Showing posts with label இந்து மதவெறி. Show all posts
Showing posts with label இந்து மதவெறி. Show all posts

Sunday, December 28, 2008

அண்ணா தி.மு.கழகத்தின் அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது.

அ.தி.மு.க. இருக்கும் வரை பி.ஜே.பி.யும்.,இந்துத்துவா அமைப்புகளும் தேவையில்லை.
01.01.09 தொடர்கள்

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பி.ஜே.பி. பெருந்தன்மையோடு அறிவித்திருக்கிறது. அந்தக் கட்சி போட்டியிட்டு ஆயிரம் வாக்குகள் சிதறினாலும் அது அண்ணா தி.மு. கழகத்திற்கு நட்டம் என்பது அதற்கு நன்றாகவே தெரியும்.

பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் அருண்ஜேட்லி இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆணித்தரமான வாதத்தை முன்வைத்தார். அ.தி.மு.க.வோடு நல்லுறவு உண்டு. ஆனாலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் வேறு சில கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்து தமது பலத்தைப் பெருக்கிக் கொண்டு டெல்லிக்கு அ.தி.மு.க. வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


ஒருமுறை வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசை அ.தி.மு.க. கவிழ்த்திருக்கிறது. ஆனால், அதனை சொந்த வீட்டுப் பிள்ளை செய்த சுட்டித்தனம் என்றே எடுத்துக் கொண்டது. அ.தி.மு.க. மீது கொண்ட பாசம் எப்போதும் அதற்குப் பட்டுப் போனதில்லை. சோதனையான நேரங்களில் பி.ஜே.பி.க்குக் கரம் கொடுக்க அ.தி.மு.க.வும் தவறியதில்லை. கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில்கூட பி.ஜே.பி. வேட்பாளருக்குத்தான் அ.தி.மு.க. வாக்களித்தது.

எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி. தேவையில்லைதான். அதனால் அந்தக் கட்சி இங்கே காலை ஊன்ற முடியாமல் கண் கலங்கிக் கொண்டிருக்கிறது.

அமரர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. இன்று இல்லை. அதன் உருவமும் சிதைந்துவிட்டது. கொள்கை கோட்பாடுகளும் பறந்து போய்விட்டன. அண்மையில் ஒரிசாவில் ஒரு சாமியாரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். அதனை அவர்களே ஒப்புக் கொண்டனர். பல தலைமுறைகளாக கிறிஸ்துவர்களாக இருக்கும் ஆதிவாசிகளை அந்த சாமியார் இந்துக்களாக ஞானஸ்நானம் செய்ய முயன்றார். சாமியாரின் கொலையை அ.தி.மு.க. தலைமை வன்மையாகக் கண்டித்தது. நியாயம்.

ஆனால், அதனைத் தொடர்ந்து தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஏசுவின் திருத்தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர் வனாந்தரங்களில் தொண்டு செய்ய வந்த சகோதரிகள் கற்பழிக்கப்பட்டனர். மாதக்கணக்கில் சிறுபான்மையின மக்கள் சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள்.

அதனை அ.தி.மு.க. இன்றுவரை கண்டிக்கவில்லை. எனவே, தமிழகத்தைப் பொறுத்த வரையில் அந்தக் கழகம் இருக்கும் வரை பி.ஜே.பி.யும் தேவையில்லை. இந்துத்துவா அமைப்புகளும் தேவையில்லை.

ஏன்? குஜராத்தில் இரண்டாயிரம் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்றைக்கும் அங்கே அந்தப் படுகொலைப் படலங்கள் தொடர்கின்றன.

நரேந்திர மோடியை உலகம் மனித இனப் படுகொலைக் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தி இருக்கிறது.

அதற்காக வாதாடியதில் இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

ஆனால், அடுத்து அதே நரேந்திரமோடிக்கு முடிசூட்டு விழா நடந்தபோது அந்த வைபவத்தில் பங்குகொள்ள தனி விமானத்தில் ஆமதாபாத்திற்குப் பறந்து சென்றவர் செல்வி ஜெயலலிதா. அதனை நாம் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. அதுதான் செல்வி ஜெயலலிதாவின் இயல்பு. அ.தி.மு.க.வின் இன்றைய நடைமுறைக் கோட்பாடு.

தன்னை இந்து சமயத்தின் ஏந்தல் என்பதனை செயல்படுத்திக் காட்டுவதற்கு அவர் என்றும் தயங்கியதில்லை.

மூன்று மாதங்களுக்கு முன்னால் அதே நரேந்திரமோடி சென்னை வந்தார். வேறு விழாவிற்கு வந்த அவரை தமது இல்லத்திற்கு அழைத்தார். 64 வகைப் பதார்த்தங்களுடன் விருந்து வைத்தார். தமிழகத்தின் விருந்தோம்பல் நரேந்திரமோடிக்குத் தெரியவேண்டாமா?

செல்வி ஜெயலலிதா தங்கள் அணிக்கு வந்துவிட்டால், அவரை தங்கள் கோட்பாடுகளுக்கு ஏற்ப சரி செய்து கொள்வோம் என்று ஒரு தலைவர் கூறினார். அதில் ஒரு திருத்தம். இவர்களுடைய உதவி கோரி செல்வி ஜெயலலிதா தூதுவிடவும் இல்லை. மனுப்போடவும் இல்லை.
இவர்கள்தான் அ.தி.மு.க. அரசியல் உறவு கோரி சுவர் ஏறிக் குதித்தார்கள். ஒட்டகத்தின் முதுகைச் சீர்செய்து மான்குட்டி ஆக்கிவிடும் அந்த தலைவரின் கரடி வித்தையைக் காண நாமும் தயாராக இருக்க வேண்டும்.

இவர்கள் குலுக்கப்போகும் கரங்கள் நஞ்சு நிறைந்த முட்புதர்கள் என்று இந்த வாரம் கிறிஸ்துவ மக்களின் குரலான `நம் வாழ்வும்', இளைய இஸ்லாமிய சமுதாயத்தின் சிந்தனையான `மக்கள் உரிமை'யும் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

சிறுபான்மையின மக்கள் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனை நாம் விமர்சிக்க விரும்பவில்லை.


ஆனால், அசைபோட்டால் நமது இதயக் களஞ்சியத்திலிருந்து பசுமையான பல நினைவுகள் துள்ளிக்குதித்து வெளிவருகின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் வெற்றி வீரராக அத்வானி பவனி வந்தார். பல மாநிலங்கள் அந்த பவனிக்குத் தடைவிதித்தன. ஆனால் அன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் இங்கே வெற்றி உலா வந்தார்.

அடுத்து தேசிய ஒருமைப்பாட்டுக் கழகக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா கலந்து கொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அவர் நியாயப்படுத்திப் பேசினார். சிறுபான்மையின மக்கள் கோரும் உரிமைகள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது என்றார். அந்தக் கூட்டத்தில் அத்வானியும் கலந்து கொண்டார். `பாபர் மசூதி இடிப்பிற்கு ஆதரவாக எங்களால் கூட இப்படி வலிமையாக வாதாட முடியாது' என்று, செல்வி ஜெயலலிதாவின் துணிச்சலைப் பாராட்டினார்.

பின்னர் ராமர் கோயிலை எங்கே கட்டுவது என்ற விவாதம் தொடங்கியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்தான் ராமர் பிறந்த இடம். எனவே அங்கே கட்டாமல் இத்தாலியிலா கட்ட முடியும் என்று செல்வி ஜெயலலிதா வினா எழுப்பினார். ஆயிரம் யானை பலம் பெற்றது போல் எழுந்த இந்துத்துவா சக்திகள் பூரித்துப் போயின.

இப்படி இந்து சமய சக்திகளுக்கு மட்டுமல்ல; பி.ஜே.பி.க்கும் அவர்தான் அரசியல் வழிகாட்டியாக வலம் வருகிறார். காலதேவனுக்கு நரைகள் பூத்திருக்கலாம். ஆனால் செல்வி ஜெயலலிதாவின் பெரும்பான்மை வாதங்கள் இளமையானவை. பசுமையானவை. இந்த வாதங்களை அவர் துணிச்சலோடுதான் முன்வைக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கும் மன உறுதியையும் பெற்றிருக்கிறார்.

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கழகம் பெறும் வெற்றி இந்துத்துவா சித்தாந்தத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கூட கருதலாம்.

அண்ணா தி.மு.கழகத்தின் அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது.

தங்கள் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யைவிட அந்த இயக்கம் அ.தி.மு.க.வை அதிகம் நேசிக்கிறது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டார். அப்போது நடந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளில் உலகம் பார்த்தது. அதிர்ந்து போனது.

அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வாஜ்பாய் அரசு தயாராகி வருவதாகச் செய்திகள் வந்தன. வாஜ்பாய் கண்டித்தாலும் அத்வானி கண்டிக்கவில்லை.

`எந்தக் காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசைத் தொடாதே' என்று நாக்பூரிலிருந்து பகிரங்கமாக ஒரு குரல் எழுந்தது. அந்த எச்சரிக்கையை விடுத்தது ஆர்.எஸ்.எஸ். தலைமைதான்.

ஆகவே, திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.விற்குக் குறுக்கே நிற்பதில்லை என்று பி.ஜே.பி. எடுத்துள்ள முடிவு அதன் கண்ணோட்டத்தில் சரியானதுதான்.

எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி.க்கு வேலையில்லைதான். THANKS :SOLAI IN KUMUDAM REPORTER

Thursday, November 20, 2008

இந்துத்வ வெறிக் கட்சிகள் அலறுகின்றன."சங்கராச்சாரியாரின் விலை என்ன? "

இந்துத்வ வெறி பயங்கரவாத செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன.

இந்துத்வ பயங்கரவாதம்:சம்ஜவுதா விரைவுத் தொடர் வண்டியில் குண்டு வெடிப்பு, அய்தராபாத் மசூதி, அஜ்மீர் தர்கா சதிகளிலும் புரோகித்துக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு.

மும்பை, நவ. 20- காந்தியாரைக் கொன்ற இந்துப் பயங்கரவாதம் அதன் பிறகு நடத்தியுள்ள சதிச் செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன. அபிநவ் பாரத் எனும் பயங்கரவாத அமைப்பு எல்லா சதிச் செயல்களையும் நடத்தியுள்ளது என்பது வெளிவந்துள்ளது.

பான்டே சங்கராச்சார்யா என்று கூறிக் கொள்ளும் நபருக்கு ராணுவ முகாம்களுக்கு வந்து போக அனுமதி அட்டை கொடுத்ததும், கைத்துப்பாக்கி ஒன்றை புரோகித் கொடுத்ததும் அம்பலமாகியுள்ளது.

பான்டே அபிநவ் பாரத் அமைப்பின் ஊதியம் பெறும் நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.


அபிநவ் பாரத் எனும் இந்துப் பயங்கரவாத அமைப்புதான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ், ரயிலில் 68 பேர் கொல்லப் பட்டதற்கும், அய்தராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சதிச் செயல்களுக்கும் காரணம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பயங்கரவாத சதிச் செயல்களில் ஈடுபட்ட சுனில் ஜோஷி என்பவன் 2007 இல் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான். இந்தச் செய்தியை புரோகித்திடம் தொலைபேசியில் தெரிவித்தபோது, சம் ஜவுதா ரயில் குண்டு வெடிப்புக்குக் காரணமான ஜோஷி தியாகியாகி விட்டார் என்று புரோகித் குறிப்பிட்டார் என்பதை வாக்குமூலத்தில் ஒரு சாட்சி தெரிவித்துள்ளார்.


இத்தகயை சதிச் செயல்களை குஜராத்தைச் சேர்ந்த ஜதீன் சாட்டர்ஜி என்பவர்தான் செய்துள்ளார். இவரை சாமி அசிமானந்த் என்கிறார்கள். வனவாசி கல்யாண் ஆசிரமம் எனும் சர்ச்சைக்குரிய அமைப்பை நடத்தி பழங்குடியினரிடையில் கலவரம் செய்து வரும் அமைப்பை இவர் நடத்தி வருகிறார். இவரையும் கல்சங் ராம் என்பாரையும் இன்னும் கைது செய்ய முடியவில்லை.


சாத்வி பிரக்யா சிங் தனது மோட்டார் சைக்கிளை ஜோஷிக் குக் கொடுத்திருந்ததும் அவர் கொல்லப்பட்ட பின்னர் அதனை கல்சங்ராம் பயன்படுத்தி வெடி குண்டு வைத்து மாலேகாவ்னில் வெடிக்கச் செய்ததும் ஏற்கெனவே வெளிவந்துள்ளது.

மத்தியப் பிரதேசக் காவல்துறையினர் அபிநவ் பாரத் அமைப்பின் சுனில் ஜோஷி சதிச் செயல்களில் ஈடுபட்டதை 2002 இல் கண்டு பிடித்தது. அப்போதைய காங்கிரசு முதல் அமைச்சர் திக் விஜய் சிங் இது பற்றி அறிவிப்பு செய்து பஜ்ரங்தள் உள்பட இந்துத்வ அமைப்புகள் ஈடுபட்டது குறித்து ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார்.

ஆனால் பிறகு முதலமைச்சராக வந்த உமாபாரதி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று 2003 இல் உத்தரவிட்டு விட்டார்.
இந்துத்வ வெறிக் கட்சிகள் இந்துப் பயங்கரவாதிகளைக் காப்பாற்றி ஆதரவு அளித்து வந்துள்ளனர். இப்போது மகாராட்டிர அரசு நடவடிக்கை எடுக்கும்போது அலறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

இந்துத்வ பயங்கரவாதம்:கைதான புரோகித் மீது மேலும் இரு வழக்குகள்
ஆர்.டி.எக்ஸ் கடத்தியது பற்றி ராணுவ அதிகாரி சாட்சி - பான்டே சங்கராச்சார்யாவுக்கு மெய் அறியும் சோதனை

நாசிக், நவ. 20- மாலேகான் குண்டு வெடிப்புச் சதி தொடர் பாகக் கைது செய்யப்பட்டு நவம்பர் 29 வரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிடப்பட்ட ராணுவ அதிகாரி புரோகித் மீண்டும் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொய் ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்து இரண்டு பேர்களுக்கு துப்பாக்கி உரிமங்களை இராணுவ ஒதுக்கீட்டில் வாங்கிக் கொடுத்த வழக்கு தொடர்பாக இந்த ஆணை.


போர்ப்படைக்குச் சொந்தமான ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தைத் திருடி குண்டு வெடிப்புச் சதிச் செயல்களுக்கு புரோகித் பயன்படுத்தியது தொடர்பாக, மற்றொரு போர்ப்படை அதிகாரி கேப்டன் நிதின் ஜோஷி வாக்கு மூலம் கொடுத்து உள்ளார். மாஜிஸ்டிரேட் முன்னிலையில் தரப்பட்ட இந்த வாக்குமூலம் வழக்கில் மிக முக்கிய சாட்சிய மாகக் கருதப்படும்.

பல கூட்டங்களை ஏற்பாடு செய்து அவற்றில் பேசி சதிகாரர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் புரோகித் என்பது இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சங்கராச்சார்யா

பான்டே சங்கராச்சார்யா, காவல் துறைப் பாதுகாப்பில் எடுக்கப்பட்டு மெய் அறியும் நார்கோ அனலைசிஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரே கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படை யில் கேள்விகள் தயாரிக்கப் பட்டு கேட்கப்பட்டன. இரண்டாம் முறையாகவும் இச்சோதனை நடத்தப்படுமா என்பது இனிமேல் தெரியும்.

அத்வானி பேச்சு
இந்நிலையில் பிரதமர் கனவில் பவனி வரும் அத்வானி, பெண் சாமியார் பிரக்யாவுக்குப் பரிந்து பேசியுள்ளார். அவர் மீதான குற்றச்சாற்றுகளைக் காவல்துறை விசாரணை செய்யக் கூடாது என் றும் நீதி விசாரணை வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

1992 இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பற்றிய நீதி விசாரணை 16 ஆண்டுகளாக முடியாமல் இழுத்தடித்துக் கொண்டு வரப்படுகிறது. அதில் குற்றம் சாற்றப் பெற்ற அத்வானி - வழக்கைச் சந்திக்காமலே வலம் வந்து கொண்டிருக்கிறார். குற்றவாளிகள் தப்பிக்கும் மார்க்கம் நீதி விசாரணையில் இருப்ப தால் இதைக் கேட்கிறார் போலும்!


இந்துத்வ பயங்கரவாதம்

அபிநவ் பாரத் தேசிய ஒருங்கிணைப்பாளர்சுதாகர் சதுர்வேதி கைது செய்யப்படுவார்

மும்பை, நவ.20- மாலேகாவ்ன் குண்டு வெடிப்புச் சதியில் தாம் ஈடுபட்டதாக ஒத்துக் கொண்டுள்ள சுதாகர் சதுர்வேதி எனும் பார்ப்பனர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று மும்பை, பயங்கரவாதத் தடுப்புக் காவல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆள் அபிநவ் பாரத் அமைப்பின் கூட்டங்களை தேவ்லாலி, இந்தூர், குஜராத், பஞ்ச்சமதி, ஜபல்பூர், ஃபரிதாபாத், அரியானா முதலிய இடங்களில் ஏற்பாடு செய்து பயங்கரவாதத்தைத் தூண்டி விட்டதை ஒத்துக் கொண்டு விட்டார்.

லெப்டினன்ட் கர்னல் புரோகித் சதியைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்துச் செய்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்.சின் அறிவுறுத் தலின் பேரில் பா.ஜ. கட்சியின் ராஜ்நாத் சிங்கும் அத்வானியும் புரோகித்துக்கு ஆதரவாகப் பேசியதைக் கேட்டதும் புரோ கித்தன் பங்குக்குத் தன் உயிருக்கு ஆபத்து வந்தால் மராட்டிய காவல்துறைதான் அதற்குக் காரணம் என்று கூற ஆரம்பித்து விட்டார்.


"சங்கராச்சாரியாரின் விலை என்ன? "

கடைகளில் கத்தரிக்காய், புடலங்காய், வெங்காயம் வாங்குவதுபோல சங்கராச் சாரி பதவியையும் விலைக்கு வாங்கலாம் என்று சொன்னால், சொல்கின்றவர்களைப் பார்த்து நகைப்பார்கள்தான்.

உண்மையைத் தெரிந்து கொண்டால், முதலில் நகைத் தற்காக வெட்கப்படவே செய்வார்கள்.

மாலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்பவர் யார் தெரியுமா?

எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய இராணுவத்தில் விமானப் படையில் பணி யாற்றியவர். அதன்பின் வாரணாசிக்கு (காசிக்கு) வந்தார் - சுற்றுமுற்றும் பார்த்தார். சாமியார் தொழில் நல்ல வளமான தொழில் என்பதை உணர்ந்தார். சபலம் தட்டியது.

என்ன செய்தார் தெரியுமா? வாரணாசியில் உள்ள ஒரு மடத்துக்கு ரூபாய் 15 லட்சம் கொடுத்து அந்த மடத்தின் சங்கராச்சாரியார் பதவியை விலைக்கு வாங்கி விட்டாராம்!

சங்கராச்சாரி பதவி என்றால், ஏதோ விலை மதிக்கப்பட முடியாத பெரும் பதவியல்ல; விலைக்கு வாங்கக் கூடிய கத்திரிக்காய் போன்றதுதான் என்பது இதன் மூலம் விளங்கிடவில்லையா?

இந்தச் சங்கராச்சாரி என்ன செய்திருக்கிறார் 700 பேர்களுக்கு வன்முறைப் பயிற்சி கொடுத்து களத்தில் இறக்கிவிட்டுள்ளார். மாலே கான் கலவரம் மற்றும் பல்வேறு மோதல்களுக்கு இவர் ஒரு முக்கிய சூத்திரதாரி என்று தெரிகிறது.

லோகக் குரு இப்பொழுது கம்பியை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
ஏற்கெனவே காஞ்சி சங்கராச்சாரிகள் இருவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தவர்கள்தான்; இப்பொழுதுகூட பிணையில் தான் வெளியில் திரிகின்றனர்.

பட்டப்பகலில் பச்சைத் தமிழர் காமராசரைப் படு கொலை செய்ய முயன்ற கூட்டத்தில்கூட சங்கராச்சாரிகள் உண்டு (பூரி சங்கராச்சாரி தான்).
முற்றும் துறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால், பூரி சங்கராச்சாரிக்குக் குடும்பமே உண்டு! காஞ்சி சங்கராச்சாரிக்குக் குடும்பம் இல்லையென்றாலும், காதலிகள் உண்டு. இவர்கள் லோகக் குருக்களாம்! வெட்கக்கேடு!- மயிலாடன்.THANKS : VIDUTHALAI.COM

Thursday, November 13, 2008

பயங்கரவாத யாகங்கள். வெடிகுண்டுகளை இந்தியா முழுமையும் நிகழ்த்தும் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார பயங்கரவாத அமைப்புகள்.

16.11.08 தொடர்கள்

ஸ்லாமியர்களெல்லாம் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் பயங்கரவாதிகளெல்லாம் இஸ்லாமியர்கள் தான் என்று இத்தனை காலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யும் உரத்த குரல் எழுப்பி வந்தன.

நடைபெற்ற நாசவேலைகளுக்கெல்லாம் அவர்கள்தான் அச்சாணி என்ற வாதம் நமது சிந்தனைக்கு வேலை கொடுத்தது.

சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவிற்கு சற்று முன்னர் டெல்லியில் முகூர்த்தக்கால் நடுவார்கள். `என்கவுன்ட்டர்' என்ற நேரடி மோதலில் இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற சேதி வரும். அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று காஷ்மீர் கடந்து வந்தவர்கள் என்ற தகவலும் சொல்வார்கள். அதுதான் முகூர்த்தக்கால். வாஜ்பாய் அரசு அமைந்தபோது அரங்கேறிய இந்த நேரடி மோதல் நாடகங்கள் தொடருகின்றன.

அதற்காக நாம் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புக்களைக் குறைவாக மதிப்பிடவில்லை. அந்த அமைப்புகள் செயல்படுகின்றன, அந்த அமைப்புகளின் பயிற்சித் தளம் பாகிஸ்தானாகவும், ஆப்கனிஸ்தானாகவும் இருக்கின்றன. அதன் செயல்பாடுகளை அறிவதிலும் அடக்குவதிலும் நமது ராணுவமும் உளவுத் துறைகளும் அரும் பெரும் சேவைகள் செய்கின்றன.

அதே சமயத்தில் தீவிரவாதிகளெல்லாம் இஸ்லாமியர்கள்தான் என்ற பி.ஜே.பி.யின் வாதத்தை அதன் அமைப்புகளே சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கின்றன. தண்ணீரில் பிறந்த உப்பு தண்ணீரில் கரைவது தானே இயல்பு?

சத்வி பிரக்யாசிங் தாகூர் என்ற நாமகரணம் கொண்ட ஓர் அம்மணி. அவர் இப்போதெல்லாம் காவி உடைதான் அணிகிறார். இந்துத்வா சாமியாரிணி. அவரையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நால்வரையும் மராட்டிய பயங்கரவாத எதிர்ப்புக் காவல்படை கைது செய்திருக்கிறது. அந்த அம்மணியின் பாழடைந்த மனக் குகை வெடிகுண்டுகளின் சேமிப்புக் கிடங்கு என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த சாமியார் அம்மணியின் நரம்பு மண்டலங்களே பயங்கரவாத நாற்றங்கால்கள் என்றும் சொல்கிறார்கள்.

கடந்த செப்டம்பர் முதல் வாரம் மராட்டிய நகரமான மலேகானிலும் குஜராத் மொடாசாவிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்தன. வழக்கம் போல் அதற்கும் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள்தான் காரணம் என்று சொன்னார்கள். உண்மையில் அந்த நகரங்களை நெருப்பில் நீராட்டியது காவி அம்மணியும் அவரோடு சேர்ந்த சங் பரிவாரங்களும்தான். குண்டு வெடிப்புக்கள் இஸ்லாமிய குடியிருப்புக்களில் நடந்தன.

இது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர், வெடிகுண்டுகள் செய்வது எப்படி - வெடிக்கச் செய்வது எப்படி என்று இவர்களுக்கும் இன்னபிற சங்பரிவாரங்களுக்கும் பயிற்சி அளித்தவர் என்று புகார் எழுந்தது. விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

இப்போது நாம் தெரிந்து கொள்வது என்ன? பயங்கரவாதம் - தீவிரவாதம் என்பதெல்லாம் ஒரு மதத்தின் பிறப்புரிமை அல்ல. அதற்கு மதமே கிடையாது என்பதுதான். இத்தனை ஆண்டுகளாக தீவிரவாதம் என்றால் இஸ்லாம் - இஸ்லாமியர்களின் ரகசிய ஆயுதம் என்று சொல்லி வந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்புகள் இப்போது என்ன சொல்கின்றன?

தீவிரவாதி என்று ஓர் இஸ்லாமியப் பெண் கைது செய்யப்பட்டதில்லை. ஆனால், தீவிரவாதி என்றும் வெடிகுண்டு விளையாட்டில் மேதை என்றும் சங் பரிவார் அம்மணி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் காலப் புயலாம். ஆகவே அவரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் சிவசேனா பால்தாக்கரே.

அந்த அம்மணி கல்லூரிப் பருவத்தில் பி.ஜே.பி. மாணவர் அணியின் முன்னணிச் செயலாளராகச் செயல்பட்டவர். அம்மணி ஒரு தீவிரவாதி என்பதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மையங்களில் நடந்த குண்டுவெடிப்புக்களுக்கும் அவர்தான் சூத்திரதாரி என்றும் தகவல் வெளியானது. பி.ஜே.பி. பதற்றம் கொண்டது. அவசர அவசரமாக `அம்மணி யாரோ தெரியாது' என்று அறிக்கை வெளியிட்டது.

அம்மணியின் பாதார விந்தங்களில் இன்றைய பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங் அமர்ந்திருக்கும் அரிய புகைப்படங்கள் வெளியாகின. தனிப்பட்ட முறையில் யாரோ வெடிகுண்டு விளையாட்டு விளையாடியதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று இப்போது தப்பிக்கப் பார்க்கிறார்கள். அதே சமயத்தில், அந்த அம்மணியையும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களையும் ஜாமீனில் எடுக்க முனைகிறார்கள்.

டெல்லியில் நடந்த ஒரு குண்டு வெடிப்பு தொடர்பாக இரு இஸ்லாமிய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அப்பாவிகள் என்று ஜமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், அவர்களை ஜாமீனில் எடுக்க முயன்றார். `ஐயோ! இது என்ன அநியாயம்? பயங்கரவாதத்திற்குத் துணைவேந்தரே ஆதரவா' என்று பி.ஜே.பி. கண்டனக் கணைகளை ஏவியது. ஆனால் இன்றைக்கு பயங்கரவாத அம்மணியையும் அவரது ஆஸ்.எஸ்.எஸ். சீடர்களையும் காக்க சட்ட வல்லுனர்களின் உதவியை நாடுகிறது.

எந்த வடிவில் எந்த மதத்தின் பின்னணியில் பயங்கரவாதம் தலை தூக்கினாலும் அதனை மனித சமுதாயம் கண்டிக்க வேண்டும். அப்பாவி மக்களின் உயிரோடும் உடைமைகளோடும் விளையாடும் பயங்கரவாதிகள் மனிதநேயத்திற்கு மரண சாசனம் எழுதுபவர்கள்.

ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதம் என்றால் நெருப்பு மழைபொழியும். இந்துத்வா பயங்கரவாதம் என்றால் மலர்மாரி பொழியும் என்று சங்பரிவாரங்கள் வாதாட வருகின்றன.

கடந்த பல ஆண்டுகளாகவே மராட்டிய மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில், மசூதிகளில் குண்டுகள் வெடித்திருக்கினறன. இந்தக் கோரத் திருவிளையாடல்களுக்கும் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கும் உறுதியாகத் தொடர்பிருக்க வழியில்லை. எனவே, உண்மையான சமூக விரோதிகளைக் கண்டுபிடியுங்கள் என்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள் அறிவுறுத்தின.

ஆனால், அந்த எலிகளைப் பிடிக்க மராட்டிய அரசுப் பூனை மறுத்துவிட்டது. என்றாலும் அந்த இருட்டறை சுந்தரிகள் மீது எப்படியோ வெளிச்சம் பாய்ந்துவிட்டது. எனவே, கைது செய்திருக்கிறார்கள். இனி சட்டம் சரியாகச் செயல்படவேண்டும்.

மராட்டிய மலேகானிலும் குஜராத் மொடாசாவிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இஸ்லாமிய குடியிருப்புக்களில் குண்டுகள் வெடித்தன. இதிலிருந்து என்ன தெரிகிறது?

வெடிகுண்டு விளையாட்டுக்களை இந்தியா முழுமையும் நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார பயங்கரவாத அமைப்புகள் தயாராகிவிட்டன என்று அர்த்தம்.

வளர்க்கப்படும் வகுப்புவாத உணர்வுகள்- செயல்கள் அபாய எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கே பயங்கரவாதம் கோரமுகத்தோடு எழுகின்றது. அதற்கு நியாயம் கற்பிப்பவர்களும் ஆதரவு தருபவர்களும் பயங்கரவாதிகளைவிட மோசமானவர்கள்தான். அவர்கள் தேச விரோதிகள். இந்த வாதம் இருதரப்பினருக்கும் பொருந்தும்.

படிக்க:>> ஆர்.எஸ்.எஸ் ஸின் கொடூர முகம்‍ -.விடியோ --.வெளிச்சமாகும் பல திடுக்கிடும் உண்மைகள். விடியோ--.மெக்கா, மதீனாவை தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.-


விடியோ. குண்டு தயாரிக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலி

Sunday, November 09, 2008

கொலைகார, கிரிமினல் சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். வெக்கமாயிருக்கு.

தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்
தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்.

கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் இந்து தீவிரவாதம்.

இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் குறித்து மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் அந்தப் பெருமைக்குரியவர், சாத்வி என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸின் பெண்கள் அமைப்பான துர்கா வாகினியில் பயிற்சி பெற்ற பெண் சாமியார்.

நாட்டின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து சேரும்முன்பே, வடநாட்டு இந்துத் தீவிரவாதிகளான அத்வானி, ராஜ்நாத் சிங், மோடிகள் முதல் தமிழக இராம கோபாலன் வரை "இஸ்லாமிய தீவிரவாதம்" என்று கூச்சல் போட்டு, ஒட்டுமொத்த மக்களையும் விசாரணை அமைப்பையும் திசை திருப்பிக் கொண்டிருந்தனர். அவர்களது தலையில் பேரிடியாக இறங்கியதுதான் மாலேகோன் குண்டு வெடிப்பு தொடர் விசாரணைகள்.

எப்பொழுதும்போல் இந்தக் குண்டுவெடிப்பையும் "சிமி, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புகள்தான் நடத்தின" என சங் பரிவாரத்தின் சுவடு பிடித்து ஆரம்பத்தில் அறிவித்தது. காவல்துறையின் ஐயப் பார்வையும் சிமியின் மீதே ஆரம்பத்தில் இருந்தது. சிலரைக் கைது செய்து விசாரணையை நடத்தி வந்த மகாராஷ்டிரா காவல்துறைக்குக் குண்டுவெடிக்கப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரைத் தேடிச் சென்ற வேளையிலேயே உண்மையை அறிந்து கொள்ள முடிந்தது.

ஒருவேளை மாலேகோன் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இரு சக்கர வாகனத்தின் எஞ்சின் சேஸ் எண்கள் கண்டு பிடிக்கப் படாமல் போயிருப்பின், இப்பொழுதும் இந்தக் குண்டுவெடிப்புப் பழியும் சிமியின் தலைமீதே விழுந்திருக்கும்.

"உண்மை நீண்டநாள் உறங்குவதில்லை" என்பது போல், சங் பரிவாரத்தால் நீண்ட காலமாக மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுவெடிப்புகளின் உறைவிடங்களைக் குறித்த உண்மை, எரிமலை போன்று வெடித்துச் சிதறி வெளியாகி உள்ளது.

உலக வாழ்வைத் துறந்து இறையடியைத் தேடி பிரயாணம் செய்பவர்களாக நாட்டு மக்களால் கருதப் பட்ட சாமியார்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய அமைப்பான இராணுவமும் கூட்டுக் களவாணித்தனம் செய்து சங் பரிவாரத்தின் தேச விரோத நடவடிக்கைகளுக்குத் தம்மை அடமானம் வைத்து விட்டன என்பதை மாலேகோன் குண்டுவெடிப்புத் தொடர் விசாரணைகளில் கைதாகும் இராணுவ அதிகாரிகளின் மூலம் தெளிவாகி வருகின்றன.

சாமியார்கள் என்போர் கொலைகாரர்கள், கிரிமினல்கள், பெண் பித்தர்கள் என்பதைப் பலமுறை நாடு அறிந்திருந்தாலும் முக்கியமாக பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் இந்துத் தீவிரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசத்தின் சாதுக்கள் ஈடுபட்டு, தெருப்பொறுக்கிகளை விடவும் கேவலமாக நடந்து கொண்டதை நாடு கண்ட பொழுதும் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி கைது செய்யப்பட்டு தொடர் விசாரணையில் பல பெண்களை மானபங்கப்படுத்திய தகவல் வெளியான பொழுதும் சாமியார் வேசத்தைப் போட்டுக் கொண்டு உலா வருபவர்கள் கிரிமினல்கள் என்பதை நாடு கண்டு கொண்டது.

ஆனால், இந்து தீவிரவாத அமைப்புகளோடு இணைந்து நமது இராணுவமே நாட்டுக்கு எதிராகத் தீவிரவாதத்திலும் ஈடுபடுகிறது என்பதை மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள சாத்வியின் விஷயத்திலிருந்து அறிந்து கொண்ட பொழுது நாடு அதிர்ச்சியில் உறைந்து விட்டது!.

குண்டு வெடிப்பை நிகழ்த்தியது, குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில் அரபி ஸ்டிக்கர்களை ஒட்டியது, அதை சிமியின் (பழைய) அலுவலகத்துக்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தது, "முஸ்லிம் தீவிரவாதி(!)களைக் கைது செய்" என்று கூச்சல் போட்டுக் காவல்துறையைத் திசை திருப்பியது, காவல்துறை சிமியின் முன்னாள் உறுப்பினர்கள் 20 பேரைக் கைது செய்தது வரை எல்லாம் தங்கள் திட்டப்படி நடந்து கொண்டிருப்பதாக மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர் தீவிரவாத சாமியாரினிகளைக் கைவசம் வைத்துள்ள இந்து தீவிரவாத அமைப்புகள்.

இந்து மதத் துறவியான ஒருவர், இந்துக்களால் ஏறக்குறைய ஒரு கடவுளைப்போல் கருதப்படுபவர். ஓர் இந்துத் துறவி இந்து மதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாலும் மாலேகான் குண்டுவெடிப்பின் ஆணிவேர் ஓர் இந்துத் துறவியான சாத்வீ ப்ராக்யா என்பதாலும் ஊடகங்கள் இப்போது 'இந்துத் தீவிரவாதி' என்று அவரையும் அவரின் கூட்டாளிகளையும் அடையாளப் படுத்தின.

"நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளை நடத்துபவர்களைத் தீவிரவாதிகள் என்றுதான் அழைக்க முடியும்" என்று சொல்லி, அத்தோடு இஸ்லாத்தையும் இணைத்து நேற்றுவரை தாங்கள் வைத்த குண்டுகளுக்கு இஸ்லாமியர்களை இரையாக்கி வந்த சங் கூட்டம் இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பி விட்டதைப் பார்த்து விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.

மாலேகோன் குண்டு வெடிப்பில் துர்காவாகினியின் சாமியாரினி சாத்வி பிடிபட்டவுடன், காந்தியைக் கொன்ற கோட்சேயை, "எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவன் அல்ல" என கழட்டி விட்டது போன்று, "எங்களுக்கும் சாத்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என கழட்டி விட்ட சங் அமைப்புகள், அவ்வாறு "குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்களை இந்துத் தீவிரவாதி என அழைக்கக் கூடாது" எனவும் முராரி பாட ஆரம்பித்து விட்டன.

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது போல், நேற்று வரை தாங்கள் செய்த கயமைத்தனங்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தை படிக்க.. "
இஸ்லாமியத் தீவிரவாதி" என காவு தந்து கொண்டிருந்த தேச விரோத கும்பலுக்கு இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பியவுடன் அதன் வலி தெரிகிறது போலும்.

தமிழகத்தில் இந்துத் தீவிரவாதத்தை முழு நேரப்பணியாக ஏற்று செயல்பட்டு வரும் இந்து தீவிரவாத அமைப்பான இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் "இந்துத் தீவிரவாதம்" என்ற சொல்லைக் கேட்டவுடன் கதி கலங்கிப் போய் கீழ்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்:

"இந்து மற்றும் பயங்கரவாதம் என்ற 2 சொற்களும் முரண்பட்டவை, பொருந்தாதவை. இந்து அறநெறி நூல்கள் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரிக்கவில்லை, கற்பிக்கவும் இல்லை.

மாலேகாவ்ன் நகரில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் என்று இல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்கி இருப்பது வெட்கக் கேடாகும்.

இந்துக்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் போலி மதச்சார்பின்மைவாதிகள் இந்து பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி வருவது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம், அவமதிப்பு, அவமானம் ஆகும்.

மத அடிப்படையில் நமது நாடு ஏற்கனவே பிரிவுபட்டுத்தான் இருக்கிறது. இந்து பயங்கரவாதம் என்று சொல்லி இச்சம்பவத்தை ஊதி பெரிதாக்க நினைப்பவர்கள், பிளவை மேலும் அகலப்படுத்தி நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சமாதானத் தையும் சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.
"

முன்னர் இதே இந்துத் தீவிரவாதிகள் தாங்கள் செய்த அநியாயங்களுக்காக முஸ்லிம் சமுதாயம் பலிகடாவாக்கப்பட்டபோது "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தங்களின் அடையாளமாக ஆக்கிக் கொண்ட வேளையில் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து, "இஸ்லாம் என்றால் சமாதானம், அமைதி என்று பொருள். இஸ்லாம் உலகில் சமாதானத்தையே விரும்புகிறது; அது சமாதானத்தையே போதிக்கிறது; தீவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை; நேர் எதிர் முரணான அவ்வாசகங்களை உபயோகிக்கக் கூடாது" என்று
எழுந்த குரல்களைக் கண்டு கொள்ளாத இந்தக் கயவர் கும்பலின் மேற்கண்ட வாசகங்கள் எவ்வளவு போலியானவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும்.

மத அடிப்படையில் நாட்டைத் துண்டாடி ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்துத் தீவிரவாதிகள், நாட்டின் ஒருமைபாட்டையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் குறித்து இப்போது அச்சம் கொள்வதாகச் சொல்வது எவ்வளவு தேர்ந்த நடிப்பு என்பதும் அனைவருக்கும் விளங்கும்.

நாட்டின் சமாதானத்தினையும் ஒற்றுமையையும் விரும்பும் ஒரே காரணத்திற்காகத்தான், இந்நாட்டின் விடுதலைக்காக இரத்தத்தால் காவியம் படைத்த இஸ்லாமிய தியாகச் சமுதாயம், நாட்டு விடுதலைப்போரில் ஆங்கிலேயனுக்குக் கோவணம் தூக்கி அலைந்த பார்ப்பனீய தேச விரோதிகளின் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற பொருந்தா, அநியாயப் பொய் குற்றச்சாட்டையும் பிரச்சாரத்தையும் கேட்டு அவமானப்பட்டாலும் கொதிக்காமல் அமைதி காத்து வந்தது.

எனவே, நாட்டு ஒற்றுமையை முன் நிறுத்தி இந்த இந்து முன்னணித் தீவிரவாதி கோரிக்கை வைத்துள்ளதால், அதனைப் பரிசீலிக்கும் விதத்தில்,

படிக்க:..
குண்டு தயாரிப்பவன்,
படிக்க..
வெடி மருந்துகளை சேகரிப்பவன்,
படிக்க...
அப்பாவி பொதுமக்களைத் தாக்கும் நோக்கில் குண்டுகளை வெடிக்கச் செய்பவன்,
படிக்க..
அதன் பழி வேறொரு சமூகத்தார் மீது விழ வேண்டும் என்பதற்காகப் போலி வேடம் போடுபவன்,
படிக்க...
பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று பாராமல் ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொன்று குவிப்பவன்,
படிக்க...
சிறு குழந்தைகளையும் விடாமல் பாலியல் பலாத்காரம் செய்பவன்,
படிக்க...
ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றால் அதனைத் துஷ்பிரயோகம் செய்பவன்,
படிக்க....
அப்பாவிகளை என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்பவன்,
படிக்க...
அதுபோன்ற கொலைகளுக்குக் காரணமாக இருப்பவன்,
படிக்க...
பொதுச் சொத்துக்களை நாசம் செய்பவன்,
படிக்க...
இனவாதம் என்ற பெயரால் அராஜகம் செய்பவன்,
படிக்க..
பிறமத வழிபாட்டுத் தலங்களைத் தாக்கி அழிப்பவன்,கலவரம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத ஊர்வலங்கள், ரத யாத்திரைகளை நடத்துபவன்...

ஆகியோர் எல்லாம் இந்துக்களாக இருப்பதால் மேற்காண்பவர்களைத் தவிர்த்த அனைவரும் சாதாரண இந்துக்கள் என்றும் மேற்காண்பவர்களை மட்டும் "இந்துத் தீவிரவாதிகள்" என்றும் அடையாளப் படுத்துவது பொருத்தமாக இருக்கும்

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1086&Itemid=51
*********************************
''ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர்''....இந்து தீவிரவாத பெண் துறவியின் தொலைபேசி பேச்சு!
நாசிக்: கைது செய்யப்பட்டுள்ள பெண் தீவிரவாதத் துறவியான சாத்வி பிரஞ்யா சிங் மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என வாக்குமூலம் அளித்துள்ளார்.அவரிடம் விசாரணை நடத்திய மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் போலீசார் அவரும் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இன்னொரு குற்றவாளியான ராம்நாராயணனும் இந்த சதித் திட்டம் குறித்து தொலைபேசியில் சமீபத்தில் பேசிய விவரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.


அதன் விவரம்:
சாத்வி: என்னை போலீசார் இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்
ராம்நாராயணன்: ஏன்?
சாத்வி: மலேகாவ்ன் நகரில் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட எனது மோட்டார் சைக்கிளை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
ராம்நாராயணன்: பைக்கை நீங்கள் தான் விற்றுவிட்டீர்களே.. (விற்றதாக சொல்லிவிடலாம் என்பதை இப்படி சொல்கிறார்)
சாத்வி: எங்கே விற்றதாக சொல்வது.. மத்திய பிரதேசம், குஜராத் அல்லது மகாராஷ்டிரம்..?
ராம்நாராயணன்: குஜராத் என்று சொல்லுங்கள்.
சாத்வி: எப்போது விற்றேன் என்று கேட்டால் என்ன சொல்ல?
ராம்நாராயணன்: ஞாபகம் இல்லை என்று சொல்லி விடுங்கள்.


சாத்வி: அந்த குண்டுவெடிப்பில் ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர். அதை நீ எங்கே பார்க் செய்தாய்.. ஆட்கள் நிறைய இருந்த இடத்தில் நிறுத்த வேண்டியது தானே?
ராம்நாராயணன்: நிறைய பேர் இருந்த இடத்தில் தான் நிறுத்த முயன்றேன். ஆனால், சரியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக நான் நிறுத்திய இடத்தில் நிறைய பேர் இல்லை.
சரி.. நிலைமை மோசமானால் (கைது நடவடிக்கை) அதை நாம் சந்திப்போம்...
இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர்.


இந்த ஆதாரத்தை நீதிபதியிடம் போலீசார் வழங்கியதையடுத்து சாத்வியை வரும் 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது பேசிய பிரஞ்யா, இந்த வழக்கு பொய்யானது, விசாரணை என்ற பெயரில் போலீசார் என்னை கொடுமைப்படுத்தினர் என்றார். பின்னர் அவர் நீதிமன்றத்திலேயே மயங்கினார்.

அவருக்கு ஆதரவாக சிவ சேனா, பாஜக, ஹிந்து மகா சபா, அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வெளியே போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சாத்வி பிரஞ்யா, மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என்று தெரிவித்தார்.

சாத்விக்கு பாஜக ஆதரவு:
இதற்கிடையே சாத்விக்கு பாஜக வேண்டிய உதவிகளை செய்யும் என அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்த வழக்கே பொய்யானது, இந்துக்களை அவமதிக்கும் சதியின் ஒரு பகுதி தான் இந்த வழக்கு. தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை, ஆனால் பொய் வழக்கு- விசாரணையை எதிர்க்கிறோம் என்றார்.

**************************

Saturday, November 08, 2008

இந்துத்வ வெறியர்களின் வெடிகுண்டுக் கலாச்சாரம்

இந்துத்வ வெறியர்களின் வெடி குண்டுக் கலாச்சாரத்திற்குக் கைப்பூண் போன்ற சான்று, காந்தியார் கொலை. சநாதனத்துக்கு எதிரான கருத்துகளை காந்தியார் பேசினார் என்பது தானே இந்துத்துவ வெறியர்களின் கோபத்துக்கான காரணம்?

பாகிஸ்தான் பிரிவினையை நேரு, பட்டேல், ராஜாஜி போன்றவர்களெல் லாம் ஏற்றுக் கொண்டு அவரிடம் தெரிவித்ததால், வேறு வழியின்றி காந்தியார் எதிர்க்க இயலவில்லை. பாகிஸ்தான் பிரிவினையைக் காட்டி காந்தியார் உயிருடன் இருக்கக் கூடாது எனத் தாம் முடிவு செய்ததாக நாதுராம் விநாயக் கோட்சே தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட பொய்! பிரி வினையை ஆதரித்த மற்றவர்களுக்கு எந்த இடையூறும் யாராலும் ஏற்படுத்தப்படவில்லை. கூட்டுச் செயல், முடிவு என்ற வகையில் கண்டனம் கூடக் கிடையாது.

கோட்சேயின் ஞானகுரு விநாயக தாமோதர் சவர்க்கார் 1904-இல் ஆங்கிலேயர்களைக் கொல்வதற்காக உருவாக்கிய இயக்கம் அபிநவ் பாரத்! அது தான் இப்போது 2006-இல் அதே புனே நகரில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
1905-இல் ரசியாவின் ஜார் அலெக்சாண்டர் அந்நாட்டு மக்களுக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியதற்குக் காரணம் அவர்கள் நடத்திய ஆயுதம் ஏந்தியப் புரட்சி. இதைக் கண்ட பால் கங்காதர் திலக் (மராத்திப் பார்ப்பனர்) சொன்னது என்ன தெரியுமா? பிரார்த்தனை செய்வதால், ஒன்றும் ஆகாது; அயர்லாந்து, ஜப்பான், ரசியாவைப் பாருங்கள், அவர்கள் போல ஆயுதம் ஏந்துங்கள் என்றார்.

இந்த யோசனையை யார் கேட்டார்களோ இல்லையோ, இந்து மத உயர் ஜாதிக்காரர்கள், பார்ப்பனர்கள் கேட்டனர். திலகரே அவர்களின் தலைவர்தானே! வெற்றிலை பாக்குக் கடைக் காரனும், எண்ணெய்ச் செக்கு ஓட்டுபவனும் தேர்தலில் நிற்கலாமா? என்று கேட்ட பார்ப்பனப் பேஷ்வாப் பரம்பரையாயிற்றே!

இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியைப் போய்ப் பார்த்துப் பேசி அறிந்து வந்தவர்கள் இந்து மகாசபையினர். அவர்களைச் சேர்ந்த மூஞ்சேதான் போன்சலா மிலிட்டரி பள்ளியை நாசிக்கில் தொடங்கினவர். இவரும் இந்துத்வ வெறியர். ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தலைவர்களில் ஒருவர்.

இவர்களெல்லாம் உருவாக்கிய அபிநவ் பாரத் அமைப்பின் உறுதிமொழி நம் புனித மதத்தை அழிக்கும் மிலேச்சர்களான அந்நிய நாட்டு எதிரிகளின் இரத்தம் நம் மண்ணில் சிந்தச் செய்வோம் என்பதே! என்ன பொருள்?

ஆங்கிலேயர்களைக் கொல்வோம்! ஏன்? அவர்கள் நம் மதத்தை அழிக்கிறார்கள்! கவனிக்க வேண்டும். சுதந்திரத் தாகம் அல்ல, காரணம்; சுயராஜ்யம் அல்ல குறிக்கோள்! மதவெறி! மதத்தைக் காக்க வேண்டும் என்னும் ஆவேசம்! அதுவே அவர்களின் இலட்சியம். இந்துத்வா என்ற சொல்லை 1920-இல் பயன்படுத்தியவர் ஆயிற்றே, சவர்க்கர்!

இந்துஸ் தான், பாகிஸ்தான் என்று இரு நாட்டுக் கொள் கையை முதன் முதலில் எழுதிக் காட்டி இந்தியா பிரிக்கப்பட வேண்டும் என்கிற வித்தினை ஊன்றியவரே இவர்தானே! காரணம் இந்து மதவெறி அல்லாமல் வேறு ஒன்றும் கிடையாதே!

அதனால்தானே, இந்து மதப் பழக்கங்களின் அடிப்படையில், அந்நியர்களைக் கொல்வது பாபம் அல்ல, யாகம் போன்றது என்று வியாக்யானம் செய்து எழுதியது யுகாந்தர் எனும் இவர்களின் பிற்போக்கு ஏடு! அந்நியர் என்பது ஆங்கிலேயரை மட்டுமல்ல, இசுலாமியர்களையும் உள்ளடக்கியது என்பது சொல்லாமலே விளங்குமே!

இந்த யாகம் செய்து யாகக் குண்டத்தில் மற்ற மதக்காரர்களைப் போட்டுப் பொசுக்குவ தற்காக, வெடிகுண்டு தயாரிப்பது என்பதைக் கற்றுக் கொள்வதற்காக, ரசியா நாட்டு வேதியி யல் பொறியாளரிடமிருந்து நூல்கள் வாங்கப் பட்டன. 1908-இல் எடின்பர்க் பல்கலைக் கழகப் பட்டம் பெற்ற பாண்டுரங்க பாபட் என்பார் இப்படிப்பட்ட நூல்களை வாங்கினார். செய்தார். வீசினார். மாட்டிக் கொண்டார். அலிப்பூர் குண்டு வெடிப்பில் கைதானார்.

ஆங்கிலேய மாஜிஸ்திரேட்டுக்குக் குறி வைத்து இரண்டு பெண்களைக் கொன்ற வழக்கு இது. இவர்களின் கதையே இதுதான், குறி வைத்தவர்களைக் கொல்லாமல் அப்பாவிகளைக் கொல்வார்கள் என்று ஒரு ஆய்வறிஞர் பதிவு செய்துள்ளார்.

புனேயும் கோயம்புத்தூரும் இந்தியாவில் பிளேக் எனும் கொள்ளை நோய்க்குப் பேர் போனவை. எலிகளால்தான் இந்நோய் பரப்பப்படுகிறது என்பதால் எலிகளைக் கொல்ல 1918-இல் அரசு நடவடிக்கைகளை எடுத்தது. எலி விநாயகனின் வாகனம் என்று இந்து மதக் கதையைக் காட்டி மக்களைத் தூண்டி, அந்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கொலை செய்ய வைத்தவர் திலக். கொலைகாரர்கள் சபேக்கர் சகோதரர்கள். இதற்காகத் தண்டனை பெற்றவர் திலக்.

திலகருக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவரங்களை துர்காதாஸ் என்ற எழுத்தாளர் / ஆய்வாளர் குசடிஅ ஊரசணடி வடி சூநாசர யனே டிவாநசள என்ற தம் நூலின் 62-ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆனாலும் போன வாரம்கூட ஒருவர் இந்த உண்மையை மறைத்து மழுப்பி அவருக்குத் தேச பக்தத் திலகம் சூட்டும் முறையில் ராணி ஏட்டில் எழுதியுள்ளார்.

இப்படிப்பட்ட பின்புலத்தைக் கொண்ட இந்துமத வெறியர்கள்தான் இப்போது இசுலாமிய மக்கள் மீதான தம் மதவெறித் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர்.

இதற்கு உதவி புரிய போர்ப்படையினரின் ஒத்தாசைகளை நாடியுள்ளனர்.

எளிதில் கிடைக்காத அரிய, அதிக ஆற்றல் மிக்க ஆர்டிஎக்ஸ் வெடிப் பொருள்களை ராணுவக்காரர்களிடமிருந்து பெற்று வெடிகுண்டு தயாரிக்கின்றனர். ஓய்வு பெற்ற ராணுவக்காரர்களும் மாட்டிக் கொண்டனர். பணியில் இருக்கும் ராணுவக்காரர்களும் பிடிபட்டுள்ளனர்.

இந்துக்களை ராணுவமயமாக்கு; ராணுவத்தை இந்து மயமாக்கு என்கிற ஆர்எஸ்எஸ்., இந்து மகா சபா, அபிநவ்பாரத், விஎச்பி அமைப்புகளின் கோஷத்திற்கு பா.ஜ.கட்சியும் ஆறு ஆண்டுக்கால ஆட்சியும் ஆதரவு அளித் ததன் விளைவு இது! நெற்றியில் சந்தனமும் குங்குமமும் வைத்துக் கொண்டு ராணுவத்தினர் எப்போது காட்சி அளித்தனர்? இப்போது அந்த நிலை இருக்கிறதே! மணிக்கட்டில் கறுப்பு, சிவப்புக் கயிறு கட்டிக் கொண்டுள்ள ராணுவ அதிகாரிகள் இருக்கிறார்களே! அதன் விளைவு
தானே ராணுவக்காரர்கள் சதிச் செயலில் பங்கு பெற்றது!

2003-ஆம் ஆண்டிலிருந்தே இந்துத்வ வெறி யர்கள் வெடிகுண்டு செய்யத் தொடங்கி விட் டார்கள். 2006-இல் வெடிகுண்டு செய்யும் போது விபத்து ஏற்பட்டு நரேஷ் கொண்ட்வார், இமான்சு பான்சே எனும் இரண்டு பேர் இறந்தார்கள். மராட்டியத்தில் நானடட் எனும் நகரத்தில் இது நடந்தது.

விசாரணையில் இவர்கள் இருவரும் 2006 ஏப்ரலில் நடந்த பர்பானி மசூதித் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்பது தெரிய வந்தது. பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்கள்தான் 2003 ஏப்ரலில் புர்னா மற்றும் ஜல்னா நகரங்களில் மசூதிகளின் மீது நடந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

தெரிந்து என்ன பயன்? அவர்கள்மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன? ஒன்றும் இல்லை. எனவே அவர்களுக்குத் துணிவு கூடிவிட்டது. பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில்கூட, புனே நகரில் நடத்தப்படவிருந்த மகாபாரத நாடகத்தை நடத்தக் கூடாது என்று நாடகக் கொட்டகையை வெடிகுண்டு வீசித் தாக்கினார்கள், இந்து ஜன ஜாக்ரிதி சமிதி எனும் இந்துமத வெறி அமைப்பினர். மகாபாரதக் கதையொன்றைத் தழுவி (நக்கல்) அங்கத நடையில் தயாரிக்கப் பட்ட நாடகம். நம்மூர் சோ பார்ப்பனர் அந்தக் காலத்தில் நடத்திய நாடகம் போல! சகிப்புத் தன்மை இல்லாது, மதவெறி தலைதூக்கி நடத்தப்பட்ட தாக்குதல்.

மலேகான் குண்டு வெடிப்புக்காகக் கைது செய்யப்பட்டுள்ள மங்கேஷ் நிகாம் என்பவன் மதவெறிச் செயல்களை ஏற்கெனவே செய்தவன். ரத்னகிரியில் ஒரு குடும்பத்தினர் கிறித்துவ மதத்தைத் தழுவிய குற்றம் செய்தமைக்காக அவர்களின் வீட்டின்மீது வெடிகுண்டு வீசியவன் இந்த ஆள். இதற்காகக் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டவன். மீண்டும் வெடிகுண்டு வீசியிருக்கிறான். சிரங்கு பிடித்தகையும், இரும்பு பிடித்த கையும் என்பார்களே, அதுபோல வெடிகுண்டு வைத்த கை சும்மா இருக்காதோ!

உத்தரப்பிரதேசம் மாயாவதியின் மாநிலம். அங்கே, பஜ்ரங் தளத்துக்காரர்கள் ராஜீவ் மிஸ்ர மற்றும் பூபிந்தர்சிங் ஆகிய இரண்டு பேர் இந்த ஆண்டு அக்டோபரில் வெடிகுண்டு தயாரிக்கும் போது இறந்து போயினர். கான்பூரில் இந்நிகழ்ச்சி நடந்தது. வெடிகுண்டு செய்யும் எண்ணம் இந்துத்வ வெறியில் ஏற்படுகிறது. சரி. வசதி வாய்ப்புகள் எப்படிக் கிடைக்கின்றன? ராணுவம் தான் கைகொடுக்கிறது.

2006 செப்டம்பரில் குஜராத் மாநிலம் அகமது நகரில் பழைய இரும்பு வணிகரிடம் 196 கிலோ எடையுள்ள காக்டெயில் ராணுவ வெடிகுண்டு கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான விசாரணை தெரிவித்தது என்ன? 15 வருடங்களாக இந்தியாவில் நடந்த எல்லா வெடிகுண்டுச் சம்பவங்களுக்கும் தேவைப்படும் அளவுக்கு வெடிப் பொருள்களை வணிகர் சங்கர் ஷெல்கே விற்றிருக்கிறார். இவருக்கு அந்தப் பொருள்களை ராணுவமே விற்றிருக்கிறது. பழைய இரும்பு என்று விற்றிருக்கிறது. நாடு எங்கே போகிறது?

அதைவிடக் கொடுமை! இந்த ஷெல்கேயின் வணிகம்பற்றி விசாரணை செய்யப்பட்டது. உயர் சக்தி வாய்ந்த வெடிப் பொருள்களை இந்த ஆள் கள்ளச் சந்தையில், விற்றிருக்கிறார்; அம்மோனி யம் நைட்ரேட் கலந்த வெடிப் பொருள்களை வைத்துப் பயன்படுத்துவது தொல்லை என்பதால் இதனை வாங்கிப் பல தொழில் நிறுவனங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார்களாம்! இதற்கான நோய் நாடி நோய் முதல் நாடப்பட வேண்டாமா? இதைச் செய்யாததால்தானே நாடே சுடுகாடாகியுள்ளது?

ராணுவத்தை இந்து மயமாக்கி வெற்றி பெற்று விட்டனவா, மதவெறிச் சக்திகள்? பதிலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கோழி திருடியவனும் கூடச் சேர்ந்து குலவுவது போல், இத்தனைப் பயங்கரவாதத்திற்கும் காரணமான இந்துமதவெறி அமைப்புகள் என்ன கூக்குரலை எழுப்பி வந்துள்ளன?

இன்றைக்கும் பாருங்கள், பா.ஜ. கட்சிச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் மலேகான் வெடிகுண்டுச் சதிகாரியை அப்பாவி என்கிறார். முசுலிம்களைப் பயங்கரவாதிகள் என்கிறார். என்னய்யா இது இரட்டை அளவுகோல் என்று இதழாளர் கேட்டால்; குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அப்பாவிதானே எனக் கேட்கிறார். இதே வாதம் இசுலாமியர்களுக்குப் பொருந்தாதா?

மக்களை இரண்டாக்கியவர்கள், இரட்டை நாக்குடன் பேசுகிறார்கள். திரிசூலம் தந்து கிறித்துவ, இசுலாமிய, மதச் சார்பற்றவர் ஆகிய மூவரையும் கொல்வதற்கு என்று பகிரங்கமாகப் பேசித் தீட்சை அளித்தவர்கள் இந்துக்கள் பயங்கரவாதிகளாக இருக்க மாட்டார்கள், சாத்வீகமானவர்கள் என்று பசப்புகிறார் வி.எச்.பி. தலைவர் பிரவீண் தொகாடியா. இவரேதான் முன்பு கூறினார், இந்துக்கள் வன்முறையில் இறங்கி ஆயுதம் ஏந்தலாம் என்பதற்கு அடையாளம் இந்துக் கடவுள்களின் கைகளில் ஆயுதங்கள் இருப்பது என்றார். திட்டம் போடும்போது ஒரு பேச்சு, திட்டம் போட்டு குட்டு உடைந்து மாட்டிக் கொண்டால் வேறு பேச்சு எனும் இரட்டை நாக்கு, இரட்டைப் போக்கு! இதுதான் இந்து மதம், இந்துத்வா!

வரலாற்று ஆய்வாளர் ஈஜின் டிசவுசா கூறியது போல, நாஜிப் பிரச்சாரத்தை மராத்திய, மும்பைப் பத்திரிகைகள் செய்தன, இட்லர் பாணியில் இந்து வீரர்களை உருவாக்கினர். முசோலினியின் பயிற்சியைப் பெற்று பாசிஸக் கட்சிகளை நடத்தி வருகின்றனர். இவர்களை அடியோடு அகற்றி அழித்தால்தான் மதவெறி பிடித்த அழிவுப் பாதையிலிருந்து இந்தியாவைக் காத்திட முடியும். NANDRI TO VIDUTHALI.COM

Friday, October 31, 2008

இந்துத்துவ பயங்கரவாதம் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகையில் செயல்பட்டு வருகின்றன.


இந்துத்துவ பயங்கரவாதம் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

இவர்கள் திருமணமும் செய்து கொள்வதில்லை. (வாஜ்பேயி, ராமகோபாலன் போன்றோர் முழு நேரப் பிரச்சாரகர் ஆவர்). பஜ்ரங்தளம் இந்துத்துவத்தின் மற்றொரு கோரமுகமாகும். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் முதலிய சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது இதன் முக்கிய வேலையாகும்.

இந்துத்துவ பயங்கரவாதமும் சிறுபான்மையினரின் அணுகுமுறையும்...

-பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்

அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை

தங்களது இந்துத்துவக் கோட் பாட்டை நிலைநாட்டுவதற்குப் பாடுபடாதவர்களை கோல்வால்கர் துரோகிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கோல்வால்கரும் அவரைச் சார்ந்த வர்களும் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் எவ்விதப் பங்கும் கொள்ளவில்லை. இது மட்டுமல்ல, வெள்ளைக்கார அரசின் சட்டங்களை மதித்து அதற்குக் கட்டுப் பட்டு நடப்பதாக எழுதிக் கொடுத்தவர் தான் கோல்வால்கர்.

இப்படித் துரோகம் செய்தவர்கள் நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. அரசியல் சாசனச் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது கோல்வால்கர் பின் வருமாறு எழுதுகிறார்:

துரதிருஷ்டவசமாக நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டம் மண்ணின் மைந்தர்களையும் ஆக்கிரமிப்பாளர் களையும் சமமாக்கியுள்ளது. எல்லோருக் கும் அது சம உரிமை அளித்துள்ளது. ஒரு வீட்டில் தனது பிள்ளைகளுக்கும் திருட வந்தவர்களுக்கும் இடையே ஒரு மனிதன் சமமான உரிமையை அளித்து தனது சொத்தையும் அவர்கள் அனை வருக்கும் பகிர்ந்தளிப்பது போன்று அரசியல் சாசனச் சட்டத்தின் இந்த நிலைப்பாடு உள்ளது’’.

இந்துத்துவக் கோட்பாட்டைப் பிரதி பலித்துச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். ஒரு பாசிச அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை என்பதை கோல்வால்கரின் கருத்துக்களும் அதனை நடைமுறைப் படுத்தும் வகையில் சங்பரிவார அமைப்புகளும் செயல்படுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹிட்லரினால் தான் மிகவும் கவரப்பட்டதாக கோல்வால்கர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். நமது நாட்டில் தன்னிகரில்லாத வகையில் சமூகச் சேவை செய்யும் கிறிஸ்தவர்கள் பற்றி கோல்வால்கர் எழுதியுள்ள பின்வரும் கருத்துகள் அவரது பாசிச உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

மேலோட்டமாகப் பார்க்கும் ஒருவருக்கு கிறிஸ்தவர்கள் தீங்கிழைக்காதவர்கள் போலவும், இரக்கத்தின் வடிவமாகவும், மனிதகுலத்தின் மீது தீராத அன்பு கொண்டவர்கள் போன்றும் காட்சி அளிக்கிறார்கள்.

அவர்களது பேச்சுகளில் சேவை, மனிதர்களை இரட்சித்தல் போன்ற வார்த்தைகள் நிரம்பி இருக்கின்றன. எல்லாம் வல்லவனாகிய இறைவனால் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்காகவே இவர்கள் பிரத்யேகமாக அனுப்பப்பட்டுள்ளது போன்று அவர்கள் தோற்றம் அளிக்கிறார்கள்.

அவர்கள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அநாதை நிலையங்கள் மற்றும் மருத்துவமனை களை நடத்துகிறார்கள். நம் நாட்டு மக்கள் சாமானியர்கள் என்பதால் இதனால் கவரப்பட்டு விடுகிறார்கள். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளுக் காக கோடிக்கணக்கான ரூபாய்களை கிறிஸ்தவர்கள் கொட்டுவதற்கான உண்மை நோக்கம் என்ன?

நமது நாட்டில் வாழும் கிறிஸ்தவ மக்களின் செயற்பாடுகள் இப்படித்தான் உள்ளன. நமது நாட்டின் சமூக மதக் கட்டமைப்பைச் சிதைப்பது மட்டும் அவர்கள் நோக்கமல்ல, பல்வேறு பகுதிகளில் - முடிந்தால் நாடு முழுவதும் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஏசு நாதரின் தெய்வீக இறக்கையின் கீழ் மனிதகுலத்திற்கிடையே சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துகிறோம் என்ற கவர்ச்சிகரமான போர்வையில் அவர்கள் செல்லுமிடமெல்லாம் இதனைச் செய்து வருகிறார்கள்’’. என எழுதியுள்ளார்

மதமாற்றம் பற்றி...

தன்னலமற்ற முறையில் சேவை செய்து வந்த பாஸ்டர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் போன்ற சமூக சேவகர்கள் ஈவிரக்கமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்படுவதற்கான பயங்கரவாதத்தின் ஊற்றாக கோல்வால்கரின் இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் கண்ணியத்துடன் வாழ வேண்டுமெனில் இந்து கலாச்சாரத்தையும் மதக்கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ள கோல் வால்கர், மதம் மாற்றம் பற்றி எழுதியுள்ள பின்வரும் கருத்துகளும் அவரது பாசிச சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

இந்துக்கள் மற்ற மதங்களுக்கு மாறுவது அவர்கள் நாட்டின் மேல் கொண்ட மாசற்ற விசுவாசத்தைச் சிதைத்து விடுகின்றது. அது நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. எனவே மதமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் அவசியமாகும். ஒரு தனி நபர் மதம் மாறுவது என்பது அவர் பல்வேறு தத்துவங்களை ஆய்வு செய்த பின் நடைபெறுவது அல்ல.

வறுமை, எழுத்தறிவின்மை மற்றும் அறியாமையைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் ஆசைகளை ஊட்டித்தான் மதமாற்றம் நடைபெறுகின்றது. உண்மையான மன மாற்றத்தினால் மதமாற்றம் நடை பெறுகின்றது என்று கூற இயலாது. இந்த அநீதியான நடவடிக்கையைத் தடை செய்வதுதான் சரியான நட வடிக்கையாக இருக்கும். அறியாமை மற்றும் வறுமையில் வாடும் நமது சகோதரர்களைப் பாதுகாக்க மத மாற்றத்தைத் தடைசெய்வது நமது கடமையாகும்’’.

சாதியத்தை போற்றும் கோல்வால்கர்

இந்துத்துவத்தின் சாதிய கட்டமைப்பினால் சிக்குண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைப் பெறு வதற்கு இஸ்லாத்திற்கோ கிறிஸ்தவத்திற்கோ மதம் மாறினால் இந்துத்துவம் அதனை வேடிக்கை பார்க் கக் கூடாது என்பதை கோல்வால்கரின் இந்தக் கூற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சாதிய கட்டமைப்பை தனது எழுத்துக்களில் இந்துத்துவத்தின் பிதாமகன் கோல்வால்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் எழுதுகிறார்:

பண்டைய காலத்திலும் சாதிகள் இருந்தன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்து நிலைத்த நமது சிறப்புமிகு தொன்மையான தேச வரலாறு முழுவதும் சாதிகள் இருந்துள்ளன. நமது சமுதாயத்தின் ஒற்றுமையையோ அல்லது நமது நாட்டின் முன்னேற்றத்தையோ தடுக்கும் வகை யில் சாதிய அமைப்பு செயல்பட்டது என்று எங்கும் எந்தவொரு நிகழ்வையும் நாம் காட்ட முடியாது. உண்மையில் அது சமூக ஒற்றுமைக்கு வலு சேர்த்துள்ளது.

திட்டமிட்டு பொய்களைப் பரப்பி மக்களை நம்ப வைப்பது தான் பாசிசத்தின் வெளிப்பாடு. அதைத்தான் கோல்வால்கரின் இந்தக் கூற்றில் நாம் காண முடிகிறது.

இந்துத்துவ சாதிய அமைப்பின் கொடுங்கோன்மைக்கு எதிராகத்தான் பௌத்தமும் சமணமும் தோன்றின என்பதை கோல்வால்கர் எவ்வாறு திட்டமிட்டு மறைத்துள்ளார் என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

இதேபோல் தமிழகத்தில் மீனாட்சிபுரத்தில் தலித் மக்கள் இஸ்லாத்தைத் தழுவியது இந்துத்துவத்திற்கு ஒரு பேரிடியாக அமைந்தது.

ஆனால் அதே நேரத்தில் சமீபகால இந்தியாவில் இந்துத்துவம் தனது முழு அகோர வடிவத்தைக் காட்டுவதற்கும் அது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.

ராமர் கோயில் பிரச்சனையை ஒரு தேசிய பிரச்சனையாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு வெறுப்புணர்வை தூண்டி - கலவரத்தைத் தூண்டி தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவம் எப்படியெல்லாம் செயல்பட்டது என்பது நாம் அறிந்த வரலாறு. இதே அடிப்படையில்தான் சமீபத்திய ஒரிசா நிகழ்வுகளையும் நாம் காணவேண்டும்.

ஒரிசாவில் பழங்குடி மக்கள் கல்வி கற்று தமது சொந்தக் காலில் நிற்பதற்கான முயற்சிகளை கிறிஸ்தவர்கள் செய்தால், அது இந்துத்துவம் பேணிப் பாதுகாக்க நினைக்கும் சாதிய கட்டமைப்பிற்கு எதிராக அமைந்து விடும். எனவேதான் கட்டாய மதமாற்றம் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது மட்டுமில்லாமல் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் தேவாலயங்களும் ஒரிசா மட்டுமின்றி தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன.

சங்பரிவாரின் அமைப்பு முறை

பாசிச அமைப்புகள் போன்ற கட்டமைப்பைக் கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பின் தலைவர் `சரசங் சலாக்என்று அழைக்கப்படுகிறார். காரியக்காரி சமிதி (செயற்வீரர்கள் குழு) என்று அழைக்கப்படும் ஒரு உயர்மட்டக் குழுவை அவர் நியமிக்கிறார். இது அவருக்கு உறு துணையாக இருக்கிறது.

பிரதேஷ் பராமுக் என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைவர் உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை கிளை ஷாகா என்று அழைக்கப்படுகின்றது. நாடு முழுவதும் 60,000 ஷாகாக்கள் செயல்படுகின்றன.

இவை காலை அல்லது மாலை தினந்தோறும் செயல்படுகின்றன. காலையில் செயற்படும் ஷாகாக்கள் வணிகர்களுக்கும் மாலையில் செயற்படுபவை மாணவர் களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் உரியதாக உள்ளன. இந்த ஷாகாக்கள் பொது இடங்களில் செயற்படுகின்றன. இந்த ஷாகாக்களில் உறுப்பினர்களாகச் சேருபவர்கள் சுயம் சேவக் என்று அழைக் கப்படுகிறார்கள். இவர்களில் குழுத் தலைவர் முக்கிய சிக்சாக் (தலைமை ஆசிரியர்) என்று அழைக்கப்படுகிறார்.

சுயம்சேவக்குகளில் துடிப்பானவர்கள் அதிகாரிகள் பயிற்சி முகாமிற்கு அழைக்கப்படுகிறார்கள். மிகுந்த அர்ப்பணிப்பும் உத்வேகமும் உள்ளவர்கள் பிரச்சாரக் (பிரச்சாரர்களாக) முழு நேரப் பணியாளர்களாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சங் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் திருமணமும் செய்து கொள்வதில்லை. (வாஜ்பேயி, ராமகோபாலன் போன்றோர் முழு நேரப் பிரச்சாரகர் ஆவர்). இவர்கள் பிரச்சாரகர்களாக ஆனவுடன் தங்கள் குடும்பத்தினருடனான உறவையும் துண்டித்துக் கொள்கிறார்கள். சங் பணிகளுக்காக இவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அளிக்கும் பயிற்சி இரண்டு வகைப்படும். ஒன்று உடல்கூறு ரீதியான பயிற்சி. இதில் உடல் பயிற்சிகள் விளையாட்டுகள் அடங்கும், மற்றொன்று பவுதிக் (சிந்தனை ரீதியான பயிற்சி). இந்த சிந்தனை ரீதியான பயிற்சியில் தான் சுயம்சேவக்குகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்.
தனது இந்துத்துவ பாசிச குறிக்கோளை செயல்படுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் பல முகங்களைத் தரித்துள்ளது.

அரசியல் அரங்கில் முதலில் அது உருவாக்கிய கட்சி பாரதீய ஜனசங். இதன் தலைவராக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சியாம பிரசாத் முகர்ஜியை கோல்வால்கர் நியமித்தார். இவர் ஒரு சுயம்சேவக் அல்ல. ஆனால் இவரது தனி செயலாளராக நாவமை மிக்க ஒரு இளைய பிரச்சாரகராக பாரதீய ஜனசங்கத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்தான் அடல் பிகாரி வாஜ்பேயி.

வாஜ்பேயி மட்டுமல்லாது இன்னும் ஏராளமான பிரச்சாரகர்கள் பாரதீய ஜன சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது அதனை பல கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தன.

அவசர நிலை விலகிய பிறகு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயபிர காஷ் நாராயணனின் முன்முயற்சியால் ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியுடன் பாரதீய ஜனதா கட்சியும் இணைக்கப்பட்டது. தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்ற பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட அரசில் வாஜ்பேயி, அத்வானி போன்றோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றார்கள்.

ஆனால் இவர்கள் ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இருந்த அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்த இரட்டை உறுப்பினர் நிலையை ஜனதாக் கட்சியில் இருந்த மதுலிமாயி போன்ற சோசலிசவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இதன்காரணமாக ஜனதா கட்சியில் இருந்து வாஜ்பேயி உள்ளிட்ட முன்னாள் ஜனசங் கட்சியினர் விலகி 1980ல் பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்கினார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அணியாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பும் தொழிலாளர் அமைப்பாக பாரதீய மஸ்தூர் சங்கும் செயல்பட்டு வருகின்றன. உலகளாவிய அளவில் இந்துத்துவத்தின் ஆதரவாளர் களை ஒருங்கிணைப்பதற்காக விஷ்வ இந்து பரிசத் அமைப்பு தொடங்கப்பட்டது. பெண்களுக்கிடையே இந்துத்துவ பாசிசத்தை வளர்ப்பதற்காக துர்கா வாகினி அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் பெண்களுக்கும் வன்முறைப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இளம்பிஞ்சுகளுக்கு மத்தியிலும் இந்துத்துவ பாசிச நஞ்சை விதைப்பதற்காக வித்யா மந்திர் என்ற பெயரில் பள்ளிக்கூடங்களையும் சங்பரிவார் நடத்துகின்றது.

சங்பரிவாரின் மிகவும் பயங்கரமான இரு அமைப்புகளாக பஜ்ரங் தளமும் வனவாசி கல்யாண் கேந்திரமும் அமைந்துள்ளன. கிறிஸ்தவ பிரச்சாரக் குழுக்களை எதிர்கொள்வதற்காக எனக் கூறி வனவாசி கல்யாண் கேந்திரம் அமைக்கப் பட்டுள்ளன.

இந்த அமைப்பு பழங்குடி மக்கள் மத்தியில் சேவை செய்வதற்காகத் தனது ஆட்களை அனுப்பிவைக்கின்றது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிகளை பள்ளிக்கூட வசதிகள் போன்ற வற்றை இந்த அமைப்பு நிறுவி செயல் பட்டு வருகின்றது. இந்தப் பணிகளைச் செய்யும் அதே நேரத்தில் இந்துத்துவத் தின் கோட்பாடுகளை அவை பழங்குடி மக்கள் மத்தியில் போதிப்பதுடன் மறு மதமாற்றத்திலும் ஈடுபட்டு வருகின்றன. குஜராத், மத்திய பிரதசேம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இந்த அமைப்பின் செயல்பாடுகள் முக்கியக் காரணமாக விளங்கின.

பஜ்ரங்தளம் இந்துத்துவத்தின் மற்றொரு கோரமுகமாகும். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் முதலிய சிறு பான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது இதன் முக்கிய வேலையாகும்.

ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு பஜ்ரங் தளத்தை `ஒரு தீவிரவாத அமைப்புஎன்று வர்ணித்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ரோஸ் பஜ்ரங் தளத்தினரை நாஜிகளின் அதிரடி வன்கும்பலுக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரிசா கர்நாட கம் போன்ற மாநிலங்களில் தற்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்செயல்களில் முன்னின்று நடத்தி வருவதும் பஜ்ரங்தளத்தினர் தான். மராட்டிய மாநிலம் நான்டெட், கான்பூர் போன்ற நகரங்களில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்துச் செத்துப் போனவர்களும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்.

பாசிச இந்துத்துவத்தை திணிப்பதற்காக பல்வேறு கோணங்களில் செயல்பட பின்வரும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன

1. பாரதீய ஜனதா கட்சி (உறுப்பினர்கள் 1 கோடியே 70 லட்சம்)
2.
ஆர்.எஸ்.எஸ். (உறுப்பினர்கள் 25 லட்சம்)
3.
பாரதீய கிஸான் சங் (விவசாயிகள் சங்கம்) (உறுப்பினர்கள் 80 லட்சம்)
4.
பாரதீய மஸ்தூர் சங் (தொழிலாளர் சங்கம்) (உறுப்பினர்கள் 45 லட்சம்)
5.
ஆதிவாசி கல்யாண் கேந்திர் (உறுப்பினர்கள் 23 லட்சம்)
6.
மீனவர் கூட்டுறவு சங்கம் (உறுப்பினர்கள் 22 லட்சம்)
7.
விவேகானந்த் மெடிக்கல் மிஷன் (உறுப்பினர்கள் 17 லட்சம்)
8.
அதியபாக் பரிஷத் (உறுப்பினர்கள் 18 லட்சம்)
9.
விவேகானந் கேந்திர் (உறுப்பினர்கள் 18 லட்சம்)
10
பாரதீய விகாஸ் பரிஷத் (உறுப் பினர்கள் 18 லட்சம்)
11.
தீன்தயாள் சோத் சான்ஸ்தான் (உறுப்பினர்கள் 17 லட்சம்)
12.
ராஷ்ட்ரிய சேவிகா சமிதி (பெண்கள் பிரிவு) (உறுப்பினர்கள் 18 லட்சம்)
13.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (உறுப்பினர்கள் 18 லட்சம்)
14.
ஜனதா யுவ மோர்ச்சா (உறுப்பினர்கள் 18 லட்சம்)
15.
சிக்கா பாரதி (21 லட்சம்)
16.
விஸ்வ இந்து பரிஷத் (28 லட்சம்)
17.
இந்து சுயம்சேவக் சங் (வெளி நாட்டு பிரிவு)
18.
சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (தேசிய விழிப்புணர்வு முன்னணி)
19.
சரஸ்வதி சிசு மந்திர் (பாலர் பள்ளிகளுக்கான அமைப்பு)
20.
வித்ய பாரதி (கல்வி நிறு வனங்கள்)
21.
வனவாசி கல்யாண் ஆசிரம்
22.
பஜ்ரங் தளம் (ஹனுமான் படை)
23.
விஞ்ஞான் பாரதி (அறிவியல் அமைப்பு)
24.
சங்கல்ப்
25.
சன்ஸ்கார பாரதி (கலைஞர்களுக்கான அமைப்பு)
26.
சாஹ்கார பாரதி (கூட்டுறவுக்கான அமைப்பு)
27.
ஆதிவக்தா பரிஷத் (வழக்குரைஞர்களுக்கான அமைப்பு)
28.
வித் சலஹாக்கர் பரிஷத் (கணக்காளர்களுக்கான அமைப்பு)
29.
சேவா பாரதி
30
பாரதீய விசார் கேந்திர்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், இந்துத்துவத்தின் விஷ வேர்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையில் திட்டமிட்டு செயல்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த அமைப்புகள் சுதந்திர அமைப்புகளாகச் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த அமைப்புகளின் குறிக்கோள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள துறையில் இந்துத்துவத்தை நிலைநாட்டு வதுதான். தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகையில் அவை செயல்பட்டு வருகின்றன.

படிக்க:

குண்டுவெடிப்பு பெண் சாமியார் (படங்கள் )

இந்துத்துவ சாமியாரினியின் 38 பேர் உயிரிழந்த குண்டு வைப்புக்கு ராணுவத்தினரின் உதவி அம்பலம்.


மாலேகான் குண்டு வெடிப்பு. ஹிந்துத்துவ சதி அம்பலம் .

மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் வெடிகுண்டுகளின் கிடங்குகளாக மாறி வருகிறது.

குவியல் குவியலான பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள்.

சூரத் வெடிகுண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் காரணம். பூரி சங்கராச்சாரியார்

மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!

மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!