//சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 7-வது மாநாடு நிறைவு விழாவில் அவர், தற்போது அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக இது வழங்கப்படும் என்றார். (www.msn.com) // (இங்குதான் இடிக்கின்றது!! இது சாத்தியமா? 69 சதவிகித இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும்? அதில் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு? மற்ற மாநிலங்களில் இவ்வாறு வழங்கப்பட்டால் அன்றிலிருந்து ஒரு வாரத்தில்தான் சட்டமா? சந்தேகங்களை யாராவது நிவர்த்தி செய்வார்களா?)
சென்னை:""கர்நாடாகாவிலும், கேரளாவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடுவழங்க ஒரு வாரத்தில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும்,'' என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாவது மாநாடு நிறைவு விழா சென்னையில் நேற்று நடந்தது. கவிஞர் அப்துல்ரகுமான் தலைமையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு உமறுப்புலவர் விருது வழங்கப்பட்டது. தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா விருதினை வழங்கினார். ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான் ஒரு லட்சம் ரூபாய் பரிசினை கருணாநிதியிடம் வழங்கினார். சாகித்ய அகடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான், அப்துல் ரகுமான், மு.மேத்தா ஆகியோரையும், இஸ்லாமிய எழுத்தாளர்களையும் முதல்வர் கருணாநிதி பாராட்டினார்.
விழாவில் கலைஞருக்கு பட்டயம் வழங்கியபோது
கர்நாடகாவிலும், கேரளாவிலும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என
கோரிக்கை விடப்பட்டது. கர்நாடகாவிலும், கேரளாவிலும் இடஒதுக்கீடு இன்னமும் நடைமுறைக்கு வரமுடியாமல் சட்ட சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தது. குறுக்குப் பாதையில் செல்லும் சிலர் தடுத்தி நிறுத்தியிருக்கிறார்கள் என கேள்விப்பட்டேன்.கர்நாடாகாவிலும், கேரளாவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவசரச் சட்டம் கொண்டுவரப்படும். அதற்கான ஆணை ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும். ஆளுநரும் அதில் கையெழுத்திடுவார்.
சதாவதானி செங்குதம்பி பாவலர் பெயரில் தபால்தலை விரைவில் வெளியிடப்படும்.ஈராக்கில் உயிர்கொல்லி ஆயுதங்கள் இல்லை என நிரூபித்தால் தாக்குதல் நடத்தப்படாது என புஷ் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாததால் அங்கு பெரும் படுகொலை நடந்தது. சதாமை இழந்தோம். இஸ்லாமிய சமுதாயத்திற்கு என்றும் நாங்கள் தோழர்கள் தான்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான் பேசுகையில், ""இந்தியாவில் 15 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் பொருளாதார அடிப்படையில், கல்வியில், சமூக ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். இஸ்லாமியம் ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு சமூக அமைப்பு. மத அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முஸ்லிம்களுக்கு குறிப்பாக கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,'' என்றார். இஸ்லாம், முஸ்லிம்
நன்றி : தினமலர்
குறிப்பு : பேச்சோடு நின்றுவிடாமல் இதை செயல் வடிவாக்க தமிழக முஸ்லிம் அமைப்புக்களும் திமுக வோடு கூட்டணியில் உள்ள தமுமுக வும் கர்நாடகத்திலும் கேரளத்திலும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு உள்ளது என்பதை நிறுபித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து கலைஞர் கூறியதுபோல் ஒருவாரம் அல்ல ஒரு வருடத்திற்குள்ளாவது இந்த அவசர சட்டத்தை கொண்டு வர முயல்வார்களா? - முகவைத்தமிழன்
No comments:
Post a Comment