Thursday, November 20, 2008
இந்துத்வ வெறிக் கட்சிகள் அலறுகின்றன."சங்கராச்சாரியாரின் விலை என்ன? "
இந்துத்வ பயங்கரவாதம்:சம்ஜவுதா விரைவுத் தொடர் வண்டியில் குண்டு வெடிப்பு, அய்தராபாத் மசூதி, அஜ்மீர் தர்கா சதிகளிலும் புரோகித்துக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு.
மும்பை, நவ. 20- காந்தியாரைக் கொன்ற இந்துப் பயங்கரவாதம் அதன் பிறகு நடத்தியுள்ள சதிச் செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன. அபிநவ் பாரத் எனும் பயங்கரவாத அமைப்பு எல்லா சதிச் செயல்களையும் நடத்தியுள்ளது என்பது வெளிவந்துள்ளது.
பான்டே சங்கராச்சார்யா என்று கூறிக் கொள்ளும் நபருக்கு ராணுவ முகாம்களுக்கு வந்து போக அனுமதி அட்டை கொடுத்ததும், கைத்துப்பாக்கி ஒன்றை புரோகித் கொடுத்ததும் அம்பலமாகியுள்ளது.
பான்டே அபிநவ் பாரத் அமைப்பின் ஊதியம் பெறும் நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.
அபிநவ் பாரத் எனும் இந்துப் பயங்கரவாத அமைப்புதான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ், ரயிலில் 68 பேர் கொல்லப் பட்டதற்கும், அய்தராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சதிச் செயல்களுக்கும் காரணம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயங்கரவாத சதிச் செயல்களில் ஈடுபட்ட சுனில் ஜோஷி என்பவன் 2007 இல் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான். இந்தச் செய்தியை புரோகித்திடம் தொலைபேசியில் தெரிவித்தபோது, சம் ஜவுதா ரயில் குண்டு வெடிப்புக்குக் காரணமான ஜோஷி தியாகியாகி விட்டார் என்று புரோகித் குறிப்பிட்டார் என்பதை வாக்குமூலத்தில் ஒரு சாட்சி தெரிவித்துள்ளார்.
இத்தகயை சதிச் செயல்களை குஜராத்தைச் சேர்ந்த ஜதீன் சாட்டர்ஜி என்பவர்தான் செய்துள்ளார். இவரை சாமி அசிமானந்த் என்கிறார்கள். வனவாசி கல்யாண் ஆசிரமம் எனும் சர்ச்சைக்குரிய அமைப்பை நடத்தி பழங்குடியினரிடையில் கலவரம் செய்து வரும் அமைப்பை இவர் நடத்தி வருகிறார். இவரையும் கல்சங் ராம் என்பாரையும் இன்னும் கைது செய்ய முடியவில்லை.
சாத்வி பிரக்யா சிங் தனது மோட்டார் சைக்கிளை ஜோஷிக் குக் கொடுத்திருந்ததும் அவர் கொல்லப்பட்ட பின்னர் அதனை கல்சங்ராம் பயன்படுத்தி வெடி குண்டு வைத்து மாலேகாவ்னில் வெடிக்கச் செய்ததும் ஏற்கெனவே வெளிவந்துள்ளது.
மத்தியப் பிரதேசக் காவல்துறையினர் அபிநவ் பாரத் அமைப்பின் சுனில் ஜோஷி சதிச் செயல்களில் ஈடுபட்டதை 2002 இல் கண்டு பிடித்தது. அப்போதைய காங்கிரசு முதல் அமைச்சர் திக் விஜய் சிங் இது பற்றி அறிவிப்பு செய்து பஜ்ரங்தள் உள்பட இந்துத்வ அமைப்புகள் ஈடுபட்டது குறித்து ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார்.
ஆனால் பிறகு முதலமைச்சராக வந்த உமாபாரதி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று 2003 இல் உத்தரவிட்டு விட்டார்.
இந்துத்வ வெறிக் கட்சிகள் இந்துப் பயங்கரவாதிகளைக் காப்பாற்றி ஆதரவு அளித்து வந்துள்ளனர். இப்போது மகாராட்டிர அரசு நடவடிக்கை எடுக்கும்போது அலறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
இந்துத்வ பயங்கரவாதம்:கைதான புரோகித் மீது மேலும் இரு வழக்குகள்
ஆர்.டி.எக்ஸ் கடத்தியது பற்றி ராணுவ அதிகாரி சாட்சி - பான்டே சங்கராச்சார்யாவுக்கு மெய் அறியும் சோதனை
நாசிக், நவ. 20- மாலேகான் குண்டு வெடிப்புச் சதி தொடர் பாகக் கைது செய்யப்பட்டு நவம்பர் 29 வரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிடப்பட்ட ராணுவ அதிகாரி புரோகித் மீண்டும் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொய் ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்து இரண்டு பேர்களுக்கு துப்பாக்கி உரிமங்களை இராணுவ ஒதுக்கீட்டில் வாங்கிக் கொடுத்த வழக்கு தொடர்பாக இந்த ஆணை.
போர்ப்படைக்குச் சொந்தமான ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தைத் திருடி குண்டு வெடிப்புச் சதிச் செயல்களுக்கு புரோகித் பயன்படுத்தியது தொடர்பாக, மற்றொரு போர்ப்படை அதிகாரி கேப்டன் நிதின் ஜோஷி வாக்கு மூலம் கொடுத்து உள்ளார். மாஜிஸ்டிரேட் முன்னிலையில் தரப்பட்ட இந்த வாக்குமூலம் வழக்கில் மிக முக்கிய சாட்சிய மாகக் கருதப்படும்.
பல கூட்டங்களை ஏற்பாடு செய்து அவற்றில் பேசி சதிகாரர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் புரோகித் என்பது இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சங்கராச்சார்யா
பான்டே சங்கராச்சார்யா, காவல் துறைப் பாதுகாப்பில் எடுக்கப்பட்டு மெய் அறியும் நார்கோ அனலைசிஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரே கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படை யில் கேள்விகள் தயாரிக்கப் பட்டு கேட்கப்பட்டன. இரண்டாம் முறையாகவும் இச்சோதனை நடத்தப்படுமா என்பது இனிமேல் தெரியும்.
அத்வானி பேச்சு
இந்நிலையில் பிரதமர் கனவில் பவனி வரும் அத்வானி, பெண் சாமியார் பிரக்யாவுக்குப் பரிந்து பேசியுள்ளார். அவர் மீதான குற்றச்சாற்றுகளைக் காவல்துறை விசாரணை செய்யக் கூடாது என் றும் நீதி விசாரணை வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
1992 இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பற்றிய நீதி விசாரணை 16 ஆண்டுகளாக முடியாமல் இழுத்தடித்துக் கொண்டு வரப்படுகிறது. அதில் குற்றம் சாற்றப் பெற்ற அத்வானி - வழக்கைச் சந்திக்காமலே வலம் வந்து கொண்டிருக்கிறார். குற்றவாளிகள் தப்பிக்கும் மார்க்கம் நீதி விசாரணையில் இருப்ப தால் இதைக் கேட்கிறார் போலும்!
இந்துத்வ பயங்கரவாதம்
அபிநவ் பாரத் தேசிய ஒருங்கிணைப்பாளர்சுதாகர் சதுர்வேதி கைது செய்யப்படுவார்
மும்பை, நவ.20- மாலேகாவ்ன் குண்டு வெடிப்புச் சதியில் தாம் ஈடுபட்டதாக ஒத்துக் கொண்டுள்ள சுதாகர் சதுர்வேதி எனும் பார்ப்பனர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று மும்பை, பயங்கரவாதத் தடுப்புக் காவல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆள் அபிநவ் பாரத் அமைப்பின் கூட்டங்களை தேவ்லாலி, இந்தூர், குஜராத், பஞ்ச்சமதி, ஜபல்பூர், ஃபரிதாபாத், அரியானா முதலிய இடங்களில் ஏற்பாடு செய்து பயங்கரவாதத்தைத் தூண்டி விட்டதை ஒத்துக் கொண்டு விட்டார்.
லெப்டினன்ட் கர்னல் புரோகித் சதியைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்துச் செய்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்.சின் அறிவுறுத் தலின் பேரில் பா.ஜ. கட்சியின் ராஜ்நாத் சிங்கும் அத்வானியும் புரோகித்துக்கு ஆதரவாகப் பேசியதைக் கேட்டதும் புரோ கித்தன் பங்குக்குத் தன் உயிருக்கு ஆபத்து வந்தால் மராட்டிய காவல்துறைதான் அதற்குக் காரணம் என்று கூற ஆரம்பித்து விட்டார்.
"சங்கராச்சாரியாரின் விலை என்ன? "
கடைகளில் கத்தரிக்காய், புடலங்காய், வெங்காயம் வாங்குவதுபோல சங்கராச் சாரி பதவியையும் விலைக்கு வாங்கலாம் என்று சொன்னால், சொல்கின்றவர்களைப் பார்த்து நகைப்பார்கள்தான்.
உண்மையைத் தெரிந்து கொண்டால், முதலில் நகைத் தற்காக வெட்கப்படவே செய்வார்கள்.
மாலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்பவர் யார் தெரியுமா?
எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய இராணுவத்தில் விமானப் படையில் பணி யாற்றியவர். அதன்பின் வாரணாசிக்கு (காசிக்கு) வந்தார் - சுற்றுமுற்றும் பார்த்தார். சாமியார் தொழில் நல்ல வளமான தொழில் என்பதை உணர்ந்தார். சபலம் தட்டியது.
என்ன செய்தார் தெரியுமா? வாரணாசியில் உள்ள ஒரு மடத்துக்கு ரூபாய் 15 லட்சம் கொடுத்து அந்த மடத்தின் சங்கராச்சாரியார் பதவியை விலைக்கு வாங்கி விட்டாராம்!
சங்கராச்சாரி பதவி என்றால், ஏதோ விலை மதிக்கப்பட முடியாத பெரும் பதவியல்ல; விலைக்கு வாங்கக் கூடிய கத்திரிக்காய் போன்றதுதான் என்பது இதன் மூலம் விளங்கிடவில்லையா?
இந்தச் சங்கராச்சாரி என்ன செய்திருக்கிறார் 700 பேர்களுக்கு வன்முறைப் பயிற்சி கொடுத்து களத்தில் இறக்கிவிட்டுள்ளார். மாலே கான் கலவரம் மற்றும் பல்வேறு மோதல்களுக்கு இவர் ஒரு முக்கிய சூத்திரதாரி என்று தெரிகிறது.
லோகக் குரு இப்பொழுது கம்பியை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
ஏற்கெனவே காஞ்சி சங்கராச்சாரிகள் இருவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தவர்கள்தான்; இப்பொழுதுகூட பிணையில் தான் வெளியில் திரிகின்றனர்.
பட்டப்பகலில் பச்சைத் தமிழர் காமராசரைப் படு கொலை செய்ய முயன்ற கூட்டத்தில்கூட சங்கராச்சாரிகள் உண்டு (பூரி சங்கராச்சாரி தான்).
முற்றும் துறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால், பூரி சங்கராச்சாரிக்குக் குடும்பமே உண்டு! காஞ்சி சங்கராச்சாரிக்குக் குடும்பம் இல்லையென்றாலும், காதலிகள் உண்டு. இவர்கள் லோகக் குருக்களாம்! வெட்கக்கேடு!- மயிலாடன்.THANKS : VIDUTHALAI.COM
Thursday, November 13, 2008
பயங்கரவாத யாகங்கள். வெடிகுண்டுகளை இந்தியா முழுமையும் நிகழ்த்தும் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார பயங்கரவாத அமைப்புகள்.
|
| 16.11.08 தொடர்கள் |
இஸ்லாமியர்களெல்லாம் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் பயங்கரவாதிகளெல்லாம் இஸ்லாமியர்கள் தான் என்று இத்தனை காலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யும் உரத்த குரல் எழுப்பி வந்தன. நடைபெற்ற நாசவேலைகளுக்கெல்லாம் அவர்கள்தான் அச்சாணி என்ற வாதம் நமது சிந்தனைக்கு வேலை கொடுத்தது. சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவிற்கு சற்று முன்னர் டெல்லியில் முகூர்த்தக்கால் நடுவார்கள். `என்கவுன்ட்டர்' என்ற நேரடி மோதலில் இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற சேதி வரும். அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று காஷ்மீர் கடந்து வந்தவர்கள் என்ற தகவலும் சொல்வார்கள். அதுதான் முகூர்த்தக்கால். வாஜ்பாய் அரசு அமைந்தபோது அரங்கேறிய இந்த நேரடி மோதல் நாடகங்கள் தொடருகின்றன. அதற்காக நாம் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புக்களைக் குறைவாக மதிப்பிடவில்லை. அந்த அமைப்புகள் செயல்படுகின்றன, அந்த அமைப்புகளின் பயிற்சித் தளம் பாகிஸ்தானாகவும், ஆப்கனிஸ்தானாகவும் இருக்கின்றன. அதன் செயல்பாடுகளை அறிவதிலும் அடக்குவதிலும் நமது ராணுவமும் உளவுத் துறைகளும் அரும் பெரும் சேவைகள் செய்கின்றன. அதே சமயத்தில் தீவிரவாதிகளெல்லாம் இஸ்லாமியர்கள்தான் என்ற பி.ஜே.பி.யின் வாதத்தை அதன் அமைப்புகளே சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கின்றன. தண்ணீரில் பிறந்த உப்பு தண்ணீரில் கரைவது தானே இயல்பு? சத்வி பிரக்யாசிங் தாகூர் என்ற நாமகரணம் கொண்ட ஓர் அம்மணி. அவர் இப்போதெல்லாம் காவி உடைதான் அணிகிறார். இந்துத்வா சாமியாரிணி. அவரையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நால்வரையும் மராட்டிய பயங்கரவாத எதிர்ப்புக் காவல்படை கைது செய்திருக்கிறது. அந்த அம்மணியின் பாழடைந்த மனக் குகை வெடிகுண்டுகளின் சேமிப்புக் கிடங்கு என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த சாமியார் அம்மணியின் நரம்பு மண்டலங்களே பயங்கரவாத நாற்றங்கால்கள் என்றும் சொல்கிறார்கள். கடந்த செப்டம்பர் முதல் வாரம் மராட்டிய நகரமான மலேகானிலும் குஜராத் மொடாசாவிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்தன. வழக்கம் போல் அதற்கும் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள்தான் காரணம் என்று சொன்னார்கள். உண்மையில் அந்த நகரங்களை நெருப்பில் நீராட்டியது காவி அம்மணியும் அவரோடு சேர்ந்த சங் பரிவாரங்களும்தான். குண்டு வெடிப்புக்கள் இஸ்லாமிய குடியிருப்புக்களில் நடந்தன. இது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர், வெடிகுண்டுகள் செய்வது எப்படி - வெடிக்கச் செய்வது எப்படி என்று இவர்களுக்கும் இன்னபிற சங்பரிவாரங்களுக்கும் பயிற்சி அளித்தவர் என்று புகார் எழுந்தது. விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இப்போது நாம் தெரிந்து கொள்வது என்ன? பயங்கரவாதம் - தீவிரவாதம் என்பதெல்லாம் ஒரு மதத்தின் பிறப்புரிமை அல்ல. அதற்கு மதமே கிடையாது என்பதுதான். இத்தனை ஆண்டுகளாக தீவிரவாதம் என்றால் இஸ்லாம் - இஸ்லாமியர்களின் ரகசிய ஆயுதம் என்று சொல்லி வந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்புகள் இப்போது என்ன சொல்கின்றன? தீவிரவாதி என்று ஓர் இஸ்லாமியப் பெண் கைது செய்யப்பட்டதில்லை. ஆனால், தீவிரவாதி என்றும் வெடிகுண்டு விளையாட்டில் மேதை என்றும் சங் பரிவார் அம்மணி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் காலப் புயலாம். ஆகவே அவரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் சிவசேனா பால்தாக்கரே. அந்த அம்மணி கல்லூரிப் பருவத்தில் பி.ஜே.பி. மாணவர் அணியின் முன்னணிச் செயலாளராகச் செயல்பட்டவர். அம்மணி ஒரு தீவிரவாதி என்பதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மையங்களில் நடந்த குண்டுவெடிப்புக்களுக்கும் அவர்தான் சூத்திரதாரி என்றும் தகவல் வெளியானது. பி.ஜே.பி. பதற்றம் கொண்டது. அவசர அவசரமாக `அம்மணி யாரோ தெரியாது' என்று அறிக்கை வெளியிட்டது. அம்மணியின் பாதார விந்தங்களில் இன்றைய பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங் அமர்ந்திருக்கும் அரிய புகைப்படங்கள் வெளியாகின. தனிப்பட்ட முறையில் யாரோ வெடிகுண்டு விளையாட்டு விளையாடியதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று இப்போது தப்பிக்கப் பார்க்கிறார்கள். அதே சமயத்தில், அந்த அம்மணியையும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களையும் ஜாமீனில் எடுக்க முனைகிறார்கள். டெல்லியில் நடந்த ஒரு குண்டு வெடிப்பு தொடர்பாக இரு இஸ்லாமிய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அப்பாவிகள் என்று ஜமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், அவர்களை ஜாமீனில் எடுக்க முயன்றார். `ஐயோ! இது என்ன அநியாயம்? பயங்கரவாதத்திற்குத் துணைவேந்தரே ஆதரவா' என்று பி.ஜே.பி. கண்டனக் கணைகளை ஏவியது. ஆனால் இன்றைக்கு பயங்கரவாத அம்மணியையும் அவரது ஆஸ்.எஸ்.எஸ். சீடர்களையும் காக்க சட்ட வல்லுனர்களின் உதவியை நாடுகிறது. எந்த வடிவில் எந்த மதத்தின் பின்னணியில் பயங்கரவாதம் தலை தூக்கினாலும் அதனை மனித சமுதாயம் கண்டிக்க வேண்டும். அப்பாவி மக்களின் உயிரோடும் உடைமைகளோடும் விளையாடும் பயங்கரவாதிகள் மனிதநேயத்திற்கு மரண சாசனம் எழுதுபவர்கள். கடந்த பல ஆண்டுகளாகவே மராட்டிய மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில், மசூதிகளில் குண்டுகள் வெடித்திருக்கினறன. இந்தக் கோரத் திருவிளையாடல்களுக்கும் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கும் உறுதியாகத் தொடர்பிருக்க வழியில்லை. எனவே, உண்மையான சமூக விரோதிகளைக் கண்டுபிடியுங்கள் என்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள் அறிவுறுத்தின. ஆனால், அந்த எலிகளைப் பிடிக்க மராட்டிய அரசுப் பூனை மறுத்துவிட்டது. என்றாலும் அந்த இருட்டறை சுந்தரிகள் மீது எப்படியோ வெளிச்சம் பாய்ந்துவிட்டது. எனவே, கைது செய்திருக்கிறார்கள். இனி சட்டம் சரியாகச் செயல்படவேண்டும். மராட்டிய மலேகானிலும் குஜராத் மொடாசாவிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இஸ்லாமிய குடியிருப்புக்களில் குண்டுகள் வெடித்தன. இதிலிருந்து என்ன தெரிகிறது? வெடிகுண்டு விளையாட்டுக்களை இந்தியா முழுமையும் நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார பயங்கரவாத அமைப்புகள் தயாராகிவிட்டன என்று அர்த்தம். வளர்க்கப்படும் வகுப்புவாத உணர்வுகள்- செயல்கள் அபாய எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கே பயங்கரவாதம் கோரமுகத்தோடு எழுகின்றது. அதற்கு நியாயம் கற்பிப்பவர்களும் ஆதரவு தருபவர்களும் பயங்கரவாதிகளைவிட மோசமானவர்கள்தான். அவர்கள் தேச விரோதிகள். இந்த வாதம் இருதரப்பினருக்கும் பொருந்தும். படிக்க:>> ஆர்.எஸ்.எஸ் ஸின் கொடூர முகம் -.விடியோ --.வெளிச்சமாகும் பல திடுக்கிடும் உண்மைகள். விடியோ--.மெக்கா, மதீனாவை தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.-
|
Monday, October 27, 2008
மாலேகான் குண்டுவெடிப்பு - பஜ்ரங்தளத்தினருக்கு இந்திய ரானுவத்தினர் உதவி அம்பலம்
38 பேர் உயிரிழந்த 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் முடமாகி நகரமே ரத்தமயமானதோடு - பிய்ந்துப்போன சதைகளுடன்... மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.
இவர் இந்து ஜாகிரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்தவர். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உமாபாரதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். சைக்கிள்களில் குண்டு வைத்து வெடிக்கப்பட்டது.
சைக்கிள்கள் சாதாரண மக்களின் வாகனம் என்பதிலிருந்து அது பயங்கரவாதிகளின் ஆயுதமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
மலேகன் நகரமே ரத்தமயமானதோடு - பிய்ந்துப்போன சதைகளுடன்... மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.
குண்டுவெடிப்பு-2 ராணுவ வீரர்களுக்கு தொடர்பு!
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2008
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் கைதாதியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஒரு மேஜர் உள்பட இரு முன்னாள் ராணுவத்தினரும் பிடிபட்டுள்ளனர்.
மாலேகானில் கடந்த மாதம் 29ம் தேதி சிமி அலுவலகம் முன்பு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள். 90 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல குஜராத் மாநிலம் மோடாசா நகரிலும் குண்டுவெடித்தது.
அதில் ஒருவர் பலியானார்.இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து வெடிக்க வைத்திருப்பது தெரிந்தது. டைமர் கருவி பொருத் தப்பட்டிருந்த அந்த வெடி குண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டிருந்தது.
தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்த போது, அது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக போலீசார் சியாம் சாகு, திலீப்நாசர், சிவநாராயண்சிங் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் மூன்று பேரும் பெண் துறவி பிரக்யா தாகூர் என்பவருக்கு நெருக்கமானவர்கள்.
இவர் இந்து ஜாகிரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்தவர். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உமாபாரதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் இந்து ஜாகிரண் மஞ்ச்சில் இணைந்த பின்னர் துறவியானார்.
பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ராமஜென்மபூமி போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தேமாதரம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அதற்கு குஜராத் அரசு நிதியுதவி அளித்ததால், குஜராத் மாநிலம் சூரத்திற்கு இடம் மாறினார் பிரக்யா.
மாலேகான் குண்டுவெடிப்பில் சிக்கிய மோட்டார் சைக்கிள் இவரது பெயரில்தான் பதிவாகியிருந்தது. இதையடுத்தே இவருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர்.
சிமி இயக்கத்தினரை பழிக்குப் பழி வாங்க இந்த குண்டு வெடிப்புகளை பெண் சாமியார் உள்ளிட்ட குழு நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதை தொர்ந்து பெண் சாமியார் பிரக்யாவை போலீசார் கைது செய்தனர். இது சங் பரிவார் அமைப்புகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணுவத்தினருக்கு தொடர்பு:இதற்கிடையே இந்த வழக்கில் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 வீரர்களும் கைதாகியுள்ளனர். இருவரும் தற்போது இந்து ராணுவப் பயிற்சிக் கழகம் என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்கள்.
இந்த பயிற்சிப் பள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று வகுப்புகள் நடத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் பெயர் பிரபாகர் குல்கர்னி மற்றொருவர் பெயர் உபாத்யா. இவர் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றியவர். 2 ராணுவ வீரர்களும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஆவர்.
வெடிகுண்டு தயாரிக்க இவர்கள் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தை சேகரித்து அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கைதான பெண் சாமியார் உள்பட 2 ராணுவ அதிகாரிகளையும் போலீசார் விசாரணைக்காக மும்பை கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவர்களிடம் தீவிர விசாரணையில் நடத்தியதில் குண்டு வெடிப்பில் இந்து அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
.
ராணுவ அதிகாரிகள் குல்கர்னியும், உபாத்யேயும் நாசிக் அருகே ராணுவ பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்த பயிற்சி மையத்தை இந்து ராணுவ கல்வி கழகம் நடத்தி வந்தது.அதில் வெடிகுண்டுகள் தயாரித்தல், வெடிகுண்டு களை கையாள்வது குறித்து இரு அதிகாரிகளும் பயிற்சி அளித்து வந்துள்ளனர். மற்றும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்தனர்
இதற்கிடையே மாலேகானில் 2006-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பிலும் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
http://thatstamil.oneindia.in/news/2008/10/26/india-2-ex-armymen-including-a-major-involved-in-malegoan.html
************************************************
படிக்கவும்:
மாலேகான் குண்டு வெடிப்பு. ஹிந்துத்துவ சதி அம்பலம் .
மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் வெடிகுண்டுகளின் கிடங்குகளாக மாறி வருகிறது.
குவியல் குவியலான பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள்.
சூரத் வெடிகுண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் காரணம். பூரி சங்கராச்சாரியார்
மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!
மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!
நன்றி : வாஞ்சூர் அப்பா
Saturday, October 25, 2008
இந்துத் தீவிரவாதம் என்று சொல்லாதீர்கள்” – பாஜக வின் கண்டனம் சரியே
மகாராஷ்டிராவில் 2006 செப்டம்பரில் மாலேகாவ் என்கிற ஊரின் மசூதி ஒன்றின் வெளியே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 35 பேர் உயிர் இழந்து நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தேசத்தின் எத்தனையோ குண்டுவெடிப்பு சம்பவம் போல் அதுவும் கிட்டத்தட்ட மறக்கப்பட்டிருக்கும்.
அப்போது இதன் பின்னணியில் பாகிஸ்தானும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு SIMI-யும் இருப்பதாகச் சொல்லப்பட்டு, இஸ்லாமியத் தலைவர்கள் பலரும், “இந்திய இஸ்லாமியர்களுக்கிடையே குழப்பம் விளைவிக்கும் இது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிட வேண்டும்” என்கிற ரீதியில் கண்டனம் தெரிவித்து ஒற்றுமையை வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டதெல்லாம் எனக்கு நினைவிருக்கிறது.
அப்போது அமைக்கப்பட்ட விசாரணைக்குழு (ATS) தன் விசாரணையைத் தொடர்ந்து, இப்போது அந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் சாத்வி ப்ரக்யா சிங் டாக்குர் என்கிற ஒரு சாதுவின் பங்கினைக் கண்டறிந்திருக்கிறது. அவரும் அவருடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சாத்வி என்கிற சொல் சாது என்பதன் பெண்பால் வடிவம். அவர் இந்து ஜன் ஜாக்ரன் மஞ்ச் என்கிற இந்துத்வா அமைப்பின் மகளிர் பிரிவின் முக்கியஸ்தர்; ABVP எனப்படும் மாணவர் அமைப்பு, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளுடன் தொடர்பு உள்ளவர் என்கிற செய்திகள் வெளிவருகின்றன. அந்த அமைப்பினர் உடனடியாக அவற்றை மறுத்துள்ளனர். இந்துத்வா அமைப்புகளில் பொதுவாக உறுப்பினர் பதிவுகள் இருப்பதில்லை. வாலண்ட்டரி என்கிற பெயரில் எவரையும் எப்போதும் கழற்றிவிடத் தோதுவாகச் செயல்படும் அமைப்பினர் அவர்கள் என்பது விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும்.
“கூட்டத்தில் கோழி திருடியவன் தலையில் இறகு இருக்கும்” என்று கேட்ட மாத்திரத்தில் தலையைத் தடவிப் பார்க்கும் “உத்தமன்” போல் பாராளுமன்றத்தில் பாஜக தம் குரலை உயர்த்த ஆரம்பித்திருக்கிறது. “இந்துத் தீவிர வாதிகள்” (HINDU TERRORIST) என்கிற வார்த்தையே உபயோகப்படுத்தப்படக் கூடாது என்பது அவர்களின் வாதம்.
அவர்கள் சொல்வது முழுவதும் சரி. தீவிரவாதிகள் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மனநோயாளிகள்; பாதி மிருகங்கள். சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள். “இந்துத்வா தீவிரவாதம்” என்கிற வார்த்தை தான் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
அமைப்பு பூர்வமான இயக்கத்தினர் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுடைய பணவரவு, அவர்தம் நடவடிக்கைகள் எல்லாமே தீவிரமாகச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு சந்தேகம் இம்மியளவு இருந்தாலும் அவை உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். களையுனர் கைகொல்லும் காழ்த்த இடத்து முள்மரமாக வளர்ந்து விட்டால், அவர்கள் சமூகத்தை எப்படி அழிப்பார்கள் என்பதற்கு இன்னுமோர் எச்சரிக்கை இந்த நிகழ்ச்சி. "தண்டிக்கப்படாத கிரிமினல் குற்றங்கள் மேலும் கிரிமினல்களை உருவாக்கும்" என்கிற குஷ்வந்த் சிங்கின் வாதத்திற்கு இன்னோர் உதாரணம். 1992-ல் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சரிவர தண்டிக்கப்பட்டிருந்தால் அதன் பிறகான பல தேசிய இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் இது போன்ற விஷயங்களைப் பூதாகரமாக்கி நாட்டினர் உணர்வுகளை இந்துப் பெரும்பான்மை என்கிற போர்வையில் பிளவு படுத்தும் சதியையும் இந்த மாபாவிகள் செய்வார்கள். பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.
நன்றி : முயல்
Friday, October 24, 2008
மாலேகான் குண்டுவெடிப்பு: இந்து அமைப்பே காரணம்
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு இந்து ஜாகிரன் மஞ்ச் என்ற இந்து அமைப்பே காரணம் என கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் துறவி என்று கூறப்படுகிறது.
மாலேகான் நகரில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது.
அதே நாளில், குஜராத் மாநிலம் மோடாசா நகரிலும் குண்டுவெடித்தது. இதில் மொத்தமாக 6 பேர் உயிரிழந்தனர். மாலேகானில் 5 பேர் இறந்தனர்.
இரு சம்பவங்களிலும் மோட்டார் சைக்கிள்களில் குண்டுகள் வைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதாகியுள்ளனர் என்று மாலேகான் நகர காவல்துறை இணை ஆணையர் ஹேமந்த் கர்கரே தெரிவித்துள்ளார். மேல் விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
முன்னதாக ஷியாம் சாஹு, திலீப் நஹர், சிவநாராயணன் சிங் மற்றும் தர்மேந்திரா பைராகி ஆகிய நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வந்தனர். இவர்கள் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் ேசர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்து அமைப்பே காரணம்?
இதற்கிடைேய, இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற இந்து அமைப்பே மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இதை இந்து ஜாகிரண் மஞ்ச் அமைப்பு மறுத்துள்ளது.
இருப்பினும் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரக்யா சிங் தாக்கூர் என்கிற துறவி என்று கூறப்படுகிறது.
மாலேகான் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் (இதில்தான் குண்டு வைக்கப்பட்டிருந்தது) சூரத்தைச் ேசர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. இவருக்கு இந்து அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்கிருந்துதான் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான பல முக்கிய துப்புக்கள் போலீஸாருக்குக் கிடைத்தன.
மோடாசா குண்டுவெடிப்புக்கும் இந்து ஜாகிரண் மஞ்ச்தான் காரணமாக இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
பாஜக மறுப்பு:
இந்து ஜாகிரண் மஞ்ச் அமைப்புக்கு தீவிரவாத தாக்குதலில் சம்பந்தம் இல்லை என்று பாஜக மறுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக பொதுச் செயலாளர் கோபிநாத் முண்டே கூறுகையில், இந்து அமைப்புகளுக்கு மாலேகான் குண்டுவெடிப்பில் எந்தத் தொடர்பும் இல்லை.
குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இந்து அமைப்புகளை தொடர்புபடுத்த முடியாது என்றார்.
ஆனால் சிபிஎம் எம்.பி. பிருந்தா காரத், இந்து அமைப்புகள்தான் மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் போலீஸார் கைது செய்துள்ள நபர்கள் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள். எனவே இதை யாரும் மறுக்க முடியாது என்றார் அவர்.
நன்றி : தட்ஸ்தமிழ்
Thursday, March 08, 2007
தென்காசி - இந்து தீவிரவாதி கைது

தென்காசியில் தமுமுக தலைவர் சகோ. மைதீன் சேட் கான் அவர்கள் மீது கடந்த வாரம் இந்து முன்னனியை சேர்ந்த இந்து தீவிரவாதிகள் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் கொடூர கொலை வெறி தாக்குதலை நடத்தினர். அல்லாஹ்வின் பெருங்கருனையால் சகோ. மைதீன் சேட் கான் அவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உயிர் பிழைத்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்து முன்னனியயை சேர்ந்த இந்து தீவிரவாதிகளை காவல் தறையினர் தேடி வந்தனர். மற்றும் டெல்லி பேரணி முடிந்தால் தமுமுக வினரின் பெரும் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்ற நிர்ப்பந்தத்திலும் மிக துரிதமாக காவல் துறையினர் நியாய உணர்வுடனும் செயல்பட்டு தலைமறைவான இந்து தீவிரவாதிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சகோ. சேட் மைதீன் கான் மீது தாக்குதல் நடத்தியதாக தென்காசியை சேர்ந்த இந்து தீவிரவாதிகள் செந்தில்குமார் மற்றும் சுரேந்தர் என்ற இருவர் கோவை-பல்லடம் நீதிமன்றத்தில் சரனடைந்தனர் பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று தென்காசி காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு கபிலன் என்ற இந்து முன்னனியை சேர்ந்த தீவிரவாதியை கைது செய்துள்ளனர்.
சிறப்பாக செயல்படும் காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் இதே வேகத்தில் இவ்வழக்கில் எஞ்சிய இந்து முன்னனியை சோந்த இந்து தீவிரவாதிகளையும் கைது செய்து சட்ட ஒழுங்கையும், நீதியையும் நிலைநாட்டி காவல் துறை தனது செயல்பாடுகள் மதச்சார்பற்றது என்பதை நிறுபிக்கும் என்று நம்பகின்றோம்.
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்
Sunday, February 18, 2007
எது மிருக வதை? படத்தை பாருங்கள்!!

அமைதியான முறையில் எவ்வித வதையும் இன்றி, உணவுக்காக ஆடு மாடுகயையும் ஒட்டகங்களையும் இறைவனின் பெயரால் பலியிடுவதை கோரமானது கொடூரமானது மிருகங்களை வதை செய்கின்றார்கள் முஸ்லிம்கள் என்று கூறி இந்து தீவிரவாதிகள் பலர் வழக்கு தொடர்கின்றார்கள் நீதி மன்றமும் அவ்வாறு அமைதியான முறையில் பலியிடுவதற்கு பல முறை பல இடங்களில் தடைகளை விதித்துள்ளது.
ஜனநாயக இந்தியாவில் மாநிலங்களை ஆட்சி செய்யும் சில வெறி பிடித்த சில இந்து தீவிரவாத அரசுகள் அவ்வாறு தங்கள் மாநிலங்களில் முஸ்லிம்கள் அமைதியான முறையில் குர்பானி கொடுப்பதை தடை செய்துள்ளன.
மேலே உள்ள புகைப்படத்தை பார்த்தால் தெறியும் யார் மிருகங்களை உண்மையில் வதை செய்வது என்றும், வெறி பிடித்து மிருகங்களை உயிரோடு கடித்து குதறி கோரமான முறையில் கொலை செய்வது என்றும்.
மிருக வதை பற்றி பேசும் மேனகாவும் மற்ற அமைப்புக்களும் இப்போது சிந்திக்க வேண்டும் எது மிருக வதை மற்றும் உண்மையில் எந்த மதத்தினர் மிருக வதை செய்கின்றார்கள் என்றும்.
மக்காவிற்கு சென்று ஹாஜியாகி ஆசி வழங்க கூடிய தகுதி பெற்ற சுவனப்பிரியனின் தாத்தாவிடம் ஆசி பெற்றதால் இன்னும் புனிதராகி இன்று வரை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், கொடூரமானவர்களாகவும், அசிங்கமானவர்களாகவும் ஒரு பென் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உடலுரவு கொள்ளலாம் மாதாவிடாய் வருவதற்குள் அவள் பலருடன் உடலுரவு கொள்ளலாம் பூன்ற பல புனிதமான காரியங்களை எழுதியும் பேசியும் வரும் டோன்டு ராகவன் போன்றோரும், இந்து தீவிரவாதி நேசக்குமார் போன்றோரும் இது குறித்து என்ன எழுதப் போகின்றார்கள்? யார் உயிர் வதை செய்பவர்கள்? இந்துக்களா? முஸ்லிம்களா? எந்த மதம் உயிர் வதையை அங்கீகரிக்கின்றது? இஸ்லாமா இந்துத்துவமா?
இனியாவது இந்து தீவிரவாதி நேசக்குமாரும் பலருடன் உடலுரவு, கள்ள உடலுரவு போன்ற அசிங்கங்களை சுவனப்பிரியனின் தாத்தாவின் ஆசியோடு இனையத்தில் அரங்கேற்றிவரும் டோன்டு ராகவன் போன்றோரும் புறிந்து கொள்ள வேண்டும் மிருகங்களை வதை செய்வது முஸ்லிம்கள் அல்ல, இஸ்லாம் மிருக வதையை போதிக்க வில்லை என்பதை.
இஸ்லாம், காரைக்குடி
