Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Monday, August 17, 2009

வக்பு வாரியத்தில் நடந்த ஊழல்: அப்துல் ரகுமான் புகார்


ஈரோடு: வக்பு வாரியத்தில் ஊழல் நடந்துள்ளதாக, அதன் தலைவர் அப்துல் ரகுமான் கூறினார். ஈரோடு வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. அதில் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


தற்போது கையில் இருக்கும் நிலம் குறைவு தான்; இதிலும், பெரும் பகுதி, நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் நிலம், சமுதாயக் கல்வி மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். முஸ்லிம் சமுதாய மக்களில் சிலர், தலித்தை விட கல்வியில் கீழே உள்ளனர். கல்லாமை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். மீட்கும் நிலத்தில், பள்ளி, கல்லூரி மாணவியருக்கான விடுதி, தொழிற்பயிற்சி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இலவச மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பு போன்றவை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.


மத்திய, மாநில அரசுகள், வக்பு வாரியத்திற்கு நிதியுதவி வழங்குகின்றன. முதல் வகுப்பு முதல், கல்லூரி வரை சிறுபான்மை கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வக்பு வாரியத்தில் அதிக ஊழல் நடந்துள்ளது. அதனால் வர வேண்டிய வருவாய் வரவில்லை. இப்பிரச்னைகளைத் தீர்த்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உள்ளேன். அதற்காக விடுமுறை நாட்களில் கூட தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். பல ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 25 கிரவுன்ட் நிலத்தை ஆக்கிரமித்திருந்த அருணா கார்டன் இடம் மீட்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு வக்பு வாரியத்துக்கு ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் வழங்குகிறது. சென்றாண்டு பள்ளிவாசல், தர்காக்கள் மூலம் 2.31 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இது சம்பளத்துக்கே சரியாகி விடுகிறது. ஆக்கிரமிப்பாளரிடமே வாடகை வசூலித்து நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளோம். ஸ்பான்சர்கள் நிதி வழங்க முன் வருகின்றனர். மாநில அரசு, ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். வக்பு வாரியத்தில் நடந்த ஊழலுக்கு ஆதாரம் இல்லை. அதற்கான ஆதாரம் தேடுகிறேன். கிடைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அப்துல் கூறினார்.
நன்றி : தினமலர்

Sunday, March 01, 2009

கீழக்கரை நகராட்சியை சீர்படுத்துவோம் வாரீர்!!

கீழக்கரை நகராட்சியை சீர்படுத்துவோம்
வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

தொன்மையும் வரலாற்று சிறப்பும் மிக்க சமூக நல்லினக்கமும் மனித நேயமும் உயிர் மெய் எழுத்தாய் உறவு பாராட்டும் கீர்த்திமிகு கீழக்கரை. நகராட்சியாக உயர்வு பெற்று அரசு நிதிநிலையில் தன்னிறைவு பெற்று விளங்குகின்றது. தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள முதல் மூன்றாம் நிலை நகராட்சி என்ற பெருமைக்குறியது. இன்று லஞ்ச லாவன்ய நிர்வாக சீர்கேட்டால் சீரழிந்து நிற்கிறது. சாக்கடை நிரம்பி தெருக்களின் வழியாக ஓடுகிறது.குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை. தர்நாற்றம் மூக்கை துளைக்கிறது. கொசுத்தொல்லை ஊரையே சிக்கித் தினற வைத்தள்ளது. வீட்டிற்கு ஐந்து பேர் வீதம் மலேரியாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை செய்ய பணம் இன்றி கஷ்ட்டப்படுகின்றார்கள்.

சென்னை, திருச்சி போன்ற பிற நகரங்களில் தொழில் செய்வோர் ஊர் சென்றால் நோய் தொற்றி விடுமோ என்று அஞ்சுகின்றனர்.ஆளும் கட்சியின் அடிவருடிகள் நகராட்சியில் ஆதிக்கம் பெற்றதால் மக்கள் வரிப்பணம் விழுங்கப்படுகின்றது. பொதுமக்கள் செய்வது அறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர். ஓரு நாள் கூட நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடித்ததில்லை. மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய இயந்திரமோ மூலையில் முடங்கி கிடக்கிறது.

கீழக்கரை வெல்ஃபேர் சங்கம் ஊர் நலன் கருதி E.T.A குழுமத்தின் சார்பாக மனித நேய புரவலர்கள் அல்ஹாஜ். B.S. அப்துர்ரஹ்மான், அல்ஹாஜ். சலாஹீத்தீன் M.D., அவர்களால் பல்வேறு உபகரனங்கள் வழங்கப்பட்டு நகராட்சி வேலைப்பழுவில் பாதியை பகிர்ந்து கொண்டிருக்கிறது. பேரூராட்சி நகராட்சியாக உயர்வு பெற்று வரிகளை உயர்த்திய பிறகு பொது சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. துப்புரவு பணியாளர்கள் எந்த வார்டு பக்கம் என்ன வேலை செய்கிறார்கள் என்பதைகூட மேற்பார்வை செய்வதில்லை. லஞ்சம் வாங்க மட்டுமே கவுன்சிலர்கள் தேர்ந்டுக்கப்பட்டதாக நினைக்கின்றனர்.

தமிழகத்தில் எல்லா நகராட்சிகளிலும் குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. இன்று வரை கீழக்கரை நகராட்சி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கியதில்லை. தெருக்களில் பிளீச்சிங் பவுடர் தூவப்படுவதில்லை. கேட்டால் முறையான பதில் இல்லை. தரம் பிரித்து லஞ்சம் வாங்குவதில் நகராடசி நிர்வாகம் தீவிரமாக இருக்கிறது. மக்கள் ஓட்டை வாங்கிச் சென்றவர்கள் மன்றத்தில் வாய்பொத்தி மெளனமாக இருக்கிறார்கள். காரணம், ஊழலிலும் லஞ்சத்திலும் சரிபங்கு பெறுகின்றனர். இந்த இழிநிலைக்கு முடிவு கட்டி நிர்வாக சீர்கெட்ட நகராட்சியை சீர்படுத்திட லஞ்சம் வாங்கும் மக்கள் விரோதிகளை கையும் களவுமாக பிடித்து முகத்திரை கிழித்திட இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பாக உறுதி மொழி ஏற்போம். லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள்.

கீழக்கரை மக்கள் நலம் பெற்றிட இடம் தந்து நகராட்சி கட்டிடத்தை கட்டித் தந்த பெருந்தகை டாக்டர். அல்ஹாஜ். ஹமீது அப்துல் காதர் அவர்கள் எண்ணம் ஈடேற பொறுப்பற்ற நகராட்சி புல்லுருவிகளை வீட்டிற்கு அனுப்பிட மக்களே நகராட்சி! நகராட்சியே மக்கள்!! என மக்கள் ஆட்சித் தத்துவத்தை கீழக்கரையில் நிலைநாட்டிட எந்த நேரமும் ஊர் நலம் பற்றிய தகவல் அறியும் உரிமைச்சட்டம் பெற்றிட தயாராவீர். கீழக்கரை நகராட்சி தமிழகத்திற்கே வழிகாட்ட முடிவு எடுப்பீர். இந்த இழி நிலை மாற்றிட எதிர்காலத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சிக்கே (IDMK) வாக்களிப்பீர்!!

நன்மையை ஏவுவோம், தீமையை தடுப்போம். ஊராடசி சீராட்சி காண, அநீதியை சகிப்பதில்லை, ஆர்த்து எழுவோம்.


இவன்
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தொலைபேசி : 9942065575, 9944362379, 9629471303

www.idmk.org

Wednesday, May 14, 2008

வல்லத்தில் கட்டப்பட்ட "காபா" வும் முதல் பொருளாதார குற்றச்சாட்டும்

வல்லத்தில் பி.ஜே கட்டிய "காபா"


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தவ்ஹீத் எழுச்சி மாநாடு என்ற பெயரில் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் நடத்தப்பட்ட "தவ்ஹீத் திருவிழா" செய்திகளையும் அதில் கூடிய "10 லட்சம்" பேரையும் இன்னும் "100 ஏக்கர் பந்தல்" போடப்பட்டதையும் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டோம். மக்கள் வாசித்திருப்பீர்கள்.
எப்போதும் போல தற்போது இந்த கூட்டத்தின் மேல் மாநாட்டுக்காக "100 ஏக்கரில் பந்தல்" போடனும் தங்கும் வசதி, "10 லட்சம்" பேருக்கு வசதிகள் என கதையளக்கப்பட்டு கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என முதல் பொருளாதார குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. இதை சில சகோதரர்கள் எமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்கள் அதை மக்கள் பார்ரவைக்காக தருகின்றோம். (இது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது எமக்கு)
மாநாட்டில் தவ்ஹீத் எழுச்சி என்ற பெயரில் நடந்த அத்தனை அநாச்சாரங்களும் வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்சா அல்லாஹ் இறைவன் நாடினால் கூடிய விரைவில் இம்மாநாட்டில் உண்மையில் நடந்த "தவஹீத் எழுச்சி" ஆதாரங்களுடன் காட்டப்படும்.
ஆம்!! குதிரையில் தவ்ஹீத் எழுச்சி வீர வீராங்கனைகளின் சூத்தை பிடித்து ஏற்றியதில் இருந்து ஆனும் பென்னும் கலந்து கடலை போட்டது வரை இன்னும் மாநாட்டு பந்தலின் பின்புறம் நடந்த தவ்ஹீத் எழுச்சியால் தீவைத்து கொழுத்தப்பட்டது வரை அனைத்து புகைப்படங்களும் வெளியிடப்படும் காத்திருங்கள். முதலில் எழுச்சி பெற்றவர்கள் தங்கள் பகுதியை முடிக்கட்டும் "எழுச்சியின் மறுபகுதி" நம்மாள் வெளியிடப்படும்.
யார் மேல் உள்ள காழப்புணர்ச்சியானலுமத் இது வெளியிடப்படவில்லை, நடந்த சம்பவங்களின் முழு பரிமானத்தை மக்கள் தெறிய வேண்டும் என்பதற்காக மட்டும் வெளியிடப்படுகின்றது. பி.ஜே மற்றும் பாக்கர் கும்பல் மாநாட்டு மேடையில் குற்றம் சாட்டியது போன்று முக்கியமாக இந்த தளம் தமுமுக வால் நடத்தப்படவில்லை இன்னும் எமக்கும் எந்த அமைப்புகளுக்கும் தொடர்பும் இல்லை.
*****************************************************
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும்....

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு .....

நான் கடையநல்லூரைச் சார்ந்தவன் . தெஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்.
தாங்கள் மாநாடு பற்றி தங்கள் இணையதளத்தில் வெளியிட்ட சில தகவல்களை கண்டேன்.

குறைகளை மட்டும் சுட்டிக்காட்டிய தாங்கள் ... நிறைகளையும் காட்டியிருக்கலாம் ....

நீங்கள் கூறிய தவறுகள் உண்மையானால் கண்டிக்கக் கூடியவையே...

மேலும் எங்கள் ஊரில் நாங்கள் மாநாட்டுக்காக வசூல் செய்த தொகை சுமார் 3 லட்சம் ரூபாய் (உள்ளுர் வசூல் மட்டும்)

எங்கள் அமைப்பின் கடையநல்லூர் கிளை மூலம் தனியாக ரசீது புக் தயார் செய்து சுமார் 13 லட்சம் ரூபாய் வரை வெளி நாட்டிலிருந்து வசூல் வந்தது . இப்பணம் எங்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் ஸைபுல்லா காஜா ஹஸரத் அவர்களுக்கு உண்டியல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இதை அறிந்த என் போன்ற மூன்று சகோதரர்கள் அவர்களிடம் தலைமைக்கு இந்தப்பணத்தை அனுப்பிவிட்டீர்களா எனக்கேட்டால் இந்தப்பணம் தனியாக மஸ்ஜிதுல் முபாரக் கோர்ட் செலவுக்காக வைக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே நிpர்வாகக் குழு கூட்டத்தில் கூறியபடி இதுவரை மஸ்ஜிதுல் முபாரக் பள்ளி செலவுக்காக செலவுசெய்த 26 லட்சத்தில் 6 லட்சம் கடன் உள்ளது எனவும் .

மாநாட்டு பந்தலின் முழு தோற்றம்

(இது மாநாடு முடிந்தபின் எடுக்கப்பட்டதல்ல இரன்டாம் நாள் பகலில் எடுக்கப்பட்டது. முதல் நாள் மாலை 3.00 மணிக்கு மேல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதாவது மறைக்கப்பட்ட மறுபகுதி இனிமேல் வெளியிடப்படும்)


இதில் பேட்டையை சார்ந்த பாவா அவர்களுக்கு 4 லட்சம் கொடுத்கஉள்ளதாகவும் கூறினார்கள். மாநாட்டிற்காக மட்டும் நம் கடையநல்லூர் சகோதரர்கள் வசூல் செய்து அனுப்பிய பணத்தை இப்படி செய்யாமலிருக்கலாமே என நாசூக்காக கூறியும் ஹஸரத் அவர்கள் தட்டிக்கழித்துவிட்டு 3 நாட்களுக்கு முன்னமே மாநாட்டிற்கு சென்று விட்;டார்கள். மாநாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து வந்த ரியாத் சகோதரர் ரியாத்திலும், தம்மாமிலும் , வசூல் செய்த ரசீது புக்கின் அடிக்கட்டையை எங்களிடம் ஒப்படைத்து விட்டார். ஹஸரத் அவர்களிடம் மாநாட்டில் வைத்து கொடுத்துவிடலாம் என நினைத்து வந்தால் மாநாட்டில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மாநில நிர்வாகிகள் யாரையும் சந்திக்க முடியவில்லை. முதல்நாளே நாங்கள் பெறும் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினோம்.

மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட அரசு பேருந்துக்காக முன்பணமாக சுமார் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்பட்டது . ஆனால் மாநாட்டுக்காக புறப்படும் நேரத்தில் பஸ்கள் எதுவுமே வரவில்லை. வாகனங்களுக்காக டிக்கட் வாங்கிய நம் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த பணம் 150000 ஆயிரம் மீதி கையிருப்பு உள்ளது.


வஸ்ஸலாம்.

கலந்தர் மைதின்

மஜீத்

ரபீக்

From: EXSI XC <misiexsi@yahoo.co.in>Date: May 13, 2008 2:20 PMSubject: Re: salamTo: MohamedFazlul Ilahi <fazlulilahi@gmail.com>

தகவல் நன்றி : திரு.பஸ்லுல் இலாஹி அவர்கள்