Saturday, September 20, 2008

சந்தி சிரிக்கும் டாக்டர் கலைஞரின் சமூக நீதி!!

டாக்டர் கலைஞர் அவர்களின் சமூக நீதி சந்தி சிரிக்கிறது

ஏய் தாழ்ந்த தமிழகமே என்று வினா எழுப்பிய தமிழ் தாயின் தலைமகன் பேரரிஞர் அண்ணாவின் நூற்றாண்டு பெருவிழா. தமிழனின் விடியல் புரட்சியை தட்டி எழுப்பிய தாரக மந்திரத்தின், மூன்று எழுத்து அண்ணா. அண்ணாவின் பேனா தலைகுனிந்த போது, தமிழ் இனமே தலை நிமிர்ந்தது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தை இதயத்தில் இறுத்தி, மதம் கடந்து மானிடத்தை நேசித்த மாமனிதர், காங்கிரசின் சர்வாதிகார கோட்டையை ஜனநாயக கோட்டையாக மாற்றி, மக்கள் ஆட்சி மான்பு தழைக்க, பொய்மை பொசுங்கிட வாய்மையே வெல்லும் என்ற வாசகத்தை தமிழக அரசின் சின்னமாக பொறித்தவர். அவரின் இதயத்தை இரவலாக பெற்ற டாக்டர் கலைஞர். சிலப்பதிகாரத்தின் நீதியின் மாட்சியியை தீட்டியவர். வள்ளுவனின் அறத்துப்பாலை குறல் ஓவியமாக சித்தரித்தவர். சிங்கத்தமிழனின் சாகாத நீதியை சங்கத்தமிழில் சாற்றினார்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. மற்றவர் கருத்தையும் எதிர்பார்ப'பையும் நீதியையும் நியாயத்திற்கும் மதிப்பளித்தவர். எல்லோரும் இன்னாட்டு மன்னர் என்று எல்லோரையும் சமமாக நேசித்த அண்ணாவின் நூற்றான்டு விழாவில், கருணை அடிப்படையில் 7 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர் பாராட்டுக்கள். சமீபத்தில் மதுரையில் லீலாவதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க வினர் கூட விடுதலை செய்யப்பட்டுள்ளன். ஆனால் பொய் வழக்கு புனையப்பட்டு 11 ஆண்டுகளுக்கு மேல் விசாரனையின்றி சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்கள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை.


டாக்டர் கலைஞரின் சமூக நீதி சந்தி சிரிக்கிறது. ஒரு குலத்துக்கு ஒரு நீதி!! முஸ்லிம் கைதிகளுக்கு மற்றொரு நீதியா ? மனுதர்ம வாடை வீசுகிறது. என் கரத்தை பற்றிப்பிடித்துக் கொண்டு இஸ்லாமிய சமூகத்தை உங்களிடம் ஒப்படைக்கின்றேன். பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள், என்று காயிதே மில்லத் கூறியதாக மேடைதோறும் கலைஞர் முழங்குவார். "ஆம்" இன்று பத்திரமாக வெளியே விடாமல் சிறையில் வைத்துள்ளார். "ஜால்ரா போடும் இயக்கத் தலைவர்கள் அதற்கு தலையாட்டும் தொண்டர்களும் சிந்திக்கட்டும்". உண்மை உறங்குவதில்லை.

காவல்துறை குற்றங்களை கண்டுபிடிக்கும் துறை அல்ல. முஸ்லிம்கள் விசயத்தில் குற்றங்களை உற்பத்தி செய்கின்றது. காவல்துறையின் ஈரல் முழுமையாக கெட்டுவிட்டது. S.R. பாலசுப்பிரமணியம், மருத்துவர் ராமதாஸ், தமிழினத் தலைவர் நெடுமாறன் பொன்றவர்கள் கூற்று. நீதி, நேர்மை, மனித நேயம் இவையெல்லாம் செல்லாக்காசுகளாகிவிட்டன. குடிஆட்சியா? அல்லது முஸ்லிம்கள் குடிகெடுக்கும் தடி ஆட்சியா? என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். சர்வாதிகாரத்தில் ஒருவன் அக்கிரமம் செய்தான். ஜனநாயகத்தின் பலபேர் உனக்கு எதிராக அக்கிரமம் செய்கிறார்கள். காரனம் மாறி, மாறி ஓட்டளித்து கேலிக்குறிய சமூகமாக ஆக்கினாய்.உன் ஓட்டை வாங்கி கோட்டைக்கு சென்றவர்கள் கொடுமை புறிகிறார்கள்.

இளைஞனே நீயோ, கழுகிடம் கருணையை எதிர்பார்க்கிறாய். பசுவின் கன்றுகளை அடித்து விழுங்கிய வேங்கையிடம் வேதாந்தம் பேசுகின்றாய்.
மொத்தத்தில் வீணர்களிடம் விலைபோய் சமுதாயத்தை வீழ்ச்சியில் நிறுத்தியிருக்கிறாய். ஜனநாயகத்தி்ல் உன் வாக்கை தொலைத்துவிட்டு உன்னை தொலைத்து கட்டபவர்களிடம் கைகட்டி, வாய்பொத்தி சமுதாய தலைவர்கள் அற்ப பதவிக்கு தலைகுனிந்து நிற்கிறார்கள். முஸ்லிம்களுக்கு நீதியில்லை எழையின் சிரிப்பில் இறைவனை கண்டார் அண்ணா. அண்ணாவின் தம்பி முஸ்லிம்களின் அழுகையில் இறைவனை காண்கிறார். அதோ குரல் கேட்கிறது. எங்கள் ஓட்டு தி.மு.க விற்கே ...மற்றொரு குரல் எதிரொலிக்கிறது...மெளலானக்களுக்கு எல்லாம் மிகப்பெரும் மெளலானா டாக்டர் கலைஞருக்கே எங்கள் ஓட்டு.

முஸ்லிம்களே வெடக்ப்படுங்கள், வேதனைப்படுங்கள், ஒன்றுபடுங்கள் அருள் மாதம் ரமலானில் திருந்துங்கள், இரவல் அரசியலுக்கு இறுதி விடைகொடுக்க விடியலின் விளக்கம் இந்திய தேசிய மக்கள் கட்சிக்கே (IDMK) எங்கள் ஓட்டு என்று தீர்மானியுங்கள்.


விடுதலையும், விடியலும் வெகுதூரம் இல்லை...

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
9790318182, 994050565, 9842461363, 9443021050

1 comment:

Abu Ahbaar said...

பாஸிச மனநிலையில் மயங்கியிருக்கும் துரோகி கருணாநிதி தனது வாழ்நாளில் இதுவரை குடித்த ரமழான் கஞ்சிக்காவது நன்றி பாராட்டும்விதமாக ஒருவரையாவது விடுதலை செய்திருந்தால் அவரை ஒரு அரசியல்வாதி என்றாவது ஏற்றுஇருக்கலாம் என்று தோன்றுகிறது.