Thursday, May 25, 2006

இயக்கங்களோடு சிறைவாசிகளின் தொடர்பு




*********************************************************************************

குறிப்பு : சுதந்திரமான வலைப்பதிவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் சகோ. அன்சாரி அவர்களின் பேட்டி அப்படியே எந்தவித தணிக்கையும் இல்லாமல் வெளியிடப்படுகின்றது. இயக்கங்கள் மீதோ தனிப்பட்ட நபர்கள் மீதோ கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆசிரியர் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டார்.
- முகவைத்தமிழன்.

*********************************************************************************

இயக்கங்களோடு சிறைவாசிகளுக்கு என்ன தொடர்பு?

சகோ. அன்சாரியின் பேட்டி (பாகம் 2)


முகவைத்தமிழன் : நமது சமுதாயத்தின் பெயரால் தமிழகத்தில் செயல்பட்டுக்கொன்டிருக்கும் பல முஸ்லிம் இயக்கங்களை பற்றி நீங்கள் அறிவீர்கள். அவற்றில் பெயர் சொல்லக்கூடிய அளவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழுகம், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், இந்திய யுனியன் முஸ்லிம் லீக் , மனித நேய பாசறை (விடியல்) போன்ற சில இயக்கங்களும் உள்ளன. இவை யாவும் தங்களின் (சிறைவாசிகள்) விடுதலைக்காக போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் சிறைவாசிகளின் வழக்குகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆதரவளிப்பதாகவும், உள்நாடு மற்றும் முக்கியமாக வெளிநாட்டில் வாழும் நமது தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் சி.டி, வீடியோக்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். ஏதோ ஒரு வகையில் சிறைவாசிகள் பெயரை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றார்கள் என்பது கண்கூடாக அறியக்கிடைக்கும் உண்மை. அந்தவகையில் உண்மையில் தங்களுக்கும் (சிறைவாசிகள்) இந்த இயக்கங்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து நம் சமுதாய மக்கள் யதார்த்த நிலை அறிய ஆவலாக உள்ளார்கள். இந்த பேட்டியின் மூலம் தங்களுக்கும் (சிறைவாசிகள்) இயக்கங்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் இயக்கங்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உண்மையில் என்ன உதவிகள் செய்துள்ளர்கள் என்பது குறித்தும் சற்று விளக்கமாக கூறுங்களேன்?


முஸ்லிம் லீக்கோடு என்ன தொடர்பு?

சகோ. முஹம்மது அன்சாரி: நன்றி முகவைத்தமிழன் அவர்களே, இது போன்ற கேள்விகளைத்தான் நாம் எதிர்பார்த்தோம் உண்மையில் எமக்கு உதவுவதாகவும், எமது விடுதலை குறித்து போராட்டங்கள் நடத்துவதாகவும், அராங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், எமது குடும்பங்களுக்கு உதவிக்கொன்டிருப்பதாகவும் பல இயக்கங்கள் தாங்கள் கூறியது போல் முக்கியமாக வெளிநாடுகளிள் வாழும் நமது சகோதரர்களிடம் பிரச்சாரம் செய்து வருவதாக எங்களுக்கும் தெறியவந்தது. ஆனால் இதுநாள் வரை இதுகுறித்த எமது நிலைமையை தெளிவுபடுத்தவும் நமது சமுதாயத்திடம் உண்மை நிலையை கூறவும் எமக்கு சரியான வாய்ப்புக்களோ அல்லது ஊடகங்களோ கிடைக்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும். இப்போது தங்களின் ஊடாக இச்செய்தி நமது சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் என்று நம்புகின்றோம். முதலில் நமது சமுதாயத்தின் பழம்பெரும் பேரியக்கமான இந்திய யுனியன் முஸ்லிம் லீக்கிலிருந்து ஆரம்பம் செய்வோம். வெளியே இருந்த காலங்களில் முஸ்லிம் லீக்கோடு பரஸ்பர தொடர்புகள் ஏதுமில்லை. நாங்கள் சிறைப்பட்ட பின்பு மனித நேயத்தோடு முஸ்லிம் லீக் செய்த உதவிகளை என்றும் எம்மால் மறந்திட இயலாது. பதவியில் இல்லாத சமயத்தில் தலைவர் காதர் மொய்தீன் அவர்கள் எங்கனிள் குடும்பங்களை தேடிவந்து ஆறுதல் கூறிய மாண்பினை இன்றும் நினைவு கூறுகிறோம். அரசியல்வாதிகள் தேர்தல் வெற்றிபெற ஆறுதல் கூறி அரசியல் செய்வார்கள். இப்படிப்பட்ட தரங்கெட்ட அரசியலிடமிருந்து வித்தியசமாக தெரிகிறார் தலைவர் காதர் மொய்தீன் அவர்கள். எம்.பி. ஆன பின்பும் கூட சி.டி.எம். அலுவலகம் வந்து குடும்பங்களை நலம் விசாரித்த மாண்பினை எண்ணி வியக்கிறோம். சமூக நலனில் கொண்ட நேசத்தால் அக்கரையோடு உளப்பூர்வமாக தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் செய்திட்ட உதவிகள் மகத்துவமிக்கது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்திட்ட உதவிகளை என்றும் மறந்திட இயலாது. துன்பப்படுகின்ற நேரத்தில்தான் உதவிகள் தேவை, அந்நேரத்தில் செய்யப்படும் உதவிகள் மிகவும் மகத்தானது, மதிப்பு வாய்ந்தவையாக என்றும் திகழும். லீக் செய்திட்ட அவ்வுதவிகள் - சிறைவாசிகளின் குடும்பங்களுக்காக தொழில் தொடங்க பணம் உதவி செய்துகொண்டுள்ளார்கள்.
எம்மை இழந்து தவிக்கும் எமது குடும்பத்தினரின் உதவிக்காக வேண்டி Bracier Factory (மார் கச்சை நிறுவனம்) ஒன்றை தமது சார்பில் இந்திய யுனியன் முஸ்லிம் லீக் அமைத்துகொடுத்தது அதன் மூலம் பெரும்பாலான சிறைவாசிகளின் குடும்ப பெண்கள் மானத்தோடு உழைத்து வாழ வழி செய்தது. இதனால் இன்று எமது குடும்பங்களும் குழந்தைகளும் பசியின்றி வாழமுடிகின்றது. இன்றும் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. சிறைபட்டவர்களின் குழந்தைகளின் கல்வி வறுமையினால் ஒரு போதும் தடைபெற்றிடக் கூடாது. இன்று எமது குழந்தைகளின் கல்விக்காக இந்திய யுனியன் முஸ்லிம் லீக்கும் தலைவர் காதர் முகைதீன் எம்.பி அவர்களும் தொடர்ந்து நிதி உதவி செய்து வருகின்றார்கள்.

அண்ணன் இலாஹி அவர்கள் மூலம் அமீரக முஸ்லிம்லீக்குடன் தொடர்பு ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் மூலம் அமீரகத்திலிருந்து பல லட்சங்களாக கிடைத்திட்ட உதவிகள்தான் எங்களின் பெரும் தேவைகளை நிறைவு செய்தன. பல குடும்பங்களின் வறுமையை போக்க உதவிற்று. சட்டரீதியான போராட்டங்களை எதிர்கொள்ள உதவிற்று. பல கொலை வழக்கிலிருந்து சகோதரர்கள் விடுதலையாக உதவியதே இப்பணம் தான். கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கு நல்ல திறமையாக வழக்கிறிஞர்கள் நியமித்திட இவ்வுதவிகளே பெரிதும் உதவின. எங்களின் நிலைகளில் மேம்பட செய்ததில் முஸ்லிம் லீக்கிற்கு கணிசமான பங்களிப்பு உண்டு.
மேலும் குண்டு வெடிப்பு கைதிகளை பற்றி யாரும் பேசிட முன்வராத காலத்திலேயே சமூக அரங்கில் முதன்முதலில் சிறைபட்டோருக்காக குரல் கொடுத்திட்ட பெருமை முஸ்லிம் லீக்கை சாரும்.
இவ்வாறு லட்சக்கணக்கில் முஸ்லிம் லீக்கின் மூலம் வந்த உதவிகளை ஒரு மேடை அமைத்து அந்த இயக்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினால் அதன் மூலம் தங்கள் இயக்கத்தின் சமுதாய ஊழியம் மக்களுக்கு தெறியவருமே என்றபோது தலைவர் காதர் முகைதீன் எம்.பி அவர்கள் இது பெருமைக்காகவோ அல்லது எங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்க்காகவோ செய்யவில்லை. மாறாக மறுமையில் அல்லாஹ்விடம் நற்கூலியைப்பெறுவதற்காக மட்டுமே இவ்வுதவிகளை நாங்கள் செய்கின்றோம் என்று கூறி எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்கள். தமக்கோ அல்லது தான் சார்ந்துள்ள இயக்கத்திற்கோ எந்த புகழையும் விரும்பாது மறுமையில் கிடைக்கும் நண்மையை மட்டும் கருத்தில் கொண்டு பல லட்சங்களிள் பாதிக்கப்பட்ட எமக்கும் எமது குடும்பத்தினருக்கும் உதவிகள் வழங்கி வரும் இந்திய யுனியன் முஸ்லிம் லீக் சகோதரர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் தகுந்த நற்கூலியை வழங்குவான்.

இங்ஙனம் பாதிக்கப்பட்டவரின் துயர் துடைத்திட துணை புரிந்திட்ட முஸ்லிம் லீக் - இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்திற்கு முன் உதாரணமாக திகழ்கின்றது.
த.மு.மு.க.வோடு என்ன தொடர்பு?

குண்டு வெடிப்பு நடப்பதற்கு 6 (ஆறு)மாதம் முன்புவரை த.மு.மு.க.வோடு நாங்கள் இணைந்தே இருந்தோம். சிறு சிறு அற்பக் காரணங்களால் த.மு.மு.க.வும் அல்உம்மாவும் பிரிந்துவிட்டன. இப்பிரிவு நாங்கள் சிறைப்பட்டதிலுருந்து கடந்த 7 (ஏழு) ஆண்டுகளாக த.மு.மு.க.வோடு எவ்வித ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற நிலைதான் அவர்களிடம் இருந்து எமக்கு எந்தவிதமான உதவியும் கடந்த 7 வருடங்களாக கிடைக்கவில்லை. மாறாக கடந்த ஒரு வருடமாகத்தான் த.மு.மு.க.வோடு நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆரம்பகாலங்களில் த.மு.மு.க., கே.கே.நகரைச் சார்ந்த 40 நபர்களுக்கு மட்டும் குரல் கொடுத்து வந்தார்கள் (அதாவது குன்டுவெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் இந்த 40 (நாற்பது)பேரும் த.மு.மு.க நிர்வாகிகளாக இருந்தவர்கள்) த.மு.மு.க வின் ஒட்டு மொத்த சிறைவாசிகளின் விடுதலை முழக்கம் கடந்த ஓரு வருடம் மட்டுமே.

எட்டாண்டுகளாக பொருளாதார ரீதியாக நாங்கள் அடைந்த துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. வழக்குகளின் சுமை ஒரு புறமும், குடும்பங்களில் நிலவும் வறுமை மற்றொரு புறமும் என அழுத்தங்கள் எங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டன. பலரும் கைவிட்ட நிலையில் செய்வதறியாது விழுந்த கல்லைப்Nபுhல நான்கு சுவர்களுக்கு மத்தில் ஜடமாக இருந்தோம். குடும்பங்களில் நிலவும் சொல்லொண்ணா வறுமைகளை இன்று முன்னணியில் செயல்படும் அமைப்புகள் நேரில் கண்டும் கூட உதவி செய்ய முன் வராததைக் கண்டு எங்களின் மனம் மிகவும் வருந்தமடைந்தது.

ஒரு முஃமினுக்கு பாதிப்பு, துன்பம் என வந்துவிட்டால் ஓடோடி வந்து உதவி செய்திடுவதுதான் மற்றொரு முஃமினுக்கு அழகு. கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்டுக் கிடந்தாலும் அதையெல்லாம் உதறி தள்ளிவிட்டு உதவிக்கரம் நீட்டுவதுதான் பண்பாடுமிக்கவர்களின் செயலாகும். இக்கட்டான நேரத்தில் செய்யக்கூடிய உதவிகள் அது மிகச்சிறியதாக இருந்தாலும் அது மறந்திடமுடியாத, மதிப்பிடமுடியாத உதவியாக என்றும் திகழும்.

எங்களின் வழக்கிற்கு உதவவில்லையென்றால் கூட நாங்கள் வருத்தமடைந்திருக்க மாட்டோம். ஆனால், நிராதரவற்ற குடும்பங்களின் நிலைகளை நேரில் கண்டும் உதவிட முன்
வரவில்லை நம் சமுதாய தலைமைகள்.

அண்ணன் இலாஹி அவர்களின் முயற்சியால்தான் த.மு.மு.க. அனைத்து 'சிறைவாசிகளின் விடுதலை' என்ற நிலைப்பாடை எடுத்தார்கள். த.மு.மு.க.வுக்கும் எங்களுக்கும் உள்ள உறவின் பாலமே அண்ணன் இலாஹி அவர்கள் தான். த.மு.மு.க. எடுத்திட்ட இந்நிலைபாட்டினால் எங்களுக்குள் இருந்த அத்தனை கருத்துவேறுபாடுகளையும் மறந்திட்டோம். கருத்துவேறுபாடுகள் நிலவிய சமயங்களில் கூட ஒரு போதும் அவர்களின் செயல்களை விமர்சிக்கும் போக்கை நாங்கள் கடைபிடிக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் வருங்காலத்திலும் இவ்வுறவு ஆரோக்கியமடைய ஆவன செய்திடுவோம். சமூக நலன் கருதி கடந்த கால கசப்புகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து தண்ணீர் ஊற்றி சாக்கடையில் சங்கமிக்க செய்திட்டோம்.

த.மு.மு.க. இதுவரை எங்களின் வழக்கிற்கோ, குடும்பத்திற்கோ கடந்த எட்டு வருட காலமாக பொருளாதார நிதியாக எவ்வுதவிகளும் செய்திடவில்லை. கடந்த ரமலானில் மட்டும் குடும்பங்களுக்கு கொடுத்திட பித்ரா பணம் ரூ.25,000 (இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) கொடுத்துதவினார்கள்.

இந்த ஒருவருட கால உறவில், சிறைக்கொடுமைகளுக்கெதிராக பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தியதில் அல்லாஹ்வின் கிருபையால் நல்ல பல விளைவுகள் ஏற்பட்டன. முஸ்லிம் சிறைவாசிகள் ஒதுக்கப்பட்டவர்கள் அல்ல, சமுதாயத்தின் பின்பலம் சிறைப்பட்டோருக்குண்டு என அரசுகளுக்கு உணர்த்தினார்கள்.

அதன்பின் சமுதாயத்தின் உணர்வுகளை ஒன்றிணைத்து த.மு.மு.க. நடத்திய சிறைநிரப்பும் போராட்டம் மிக எழுச்சியாக இருந்தன. ஆளும் அரசுகளின் கவனம் சிறைவாசிகளின் மேல் படுமளவிற்கு இப்போராட்டம் வலுவாக இருந்தன. பெரிய பெரிய அரசியல் கட்சிகளே! சாதிக்க முடியா அளவிற்கு நம் சகோதர, சகோதரிகளின் கட்டுக்கடங்கா கூட்டம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. த.மு.மு.க.நடத்திய இப்போராட்டம் களைத்துப்போன எங்களின் உள்ளங்களை நெகிழச் செய்தன.


மனித நேய பாசறையுடன் (விடியல்) என்ன தொடர்பு?

எமக்கும் எமது குடும்பத்தினருக்கும் நாம் அறியா வண்ணம் பற்பல உதவிகளை இவ்வியக்கம் செய்து வருகின்றது. எமக்கு சிறையில் தொல்லைகள் ஏற்படும் போதெல்லாம் இவ்வியக்க சகோதரர்கள் அரசிற்கும் உயரதிகாரிகளுக்கும் பல வகைகளிள் விண்ணப்பித்து அவற்றை நிவர்த்தி செய்துள்ளார்கள். இவ்வியக்கத்தின் தலைவர் அண்ணன் குலாம் முகம்மது அவர்கள் பல முறை எமது விடுதலைக்காகவும் எமது குடும்ப நலனுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்குகளிலும் போராட்டங்களிலும் கலந்துக் கொண்டு எமக்காக குரல் கொடுத்துள்ளார்கள். தமது ஊடகம் வாயிலாக எமக்காக இன்றும் குரல் கொடுத்து வருகின்றார்கள் இவர்கள் பலர் அறிய செய்த உதவிகளை விட, யாரும் அறியா வகையில் இன்றும் எமக்கும் எமது குடும்பத்தினருக்கும் செய்து வரும் உதவிகள் அளப்பறியாதவை. இவர்களின் சகோதரத்துவ உதவிகள் பாராட்ட தகுந்தவை.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் என்ன தொடர்பு?

தவ்ஹீத் ஜமாத் இதுவரை எங்களின் விடுதலைக்காக எதுவுமே செய்யவில்லை. சமுதாய மக்களின் துளைத்தெடுக்கும் கேள்விகளால் ஒரே தடவை தீர்மானம் நிறைவேற்றியதோடு சரி. முஸ்லிம் லீக், த.மு.மு.க., ஜமாஅத்தே இஸ்லாமி, மில்லி கவுன்சில், எம்.என்.பி. போன்ற அமைப்புகளுக்கு பரஸ்பர தொடர்புகள் எங்களுக்குள் இருந்தன. இத்தொடர்புகள் சிறைபட்டோரின் விடுதலைக்குண்டாண போராட்டங்களுக்காகவோ அல்லது நலன்களுக்காகவோ இருந்தன. ஆனால் தவ்ஹீத் ஜமாத்தோடு எங்களுக்கு எவ்வித தொடர்புகள் இன்றுவரை இல்லை என்பதை புரிந்து கொள்ளவும்.

ஆரம்பித்து சில ஆன்டுகளே ஆன இயக்கமாக இருந்தாலும் இவர்கள் கடந்த ஆட்சியில் தங்களிக்கிருந்த செல்வாக்கினை வைத்தும் தங்களது இயக்க வலிமையை வைத்தும் எமக்கு எத்தனையோ வழிகளிள் உதவியிருக்கலாம். ஆனால் யதார்த்தம் இவர்கள் எங்கள் (சிறைவாசிகள்) விஷயத்தில் பின்வாங்கி மெத்தனப்போக்கையே கடைபிடித்து வருகின்றார்கள்.

தமிழகத்தின் மற்ற இயக்கங்களுடன் என்ன தொடர்பு?

எங்களின் சிறைவாழ்வு எட்டாண்டுகளுக்கு மேலாகிவிட்டன மேலே குறிப்பிட்ட அமைப்புக்கள் அல்லாது மில்லி கவுன்சில், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் மற்ற பல திராவிட மனித நேய அமைப்புக்களும் தங்களின் பங்களிப்பாக உதவிகள் செய்துள்ளார்கள். உதவிகள் சிறிதாக இருந்தாலும் நிராதரவற்ற நிலையில் செய்திட்ட அவ்வுதவியினை மதிப்பு வாய்ந்ததாகவே கருதுகிறோம், அல்லாது எங்களின் விடுதலைக்காக பல முஸ்லிம் அமைப்புகளும், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அரசியல் அமைப்புகளும் மற்றும் பல மனித உரிமை அமைப்புக்களும் குரல் கொடுத்துவருகிறார்கள். சிறைபட்டதிலிருந்து ஓரிரு வருடங்களுக்குள் குரல்கொடுக்க தொடங்கி இருந்தால் என்றோ ஒரு முடிவு தெரிந்திருக்கும். அல்லாஹ் போதுமானவன்.

வழக்குகள் விசாரணை முடிவடைந்து இறுதிகட்டத்தில் இருக்கும் இந்நிலையில் பல போராட்டங்கள் வெடிக்கின்றன. காலங்கடந்த போராட்டமாக இருக்கின்றன. இருந்தபோதிலும் தற்போதாவது இப்போராட்டங்கள் நடக்கின்றதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இறைவன் நாடினால் தொடரும்....

3 comments:

Anonymous said...

சகோத. இப்றாகிம்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
தாங்கள் சகோத.PJ அவர்களின் சூனியப் பேச்சில் மயங்கவேண்டாம் என்று எச்சரிக்கை செய்கின்றீர்களே! இதே வாதத்தை மாற்றுமத சகோதரர்கள் பிரச்சாரம் செய்தால் ஏற்றுக்கொள்வீர்களா? ஏனெனில், சகோத.PJ பகிறங்கம்மாக மாற்று மத சகோதரர்களுக்கிடையே பிரச்சாரம் நடத்தக்கூடியவராக இருக்கின்றார் அதனால் தான் இந்த சந்தேகம் எழுகின்றது.
'காதால் கேட்பவற்றை கண்களால் பார்த்து ஊர்ஜிதப்படுத்தாதவன் உண்மையான முஹ்மீன் அல்ல' என்ற ஹதீஸை நினைவுப்படுத்திக்கொள்லவும்.

அபூ சுமையா said...

மாற்று மதத்தவர்களுக்கிடையே பிரச்சாரம் என்பது நவீன யுகத்தில் இரு வகையாக பிரித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடப்பது தன்னிலை விளக்கம் மட்டுமே(இதனை குறைத்து மதிப்பிடவில்லை என்பதை சகோதரர்கள் அறியவும். உண்மையான தஃவத் என்பது எது என்பதை நபிவழி சுட்டிக்காண்பிப்பதே என் நோக்கம்)

நபிகள் நாயகம் காண்பித்து தந்த தஃவத் என்பது மாற்றுமதத்தவர்களிடம்(எங்கு இறைவனுக்கு இணை வைக்கப்படுகிறதோ exactly யாக அவ்விடத்தில்) இறைவன் ஒருவனே எனக் கூறி அவர்களை அதனை ஏற்க அழைப்பு விடுத்தலேயாகும். இதனை செய்யும் பொழுது தான் தாயிப் நிகழ்ச்சிகள் சம்பவிக்கும். தெளிவாக கூறினால் தான் செய்யும் பிரச்சாரம் இஸ்லாத்திற்கு மற்றவர்களை அழைத்தலே நோக்கம் எனத் தெளிவாக அறிவித்து செய்வதே சரியான நபிவழி தஃவத். கேரளத்தில் Niche of Truth -ன் நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் சகோ. அக்பர் அவர்கள் இவ்வாறு கூறுவார்:"இந்நிகழ்ச்சியின் நோக்கம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை உங்களிடம் எத்தி வைப்பதே என்று கூறி யா இறைவா இதற்கு நீ சாட்சியாக இரு, இவர்களிடம் என் கடமை தீர்ந்தது". இதனை நபிவழி தஃவத்தாக காணலாம்.

மற்றொன்று, இஸ்லாத்தினை தவறாக விளங்கியவர்களிடம் அதன் உண்மை ரூபத்தினை விளக்கிக் கொடுத்தல். இதனை ஆசிரிய பணியுடன் ஒப்பிடலாம். "இனிய மார்க்க" நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் அந்நிகழ்ச்சியின் நோக்கம் என்ன என்பதை அறிவிக்கும் பொழுது இவ்வாறு கூறுவதை கவனிக்கலாம்.

எனவே இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் நமது தலைவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி பகிரங்கமாக மாற்று மதத்தவர்களிடம் அழைப்புப்பணி செய்ய தயாராக வேண்டும்.

தன்னை முழுமையாக பின்பற்றுவதாக கூறிய ஒரு சஹாபியிடம், "தயாராகிக்கொள், மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி நீர் விரைந்தோடி வருவது போல் துன்பங்களும் துயரங்களும் உன்னை நோக்கி விரைந்தோடி வரும்" எனக் கூறிய நபிகள் நாயகத்தின் பொன்மொழி எப்பொழுதுமே பொய்யாகாது என்பதை நினைவில் கொள்ளவும்.

சகோதரன் அபூசுமையா
ஒருபொழுதும்

rozmi said...

சகோத. அபூசுமையா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நபிவழியில் தஃவத் பற்றி சுருக்கம்மாகவும், மிகவும் சிறப்பான முறையில் விளக்கம் தந்தீர்கள். அதேநேரத்தில்... . ''இனிய மார்கம்'' நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி எவ்வாறு அறிமுகப்படுத்தினாலும் ''லாஹிலாஹ இல்லல்லாஹ்...'' என்பதன் சிறப்பையும், முக்கியத்துவத்தையும், பாவங்களில் மிகப்பெரிய பாவம்மான் இனைவைத்தல் பற்றியும், பல கடவுள் கொள்கையின் தவறுகளை பகிரங்கம்மாக மற்றுமத சகோதரர்களின் முன்னிலையில் அறிமுக உறையில் விளக்கம் கொடுப்பதன் மூலம்மாகவோ அல்லது கேள்வி பதில் மூலம் விளக்கம் கொடுப்பதன்னாலும்… நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காண்பித்து தந்த தஃவத் நிலையியை அடையாதா…? இந்த நிகழ்ச்சியின் பிரதிபலன்னாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள பல மாற்றுமத சகோதரர்கள் முன்வருகின்றார்களே……..! ஆகவே, இதனை தஃவத் பிரதிபலன் என்று எண்னாமல் வேறு எவ்வாறு விளக்கம் கொடுப்பது....?

ஆக, இந்த நிகழ்ச்சியினை பார்வையிடும் விதத்தை பொருத்தே பலருக்கு பல விதம்மான கருத்துக்கள் தோனலாம். சிலருக்கு தாங்கள் குறிப்பிட்டது போல் ஆசிரியர் பணிபோல் தோனலாம், இன்னும் சிலருக்கு அரட்டை அரங்கம் போல் தோனலாம் ஆனால் என்னை பொருத்தவரையில் இஸ்லாமிய அழைப்பு பணியாகவே தோனுகின்றது. என்ன வித்தியாசம் அன்று அழைப்பு பனிக்கு எதிராக மக்கா காஃபீர்கள் எதிர்த்தார்கள் ஆனால் இன்று எமது சமூகத்தில் ஒரு சிலரால் எதிர்க்கப்படுகின்றர்கள்.

நபியே நீர் மனிதர்களை விவேகத்தைக் கொண்டு மற்றும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமதிரட்சகனின் பக்கம் அழைப்பீராக - அன்றியும் எது அழகானதோ அதைக்கொண்டு நீர் அவர்களுடன் விவாதம் செய்வீராக..!
அத்தியாயம் 16: வசனம் 125

மேலே குறிப்பிட்ட வசணத்திற்கேப சகேத.PJ அவர்களின் மாற்றுமத சகோதரர்களிடையான அனுகுமுறையை என்னால் கானமுடிகின்றது. ஆகவே, தாங்கள், உண்மையான தஃவத் என்றால் என்ன என்பது பற்றி விளக்கம் தந்ததற்கு ஒப்ப அல்குரான்னிலிருந்தோ ஹதீஸில்லிருந்து ஆதாரம் காட்டமுடியும்மேயானால் எனக்கு மேலும் தெளிவு பெற வாய்ப்பாக அமையும்.

தாங்கள் குறிப்பிட்டது போல் ஒவ்வொரு தனி மனிதனும் தன்மீது சுமத்தப்பட்ட கடமையை புறிந்து செயல்ப்பட எல்லாம் வல்ல இறைவனை துனைபுறிவானாக.....!

சகோதரன். Mohamed Rozmi.