Monday, May 22, 2006

புதிய அரசுக்கு சிறைவாசிகள் கோரிக்கை


புதிய அரசுக்கு சிறைவாசிகள் கோரிக்கை என்ன?
*********************************************************************************
குறிப்பு : சுதந்திரமான வலைப்பதிவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் சகோ. அன்சாரி அவர்களின் பேட்டி அப்படியே எந்தவித தணிக்கையும் இல்லாமல் வெளியிடப்படுகின்றது. இயக்கங்கள் மீதோ தனிப்பட்ட நபர்கள் மீதோ கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆசிரியர் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டார்.
- முகவைத்தமிழன்.
*********************************************************************************

அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்..)
முகவைத்தமிழன் : சிறைவாசிகள் சார்பில் எமக்கு பேட்டியளிக்க சம்மதித்தமைக்கு முதலில் எமது நன்றியை உங்களுக்கு தெறிவித்துக்கொள்கின்றோம், நேரடியாக கேள்விக்கு சென்று விடலாம் என்று நினைக்கின்றேன், நமது சமுதாய இயக்கங்கள் பல்வேறு பகுதிகளாக பிரிந்து நின்று பலதரப்பட்ட கட்சிகளை இத்தேர்தலில் ஆதரித்து பிரச்சாரம் செய்தன இப்போது தேர்தல் முடிந்து விட்டது காட்சிகள் மாறி விட்டன புதிய அரசு பதவியேற்றுள்ளது, இப்போது ஆட்சியை கைப்பற்றியுள்ள கட்சியும் கூட நமது சமுதாய இயக்கங்களான த.மு.மு.க மற்றும் முஸ்லிம் லீக் ஆதரவுடன் தான் இத்தேர்தலில் வெற்றிபெற்று ஆடசியமைத்துள்ளது. இவர்களின் முஸ்லிம்களுக்கு வழங்கிய முக்கிய வாக்குறுதிகளாக 'சிறைவாசிகளின் விடுதலையும்' 'முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடும்' இடம்பெற்றிருந்தன. தற்போது இவர்கள் ஆட்சியமைத்துள்ளார்கள் தங்களின் (சிறைவாசிகளின்) விடுதலையை வாக்குறிதியாக அளித்து முஸ்லிம்களின் ஓட்டை பெற்று ஆட்சியமைத்துள்ள இந்த புதிய அரசுக்கு சிறைவாசிகளான நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?

சகோ. முஹம்மது அன்சாரி : வஅலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)
அன்புள்ள முகவை தமிழன் அவர்களே நீங்கள் இப்படி ஒரு கேள்வியை எங்கள் முன் வைத்ததற்கு நன்றி! இதை நீங்கள் ஆட்சியாளர்களின் செவிகளுக்கும் நமது முஸ்லிம்களின் பார்வைக்கும் முக்கியமாக கொண்டு செல்லவேண்டும் கடல் கடந்து வாழும் நமது சகோதரர்கள் முக்கியமாக எமது நிலை குறித்து அறியவேண்டியவர்களாக உள்ளார்கள். இச்செயதியை தாங்கள் நமது இஸ்லாமிய ஊடகங்கள் மூலம் உலகின் கவனத்திற்கு எடுத்துச்செல்வீர்கள் என்று நம்புகின்றோம்.

எங்களின் முதல் கோரிக்கை தமிழக சிறைகளிலுள்ள முஸ்லிம் சிறைவாசிகள் அனைவரையும் ஜாமீனில் விட வேண்டும். புதிய அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். தி.மு.க. ஆட்சியில்தான் அனைவரும் கைது செய்யபட்டோம். குண்டு வைத்தவர்கள், சம்மந்தமில்லா அப்பாவிகள் என அனைவரையும் வாரி வழித்து சிறையிலடைத்த மாபெரும் தவறினை செய்திட்ட தி.மு.க. அரசு காலதாமதமின்றி உடனடியாக அனைவரையும் பிணையில் விடவேண்டும் என்பதுதான் எங்களது முதல் கோரிக்கையாகும். குண்டு வைத்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யத்தான் வேண்டும். எந்த அரசாக இருந்தாலும் கைது செய்துதான் தீரும். ஆனாலும் அதற்கும் சில எல்லைகள் உண்டு, கைது செய்து நீண்ட நெடிய நாட்களாக சிறையிலே முடக்கிவைப்பது மனித உரிமை மீறலின் உச்சக்கட்டமாகும்.

ஐ.பி.சி. சட்டத்தில்தான் கைது செய்யப்பட்டுள்ளோம். தடா, பொடா போன்ற தீவிரவாத சட்டங்களில் கைது செய்யப்படாமல் சாதாரண ஐ.பி.சி. சட்டத்திலேயே எட்டாண்டுகளாக ஜாமீன் தராமல் வைத்திருப்பது மாபெரும் மனித உரிமை மீறலாகும். தடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட மும்பை குண்டு வெடிப்பு வழக்கின் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு மூன்று ஆண்டுகளில் ஜாமீன் வழங்கப்பட்டன. தடா சட்டத்தால் கைது செய்யப்பட்டவர்களுக்கே ஜாமீன் கிடைத்தது என்கின்ற போது, ஏன் ஐ.பி.சி. சட்டத்தில் கைது செய்யப்பட்ட எங்களை விடுவிக்கக்கூடாது? என்பதே எங்களின் நியாயமான வினாவாகும்.

முஸ்லிம் லீக், த.மு.மு.க. போன்ற அமைப்புகளும் சிறைவாசிகளின் விடுதலையை அரசுக்கு கூறிவருகிறது. அதிகபட்சமாக மூன்று மாதத்திற்குள் இவ்வரசு நல்லதொரு முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழக முஸ்லிம்கள் மத்தியில் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள சிறைவாசிகளின் பிரச்சனையை அரசு விரைவாக ஒரு முடிவுக்கு கொண்டு வந்திடவேண்டும்.

இவ்வரசுக்கு வைத்திடும் இன்னொரு கோரிக்கை என்னவெனில்., சங்பரிவார் அமைப்புகளின் வரம்பு மீறிய செயல்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திடவேண்டும். தமிழ்நாட்டில் நடந்திட்ட இத்தனை அவலங்களுக்கும் இவர்களே காரண கர்த்தாக்களாவர். நாகரிகம் தெரியாத காட்டுமிராண்டிக் கூட்டங்கள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் நரகல் நடையில் விமர்சித்து பேசுவதை இனி ஒரு போதும் இவ்விதமாக விட்டுவிடக்கூடாது. இரும்புக்கரம் கொண்டு அடக்கிடவேண்டும். கடந்த தி.மு.க. ஆட்சியிலும் அதற்கு முந்தைய ஜெ. ஆட்சியிலும் நாகரிகம் தெரியா இச்சங்பரிவார்கள் தங்கள் மேடைகளில் 150 கோடி முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலாக மதிக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்தம் மனைவியரையும் நா-கூசும் வகையில் விமர்சித்து பேசி வந்தார்கள். முஸ்லிம்களின் மனதை புண்படச் செய்யக்கூடிய நாகரிகமற்ற இப்பேச்சுகளை, முஸ்லிம்களிடமிருந்து எதிர்ப்புக் குரல் ஒலித்தும் கூட அப்போதைய அரசுகள் இப்பேச்சுகளை தடை செய்யவோ, தண்டித்திடவோ முன்வரவில்லை. கீழ்த்தரமான இப்பேச்சினால் சீற்றம் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் ஓர் அணியாவதும், வெகுண்டெழுவதும் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டன என்பது இப்புதிய அரசுக்கு நன்றாக தெரியும். 1998 – பிப்ரவரி 14 நடந்திட்ட குண்டு வெடிப்பிற்கு பிறகுதான் வக்கிரமான பேச்சுகள் அனைத்திற்கும் ஒரு முடிவு வந்தது. மேடைகளில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பதும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டன. கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என பழமொழி சொல்வார்களே அந்தக் கதையானது.

செல்வாக்கு இழந்துவரும் சங்பரிவார் மீண்டும் தன் இமேஜை நிலைநிறுத்த மக்களிடையே துவேஷ மனப்பான்மை ஏற்படுத்தி உண்டாக்கிட இந்த ஈனத்தனமான பேச்சுகளை மீண்டும் அரங்கேற்றும், அதிலும் மிக முக்கியமாக தி.மு.க. ஆட்சியில் நிச்சயம் இதை செய்யும். இதை நுனியிலேயே கிள்ளியெறிந்திட அரசு தயாராகிட வேண்டும். மீண்டும் மெத்தனப்போக்கை கையாளும் நிலை இருந்திடக் கூடாது என்பதே முக்கியமான இன்னொரு கோரிக்கையாகும்.


இயக்கத்தலைமைகளிடம் சிறைவாசிகளும் அவர்தம் குடும்பங்களும் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

முகவைத்தமிழன் : மிக அற்புதமான முறையில் தெளிவாக தங்களின் முக்கிய கோரிக்கைகளை இந்த அசுக்கு வைத்துள்ளீர்கள். இன்ஷா அல்லாஹ், தங்களின் இந்த கோரிக்கை அரசுக்கு எடுத்துச்செல்லப்படும் என்று நம்புகின்றோம், அடுத்தபடியாக சமுதாயத்திற்காக போராடுவோம் என்ற உறுதிமொழியுடன் தமிழகத்தில் பல முஸ்லிம் இயக்கங்கள் செயல்படுகின்றன. அவற்றில் சில தங்களின் சிறைவாசத்திற்கு பிறகு தோன்றியவை. அத்தகைய இயக்கங்களிடமிருந்து தாங்களும் (சிறைவாசிகள்) தங்களின் குடும்பத்தாரும் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்?

சகோ. முஹம்மது அன்சாரி : நல்ல ஒரு கேள்வி இதை நாம் மிக நீண்ட காலமாக நாம் சிறைப்பட்ட காலத்தில் இருந்தே உரைத்து வருகின்றோம். மீண்டும் ஒருமுறை தங்களின் மூலம் நமது சமுதாய இயக்கங்களின் கவனத்திற்கு வைக்கின்றோம். நமது சமுதாய இயக்கங்களில் இருந்து நாம் எதிர் பார்ப்பது என்னவென்றால், தங்கள் மகன், சகோதரர் இல்லது கணவன் என சிறைபட்டவர்கள் எப்படியாவது வெளியே வந்திடவேண்டும். குடும்பங்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கின்றன. எட்டாண்டுகளாக வாட்டும் வறுமைக்கு ஒரே தீர்வு தங்கள் குடும்பத்தார்கள் விமுதலையாவதுதான் என ஒவ்வொருவரின் விடுதலையை குடும்பங்கள் மிக, மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்...... இதை மட்டும் இயக்கங்களின் தலைமைகள் அரசுக்கு வலியுறுத்திட வேண்டும் என குடும்பங்களின் எதிர்பார்ப்பாகும்.

சமுதாய நலன் கருதி சிறைபட்ட எங்களுக்கு இயக்கத்தலைமைகளிடம் நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒற்றுமை ஒன்றே! அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக் கொண்ட இச்சமுதாயம் வலிமையும், உயர்வும் அடைந்திட வேண்டும் என தணியாத தாகமுண்டு எங்களுக்கு. ஆகவே, ஒவ்வொரு நேரமும் சமூகத்தின் அன்றாட நடப்புகளை அசை போட்டுக் கொண்டுதானிருக்கும்.

சிறைவாசிகளின் விடுதலையில் 'தவ்ஹீத் ஜமாத்' தவிர மற்ற அனைத்து தலைமைகளுக்கும் கூடுதலாகவோ, குறைவாகவோ ஆர்வங்கள் உண்டு. தங்களின் சக்திக்கேற்ப மேடைகளில் பேசியும் போராடியும் வருகிறார்கள். காலதாமதமான போராட்டங்களாக இருந்தாலும் பயன் உள்ளதாகவே கருதுகிறோம்.

ஒரு தலைமையின் கீழ் இயங்கிட வேண்டிய முஸ்லிம்கள் பல இயக்கங்களாக பிரிவினை பேதம் பேசி வருவது நம் துரதிர்ஷ்டமாகும். ஒற்றுமையில் தான் உம்மத்தின் முன்னேற்றமாகும். அல்லாஹ்வின் ஆசியும் உண்டு என்பதை உணர்ந்தும் ஈகோயிஸத்தால் பிரிந்திருக்கும் இயக்கங்களை தலைமைகள் தன்னலம் கருதாமல் ஒற்றுமைக்கு வழி வகுக்க வேண்டும். ஒரு இயக்கத்தில் ஒரு தலைமையின் கீழ் அனைவரும் ஒன்றாக இயங்குவது என்பது இயலாத செயலாகும். ஆனால் குறைந்த பட்சம் அனைவரும் பொதுப் பிரச்சனைக்களுக்காக குரல் கொடுத்திட்டால் நம் வலிமையை ஆளும் அரசுகள் உணரும். நம் கோரிக்கையும் நிறைவேறும். முஸ்லிம்களின் இதயத்துடிப்பு போன்ற பிரச்சனையான 'பாபர் மசூதி' பிரச்சனையிலும் கூட இயக்கங்கள் ஒன்றிணைந்து ஒரு முடிவெடுத்து செயல்பட்டிடலாம். ஆனால் தங்களின் தனி முத்திரை பதித்திட வேண்டும் என்பதற்காக ஆளுக்கொரு முடிவெடுத்து உம்மத்தை குழப்புவது வேதனையாக உள்ளது. பொதுப்பிரச்சனையில் ஒன்று கூடி என்ன செய்யலாம் என ஆலோசிக்கக்கூடிய ஓர் ஆரோக்கியமான நிலை ஏற்பாட்டால் எத்துணை பயனாக இருக்கும் சுபஹானல்லாஹ்! நினைத்தாலே இனிக்கிறது செயல்படுத்திட முன் வந்திட்டால் மாஷா அல்லாஹ்!!

எங்களின் விடுதலைக்காக போராடுவதிலும் அனைத்து இயக்கங்களும் கூட்டாக வலிமை காட்டியிருந்தால் என்றோ அரசு ஓர் முடிவுக்கு வந்திருக்கும். த.மு.மு.க. நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் குறை கூறிட முடியாது.

இருந்தபோதிலும் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் மாபெரும் மக்கள் போராட்டமாகியிருக்கும் சிறை பிரச்சனை.


இயக்கமோதல்கள் தலைதூக்கியுள்ள தமிழகத்தில் ஒருவருக்கொருவர் வசைமாறிக் கொள்கிறார்கள். தங்களின் இயக்க பத்திரிக்கைகளை புரட்டினால் ஒவ்வொருவரையும் பட்டப்பெயர்களால் அழைத்துக்கொள்கிறார்கள். ஜவாஹிருல்லாஹ் அவர்களை பூசணிக்காய் என தவ்ஹித் ஜமாத்தும், பி.ஜே. அவர்களை தொண்டியபொடி – த.மு.மு.க. என இரு இயக்கத்தவர்களும் இஸ்லாத்தின் நெறிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு பட்டப் பெயர்களால் அழைத்திடும் செயலை என்னவென்பது! உள்ளத்தில் குடிகொண்டுள்ள குரோதத்தினால் வல்லான் அல்லாஹ்வின் எச்சரிக்கையையும் மீறி இங்ஙனம் அழைத்துக்கொள்வது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துமா?

பி.ஜே. அவர்கள் பிரச்சனையின் தலைவராக இருக்கிறார். சமாதானம் செய்திட வேண்டிய சிறு பிரச்சனைகளையெல்லாம் பெரிதாக்குகிறார். தலைமைக்குரிய விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்ற பண்பில்லாமல் தடுக்கி விழும் பிரச்சனைகளையெல்லாம் சமுதாய பிரச்சனையாக ஆக்குகிறார். தொழுகை நடத்தக்கூடிய அல்லாஹ்வின் பள்ளியை அபகரிக்க குஃப்ரியத்தின் துணை நாடுகிறார். தாங்கள் தொழவில்லை என்றால் யாருமே தொழுதிடக்கூடாது என குஃப்ரியத்தின் துணையை நாடி அல்லாஹ்வின் இல்லத்தை பூட்டச் செய்திட்ட பி.ஜே. அவர்களின் நல்லெண்ணத்தை என்னவென்பது. இதே செயலை காஃபிர் ஒருவன் செய்திருந்தால் நாட்டில் பெரிய கலவரமே உருவாகியிருக்கும். நாமே நம் பல்லை குத்தி பதம் பார்த்துக்கொள்கிறோம்.

சமூகத்தின் அவலங்களை அகற்றிடவும் ஆக்கப் பூர்வமாக செயலாற்றிடவும் தான் இயக்கங்கள். ஆனால் இயக்கச் சண்டைகளில் ஆக்கங்கள் தடைபட்டு அழிவுப்பாதைக்கு வழிவகுத்தது போலாகிவிடும். முன்னேற்றம் எங்கே உண்டாகும் பின்னேற்றம்தான்.

பொருளாதாரத்திலும், கல்வியிலும் நம் சமுதாயம் மேம்பாடு அடைவதற்கு ஒவ்வொரு இயக்கத்தினரும் அயராது உழைத்திடவேண்டும். ஆனால் இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் நிலை இவ்விரு விஷயங்களில் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டு கேவலமாக வாழும் நிலைக்கு முதற்காரணம் ஒற்றுமையின்மையே. சங்பரிவார்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், முஸ்லிம்களை பூண்டோடு ஒழிப்பதில் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். பல கடவுள்களை வணங்கி பல வழிமுறைகளின்படி வாழும் இம்முஷ்ரிக்குகள் நம்மை வேரறுக்க ஒன்றுபடும் இந்நிலை இன்று, நேற்றல்ல, 1400 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. வரலாற்றின் ஒளியில் அறிவை பெற்றிடாத முஸ்லிம்கள் இன்னும் விரலை ஆட்டுவதற்கும், நீட்டுவதற்கும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களின் இன்றைய நிலைக்கு நல்ல உதாரணத்தை ஒரு கதையின் மூலம் விளக்கிடலாம்.

அதாவது பயங்கர கொடிய மிருகங்கள் வாழ்கின்ற ஒரு காட்டினுள் விலைமதிப்பு மிக்க ஒரு புதையல் உண்டு. அப்புதையலை எடுப்பதென்றால் மிகவும் சிரமமான விஷயம். புதையல் எடுக்க சென்றால் உயிரோடு திரும்பி வருவது என்பது கேள்விக்குறியான விஷயமாகும். அப்புதையலை எப்படியாவது எடுத்திடவேண்டும் என கங்கணம் கட்டிய அப்பகுதி முஸ்லிம்கள் பயங்கர அயுதங்களுடன் ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு காட்டினுள் நுழைகிறார்கள்.
கொடிய மிருகங்களின் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை. ஒவ்வொருவரையும் கடித்து குதற ஆவேசமாக பாய்ந்து வருகிறது. தீரமிக்க முஸ்லிம்களின் வீரத்தோடு அனைத்து மிருகங்களையும் வெட்டிவீழ்த்தி புதையலுக்கு வெகு அருகாமையில் நெருங்கிட்டார்கள். சண்டையில் களைத்துப்போன அனைவரும் ஓய்வெடுத்துச் செல்லலாமென ஒரு மரத்தினடியில் இளைப்பாறுகிறார்கள் அனைவருக்கும் தண்ணீர் தாகமெடுக்க கொண்டு வந்திட்ட நீரை ஒருவர் அனைவருக்கும் டம்ளரில் ஊற்றிக் கொண்டு வர பின்னாலும் சிலருக்கு நீர் டம்ளரில் பாதி அளவே கிடைக்கின்றது. இங்கே தான் ஆரம்பமானது பிரச்சனை. அவர்களுக்கு மட்டும் ஒரு டம்ளர் நீர், எனக்கு அரை டம்ளரா? என வாக்குவாதம் வாய்ச்சண்டையாகி ஒருவருக்கொருவர் கைகலப்பில் இறங்கி, கொண்டு ஆயுதங்களால் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி வெட்டி இரத்தமும், சதையுமாக மண்ணில் சாய்ந்தனர். கொடிய மிருகங்களோடு சண்டை போட்ட தீரமிக்க முஸ்லிம்கள் அரை டம்ளர் தண்ணீருக்காக மாண்டே போனார்களே, புதையலும் கிடைக்கவில்லை, உயிரும் போய் விட்டனவே! இப்படித்தான் உள்ளது நம் சமுதாயம் இலட்சியம் என்ற புதையலை அடையவே மாட்டார்கள். அதற்கு தடையே நம்மில் நிலவும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமையே. இன்று ஒவ்வொரு இயக்கத்திலும் இத்துரதிர்ஷடமான சூழ்நிலைதான் நிலவிக்கொண்டு இருக்கின்றன.

ஓர் இறைவன், ஓர் வழிகாட்டி, ஓர் வேதம் என ஏற்றுக்கொண்ட முஸ்லிம் சமுதாயம் 'ஒற்றுமை' கடமை என வலியுறுத்தப்பட்ட மார்க்கத்தில் இருந்துவரும் முஸ்லிம்களிடத்தில் தான் எத்தனை எத்தனை மாச்சரியங்கள், கருத்துவேறுபாடுகள், குரோதங்கள், விரோதங்கள். ஒருகணம் நம் சமூகத்தின் நிலையினை உற்று நோக்கினால் உண்மை முஸ்லிம்களுக்கு நிம்மதியான உறக்கம் ஒரு நாளும் வராது. எதிரிகள் அவர்களின் பொது பிரச்சனையான நம்மை கருவறுக்க ஒன்றுபடுகிறார்கள். ஆனால் நம்மவர்களோ கோழி முந்தியா? முட்டை முந்தியா? என வெட்டி விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனங்களை செலுத்திடவேண்டிய சூழல் ஏற்பட்டிட வேண்டும். அதற்கு முதலில் ஒற்றுமை மிக, மிக அவசியம் ஒற்றுமை என்றால் நான் முதலில் கூறினேன் அல்லவா? ஒரு தலைமை, ஓர் இயக்கம் என்பதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். இஸ்லாம் மேலோங்க, மேலோங்க ஒரு தலைமையின் கீழ் உம்மத் அணி திரள்வது என்பது நியதியாகும். வல்லான் அல்லாஹ் அதை செய்திடுவான். ஆனால் தற்போது ஒவ்வொரு இயக்கமும் தத்தம் வழிகளில் ஆக்கபூர்வமான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்திட வேண்டும். கருத்து வேறுபாடுகளை கடைச்சரக்காக்கி ஒருவருக்கொருவர் பொது மேடைகளில் வசைபாடுவதை ஒவ்வொருவரும் கைவிட்டிடவேண்டும். கருத்துவேறுபாடுகள் நம்மை கோழைகளாக்கிவிடும் என அல்லாஹ்வின் அறுவுறுத்தலை நாம் நம் வாழ்வில் அனுதினமும் நினைவு கூர்ந்து கடை பிடிப்பவர்களாக இருந்திடவேண்டும். நம் இலக்குகளை அடைவதற்கு தடையாக இருப்பதே சகோதர சண்டைகள்தான். நம்மை இறைவன் உயர்ந்த இலட்சியத்திற்காக படைத்திருக்க நாமே அற்பத்தனமான சண்டைகளால் படைத்த நோக்கத்தை இழந்து விடுகிறோம். சகோதரச் சண்டைகளால் யாருக்கு என்ன இலாபம்? சைத்தான் தனி இலக்கில் வெற்றியடைந்து விட்டான். நாம் நம் இலக்கை தவறிவிட்டோம். இதை கருத்தில் கொண்டுதான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படிக் கூறினார்கள்.

ஷைத்தானால் அரபு நாடுகளில் சிலை வணக்கத்தை ஏற்படுத்திட முடியாது, ஆனால் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்தி விடுவான் (ஹதிஸ்) .

இப்போதனையை செவியேற்று நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் ஷைத்தானுக்கு சிறு இடைவெளி கொடுத்தாலும் நம் கவனங்கள் சிதறும். பிறகு ஆக்கங்கள் தடைபட்டு அழிவுப்பாதையை நோக்கி நம் பாதங்கள் நகரும்.

ஆகவே, தலைமைகளிடத்தில் எங்களுடைய எதிர்பார்ப்பு ஈகோயிஸத்தையும், தன்னலத்தையும் தங்களின் உள்ளங்களிலிருந்து அப்புறப்படுத்தி ஒற்றுமைக்கு ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதே!
தொடரும்....

அடுத்த பதிவில் (த.மு.மு.க , த.த.ஜ , விடியல்) போன்ற இயக்கங்களுக்கும் சிறைவாசிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்த கேள்விகளுக்கு பதில்.

தொடர்ந்து படிக்கவும்.


- முகவைத்தமிழன்

4 comments:

ஆத்தூர்வாசி said...

May Allah make it easy on our brothers to come out of jail as soon as possible.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ.அன்சாரி அவர்களின் பேட்டியை வலைமனையில் கண்டேன். அன்றைய தமுமுகவின் அமைப்பாளராக சகோ.பிஜெ இருக்கும் பொழுது அவர் மீது ஏதோ ஒரு காரணத்திற்காக ஏற்பட்ட வெறுப்பு?? இன்று வரை சகோ.அன்சாரிக்கு மாறவில்லை. அன்று சகோ.பிஜெ இருக்கிறார் என்பதற்காக தமுமுகவை வெறுத்தார். இன்று சகோ.பிஜெ வெளியேறியவுடன் தமுமுகவை ஆதரித்து தவ்ஹித் ஜமாத்தை எதிர்க்கிறார். சமுதாய ஒற்றுமையை பற்றி கூறும் அவர் சமுதாய அனைத்து இயக்கத்தையும் அனுசரித்து போகவேண்டும். அடுத்து தவ்ஹித் ஜமாத் பல பேர் முன்னிலையில் தமிழக முதல்வரிடம் சிறைவாசிகளின் விடுதலையை பற்றி பேசி இருக்கும் பொழுதும், மற்றும் அவர்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து எழுதி வரும் பொழுது தவ்ஹித் ஜமாத் எதுவுமே செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சகோ.அன்சாரியின் இது போன்ற தமுமுக சார்பான பேட்டிகளால் சிறைவாசிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்து வரும் ததஜவினரின் மனம் எந்த அளவுக்கு வேதனைபடும் என்பதை சகோதரர் அன்சாரி உணரவேண்டும். அடுத்தாக இயக்க கூட்டு ஒற்றுமையை பற்றி எடுத்து கூறினார் அது கண்டிப்பான காலத்தின் கட்டாயம் என்பதை மறுப்பதற்கில்லை.

வஸ்ஸலாம்,
சைதை அஹமது அலி.
ahamedali2006@gmail.com

Anonymous said...

சகோ. சைதை அஹம்மத் அலி அவர்களுக்கு தென்காசி ஸித்திக் எழுதிக்கொள்வது
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

சகோ. பிஜெயின் மீது தாங்கள் நல்லெண்ணம் வைத்துள்ளீர்கள் ஒரு காலத்தில் தவ்ஹீத்-வாதிகள் அனைவரும் அப்படித்தான் வைத்திருந்தார்கள். அந்த நல்லெண்ணத்திற்க்கு தக்கவாறு பிஜெ அவர்கள் நடந்துகொள்ளவில்லை என்பது தான் மிக மிக வேதனையானது.

பிஜெயின் மிக பிரியமான விஷயம் என்வென்றால், அவர் யாரை எதிர்க்கின்றாரோ அல்லது எதிர்க்க நினைக்கின்றரோ அவர்களை இரண்டு காரணங்களை (பொருளாதார மோசடி மற்றொன்று பெண்கள் விஷயம்) முன்வைத்து மிக கடுமையாக விமர்ச்சனம் செய்து அதனை வீடியோவில் பதிவு செய்வார் அப்படிசெய்யும் போது அதற்க்கு பக்கவாத்தியமாக சில நபர்களை வைத்தும் பேசவைப்பார் அதனையும் பதிவு செய்து கொள்வார் (இந்த வீடியோ பதிவு மிக அதிநவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் என்பதும் அதை போன்று ஒரு முக்கியத்துவம் தவ்ஹீத் பிரச்சார வீடியோ பதிவிற்க்கு கிடைப்பதில்லை என்பது தனிவிஷயம்) இப்படி பேசிய நபர்கள் எந்த காலத்திலும் பிஜெ எதிரியின் அரவணைப்பிற்கு சென்றுவிடாபடி அந்த விமர்ச்சனத்தினை அமைத்துக்கொள்வார். எதாவது காரணத்தில் இப்படி பேசியவர்கள் இவரைவிட்டு பிரிந்தாலும் எதிர் அணியில் இணையமுடியாது காரணம் கடந்த கால விமர்ச்சனங்கள் என்பதனை அறியவும் (உதாரணம் ஹமீத் பக்ரி மற்றும் அலி அக்பர் உமரி இருவரும் தமுமுகவிலோ ஜாக்கிலோ இல்லை). இவ்வாறு பேசிய அனைத்து வீடியோ பதிவினை உடனடியாக அரபுநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதனை அவருடைய அனுதாபிகளுக்கு இரகசிய சுற்றுக்குவிடுவார். மேற்கண்டவற்றை நான் எனது கற்பiயில் கூறவில்லை அதற்கான ஆதாரங்கள் இதோ.

முதல் முதலில் இவர் வெளியிட்ட வீடியோ பதிவு 'தமுமுகவின் மீது அல்-உம்மா-வின் குற்றசாட்டிற்க்கு ஆணித்தரமான பதில்கள்' இந்த வீடியோ பதிவில் அல்-உம்மாவினர் குற்றசாட்டிற்க்கு பதில் சொல்வதை விட அவர்களை தரந்ததாழ்ந்து இரண்டாம் தர விமர்ச்சனமே இருந்தது (பாஷh பாய் அவர்கள் ஒரினச்சேர்க்கையில் அக்கறை உள்ளவர், அவரின் உடல் மஜாஜ் செய்யும் விடலைகள், கோவை தொழில் அதிபர் ஒருவர் தனது மனைவியுடன் பெட்ருமில் உள்ளபோது அங்கே அல்-உம்மவினர் சென்று மிரட்டி இலட்ச ரூபாய்க்கு மேல் கேட்டனர், ஹோட்டலில் அளவிறக்கு அதிகமாக தின்னபது இவ்வாறன விமர்சனமே இருந்தது)


ஜாக்கிற்கு எதிரான முதல் கேசட் அதன் தலைப்பு 'அனைத்து தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பு ஏன்' இதில் அமைப்பு சட்டம் பற்றி மட்டும் பேசிய ஹைதர் அலி இப்போது அவர்களுடன் இல்லை கூட்டமைப்பு ஏன் என்பதனை விட ஜாக்கின் பொருளதார குற்றசாட்டினையை பிரதான படுத்தினார் இதில் பெரும்பாலும் அவருடைய உரை அதிகம் மற்றவர்களும் உண்டு. இது இந்தியாவில் வெளியிடப்படவில்லை. சுமார் ஒன்று அல்லது இரண்டு வருடம் கழித்த பின்பே ஜாக்கின் மாநில அமீர் குவைத் வந்தபோது அதைப்ற்றி மிக பெரிய பிரச்சனையை பண்ணினார்கள் பிஜெயின் விசுவாசிகள் அப்போது தான் ஜாக் அமீருக்கு இப்படியான கேசட் வெளியிட்டது தெரியவந்தது. அதில் கூறப்பட்ட சிலபிரச்சனைகளை பற்றி பேசி ஜாக் அமீர் ஒரு கேசட் இந்தியாவில் தமிழகத்தில் வெளியிட்டார் உடனே அதிற்கு பதில் சொல்கின்றேன் என்று இரண்டு கேசட்கள் வெளிநாட்டில் வெளியிட்டார் அதில் உள்ள மிக கேவலமான விமர்ச்சனம் பள்ளிவாசலில் வைத்து ஒரு பெண்ணனை அழைத்துவந்த விபச்சாரம் செய்தார் என்று ஒருவரை குற்றசாட்டு (அல்லாஹ் பாதுகாப்பானக) என்றும் அரபி புத்தகங்களை மொழிபெயர்த்து இலட்ச லட்சமாக பணம் சம்பாதித்தனர் என்று மற்றொரு குற்றசாட்டுகள். இந்த பதிவு செய்வதற்க்கு ஒரு குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது என்பதனை அறியவும் இதற்க்கு செலவு செய்யப்பட்ட பணம் யாருடையது. பிஜெ-யின் சொந்த சம்பாத்தியமா?


இதே போல் விடியல், தற்போது எற்பட்ட பரிவு பற்றியது, ஹாமித் பக்ரி பற்றியது பிஜெ-யின் இரகசிய மற்றும் பகிரங்க வெளியீடுகள் மற்றும் மலிவு விலை வெளியீடுகள் (தவ்ஹீத் பிரச்சார சிடிக்கள் அல்ல என்பதனையும் அறிவும்)

இதை குறிப்பிடுவதின் நோக்கம் என்னவென்றால், அல்-உம்மா பற்றி வீடியோ மீண்டும் நீங்கள் பார்பீர்களானல் இவர் (பிஜெ) எந்த காலத்திலும் அல்-உம்மாவிற்க்கு உதவிசெய்யமாட்டார் என்பதனை அறியலாம். ஆனால் இன்னொற்றையும் இங்கு குறிப்பிட வேண்டும் குண்டுவெடிப்பிற்க்கு முன் அதாவது அல்ஜன்னத்தில் வேலை செய்யும் போது கோவைசிறைவாசிகளுக்கு சில மாதங்கள் பொருளதார உதவிசெய்து விட்டு பல வருடங்களாக தொடர்ந்து உதவி செய்தாக உதவிபெற்றவர்களிடம் கடிதம் வாங்கி வைத்துள்ளார் (அதன் நகல் தேவையென்றால் தாங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்) ஆனால் எவ்வளவு பணம் வசூல் செய்தார் யார் யார் பணம் கொடுத்ததார்கள் என்ற விவரம் இதுவரை பிஜெ வெளியிட்டது கிடையாது என்பதனை அறியவும்.


கோவை சிறைவாசிகளுக்கு உதவி செய்யமாட்டார் என்பதனை ஆணித்தரமாக தெரிந்துகொள்ளவேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியது பிஜெ சிபிசிஐடியில் கொடுத்த வாக்கு மூலம், கோவை தனி நீதிமன்றத்தில் கொடுத்த வாக்கு மூலம், கடந்த காலங்களில் குண்டு வெடிப்பினை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வருடங்கள் உணர்வில் பிஜெ எழுதி வந்தவைகள் அனைத்தையும் தனிமையில் உட்கார்ந்து படியுங்கள் அதன் பின் நீங்கள் சொல்லுங்கள் பிஜெ கோவை சிறைவாசிகளுக்கு உதவி செய்வார், அவர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்பதனை. இதில் மிக நுட்பமான செய்தி என்னவென்றால் தமுமுகவில் உள்ளபோது கோவை சிறைவாசிகளுக்கு எதிராக பேசியது எழுதியது போன்ற செயல்களில் ஈடுபட்டது இரண்டே இரண்டு பேர் தான் ஒன்று பிஜெ மற்றொன்று பாக்கர். இவர்கள் இருவரும் தமுமுகவை விட்டு வெளியேறிபின் தமுமுக இப்பிரச்சனையில் முழுகவனம் செலுத்தகின்றது என்பதனை அறிய இயலும்.


ஏர்வாடி காசிம் என்ற சகோதரர் எப்படி காவல் துறை கைது செய்தது அதற்க்கு யார் காரணம் என்பதனை, ஏர்வாடி காசிம் அவர்களை சிறையில் மனுப்போட்டு சந்தித்து தெரிந்து கொள்ளவும். மனுப்போட்டு பார்க்கும் போது தான் தாங்களுக்கு உண்மையான நிலமை தெரியவரும். அதே போல் குண்டு வெடிப்பு கைதிகள் அல்லாது மற்ற முஸ்லிம் கைதிகள் எரளாமான சகோதரர்கள் சிறையில் வாடுகின்றனர் அவர்களையும் சந்தியுங்கள் பிஜெ-யின் கொடூர முகம் உங்களுக்கு தெரியும்.


நேர்வழியில் இறுதிவரை இருக்க வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவனாக

வஸ்ஸலாம்
அன்புடன்
சௌதி அரேபியாவிலிருந்து

தென்காசி ஸித்திக்
SiddikiA@KEMYA.SABIC.com

Anonymous said...

Actually i dont happened to see those videos but i did happened to see one video where Bakkar speaks about the release of Muslim prisoners and mentions about Pasha (actually in Kumbakonam). I'm little perplexed about Hamid Bakri issue though, he is a good scholar, he needs to do dawah as he did before. I feel bad that he is isolated.

I will be happy if someone can upload those videos mentioned here. There are numerous websites where u can upload videos for free. To name a few upload.com rapidshare.com etc...

Jazakallah khairan