Monday, May 29, 2006

வேதம் ஓதும் சாத்தான்கள்

ஒப்பற்ற அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

முரண்பாடுகள் ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் ஜித்தாவிலிருந்து துறைமுகத்தைச் சேர்ந்த காதர் சுல்தான் என்ற பெயரில் கடந்த வாரம் முகவரியில்லாத ஒரு சாத்தான் ஒற்றுமையை(?) விரும்புவதாக சொல்லிக் கொண்டு வேதம் ஓதியிருக்கிறது.

நான் இப்படி குறிப்பிடக் காரணம், கடந்த 10 ஆண்டுகளாக ஜித்தாவில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரம் செய்து வரும் மௌலவி முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களைப்பற்றி பல பொய்யான அவதூறுகளை பரப்பி, தனக்கு முஜிபுர் ரஹ்மான் நெருக்கமானவர், பிரியமானவர் என்று சொல்லிக் கொண்டு அவரைப் பற்றி அவதூறுகளை மின்னஞ்சல்கள் மூலம் பலருக்கு அனுப்பும் காதர் சுல்தானின் செயல் நிச்சயமாக சாத்தானிய செயல் என்பதாலேயே.

மௌலவி முஜிபுர்ரஹ்மான் அவர்களிடம் முரண்பாடுகளை காணும் இவர், உண்மையில் நேர்மையாளராக இருந்தால் அவரிடம் நேரில் சொல்லலாம். நேரில் சொல்ல தயங்கும் இவர் மேற்கண்ட மின்னஞ்சலை முஜிபுர்ரஹ்மானுக்கு மட்டும் அனுப்பியிருக்கலாம். அதை விட்டு விட்டு பல பகுதியில் வசிக்கும் ததஜவினருக்கு மட்டும் அனுப்பியிருப்பது இவரின் பொய் முகத்தை அம்பலப்படுத்துகிறது.

மேலும் இவர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் உண்மைதானா? என்பதற்கு, பல ஆண்டுகளாக மௌலவி முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களின் மாணவராகவும், தமிழ் தஃவா கமிட்டியில் அங்கம் வகித்து வரும் நான் சில விளக்கங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

முதலாவதாக, ஜித்தா பகுதியின் தஃவா பணிகள் சகோதரர் முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களின் தவறான அனுகுமுறையால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்று மிகப் பெரும் அவதூறை அள்ளி வீசியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஜித்தாவில் தமிழ் தஃவா கமிட்டி அல்லாஹ்வின் பேருதவியால் தஃவா பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. ஆனால் சுமார் ஒரு வருடத்திற்கு முன் தமிழ் தஃவா கமிட்டியின் அறிவுறுத்தலையும் மீறி ஆரம்பிக்கப்பட்ட ததஜவினரின் வெறி பிடித்த நடவடிக்கையினாலேயே தஃவா பணிகள் கடுமையான பாதிப்புள்ளாகி வருகிறது என்பதே உண்மை. இது அனைவரும் அறிந்த ஒன்றே.

இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு எதிரான இவர்களின் நடவடிக்கையால்தான் ஜித்தாவில் பல மனக் கசப்புகள் ஏற்பட்டன. இதற்கு பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். உதாரணத்திற்கு சிலதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

1. பல வருடங்களாக தமிழ் தஃவா கமிட்டி எந்த பிரச்சனையுமின்றி முறையாக செய்து வந்த பித்ரா வசூலை, அவர்கள் கைவிட்ட பின் ததஜவும் வசூலித்தது. அப்படி வசூல் செய்த இடங்களிளெல்லாம் பிற இயக்கங்களை பற்றிய அவதூகளை பரப்பியது.

2. த.மு.மு.க. சார்பாக வசூல் செய்ய நியமிக்கப்பட்டவரை மிரட்டி அவர்கள் பைலை திருப்பி கொடுக்கச் சொன்னது.

3. துறைமுகத்தில் ஜி.சி.டி. கம்பெனி மேனேஜரிடம் 10 வருடங்களாக நாங்கள் தான் வசூல் செய்தோம் என்று தவறான புகார் கொடுத்து மற்றவர்களின் வசூலை தடுத்தது.

4. தமிழ் தஃவா கமிட்டியால் பல வருடங்களுக்கு முன் பலத் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அல்ஹுதா நூலத்திற்கு இடையூராக சிடிக்களை மிக குறைந்த விலையில் விற்றும், அதே பகுதியில் போட்டியாக சிடி விற்பனை செய்தது.

5. தமிழ் தஃவா கமிட்டி சார்பாக துறைமுகத்தில் நடத்தப்பட்ட தஃவா நிகழ்ச்சியில் கமிட்டி தலைவர் தடுத்தும் சிடி விற்றது.

6. ததஜ அல்லாத மற்ற மார்க்க அறிஞர்களின் வகுப்புக்களையும், பயான்களையும் புறக்கணித்தது.

7. பலத், செனய்யா, நிஹாத் அரப் கேம்ப் பகுதிகளில் பொது இடங்களில் நோட்டீஸ்கள் ஒட்டி, கடந்த காலங்களில் இல்லாத கலாச்சாரத்தை ஜித்தாவில் ஆரம்பித்தது.

உண்மை இவ்வாறு இருக்க சகோ. முஜிபுர்ரஹ்மான் மீது வீண் பழி சுமத்தியிருப்பது அபத்தமானது.

இரண்டாவதாக, சகோதரர் முஜிபுர்ரஹ்மான் உமரியின் தாஃவா பணி என்பது மௌலவி பி.ஜைனுல் ஆபிதின் அவர்களையும், ததஜவையும் சாடுவது, கேலி செய்வது, துருவி துருவி குறைக்கண்டு பிடிப்பது தான் இன்றைய தாஃவா பணியாக செய்து கொண்டு இருக்கிறார் என்று விஷம் கக்கியுள்ளார்.

ஜகாத் விஷயத்தில் 1400 ஆண்டுகளாக உலகத்தில் யாரும் சொல்லாத புதிய கருத்தை சொல்லும் பி.ஜே. அவர்களிடம் விளக்கம் கேட்டு, வீடியோ கேசட் அனுப்பிய முஜிபுர் ரஹ்மான் அவர்களிடம் டெலிபோனில் செட்டப் செய்திருக்கிறாய், தமுமுக காரன்களை வைத்து நிகழ்ச்சி நடத்தியிருக்கிறாய், என்று சாடியது மட்டுமின்றி விவாதத்திற்கு வராமல் ஓடி ஒளிந்து விட்டான் என்றும், நாங்கள் முஜிபை ஊரில் கவனித்துக் கொள்வோம் என்று மிரட்டுவதும், கருத்துக்கு பதில் சொல்லாமல் அவரின் குடும்பத்தை கொச்சைப்படுத்தியும் வியாபாரத்தை கேலி செய்தும் டிவியில் பிரச்சாரம் செய்வதும்,

தேர்தலில் களப்பணியாற்றச் செல்வோர் அத்தனை பேரும் ஏகத்துவத்தை இழந்து விடுகின்றனர் என்று ஏகத்துவம் ஏப்ரல் 2004 இதழில் எழுதிவிட்டு இன்று அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் தேர்தலில் களப்பணியாற்றி ஏகத்துவத்தை இழந்து வருவதும்,

கவர்ச்சி நடிகைகளுக்கு வரவேற்பு அளிப்பதும்,

கடையநல்லூரில் ஜாக் அமைப்பிற்கு சொந்தமான பள்ளியில் கல்வெட்டை இடித்து ரவுடிகளை மிஞ்சும் வகையில் அராஜகம் செய்து பள்ளி பூட்டப்பட துணை புரிந்ததும்,

குடந்தையில் நடப்பட்ட அரசியல் மாநாட்டிற்காக நெல்லிகுப்பத்தில் தவ்ஹீது பள்ளிளை ஒரு நாள் முழுவதும் பூட்டி விட்டு சென்றதும்,

தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைகாட்சிக்கு சற்றும் சளைக்காமல் இசையுடன் ஆபாச விளம்பரங் களையும், கோவில் நிகழ்ச்சிகளையும், ஒலிபரப்பிய விண் டிவியில் பங்கு வகித்ததும்,

உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை காபிர் என்று ஃபத்வா கொடுப்பதும்,

நாவு கூசும் ஆபாச வார்த்தைகளை பயன் படுத்தி மின்னஞ்சல்களை உலகம் முழுவதும் அனுப்புவதும்,

நாலாந்தர அரசியல் வாதியைப் போல் எதிரணியினரை மேடைகளில் வசை பாடுவதும்,

மற்ற இயக்கத்தினரிடம் துருவி துருவி குறைக்கண்டு பிடிப்பது தான் இன்றைய ததஜவின் தாஃவா பணி என்பதை காதர் சுல்தான் மறந்து(?) விட்டார்.

மேலும், முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தனிப்பட்ட முறையில் பீஜேவையோ ததஜ இயக்கப் பிரச்சனைகளையோ விமர்சித்திருந்தால் நீங்கள் கூறுவது ஓரளவுக்கு நியாயமாக இருக்கும். ஆனால் பீஜேயின் மார்க்க ரீதியிலான குறைகளை மட்டுமே தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார். இதை இவர் பல வருடங்களாக பல முறை பீஜேயிடம் சுட்டிக்காட்டி, பீஜே இதுவரை எந்த மறுப்பும் தராததாலேயே தன்னுடைய மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு எடுத்து வருகிறார்.

மூன்றாவதாக, தாயகத்திலிருந்து வந்த பிறகு அவர் பணியாற்றும் சென்டரின் அனைத்து வகுப்புகளும் Anti பீஜே என்ற ரீதியில் தான் இருந்து வருகிறது என்று புலம்பியுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்பே சூன்யம், பல்லியை அடிப்பது, மற்றும் இஸ்லாமிய இதர சட்டங்கள் தொடர்பான வசனங்களில் பீஜேயின் கருத்துக்கள் மார்க்கத்திற்கு முரணாக இருக்கிறது என்று முஜிபுர் ரஹ்மான் பல வகுப்புக்கள் எடுத்திருக்கும் போது, தாயகத்திலிருந்து வந்த பிறகு தான் என்று புலம்புவதும், பல வகுப்புகள் பொதுவான தலைப்பிலேயே எடுத்து வருவதை அறியாமல் அனைத்து வகுப்புகளும் என்று பிதற்றுவதும் காதர் சுல்தானின் அறியாமையே.

நான்காவதாக, யாரெல்லாம் பிஜேக்கு எதிரானவர்களோ அவர்கள் எல்லாம் இப்போதைய நண்பர்களாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்று புதிய கண்டு பிடிப்பை வெளிக்காட்டுகிறார்.

முஜிபுர்ரஹ்மானுக்கு மிகவும் நெருக்கமான பிரியமான நண்பர் என்று தன்னைப்பற்றி அறிமுகம் செய்த காதர்சுல்தானும் பிஜேக்கு எதிரானவர் தான் என்று இவ்வரிகளின் மூலம் சொல்ல வருகிறார் போலும். இதை அவர் எழுத்துக்களாலேயே நிரூபித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

ஐந்தாவதாக, சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் நான் நான் என்ற அகந்தை இன்னும் கூடிக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு சாராரை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் எப்படி நல்ல இஸ்லாமிய அழைப்பாளராக இருக்க முடியும்? என்று ததஜ மாநிலத்தலைமையை கேட்ட வேண்டிய கேள்வியை இங்கு கேட்கிறார்.

கடந்த 20ஆண்டுகளில் நான் என்ற அகந்தை காரணமாக பல இயக்கங்களை உடைத்தும், தேர்தல் நிலைப்பாட்டில் படுதோல்வி அடைந்தும் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்று ஆணவத்துடன் பேசி வரும் புரட்சித்தலைவியின் போர் வாளாக பவனிவருபவர்களும் தான் நான் என்ற அகந்தைக்கு சொந்தக்காரர்கள்,

மேலும், முன்பு மனம் திறந்த மடலில் தான் சார்ந்திருந்த தமுமுகவை வானளாவி புகழ்ந்தும், எந்த முறைகேடும் இல்லாமல் சரியான முறையில் அதைச் செலவு செய்யும் ஒரே இயக்கம் தமுமுக என்றும் எழுதி விட்டு இன்று அவ்வியக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று செயல்படுபவர் நல்ல இஸ்லாமிய அழைப்பாளராக இருக்க முடியுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து நம்ம காதர் பாய் அவர்கள், முஜிபுர் ரஹ்மானிடம் கண்டு பிடித்துள்ள மெகா(?) முரண்பாடுகள் என்ன? என்ன?? என்று பார்ப்;போம்.

முன்பு துறைமுக நூலகப் பொறுப்பாளர் சகோதரர் சுல்தானை எதிர்த்து விட்டு இப்போது அவரை தமிழ் தஃவா கமிட்டியில் சேர்க்க வேண்டும் என்றும், முன்பு விடியல் வெள்ளிக்காரர்களை சென்டருக்கு வரவிடாமல் விரட்டி அடித்துவிட்டு இன்று அவர்களை அழைப்பதும், கமிட்டியில் அவர்களை சேர்க்க வேண்டும் என்றும் முஜிபுர்ரஹ்மான் சொன்னதாக தன் தானைத் தலைவர்கள் பாணியில் மெகா பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

மேற்சொன்ன தகவல்கள் உண்மை தானா? என்று அறிவதற்காக தமிழ் தஃவா கமிட்டித் தலைவரிடம் போனில் கேட்டேன். அதற்கு அவர் முஜிபுர்ரஹ்மான் அவ்வாறு சொல்லவில்லை என்ற உண்மையை தெரிவித்தார் மற்றும் சென்ற செயற்குழுவில் முஜிபுர் ரஹ்மான் கலந்து கொள்ளவும் இல்லை. மேலும் துறைமுகம் சுல்தானை சேர்க்க வேண்டும் என்று சிலர் கருத்து சொன்னதாகவும், விடியல் வெள்ளிக்காரர்கள் கமிட்டியில் சேர வேண்டும் என்று கடிதம் கொடுத் திருப்பதால் அதை பரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசப்பட்டதாக சென்ற செயற்குழுவில் கலந்து கொண்டவர்கள் நம்மிடம் சொன்னார்கள். இதில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத முஜிபுர் ரஹ்மானை வீண் வம்புக்கு இழுப்பது காதர் சுல்தானின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மேலும் அவரின் நிகழ்ச்சிகளுக்கு எந்த அமைப்பினரையும் தனிப்பட்ட முறையில் அழைத்ததில்லை. பொதுவான அழைப்பு கொடுத்து வருவதுதான் வழக்கம். ஆனால் மற்றவர்களின்; நிகழ்ச்சிகளை புறக்கணித்தும், கூட்டத்தை காட்ட தங்களுடைய நிகழ்ச்சிக்கு மட்டும் மற்ற அமைப்பினரை தனியாக அழைப்பதும் காதர் சுல்தானின் சகாக்களின் வேலை என்பதும் மக்களுக்கு தெரியும்.

மேலும், பணம் வருகிறது என்றால் யார் பின்னாலும் போவார், கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் இரண்டாம் நிலைதான் என்று சகோதரர் சுல்தானின் தஃவாப் பணிகளை கொச்சைப்படுத்தும் இவர்களின் நிலையை பார்ப்போம்.

நான் தான் ஆயுல் கால சேர்மேன், என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று ஆணவமாக கூறிக்கொண்டு தமுமுகவிற்காக வாங்கப்பட்ட சொத்துக்களை அனுபவித்து வருவதும்,

விண் டிவிக்காக துபாயிலுல்ல கல்ப் ஆசியா நிறுவனத்தாரிடம் ஷேர் வாங்கிய 80லட்சத்தை 6 மாதத்தில் திருப்பி தருவதாக சொல்லி பட்டை நாமம் போட்டும்,

அபுதாபியில் திர்மிதிக்கு ஷேர் சேர்த்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக் காமல் அமுக்கி வைத்திருப்பதும்,

தமுமுகவை உடைப்பதற்கு வாங்கிய கருப்புப் பணத்தை வெள்ளையாக்க 1 கோடி வசூல் என்று கள்ள கணக்கு காட்டுவதும்,

ஆசியாவிலேயே கோடீஸ்வரராக ஆவதற்கு துவா செய்யுமாறு நம்மை வேண்டுவதும்,

சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் குடும்பத்திற்காக வசூல் செய்யப்பட்டு, அவரின் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்ட 50 ஆயிரத்தை அவரிடமிருந்து ரகசியமாக திருப்பி வாங்கிக் கொண்டதும்,

என்று இவர்களின் பண மோசடிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அடுத்து, ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்களின் பயானை துறைமுகத்தைத் தவிர எங்கும் நடத்த விடக்கூடாது என்று எல்லா இடங்களிலும் தடை செய்தார், என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

நாம் அறிந்த வகையில் இது போன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை. எந்த தேதியில், எந்தெந்த கேம்பில் இம்தாதி அவர்களின் பயானை தடுத்தார்? என்று குறிப்பிடாமல், புறம்போக்கைப் போல் எழுதியிருப்பது, பொய்களை தவிர இவரிடம் எந்தச் சரக்கும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது.

மேலும், தன் மீது அவதூறுகளை பரப்பிய ததஜவினர் நடத்திய நிகழ்ச்சியையே தடை செய்ய வாய்ப்பிருந்தும், தடை செய்யாமல் விட்டு விட்டவர், இம்தாதி அவர்களின் பயான்களை தடை செய்திருப்பாரா என்று சிந்திக்க வேண்டும்.

அடுத்து, இலங்கையைச் சேர்ந்த டாக்டர் நுபார் அவர்களை அன்று ஒதுக்கி வைத்து இன்று அவரின் பயானை தங்களது சென்டரில் நடத்துவது, என நாவு கூசாமல் பொய்களை அறங்கேற்றுகிறார்.

கடந்த காலங்களில் இப்றாஹிம் காஸிமி, ஷம்சுல்லுஹா, அபூபக்கர் சித்தீக் ரஷாதி, சுலைமான், ஸைபுல்லாஹ் காஜா மற்றும் பல அறிஞர்களின் பயானை தனது சென்டரில் நடத்தியிருக்கும் போது, ஸலபுகள் விஷயத்தில் பீஜேயின் தவறான நிலைப்பாட்டை சுட்டிக் காட்டி வரும், ஹதீஸ் கலை அறிஞர் ஷேக் அல்பானி அவர்களின் மாணவரும் கடந்த 50 ஆண்டுகளாக வரலாற்றை ஆய்வு செய்து வரும் டாக்டர் நுபார் பாருக் அவர்களின் பயானை நடத்தியதை மட்டும் குறை கூறுவது தக்லீதின் உச்சக்கட்டத்தையே காட்டுகிறது.

மேலும், இதற்கு முன் தமிழ் தஃவா கமிட்டியே டாக்டர் நுபார் அவர்களின் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. செனய்யா சென்டரிலும் அவர்களின் பயான் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்து, மெப்கோ அமைப்பை சரமாரியாக விமர்சித்து அவர்களை ஓரம் கட்டி இன்று அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பெருமையாக நினைப்பது, என்று பிதற்றியுள்ளார்.

பல வருடங்களாக மெக்கோ நிகழ்ச்சியில் அழைப்பிற்கிணங்க பல முறை முஜிபுர்ரஹ்மான் பயான் செய்திருக்கும் போது இதில் பெருமையடிக்க என்ன இருக்கிறது? மேலும், யாரிடம்? எது சம்பந்தமாக சரமாரியாக விமர்ச்சித்தார்? என்பதை நிரூபித்தால் அதைப் பற்றி விளக்க நாம் தயார். விளக்குவீர்களா காதர் பாய் அவர்களே!

அடுத்து, செனய்யா சென்டரில் பேசிய முஹம்மது நவ்பர் அவர்களின் பேச்சை பாராட்டும் நீங்கள், அவர் கமாலுத்தீன் மதனி, இக்பால் மதனி ஆகியோரின் தியாகங்களையும் உழைப்பையும் சேவையையும் கொச்சைப்படுத்திப் பேச யாருக்கும் எந்த அருகதையும் இல்லை என்றும் சொன்னதை மறைத்து விட்டு எழுதியது ஏன்? கமாலுத்தீன் மதனியையும் மற்ற ஜாக் தாயிகளையும் அசிங்கப்படுத்தி முன்பு வெளியிட்ட சிடியை மறு பதிப்பாக இன்று வெளியிடும் கூட்டத்தை சேர்ந்தவராக இருப்பதினாலா?

அடுத்து, இன்று பீஜேயின் மார்க்க ரீதியிலான ஆய்வுகளை குறை கூறித்திரியும் முஜிபுர்ரஹ்மான் ஏன் இன்னும் அவர்களோடு உட்கார்ந்து பேச தயங்குகிறார்? என்று ஒரு மெகா கேள்வியை கேட்கிறார்.

பீஜேயின் மார்க்க ரீதியிலான குறைகளை பல வருடங்களாக பல முறை பீஜேயிடம் உட்கார்ந்து பேசியிருக்கிறார், இதை பாக்கரும் ஒத்துக் கொண்டார். ஆனால் சென்ற முறை விடுமுறையில் சென்ற முஜிபுர்ரஹ்மானிடம் விவாதம் செய்ய அழைப்பு விடுத்து ஒரு நாடகத்தை அறங்கேற்றியவர்கள் ததஜவினரே. விவாத கடிதங்கள் போக்குவரத்தில் என்ன நடந்தது? என்பதை கடந்த மாதம் துறைமுகத்தில் நடந்த நூர் முஹம்மது பாகவி பயான் நிகழ்ச்சியில் தெளிவாக்கிய பின்பும் துறைமுகத்தை சேர்ந்தவர் என்று கூறிக் கொள்ளும் நீங்கள் கேள்வி எழுப்புவது உங்களின் கேவலமான எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

மேலும், பீஜே தமிழாக்கம் செய்த குர்ஆனில் உள்ள குளறுபடி சம்பந்தமாகவும் ஸஹாபாக்கள் விஷயத்தில் பீஜேயின் நிலை சம்பந்தமாகவும் கருத்துப் பரிமாற்றம் செய்ய சவூதி அரசாங்கத்தின் தலைமை முஃப்தி கடிதம் மூலம் விடுத்த அழைப்புக்கு பல மாதங்களாகியும் வருகை தராமல் இருப்பது ஏன்?

நபி தாவூது(அலை) அவர்களை பிறர் சொத்தை அபகரித்தவர் (நவூதுபில்லாஹ்) என்று தனது தர்ஜுமாவில் குறிப்பிட்ட பீஜேவை, இது சம்பந்தமாக விவாதம் செய்ய எப்போதும் தயார் என்று பகிரங்கமாக அழைத்த ஹாமித் பக்ரிக்கு பல மாதங்களாகியும் இது வரை மறுப்பு சொல்லாமல் மௌனமாக இருப்பது ஏன்? பதிலளிப்பீர்களா?

இன்னும், அல்லாஹ்வை நம்புதல், சொர்க்கம், நரகம் போன்ற மறைவான நம்பிக்கையில் சொந்த விளக்கம் கொடுத்து (ஆதாரம் - தர்ஜுமா விளக்க எண் : 177) வரலாற்றில் வழிகெட்ட கூட்டங்கள் என்று அறிவிக்கப்பட்ட காரிஜியாக்கள், கத்ரியாக்கள், முர்ஜியாக்கள், ஜஹ்மியாக்கள், முஃதஸிலாக்கள், போன்றவர்களின் கொள்கைகளுடன் ஒத்து இருப்பதும்,

உலகத்தில் பல அறிஞர்களின் கூற்றுக்கு மாற்றமாக, ஸஹீஹான பல ஹதீஸ்கள் குர்ஆனுக்கு மோதுகிறது என்று சொல்லி மறுப்பதும், இத்தகைய ஹதீஸ்கள் 50 என்று தனது தர்ஜூமாவில் முதல் மூன்று பதிப்புகளிலும் எழுதிவிட்டு 50ஐ எடுத்துக் காட்டுங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டவுடன், காட்ட முடியாமல் நான்காவது பதிப்பில் 50ஐ மட்டும் நீக்கி விட்டு எழுதியிருப்பதும்,

ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல் எறிவது சிரமமாக இருந்தால், அதற்கு பகரமாக சைகை செய்தால் போதும் (ஆதாரம் - ஏகத்துவம், பக்கம் 48,50. பிப்ரவரி 2006) என்று பித்அத்தான ஹஜ் முறையை அறிமுகப்படுத்துவதும்,

ஸஹாபாக்களை கிரிமினில் என்றும், அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று அன்ஸாரித் தோழர்கள் நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்காக காத்து இருந்தார்கள் (ஆதாரம் - ஏகத்துவம் ஜகாத் சிறப்பிதழ், 72 கூட்டங்கள் உரை) என்று உளரியதும்

ஜிஹாத் விஷயத்தில் தவறான விளக்கம் கொடுத்து வருவதும், இன்னும் இது போன்ற பல மார்க்க விஷயங்களில் முரண்பாட்டின் மொத்த உருவமாகத் திகழ்வதுதான் ததஜவினரின் இன்றைய நிலை.

மேலும், உங்களைப் போன்றோர் தனி நபர் மீது கொண்டுள்ள பக்தியினால் சத்தியத்தை தெரிந்தும் அதை மறுத்து வருகின்றனர். அதற்காக நாம் பரிதாபப்படுகிறோம்.

நான் ஒரு நேரத்தில் பீஜே அவர்களை உயர்வாக மதித்தேன். எனது திருமணத்தில் கூட பீஜே அவர்களின் பயான் வைக்க வேண்டும் என்பதற்காக விடுமுறை குறைவாக இருந்தும் திருமண தேதியையே தள்ளி வைத்தேன். ஆனால் இன்று அவர் சமுதாயத்திற்கு தொடர்ந்து செய்து வரும் துரோகத்தினாலும் மார்க்க விஷயத்தில் அவரிடம் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளாலும் அவரை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு சிந்தனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இறுதியாக நான் கேட்பது இது தான், முஜிபுர்ரஹ்மான் இன்னும் பல முரண்பாடுகளை காணுவதாக கூறும் நீங்கள் அவற்றை தக்க சான்றுடன் அவரிடம் சமர்ப்பிக்க முடியுமா? மேலும், துறைமுகத்தில் உள்ள உங்களின் முகவரியை தெரிவித்தால் நாங்கள் நேரில் வந்து உங்களிடம் நட்பு ரீதியில் கருத்து பரிமாற்றம் செய்ய தயாராக இருக்கிறோம். இதற்கு உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டிட துவா செய்கிறேன்.


இப்படிக்கு,

காரைக்கால் இ.அப்துல்மஜீத்,
ஜித்தா, செல் 0502679834
மின்னஞ்சல்: abuanas74@gmail.com

2 comments:

Anonymous said...

எல்லா குற்ற சாட்டுகலும் நிருபிக்கபடாதவை இது சமுதாயத்திற்கு நல்லதல்ல. காழ்புணர்சி மேலொங்கி நிற்கிறது. அல்லாஹ் நம் அனைவரையும் ஒற்றுமையாக்க போதுமானவன்.

இஸ்லாமிய வழிப்போக்கன் said...

//எல்லா குற்ற சாட்டுகலும் நிருபிக்கபடாதவை//

யாரப்பா இந்த அனானி!. பீ.ஜே.தான் உலகம் என்று நம்புகிறவர் என்று நினைக்கிறேன். நிரூபிக்க இரண்டு சாம்பிள்கள் உங்களுக்கு போதாதா?

அவை:

உலகத்தில் பல அறிஞர்களின் கூற்றுக்கு மாற்றமாக, ஸஹீஹான பல ஹதீஸ்கள் குர்ஆனுக்கு மோதுகிறது என்று சொல்லி மறுப்பதும், இத்தகைய ஹதீஸ்கள் 50 என்று தனது தர்ஜூமாவில் முதல் மூன்று பதிப்புகளிலும் எழுதிவிட்டு 50ஐ எடுத்துக் காட்டுங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டவுடன், காட்ட முடியாமல் நான்காவது பதிப்பில் 50ஐ மட்டும் நீக்கி விட்டு எழுதியிருப்பதும்,

ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல் எறிவது சிரமமாக இருந்தால், அதற்கு பகரமாக சைகை செய்தால் போதும் (ஆதாரம் - ஏகத்துவம், பக்கம் 48,50. பிப்ரவரி 2006) என்று பித்அத்தான ஹஜ் முறையை அறிமுகப்படுத்துவதும்,

மேலும்,

"ஜித்தாவிலிருந்து துறைமுகத்தைச் சேர்ந்த காதர் சுல்தான் என்ற பெயரில் கடந்த வாரம் முகவரியில்லாத ஒரு சாத்தான் ஒற்றுமையை(?) விரும்புவதாக சொல்லிக் கொண்டு வேதம் ஓதியிருக்கிறது" என்ற காரைக்கால் அப்துல் மஜீதின் குற்றச் சாட்டை நிரூபிக்க, முஜிபுர் ரஹ்மான் நெருக்கமானவர், பிரியமானவர்தான் என்ற துறைமுகம் காதர் சுல்தானின் முகவரியை இங்கு ததஜவினர் பதிந்து உண்மையாளராக காட்டிக்கொள்ளலாம் அல்லவா?

இல்லாத ஒருவரை உருவாக்கி ஏனப்பா அவதூரை அவிழ்த்து விடுகிறீர்கள்?