையே நாங்கள் நடத்துவோம். நாங்கள் தீவிரவாதத்தை நடத்துவோம். நாங்கள் இராணு வத்தையே கைக் கொள்வோம். நாங்கள் எல்லாம் வெடிகுண்டுகளுக்கு ஏற்பாடு செய்வோம். அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீதோ, கிறித்தவர்கள் மீதோ, சிறுபான்மையினர்மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ போடுவோம் - நடவடிக்கை எடுக்கக் கூடாது.

கேட்டால் உள்நாட்டு யுத்தம் வரக்கூடிய அளவிற்கு அவர்கள் துணிந்திருக்கின்றார்கள் என்றால் அதை அனுமதிக்கலாமா? அங்கு இருக்கிறதோ - இல்லையோ தமிழ்நாடு அதற்கு வழிகாட்ட வேண்டாமா?

கலைஞர் வகுத்த வியூகம்

நாற்பதும் கலைஞர் அவர்கள் வகுத்த வியூகத்தினாலே நாற்பது தொகுதிகளிலும் வெற்றபெற்ற காரணத்தினால்தான் மத்தியிலே மதவெறி ஆட்சி இல்லாமல் ஆக்கப்பட்டது. அதை நன்றாக நினைவிலே வைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு நாம் எப்படி பதில் சொல்லப்போகிறோம் என்று சொல்லும்பொழுது இந்த உணர்வை முன்னிலைப்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறை மிக முக்கியம். அடுத்த தேர்தல் என்பதை விட அந்த தேர்தல் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கு பாதுகாப்பதற்கு எப்படி இருக்கவேண்டும் என்பதை எல்லோரும் நினைக்கவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரை எதிர்க்க வேண்டும்

ஆகவேதான் இப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக இவைகள் எல்லா செய்திகளையும் எடுத்துச் சொல்லி, மக்கள் மத்தியிலே இதைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை நமக்குண்டு. ஆர்.எஸ்.எஸ்.சை மதவெறியை எதிர்க்கிறோம் என்று சொல்லக் கூடிய அத்துணை கட்சிக்காரர்களுக்கும் உண்டு. காங்கிரஸ் நண்பர்கள் இதை செய்யவேண்டும். கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டும். மற்றவர்களும் இதை செய்யவேண்டும்.

அரசியல் பணி வேறு - நாட்டுப் பணிவேறு

அரசியலிலே எந்த அணிகள் என்பதெல்லாம் இருக்கட்டும். ஆனால், இது நாட்டினுடைய பிணிகள். எனவே இதை சொல்லுகிற நேரத்திலே இதை ஒட்டு மொத்தமாகக் குரல் கொடுத்து எல்லாம் சேர்ந்து குரல் கொடுக்க நீங்கள் வராவிட்டால்கூட, ஒருவேளை இவர்களோடு சேர்ந்தால் அவர்கள் கோபித்துக் கொண்டு அணி சேராமல் போய்விடுவார்களோ என்பதற்காக நீங்கள் நினைக்காவிட்டாலும் பரவாயில்லை.

இந்தச் சக்திகளை நடமாட விடாதீர்கள்!

தயவு செய்து இந்தச் சம்பவங்களை நீங்கள் வெளியே கொண்டு வாருங்கள். மக்கள் மத்தியிலே சொல்லுங்கள். அழுத்தமும் கொடுங்கள். உரிய தண்டனை கொடுங்கள். இவைகளை - இந்தச் சக்திகளை நடமாட விடாதீர்கள். அதன்மூலமாக அமைதிப் பூங்காவாக இருக்கின்ற நாட்டை அமளிக்காடாக ஆக்குவதற்கு உள்நாட்டு யுத்தத்தை நடத்துவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாஜ்பேயிகளும், அத்வானிகளும், இந்த நாட்டிலே இருக்கின்ற பார்ப்பன ஏடுகளும், மற்றவர்களும் வருகிறார்கள் என்று சொன்னால், அதற்கு துளியும் இடம் கொடுக்காத அளவிற்கு தமிழ்நாடு அதற்குத் தயாராகட்டும், தயாராகட்டும் என்று சொல்லி முடிக்கின்றேன்.

- இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

நன்றி : தமிழ் ஓவியா

Monday, December 01, 2008

நாங்களும் இந்துக்களே!! - இந்தியா எங்கள் தாய் நாடு!! இஸ்லாம் எங்கள் வழிபாடு!!

நாங்களும் இந்துக்களே!!
இந்தியா எங்கள் தாய் நாடு!! இஸ்லாம் எங்கள் வழிபாடு!!

முஸ்லிம்களாகிய நாங்கள் யார்?

முஸ்லிம்களாகிய நாங்கள், இந்தியத் திருநாட்டில், இந்திய நாட்டவருக்குப் பிறந்த இந்தியராகிய நாங்கள் இஸ்லாத்தை எங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எம் இந்திய திருநாட்டிற்காக அன்றைய தேசவிடுதலைப் போராட்டத்திலிருந்து நேற்றைய கார்க்கில் யுத்தம் வரை எங்களின் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிர்தியாகம் செய்துள்ளோம். நாங்கள் இந்தியராக இங்குதான் பிறந்தோம் இங்குதான் வாழ்கிறோம் இங்குதான் செத்ததுமடிவோம் என்ற இலட்சியத்தில் இருக்கிறோம். நமது நாடு என்று வரும்போது இங்குள்ள ஒரு பிடி மண்ணையும் எவருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

முஸ்லிம்களாகிய எங்களைப் பார்த்து நீ இஸ்லாமியனா? அல்லது இந்தியனா? என்று வினவுவது உனக்கு அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா? என்று கேட்பதற்குச் சமம். அடிப்படையில் இப்படி கேட்பதே முரண்பாடானது. ஏனெனில் முஸ்லிமா என்ற கேள்வி ஒருவரின் மதநம்பிக்கையை பற்றி வினவுவது. இந்தியனா என்ற இரண்டாவது கேள்வி அவரின் தேசத்தைக்குறித்து வினவுவது. எனவே 'இந்திய முஸ்லீம்களா' அல்லது 'முஸ்லிம் இந்தியர்களா என்ற கேள்வியே அர்தமற்றது.

இந்தக் கேள்விக்கு ஒருபடி மேலாக பதில் சொல்கிறோம். அது, பூலோக விதியின் படி இந்துக்கள் என்னும் சொல் 'இந்துச் சமவெளியில் வாழும் மக்கள்' என்பதைக் குறிக்கும். படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை கடவுளாகவும், நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் இந்துச் சமவெளியில் வாழுகின்ற காரணத்தால் பூலோக விதியின்படி மட்டும் நாங்களும் இந்துக்களே என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம்.

ஆனாலும் நம்நாட்டு இராணுவ ரகசியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பார்ப்பன கும்பலால் வகுக்கப்பட்ட இந்துமத தத்துவங்கள் பகுத்தறிவிற்கும், உண்மைக்கும், நீதிக்கும், தர்மத்திற்கும் எதிராக
இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

கடந்த (10-08-2007) தினமணியில் 'முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது' என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது அதற்கு "இஸ்லாமிய இணையப் பேரவை" தக்க பதில் அளித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது அந்த கட்டுரையில் இருந்து.....முழு கட்டுரையையும் வாசிக்க இங்கு சொடுக்கவும்.

THANKS : WWW.IIPONLINE.ORG