Tuesday, August 01, 2006

இரத்தின சபாபதி மாற்றம்-நீதி விசாரணைக்கு கலைஞர் உத்தரவு


சென்னை: ஆகஸ்ட் 01, இன்று காலை 10.30 மணியளவில் தமிழக முதல்வர் டாக்டா. கலைஞர் அவர்கள் தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து கோவையிலும் மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளிலும் அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு தீவிரவாதிகளாக காட்டி ஒரு சமுதாயத்தையே கேவலப்படுத்த முயன்று தமிழக அரசிற்கும் முதல்வருக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த முயன்ற உளவுத்துறையின் அதிகாரி இரத்தின் சபாபதி (காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர்) அவர்களை கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி ஆக ஊட்டிக்கு பணி மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்கள். மற்றும் இரத்தின சபாபதிக்கு பதிலாக அவ்விடத்தில் புதிதாக நந்தகுமார் என்ற அதிகாரியை நியமித்தும் உத்தரவிட்டுள்ளார்கள். திரு.நந்தகுமார் என்பவர் நேர்மையாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவார் என்று நம்புகின்றோம்.

தமிழகத்தில் "தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்" என்ற அமைப்பு நீங்கலாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமையில் இவ்விஷயத்தில் ஒன்றிணைந்து இந்த வழக்கை மத்திய புலனாய்வு குழு (CBI) விசாரிக்க வேண்டியும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வேண்டியும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து போராடின. தமுமுக வின் மாநில செயளாலர் ஜனாப் ஹைதர் அலி அவர்கள் நேரடியாக கோவை சென்று விசாரித்தார் மற்றும் MNP யின் தலைவர் ஜனாப் குலாம் முஹம்மது அவர்களும் இது பற்றி முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் உடனடியாக இரத்தின சபாபதியின் மாற்றலுக்கு உத்தரவிட்டதுடன் நீதி விசாரனைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் புதிய அதிகாரி திரு.நந்தகுமார் அவர்கள் நேர்மையாக செயல்பட்டு இந்த வழக்கின் உண்மையை மக்களுக்கு கூறி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதோடு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அப்பாவிகளின் விடுதலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் செயல்படவேண்டும் என்றும் மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு அன்று ஃபத்வா கொடுத்து குற்றத்தின் முக்கிய காரணியாக செயல்பட்டவர்கள் கைதாவதில் இருந்து தப்பிப்பதற்காக இன்று சமூக அரசியல் பேரியக்கங்களின் பின்னால் மறைந்து கொண்டுள்ளார்கள் அவர்களை அடையாளங்கண்டு கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் கடந்த முறை டாக்டர். கலைஞர் அவர்கள் ஆட்சியின் போது பல முஸ்லிம் பிரமுகர்களும் மார்க்க அறிஞர்களும், இந்து சமுதாய பிரமுகர்களும் கொல்லப்பட்டார்கள் அந்த கொலைகளின் பின்னால் யார் உள்ளார்கள் என்பது தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் அவாகளுக்கு தெளிவாக தெறியும் . இரகசிய கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்தி தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் மூலைச்சலவை செய்யப்பட்ட சில இளைஞர்களை கொண்டு தனது மனஇச்சைப்படி வழங்கப்பட்ட ஃபத்வாக்கள் மூலம் கொன்றதும் குண்டுகள் வெடிக்கச்செய்து அப்பாவிகள் செத்ததன் காரணகர்த்தா யாரென்பதும் உளவுத்துறைக்கும் தமிழக முதல்வருக்கும் தெளிவாக தெறியும். அன்று நீங்கள் அவரை கைது செய்யாததன் காரணம் வேறு இன்று சூல்நிலை மாறியுள்ளது கைதிலிருந்து தப்பிப்பதற்காக இயக்கங்கள் ஆரம்பித்து தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களை முஸ்லிம்களுக்கு எதிரி என்று தவறான பிரச்சாரம் செய்து மக்களிடையே தமிழக அரசை பற்றிய தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்த இவர்கள் முயன்று வருகின்றார்கள். உடனடியாக தமிழக அரசு உண்மையான இந்த குற்றவாளியை கைது செய்ய உத்தரவிட வேண்டும். இன்னும் பல குண்டு வெடிப்புகள் தமிழகத்தில் நிகழாது தடுக்க வேண்டும்.



அதற்கு முன்னேற்பாடாக டாக்டர்.கலைஞர் அவர்கள் இரத்தின சபாபதியின் மாறுதலுக்கும் நீதிவிசாரனைக்கும் உத்தரவிட்டுள்ளது முஸ்லிம் சமுதாய மக்களிடம் மகிழச்சியை ஏற்படுத்தி தமிழக அரசின் மீதும் மூதறிஞர். டாக்டர். கலைஞர் அவாக்ள் மீதும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இதே போல் முதல்வர் அவர்கள் விரைவாக செயல்பட்டு கோவை குண்டுவெடிப்பிற்கு ஃபத்வா வழங்கியவர்களையும், கே.கே நகர் இமாம் கொலை வழக்கு, ஆலிம் ஜார்ஜ் மனைவி கொலை வழக்கு போன்றவற்றில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். மன இச்சைப்படி ஃபத்வா வழங்கி அப்பாவி இளைஞர்களை வைத்து தான் கை காட்டுபவர்களையெல்லாம் கொலை செய்ய சொல்லி விட்டு பின்னர் அவர்களை காவல்துறையில் காட்டி கொடுத்து அப்பாவிகள் சிறை செல்ல காரணமாயிருந்தவர்களையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று இந்த சமுதாயம் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கின்றது.

தமிழக முதல்வருக்கு நன்றிகள் !!


கடைசி செய்திகள் :

மாலை செய்தி : 01.08.2006

அத்துடன் இந்த வழக்கை கோவை உள்ளுர் காவல் துறையிடம் இருந்து மாற்றி "சிறப்பு புலனாய்வு குழு" விசாரிக்கவும் உடனடியாக உண்மைகளை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலைநாட்டவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நீதி பாசறை உள்பட பல அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதும் மெளலவி. ஹாமித் பக்ரி தலைமையில் கடந்த 30.07.2006 அன்று சென்னையில் தேசிய லீக், முஸ்லிம் லீக் உள்பட 20க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றாக இணைந்து "அப்பாவி சிறைவாசிகள் விடுதலை இயக்கத்தின்" சார்பாக தமிழகத்தின் சிறைச்சாலைகளில் வாடும் அனைத்து அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று போட்ட கோரிக்கை மாநாடும் தமிழக அரசின் இந்த துரித நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

நாம் அணைவரும் ஒன்றிணைந்தால் நமக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராடி வெற்றி பெறலாம் என்பதை உணர்த்துவதாக இந்த சம்பவம்
அமைந்துள்ளது. இதில் முக்கியமாக தமுமுக வினர் தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்து மனித நீதி பாசறையுடன் இணைந்து போராடியதும் மெளலவி. ஹாமித் பக்ரி தமிழகம் முழுவதும் உள்ள அமைப்புக்களை ஒருங்கிணைத்ததும் பாராட்ட தக்கது.
இனி வரும் காலங்களிலும் நம்மவர்கள் இதே ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும்.

1 comment:

Unknown said...

allahu akbar nam odrumaiudan irunthal namakku pinnal mattravarkal irupparkal