Wednesday, May 08, 2013

டாக்குமென்ட்ரி படம் - 1 லட்சம் பரிசு வென்ற முஸ்லிம் மாணவன்

டாக்குமென்ட்ரி படம் - 1 லட்சம் பரிசு வென்ற முஸ்லிம் மாணவன்




மாணவன் ஃபியாசுர்ரஹ்மான்
 
சென்னையில் விஷீவல் கம்யுனிகேசன் படித்து வரும் காயல்பட்டினத்தை சேர்ந்த மாணவன் ஃபியாசுர்ரஹ்மான் சுதேசி பொருட்களையே வாங்க வேண்டும் என்பது குறித்து தயாரித்துள்ள "பொருள்" என்ற குறும்படத்தை பார்வையிட்டு பாராட்டிய தமிழநாடு வணிகர் சங்கத்தினர் மாணவன் ஃபியாசுர்ரஹ்மானை கொளரவிக்கும் வகையில் அவருக்கு வணிகர் சங்க மாநாட்டில ரூ. 1 லட்சம் பரிசும் பாராட்டு கேடயமும் வழங்கி பாராட்டியுள்ளனர்.




தினத்தந்தி பத்திரிக்கை 07.05.2013

இந்த படத்தை தயாரிப்பதற்கு முன் பல்வேறு பட்ட வர்த்தகர்களையும், வர்த்தக நிறுவனங்களையும் ஆய்வு செய்தததையும், சோடர் கம்பெனி நடத்தும் தனது நன்பன் ஒருவரின் தந்தை கூறுகையில் , சுதேசி தயாரிப்பாக ஒரு சோடா தயாரிப்பதற்கு மிக குறைந்த செலவே ஆவதாகவும் அதனால் தான் தனது தயாரிப்புக்கு குறைந்தே விலையே நிர்னயம் செய்துள்ளதாகவும் ஆனாலம் மக்கள் பன்னாட்டு தயாரிப்புக்களையே வாங்குவதாக குறிப்பிட்டதும். பன்னாட்டு தயாரிப்புக்களை மக்கள் வாங்குவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நலிவடைவதையும் உணர்ந்த மாணவன் ஃபியாசுர்ரஹ்மான் இதனை மக்களுக்கு உணர்த்தவே தான் இதுபோன்ற ஒரு குறும்படம் தயாரிக்குமு் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியடைந்துள்ளதாக தெறிவிக்கிறார்.

டெக்கான் குரோனிக்கில் 06.05.2013
 
 இப்படத்திற்கு தனது தந்தையும் தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்க தலைவருமான காயல் இளவரசு அவர்கள் அளித்த ஊக்கமே முக்கிய காரனமாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

No comments: