Thursday, September 21, 2006

ததஜவினர் தன்மான சிங்கங்களா?

இஸ்லாமிய சரித்திரத்தை திரித்து கூறும் நிகழ்ச்சிகள், தற்போது டான் டீ.வியில் தஃவா என்ற பெயரில் ததஜவினரால் நடத்தப்படுகிறதா? என்ற சந்தேகத்தை தூண்டும் வகையில் பாக்கரின் சொற்பொழிவு ஒன்றை சமீபத்தில் டான் டீ.வியில் ஒளிபரப்பியுள்ளார்கள்.

அவரின் சொற்பொழிவில் பிரச்சனைக்குறிய இரண்டு விஷயங்கள்:

1) நபியர்களின் மனைவிகள் ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர அனைவரும் கிழவிகள் என்றும் 2) வரகா இப்னு நவ்பல் அவர்கள் யூதர் என்றும் தனது சொற்பொழிவில் பாக்கர் பேசியுள்ளார்.


மேற்கண்ட இரண்டு விஷயங்களையும் தவறு என்று சுட்டிக்காட்டிய முகவைத்தமிழனின் கட்டுரையை படிக்கும்போது, ஒரு தவ்ஹீத் இயக்கத்தை வழிநடத்தும் ஒரு நிர்வாகியிடமிருந்து இதுபோன்ற தவறான தகவல்கள் இடம்பெறுமா? அப்படியே சொல்லியிருந்தாலும் சுற்றியுள்ள ததஜவினர் கவனிக்காமலா விட்டிருப்பார்கள்? அதையும் மீறி எடிட்டிங்கிலும் இந்த தவறான விஷயம் கத்திரிக்கோல் வைக்கப்படாமல் இருந்திருக்குமா? போன்ற கேள்விகளை என் மனதில் எழுப்பிய நான், ஏதோ முகவைத்தமிழன்தான் ஒழுங்காக கவனிக்கவில்லை போலும் என்று நினைத்திருந்தேன். ஆனால் முகவைத்தமிழனின் கட்டுரைக்கு மறுப்பு எழுதிய ததஜவினரின் விளக்கவுரையை படித்த நான் இந்த மறுப்புரையை எழுதாமல் இருக்கமுடியவில்லை.

நபியர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர மற்றவர்கள் கன்னிப்பெண்களாக மணமுடிக்கவில்லை என்ற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு அனைவரும் கிழவிகள் என்று சொல்வது சரித்திர புரட்டல் என்பது தான் இங்கு முதல் பிரச்சினை. நபியவர்களுக்கு வந்தது இறைச்செய்திதான் என்று முதன் முதலில் உண்மைப் படுத்தியவர் வரகா இப்னு நவ்பல் என்ற கிருத்துவ மார்க்கத்தை சேர்ந்த வேத விற்பன்னர் என்பதை மாற்றி யூத மார்க்கத்தை சேர்ந்தவர் என்று பாக்கர் புரட்டி போட்டுள்ளது இரண்டாவது பிரச்சினை.

தவறு செய்பவர்கள் மனிதர்கள். தவறே செய்யாதவன்தான் இறைவன். பாக்கர் விபரம் தெரியாமல் தவறாக கூறிவிட்டார் என்று ததஜவினர் சொல்லிவிட்டால் இப்பிரச்சினை முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிடும். ஆனால் பாக்கரின் தவறுக்கு விரிவுரை வழங்க ததஜவினர் புரப்பட்டுவிட்டதாலும் இந்த சரித்திர புரட்டல்களை உண்மை என்று நிரூபிக்க விவாதம் செய்ய ததஜவினரின் கடையநல்லூர் மதரஸாவில் படிக்கக்கூடிய மாணவர்கள் தயாராக இருப்பதாக கூறுவதாலும், இவர்கள் (ததஜவினர்) எந்த அளவுக்கு வழிகேட்டில் உள்ளார்கள் என்று மக்கள் அறிந்துக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

ததஜவினரின் விளக்கத்திலிருந்து நான் விளங்கிய சில விஷயங்களை பட்டியலிட்டுள்ளேன். அதனைப் படித்து மனதில் வைத்துக்கொண்டு ததஜவினரின் விளக்கத்தை நீங்களும் படிப்பதோடு நின்றுவிடாமல், ததஜவின் பீ.ஜே, பாக்கர் மற்றும் அவர்களின் பொறுப்பாளர்கள் எங்கு வந்தாலும் இதனை காப்பி எடுத்துக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். இதனால் ததஜவின் கடைநிலை ஊழியன் எந்த அளவுக்கு வழிகேட்டில் உள்ளான் என்பதை அவர்கள் தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும்.

1) ஆயிஷா ரலி அவர்களைத்தவிர மற்றவர்கள், கன்னிப் பெண்களாக இல்லை என்பதும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்துப் பெற்றவர்கள் என்பதும் நாமறிந்த உண்மை. ஆனால் பாக்கரின் வார்த்தைக்கு விளக்கவுரை எழுதிய உளறுவாய் உமர், "வயது முதிர்ந்தவர்கள்" என்ற வார்த்தையை போட்டு நபிகளாரின் மனைவிகள் அனைவரும் கிழவிகளே என்பதை நிறுவுவதற்கு முயன்றுள்ளார்.

இதற்கு பதில், நபிகளாரின் மனைவிகளில் அன்னை ஆயிஷா ரலி அவர்களைத் தவிர மற்றவர்கள் கன்னிப்பெண்களல்ல என்றும் கணவனை இழந்தவர்கள் என்பதைத்தான் பாக்கர் கவனக்குறைவாக ஆயிஷா ரலி அவர்களைத் தவிர மற்றவர்கள் கிழவிகள் என்று சொல்லிவிட்டார் என்று எழுதியிருந்தால் அதுவே அழகான பதிலாக இருக்கும்.

2) யூதர்களையும் கிருத்துவர்களையும் இறைவன் பல இடங்களில் சேர்த்தே கண்டிக்கிறான். ஆகவே ஒரு கிருத்துவரை யூதர் என்று பாக்கர் குறிப்பிட்டு விட்டதால் என்ன தவறு இருக்க முடியும் என்றும், யூதர் என்று சொல்லிவிட்டதால் முஸ்லிமாகிவிடுவாரா என்று கேள்வி கேட்டும், யூதர் என்று சொன்னதால் எந்த அளவுக்கு உயர்ந்துவிட்டார் என்றும் சொல்லி, "ஒரு கிருஸ்துவராக இருந்தவரை யூதர் என்று சொல்லும் அளவுக்கு ஏனப்பா விபரமில்லாமல் இருக்கிறீர்கள்?" என்று சொன்னதை மறக்கடிக்க முன் வருகிறார்கள்.

3) ததஜ சகோதரர்கள், (அசத்தியமான விஷங்களில்) மற்ற தவ்ஹீத்வாதிகளை விவாதத்திற்கு அழைப்பதன் காரணம், இதுபோன்ற சம்பந்தமில்லாத விளக்கங்களை கொடுத்து பார்வையாளர்களாக வந்தவர்களை பிரச்சினைக்குறிய கேள்வி என்ன என்பதை மறக்கடிக்க வைத்துவிட்டு, தங்களிடம் உண்மை இருப்பதுபோல் ஒரு பிம்பத்தை தோற்றுவிப்பதற்குத் தானா?

வரகா இப்னு நவ்பல் ஒரு கிருத்துவராக இருந்தார் என்பது இஸ்லாமிய சரித்திரம் சொல்லும் உண்மை. ஆனால் அவர் ஒரு யூதர் என்று தவறான குறிப்பை சகோதரர் பாக்கர் அவர்கள் தந்துவிட்டார் என்பதை சரிகட்ட, அதனைச் சுட்டிக்காட்டியவருக்கு ததஜ சகோதரர்கள் கொடுத்த பதிலைப் படித்தால் இவர்களின் விவாதத் திறமை என்னவென்பதை அறிய முடிகிறது.

4) தங்களின் இமாம்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்பது ஷியாக்களின் கொள்கை. அதுபோல தங்களின் பொதுச் செயலாளர் பாக்கர் சொன்னது தவறே இல்லை என்று நிறுவ முன்வருகிறார்கள். விடியல்காரர்களை ஷியாக்களின் கொள்கையை பின்பற்றுபவர்கள் என்று வாய்கிழிய விமர்சனம் செய்த பீஜேயானிகள், அத்தவறை தாங்களே செய்யும்போது வாய்மூடி இருப்பதுதான் ததஜ தலைமையின் தனித்தன்மையா?

5) இஸ்லாமிய LKG பாடத்தினைக் கூட தெரியாத பாக்கரின் தவறுகள் அடங்கிய சொற்பொழிவை, டான் டீ.வியில் தொடர்ந்து ஒளிப்பரப்ப உதவியாக, தங்களின் வசூலுக்கு பங்கம் வந்துவிடக்கூடாதே என்பதற்காகவா தவறுகளை மறைக்க இதுபோன்ற விரிவுரை எழுதுகிறார்கள் என்ற கேள்வியை முன்வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ததஜவின் கடைநிலை தொண்டனை தள்ளிவிடுகிறது ததஜவினரின் மறுப்புரை.

6) ததஜ அமைப்பில் யாராவது நல்ல மனம் படைத்தவர்கள் இருந்தால், ததஜவினரின் இந்த பதில் மூலம், எந்த அளவிற்கு அவர்கள் வழிகேட்டில் கொண்டு சென்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தங்களின் மண்டையை குளோரக்ஸ் போட்டு ததஜவின் தலைமை கழுவி உள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

7) ஒரு காலத்தில் சுய பரிசோதனை பற்றிய சொற்பொழிவில் தான் சொல்வதெல்லாம் சரி என்று ஒரு கூட்டம் உருவாவதை கண்டித்த பீ.ஜே, தற்போது தங்களை வணங்கக்கூடிய கூட்டம் உருவாவதை கண்டும் காணாமல் இருந்து வருவதால், பீ.ஜே மற்றும் பாக்கர் உயிரோடு இருக்கும்போது அவர்களின் கூற்றில் தவறே இல்லை என்று விரிவுரை எழுதும் ததஜவினர், பீ.ஜே மற்றும் பாக்கர் இறந்துவிட்டால் எந்த அளவுக்கு சட்டையை கிழித்துக்கொண்டு அழைய போகிறார்கள் என்பதை உறுதி செய்கிறது.

8) கடையநல்லூர் தவ்ஹீத் மரரஸாவில் படிக்கக்கூடிய ஒரு மாணவரை வைத்து பாக்கர் சொன்னது சரிதான் என்று நிரூப்பிக்கப் போகிறார்களாம். அப்படியென்றால் இவர்கள் உருவாக்கி வரும் மவ்லிகளின் தரம் இதுதான் என்பதை ததஜவின் கடைநிலை ஊழியன் அவசியம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

9) தவறான விஷயங்கள் தவ்ஹீத் மேடைகளில் வெளிப்பட்டால் சீட்டு எழுதி கொடுக்கக்கூடிய ஆட்கள் அனைவரும் ததஜ-வை விட்டு வெளியேறிவிட்டார்களா? எனவே அத்தவறான தகவல்கள் எடிட்டிங் செய்யும்போதுகூட பொறுப்பாளர்கள் பார்க்கவில்லையா? அல்லது தவறு என்று உணரவில்லையா? அல்லது அந்த அளவுக்கு ததவின் அனைத்து பொறுப்பாளர்களும் ஞான சூன்யமாகிப் போகிவிட்டார்களா என்பதுபோன்ற உபரி கேள்விகளும் எழுகின்றன.

10) ததஜவினர் தங்களின் மறுப்புரையில் வரகா இப்னு நவ்பல் அவர்களை "நவ்பல் இப்னு வரகா" என்றும் எழுதியிருப்பது இவர்களின் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

11) பாக்கர் அவர்கள் தியாகி என்று எழுதியுள்ளார் அந்த மறுப்புரையில். பாக்கர் தியாகியா இல்லையா என்பதை அடுத்தது பார்ப்போம். பாக்கர் சொன்னது சரித்திர உண்மை என்று லூசுதனமாக எழுதிய "உளறுவாய் உமரை" அல்லது "அப்படி எழுதி கொடுத்தவரை" அல்லது "எழுத அனுமதி வழங்கியவரை" செருப்பால் அடித்துவிட்டு அவர் உண்மை முஸ்லிம் என்று நிரூபிக்கட்டும்.

12) ஆன்லைன் பீ.ஜே டாட் காம் தளத்தில் வரகா இப்னு நவ்பல் யார் என்று கேட்டால், யூதர் என்று எழுதுவார்களா? கிருஸ்துவர் என்று எழுதுவார்களா? அவர் ஒரு யூதர் என்று யாராவது பதில் அளித்திருந்தால் அவரும் சரியான பதிலை எழுதியிருப்பதாக முன்வருவார்களா?

ததஜவினர் உண்மையில் தன்மான சிங்கங்களாக இருந்தால், மேற்கண்ட கேள்விகளை தங்கள் தலைமையிடம் நேரடியாக கேட்பார்கள். அவர்கள் உண்மையில் தக்லீது வாதிகளாக இருந்தால், உளறுவாய் உமர் அல்லது ஏதேனுமொரு பிஜேயானி எழுதப்போகும் சமாளிஃபிகேஸனில் திருப்தியுறுவார்கள்.

சஹாபாக்களையும், இறைத்தூதரரையும் கண்ணியக்குறைவாக எழுதுவதும் பேசுவதும் ததஜவினரின் முழுநேர தஃவா பணியாக மாறிவிட்டபொழுது, அதனை கடுகளவுகூட கண்டிக்காத சில சகோதரர்கள், ததஜவினரை விமர்சனத்துக்கு உட்படுத்தினால் கொதித்தெழுகிறார் என்றால், ஈமான் எந்த அளவுக்கு துருப்பிடித்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

எனக்கும் உங்களுக்கும் இறைவன் நேர்வழியை கொடுத்து, ததஜ என்ற நவீன கால முஃதஸிலாக்களின் பிடியில் இருந்து தமிழ்முஸ்லிம்களை இறைவன் காப்பாற்றுவானாக, ஆமீன். ஆமீன்.

இப்படிக்கு
அப்துல்லாஹ்

ததஜவினரின் விளக்கத்தை இங்கு கிளிக் செய்து படியுங்கள்.
இஸ்லாம் முஸ்லிம் இஸ்லாமியர்கள்

No comments: