Thursday, November 20, 2008

இந்துத்வ வெறிக் கட்சிகள் அலறுகின்றன."சங்கராச்சாரியாரின் விலை என்ன? "

இந்துத்வ வெறி பயங்கரவாத செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன.

இந்துத்வ பயங்கரவாதம்:சம்ஜவுதா விரைவுத் தொடர் வண்டியில் குண்டு வெடிப்பு, அய்தராபாத் மசூதி, அஜ்மீர் தர்கா சதிகளிலும் புரோகித்துக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு.

மும்பை, நவ. 20- காந்தியாரைக் கொன்ற இந்துப் பயங்கரவாதம் அதன் பிறகு நடத்தியுள்ள சதிச் செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன. அபிநவ் பாரத் எனும் பயங்கரவாத அமைப்பு எல்லா சதிச் செயல்களையும் நடத்தியுள்ளது என்பது வெளிவந்துள்ளது.

பான்டே சங்கராச்சார்யா என்று கூறிக் கொள்ளும் நபருக்கு ராணுவ முகாம்களுக்கு வந்து போக அனுமதி அட்டை கொடுத்ததும், கைத்துப்பாக்கி ஒன்றை புரோகித் கொடுத்ததும் அம்பலமாகியுள்ளது.

பான்டே அபிநவ் பாரத் அமைப்பின் ஊதியம் பெறும் நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.


அபிநவ் பாரத் எனும் இந்துப் பயங்கரவாத அமைப்புதான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ், ரயிலில் 68 பேர் கொல்லப் பட்டதற்கும், அய்தராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சதிச் செயல்களுக்கும் காரணம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பயங்கரவாத சதிச் செயல்களில் ஈடுபட்ட சுனில் ஜோஷி என்பவன் 2007 இல் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான். இந்தச் செய்தியை புரோகித்திடம் தொலைபேசியில் தெரிவித்தபோது, சம் ஜவுதா ரயில் குண்டு வெடிப்புக்குக் காரணமான ஜோஷி தியாகியாகி விட்டார் என்று புரோகித் குறிப்பிட்டார் என்பதை வாக்குமூலத்தில் ஒரு சாட்சி தெரிவித்துள்ளார்.


இத்தகயை சதிச் செயல்களை குஜராத்தைச் சேர்ந்த ஜதீன் சாட்டர்ஜி என்பவர்தான் செய்துள்ளார். இவரை சாமி அசிமானந்த் என்கிறார்கள். வனவாசி கல்யாண் ஆசிரமம் எனும் சர்ச்சைக்குரிய அமைப்பை நடத்தி பழங்குடியினரிடையில் கலவரம் செய்து வரும் அமைப்பை இவர் நடத்தி வருகிறார். இவரையும் கல்சங் ராம் என்பாரையும் இன்னும் கைது செய்ய முடியவில்லை.


சாத்வி பிரக்யா சிங் தனது மோட்டார் சைக்கிளை ஜோஷிக் குக் கொடுத்திருந்ததும் அவர் கொல்லப்பட்ட பின்னர் அதனை கல்சங்ராம் பயன்படுத்தி வெடி குண்டு வைத்து மாலேகாவ்னில் வெடிக்கச் செய்ததும் ஏற்கெனவே வெளிவந்துள்ளது.

மத்தியப் பிரதேசக் காவல்துறையினர் அபிநவ் பாரத் அமைப்பின் சுனில் ஜோஷி சதிச் செயல்களில் ஈடுபட்டதை 2002 இல் கண்டு பிடித்தது. அப்போதைய காங்கிரசு முதல் அமைச்சர் திக் விஜய் சிங் இது பற்றி அறிவிப்பு செய்து பஜ்ரங்தள் உள்பட இந்துத்வ அமைப்புகள் ஈடுபட்டது குறித்து ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார்.

ஆனால் பிறகு முதலமைச்சராக வந்த உமாபாரதி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று 2003 இல் உத்தரவிட்டு விட்டார்.
இந்துத்வ வெறிக் கட்சிகள் இந்துப் பயங்கரவாதிகளைக் காப்பாற்றி ஆதரவு அளித்து வந்துள்ளனர். இப்போது மகாராட்டிர அரசு நடவடிக்கை எடுக்கும்போது அலறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

இந்துத்வ பயங்கரவாதம்:கைதான புரோகித் மீது மேலும் இரு வழக்குகள்
ஆர்.டி.எக்ஸ் கடத்தியது பற்றி ராணுவ அதிகாரி சாட்சி - பான்டே சங்கராச்சார்யாவுக்கு மெய் அறியும் சோதனை

நாசிக், நவ. 20- மாலேகான் குண்டு வெடிப்புச் சதி தொடர் பாகக் கைது செய்யப்பட்டு நவம்பர் 29 வரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிடப்பட்ட ராணுவ அதிகாரி புரோகித் மீண்டும் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொய் ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்து இரண்டு பேர்களுக்கு துப்பாக்கி உரிமங்களை இராணுவ ஒதுக்கீட்டில் வாங்கிக் கொடுத்த வழக்கு தொடர்பாக இந்த ஆணை.


போர்ப்படைக்குச் சொந்தமான ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தைத் திருடி குண்டு வெடிப்புச் சதிச் செயல்களுக்கு புரோகித் பயன்படுத்தியது தொடர்பாக, மற்றொரு போர்ப்படை அதிகாரி கேப்டன் நிதின் ஜோஷி வாக்கு மூலம் கொடுத்து உள்ளார். மாஜிஸ்டிரேட் முன்னிலையில் தரப்பட்ட இந்த வாக்குமூலம் வழக்கில் மிக முக்கிய சாட்சிய மாகக் கருதப்படும்.

பல கூட்டங்களை ஏற்பாடு செய்து அவற்றில் பேசி சதிகாரர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் புரோகித் என்பது இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சங்கராச்சார்யா

பான்டே சங்கராச்சார்யா, காவல் துறைப் பாதுகாப்பில் எடுக்கப்பட்டு மெய் அறியும் நார்கோ அனலைசிஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரே கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படை யில் கேள்விகள் தயாரிக்கப் பட்டு கேட்கப்பட்டன. இரண்டாம் முறையாகவும் இச்சோதனை நடத்தப்படுமா என்பது இனிமேல் தெரியும்.

அத்வானி பேச்சு
இந்நிலையில் பிரதமர் கனவில் பவனி வரும் அத்வானி, பெண் சாமியார் பிரக்யாவுக்குப் பரிந்து பேசியுள்ளார். அவர் மீதான குற்றச்சாற்றுகளைக் காவல்துறை விசாரணை செய்யக் கூடாது என் றும் நீதி விசாரணை வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

1992 இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பற்றிய நீதி விசாரணை 16 ஆண்டுகளாக முடியாமல் இழுத்தடித்துக் கொண்டு வரப்படுகிறது. அதில் குற்றம் சாற்றப் பெற்ற அத்வானி - வழக்கைச் சந்திக்காமலே வலம் வந்து கொண்டிருக்கிறார். குற்றவாளிகள் தப்பிக்கும் மார்க்கம் நீதி விசாரணையில் இருப்ப தால் இதைக் கேட்கிறார் போலும்!


இந்துத்வ பயங்கரவாதம்

அபிநவ் பாரத் தேசிய ஒருங்கிணைப்பாளர்சுதாகர் சதுர்வேதி கைது செய்யப்படுவார்

மும்பை, நவ.20- மாலேகாவ்ன் குண்டு வெடிப்புச் சதியில் தாம் ஈடுபட்டதாக ஒத்துக் கொண்டுள்ள சுதாகர் சதுர்வேதி எனும் பார்ப்பனர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று மும்பை, பயங்கரவாதத் தடுப்புக் காவல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆள் அபிநவ் பாரத் அமைப்பின் கூட்டங்களை தேவ்லாலி, இந்தூர், குஜராத், பஞ்ச்சமதி, ஜபல்பூர், ஃபரிதாபாத், அரியானா முதலிய இடங்களில் ஏற்பாடு செய்து பயங்கரவாதத்தைத் தூண்டி விட்டதை ஒத்துக் கொண்டு விட்டார்.

லெப்டினன்ட் கர்னல் புரோகித் சதியைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்துச் செய்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்.சின் அறிவுறுத் தலின் பேரில் பா.ஜ. கட்சியின் ராஜ்நாத் சிங்கும் அத்வானியும் புரோகித்துக்கு ஆதரவாகப் பேசியதைக் கேட்டதும் புரோ கித்தன் பங்குக்குத் தன் உயிருக்கு ஆபத்து வந்தால் மராட்டிய காவல்துறைதான் அதற்குக் காரணம் என்று கூற ஆரம்பித்து விட்டார்.


"சங்கராச்சாரியாரின் விலை என்ன? "

கடைகளில் கத்தரிக்காய், புடலங்காய், வெங்காயம் வாங்குவதுபோல சங்கராச் சாரி பதவியையும் விலைக்கு வாங்கலாம் என்று சொன்னால், சொல்கின்றவர்களைப் பார்த்து நகைப்பார்கள்தான்.

உண்மையைத் தெரிந்து கொண்டால், முதலில் நகைத் தற்காக வெட்கப்படவே செய்வார்கள்.

மாலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்பவர் யார் தெரியுமா?

எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய இராணுவத்தில் விமானப் படையில் பணி யாற்றியவர். அதன்பின் வாரணாசிக்கு (காசிக்கு) வந்தார் - சுற்றுமுற்றும் பார்த்தார். சாமியார் தொழில் நல்ல வளமான தொழில் என்பதை உணர்ந்தார். சபலம் தட்டியது.

என்ன செய்தார் தெரியுமா? வாரணாசியில் உள்ள ஒரு மடத்துக்கு ரூபாய் 15 லட்சம் கொடுத்து அந்த மடத்தின் சங்கராச்சாரியார் பதவியை விலைக்கு வாங்கி விட்டாராம்!

சங்கராச்சாரி பதவி என்றால், ஏதோ விலை மதிக்கப்பட முடியாத பெரும் பதவியல்ல; விலைக்கு வாங்கக் கூடிய கத்திரிக்காய் போன்றதுதான் என்பது இதன் மூலம் விளங்கிடவில்லையா?

இந்தச் சங்கராச்சாரி என்ன செய்திருக்கிறார் 700 பேர்களுக்கு வன்முறைப் பயிற்சி கொடுத்து களத்தில் இறக்கிவிட்டுள்ளார். மாலே கான் கலவரம் மற்றும் பல்வேறு மோதல்களுக்கு இவர் ஒரு முக்கிய சூத்திரதாரி என்று தெரிகிறது.

லோகக் குரு இப்பொழுது கம்பியை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
ஏற்கெனவே காஞ்சி சங்கராச்சாரிகள் இருவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தவர்கள்தான்; இப்பொழுதுகூட பிணையில் தான் வெளியில் திரிகின்றனர்.

பட்டப்பகலில் பச்சைத் தமிழர் காமராசரைப் படு கொலை செய்ய முயன்ற கூட்டத்தில்கூட சங்கராச்சாரிகள் உண்டு (பூரி சங்கராச்சாரி தான்).
முற்றும் துறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால், பூரி சங்கராச்சாரிக்குக் குடும்பமே உண்டு! காஞ்சி சங்கராச்சாரிக்குக் குடும்பம் இல்லையென்றாலும், காதலிகள் உண்டு. இவர்கள் லோகக் குருக்களாம்! வெட்கக்கேடு!- மயிலாடன்.THANKS : VIDUTHALAI.COM

No comments: