Showing posts with label Tamil muslim prisoners. Show all posts
Showing posts with label Tamil muslim prisoners. Show all posts

Thursday, March 29, 2007

நீதியைத்தேடி - ஹாமித் பக்ரி உரை (VIDEO)


கருத்தரங்கில் ஹாமித் பக்ரி அவர்கள் உரையாற்றுகையில்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த மார்ச் 11 அன்று கோவையில் நமது சமுதாயத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று முஸ்லிம் சிறைவாசிகளின் உரிமைகளையும் அவர்களின் விடுதலையும் வலியுருத்திய நீதியைத் தேடி கருத்தரங்கில் "ஐக்கிய சமாதானப் பேரவை" தலைவர் மெளலவி ஹாமித் பக்ரி மன்பஈ அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது.

இதைக் காண்பதற்கோ அல்லது டவுன்லோட் செய்வதற்கோ இங்கு சொடுக்கவும்.

Wednesday, March 21, 2007

விரைவில்...

காவல்துறையின் அராஜகம்...


காக்கிகள் மற்றும் காவி உடை பயங்கரவாதிகளால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லிம் பென்கள்..

காக்கிகளோடு காவிகள் இணைந்து அரங்கேற்றிய பயங்கரவாதம்...

விரைவில் எதிர் பாருங்கள்...

தமிழ் முஸ்லிம் மீடியா

தமிழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் அவர்களுக்கெதிராக நடத்தப்படும் அடக்குமுறைகளையும் எதிரொலிக்கும் ஊடகமாக இன்சா அல்லாஹ்...

காரைக்குடி,இஸ்லாம், முஸ்லிம்

Monday, February 26, 2007

என் தந்தை வருவாரா?

என் தந்தை வருவாரா?


யா அல்லாஹ் என் கண்ணீர் வற்றும் முன்னே...

என் கை பிடித்து பாட சாலைக்கு அழைத்துச் செல்ல...

என் தந்தை சிறையிலிருந்து வருவாரோ? ....என ஏங்கும் இது போன்ற பல சிறுவர்களின் ஏக்கத்தினை போக்கி நம் சமூக அவலம் துடைக்க ஒன்றுபடுவீர் உடைத்திடுவோம் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் விலங்குகளை!!

மார்ச்ச 11 - சமுதாய தலைமைகளின் சங்கமம்!! கோவையில்....வாருங்கள் எம் சமுதாயச் சொந்தங்களே !! ஒன்றுபடுவோம் தடைகளை தகர்த்தெறிவோம்!!

இந்திய மக்கள் தொகையில் நம் சதவிகிதத்டதிற்கும் அதிகமாக இந்திய சிறைச்சாலைகளில் நம் சமுதாய இளைஞர்கள் தம் மனைவி, மக்களை இழந்து எந்த வித வழக்குகளும் இன்றி அல்லது புனையப்பட்ட பொய் வழக்குகளின் கீழ் நீண்ட நெடுங்காலமாய சிறையிருந்து வருகின்றார்கள். அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்பதும், அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் மனைவி மக்களின் வேதனைகளை போக்குவதும் சமுதாயத்தின் அங்கங்களான நம் மீது கடமையல்லாவா? ஒன்றுபடுவோம் வாரீர் !! தமிழகத்தின் எல்லா சாலைகளும் கோவையை நோக்கியதாக இருக்கட்டும்!!

மார்ச் 11 - உங்கள் ஆதரவும் அனுசரனையும் எங்களுக்கு தேவை...உங்கள் பிரார்த்தனைகளில் தமிழக சிறைச்சாலைகளில் நீண்ட நெடுங்காலமாக வாடிக் கொண்டிருக்கும் உங்கள் தமிழ் முஸ்லிம் சகோதரர்களையுமு் நிணைவு கூறுங்கள்.

மேலதிக விபரங்களுக்கும்...அனுசரனைகள் வழங்குவதற்கும் தெர்டர்பு கொள்ளுங்கள் :

சகோ. கோவை தங்கப்பா (எ) முகம்மது சபேர்

தொலைபேசி : 0091-9443654473 / 0091-9944415560

Web : www.ctmcoimbatore.com

இஸ்லாம், காரைக்குடி,islam,muslim