Tuesday, March 23, 2010

நற்செய்தியும் எச்சரிக்கையும் - அப்துர்ரஹ்மான் மண்பஈ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

நற்செய்தியும் எச்சரிக்கையும்


நற்செய்தி கூறி எச்சரிக்கை செய்து நல்வழிப்படுத்துவது நபியின் வழி, அந்த வழியில்,சமீபத்திய நிகழ்வுகளை வைத்து பிரபல பேச்சாளர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு இந்த நற்செய்தியையும் எச்சரிக்கையும் வழங்குகிறோம்.

ஒரு சில மாதங்களுக்கு முன் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லப்படுவோருடன் பீ.ஜைனுலாபிதீன் தனது குழுவினருடன் விவாதம் செய்தார்கள்.அதில் நாத்திகத்திற்க்கு எதிரான பல நல்ல கருத்துக்களை எடுத்து வைத்தார்கள் அதற்க்காக அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி கொடுக்கட்டும்!

நற்செய்தி :

அந்த விவாதத்தின் முதல் தலைப்பில் முதல் சுற்று பேச்சிலேயே ஜைனுலாபிதீன் தான் நாத்திகக் கொள்கைக்கு சென்று விட்டுமீண்டும் இஸ்லாத்திற்கு திரும்பியவர்தான் என்ற செய்தியை சொன்னார்கள்.

இது அவருக்கு அல்லாஹ் செய்துள்ள பேரருளாகும். இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ்விடம் நற்கூலி உண்டென்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியிருப்பது அவர்களுக்கும் சுபச் செய்திதான்.

அல்லாஹ்வையும் மறுமையையும் மறுத்து காஃபிராக தான் மாறி விட்டு மீண்டும் இஸ்லாத்திற்கு திரும்பியதாக அவரைப் போன்ற அந்தஸ்திலுள்ள யார் தான் ஒப்புக் கொள்வார் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அல்லாஹூதாஆலா அனைத்து முஸ்லீம்களுக்கும் முஸ்லிம்களாகவே மரணிக்க நல்லுதவி செய்வானாக!

எச்சரிக்கை

அவர் தன்னைப்பற்றி வெளியிட்ட செய்தியின் மூலம் அவருடைய பெரிய பலவீனம் வெளிபட்டுள்ளது. அதாவது அல்லாஹ்வைப்பற்றியும் அவனது மார்க்க விசயத்திலும் நிதான மின்றியும் அலட்சியத்தோடும் முடிவு சொல்கிற தன்மை. இந்த தன்மை இருந்ததால் தான் அவசரப்பட்டு சத்திய இஸ்லாத்தை விட்டு நாத்திகத்தைத் தேர்ந்தெடுத்த மாபெரும் தவறை செய்தார்.

அவர் அந்த தவறிலிருந்து விடுபட்டாலும் அந்த தவறுக்கு காரணமாக இருந்த தன்மையிலிருந்து விடுபடவில்லை.அது தான் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் மக்களுடன் அவர் செய்யும் சச்சரவுகளுக்குக் காரணம்

நிதானமில்லாமலும் அலட்சியத்தோடும் அல்லாஹ்வின் மார்க்கத்தை அணுகும் போக்கிலிருந்து முதலில் அவர் விடுபட வேண்டும்.

நன்றாக யோசித்து பார்ப்போம் முஸ்லிம்களிடத்திலே நிலவுகிற மூடப்பழக்கங்களினாலும் அவர்களிடத்திலே காணப்படும் கருத்து வேற்றுமைகளினாலும் எவ்வளவோ முஸ்லிம்கள் குழப்பத்திற்கு ஆளாகத்தான் செய்கிறார்கள்.அப்படி குழப்பத்திற்க்கு ஆளாகக் கூடியவர்கள் எவரும் நாத்திகக் கொள்கைக்கு ஓடி விடுவதில்லை. மார்க்கத்தை அலட்சியமாக பார்த்துக் கொண்டும் கடமையான வணக்கங்களைக்கூட நிறைவேற்றாமலும் இருக்கும் சிலர் வேண்டுமானால் அப்படி ஓடலாம்!

ஆக நிதானமின்மை,மார்க்கத்தை பேணுதல் இல்லாமல் அலட்சியமாக அணுகுவது ஆகிய தன்மைகளால் அவர் நாத்திக கொள்கைக்குச் சென்றார். பிறகு நாத்திகம் என்ற தவறை விட்டாரே தவிர அந்தத் தவறுக்கு அவரை கொண்டு சென்ற இந்த மோசமான தன்மைகளை விடவில்லை. அதனால் மார்க்கத்துக்குள் இருந்து கொண்டு குர்ஆன், ஹதீஸூக்கு எதிரான கொள்கைகளை புகுத்துகிற செயலில் ஈடுபடுகிறார்.அவர் நிதானமற்ற தன்மையாலும் மார்க்கத்தை அலட்சியமாக கருதும் தன்மையாலும் தவறான கொள்கையை புகுத்துபவர் என்பதற்க்கு அவரது எழுத்துக்களே ஆதாரமாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை மறுப்பதற்கு முக்கிய காரணமாக, குர்ஆனின், அல்லாஹ் உன்னை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான் எனும்(5:67)வசனத்துக்கு அந்த ஹதீஸ் முரண்படுவதாக எழுதியிருந்தார்(அவரது தாஜிமா குறிப்பு எண் 357முதல் பதிப்பு)

ஆனால் இப்போதைய புதிய (7வது8வது)பதிப்புகளில் இதை காணவில்லை. அதாவது இவர் கருத்துப்படி இந்த குர்ஆன் வசனத்துடன் மோதிக்கொண்டும் முரண்பட்டுக்கொண்டும் இருந்த அந்த ஹதீஸ் இப்போது முரண்படவில்லை,மோதவில்லை.

அப்படியானால் ஓரு ஹதீஸைப் பற்றி பேசுகிறோம் என்கிற பேணுதல் இல்லாமல் அவசரத்தோடும் அலட்சியத்தோடும் பெறுந்தவறு செய்திருக்கிறார்.

எப்படி சம்பந்தப்பட்ட சூனியம் பற்றிய ஹதீஸ் 5:67 வசனத்துக்கு முரண்பட வில்லை என்கிற உண்மையை தெரிந்து கொண்டாரோ அது போல் அவர் எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் மற்ற வசனங்களோடும் முரண்படவில்லை என்பது குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் முஸ்லிம்களின் நிலைப்பாடு.

நிதானத்தோடு வரட்டுப்பிடிவாதத்தை விட்டு நல்வழியை நாடினால் நல்லமுடிவு கிடைக்கும்.சூனியம் பற்றிய ஹதீஸில் எழுப்பப்படும் ஐயங்களுக்கு புகாரியின் மிகச்சிறந்த விளக்கவுரையாகிய ஃபத்ஹீல் பாரீ யில் தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த ஹதீஸை மறுப்பவர்கள் 'பித்அத்துக்காரர்கள்'(அதாவது மார்க்கத்தில் தவறான கொள்கையை புகுத்துவர்கள்) என்றும் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் அதில் சாடியிருக்கிறார்கள்.

சம்மந்தப்பட்டஹதீஸ் 5:67 வசனத்துடன் முரண்படவில்லை என்பதைத் தெரிந்தவுடன் வாபஸ் வாங்கிக் கொண்டேன். மற்ற வசனங்களுடன் முரண்படுவதால் தான் வாபஸ் வாங்கவில்லை என்று இவர் தரப்பில் கூறலாம். உண்மை என்னவென்றால் இலகுவாக எல்லோரும் இவரது வாதம் தவறு என்று கருதும் படியான வாதத்தை வாபஸ் வாங்கியிருக்கிறார். தன் வாதம் தவறு என்றாலும் எதையாவது சுற்றி வளைத்துப்பேசி தாக்கு பிடிக்க முடியுமென்றால் அதைவைத்து சமாளித்துக் கொண்டிருக்கிறார் அவ்வளவு தான்.

குர்ஆனுக்கு முரண்படுவதாக காரணம் கற்பித்து இவரால் மறுக்கப்படும் ஹதீஸ்களுக்கு தகுந்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுகொண்டுமிருக்கிறது.

அந்த விளக்கங்கள் எல்லாம் அவசரப்பட்டு நாத்திகத்திற்கு ஓடாத, குர்ஆன் ஹதீஸை இனிமையாகப் பேசும் வழிகெட்ட பேச்சாளர்களிடம் ஏமாறாத எல்லா முஸ்லீம்களுக்கும் திருப்தியளிக்கிறது.

ஆக இவர் நாத்திகம் என்ற அழிவிலிருந்து விடுபட்டாலும் அந்த அழிவுக்கு அவரை கொண்டு சென்ற தீய தன்மைகளிலிருந்து விடுபடவில்லை.

அதனாலேயே பல பெரிய தவறான கொள்ளைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாத்திகர்கள் எல்லாமதத்தவர்களோடு சேர்த்து முஸ்லீம்களையும் மடையர்களாகப் பார்ப்பது போல் இவரின் தவறான கருத்துக்களை எதிர்க்கும் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் முஸ்லீம்களையும் மடையர்களாகப் பார்க்கிறார்கள் இவரும் இவரது ஆதரவாளர்களும்.

அவர் வெளியிட்டுள்ள இவ்வாறான மகாதவறுகள்:-

ழூ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுவதாக காரணம் கற்பித்து மறுப்பது. அதற்கு முறையான பதில் அளிக்கும் முஸ்லீம்களை எள்ளி நகையாடுவதுடன் இதே காரணம் கற்பித்து மறுப்பதற்காக வேறு ஹதீஸ்களையும் தேடி எடுப்பது.
ழூ பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன் தங்களின் முகத்தை மறைப்பது கட்டாயம் என்று இல்லாவிட்டாலும் அப்படி மறைப்பதை நபி(ஸல்) அவர்கள் அங்கிகரித்ததும் நபியுடன் இருந்த ஸஹாபியப் பெண்கள் மறைத்ததும் மிக வலுவான ஆதாரங்களாக பதியப்பட்டிருக்கின்றன.

ஆனால் அப்படி மறைப்பது பிற்காலத்தில் ஏற்பட்ட பழக்கம் என்பது போலவும் மறைப்பதே தவறு என்றும் சித்தரிக்கிறார் அவர் இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் மனைவியர் உண்மையான வெட்கத்தினால் அன்னிய ஆடவருக்கு முன் முகத்தை மறைப்பதை தடுக்கிறார்கள்.

ழூ வருடா வருடம் ஜகாத் கொடுப்பதை பித்அத் என்று கூறி தடுப்பது.

இதுபோல பல ஆபத்தான தவறுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் அவர் நாத்திகத்துக்குச் செல்ல காரணமாக இருந்த தீயத் தன்மைகள் அவரிடம் இருந்து கொண்டிருப்பது தான் ஆகவே அந்த தன்மைகளையும் அவர் விட்டொழிக்க வேண்டும் இல்லாவிட்டால் இன்னும் பல வினோத வழிகேடுகளை அவிழ்த்து விடலாம். அதனால் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா முஸ்லீம்களையும் அவனது தண்டனையிலிருந்து காப்பானாக.

15 comments:

Anonymous said...

இன்று இவ்வளவு பேசும் நீங்கள் ஒரு காலத்தில் நம் சமுதாயம் கல்வியிலும் மார்கத்திலும் பின்தங்கியவர்களாக மார்கத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டவர்களாக, இணைவைத்து வாழ்ந்து கொண்டிருந்த நம் சமுதாயத்தை விழிப்புணர்வு அடையச் செய்ததில் அவருக்கு பெரும் பங்குண்டு. நீங்கள் அப்போது தூங்கி கொண்டிருந்தீர்களோ.

Anonymous said...

ஏன்டா வாங்கும் சம்பளத்திற்காக இப்படி உளறுகிறாய்... வேறு வேலை இருந்தால் பாரு.

Anonymous said...

assalamu alaikum,,,என்ன சொல்ல வருகீறீர்கள் ?புரியவில்லை ..
ஆனால் பீ ஜை என்பவருக்கு எதிராக எதோ எழுத நினைத்து என்னமொவோ !!!!!!ஐயகோ! எப்போதுதான் நிறுத்துவார்களோ இந்த சண்டையை !!!!!

Anonymous said...

என்ன சொல்ல வருகீறீர்கள் ?புரியவில்லை ..
ஆனால் பீ ஜை என்பவருக்கு எதிராக எதோ எழுத நினைத்து என்னமொவோ !!!!!!ஐயகோ! எப்போதுதான் நிறுத்துவார்களோ இந்த சண்டையை !!!!!

M.முஹம்மது பதுருதீன். said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

இது தாமதமாக விளங்கிய உண்மை. ஈ.வெ.ரா.பெரியார் எவ்வாறு இந்து மதத்தில் அறிவுக் கேள்விகள் கேட்டாரோ (ஏனெனில் அந்த மதத்தின் அமைப்பு அப்படி) அதைப்போல இத்தொண்டிப் பெரியாரும் சஹீஹான ஹதீஸ்களிலும் குர்ஆனிலும் அறிவுப்பூர்வமான(?!) கேள்வி என நினைத்துக்கொண்டு கேட்டு வருகிறார்.

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டுவது என்ற பழமொழிக்கு ஏற்ப சஹாபாக்களை ஏசுவது பின்பு அவர்களை புகழ்வது,சஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனோடு மோதுகிறது(?!)(உண்மையில் மோதவைக்கப் படுகின்றது)என கூறிவிட்டு சஹீஹான ஹதீஸ்களை மட்டுமே பின்பற்றுவோம் என கூறுவது, குர்ஆனுடைய எழுத்தில் அமைப்பில் குறை உள்ளது என கூறுவது ஆனால் குர்ஆனில் ஒரு புள்ளி கூட கூடுதலோ குறைவோ இல்லாமல் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் கூறிக்கொள்வது.தொப்பி போடுவது பித்அத் என்று கூறுவது ஆனால் தனது பக்த கோடிகளுக்கு முன்னால் தான் தொப்பி அணிந்து தரிசனம் தருவது. இது போன்று நிறைய சொல்லலாம்.

ஆனால் இதையெல்லாம் அண்ணனின் தொண்டர்களால் அவ்வளவு சுலபமாக அறியமுடியாது.ஏனெனில் பிள்ளையை கிள்ளும் பொழுது யாருக்கும் தெரியாது (தெரிந்தால் அடி விழும்)ஆனால் தொட்டில் ஆட்டும்பொழுதுதான் அனைவருக்கும் தெரியும்.அதுபோல்தான் அண்ணன் பி.ஜெ.யின் தொண்டர்களும்.

islam moomin said...

அஸ்ஸலாமு அலைக்கும்
என்ன சொன்னாலும் திருந்தாத ஜென்மங்களுக்கு நற்செய்தி சொன்னால் என்ன எச்சரிக்கை செய்தால் என்ன. கொஞ்சம் விட்டால் குர் ஆனே சரியில்லை நான் புதுசா உண்டாக்கி தருகிறேன் என்று சொன்னாலும் சொல்லும் ஆளும் அப்படியே பின்பற்றும் பக்தர்களும் இருக்கும் வரை எல்லாம் வீண். அல்லாஹ் எல்லாவற்றுக்கும் கடைசியாக தான் கூலி கொடுப்பான்.

islam moomin said...

பிஜே மாதிரியான சமுதாய துரோகிகள் உயிரோடு இருக்கும் வரை இஸ்லாமிய சமுதாயத்துக்கு விமோசனமே இல்லை. ஆரம்பத்திலேயே வெட்டி எறிந்திருக்க வேண்டிய விஷ செடி இப்போது மரமாக வளர்ந்து விட்டது. இவனை போன்ற வாய்சூனிய காரனின் பேச்சுக்கு மயங்கும் பக்தர் கூட்டத்துக்கு அல்லாஹ் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்.

noorfarideen said...

அஸ்ஸலாமு அலைக்கும், [வரஹ்}

அன்பார்ந்த ஏகத்துவ கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட் சகோதரர்களே, இந்த கள்ள வெப் சைட்டில் உளறுபவர்கள் அனைவரும் எதோ தங்கள் அனைவரும், தவறுக்கு அப்பார்பட்ட அல்லாஹ்வின் மலக்குகல் போலவும்,எதோ.உலகத்திலேயே த. த. ஜா வில் மட்டும் பிரச்சனை உள்ளது போலவும், அடுத்தவர்களை தரக்குறைவாக விமர்சித்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் இந்த மன நோயாளிகள். அவர்களின், மேல் இருந்த அறைகுறை மரியாதையையும், கற்றில் பறக்கவிட்டிருக்கின்றார்கள்.
இவர்களின் உளரல்களில் இருந்து ஒன்று மட்டும் தெளிவு யாரை எல்லாம், த. த. ஜா, விமர்சித்து, வெளியெற்றியதோ, அல்லது, அவர்களை விட்டு வெளியேறியதோ, அவர்கள் எல்லாம் இன்று பல அமைப்பில் இருந்தாலும், ஒரு விசயத்தில் மட்டும் இவர்கள் அனைவரும் ஒன்றுபடுவது கண்கூடக தெரிகிறது, அது ததஜா வை விமர்சிப்பதில் மட்டும் இவர்கள் பலமான கூட்டனி அமைத்து அவதூறு பிரச்சாரம் செய்வதில் இருந்து இவர்களின் ஈமானில் உள்ள உறுதியையும், இவர்களது பெயர் கள்ளப்பத்திரிக்கைகளிள் வருவதை கண்டு எவவளவு ஆனந்தம் இந்த மன நோயாளிகளுக்கு.

noorfarideen said...

அஸ்ஸலாமு அலைக்கும், [வரஹ்}

அன்பார்ந்த ஏகத்துவ கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட் சகோதரர்களே, இந்த கள்ள வெப் சைட்டில் உளறுபவர்கள் அனைவரும் எதோ தங்கள் அனைவரும், தவறுக்கு அப்பார்பட்ட அல்லாஹ்வின் மலக்குகல் போலவும்,எதோ.உலகத்திலேயே த. த. ஜா வில் மட்டும் பிரச்சனை உள்ளது போலவும், அடுத்தவர்களை தரக்குறைவாக விமர்சித்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் இந்த மன நோயாளிகள். அவர்களின், மேல் இருந்த அறைகுறை மரியாதையையும், கற்றில் பறக்கவிட்டிருக்கின்றார்கள்.
இவர்களின் உளரல்களில் இருந்து ஒன்று மட்டும் தெளிவு யாரை எல்லாம், த. த. ஜா, விமர்சித்து, வெளியெற்றியதோ, அல்லது, அவர்களை விட்டு வெளியேறியதோ, அவர்கள் எல்லாம் இன்று பல அமைப்பில் இருந்தாலும், ஒரு விசயத்தில் மட்டும் இவர்கள் அனைவரும் ஒன்றுபடுவது கண்கூடக தெரிகிறது, அது ததஜா வை விமர்சிப்பதில் மட்டும் இவர்கள் பலமான கூட்டனி அமைத்து அவதூறு பிரச்சாரம் செய்வதில் இருந்து இவர்களின் ஈமானில் உள்ள உறுதியையும், இவர்களது பெயர் கள்ளப்பத்திரிக்கைகளிள் வருவதை கண்டு எவவளவு ஆனந்தம் இந்த மன நோயாளிகளுக்கு.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும், [வரஹ்}

அன்பார்ந்த ஏகத்துவ கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட் சகோதரர்களே, இந்த கள்ள வெப் சைட்டில் உளறுபவர்கள் அனைவரும் எதோ தங்கள் அனைவரும், தவறுக்கு அப்பார்பட்ட அல்லாஹ்வின் மலக்குகல் போலவும்,எதோ.உலகத்திலேயே த. த. ஜா வில் மட்டும் பிரச்சனை உள்ளது போலவும், அடுத்தவர்களை தரக்குறைவாக விமர்சித்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் இந்த மன நோயாளிகள். அவர்களின், மேல் இருந்த அறைகுறை மரியாதையையும், கற்றில் பறக்கவிட்டிருக்கின்றார்கள்.
இவர்களின் உளரல்களில் இருந்து ஒன்று மட்டும் தெளிவு யாரை எல்லாம், த. த. ஜா, விமர்சித்து, வெளியெற்றியதோ, அல்லது, அவர்களை விட்டு வெளியேறியதோ, அவர்கள் எல்லாம் இன்று பல அமைப்பில் இருந்தாலும், ஒரு விசயத்தில் மட்டும் இவர்கள் அனைவரும் ஒன்றுபடுவது கண்கூடக தெரிகிறது, அது ததஜா வை விமர்சிப்பதில் மட்டும் இவர்கள் பலமான கூட்டனி அமைத்து அவதூறு பிரச்சாரம் செய்வதில் இருந்து இவர்களின் ஈமானில் உள்ள உறுதியையும், இவர்களது பெயர் கள்ளப்பத்திரிக்கைகளிள் வருவதை கண்டு எவவளவு ஆனந்தம் இந்த மன நோயாளிகளுக்கு.

Anonymous said...

மேலும் இவர்கள் பீ.ஜெ யை விமர்சிக்கிண்றேன் என்ற போர்வையில் ஏகத்துவ கொள்கையை உயிர் முச்சாக எற்று செயல்படும், ஏகாத்துவ சகோதரர்களையிம், தக்லீது செய்பவர்கள் என்றும், நக்கல், பேச்சும், கிண்டல் செய்வதும், அதில் ஒரு மன நோயாளி சொல்கின்றார். எதற்கு எடுத்தாலும் பீ.ஜெ. அவர் என்ன நபியா? என்று கேட்கிறார், அவர் [ பீ. ஜெ.] இது வரை எப்போது உண்மையை சொல்லியிருக்கிறார்? என்று கேட்கிறார் அந்த பேச்சாளர்,அப்போ அதே கருததை பிரதிபலித்து இவர் பேசியா அனைத்தின், நிலை என்ன?
உள்ளே இருக்கும் வரை எல்லாவற்றையும் ஆதரித்து தலையை ஆட்டுகிறான், பிறகு ஊழல் , மற்றும் செக்ஸ் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவனை இயக்கத்தை விட்டு நீக்கினால். அவன் வெளியில் போய் இது வரை எதை சத்தியம் என்று அவன் வாயால் சொன்னானோ அதை மறுபரிசிலனை செய்வானாம், யாரை எல்லாம் போது மேடையில் விமர்சித்தானோ அவர்களிடம் சமரசம் செய்து கொண்டு அவர்களின் மேடையில் இவனும் ஏறுகின்றான். அவர்களும் ஏற்றுகின்றார்கள். இவர்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட சுயமரியாதையே கிடையாத? இவர்களுக்கு மற்ற எகத்துவ வாதிகளை விமர்சிக்க தகுதி உள்ளதா?

noorfarideen said...

இங்கு இவர்கள் விமர்சிக்கும் யாரும் வேற்று கிரகத்தில் இல்லையே, இவர்கள் இது போல அவதூறு பரப்புவதை விட்டுவிட்டு நேரடியாக பேச்சு வார்த்தைக்கு அனுகலாமே அல்லது எழுத்து ,ஒளி,ஒலிப்பதிவு ஆதாரத்துடன், அவர்கள் விவாதத்துக்கு வர மறுத்ததை, வெளியிடுங்கள். அதை விடுத்து இது போல கள்ளக்கடிதம் எழுதுவது, அவதூறு பரப்புவது போன்ற அனைத்தும் மர்க்கம் அறியாத, மற்றும் சுய ஆதாயத்துக்காக இயக்கத்தையும், மர்க்கத்தையும், பயன்படுத்தும் சிலர் வேண்டுமாணால் உங்களுக்கு பின் பாட்டு பாடலாம்.

அப்படிப்பட்ட வழியில் ஒரு கொள்கை வாதியை கூட உங்களால் மூலைச்சலவை செய்து உங்கள் அணிக்கு பலம் சேர்க்க முடியாது, அதே போல உங்களது இப்படிப்பட்ட அவதூறுகள் தொடருமானால் இன்ஷா அல்லாஹ் இன்று உங்களை சத்தியவாங்கள் என்று நம்பி இருக்கும் எங்கள் அன்பு சகேதரர்கள் உங்களது சுய நலத்தை விரைவில் புரிந்து கொண்டு மீண்டும் சத்தியத்தை நோக்கி படையேடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை

Anonymous said...

உங்களோடு ஒப்பிடும் போது தவறான கொள்கையை சொன்னாலும் கூட சுன்னத்வல் ஜாமாத்தாரும், நாத்திகர்களையும் உங்களைவிட ஒர் படி மேல் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. அவர்களவது சவால் விடுகின்றார்கள் அதை வெற்றியோ தோல்வியோ முகத்துக்கு முகம் நேராக சந்திக்கின்றர்கள். இந்த பொட்டைகளை போல் திறை மறைவில் விமர்சித்துவிட்டு ஒழிந்து கொள்ளவில்லை.

இறுதியாக தவறுக்கு அப்பாற்பட்ட மனிதன் யாருமில்லை, அப்படி தவறு இருந்தால் அதை அவசியம் தக்க ஆதாரத்தோடு சம்மந்தப்பட்ட அந்த பிரச்சனைக்கு உரியவர்களிடம் அழகான முறையில் விவாதம் புரியுங்கள். அவர்கள் அதற்க்கு வர மறுத்தாள் தக்க ஒலி,ஒளீ ஆதாரத்துடன் அதை வெளியிடுங்கள். அப்போது யாரிடம் சத்தியம் உள்ளது ,யார் அசத்தியத்தில் இருக்கிறர்கள் என்பது எல்லருக்கும் மிக எளிதில் புரியும். அது பீ.ஜெ யாக இருந்தாலும் சரி, மற்ற யாரக இருந்தாலும் சரி.

Anonymous said...

அதை விடுத்து அவர்[ பீ.ஜெ.] காட்டிக்கொடுத்தார், அந்த குற்றத்தில் அவருக்கு தொடர்பு உள்ளது, இந்த கொலையில் அவருக்கு தொடர்பு உள்ளது, அங்கே காட்டிக்கொடுத்தார், இங்கே கூட்டிக்கொடுத்தார், என்று நம்ம ஊரில் உள்ள சில மஞ்சல் பத்திரிக்கை செய்தி வெளியிடுவதை போல, அவர்களுக்கு நாங்கள் சலைத்தவர்கள் இல்லை, என்பது போல உள்ளது இவர்களின் கட்டுறைகள், எழுத்துக்கள், ஆக்கங்கள் யாவும் நாளைய மறுமையில் இறைவனின் சந்திப்பை மறந்தவர்களாக உள்ளது. ஈமானை தொலைத்துவிட்டு நாளை இறைவனிடம் மறுமையில் கைசேதப்பட்டு நிற்கும் நிலையை நடு நிலையான வாசகர்கள் நினைத்துபார்க்க வேண்டும். இது போல அவதூறுகளுக்கு துணை போகக்கூடாது.


அல்லாஹ் தனது திரு மறையில் எந்த மிருகமும் கூட செய்யாத ஒரு செயலை இந்த அவதூறுக்கும், புறம் பேசுவதற்கும் உதாரணமாக கூறி எச்சரிக்கை செய்கின்றான், அதை இந்த இடத்தில் நினைவு கூறுவது சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

அல்லாஹ் தனது திரு மறையில் எந்த மிருகமும் கூட செய்யாத ஒரு செயலை இந்த அவதூறுக்கும், புறம் பேசுவதற்கும் உதாரணமாக கூறி எச்சரிக்கை செய்கின்றான், அதை இந்த இடத்தில் நினைவு கூறுவது சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

"எந்த மனிதனாவது தனது இறந்துவிட்ட செந்த சகோதரனின் மாமிசத்தை உண்ண விரும்புவானா" என்று கூறுகின்றான்


இதற்கு மேலும் இப்படி அவதூறு பரப்புவார்கள் ஆனால் . இறைவன் சொன்ன அந்த இழி செயலை செய்தவர்களாகவே கருதப்படுவீர்கள்.நான எந்த மார்க்க அறிஞருக்க்கும் எதிரி அல்ல. சமுதாயத்தில் செய்யவேண்டிய பனிகள் அதிகம் அதிகம் உள்ளது அதை விடுத்து இப்படிப்பட்ட ஈனத்தரமான வேலை செய்யும் அந்த சிலரை எதிர்கிறேன்.[ வஸ்ஸலாம்}

நூர் மைதீன். [ புருனை ]