மதிப்பிற்குறிய. சிவராஜ் பாட்டில்
"மதரசாக்கள் சமூக சேவையில் பங்கு வகிக்கிறதா அல்லது தீவிரவாதத்தை பரப்புகிறதா' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் டில்லியில் நேற்று நடந்தது. அதில், தலைமை விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கலந்து கொண்டார். கருத்தரங்கில் சிவராஜ் பாட்டீல் பேசியதாவது:
காசி கோவில் மற்றும் டில்லி ஜூம்மா மசூதி போன்ற இடங்களில் சமீபத்தில் சில வன்முறை சம்பவங்கள் நடந்தன. ஒரு சிலர் அந்த தீவிரவாத செயல்களை நடத்தி முடித்துள்ளனர். அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப் படுவார்கள். ஆனால், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குற்றம் சாட்டுவது தவறானது. அதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. சகோதரத்துவம் மற்றும் மத ஒற்றுமையை சீர் குலைக்க சில சுயநல சக்திகள் திட்டமிடுகின்றன. அதை மத்திய அரசு அனுமதிக்காது.
மதரசாக்கள் தீவிரவாத பயிற்சி மையமாக செயல்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த கருத்தை மனதில் கொண்டே எங்களது அரசு செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய
மதரசாக்கள் சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அவை தீவிரவாத மையங்கள் அல்ல. பெரும்பாலா மக்களுக்கு கல்வி அளிப்பதில் மதரசாக்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அதை நான், சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் நன்றாக அறிவோம்.
எந்தவொரு மதமும் ஒருவரோடு சண்டையிட அர்த்தம் கற்பிக்கவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களில் இந்துக்களும், முஸ்லிம்களும் உயிரிழந்தனர். அந்த சம்பவங்கள் நிகழ்ந்த உடனே இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் இந்துக்களோ, முஸ்லிம்களோ அல்ல. அவர்கள் மனித குலத்தின் எதிரிகள். அயோத்தி, டில்லி மற்றும் மும்பையில் உள்ள மக்கள் இதை உணர்ந்துள்ளனர்.
இவ்வாறு சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment