Tuesday, March 06, 2007

TMMK மீதான தென்காசி தாக்குதல் முழு விபரம்


நெல்லை மாவட்ட த.மு.மு.க. தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல்! படுகாயத்துடன் உயிர் தப்பினார்!

மார்ச் 2ஆம் தேதி மாலை நேரம்! தமுமுக தலைமையகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. டெல்­ பேரணி குறித்த தெருமுனைப் பிரச்சாரங்களும் அப்போதுதான் முடிந்திருந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி­ருந்து இரண்டாவது நாளாக மக்கள் டெல்­ பேரணிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்!

அப்போதுதான் அச்செய்தி எதிர்பாராத வண்ணம் சுமார் 8:30 மணியளவில் தலைமையகத்திற்கு கிடைத்தது.

இரவு 8 மணியளவில் தென்காசியில் நெல்லை மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கானை சிலர் சரமாரியாக வெட்டித் தள்ளியதாகவும், அவர் உயிருக்குப் போராடுவதாகவும் அந்த தொலைபேசி செய்தி பதறியது.

உடனடியாக தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் இச்செய்தியை உறுதிபடுத்திக் கொண்டார். நெல்லை மாவட்டச் செயலாளர் பகத்சிங் முஹம்மது வும் தொலைபேசியில் நடந்த விவரங்களை கூறினார்.

சம்பவம் நடந்தது எப்படி?

டெல்­ பேரணி குறித்த ஏற்பாடுகளையும் பயண ஆயத்த வேலைகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மைதீன் சேட்கான், தனக்கிருந்த அச்சுறுத்தலை யும் பொருட்படுத்தாமல் தனியாகவே சுற்றி வந்திருக்கிறார்.

இந்நிலையில்தான் சேட்கான் அவர்கள் அம்மன் சன்னதி தெருவில் செல்லப்பா உணவகத்திற்கருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அவரை வழி மறித்து, 'டெல்­க் காடா போறீங்க.. எப்படிப் போறீங்கன்னு... பார்ப்போம்டா...' என வெறிக் கூச்சல் எழுப்பியபடியே சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். அவர் சுதாரிப்பதற்குள் 9 வெட்டு களில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார் சேட்கான்!

கோழைகள் அப்போதும்கூட சேட்கானுடன் நேருக்கு நேராக நிற்காமல் அவரது முதுகில்தான் முதல் தாக்குதலை நடத்தியுள்ளனர்! அப்போது மணி சரியாக 8.05.

மூன்று பேர் கொண்ட கும்பல்தான் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மோட்டார் பைக்கில் வந்தவரை திடீரென குறுக்கே சைக்கிளை நிறுத்தி, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இத்தாக்குதல் பற்றிக் கூறிய நகர நிர்வாகி நெய்னா, பலமான வெட்டுகளுடன் தற்காப்புக்காக சேட்கான் அருகிலிருந்த செல்லப்பா ஹோட்டலுக்குள் நுழைந் திருக்கிறார். அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் உடனடியாக கூடிவிட வன்முறைக் கும்பல் ஓடிவிட்டது.

சில நூறு அடி தூரத்தில் எதேச்சையாக நின்று கொண்டிருந்த சாதிக், மசூது உள்ளிட்ட தமுமுகவினர், விபரம் புரியாமல் அங்கு ஓடிவர அப்போதுதான் தாக்கப்பட்டது சேட்கான் எனத் தெரிய வந்திருக்கிறது.

உடனடியாக ஆம்புலென்ஸில் சேட்கானை ஏற்ற, பின்னால் பாதுகாப்பிற்கு ஒரு காரில் தமுமுகவினர் தொடர, மின்னல் வேகத்தில் ஆம்புலென்ஸ் நெல்லை அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தது. ஆம்புலென்ஸ் வாகனம் புறப்படும்போதே 'நடுபல்க்' என்ற இடத்தில் நின்று கொண்டு, சங்பரிவார தீவிரவாதிகள் ஆம்பு லென்ஸ் மீது கற்களை எறிந்துள்ளனர்!

மக்கள் கொந்தளிப்பு!

அதற்குள் தீயாய் செய்தி பரவ, தென்காசி பொதுமக்கள் கொந்தளித்து வீடுகளை விட்டு வீதியில் குழுமத் தொடங்கினர். சிலர் பேருந்துகளை உடைக்க.. நிலைமை விபரீதமானது. உடனடியாக தமுமுகவின் நகரச் செயலாளர் நெய்னா, வர்த்தகரணி சாதிக், ஆட்டோ சங்கத் தலைவர் பீர், தொழிலாளரணி மசூது ஆகியோர் பொது மக்களை கலைந்து போகச் கூறினர். கூட்டம் ஆவேசத்தில் கூச்ச­ட, அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன் அவர்கள், பொதுமக்களிடம் பேசி அமைதி காக்குமாறும், குற்றவாளி கள் விரைந்து பிடிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

அதன் பின்னர் நள்ளிரவுக்குப் பிறகு தென்காசியில் நிலைமை கட்டுக்குள் வந்தது. எனினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செய்தி பரவ, கோப உணர்ச்சிகள் இயல்பாகவே வெளிப் பட்டன. ஆங்காங்கே தமுமுகவினர் மக்களை அமைதிக் காக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

தயார் நிலை!

மறுபுறம் ஆம்புலென்ஸ் வாகனம் 40 நிமிடத்தில் சீறிக் கொண்டு அரசு மருத்துவ மனையை வந்தடைந்தது. ஏற்கெனவே மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக சேட்கான் அவசர சிகிக்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அதற்குள் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் மருத்துவமனை வளாகத்தில் குழுமினர். மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தாழையூத்து பகுதிகளி­ருந்து தமுமுகவினரும் விரைந்து வந்தனர். போலீஸ் கமிஷனர் அசோக்குமார்தாசும், மாவட்ட கலெக்டரும் மருத்துவமனைக்கு வந்து அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தினர்!

நள்ளிரவு ஆறு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அவசர சிகிக்சையளித்தது. இறைவனின் பெரும் கிருபை யால் அபாயக் கட்டத்தைத் தாண்டி, சேட்கான் உயிர் பிழைத்து விட்டார்! அதன் பிறகே மருத்துவமனை வளாகத்தில் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் பொதுமக்கள்!

மாநிலச் செயலாளர் கோவை உமர், மாநில துணைச் செயலாளர் சாதிக் அலி ஆகியோர் கோவையிலிருந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையைக் கண்காணித்து மக்களை அமைதிப்படுத்தினர்.

காவல்துறை உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் காத்திருக்கின்றனர்.

தென்காசியில் தமுமுக மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கான் மீது தொடுக்கப் பட்ட கொலைவெறித் தாக்குதலை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் வருவார்!

ஃபாஸிஸத்தின் கோரக் கரங்கள் சேட்கானை குதறியிருக்கின்றன. தமுமுக தொண்டன் என்றுமே கோழையாக வீழ மாட்டான். இந்த சமுதாயத்திற்காக ரத்தம் சிந்துவதற்கும், உயிர் துறப்பதற்கும் அவனே முன்வரிசையில் நெஞ்சை நிமிர்த்தி நிற்பான்.

இதுவரை சேட்கான் நெல்லை மாவட்டத் தமுமுக தலைவராக மட்டுமே வலம் வந்தார்! இனி ஒட்டுமொத்த நெல்லை மாவட்ட மக்களின் தளபதியாக மீண்டும் களமிறங்குவார்! இன்ஷா அல்லாஹ்!

நன்றி : தமுமுக இனையத் தளம்

No comments: