கோவைச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட தமுமுக கோரிக்கை
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றவர்கள்
தமுமுகவின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி மற்றும் மாநில செயலாளர் எஸ். உமர்
கடந்த சில தினங்களாக கோவையில் நடந்து வரும் சம்பவங்கள் பற்றியும் அதன் தொடர்ச்சியாக தமிழ் முஸ்லிம் சமுதாயத்தையே தீவிரவாதிகளாக சித்தறிக்க முற்படும் காவல்துறையின் செயல்களை கண்டித்து நேரடி கள ஆய்வுப் பணிகளை செய்ய இன்று 26.07.2006 புதன் கிழமை தமுமுக வின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜனாப். எஸ்.ஹைதர் அலி அவர்களும் மாநிலச் செயலாளர் எஸ்.உமர் அவர்களும் தமுமுக தலைமையின் கட்டளையின் கீழ் இன்று கோவையில் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து நேரடி ஆய்வுகளை மேற்க்கொண்டனர். அதன் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது :
கடந்த 21.07.2006 அன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநகர் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் அளித்த பேட்டியில் கோவையில் 5 பேர் பிடிப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் போன்ற முக்கிய இடங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கு சதித்திட்டம் தீடடியதாகவும், அதன் வரைபடங்கள் கைப்பற்றியதாகவும், செய்தித்தாள்களில் வந்ததை வாசித்த கோவையில் வாழுகின்ற மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்ற வண்ணம் இருந்தது.
கடந்த 1998-ம் வருடத்திற்கு பிறகு நல்ல அரசு அதிகாரிகளின் கடும் முயற்சியால் தற்போது நல்ல அமைதியான சூழ்நிலை கோவையில் ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19.07.2006 அன்று வெளியான தமிழ்முரசு பத்திரிக்கையில் இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் அளித்த பேட்டியில் "கோவை சிறைச்சாலையை தகர்க்க தீவிரவாதிகள் சதி" என்ற தலைப்பில் அளித்த பேட்டியில் தமிழக்கத்தில் 45 பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழக கேரளா எல்லைகளில் குண்டுவெடிப்பு நடக்கும் ஆபத்து உள்ளதாகவும் தமிழக காவல்துறை விழிப்போடு இருக்க வேண்டும் என பேட்டி அளித்துள்ளார். இச்செய்தி வெளியான ஒரு சில தினங்களில் சமீபத்திய கைது நடவடிக்கை பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 'மனிதநீதிப் பாசறை' அமைப்பை சார்ந்தவர்கள் என காவல்துறை கூறியிருந்தாலும் முஸ்லீம் சமுதாயத்தின் மீது எழுந்துள்ள சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்க த.மு.மு.க. கடமைப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களின் விபரம் பற்றி காவல்துறை வெளியிட்ட செய்தியில் பல முரண்பாடுள் இருப்பது தெரிய வருகிறது. பத்திரிக்கையாளர்களிடம் காண்பிக்கப்பட்ட பொருள்களை வைத்து கொண்டு எந்த கட்டிடத்தையும் தகர்க்கும் வண்ணம் சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் கைப்பற்றியதாக எதனையும் அவர்கள். பத்திரிக்கையாளர்களிடம் காட்டவில்லை.
மேலும் இவ்வழக்கு சம்மந்தமாக ஆணையாளர் கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் வழக்கத்திற்கும், விதிமுறைகளுக்கும் மாறாக ஆணையாளர் கரண்சின்கா அவர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு போன்ற அதிகாரிகளெல்லாம் மவுனமாக இருக்கும் போது உளவுத்துறை உதவி ஆணையாளர் பேட்டி அளித்தது மட்டுமல்லாமல் உயர் அதிகாரிகள் மவுனமாக இருந்தது பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் கூட பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவ்வழக்கு விசாரணை செய்ததிலும், பதிவு செய்யப்பட்ட விதத்திலும் பொதுமக்களுக்கு த.மு.மு.க. சந்தேகத்தை நிவர்த்தி செய்ய இவ்வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்து நீதி விசாரணை நடத்தி உண்மையை அரசுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.
மேலும் கோவை மாவட்டம் ஒரு பதட்டமான பகுதி என அனைவரும் அறிந்ததே, இங்கு பணியாற்றுகின்ற காவல்துறை அதிகாரிகள் நிடுநிலையாகவும், நியாயமாகவும் சார்ந்திருப்பவர்களாக குழப்பமில்லாமல் தெளிவான முடிவு எடுக்கக் கூடியவர்களாகவும், எந்த நேரத்திலும் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்துகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சிறந்த அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரிகளை உடனடியாக மாற்றி தற்போதைய தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாத அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்காக தமிழக அரசை தமுமுக வலியுறுத்தும் என்றும் தெறிவித்தனர்.
கடைசி செய்தி :
கைது செய்யப்பட்டு தீவிரவாதிகளாக காண்பிக்கப்பட்டவர்களிள் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாவட்ட நிர்வாகியும் அடக்கம். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் கைகோர்த்து போராடி வரும் நிலையில் தனது இயக்கத்தின் மாவட்ட நிர்வாகியே கைது செய்யப்பட்டும் இது குறித்து சிறிய கண்டனம் கூட தெறிவிக்காது மௌனம் காத்து வரும் ததஜ வின் செயல்கள் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
இதுகுறித்து நாம் ததஜ வின் முக்கிய புள்ளிகள் சிலரிடம் விசாரித்தபோது கைது செய்யப்பட்ட ததஜ வின் மாவட்ட நிர்வாகி ததஜவின் தலைமையுடன் அதிருப்தியில் இருந்ததாகவும் இவர் கைது செய்யப்பட்ட அன்று கோவை வந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சில முக்கிய உளவுத்துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி விட்டு சென்ற ததஜ வின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.பாக்கரின் நடவடிக்கைகளையும் சேர்த்தே கிசுகிசுக்கின்றார்கள் இப்பகுதி ததஜ வினர்.
காவல்துறையின் சில நடவடிக்கைகளும் அதை ஆமோதிப்பதுபோபல் உள்ளன. ததஜ வின் நிர்வாகி உள்பட கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை கொல்ல திட்டம் தீட்டி இருந்ததாகவும் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறையால் சொல்லப்படும் 'ஹிட் லிஸ்ட்டில்' ததஜ வின் தலைவர் பி.ஜெயனுல்லாபுதீன் பெயர் முதலில் இருந்ததால் அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கும்படி உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதியின் உத்தரவின் பேரில் சென்னை மாநகர காவல்துறையினர் பி.ஜெயனுல்லாபுதீன் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளதாக வரும் பத்திரிகை செய்திகளை (குமுதம் ரிப்போர்ட்டர்) பற்றி காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளிடம் விசாரித்தபோது நமுட்டு சிரிப்பு சிரிக்கின்றனர். உண்மை என்னவோ இறைவனுக்கு தான் வெளிச்சம்.
கோவையில் நடந்த மாபெரும் அக்கிரமத்திற்கு எதிராக தங்களது அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்து விட்டு நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து காவல் துறையை கண்டித்தும் அப்பாவிகளை விடுதலை செய்ய கோரியும் தமிழகத்தின் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் போராட்டங்களை அறிவித்து வரும் நிலையில் ததஜ வினர் சொந்த மக்கள் மீது ஏவி விடப்பட்ட அநியாயத்திற்கெதிராக குரல் கொடுக்காமல் தொலைவீல் உள்ள லெபனானுக்கும் ஹிஸ்புல்லாவிற்கும் ஆதரவு தெறிவித்து, வரும் வெள்ளியன்று ஏ.எஸ். அலாவுதீன் தலைமையில் போராட்டம் அறிவித்துள்ளது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளதாக மக்கள் கருத்து தெறிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment