Wednesday, March 07, 2007

டில்லியில் முஸ்லிம்கள் பேரணி

டில்லியில் முஸ்லிம்கள் பேரணி

புதுடில்லி:கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி டில்லியில் இன்று பேரணி நடைபெறுகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எந்தளவுக்கு பின்தங்கியுள்ளனர் என்பது குறித்து சச்சார் கமிட்டி ஆராய்ந்து பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது. இந்த கமிட்டியின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி டில்லியில் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் உ.பி., ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்கவுள்ளனர். ராம்லீலா மைதானத்தில் இருந்து கிளம்பி, பார்லிமென்ட்டை நோக்கிச் செல்லும் இந்த பேரணி, ஜந்தர் மந்தர் பகுதியில் நிறைவடைகிறது. இத்தகவல்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவஹிருல்லா டில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். அதேபோல மாலையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அம்பேத்கர் பவனில் கருத்தரங்கும் நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

No comments: