தினமலர் நிர்வாகிகள் தங்களை கைது செய்யமலிருக்க முன்ஜாமின் கேட்டு மனு MNP குறுக்கீடு செய்ய நீதிமன்றம் அனுமதி
கடந்த 05.09.2008 அன்று தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளான ஆர்.வெங்கடாபதி (வயது 78) ஆர். ராகவன் (வயது 76) சததியமூர்த்தி (வயது 73) ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களை கைது செய்யாமலிருக்க முன்ஜாமின் மனு தாக்கல் செய்து உள்ளனர். தினமலர் கம்ப்யூட்டர் மலரில் முகம்மது நபியவர்களின் கேலிச்சித்திரம் என்று ஒன்றை வெளியிட்டதால் மனிதநீதிப் பாசறை உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர்ந்துள்ள பல்வேறு வழக்குகளில் தங்களை கைது செய்யமலிருக்க கோரி இவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்கள்.
இம்மனு தொடர்பான விவாதத்தில் இவர்களின் வழக்குறைஞர்கள் வாதிடுகையில் தினமலர் பத்திரிகையில் இதுதான் முதல் தடவை இவ்வாறு முகம்மது நபியவர்களின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டது என்றும், இஸ்லாமியர்களின் மத உணர்வை புன்படுத்தும் எந்த உள்நோக்கமும் தங்களுக்கு இல்லை என்றும் இன்னும் இது தொடர்பாக 05.09.2008 அன்று காலை தினமலரில் முதல் பக்கத்தில் இது தொடர்பாக வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் ஆகவே தங்களுக்கு இவ்வழக்கில் தங்களை கைது செய்யமலிருப்பதற்காக முன்ஜாமின் வழங்க உத்தரவிடுமாறு வாதிட்டனர்.
இதற்கிடையில் நீதிமன்றத்தில் ஆஜராகிய மனித நீதிப்பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கரசுப்பு அவர்கள் இடையில் குறுக்கீடு செய்து தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகள் கூறுவது போல் முதல் முறையாக தினமலர் இது போல் செய்யவில்லை என்றும். இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புன்படுத்துவதை தனது வாடிக்கையாக கொண்டுள்ளது என்றும். ஒருதலைப்பட்சமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு முஸ்லிம்களை குற்றவாளிகளாகவும், தீவிரவாதிகள் என்றும் சித்தரித்து தொடாந்து செய்திகளை வெளியிட்டு வருவதை தனது வாடிக்கையான செயல்களில் ஒன்றாகவே கொண்டுள்ளது என்றும் வாதிட்டார்.
அத்துடன் மனித நீதிப் பாசறையின் சார்பாக தினமலரின் ஒரு சமூகத்திற்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்புதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மதுரை மாவட்ட எம்என்பி செயளாலர் திரு நஸ்ருதீன் அவர்கள் மூலம் முகம்மது நபியவர்களை பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டதற்காக மதுரை என் 5 ஜீடிசியல் கோர்ட்டில் ஒரு கிரிமினல் வழக்கும், ஜே எம் 1 நீதி மன்றத்தில் ஒரு கிரிமினல் வழக்கும், பெரியகுளம் நீதிமன்றத்தில் ஒரு கிரிமினல் வழக்கும் தினமலர் மீது தொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இவர்களுக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.
இந்த வாதங்களை கேட்ட மதிப்பிற்குறிய நீதிபதி அவர்கள் எம்.என்.பி இந்த வழக்கில் குறுக்கீடு செய்து வாதிட அனுமதி வழங்கி இது தொடர்பான ஆவனங்கள் அனைத்தையும் 10.09.2008 அன்று உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் மேலதிக விபரங்கள் தெர்டாச்சியாக பதிவு செய்ய்படும் இன்சா அல்லாஹ். வழக்கில் முஸ்லிம்கள் வெல்வதற்கும் தினமலர் நிர்வாகிகளை கைது செய்ய நீதி மன்றம் உத்தரவிடுவதற்கும் துஆ செய்யவும்.
செய்தி உதவி : திரு. முகம்மது யூசுஃப் M.A B.L
State Executive Council Member, MNP
1 comment:
சத்தியம் என்றும் நிலைக்கும். இஸ்லாமியக் கொள்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயலையும் நாம் துணிந்து போராடுவோம். இன்ஷா அல்லாஹ் உங்களது முயற்சிகளுக்கு எங்களது துஆ என்றும் உண்டு. வல்ல ரஹ்மான் துணை நிற்பான்.
அன்புடன்,
சாதிக்.
Post a Comment