கடந்த மே 26, 2007 ஞாயிற்றுக்கிழமை முகவை தமுமுக சார்பில் நீதிபதி இராஜேந்திர சச்சார் அறிக்கையை அமுல்படுத்தக் கோரி மாபெரும் வகையில் தமுமுக தொண்டரணியினரின் அணிவகுப்பு நடைபெற்றது. முகவை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய சின்னக்கடை வீதியில் இருந்து துவங்கிய இந்த அணிவகுப்பை தமுமுக வின் மாநில பொதுச்செயலாளரும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவருமான ஜனாப். எஸ். ஹைதர் அலி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
ஜனாப் எஸ் ஹைதர் அலி பேசுகையில் வலது ஓரம் சகோ. சலிமுல்லாஹ் கான் துன்டு போட்டு அமர்ந்திருப்பது ஜனாப் ஹசன் அலி எம்.எல்ஏ
முகவை தமுமுக தலைவர் சகோதரர் சலிமுல்லாஹ் கான் அவர்கள் தலைமையில் சாரை சாரையாக அணிவகுத்துச் சென்ற முகவை தமுமுக வின் தொண்டரனியினரின் அணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வீதிகளெங்கும் ஆன்களும் பென்களுமாக மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி நின்று இவ்வணிவகுப்பை கண்டு மகிழ்ந்தனர்.
இவ்வணிவகுப்பானது மக்களுக்கு சச்சார் குழுவின் அறிக்கையைப் பற்றியும் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பிரான ஜனாப் ஹசன் அலி அவர்களும் தமுமுக வின் மாநிலச்செயலாளர்களான எம். தமீமுன் அன்சாரி, கோவை செய்யது, முகம்மது ரஃபீக், ஹாருன் ரஷீத் உட்பட பல மாநில நிர்வாகிகள் தமிழகமெங்கும் இருந்து வந்து கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் வேதனைக்குறிய வகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்திய முஸ்லிம்களின் சமுதாய அவலம் குறித்தும் அது குறித்து வெளியான நீதிபதி இராஜேந்திர சச்சார் அறிக்கையை அமல்படுத்துவது குறித்தும் வலியுருத்தி பேசினார்கள்.
தனது தலைமையின் கீழ் செம்மையாக வைத்திருக்கும் முகவை தமுமுக வின் தொண்டரணியினரை மாபெரும் அளவில் ஒருங்கிணைத்து சமுதாய நலனுக்காக போராடக்கூடிய வகையில் இந்நிகழ்ச்சியை நடத்திக் காட்டியதன் மூலம் தனது தனித்திறமையை மீண்டும் ஒருமுறை சகோதரர் சலிமுல்லாஹ் கான் நிறுபித்துள்ளார். சகோதரர் சலிமுல்லாஹ் கான் அவர்களின் தலைமையில் சமுதாய நன்மைக்காக இந்நிகழச்சி வெற்றிபெற அயராது களப்பணியாற்றிய முகவையின் அணைத்து சகோதரர்களையும், தமுமக வின் தொண்டரணியினரையும் வந்திருந்தவர்கள் பாராட்டினர்.
இங்கு மிக முக்கியமாக குறிப்படக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் தனது பல இயக்க அலுவல்கள் மற்றும் சொந்த வேலைகளுக்கிடையேயும் சகோதரர் சலிமுல்லாஹ் கான் அவர்கள் பெயரையோ புகழையோ விரும்பாது இறைவனின் திருப்திக்காக வேண்டி முகவை மாவட்டமெங்கும் பல்வேறு சமூக நலப் பணிகளையும் அத்துடன் மிக சிறப்பான் வகையில் இஸ்லாமிய அழைப்புப் பணியினையும் தனது தலைமையில் ஒரு சிறந்த அழைப்பாளர் குழுவை வைத்து செய்து வருகின்றார். இவரது வளர்ச்சியை பொருக்காத இயக்கத்திற்குள்ளேயும் வெளியேயும் வெளிநாடு உள்நாடு வாழ் பலரின் பெரும் சதித்திட்டங்களுக்கு இடையேயும் தனது இந்தப் பணிகளை மிகச் சிறப்புற செய்து வருகின்றார். இவரது இந்தப் பணியால் முகவை மாவட்டம் மட்டுமல்லாது மானாமதுரை வரை பல கிராமங்களில் மக்கள் கிராமம் கிராமமாக இஸ்லாத்திற்குள் தங்களை இணைத்து வருகின்றார்கள்.
ஒரே ஒருவரை இஸ்லாத்திற்குள் கொண்டுவந்தாலே தமிழகமெங்கும் டிஜிட்டல் பேனர் வைத்தும், தங்கள் பத்திரிகைகளில் பல பக்கங்களுக்கு கட்டுரைகள் வெளியிட்டும், தாங்கள் நடத்தும் தாவா சென்டர்களுக்கும், அறிவகங்களுக்கும் வசூல் வேட்டையாடும் இந்த காலகட்டத்தில் எவ்வித ஆடம்பரமோ, பெருமையோ இன்றி கிராமம் கிராமமாக மக்களை இஸ்லாத்தின் பால் திருப்ப்க்கூடிய வகையில் அழைப்புப்பணியையும் ஒருங்கிணைத்து செய்து வரும் சகோதரர் சலிமுல்லாஹ் கான் அவர்களின் அழைப்புப் பணிகளை பற்றி மக்கள் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும் என்பதால் ஒரு தனி சிறப்புக் கட்டுரை நமது வலைப்பதிவில் விரைவில் வெளியிடப்படும்.
சிறப்பாக அமைந்த தமுமுக தொண்டரணியினரின் இவ்வணிவகுப்பு புகைப்படங்களை காண இங்கு சொடுக்கவும்.
Please Click here to view the complete Photo Gallery
செய்தி தொகுப்பு : முகவையில் இருந்து நமது செய்தியாளர்.
இஸ்லாம், முஸ்லிம், Islam, Muslim
No comments:
Post a Comment