தமிழ்நாட்டில் தேர்தல் நல்லவிதம் நடந்து முடிந்து அரசும் பதவி ஏற்று, முஸ்லிம் சமுதாயத்திற்கு நல்ல பிரதிநிதித்துவத்தையும் (2-அமைச்சர்கள்) தந்து, முஸ்லிம் சமுதாயத்தை ஆறுதலடையச் செய்து இருக்கிறார் கலைஞர்.
இவற்றால் மட்டும் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் தான் இழந்த நம்பிக்கைகளைப் பெற்றுவிடமுடியாது என்பது கலைஞருக்கு நன்றாகத் தெறியும். அதுமட்டுமல்ல, முஸ்லிம் சமுதாயத்தின் இலக்கு தனி இட ஒதுக்கீடு, அதைப்பெற்றுத் தருவதால் மட்டுமே ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நம்பிக்கையைப் பெற முடியும் என்ற உண்மையை கலைஞர் உணர்ந்துள்ளார். அதைப்பெற்றுத் தருவதில் IUML மற்றும் TMMK நிர்வாகிகள் பகீரத முயற்சி செய்து பெற்றுத் தரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இல்லாவிடால் இவர்கள் அரசியல் அகதிகளாக ஆக்கப் படுவார்கள். காரணம், இவர்களுடைய எதிரிகள் மிகவும் சக்திவாய்ந்த ஊடகத்திற்குச் சொந்தகாரர்கள். பொய்சொல்வதற்கு அஞ்சாதவர்கள், அதுமட்டுமல்ல, சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் போல் இவர்களிடமும் இருக்கிறார்கள்.
தேர்தல் முடிந்து விட்டது AIADMK எதிர்கட்சியாகவும், DMK ஆளும் கட்சியாகவும் செயல்படுகிறார்கள். சுருங்கச் சொன்னால் AIADMK கூட்டணி தோற்று DMK கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
இதில் வேடிககை என்னவென்றால் ஜெயலலிதா, வைக்கோ, திருமாவளவன் போன்றவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு தன் கட்சியினர் பொறுமை காத்து கட்சிப்பணியாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டு அமைதி காத்துவிட்டனர். ஆனால், ஜெய்னுலாப்தீன் & கொம்பெனியார்கள் தோல்வியை வெற்றியாக சித்தரிக்க எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போகமுடியுமோ அந்தஅளவிற்கு பேசியும், எழுதியும் வருகிறார்கள்.
போகட்டும்!, இவர்கள் இயக்கம் உண்மையிலேயே தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காக செயல்படும் ஒரு இயக்கம் என்று கருதினால், இவர்களின் அனுகுமுறை தற்போது எப்படி இருந்திருக்க வேண்டும்? அதற்கான சூழலை ஏற்படுத்த முயற்சி செய்தார்களா? செய்வார்களா?
இல்லா விட்டால் அப்பாவி ரசிகர்களைப் பயன்டுத்தி, மற்றும் ஒரு கோவை போன்ற பிரச்னையை உருவாக்கத் திட்டம் தீட்டி, அதை செயல் படுத்தி, அப்பாவி ரசிகர்களை சிறைச்சாலைகளுக்கு அனுப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் பண வசூல் செய்து, எப்படியும் 5 வருட காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்தால் அது தற்கொலைக்கு ஒப்பானதாகும். அதனால்தான் என்னவோ தேர்தலுக்குப் பிறகு ஜெய்னுலாப்தீன் அடிக்கடி என்னை கைது செய்யுங்கள்!, கைது செய்து பார்! என்று பேசிவருகிறார். எதை மனதில் நினைத்துக் கொண்டு இப்படி பேசுகிறார் என்பது நம்மை படைத்தவனுக்குத்தான் தெறியும்.
இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் மிகப்பெரிய சேவையை செய்துவிட்டதாக பிதற்றிக் கொண்டு திறியும் இக்கூட்டம் உண்மையில் என்னதான் செய்தார்கள் என்பதை பாருங்கள்.
இஸ்லாமிய அடிப்படை கடமை எனும் தூணாகிய ஜகாத்தை மறுப்பது.
ஸஹாபாக்களை கேவலமாக விமர்சித்தது.
- நபி (ஸல்) அவர்களால் சொர்க்கத்தை குறித்து நன்மாராயம் சொல்லப்பட்ட உத்தம ஸஹாபி அம்ர் பின் அல்ஆஸ்(ரலி) அவர்களை கிரிமினல் என்றது.முஹம்மது பின் அபூபக்கர் (ரலி) அவர்களை ரவுடி என்றது.அன்ஸாரி தோழர்களை (ரலி-அன்ஹும்) பணத்தாசை, பதவி ஆசை பிடித்தவர்கள் என்றது.நபியின் பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களை பதவி ஆசை பிடித்தவர் என்றது.இஸ்லாமிய குடியரசின் இரண்டாம் கலீஃபாவாகிய உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்தான் முதன் முதலில் பித்னாவை ஆரம்பித்து வைத்தவர் என்றது.நான்காம் கலீஃபாவாகிய அலி பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எடுப்பார் கைப்பிள்ளை என்றது.இப்படியாக, இதற்கும் மேலாக உத்தம சத்திய ஸஹாபாக்களை - எதிரிகளும் சொல்ல கூசும் வார்த்தைகளால் விமர்சனம் செய்வது.
- நபித்தோழர்கள் மார்க்கத்தை மாற்றிவிட்டார்கள் என்று கூறியது. அல்லாஹ் முதல் வானத்தில் இறங்குகின்றான் என்ற ஹதீஸைப் பொருள் மாற்றிக் கூறியது.
- சூனியம் பற்றிய ஹதீஸை மறுத்து புதிய விளக்கம் அளித்தது.
- திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் புதிய கருத்துக்களைக் கூறியது. பொருளை மாற்றியது.
- ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தவில்லையெனில் புறம் தள்ளவேண்டும் என்றது
- செல்வங்களுக்கான ஸக்காத் ஒருமுறை மட்டும் கொடுத்தால் போதும் என்று வாதிட்டது.
- ஆண்கள் அரைக்கால் டிரவ்ஷரில் தொழலாம் என்று பத்வா வழங்கியது.
- அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவென்றால், நபிகள் (ஸல்) அவர்களுக்கு அடுத்து, குர்ஆனின் அர்த்தங்களை தான் விளங்கி தெளிவு பெற்ற அளவிற்கு யாரும் ஏன் ஸஹாபாக்கள் கூட தெளிவு பெறவில்லை என்ற தொனியில் பேசுவது.
- ஸஹாபா பெருமக்களை தன் வயதுக்கு ஒத்தவர்கள் போலவும், சக மாணவர்களாகவும் பாவித்து, அவர்களின் அறிவுக்கும், ஆற்றலுக்கும் தான் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என்ற தொனியில் அவர் பேச்சும் செயலும் இருக்கும்.
ஜெய்னுலாப்தீன் ஏதோ ஒரு இலக்கை அடையத்தான் தன்னை மற்ற மார்க்க அறிஞர் பெருமக்கள், உலமா பெருந்தகைகள், மார்க்க சிந்தனையாளர்கள், இறைநேசச் செல்வர்கள், ஆகிய அனைத்து பெருமக்களையும் விட, தான்தான் அறிவிலும், ஆற்றலிலும், மார்க்கத்திற்கு சேவை செய்ததிலும் சிறந்தவன் என்றும்.
உத்தம ஸஹாபா பெருமக்கள், தாபியீன்கள், தபஅத்-தாபியீன்கள் போன்றவர்களின்
தரத்திற்கு சமமாக/மேலாக தானும் இருப்பதாகவும் காட்டிக்கொள்வது.
சில வாரங்களுக்கு முன்பாக, இந்த குழுமத்தில் (UIM)
மின்னஞ்சல் மூலமாக, ஒரு சகோதரர் "இவர் யார்"? என்ற தலைப்பில், ஒரு புதினத்தை பதிவு செய்திருந்தார். அதில் சித்தரிக்கப்படிருந்த பெரும்பாலான செய்கைகள், நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் கிருபையாலும், உத்தம ஸஹாபாக்களின் தியாகத்தோடும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சாதிக்கப்பட்டவைகள். "இவர் யார்" என்ற புதினத்தை; அடுத்து யார் மீதோ கைவைக்க, வெல்லோட்டம் பார்க்க அனுப்பப்பட்டவைதான் இது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளர்கள். பொறுத்திருந்து தான் பார்ப்போமே?.
வஸ்ஸலாம்
அ. சஜருதீன் (projects@umgco.com)
அ. சஜருதீன் (projects@umgco.com)
குறிப்பு:
மிர்ஸா குலாமும் இது போலதான்
திருமறை வசனத்தின் அர்த்தங்களைத்திரித்து, தனக்கு சாதகமாகப் பாவித்துக் கொண்டதும், ஹதீஸுகளையும் இதனைத் திரட்டித் தர அரும்பாடுபட்ட சத்திய ஸஹாபாக்களின் நம்பகத்தன்மையை சந்தேகித்தும், தன் வாதத்திறமையால் இஸ்லாமிய சமுதாயத்தை குழப்பியும் உச்சக்கட்டமாக தன்னைதானே நபி என்று பிதற்றிக் கொண்டு கேவலப்பட்டு திரிந்த வரலாற்றை இஸ்லாமிய சமுதாயம் மறந்து விடவில்லை
7 comments:
தடுமாற்றமே உன் பெயர் ஜெயின்னுலாபுதீனா?... சமுதாயாத்தை பிளந்து அதில் குளிர் காய நினைக்கும் உன்னை இறைவன் இவ்வுலகிலே தண்டிக்க செய்வான்.
அடியான்
த மு மு க காரன் அப்பட்டமாக பொய் சொல்வான் அ. சஜருதீன் அந்த சாக்கடையில் உள்ளவரா ஏன் பி.ஜைய்னுல்லாபுதினை மட்டும் குறி வைத்து எலுதுகிறார். த மு மு க விலும் தமிழகத்திலும் எத்தனையோ மௌலவிகிகள் செய்து வரும் சிர்க் மற்ற அனாச்சாரங்கள் எப்ப கெட்பார் ஏப்படி கெட்பார்?
இல்லை த மு மு க விற்காக இது பொல....
Assalamu Alaikum warah...
Initially when i was reading the article i thought it's written in an unbiased manner. But as the article goes on it seems to me that it was so clear that author's main theme of this article is not to bring the issues among our ppl than just mere criticism.
But the ending comment (about Rashaadi) was so clear that he was so biased and just try to critize. (please go to www.onlinepj.com and listen to the Nabigazh Nayagam Munnarivippugal)
Just one suggestion to the author, you have couple of good things in your article but because of your too much biasedness it doesnot reach the unbiased audiences (for the record, i assume there are lot of ummas who dont belong to any of these two factions -- TNJT or TMMK, but do support them if they are doing good and condemn them if they are wrong, and i'm one of them).
You loose them Br. Sajaruddin.
Please try to avoid those biased remarks.
Just my 2 cents worth.
Jazakallahu Khair for your time and concern
//குறிப்பு:
மிர்ஸா குலாமும் இது போலதான்
திருமறை வசனத்தின் அர்த்தங்களைத்திரித்து, தனக்கு சாதகமாகப் பாவித்துக் கொண்டதும், ஹதீஸுகளையும் இதனைத் திரட்டித் தர அரும்பாடுபட்ட சத்திய ஸஹாபாக்களின் நம்பகத்தன்மையை சந்தேகித்தும், தன் வாதத்திறமையால் இஸ்லாமிய சமுதாயத்தை குழப்பியும் உச்சக்கட்டமாக தன்னைதானே நபி என்று பிதற்றிக் கொண்டு கேவலப்பட்டு திரிந்த வரலாற்றை இஸ்லாமிய சமுதாயம் மறந்து விடவில்லை//
வெறுப்பின் உச்சகட்டம்.
சமூகம் தனது கையை, காலை இழந்து தனது கழுத்து எப்பொழுது வெட்டப்படுமோ என்று, ஒன்றும் செய்யமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவ்வாறு தனது உடம்பின் ஒரு பகுதிக்கு(உபயம்: உம்மத் உடம்புக்கு ஒப்பானது - ஹதீஸ்) எதிராக கங்கணங்கட்டி இறங்கியிருப்பது சரி தானா என்பதை ஒரு முறை தனிமையில்(முடிந்தால் இறை இல்லத்தில்) இருந்து ஒரு முஃமினாக சிந்தித்துப் பாருங்கள் சகோதரரே.
நாம் செய்வது எவ்வளவு பெரிய பிழை என்பது புரியும். நிச்சயமாக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இறைவனிடம் பதில் கூற கடமைப்பட்டுள்ளோம்.
பேசினால் சிறந்தவைகளை பேசுவோம் அல்லது மவுனமாக இருந்து விடுவோம்; அதுவல்லவா இஸ்லாம் கற்றுத் தருகிறது. இதனை நாம் மறந்தது ஏன்?
ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் நல்ல காரியங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.
ஆதத்தின் மகன் தவறு செய்பவன் தான். எனில் எந்த ஒரு இயக்கமும் அதற்கு அப்பாற்பட்டதல்லவே.
எனவே ஒவ்வொருவரும் மற்றவர்களை தோண்டி துருவி ஆராய்ந்து கொண்டு தங்கள் இடது தோளில் பாரத்தை ஏற்றிக் கொண்டிருப்பதை விட தன்னைத் தானே ஒவ்வொரு விஷயத்திலும் ஆராய்ந்து தன்னை சீர் திருத்திக் கொண்டு தனது வலது தோளில் பாரத்தினை ஏற்றுவதற்கு முயற்சி செய்வது நல்லது.
இல்லையெனில் "இந்த சமுதாயத்தை அழித்து விட்டு இதனை விட சிறந்த சமுதாயத்தை/தனது தீனை ஓங்கச் செய்வதற்காக மட்டுமே உழைக்கும் ஓர் உன்னத சமுதாயத்தை இறைவன் படைத்து விடுவான்" என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
இறைவன் நம்மை தீனை ஓங்கச் செய்யும், அதற்காக மட்டுமே தனது நேரத்தையும், பொருளையும், உயிரையும் செலவழிக்கும் உன்னத சமுதாயமாக ஆக்கியருள்வானாக.
குறிப்பு: இதனோடு சமுதாயத்தை கூறுபோடும் இழி செயலை இந்த பதிவு நிறுத்தி, ஆக்கப்பூர்வமான செயலுக்கு சமுதாயத்தை ஒன்றிணைத்து அதன் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதாக தன்னை மாற்றிக் கொள்ளும் என எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
இஸ்லாமிய சகோதரன்.
Initially I used to visit PJvsTMMK site,the person claimed well wisher of Muslims but the articles listed clearly indicates it is TMMK's affilate site.
Slowly lot of sites have came up claiming to be unbiased claiming to critize each individual/organization mistakes, Unfortunately every article shows's clearly their affliation to particular leader or organization(I am sad to say even learned people cliaming to clarify doubts on zakat or other matters also have similar intentions)
May god protect us and show us straight path.
Mohamed Yasin
அன்பிற்குரிய சகோதரர்கள் அபூ ஷைமாவும் அபூ ஸுமைய்யாவும் கூறியுள்ள கருத்துக்களில் அப்படியே
உடன் படுகிறேன். நமது பொது எதிரிகளைச் சந்திக்க நம்மில் நாலைந்து பேர் மட்டும்: உள்குத்தும் வெளிக் குத்தும் குத்த நம்மில் நானூறு பேரா?
நாஞ்சிலன்
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இக்குழுமத்தில் நான் பதிந்த பதிவை பாராட்டியும், குற்றம் சுமத்தியும், நடு நிலையாக விமர்சித்த அனைத்து சகோதரர்களுக்கும் என் நன்றியை தெறிவித்து கொள்கிறேன்.
நான் எந்த இயக்கங்களையும் சாராதவன். TNTJ மற்றும் TMMK ஆகிய இரு இயக்கங்களையும் சம தூரத்தில் வைத்துதான் பார்க்கிறேன். விமர்சனங்கள் ஒரு இயக்கத்திற்கு எதிராக இருந்தால் உடனே எழுதியவன் மாற்றுக் கூடாரத்தை சார்ந்தவன் என்ற முத்திரை குத்தப்படும் போக்கு சரியில்லை.
சகோ. அபூ ஸுமைய்யா அவர்கள்; "தவறான தகவல்களை சக சகோதரர்களுக்கு எதிராக பரப்புவது இறைவனின் கடும் கோபத்திற்கு ஆளாகக்கூடிய பாவமான காரியத்தை செய்வதிலிருந்து தவிற்த்துக் கொள்ளுபடி" விடுத்த வேண்டு கோலால் நான் மிகவும் சந்தோஷம்அடைந்தேன். காரணம், ஒரு சுன்னத்தை உயிர்பித்து விட்டார்.
நான் இக்குழுமத்தில் பதிந்த பதிவு; அவர் வேண்டியது போல் இறைவனின் இல்லங்களில் இருந்து; கடந்த 20 வருடகால நிகழ்வுகள், உச்சக்கட்டமாக கடந்த 4 மாதங்களாக நடந்த நிகழ்வுகளின் எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடு தான் இது. இதில் எனக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை.
கடந்த 20 வருடகாலமாக திருமறையையும், நபிவழியையும் தன் இயக்கம் சாரா சகோதரர்களின் குற்றம் குறைகளை சுற்றிக்காட்ட உதவும் ஆயுதமாகவும், இவைகள் கூறும் வழிமுறைகளும், வாழ்க்கை நெறிகளும், மற்றவர்கள் பின்பற்றத்தானே தவிர, எங்களுக்கில்லை என்ற மனப்பான்மையுடன் தங்கு தடையின்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கின் ஆழத்தை நடுநிலை தவராமல் சீர்தூக்கிப் பாருங்கள். சமுதாய சிந்தனையும், அக்கறையும், கவலையும், ஒரு சார்புடையதாக இருக்கக்கூடாது.
திருமறையையும், நபிவழியையும் நம் அனைவறையும் வழி நடத்த அருளப்பட்ட அருட்கொடையாக பாவித்து இருந்தால்; "ஓற்றுமை எனும் கயிற்றை நழுக விட்டதன் விளைவு தானே நாம் இப்போது இழி செயலான, மற்றவர்களை தோண்டி துருவி ஆராய்ந்து கொண்டும் நம் இடது தோள்களில் பாரத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறோம்?". வேலியே பயிரைமேய்ந்த கதைதான்.
அபூ ஷைமா: "ஒற்றுமை எனும் கயிற்றை நழுக விட்டதன் விளைவின் தாக்கத்தை" இந்த இடுகையும் நன்றாக உணர்ந்துள்ளார். 20 வருட இறைப்பணி; குர்ஆனும், ஹதீசும் விதித்த எல்லைக்கோட்டை மீறியதாக இருந்ததாலும், நெறிமுறைகளுக்கு முறண்பட்டதாக இருந்ததாலும், அந்த தவறை திறுத்த முற்பட்ட மார்க்க அறிஞர் பெருமக்களின் அறிவுத்திறனை சந்தேகித்ததாலும், அவமானப் படுத்தப்பட்டதுமே இப்போதைய சூழ்நிலைகளுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. இந்த உண்மையை நடுநிலை தவராமல் சிந்தித்துப் பாருங்கள் உண்மை தெறியும்.
பெயர் குறிப்பிடாமல் த மு மு க காரன் அப்பட்டமாக பொய் சொல்வான் அ. சஜருதீன் அந்த சாக்கடையில் உள்ளவரா?
நான் எந்த சாக்கடையிலும் என்றுமே இருந்தது கிடையாது இருக்கவும் மாட்டேன். தமுமுக காரன் சாக்கடை என்றால், 20 ஆண்டு காலம் தலைவராக முடிசூடி இயக்கத்தை விருட்சமாக வளர்த்த வசூல் ராஜாவும், அவர் தம் சகாக்களும் அந்த இனமா?
20 ஆண்டு கால இறைப்பணி தன் கூடாரத்தில் உள்ளவர்களைக் கூட இன்னும் எட்டவில்லையே? 20 ஆண்டு கால இறைப்பணி விழலுக்கிறைத்த நீர்தானா?
வஸ்ஸலாம்
அ. சஜருதீன்
Post a Comment