Monday, July 24, 2006

மனித நீதி பாசறை செய்தியறிக்கை (PRESS RELEASE)


மனித நீதி பாசறையினரால் கோவை சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட செய்தியறிக்கை :

Click Here to Download the Original Document Received From MNP

In The Name of Allah, The Most Beneficent, The Most Merciful
Manitha Neethi Pasarai

பத்திரிகை செய்தி :

22.07.2006 அன்று கோவையில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்களிடமிருந்துசில வெடிபொருள்கள் பிடிபட்டதாகவும் கூறப்படுகின்றது. இவர்கள் அனைவரும் மனித நீதிப்பாசறையைச் சார்ந்தவர்கள் என்று சில செய்திகளும், அவர்களில் மூவர் மனித நீதிப்பாசறையைச்சார்ந்தவர்கள் என்று சில செய்திகளும் பரவிவருகின்றன. கைது செய்யப்பட்டவர்களுக்கும் மனிதநீதிப்பாசறைக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை.

கோவை காவல்துறை ஆணையர் திரு கரன்சின்கா அவர்கள் எந்த அமைப்பின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் உளவுத்துறை அதிகாரி இரத்தின சபாபதி கூறியதாக சில மேற்கோள்கள்காட்டப்படுகின்றன.

இவர்தான் முந்தைய ஆட்சியின் போது கோவை சிறைவாசிகளைக் காணச் சென்ற முஸ்லிம் பெண்களைக் கண்ணியக் குறைவாக நடத்தி பொய் வழக்கும் போட்டார். இதற்காக இவர் மீது நடவடிக்கைஎடுக்கவேண்டி MNP நடவடிக்கைகள் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. எங்களது பத்திரிகையிலும் இது குறித்து விரிவாக எழுதி இருந்தோம்.

மனித நீதிப் பாசறை நீதிக்காகப் போராடும் இயக்கம். மனித நீதிப்பாசறைக்கும் கோவையில் காவல்துறையினர் கூறுவது போன்ற ஈனச் செயல்களுக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. மனித நீதிப்பாசறைஇதுபோன்ற செயல்களில் இதுவரை ஈடுபட்டதில்லை. எப்போதும் ஈடுபடவும் செய்யாது.

WE DEMAND :

1. நடுநிலையான அதிகாரிகளைக் கொண்ட விசாரணை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும்படிமுதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் நேரில் கேட்போம்.

2. நியாயம் கிடைக்கும் வரை சட்டப்படியான நடவடிக்கைகளையும் போராட்டங்களையும்மேற்கொள்வோம்.

3. மக்கள் மன்றத்தில் முறையான பிரச்சாரங்களைச் செய்து எங்களுடைய இயக்கத்தின் நற்பெயரைநிலைநாட்டிட உழைப்போம்.

4. நல்லெண்ணம் கொண்டவர்களைக் கொண்டு மக்களிடம் இதில் நியாயம் கிடைக்க எங்களோடுஒத்துழைக்கச் செய்வோம்.

மு. குலாம் முஹம்மது
(தலைவர் மனித நீதிப்பாசறை,ஆசிரியர் விடியல் வெள்ளி மாத இதழ்)

Date : 24.07.2006


26, Barracks Road, Periyamet,
Chennai - 600 003.
Phone : 25610969 Fax : 25610872
Email : vidialvelli@airtelbroadband.in

No comments: