Tuesday, February 17, 2009

உண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 1)

கிறிஸ்தவ தளத்திற்கு பதில்

தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ்தவர்களுக்கு குர்ஆன் மற்றும் பைபிளை ஒப்பிட்டு இஸ்லாத்தை எடுத்துரைத்தவருமான காலம் சென்ற இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர். அஹமத் தீதாத் அவர்கள், கிறிஸ்தவத்தைப் பற்றி தான் செய்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக சொல்லப்படும் சம்பவத்தை மிக ஆழமாக ஆராய்ந்து அதில் உள்ள முரண்பாடுகளையும், குழப்பங்களையும் அதில் ஏற்படக்கூடிய சந்தேகங்களையும் எடுத்துரைத்ததன் மூலம் உலக கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர்களின் ஆராய்ச்சி மிகுந்த கட்டுரைகள் பல இன்றைய இஸ்லாமியப் பிரச்சாரகர்களுக்கு மிகவும் உறுதுணையாகவும், உதவியாகவும் இருக்கின்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இயேசுவின் சிலுவை மரணம் பற்றிய அவர்களின் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகத்தான் WHAT WAS THE SIGN OF JONAH? என்ற புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்தது. அந்த புத்தகத்தின் கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை 'கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை' என்ற தலைப்பில் சமீபத்தில் இஸ்லாமிய இணையப்பேரவை (IIP ONLINE) தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டது.

இந்தக் கட்டுரைக்கு எப்படியேனும் பதில் அளித்தாகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில், 'உமர்' என்ற கிறிஸ்தவர் அந்தப் புத்தகத்தின் கருத்துக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத, ஒரு கட்டுரையை ஆன்சரிங் இஸ்லாம் என்ற தளத்திலிருந்து எடுத்து மொழிபெயர்த்து 'அஹமத் தீதாத்திற்கு பதில்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். ஒரு கட்டுரைக்கு 'பதில்' என்று போடுவதற்கு முன் அந்தக் கட்டுரைக்கும் அந்த பதிலுக்கு ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா? அது சரியானது தானா? அந்த பதில் பொருத்தமான பதில் தானா? என்பதை சற்று படித்துப்பார்ப்பது தான் ஒரு மொழி பெயர்ப்பளருக்கு அழகு. அது அல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களை எப்படியாவது திருப்தி படுத்தியாக வேண்டும் என்பதற்காக (பைபிளில் சொல்லப்பட்டுள்ள நோவா, லோத்து, இயேசு போன்றோர் அருந்தியதாகச் சொல்லப்படும்) திராட்சைரசத்தை (WINE) அருந்தி விட்டு போதை மயக்கத்தில் மொழி பெயர்ப்பது அறிவுடமையாகாது என்பதை சம்பந்தப்பட்ட கிறிஸ்தவருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவர் பதில் என்றப் பெயரில் வெளியிட்டுள்ள கட்டுரை எந்த அளவுக்கு அபத்தமானது, முரண்பாடனது - குழப்பம் நிறைந்தது என்பதை இனி பார்ப்போம்.

இயேவிடம் ஒரு அடையாளத்தைத் தாரும் என்று வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது :

இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் - மத்தேயு 12:39

அஹமத் தீதாத் அவர்கள் தனது புத்தகத்தில், மேற்சொல்லப்பட்டுள்ள இயேசுவின் கருத்தை மிக ஆழமாக ஆராய்ந்து உண்மையில் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் இந்தக் கூற்றுப்படி அவர் மரித்திருக்கவே முடியாது என்பதுடன் 3 இரவு 3 பகல் என்ற கணக்கும் இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஒத்துப் போகவில்லை என்பதை மிகத் தெளிவாக தனது புத்தகத்தில் நிரூபிக்கின்றார்கள். ஆனால் அதை நியாயமான பார்வையுடன் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் எப்படியாவது இதை மறுத்தாக வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் பதில் எழுதத் துணிந்த அந்த கிறிஸ்தவர் தனக்குத் தானே முன்னுக்குப் பின் முரணாக முரண்பட்டு எழுதுகின்றார் :


No comments: