TNTJ சகோதரர்களுக்கு வேண்டுகோள்
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,
கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணன் பி.ஜே அவர்கள் உடல்நலம் பற்றிய தகவல் ஃபேஸ்புக்கி்ல் பார்த்தேன். 1989 ம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டு வரை அண்ணனை விட்டு பிரிந்து இருக்கிறேன். சேர்ந்து இருந்த காலத்திலும் பிரிந்து இருந்த காலத்திலம் நான் பி.ஜே ப்ற்றியும் பி.ஜே சார்ந்துள்ள இயக்கங்கள் பற்றியும் அவதுர்று பேசியதில்லை. பி.ஜே யும் நானும் ஒரே மேடையில் பல கூட்டங்களில் பேசியிருக்கிறோம் ஆனால் பி.ஜே அவர்களின் உடல் நலம் பற்றிய அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வார்த்தைகள் தவறானது என்பதை ஃபேஸ்புககில் சுட்டிக்காட்டி இருந்தேன். உடல் நிலை சரியில்லை என்று சொன்னால் மருத்துவம் பார்க்க வேண்டும், அதை விட்டு விட்டு எனக்கு உதவி செய்ய யாரும் வராதீர்கள் என்று பி.ஜே கூப்பாடு போடுகிறார்.
நான் கேட்கிறேன் பி.ஜேக்கு உதவி செய்ய கியு வரிசையில் மக்கள் காத்து நிற்கிறார்களா? அல்லது பி.ஜே தனக்கு உதவி செய்யும் படி மறைமுகமாக உதவி கேட்கும் வார்த்தைகளா? அடுத்து பி.ஜே சொல்கிறார் : "நான் மருத்துவமனையில் சேர்ந்த உடன் உளவுத்துறைக்கு உடனே தெறிந்துவிடும்" என்று , திருவாளர் பி.ஜே மருத்துவமனையில் சேர்வதற்கும் உளவுத்துறைக்கும் என்ன சம்பந்தம்? அப்படியானால் திருவாளர் பி.ஜே உளவாளியா? காட்டிக்கொடுப்பவரா? அடுத்து பி.ஜே சொல்கிறார் : "எதிரி அமைப்புகளுக்கு உடனே தெறிந்துவிடும்" எதிரி அமைப்புகள் என்றால் யார்? சகோதர அமைப்புகளை மார்க்கம் அறிந்த பி.ஜே அவர்களே எதிரி அமைப்பு என்று சொல்லலாமா? தன்னையும் தனது TNTJ அமைப்பை பின்பற்றுபவர்களையும் தவிர மற்றவர்கள் எல்லாம் நேர்வழி பெறாதவர்கள் என்று ஃபத்வா கொடுத்த பி.ஜேக்கு வேண்டுமானால் அது சகஜமாக இருக்கலாம்.
நான் அனுப்பிய செய்தியை ஃபேஸ்புக்கில் படித்தவர்கள் TNTJ இய்கத்தை சேர்ந்தவர்கள், பி.ஜே மீது பக்தி கொண்டவர்கள், நான் அனுப்பிய கடிதத்தின் சாராம்சத்தை சரியாக புறியாதவர்கள் என்னிடத்தில் நேரடியாக விளக்கம் கேட்பதை விட்டுவிட்டு சகோதர அமைப்பான INTJ யின் எஸ்.எம் பாக்கர் அவர்களையும் இணையதள எழுத்தாளர் முகவைத்தமிழன் (எ) ரைசுதீனை பற்றியும் உண்மைக்கு மாறான புணையப்பட்ட பத்திரிகை தகவல்களை அடிப்படையாக கொண்ட அவதூறான செய்திகளை பரப்பியதோடு எனக்கும் அனுப்பியுள்ளார்கள். எந்த ஒரு சகோதர இயக்கங்களை சேர்ந்தவர்களையும், தனது அமைப்பில் உள்ள தனக்கு அடுத்த கட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தன்னை முந்த முயன்றால் அவர்கள் மீதும் பொறாமை கொண்டு அவதுர்று பேசுவதும் , பொய்யான குற்றம் சுமத்துவதும் தீர விசாரிக்காமல் தவறான செய்திகளை பரப்புவதும் பி.ஜே அவர்களின் தனிப்பன்பு இதையே அவர் தனது பக்தர்களுக்கும் கற்றுக்கொடுத்துள்ளாரா?
காவல்துறையால் போடப்படும் வழக்குகள் அணைத்தும் உண்மையானது அல்ல!;! பெரும்பாலும் பழிவாங்கும் நோக்கில் பொய்யான வழக்குகளையே பிரபலமானவர்கள் மீது காவல்துறை பதிவு செய்கிறது. இன்னும் தமிழகத்தில் காவல்துறையால் போடப்படும் வழக்குகளில் 95 சதவீதம் பொய் வழக்குகள் என்று பிற்பாடு நீதிமன்றத்தில் நிறுபிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் நசிரபராதிகளாக விடுதலை செய்யப்படுவது நமது கண்கூட காணும் நிகழ்ச்சிகள் . காவல்துறை போடும் வழக்குகள் எல்லாம் உண்மையானால் பி.ஜே அவர்கள் மேல் தொண்டி காவல்நிலையத்தில் போடப்பட்ட வழக்குகள் உண்மையா? மலேசியாவில் போதைப்பொருள் கடத்தியதாக பி.ஜே மீது போடப்பட்ட வழக்கு உண்மையா? இதைக்கூட TNTJ அமைப்பினர் உணர வேண்டாமா?
தவ்ஹீது பிரச்சாரத்தை மேற்கொள்ள கூடிய பி.ஜேயும் அவருடைய பக்தர்களும் இஸ்லாமிய அமைப்புகளை பற்றி தவறாக பேசுவது ஏன்? தேர்தல் காலங்களில் ஏதாவது ஒரு கட்சியை தாங்கி பிடித்து கொண்டு பி,ஜேயும் அவரது பக்தர்களும் பிரச்சாரம் செய்வது சரியா? அரசியலே வேண்டாம் , அரசியலில் சீட்டு கேட்க மாட்டோம் , தவ்ஹீது மட்டுமே எங்களது கொள்கை என்று முழங்கும் நீங்கள் தேர்தல் காலங்களில் பி.ஜே ஆதரிக்கும் வேட்பாளர் குடிகாரன், விபச்சாரன், திருடன், லஞ்சம் வாங்குபவன் என் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரித்தம் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்வதுதான் அண்ணனின் தவ்ஹீதா? பி.ஜே அவர்கள் தான் ஆதரிக்கும் வேட்பாளரின் கையை பிடித்து "இவருக்கு நீங்கள் வாக்களிப்பீரா?" என கூவினால் உடனே பக்தர்கள் "அல்லாஹீ அக்பர்" என்று பதிலுக்கு கூவுகிறார்கள்.....நேர்மையற்றவர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்கும் "அல்லாஹீ அக்பர்" என் கூவுவதற்கும் என்ன சம்பந்தம்'? இனிமேல் தவ்ஹீது பிரச்சாரம் செய்யக்கூடிய TNTJ அமைப்பினர் உலக லாபம் தேடாமல் மறுமைக்காக உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
அண்ணனின் பக்தனல்ல அல்லாஹ்வின் விசுவாசி
அப்துல் ரசாக் - சேர்மன் , பி.வி.எம் அறக்கட்டளை
தொலைபேசி : 9443465765 - 9842423752
1 comment:
ஒருவர் எனக்கு உடம்பு சரி இல்லை எனக்காக துவா செய்யுங்கள் என்று கடிதம் எழுதுகிறார் அதற்க்கு உங்களால் முடிந்தால் துவா செய்யுங்கள் இல்லையென்றால் வாயை பொத்திக்கொண்டு போய்விடுங்கள், தேவை இல்லாமல் நீங்கள் செய்யும் கொஞ்ச நஞ்ச அமல்களையும் பாலாக்கி விடாதீர்கள் உங்களுடைய இந்த கடத்தியில் உள்ள அபத்தங்களை பார்த்தல் எனக்கு சிரிப்பு தான் வருகிறது
Post a Comment