தமிழகத்தில் தன்னை கண்மூடித்தனமாக பின்பற்றும்
மூலையற்ற ஒரு கூட்டத்தினை வைத்துக் கொண்டு மார்க்கஅறிஞர் என்ற போர்வையில் தனது மன இச்சைக்கு ஏற்ப ஃபத்வாக்களை வாரி வழங்கி மக்களை தவறான பாதையில் வழிநடத்தி வரும் பித்தளாட்ட பி.ஜே யின் புகழ் பெற்ற "ஜக்காத் ஃபத்வா" குறித்து சவுதியில் இருந்து வெளிவரும் அரப்நியூஸ் பத்திரிகையின் இஸ்லாமிய பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலின் தமிழாக்கத்தினை தமிழ் பேசும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு பதிகின்றோம்.இனியாவது இவரின் கள்ள ஃபத்வாக்களை கண்டு மக்கள்
உஷாராக இருக்க வேண்டும். கூடிய விரைவில் அரப் நியூசையும் "முக்காலா முக்காபுலா" என்று முபாஹலாவிற்கு கூப்பிட்டாலும் கூப்பிடுவார் இந்த பி.ஜே யார் கண்டது ஆதில் சலாஹி அவர்கள் எதந்கும் உஷாராக இருப்பது நல்லது களியக்காவிளைக்கு விவாதத்திற்கு கூப்பிட்டாலும் கூப்பிடுவார் பி.ஜே!!
Is Paying Zakah an Annual Duty?
Adil Salahi, Arab News
Question: Is zakah an annual duty in the sense that money or property that is held for several years becomes liable to zakah every year? An imam in Madras, India, argues that once you paid zakah on some property, you do not have to pay zakah again on it forever. In other words, if one has 10,000 this year and pays zakah for this amount, then he finds himself with 18,000 next year, he pays zakah for 8,000 only, not for the total amount. Please comment. - APJ ALI
Answer : I have answered this question more than once, as people wrote to me concerning it. I am afraid this argument is shallow and has no supporting evidence. Moreover, it defeats the purpose of zakah altogether, as it drastically reduces the amount of zakah paid. The primary purpose of zakah is to eradicate poverty and to help those who are economically disadvantaged in the Muslim community. If its amount is reduced, then it will not fulfill the task for which it has been legislated.
If we take the example cited by the reader, if in the second year the man has 18,000, he pays zakah on that total, and if his amount is 30,000 the following year, then zakah will be paid on that figure. Suppose the following year his business is not flourishing, and he finds himself with only 15,000, his zakah liability is for 15,000. In this case, his business may be losing, but the fact that he still has more than the threshold of zakah means that he is a zakah payer and he has to pay for all 15,000.
This is clearly indicated by the Hadith in which the Prophet (peace be upon him) mentions that he had taken his uncle, Al-Abbas’ zakah for a year in advance. Had it been true that only the new gain is zakahable, the Prophet would not have known how much his uncle’s liability would be, or whether he would be liable at all to pay zakah. He could not have asked him to pay it in advance.
From a very rational point of view, a person who has had his money increasing is in fact in a better situation and can better afford to pay zakah. How come we try to justify that he should pay less? What sort of equality do we establish in society if we ask one person who has 18,000 in his second year to pay as much as one who has only 8,000 the first year, when he is so much richer? Should he not express his gratitude to God better for not only giving him more than enough, but also increasing his property year after year?
Moreover, Muslims have been paying their zakah year after year, calculating it on the basis of the total amount, ever since the Prophet’s time. How come no scholar of repute ever said what this imam is saying? This is the common practice of all Muslims, everywhere in the world. All that we can say is that this imam stands on shallow grounds, and he has no evidence to support his view. He is totally mistaken.
Thanks : Arab News (28/05/2007)
வழிகெட்ட சென்னை மார்க்க அறிஞர்
ஜக்காத் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பது கடமையா? ஆதில் சலாஹி - அரப் நியூஸ்
கேள்வி : ஒருவரிடம் பணமோ சொத்தோ பல வருடங்கள் இருக்கும் பட்சத்தில்,ஜகாத் வருடா வருடா கொடுக்கத் தேவையில்லை என்று சட்டத்தில் உள்ளதா?.சென்னை இந்தியாவை சார்ந்த ஒரு மெளலவி அப்படி வருடா வருடம் கொடுக்க தேவையில்லை என்று வாதிடுகிறார்.அவரின் கூற்றுப்படி ,உதாரணத்துக்கு ஒருவரிடம் இவ்வருடம் 10000 ரூபாய் இருந்து,அவர் அதற்கு ஜகாத் கொடுத்து விட்டார் என்று வைத்து கொள்வோம்.அடுத்த வருடம் அவர் கையிருப்பில் ரூபாய் 18,000 இருக்குமானால் சென்னை மெளலவியின் கூற்றுப்படி 8000 க்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமானது,18000 க்கும் கொடுக்க தேவையில்லை என்று சொல்கிறார். இது பற்றி உங்கள் கருத்தை விளக்கவும்? - ஏ.பி.ஜே அலி
பதில் : இந்த கருத்து சம்பந்தமாக பலர் என்னிடம் கேள்வி கேட்டு,இவ்விசயம் சம்பந்தமாக நானும் பல முறை பதிலளித்துள்ளேன்.எந்த வித மூல ஆதாரமும் இல்லாமல்,ஒரு கருத்தூன்றாத,உறுதியற்ற விவாதம் என்றே இதனை நான் கண்டு அச்சமுறுகிறேன்.இம்மெளலவியின் கருத்து படி கொடுக்க வேண்டிய ஜகாத் தொகை கணிசமாக குறைக்கபடுவதால் , ஜகாத் எதனை முன் வைத்து கடமையாக்கபட்டதோ அதற்கு முழுதும் எதிரானதாக அமைந்து விடுகிறது.ஜகாத் கடமையாக்க பட்டதன் முக்கய நோக்கமே,வறுமை அடியோடு அழிக்க பட வேண்டும்,பொருளாதாரத்தில் மிகவும் பின் தள்ளப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தினருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பது தான். எனவே ஜகாத்தின் அடிப்படை தத்துவத்தை நாம் ஆராய்ந்தோமானால்,இம் மாற்று கருத்து ஒரு போதும் ஜகாத்தின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யாது என்பது விளங்கும்.
நாம் வாசகர் சொன்ன உதாரணத்தையே எடுத்து கொள்வோம்.இரண்டாம் வருவம் ஒருவரிடம் 18,000 ரூபாய் இருக்கும் பட்சத்தில் அவர் இந்த தொகைக்குண்டான ஜகாத்தை கொடுத்து விடுகிறார்.அதற்கடுத்த வருடம் அவரிடம் 30,000 ரூபாய் இருப்பு இருந்தால்,அவர் 30,000 த்துக்கும் அவ்வருடம் ஜகாத் கணக்கிட்டு கொடுத்தல் வேண்டும்.ஒரு வேளை அவரின் தொழில் சரியாக போகாத சூழ்நிலையில் நஷ்டம் ஏற்பட்டு,அவரிடம் கையிருப்பாக மூன்றாம் வருடம் 15000 மட்டுமே இருந்தாலும் கூட ,இத் தொகை ஜகாத் கொடுக்க வேண்டிய குறைந்த பட்ச அளவை விட அதிகமாக இருப்பதின் காரணத்தால் முழுமையாக 15000 க்கும் ஜகாத் கொடுக்க பட வேண்டும்.
இவ் விசயத்தை அண்ணலாரின் ஹதீஸ் நமக்கு தெளிவாக விளக்கமாக சொல்லி காட்டுகிறது.நபிகள் (ஸல்) அவர்கள் தங்கள் மாமா அல் அப்பாஸ் அவர்களிடமிருந்து ஒரு வருடம் முன்பதாகவே ஜகாத் பெற்று கொண்டார்கள் என்று. சென்னை மெளலவி சொல்லுவது போல் புதிய ஆதாயத்துக்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமானது எனும் கூற்று உண்மையாக இருந்திருக்குமேயானால், நபிகள் (ஸல்) அலை அவர்களுக்கு தனது மாமாவின் சொத்து மற்றும் ஜகாத்தின் மதிப்பு எவ்வளவு என்பது முன்பே தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.அவர்களும் ஜகாத்தை முன்னதாகவே வாங்கியிருக்க மாட்டார்கள் என்பதும் திண்ணம்.
ஒருவரின் பண மதிப்பு உயர்ந்தால் அவர் நல்ல நிலையை அடைந்து அவர் அப்பண மதிப்புக்குண்டாக ஜகாத்தை கொடுக்க வசதியுடையவராகிறார் என்பதை, நான் தெளிவான,சரியான சிந்தனை,கண்ணோட்டத்தோடு இவ் விசயத்தை ஆராய்ந்தோமானால் நமக்கு புலப்படும். எனவே எப்படி குறைத்து ஜகாத் செலுத்தினால் போதுமானது என்பதை நியாபப்படுத்த முடியும்? ஒருவரிடம் இரண்டாம் வருடம் மேலும் வசதியாகி,இருப்பு18,000 இருக்கும் போது அதற்குண்டான ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காமல் ,8000 க்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமானது என சொல்லும் சென்னை மெளலவியின் கூற்று எவ்வகையில் நியாயமானதாக கருத முடியும்.? ஆக ஒரு அடியான்,தன்னை போதுமாக வசதி வாய்ப்பை ஏற்படுத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல்,வருடா வருடம் தன் சொத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தன்னை படைத்த ரப்பிற்கு நன்றி செலுத்த கடமை பட்டவனாக ஆகிறானா இல்லையா?நீங்களே சிந்தித்து பாருங்கள்.
மேலும் முஸ்லீம்கள், நபிகளாரின் காலம் தொட்டே வருடா வருடம் தங்களின் மொத்த மதிப்பிலிருந்து ஜகாத்தின் தொகையை கணக்கிட்டு கொடுத்து வருபவர்களாகவே இருந்து வருகிறார்கள்.
புகழும் மதிப்பும் மிக்க எந்த ஒரு மார்க்க அறிஞரும் இது நாள் வரை சொல்லாத ஒரு விசயத்தை இந்த சென்னை மெளலவி எதனை மையமாக வைத்து சொல்கிறார் என்பது அறிவுக்கு எட்டாத கேள்வி குறி தான்.? உலகமெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் பொதுவாக பின்பற்றும் விசயம்.
கடைசியாக நாம் சொல்லி கொள்வது என்னவென்றால் இந்த சென்னை மெளலவி தட்டையான ஆதாரமில்லாத கூற்றுகளை முன் வைத்து தன் பக்கம் ஆதாரமிருப்பதாக காட்ட முயற்சித்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.சென்னை மெளலவியின் கூற்று முற்றிலும் தவறு.
குறிப்பு : தமிழாக்கத்தில் ஏதாவது பிழைகள் இருந்தால் சுட்டிக் காண்பிக்கவும்
நன்றி : அரப் நியூஸ் (28/05/2007)
2 comments:
what about Madurai Debate and Noor muhammad Bhai?
ஒரு தடவை ஜகாத் கொடுத்த பொருளுக்கு வருடா வருடம் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? என்ற தலைப்பில் மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி அவர்கள் வழிகெட்ட பி.ஜே யுடன் நடத்திய விவாதத்தின் வீடியோ இங்குள்ளது சென்று பார்வையிடவும்.
http://islamkalvi.com/media/debate/index.htm
or Click here to follow the link
ZAKA
DEBATE @ MADURAI
Post a Comment