Sunday, March 29, 2009

அதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி கூட்டணி? - நாளை முடிவு

சென்னை: திமுகவில் சீட் இல்லாமல் விடப்பட்டுள்ள மனித நேய மக்கள் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவுதான் மனித நேய மக்கள் கட்சி. இக்கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. ஏகப்பட்ட சீட் தர வேண்டும் என இக்கட்சி கோரி வந்தது. ஒரு சீட் தந்தால் ஏற்க மாட்டோம் எனவும் கூறியிருந்தது.

ஆனால் திமுக இக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாக தெரிகிறது. இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சிக்கே ஒரு சீட் மட்டும்தான் திமுக தந்துள்ளது. இந்த நிலையில் புதிதாகப் பிறந்த மனித நேயக் கட்சிக்கு இத்தனை சீட் தர முடியாது என திமுக கூறி விட்டதாம்.

இதனால் நேற்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடந்த இறுதிக் கட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் மனித நேயக் கட்சியைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் கூட்டம் சென்னையில் நாளை மாலை நடக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது இதுகுறித்துக் கூறுகையில்,

மாறிவரும் தமிழக அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மனித நேயமக்கள் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.

இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட விருக்கிறது. எந்த நிலையிலும் தன்மான அரசியலை மனித நேய மக்கள் கட்சி விட்டுக்கொடுக்காது என்பதை தொண்டர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் அப்துல் சமது.

அதிமுக தரப்பில் கூட்டணி குறித்து மனித நேய மக்கள் கட்சியுடன் கூட்டணி பேசப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

நன்றி : தட்ஸ்தமிழ்

6 comments:

Anonymous said...

வானத்திற்க்கும் பூமிக்கும் குதித்த சமுதாய துரேகிகளுக்கு அல்லாஹ் சரியான பாடத்தை புகட்டினான்.

கடந்த தேர்தலில் தவ்ஹீத் ஜமாத் அ.தி.மு.க விற்க்கு ஆதரவு கொடுத்த போது, இன்று வரை விமர்ச்சித்தவர்கள் இன்று எதன் அடிப்படையில் இவர்களுடன் சேர்கிறார்கள்? கௌ;கைக்காகவா அல்லது சீட்டுக்காகவா? இதுநாள் வரை நரேந்திர மோடியின் தங்கையாகவும், பி.ஜே.பியின் பினாமியாக இருந்த ஜெயலலிதா எப்போது புனிதமானார்கள்?

இந்த அயோக்கியர்களிடமிருந்து மக்களே உஷார்! உண்மையில் இவர்கள் சமுதாய நண்மையாளர்களாக இருந்தால், எந்த கூட்டனியில் சோருமுன் சமுதாய கோரிக்கையை வைத்து யார் அதை நிறைவேற்ற ஆதரவு தருகிறாரே அவர்களை தான் ஆதாரிப்பார்? ஆனால் இங்கு இவர்களுக்கு சீட் தான் முக்கியமே தவிர சமுதாய நலன் முக்கியமில்லை என்று வெளிப்படையாக நிருபித்து விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் அல்லாஹ் இவர்களின் முகமுடியை கிழிப்பான்.
என்றும் அன்புடன்
சமுதாய உழியன்

Anonymous said...

இவர்கள் துரோஅகிகள் என்று தமிழ் நாட்டு முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரியும் எவர்களின் முனாபிக் தனம் முழுதும் வேலிப்பட்டுகொண்டு இருக்கிறது.

Anonymous said...

சமுதாய இயக்கங்களில் தாம் தான் எல்லாவற்றிலும் முன்னிலை என்று நினைத்துக் கொண்டு செயல்பட்ட புல்லுறிவுகளுக்கு அல்லாஹ் சரியான பாடம் புகட்டினான்?

தேர்தலில் தனியாக நின்று தங்களுடைய டெபாசிட்டை இழந்து பலத்தை காட்டட்டும்!

சமுதாய துரேகிகளுக்கு இதுவும் வேண்டும், இன்னும் வேண்டும்.


அன்புடன்
மேலைப்பாளையத்தார்

Anonymous said...

இந்த சமுதாய துரேகிகள் எடுத்த எடுப்பிலே சீட்டை பற்றி தான் பேசினார்களே தவிர சமுதாய கோரிக்கையும் நலனையும் பேசவில்லை. ஆகையால் தான் அல்லாஹ் இவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்தான். அல்ஹம்துல்லாஹ்...

எதன் அடிப்படையில் இவர்கள் ஜெ-வுடன் கூட்டனி அமைக்க தயார் என்று சென்னார்கள்? அறிவு ஜீவீக்கள் தெளிவுபடுத்துவார்களா?

இந்த ஒரு சீட்டை வாங்க தான் நீ ஏகத்துவம் தேவையில்லை என்று புறக்கணித்து வந்தாயா துரேகியே?

வகஃ;ப் போர்ட்டை கைப்பற்றி அடித்த கௌ;ளை போதாதா? இன்னும் எம்.பி, எம்.எல்.ஏ என்று கௌ;ளையடிக்க ஆசை வந்துpட்டதா?

இனியும் சமுதாயத்தையும் சமுதாய மக்களையும் வைத்து ஏமாற்ற முடியாது? இத்துடன் இந்த வேஷத்தை கலைத்துவிட்டு சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்டு, திருந்தினால் சரி, இல்லையன்றால் காலம் தான் இவர்களின் முழு முகமுடியை கலைக்கும்.

இவன்
சமுதாய காவலன்
அப்துல் காதர்

Anonymous said...

எப்போது வீழ்வான் என்று இளவு காத்த கிளிகளாக காத்திருக்கும் கொள்கைக் குன்றுகளே! உங்களின் தூய்மை?யான எண்ணத்தை அல்லாஹ் அறிவான். அவனை மறந்து மார் தட்டாதீர்கள்? நீங்கள் என்னென்ன செய்தீர்கள் செய்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது அநேக முன்னாள் சினேகிதர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும். வீண்பழி பேசினால் அழிந்து போவீர்கள்.

Anonymous said...

OH Roster Jawahirullah doesn't know that, under DMK, even MP seat also will be allocated according to Roster system? Useless fellow? when it comes to them, they fight for esteem extend to get seat? but the same situation for community, they will justy (by accepting their double acts)? what a genius?