Sunday, April 05, 2009

தி.மு.க விற்கு ஆதரவு - மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆதரவில்லை - TNTJ முடிவுதிமுகவுக்கு மட்டும் 21 இடங்களில் ஆதரவு - தவ்ஹீத் ஜமாத் - TNTJ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்த திமுக போட்டியிடும் 21 இடங்களில் மட்டும் அதற்கு முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிகின்றது.

இந்தியா பாராளுமன்றத்திற்கான தேர்தல் பல கட்டங்களாக நடக்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. அதிமுக தலைமையில் பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட், மதிமுக ஆகியன உள்ளன.

தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் தங்களது தேர்தல் நிலைப்பாட்டைத் தெரிவித்து வருகின்றன. தமுமுகவின் சகோதர அமைப்பான மனித நேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளைக் கேட்டுப் போராடியது. ஆனால் அதில் தோல்வியடைந்ததால் தனித்து போட்டியிடும் என்று தெரிகின்றது. அதிமுக கூட்டணிக்கு செல்வதிலும் சிக்கல்கள் ஏற்ப்பட்டுள்ளது. இரட்டை இலையில் போட்டியிட ம.நே.ம.கட்சி மறுப்பு தெரிவிக்கின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் முஸ்லிம்களின் வலுவான ஓட்டு வங்கியைக் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுக்குழு இன்று கோவையில் கூடியது. இதில் தமிழக முஸ்லிம்களின் நெடுநாள் கனவாக இருந்த இட ஒதுக்கீடை அளித்து முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள திமுகவிற்கு அது போட்டியிடும் 21 தொகுதிகளிலும் ஆதரவளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் வாழ்வு நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதற்கு மேல் நடவடிக்கை வேண்டும் என்று கூறி சச்சார் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்தது. அதை செயல்படுத்தாமல் பல வருடங்களாக காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தி வந்துள்ளது. எனவே அதைக் கண்டித்து காங்கிரஸுக்கு ஆதரவளிக்கவில்லை. அதே போல் பா.ம.க போட்டியிடும் இடங்களில் பாமகவின் முஸ்லிம் விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் அதற்கும் ஆதரவில்லை.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டில் நிலவும் சிக்கல்கள் நீக்கப்படும் வகையில் எழுத்து பூர்வமான உறுதிமொழிகளை திமுக அரசு முஸ்லிம்களுக்கு அளிக்கும்பட்சத்தில் திமுகவிற்கு ஆதரவாக 21 தொகுதிகளிலும் களப் பிரச்சாரம் செய்யப்படும் எனவும் அது தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.

தனித்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்யப்படும் பட்சத்தில் அதற்கு ஆதரவும் கிடையாது எனவும் TNTJ முடிவு செய்கின்றது.


4 comments:

Anonymous said...

அல்லாஹ் அக்பர், மறுபடியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தன்னுடைய சுத்தத்தை பிரதிபலித்தது. என்றும் சமுதாய நலன் கருதியே முடிவு எடுக்கப்பட்டும், அதற்கான காரணங்களும் மிக அழகாக அலசி ஆராய்ந்தது. எல்லாப் புகழும் இறைவனுக்கு.

யார் யார் தாங்கள் தான் மிகச் சிறந்த அறிவுஜீவிக்கள் என்று சமுதாய நலத்தை தூக்கியறிந்து சூய நலமும் சீட்டுக்கும் ஆசைப்பாட்டார்களே அவர்களின் நிலையையும் கௌ;கையையும் மிக அழகாக அல்லாஹ் காட்டிவிட்டான். இனியும் இந்த சமுதாயத்தை ஏமாற்ற முடியாது?

உஸ்மான்

Anonymous said...

எந்த இயக்கம் மக்களின் நாடி துடிப்புகளை பிரதிபலிக்கிறது என்று அழகாக நமக்கு இறைவன் காட்டிவிட்டான். ஒரு புறம் ஒரு இயக்கம் தங்களுக்கு இத்தனை சீட்கள் கெடுத்தால்தான் அவர்கள் அந்த கூட்டனியில் சேர்வார்கள் என்று கொக்கரித்தார்கள். இன்னோரு புறம் நமக்கு எந்த சீட்டும் வேண்டாம், யார் எம்முடைய சமுதாய நலனில் அக்கறை கெண்டு முஸ்லீம்களுக்காக குரல் கெடுப்பார்களே அவர்களுக்கு தான் நாங்கள் ஆதரவு தருவோம் என்று மிக அழகாக சமுதாய நலனில் எந்த இயக்கத்திற்க்கு அதிக கவனமும் கவலையும் உண்டு என்பதை நிருபித்துள்ளார்கள்.

எல்லாம் வல்ல அந்த ரஹ்மான் நம் எல்லோரையும் நல்வழியில் செலுத்தி இம்மை மறுமை வாழ்க்கையில் வெற்றியளிப்பானாக. சுய நலவாதிகளை அடையாளம் காட்டி அவர்களை அடியோடு ஒழிப்பானாக.

இப்படிக்கு
சமுதாய காவலன்
அப்துல் காதர்

Anonymous said...

தற்பொழுது நடைமுறையில் உள்ள அரசியலையும் (சாக்கடையையும்) மார்க்கத்தையும் (ஒழுக்கத்தையும்) இணைத்து பார்ப்பதோ, இணைந்து செயல்பட நினைப்பதோ தவறு. இது ஒழுக்கமாக வாழ முனைபவர்களை வழி தவற செய்யும்.
நேர்மை, ஒழுக்கத்தை விட்டுகொடுத்து பணம் புகழ் பதவிக்காக பொய் முகம் காட்டி நடிப்பது ஒரு பிழைப்பா?
ஏற்கனவே இந்த தவ்ஹீத் என்ற முகமூடியுடன் கூட்டம் சேர்ந்த உடன் செய்யும் கட்டபஞ்சாயத்து, அட்டூழியம் தாங்க முடியவில்லை.
உதாரணத்திற்கு உண்மை சம்பவம், தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொறுப்பில் உள்ள தலைவரும், தவ்ஹீத் பள்ளி நிர்வாகிகளும், ஒரு முஸ்லீம் குடும்ப பிரச்சனையில் சிக்கலை அதிகமாக்கி 50 லட்சம் பணம் பறிக்க எண்ணி, ஜமாத் கட்டுபாடு, முஸ்லீம் சட்டம் தேவையில்லை என மீறி குடும்பப் பெண்ணை காவல்நிலையத்தில் ஒரு வாரம் அழைத்துச்சென்று பெண்ணை பொய் சொல்லி நடிக்க பயிற்சி கொடுத்து, காவல் நிலையத்தில் லஞ்சம் கொடுத்து பொய்யான வழக்கை பதிவு செய்து, பல நாடகள் கோர்ட்டிற்கும் முஸ்லீம் பெண்ணை பொய் சொல்ல வைத்து கேவலப்படுத்தினார்கள்.
தனது லாபத்திற்காக எதையும் செய்ய துணிந்த இந்த ஈன பிறவிகள், அரசியல் லாபத்திற்காக பிற்காலத்தில் கூட்டிக்கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.
எனவே மார்க்கம் இறைவனுக்கும், உங்களுக்கும் உள்ள உறவை பலப்படுத்தக்கூடியது. மற்றபடி, அதை போதிப்பவர்களையும், அவர்கள் சார்ந்தவர்களையும், அரசியல்வாதிகளையும் சம தூரத்தில் வைத்து பார்ப்பது அனைவருக்கும் நல்லது.

Anonymous said...

என் அன்புச் சகோதரே யார் உண்மைக்கு புரம்பாக போசுகிறார்கள் என்றும் எந்த விஷயம் உண்மைக்கு புரம்பாக இருந்தது என்று மக்களுக்கு எடுத்துக்காட்டினால் உங்களின் சுத்தத்தை மக்களும் பார்பார்கள். ஏதை உண்மைக்கு புரம்பாக என்று செல்கிறீர்கள்? சுனாமி பணத்தை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கெடுக்காமல் பேரிடர் மையத்தை அமைத்தது? வக்ப் போர்டு சொத்தை செல்வந்தர்களுக்கும் ஆளும் கட்சிக்கும் தாரை வார்த்து வக்ப்பு சட்டைத்தையும் மீறி ஒப்பந்தம் போட்டது? சமுதாயத்திற்க்கு தூரேகம் செய்து இவ்வளவு எல்லாம் அளும்கட்ச்சிக்கு செய்தும் அவர்கள் உங்களை துக்கி எரிந்தார்கள்? இதையல்லாம் விட்டு விட்டு சும்மா கொக்கரிக்காதீர்கள். உண்மைக்கு புரம்பான விஷயங்கள் எது என்று மக்களுக்கு அடையாளப்படுத்துங்கள்?

இவன்
சமுதாய காவலன்
உஸ்மான்