Sunday, July 23, 2006

MNP தீவிரவாதிகள் காவல்துறையின் சதி? EXCLUSIVE

அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கி
தமிழக அரசுக்கு எதிராக முஸ்லிம்களை திருப்ப சதி !!

கோவையில் முக்ககிய இடங்களை தகர்க்க பயங்கர சதி? தீவிரவாதிகள் கைது என்று ஜீலை 23, 2006 ஆண்று காலையில் தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளும் செய்தி இணையத்தளங்களும் அலரின. வுழக்கத்திற்கு மாறாக இச்செய்திகளில் ஏதோ புதுமை தோணவே விசாரனையில் இறங்கினோம். எப்போதும் கோவைக்கு ஏதாவது சங்பரிவார தலைவர்களோ, அமைச்சர்களோ வருகின்றார்கள் என்றால் அதற்கு சில தினங்களுக்கு முன் ஏதாவது சில ஒன்றுமறியாத அப்பாவி முஸ்லிம்களை பிடித்து விட்டு "அல் உம்மா" தீவிரவாதி கைது கோவையை தகர்க்க சதி பிரமுகரை கொல்ல திட்டம் என்று செய்தி வரும் ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக 'மனித நீதிப் பாசறை' என்ற அமைப்பின் தீவிரவாதிகள் கைது என்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 இடங்கள், கோவை ரயில் நிலையம், அவிநாசி சாலை எல்.ஐ.சி அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகரக் காவல் ஆனையர் அலுவலகம், டிஐஜி முகாம் ஆகியவைகளை தகர்க்க சதி என்று கூடி இருந்து திட்டம் தீட்டியது போல் செய்தி வெளியிட்டிருந்தன.


முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டும் காவல்துறையின் பொய் செய்தி


கோவையில் உள்ள நமது வாசகர்கள் மூலமாகவும் காவல்துறைக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலமாகவும் நமது விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையால் கைது செய்யப்பட்டவர்களின் விபரம் :

1.ரவி அலி என்ற திப்பு சுல்தான்
2.போலோ சங்கர் என்ற அந்திபுர் ரஹ்மான்
3.ஹாருன் பாஷா
4.ஆண்வர் பாசா
5.ஷம்சுதீன்
6.மாலிக் பாசா
7.ரியாசுர்ரஹ்மான்
8.ஹக்கீம்என்ற எட்டு இளைஞர்கள் காவல்துறையால் அராஜகமான முறையில் கைதுசெய்யப்பட்டு அதைத்தடுத்த பெண்களும் தாக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் தங்களின் பள்ளிப்படிப்பிற்காக வைத்திருந்த உலக வரைபடத்தை கைப்பற்றி தீவிரவாதிகளின் திட்டத்திற்கான வரைபடம் போல் காவல்துறை சித்தரித்துள்ளது. வீட்டிலிருந்த குர்ஆன் ஹதிஸ் சீடிக்களும் எக்ஸ்டென்சன் கேபில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றோடு பறிமுதல் செய்யப்படாத சில பொருட்களையும் சேர்த்து காவல்துறை இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ததாக காட்டியுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அன்வர் பாஷா என்பவரும் ஹக்கிம் என்பவரும் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் இவர்களிடம் கைப்பற்றியதாக பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டப்பட்ட பொருட்கள் பட்டியல் :

1. மதபோதனைகள் அடங்கிய விசிடி
2. 2 சாதாரன பேட்டரி
3. 30 மீட்டர் வயர்
4. உடைந்த கண்ணாடி பாட்டில்கள்
5. வெடிமருந்து 40 கிராம் பொட்டாஸ்
6. டெடனேட்டர்இதில் வெடிமருந்தும் டெட்டனேட்டரும் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்படாத சாதனம் மற்றும் இந்த பொட்டாஸ் என்பது ஊரில் சாதாரணமாக கிடைக்கும் ஒரு உர உப்பாகும். இதில் 40 கிராம் தான் காவல் துறையால் காட்டப்பட்டது. ஆனால் சில பத்திரிகைகள் 300 கிராம் என்று எழுதியுள்ளன. இந்த 40 கிராம் பொட்டாஸை வைத்து சிறுவர்கள் விளையாடும் ஊசிமத்தாப்பு கூட செய்ய இயலாது.இதுவைரை இவர்கள் தகர்க்க திட்டம் தீட்டிய இடங்களுக்கு எந்த பாதுகாப்பும் வழங்காதது ஆச்சர்யத்தை அளிக்கின்றது. அத்துடன் 40 கிரம் சாதாரண பொட்டாஸ் உர உப்பை கொண்டு இத்தனை கட்டடங்களையும் தகர்க் திட்டம் என்றால் கிறுக்குத்தனமாகத் தெரியவில்லையா?

மதபோதனை சீடிக்களை கோவையில் திரையிடுவதன் மூலம் ஒரு 5000 பேர்களையாவது கொல்ல முடியுமா? இரண்டு 1.5 வோல்ட் பேட்டரி (ரேடியோ, விளையாட்டு பொம்மைகளில் உபோயோகிப்பது) வைத்து எத்தனை பேரை கொல்லமுடியுமோ? இவையெல்லாம் பயங்கர ஆயுதங்களா? 40 கிராம் பொட்டாஸ் உப்பை வைத்து என்ன செய்ய இயலும்? ரத்ன சபாபதி கூறுவதைப்போல் இத்தனை கட்டடங்களையும் தகர்க்க இயலுமா? காமெடி போல் தோன்றவில்லையா? லாஜிக்காக இவையெல்லாம் ஒத்துவராதென்று தெரிந்தாலும் கூட இவற்றையெல்லாம் செய்து பத்திரிகையாளர்களை கூட்டி பறைசாற்றியதன் அவசியம் உண்மை தீவிரவாதிகளை பிடிக்க வேண்டும் என்பதல்ல. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அமைதியாக இருக்கும் நமது சமூகங்களிடையே குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி அதில் சுய ஆதாயம் தேடவேண்டும் என்பதே ரத்ன சபாபதியின் நோக்கம்.

இவற்றை வைத்து நமது பத்திரிகைகள் கதை எழுதியது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை ஏனெனில் தமிழகத்தில் பெரும்பான்மையான பத்திரிகைகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்திகளை முதன்மைப்படுத்தி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக காட்டுவதிலேயே முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன. நமக்கென்று உள்ள சில சமூக பத்திரிகைகளும் தங்கள் இயக்கங்களுக்குள் உள்ள அடிதடி செய்தியை பிரசுரிக்கவும் நமது சக முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கண்ணியத்தை குலைக்கும் விதத்திலும் செய்திகள் வெளியிடவே அவர்களுக்கு பக்கங்கள் போதவில்லை.

இந்த சதியின் பின்னணியை அறியவேண்டுமானால் நாம் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சில சம்பவங்களையும் பற்றி கட்டாயம் அறிய வேண்டும். கடந்த சட்ட பேரவை தேர்தலில் கோவையில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக மனித நீதிப் பாசறையைச் சேர்ந்த தாயி (அழைப்பாளர்) ஹாருன் பாஷா என்பவர் தனது அச்சகத்தின் மூலம் துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டு பிஜேபி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தார். அப்போது போத்தனுர் போலிசார் இவரின் இந்த ஜனநாயக பணியை தடுக்கும் விதத்தில் பொய் வழக்குகளை பதிவு செய்து கைது செய்தனர். இதை முறியடிக்கும் விதத்தில் ஜாமினில் வெளியே வந்த இவர் காவல்துறை மீதும் இதன் பின்னனியில் செயல்பட்ட காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் ரத்தின சபாபதி என்பவர் மீதும் வழக்கு தொடர்நது அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

காவல்துறை மீதும் ரத்தின சபாபதி மீதும் வழக்கு தொடர்ந்ததால் பலி வாங்கும் நடவடிக்கையே இந்த கைது எனக்கூறும் செய்தி


கோவை வெடிகுண்டு வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையிலும், ஃபாசிச சிந்தனையுள்ள காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆனையர் ரத்தின சபாபதி என்பவர் தனக்கு மாற்றல் (Transfer) வரலாம் என்று கருதிய நிலையிலும், காவல் துறையின் மீதும், தன் மீதும் வழக்கு தொடர்ந்த ஹாருன் பாசாவை பலிவாங்கும் நோக்கிலும் இந்த சம்பவம் காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆனையர் ரத்தின சபாபதி என்பவரால் ஜோடனை செய்யப்பட்டு முஸ்லிம்கள் திட்டமிடப்பட்டு கைது செய்யப்பட்டு தீவிரவாதிகளாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் ரத்தின சபாபதி கீழக்கண்ட காரியங்களை சாதிக்க முயற்சி செய்துள்ளர்.

1. பெரிய தீவிரவாத கும்பலை பிடித்ததாக காட்டினால் தனது பணி மாறுதல் தள்ளிப்போய் தனக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

2. நெருங்கி வரும் கோவை குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பை தள்ளிப்போட்டு அப்பாவி முஸ்லிம்களின் விடுதலையை தடுக்கலாம்.

3. மும்பை குண்டு வெடிப்பில் ஏற்பட்ட பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு இதுபோல் செய்தியை வெளியிடுவதன் மூலம் மேலும் மன அழுத்தத்தை கொடுத்து முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தலாம்.

4. அதிமுக மற்றும் சங்பரிவாரின் தீவிர அனுதாபியான காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் ரத்தின சபாபதி இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு பதட்டத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கிற்கு கேடு போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி தமிழக முதல்வருக்கும் திமுக ஆட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி இதனால் தமிழக முதல்வர் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யாது தடுத்தல்.

5. காவல் துறையின் அராஜாகங்களை எதிர்த்து வழக்கு தொடாந்தால் இதுதான் நிலை என்று மக்களை அச்சுருத்துவதற்காகவும்.

6. தமிழகத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு முஸ்லிம் மக்களின் உள்ளத்தில் தனது ஆரம்ப கட்ட நடவடிக்கையின் மூலம் சிறிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் டாக்டர் கலைஞர் அவர்களின் இந்த ஆட்சியின் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துதல்.


இப்படியாக இந்த ஒரே வழக்கின் மூலம் பல மாங்காய்களை அடிக்கும் திட்டம் இந்த காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் ரத்தின சபாபதியினுடையது. இவரின் இந்த வழக்கின் ஜோடனையே போலியானது என பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர். அதற்கு ஆதாரமாக விசாரணை அதிகாரிகள் யாரையும் பேச விடாமல் அனைத்து கேள்விகளுக்கும் முன்னமே தன்னால் தயாரிக்கப்பட்ட பதில்களை காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் ரத்தின சபாபதியே சொல்லி வந்தது இந்த வழக்கை பற்றிய பல சந்தேகங்களையும் நம்பிக்கையின்மையையும் பத்திரிகையாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்த விதமும் அவைகள் எழுப்பியுள்ள சந்தேகங்களுமே சாட்சி.

பத்திரிகையாளர்கள் எழுப்பியுள்ள சந்தேகங்கள் மௌனத்தின் பின்னணி என்ன?

இந்த வழக்கில் அதிமுக மற்றும் சங்பரிவாரின் கை உள்ளது என்பதற்கும் இவ்வழக்கு திமுக அரசிற்கு பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவும் சமூகங்களுக்கு இடையில் பிரச்சினையை ஏற்படுத்தி தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்குழைந்து விட்டதாக கூப்பாடு போட்டு தமிழக முதல்வருக்கு தலைவலியை கொடுத்து அவரின் எந்த திட்டங்களும் முஸ்லிம்களை சேராமல் போவதற்கும் விரைவில் வழக்குகள் முடிந்து முஸ்லிம்கள் யாரும் விடுதலையாகி விடாமல் இருக்கவும் என்று பல அரசியல் சதித்திட்டங்களை இந்த வழக்கு உள்ளடக்கியிருப்பதற்கு சாட்சி, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் போலோ சங்கர் என்ற அந்திபுர்ரஹ்மானே என்று சில பட்சிகள் தெரிவிக்கின்றன.

முதலில் இந்த அந்திபுர்ரஹ்மான் யார் என்று தெறிந்தால் இவ்வழக்கின் பின்னால் யார் உள்ளார்கள் என்று தெளிவாக தெறியும். இந்த போலோ சங்கர் எனும் அந்திபுர்ரஹ்மான் இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொள்வதாக அறிவிக்கின்றார். அவருக்கு இஸ்லாம் சம்பந்தப்பட்ட கல்வியை கற்றுக்கொள்வதற்காக அவரை மனித நீதிப் பாசறை என்ற அமைப்பின் சகோதரர்கள் தேனி முத்துதேவன் பட்டியில் பல ஆண்டுகளாக இஸ்லாத்தை தாமாக முன்வந்து ஏற்பவர்களுக்கு இஸ்லாத்தை முறையாக கற்றுக்கொடுத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் என்று கல்விச்சேவையும் புரிந்து வரும் 'அறிவகம்' என்ற கல்வி நிலையத்திற்கு அனுப்பி இஸ்லாத்தை கற்று வரச்செய்கின்றனர். பின்னர் இவருக்கு கோவையில் தொழில் செய்வதற்கு இந்த மனித நேய பாசறை அமைப்பினர் மனித நேயத்தின் அடிப்படையில் உதவிகளை செய்துள்ளனர்.

இந்த அந்திபுர்ரஹ்மான் என்பவரை பற்றி விசாரித்த போது அவர் தன்னை கோவையின் முன்னால் அதிமுக எம்.எல்.ஏ கே.பி. ராஜ் என்பவருக்கு நெருக்கமானவராகவே தன்னை எங்கும் அடையாளப் படுத்தியுள்ளார். அவ்வாறே இவர் அந்த முன்னால் அதிமுக எம்.எல்.ஏ க்கு நெருக்கமானவராகவும் இருந்துள்ளார். கடந்த சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக தோற்றதும் மற்றும் காவல் துறையினர் மீதே மனித நீதிப் பாசறையின் 'தாயி' (அழைப்பாளர்) வழக்கு தொடர்ந்திருப்பதாலும், மனித நீதிப் பாசறை என்ற அமைப்பை பலி வாங்க காத்திருந்த இந்த உதவி ஆணையர் ரத்தின சபாபதிக்கு அந்திபுர்ரஹ்மானை காவல் துறையின் உளவாளியாக மாற்றி அதிமுக வின் ஆதரவுடனும் உதவியுடனும் மனித நீதிப் பாசறை அமைப்பிற்குள் ஊடுருவ விட்டது ஒன்றும் பெரிதாக தெறியவில்லை. இவர்மூலமே மனித நீதிப் பாசறையின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. இறுதியில் இவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மனித நீதிப் பாசறையை சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது இன்று இவர் காவல் துறை உயர் அதிகாரிகளின் விசாரணையின் போது அளித்த முன்னுக்கு பின் முரணான தகவல்களால் ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது.

இந்த ஜோடனை செய்யப்பட்ட கைதுகளின் மூலமும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதன் மூலமும் உதவி ஆணையர் ரத்தின சபாபதி சாதிக்க நினைப்பதெல்லாம் நாம் மேலே கூறிய காரியங்களே. இந்த சம்பவமே போலியாக ஜோடனை செய்யப்பட்ட சம்பவம் என்பதே விசாரனையில் ஈடுபட்டிருக்கும் பல உயர் அதிகாரிகளின் கருத்தாகும் இவ்வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் பொய் என்று நிரூபிக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.

இதுபோன்ற நமது சமுதாயத்திற்கு எதிரான திட்டங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும் அப்பாவி முஸ்லிம்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படாமல் இருப்பதற்காகவும் இவ்வழக்கில் உண்மையை வெளிக்கொணர்ந்து மக்கள் மன்றத்தில் சதிகாரர்களின் நிஜ முகத்தை அடையாங்காட்டவும் தமிழக அரசை வலியுறுத்தி நமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் தங்களுக்கிடையில் உள்ள விரோதங்களை மறந்து சமுதாய நலனை மனதில் கொண்டு ஒற்றுமையாக போராட வேண்டும். நிகழ்வுகளின் வீரியத்தினை உணர்ந்தவர்களாக நமது இயக்கத்தினர் செயல்பட வேண்டும். இனி எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காதிருக்க இப்போது போராட வேண்டியது நமது இயக்கங்களுக்கு அவசியம். அதிலும் சங்பரிவரக் கும்பல்கள் காவல்துறையில் உள்ள சிலரின் உதவியுடன் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுத்தும் இந்த திட்டம் முறியடிக்கப்பட வேண்டியது மிக மிக அவசியம்.

தமிழக முதல்வரும் இதில் தனக்கும் தனது ஆட்சிக்கும் எதிராக பின்னப்பட்டுள்ள சதித்திட்டங்களை உணர்ந்து உடனடியாக நியாயமான நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு அப்பாவிகளை விடுதலை செய்து இதில் ஈடுபட்டிருக்கும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இதனால் தமிழ் முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் இருக்கும்.

அதே நேரத்தில் உண்மையில் சமூக விரோதச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் தயவு தாட்சன்யம் இல்லாமல் இந்த அரசு கைது செய்ய வேண்டும். அதற்கு அனைத்து சமுதாய பிரமுகர்களும் ஒத்துழைப்பார்கள். தீவிரவாதம் என்பது கருவோடு அழிக்கப்பட வேண்டியது என்பதில் யாருக்கும், கருத்து வேறுபாடு இல்லை. மாறாக இதுபோன்று அப்பாவிகளை தங்களின் சுய நலனுக்காக தீவிரவாதிகளாக மாற்றி காட்டி ஒரு சமுதாயத்தையே குற்றவாளிகளாக சித்தறிக்க முனைவது என்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக அரசம், தமிழக காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களும் இது போன்ற சில நிகழ்வுகளால் அரசுக்கும் காவல்துறைக்கும் ஏற்படும் கலங்கத்தை நீக்கிட உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்கள் என்று இந்த சமுதாயம் நம்புகின்றது.

குறிப்பு : இந்த வழக்கின் விபரங்களை திரட்டி தந்து இந்த ஆக்கத்திற்கு உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் குறிப்பாக கோவை மாவட்ட சகோதரர்களுக்கும் சட்டப்பூர்வ தகவல்களை திரட்டித்தந்த சிடிஎம் சகோதரர் கோவை தங்கப்பா அவர்களுக்கும் எனது நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.


நன்றி


முகவைத்தமிழன்

2 comments:

ஆத்தூர்வாசி said...

This is the time our organisations have to get-to-gether and do something meaningful, there is no point in sitting and critcizing each others. I think TMMK has more responsiblities than others, they should act wisely now and get the stain out of us immediately and other organisations have to support them and show our unity in these issue.

May Allah give success and get the innocents out.

Anonymous said...

* உண்மை வெகு நாள் உறங்காது.

* சத்தியம் மறுபடியும் வெல்லும்.

* இறுதி வெற்றி உண்மையின் பக்கமே.

* இவ்வுலகம் நம்பிக்கையாளர்களின் சோதனை கூடாரம்.

* பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான்.

* சோதனைகளையும் இன்னல்களையும் இன்முகத்துடன் வரவேற்பது தான் சமூகத்துக்காக உழைப்பவனின் அடையாளம்.

* காத்திருப்போம் உண்மைகளின் வெளிப்படுதல்களுக்காக.

* பயங்கரவாதிகள், சமூக விரோத தீவிரவாதிகள் யார் என உலகம் ஒருநாள் தெளிவாக உணரும்.

* அந்நாள் வரை போராடுவோம் அசத்தியத்தியங்களின் தோல்விக்காகவும் உண்மைகளின் வெற்றிக்காகவும்.

உண்மையின் பக்கம் நின்று அசத்தியத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் சகோதரர் முகவைத் தமிழன் அவர்களுக்கு நன்றிகள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

அடித்துக் கொண்டிருக்கும் சகோதரர்கள் ஒருநிமிடமாவது தங்கள் வெட்கம் கெட்ட செயல்களை எண்ணி தலைகுனியும் வரை.

அன்புடன்
இறை நேசன்