Tuesday, September 11, 2012

பரமக்குடி படுகொலை: தொடரும் போராட்டம்

பரமக்குடி படுகொலை: தொடரும் போராட்டம்
 

 
2011 செப்டம்பர் 11 அன்று சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரன் குரு பூஜைக்கு வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு உயிர்களை பலி கொண்ட பிறகு பரமக்குடி நகர் காவல் நிலையத்தின் குற்ற எண்.300/2011ன் படியான முதல் தகவல் அறிக்கை இவ்வாறு கூறுகிறது. சுமார் 1000 பேர் ஐந்து முக்கு ரோட்டில் மறியல் செய்தனர். ஆய்வாளர் சிவக்குமார் புகாரின் முதல் வரியே முழு பொய் என்பதற்க
ு (50க்கும் குறைவானவர்களே மறியலில் ஈடுபட்டனர்) மீண்டும் மீண்டும் ஒளிபரப்பான வீடியோ காட்சிகளே சாட்சி. பல்வேறு கோணங்களில் இருந்து எடுக்கப்பட்ட எந்த வீடியோ காட்சி யைப் பார்த்தாலும் வாக்குவாதத்தில் ஈடுபடும் போதே லத்தி சார்ஜ் செய்வதையும், கலைந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் கூடி நின்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதையும் பார்க்க முடிகிறது. நாங்கள் லத்தி சார்ஜ் செய்த பிறகு ஊரை காலி செய்யாமல் மீண்டும் கூடி நிற்பதா ? என்கிற போலி(ஸ்) கௌரவத்திற்கு ஆறு உயிர்கள் அநியாயமாய் பறிபோனது. இல்லை என்றவுடன் திரும்பிவிட அவர்கள் திரைப்படத்திற்கு வந்தவர்கள் அல்ல. இரண்டு மூன்று மாத கால தயாரிப்பு, இந்த நாளுக்கான காத்திருப்பு.

ஐம்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் னால் 1957ல் இமானுவேல் சேகரன் எந்த காரணத்திற்காக கொல்லப்பட்டாரோ, அதே காரணங்கள் இன்றும் தனது வாழ்வை இடைமறிப்பதற்கு எதிரான எழுச்சியின் அடையாளம் தான் இந்த ஆர்ப்பரிப்பு. தங்கள் மீது வலிந்து திணிக்கப்படும் சாதிய பாரபட்சங்களுக்கு எதிர்ப்பு என்பது நிச்சய மாக யாருக்கும் எதிரானது அல்ல, மாறாக அது ஜனநாயகத்தின் குரல். யார் இந்த இமானுவேல் சேகரன். சுபாஷ் சந்திர போஸால் ஈர்க்கப்பட்டு, அவரது படை யில் இணைவதற்கு சென்ற நேரத்தில் சுபாஷ் சந்திர போஸின் மரணச் செய்தியே கிடைத்து அந்த வாய்ப்பினை இழக்கிறார். காங்கிரஸ்காரரான தனது தந்தையுடன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். பின்னர் இந்திய இராணுவத்தில் பணியாற்றுகிறார். விடுமுறைக்கு வருகிற போதெல்லாம் கிழக்கு முகவை மாவட்டத்தின் தலித் மக்கள் மீதான தீண்டாமை கொடுமைகளுக்கு எதி ராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற் கொள்கிறார். 1952ல் இராணுவப்பணியைத் உதறித் தள்ளிவிட்டு, முழுநேர சமூக சீர் திருத்தப் பணிகளில் ஈடுபடுகிறார்.

கிராமம் கிராமமாக சுற்றித் திரிந்து ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாக்குகிறார். பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் மாமுல் கொள்ளைகளை மக்களைத் திரட்டி தடுக்கிறார். வணிகர்களின் ஆதரவைப் பெறு கிறார். ஒரு சாதியை மட்டுமல்ல, ஒடுக்கப்படு கிற பல்வேறு சாதிகளைக் கொண்ட அணியை அமைக்கிறார். 14.4.1953 சித்திரை முதல் நாளில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டை இராமநாதபுரத்தில் நடத்துகிறார். கிராமத் திருவிழாக்களின் வேலைப் பிரிவினைப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் பணியாக இருந்த கட் டாய உழைப்பு, ஊர் சுத்தம் செய்தல் ஆகிய வற்றில் சமத்துவம் வேண்டும் என்று கோரு கிறார். 26.5.1954ல் இரட்டைக் குவளை எதிப்பு மாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்து கிறார். பேரையூர் பெருமாள் பீட்டருடன் இணைந்து தலித் மக்களின் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உதவி செய்கிறார். தன் வாழ்நாளில் ஒரு போதும் சாதி துவேசத்தை இமானுவேல் சேகரன் முன் வைக்கவில்லை. 10.9.1957ல் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வலியுறுத்தி பேசுகிறார். மறு நாள் 11.9.1957 அன்று எமநேசபுரம் பள்ளியில் பாரதி விழாவில்

‘காக்கை குருவி எங்கள் ஜாதி

நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’

என்று மகாகவி பாரதியின் பாடலை மேற் கோளாக்கி பேசியதே அவரது இறுதிப் பேச் சாகி போகிறது. விழா முடிந்து வருகிறபோது கொலை செய்யப்படுகிறார். சமநீதி கேட்ட தற்காக கொல்லப்பட்டவர் இமானுவேல் சேகரன்.

தென் மாவட்டம் முழுவதும் இன்றும் ஒரு கள ஆய்வை மேற்கொண்டால், தலித் மக்கள் மீதான சாதிய பாரபட்சங்கள் வெளிச்சத்திற்கு வரும். கிராமத்தில் தங்களை இழிவுபடுத்துகிற அல்லது புறக்கணிக்கிற அநாகரிகங்களுக்கு எதிர் வினையாகவே பால்குடம், முளைப்பாரி எடுத்து அலகுகுத்தி தலித் மக்கள் பரமக் குடிக்கு புறப்படுகிறார்கள். ஆனால் அரசும், காவல்துறையும் ஏதோ சமூக விரோதிகள் கூடுகிறார்கள் என்றே கருதுகிறது. எரிச்சல் அடைகிறது. ஆகவே தான் எந்த முகாந்திர மும் இன்றி உயிர் குடித்தார்கள். துப்பாக்கிச் சூடு முடிந்த பிறகும் மாலை 5 மணிவரை சிக்கியவர்களையெல்லாம் வெறி கொண்டு தாக்கினார்கள். நிலைகுலைந்து கதவிடுக்கி லும், சந்து பொந்துகளிலும் பதுங்கியிருந்தவர் களை பிடித்து கை, கால்களை உடைத் தெறிந்தார்கள். பரமக்குடியில் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இளையான்குடி புறவழிச் சாலையில் 27 பேர் மறியல் செய்தனர். கட்டுப் படுத்தவே முடியாத அந்த பெருங்கூட்டத்தின் (!!!) மீது டிஎஸ்பி இளங்கோவன் எந்த அறி விப்பும் இன்றி துப்பாக்கியால் சுடுகிறார். +2 படிக்கும் மாணவன் ஆனந்த் படுகாயம டைந்து சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைக் கிறார். இதே நேரத்தில் மதுரை சிந்தாமணி அரு கில் பாட்டம் கிராமத்தில் இருந்து வந்தவர் களுக்கும் எஸ்ஐ சண்முகநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அவனியாபுரம் காவல் ஆய்வாளர் கஜேந்திரனுக்கு தகவல் போகிறது. அவர் வருகிறார். வரும் போதே ஜீப்பின் கதவை திறந்து வைத்துக் கொண்டு, கையில் துப்பாக்கியுடன் வருகிறார். இறங் கியவுடன் துப்பாக்கியை நீட்டுகிறார். பயந்து ஓடிய 19 வயது ஜெயப்பிரகாசின் முதுகில் சுடுகிறார். புல்லட் முதுகில் பாய்ந்து விலா பகுதி வழியாக வெளியேறுகிறது. சுருண்டு விழுந்தவரின் பிறப்புறுப்பில் ஏறி மிதிக்கிறார் கஜேந்திரன். மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு உயிர் பிழைத்தாலும், நெடுநாள் வரை சிறுநீர் டியூப் வழியாகவே வெளியேற்றப்பட் டது. மஞ்சூர் ஜெயபால் மார்பிலும், பல்லவரா யனேந்தல் கணேசன் மார்பிலும், வீரம்பல் பன்னீர் நெற்றியிலும், சடையனேரி முத்துக் குமார் வயிற்றிலும் சுடப்பட்டு கொல்லப் பட்டனர். கொடும்பலூர் தீர்ப்புக்கனி , காக்க னேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோர் அடித்தே கொல்லப்பட்டனர். உயிர் குடிப்பதே இலக்காகிய பிறகு முழங்காலுக்கு கீழே ஏன் சுட வேண்டும் !

6 பேர் படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்துவதற்காக புனையப்பட்ட பொய் வழக்கையே ஆயுதமாக்கி கிராமங் களில் தேடுதல் வேட்டையை காவல்துறை அரங்கேற்றியது. இரவு நேரங்களில் வீடு புகுந்து ‘உன் புருசனை காட்டுக்குள்ள அனுப்பிவிட்டு எவனோடு குடும்பம் நடத்து கிறாய்’ என்ற அளவிற்கு பெண்களை இழி வாய் பேசியது. காவல்துறைக்கு பயந்து வயல் களில் பதுங்கிய ஒருவர் பாம்பு கடித்து மரணமடைகிறார். பரமக்குடி துப்பாக்கிச் சூட் டிற்கு விளக்கமளித்தவர்கள் கையில் இளை யான்குடி, சிந்தாமணி துப்பாக்கிச்சூடுக ளுக்கு விளக்கம் ஏதுமில்லை. துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் படங்களுடன் போஸ்டரோ, பேனரோ கூடாது என காவல் துறை இப்போது உத்தரவிட்டுள்ளது. விபரீ தம் ஏதும் நிகழ்ந்தால் வாகன உரிமையாளரே பொறுப்பு, வாகனத்தில் வருபவர்கள் அத் தனை பேரும் பெயர் பட்டியல் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என்கிற காவல் துறையின் கட்டுப்பாடுகளைத் தாண்டி கடந்த ஆண்டின் எழுச்சியுடன் கூட்டம் திர ளுமா ? எனவே இமானுவேல் சேகரனின் விழாவை சீர்குலைப்பதே நோக்கம் என்கிற தலித் மக்களின் குற்றச்சாட்டை புறக்கணிப் பதற்கில்லை. தமிழகத்தில் 2010 ஜனவரி முதல் 2011 செப்டம்பர் வரை சாதி தொடர்பான மோதல்களில் மட்டும் துப்பாக்கிச் சூட்டில் பலி யானவர்கள் எட்டு பேர். அனைவரும் தலித்து களே. கடந்த 12 ஆண்டுகளில் தமிழக காவல் துறை நடத்திய படுகொலைகளில் மிகப் பெரியது இரண்டு. ஒன்று 1999 ஜுலை 21ல் 17 பேரை பலிகொண்ட தாமிரபரணி படு கொலை. மற்றொன்று 2011 செப்டம்பர் 11ல் 6 பேரை பலி கொண்ட பரமக்குடி படுகொலை.

ஆகவே அரசுக்கு வர்க்கச் சார்பு போலவே ஆதிக்க சாதி சார்பும் உள்ளது. பரமக்குடி படுகொலைக்கு காரணமானவர் கள் நீதியின் முன்னால் நிச்சயம் தண்டிக் கப்படுவார்கள். நடைபெற்ற கொடூரத்தை கண்டிப்பதோடு, நிறுத்திக் கொள்ளாமல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரு வதற்கு தலித் அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றம் சென்றனர். இந்த அணிவகுப்பில் இணைந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மூலமாக நீதிமன்ற படியேறியது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதற்காகவே தமி ழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்பு களோடு இணைந்து போராடி வருகிறது.

எல்லோரையும் சம குடிமக்களாக ஏற்றுக் கொள்ளும் சுயராஜியமும் வேண்டும். அதே நேரத்தில் அந்த சுயராஜியத்திற்குள் ஒடுக் கப்பட்ட மக்களுக்கு தனித்துவமான உரிமை களும் வேண்டும் என்பதே அம்பேத்கர் முன் வைத்த அரசியல். இந்த புரிதல் இடதுசாரி களைத் தவிர மற்ற கட்சிகளுக்கு இருப்ப தாகத் தெரியவில்லை.

மக்கள் திரளில் உட்பிரிவுகளின் பிரச் சனைகளை புறக்கணிக்காமல் சாதியத்தை யும், அதன் பெயரால் சொந்த மக்களின் ஒற்றுமைக்கு குழிபறிப்பதுமான கொடூரத்தை புரிந்து கொண்டு, சாதியின் பெயரால் பாதிக் கப்பட்டவர்களின் பக்கம் நின்று, அதன் கோரத்தை அனைத்துப் பகுதி உழைக்கும் மக் களிடமும் புரிதலை ஏற்படுத்தி அதை முற்றி லும் அழித்தொழிக்க வேண்டிய சமூகக் கட மையை நம்பிக்கையுடன் நிறைவேற்றுவோம்.

- கே.சாமுவேல்ராஜ்

No comments: