தினமலரின் நிர்வாகிகளை தமிழக அரசு கைது செய்யுமா?
இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம்
என்று கூறி ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டு தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டி விட்டு தமிழகத்தை இரத்தகாடாக்க சதி செய்த தினமலர் பத்திரி்கையின் மீது பல்வேறு பட்ட வழக்குகளை தமிழகமெங்கும் மனித நீதி பாசறை என்ற அமைப்பு தொடுத்தது. இந்த வழக்குகளில் தங்களை கைது செய்யாமலிருக்க தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளான ஆர்.வெங்கடாபதி (வயது 78) ஆர். ராகவன் (வயது 76) சததியமூர்த்தி (வயது 73) ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு செய்திருந்தனர். கடந்த 5.09.2008 அன்று விசாரனைக்கு வந்த இவ்வழக்கில் மனித நீதிப் பாசறை அமைப்பினர் குறுக்கீடு செய்து வாதாடலாம் என்ற உத்தரவுடன் 10.09.2008 க்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது இது சம்பந்தமாக நமது தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மீண்டும் 10ம் தேதியில் இருந்து 12ம் தேதிக்கும் பின்னர் 15ம் தேதிக்கும் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது 15ம் தேதி விசாரனைக்கு வந்த இவ்வழக்கில் மனித நீதிப் பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கர சுப்பு அவர்கள் வாதாடினார்கள். தினமலர் பத்திரிகை இந்த புனித ரமழான் மாதத்தில் இது போன்ற பிரச்சினைக்குறிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டு இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புன்படுத்தி மதன கலவரத்தை தூண்டக்குடிய நடவடிக்கை என்றும் ஆகவே இவ்வழக்கில் தெர்ர்புடைய தினமலர் நிர்வாகிகளை கைது செய்ய உத்தரவிட் வேண்டும் என்றும் அவர்களுக்கு கைது செய்யாமலிருக்க முன்ஜாமின் வழங்க கூடாதென்றும் வாதிட்டார்.
தினமலர் சார்பாக வாதாடிய அதன் வழக்கறிஞர், தினமலர் இஸ்லாமியர்களுக்கு எதிரானது இல்லையென்றும் இதன் பததிரிகைகளில் ரமழான் மாதத்தில் அதன் சிறப்புக்களை பற்றிய செய்திகளை தினமும் வெளியிடுவதாகவும், இன்னும் லைலத்துல் கத்ரு பற்றிய செய்திகளையும் வெளியிட்டு வருவதாகவும் இன்னும் இந்த கேலிச்சித்திர விசயமானது தங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டு பிரசுரமாகிவி்ட்டது என்றும் அதற்காக தங்கள் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வருத்தம் தெறிவித்து செய்தி வெளியிட்டதாகவும் வாதிட்டார்.
இடையில் குறுக்கிட்ட மறியாதைக்குறிய நீதிபதி ரகுபதி அவர்கள் தினமலரின் வழக்கறிஞரை பார்த்து " நீங்கள் இது போல் வாதிடாதீர்கள்...உங்கள் விளக்கம் பொறுப்பற்றதாக உள்ளது" என்று கடிந்து கொண்டார்.
இடையில் குறுக்கிட்ம மனித நீதிப்பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கரசுப்பு அவர்கள் தினமலரின் வழக்கறிஞர் கூறுவது போல் இல்லை தினமலர் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புன்படுத்துவதை தனது வாடிக்கையாக கொண்டுள்ளது என்றும். ஒருதலைப்பட்சமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு முஸ்லிம்களை குற்றவாளிகளாகவும், தீவிரவாதிகள் என்றும் சித்தரித்து தொடாந்து செய்திகளை வெளியிட்டு வருவதை தனது வாடிக்கையான செயல்களில் ஒன்றாகவே கொண்டுள்ளது என்றும் வாதிட்டார்.
இன்னும் தினமலரை போன்றே இந்த கேலிச்சித்திரத்தை டென்மார்க்க பத்திரிகை பிரசுரித்த காரனத்தால் எழுந்த மேதல்களில் 150 க்கும் அதிகமான உயிர்கள் பலியானதையும், தொடர்ந்து தினமலர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தறித்து அவதூறு பரப்பி நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சித்து வருவதையும் இதற்காக மனித நீதிப்பாசறை பதிவு செய்துள்ள தினமலருக்கெதிரான பல்வேறு வழக்குகளையும் சுட்டிக்காட்டி தினமலரின் நிர்வாகிகளுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அவர்கள் தினமலரின் நிர்வாகிகள் தங்களை கைது செய்யாமலிருக்க பதிவு செய்திருந்த முன்ஜாமின் மனுவை டிஸ்மிஸ் செய்து அவர்களுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என்று கூறி உத்தரவிட்டார்.
அல்ஹம்துலில்லாஹ் தினமலருக்கெதிராக நமது சமுதாயத்தின் பிரதிநிதிகளாக மனித நீதிப் பாசறையினர் நடத்திய சட்ட போராட்டத்தில் முதல்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இன்சா அல்லாஹ் இத்துடன் நின்றுவிடாது நமது அமைப்புகள் அனைத்தும் விடாது ஒருங்கினைந்து போராட்டங்களை நடத்தி தினமலரின் நிர்வாகிகளை அரசு கைது செய்யும் வரை போராடி அவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டும்.
தகவல்கள் : நன்றி : திரு. முகம்மது யூசுஃப் M.A B.L
State Executive Council Member, MNP
No comments:
Post a Comment