Showing posts with label தமிழ் முஸ்லிம். Show all posts
Showing posts with label தமிழ் முஸ்லிம். Show all posts

Saturday, November 08, 2008

ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிற சமுதாயமும் அதன் இயக்கங்களும் - சகோ. ரஃபீக் உதுமான்

ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிற சமுதாயமும் அதன் இயக்கங்களும்

அருள்மறை குர்ஆன் இஸ்லாத்தை அல்லாஹ்வால் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை முறையாக்கி அதை உலக மக்களுக்கு பரிபூரணபடுத்தி விட்டதாக பகர்கின்றது. அதையே வாழ்க்கை நெறியாக ஏற்று நடக்கின்ற நமது இஸ்லாமிய சமுதாயத்தின் இன்றைய நிலை என்ன?. இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் தந்த ஜனநாயக முறையை ஒழுங்காக இஸ்லாமியர்கள் பயன்படுத்தாததால் இன்று(இஸ்லாமிய மார்க்க இனத்தை அழிப்பதற்காக நேரடியாக) என்கவுண்டர் எதிர்வினை என்று தீவிரவாதத்தை செய்துவிட்டு சட்டத்தை தீர்ப்பை, சொல்கிற நீதிமன்றங்களிலும் பாராளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் தைரியமாக உலா வருகிறார்கள்.

மும்பையில் ஒரு பீகார் இளைஞனை காவல்துறை சுட்டுவிட்டது. நேர் எதிர்மறையில் உள்ளவர்கள் நிதீஷ், லாலு மற்றும் பஸ்வான் இன்னும் பல தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்து பிரதமரை பார்க்கிறார்கள். தமிழகத்திலே திமுக உன் உறவு தேவையில்லை என்று பாமகவை வெளியேற்றிவிட்டது. கம்யூனிஸ்டுகள் திமுக உறவு தேவையில்லை என்று வெளியேறிவிட்டன. பரஸ்பரம் மாறி மாறி பழி சுமத்திக்கொண்டார்கள். இலங்கை பிரச்சனை வந்தபோது ஒன்றாக கைகோர்த்துக்கொண்டார்கள்.

ஒரே வேதம்! ஓர் இறை என்பதை பின்பற்றுகிற அனைவரும் சகோதரர்கள் என்று ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய இயக்கங்களே!! தலைவர்களே!!! உங்கள் மண்டையில் உறைக்கவில்லையா? எவ்வளவு காலம் ஈகோ வெறிபிடித்து பகைமை கொண்டாடுவீர்கள். இஸ்லாத்தை பின்பற்றுபவர்களை ஒடுக்க யார் காரணம்?. பெண் தீவிரவாதி சாத்விக்கு ம.பி.யில் நான் எம் எல் ஏ சீட் தருகிறேன் என்றும் மஹாராஷ்டிராவில் பத்திரிகை கௌரவிப்பதும் திமுக, காங்கிரஸ் அதிமுக உள்ளுர சிரிப்பதும் தெரிகிறதா. நாட்டிலே நடப்பதை மக்கள் உணரவில்லை. கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமா? எத்தனை காலம் ஏமாற்றுவீர்கள். ஆட்டுமந்தை கூட்டமும் மழையின் இடி சப்தம் கேட்டு மிரண்டு பார்க்கும். சட்ட மன்றங்களிலும் பாராளுமன்றங்களிலும் இஸ்லாமியர்களின் கட்சி பிரதிநிதிகளின் குரலுக்கு ஆட்சியாளர்கள் மிரளும் வரை இந்த நிலை மாறாது.மாறாக ஒடுக்கிக்கொண்டேயிருப்பார்கள் என்று பாமரனுக்கும் தெரியும்.

இயக்கங்களே நீங்கள் என்ன செய்தீர்கள். கொஞ்சம் விழிப்புணர்வு வந்தது உண்மை. ஆனால் எத்தனை வருடங்களுக்கு இப்படி பிரிந்து போராட்டம் என்று கத்தி முதலிடத்தை பிடிக்க போட்டி போடுவீர்கள்?. பகைமையிலேயே இப்படியே இருந்து அடிபொடிகளின் உதவியோடு காசை பிரித்து சுகபோகமாக வாழ்ந்து காலத்தை கழித்துவிடலாம் என்ற எண்ணமா?. நீங்கள் எல்லா இயக்கங்களையும் ஜமாஅத்துகளையும் கலைத்து ஒன்றாகிவிடுங்கள் என்று ஒருவரும் அழவில்லை. வரும் தேர்தல்களில் இஸ்லாமிய (ஒடுக்கப்பட்ட) மக்களின் தனிக்கட்சி தனிச் சின்னம் வேட்பாளர்களுக்கு அது எந்த இயக்கத்தின் கட்சியானாலும் சரி அது புதிய கட்சியானாலும் சரி மற்ற கட்சியோடு கூட்டு வைத்திருந்தாலும் சரி ஒட்டு மொத்த ஆதரவை அளித்து அவர்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டியது காலத்தின் உயிர்நாடி கட்டாயம். இதை மீறுகின்ற இஸ்லாமிய இயக்க ஜமாஅத்துகளை ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கு துணைசெய்தார்கள் என்று இந்திய திருநாட்டில் இஸ்லாமிய சமுதாயமும் வரும் தலைமுறையும் சபித்துக்கொண்டிருக்கும். நல்ல முடிவை எடுத்து எல்லோரும் ஒருமித்து குரல் கொடுத்து வெற்றி பெறுங்கள். எல்லா புகழும் இறைவனுக்கே.

அன்புடன் சகோ. ரஃபீக் உதுமான், நாகர்கோவில் (ரியாத்)

Monday, March 17, 2008

தெறிந்து கொள்ளுங்கள் இதுதான் தமிழ் முஸ்லிம் அரசியல்

நான் எழுதிய ஒரு கட்டுரையில், " இன்றைய முஸ்லிம் சமூகம் வலப்பக்கம் திரும்புவதா, இடப்பக்கம் போவதா, நேரே செல்வதா அல்லது வந்த இடத்துக்கே திரும்புவதா என்று புரியாமல் நாற்சந்தியில் நின்று தவித்துக்கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்கு உடனடியாக ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்பினேன் - ஆதங்கப்பட்டேன். ஆனால் அது நடப்பதுபோல் தெரியவில்லை என்பது மட்டுமல்ல; நடப்பதற்கான அறிகுறிகள் கூடத் தென்படக்காணோம்.

மகள் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அமீர் ஜவஹர், தமிழன் தொலைகாட்சியில், "ஒற்றுமையை நோக்கி.." என்கிற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நம் முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொண்டு ஒற்றுமையின்மையின் காரண காரியங்கள், அது எற்படுவதற்கான வழி வகைகள் என்று பல தரப்பட்ட கருத்துக்களை கூறி வருகிறார்கள் இதில் என்னுடைய பேட்டியும் இரண்டு பகுதிகளாக இடம் பெற்றுள்ளது

இந்த நிகழ்ச்சி பற்றி கருதுச் சொன்ன மவுலவி பீஜே இதை ஒரு கோமாளிக்கூத்து என்று ஆரம்பத்தில் கூறியதாக வருத்தப் பட்ட அமீர், பிறகு பீஜே தன் கருத்தை மாற்றிக் கொண்டதாகவும் சொன்னார்.

ஆனால் சில தினங்களுக்கு முன் வின் தொலைக்காட்சியில் நடந்த அவரது கேள்வி-பதில்'நிகழ்ச்சியில் "பிரிவு ஏற்படத்தான் செய்யும். ஒரே குழுவாக இருப்பது நடக்காத காரியம். நடப்பது தவறு. அதைச்சுட்டிக் காட்டி நல்லதுகளை எடுத்துச் சொல்கிறோம். அப்போ கொஞ்சம் பேர் அங்கிருந்து பிரிந்து நம்மகிட்டே வரத்தான் செய்வாங்க. அதைத் தடுக்க முடியாது. அப்படி பிரிஞ்சி, பிரிஞ்சி வந்து கடைசியிலே நாமெல்லாம் ஒண்ணாயிடுவோம். ரசூலுல்லா காலத்தில் குறைஷிகள் ஒண்ணாத்தான் இருந்தாங்க, பிறகு பிரிஞ்சி, பிரிஞ்சி வந்து கடைசியிலே ஒண்ணாயிடல்லியா" என்று ஒரு வினோதமான காரணத்தை முன் வைத்ததன் மூலம் தன்னைப் பொறுத்தவரை ஒற்றுமைக்கான வாசற்கதவை இழுத்து மூடி விட்டார் என்றே கொள்ள வேண்டியதாக இரூக்கிறது.

இன்னொரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலர் ஹக்கிம் சத்தார் பாப்ரி மஸ்ஜித் இடிப்பை எதிர்த்து நடைபெற்ற பேரணியைக் குறித்துப் பேசுகையில், "உணர்ச்சி வசப்பட்டு என்ன பிரயோஜனம் ? அறிவு பூர்வமாகச் சிந்தியுங்கள். முஸ்லிம் லீக் காரர்கள் அறிவு பூர்வமாகச் சிந்திக்கக் கூடியவர்கள்" என்று தங்கள் கையாலாகத் தனத்துக்கு சப்பைக்கட்டு கட்டினார். பொதுவாக முஸ்லிம் லீக் கட்சியினர் Easy-chair intellectuals - சாய்வு நாற்காலி சண்டப்பிரசங்கிகள் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது.

அதை நிரூபிப்பது போலவே ஹக்கிம் சத்தாரின் பேச்சும் அமைந்தது. அதைவிட கலிமாச் சொன்ன ஒவ்வொரூ முஸ்லிமும் முஸ்லிம் லீக் தான் என்று அவர் அடித்த ஜோக்கை நினைத்து யாரும் வாயால்(?) சிரிக்க மாட்டார்கள் என்பது என்னவோ உண்மை.

ஒரு 'இஃப்தார்' நிகழ்ச்சி. நான் தொகுத்து வழங்கினேன். அநேகமாக எல்லா முஸ்லிம் தலைவர்களும் ஆஜர். எல்லோருமே ஒற்றுமையை வலியுறுத்தியே பேசினார்கள். கடைசியாக தேசீய லீகைச் சேர்ந்த அப்துல் காதர் என்கிற பெரியவர் பொட்டார் ஒரு குண்டு, "என்ன எல்லாரும் ஒத்துமை ஒத்துமைன்னு பேசிக்கிட்டு இருக்கீக. எல்லாரும் அவங்க, அவங்க அமைப்பை கலச்சிப்புட்டு எங்க கட்சிக்கு வந்துடுங்க எல்லாம் சாரியாப் போகும் ஒத்துமை வந்துடும் என்றார்." - கனவு காண்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா ?

இப்போது அந்த தேசிய லீகுக்குள்ளேயே பிளவு. 'கோனிக்கா' பஷீர், தான் தான் இன்னமும் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் கட்சியின் பெரும்பாலான முக்கியஸ்தர்கள் செய்யது இனாயத்தூல்லா சாகிபை தலைவராக அறிவித்துள்ளார்கள். இவர் பல்வேறு இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் முகமாக எடுக்கப்பட்ட முயற்சிகளில் முனைந்து முன் நின்றவர். தன்னுடைய நோக்கம் பதவியல்ல; ஒற்றுமைக்கான தொடர்ந்த முயற்சிதான் என்று தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்.

ஒற்றுமை பற்றி ஒரு தலைவரிடம் நான் பேசியபோது, "நானும் ஒற்றுமையின் அவசியத்தை உணர்கிறேன். ஆனால் அபூ ஜஹில்களோடு யாருங்க சேருவா" என்று என்னை அதிர வைத்தார்.

நான் இதற்கு முன்பு 'தஃப்ரகில்' எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து வந்த பின்னூட்டங்கள் ஒற்றுமை என்கிற விஷயத்தில் மக்கள் எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எந்த அளவுக்கு ஆசைப்படுகிறார்கள். ஆதங்கப் படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தலைவர்கள் மத்தியிலோ அல்லது தொண்டர்கள் மத்தியிலோ இப்போதுள்ள நிலையிலிருந்து மாறுவதற்கான எந்தவிதமான அறிகுறிகளையும் காணோம். .

ஆக, We are back to square one - நாம் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி இருக்கிறோம். and we are at the cross-roads - நம் சமூகம் நிற்பது நாற்சந்தியில்.

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

Saturday, November 10, 2007

முஸ்லிம் மாணவர்களின் கவணத்திற்கு (URGENT!! URGENT!!)

முஸ்லிம்கள் கல்வி கற்பது கடமை!
பணம் இல்லையே என்று படிக்காமல் இருப்பது மடமை!!
இதோ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்


B.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L.,B.E.,B.Tech.,B.D.S.,M.B.B.S.,M.S.,M.D.,M.E.,M.S.W.,M.Tech.,M.C.A மற்றும் Professional/Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும்.

IIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும்.


இந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :

1.+2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும்.


2. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இரக்க வேண்டும்.Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.

3. தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும்.

4.வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும்.

5.தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றுமு் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.minorityaffairs.gov.in என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றுமு் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 லட இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.


சிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும்
மேலான்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
807, அண்ணாசாலை, சென்னை - 600002


மேலும் விபரங்களுக்கு :
ஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)
தொலைபேசி 044-28514846 அல்லது
044-28515450
என்ற தொலைபேசயில் தொடர்பு கெள்ளவும்.


சமுதாய ஆர்வளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007


வீழ்ந்து கிடக்கும் சமுதாயம் எழுந்து நிற்க கைகொடுப்போம்!!

Sunday, April 15, 2007

தமிழக முஸ்லிம்களின் அரசியல் பலம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தமிழாக்கம் - அபு இஸாரா

மதசார்பற்ற அரசியில் கட்சிகளுக்கே முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் எனது செல்வாக்கை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் மதசார்பற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு செய்த துரோகம், மேற்கண்ட எனது நிலைப்பாட்டிலிருந்து மாறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ இனவாத கட்சிகளுடன் மதச்சார்பற்ற அரசியல்வாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் இணைந்து அல்லது ஆதரவளித்து முஸ்லிம்களுக்கு செய்த துரோகம், இந்திய முஸ்லிம்களின் சிறப்பான எதிர்காலத்துக்கு நிரந்தர தீர்வுதான் என்ன என்பது குறித்து என்னை ஆய்வு செய்யத் தூண்டியது. அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஒரு நிரந்தர தீர்வு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து கட்டுரையை படிக்கும் நீங்கள் இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளுக்கு நிரத்தர தீர்வு என்ன என்பதை அறிந்து கொள்வீர்கள்.

தமிழக முஸ்லிம்களின் பலம்

தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:


முழுக்கட்டுரையையும் வாசிப்பதற்கு
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்