Tuesday, November 25, 2008

டிசம்பர் 6-அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் வேண்டாம்

டிசம்பர் 6- இஸ்லாமியர்கள் இதயத்தில் ஈட்டி பாய்ந்த நாள் அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் வேண்டாம். அரசியல் வலிமைபெற உறுதிமொழி எடுப்போம் வாரீர்!


பாப்ரி மஸ்ஜித் பின்புற தோற்றம் .

துடிக்கும் இதயங்கள் எல்லாம் வெடிக்கும் எரிமலையாய் துக்கம் அனுஷ்டிக்கும் துயரச் சம்பவம் அரங்கேற்றப்பட்ட நாள் டிசம்பர் 6. இஸ்லாமியர்களின் இதயத்தில் ஈட்டி பாய்ந்த நாள். நாஜிசத்தையும், பாஸிசத்தையும் விஞ்சிய காவி இசத்தின் காட்டு தர்பாரில் 400 ஆண்டு கால பாபர் பள்ளி இடிக்கப்பட்ட நாள். இந்திய ஒருமைப்பாடும் சமூக நல்லிணக்கமும் மனிதநேயமும் மாய்க்கப்பட்ட நாள். ஆம் நரபலி ரத்தக்காட்டேறிகள் நாடாண்டதால் பாரத பண்பாட்டின் மானம் உலக அரங்கில் பாழ்படுத்தப்பட்ட நாள். இந்திய அரசியல் சட்டம் எங்கள் கால்களுக்கு கீழே என்று சொல்லி ராணுவம், காவல்துறை வேடிக்கை பார்க்க பட்டப்பகலில் பாபர் பள்ளி உடைக்கப்பட்ட கருப்பு நாள் டிசம்பர் 6.

சுதந்திரத்தின் பெருமை அடிமைகளுக்கு தெரிவதில்லை. ஆகையால் தான் அவர்கள் அடிமைகளாக இருக்கின்றனர் என்றான் கலில் ஜிப்ரான். ஜனநாயகத்தில் அரசியல் வலிமை தெரியாத காரணத்தினால் நீங்கள் அரசியல் அடிமைகளாக வாழ்க, ஒழிக என கோஷமிட்டு மாறி மாறி ஓட்டளித்து உருமாறி நீற்கிறீர்கள். 3ல் 2பங்கு பாராளுமன்றத்தில் எப்பொழுது நுழைகிறமோ அப்பொழுது பாபர் பள்ளி இடத்தில் கோயில் கட்டுவேபம் என்கிறார்கள். பி.ஜே.பி சங்பரிவாரக்கூட்டம்.

நீயோ அரசியலை புறக்கணித்து விட்டு பாபர் பள்ளியை மீட்க ரயிலை மறிப்போம், வான் ஊர்தியை மறிப்போம் என வெற்று கோஷ\மிட்டு கூடிக், கூடிக் களைகிறாய். சோடாபாட்டிலை திறந்தவுடன் குப் என்று அடிக்கும் சப்தத்தைப் போன்று டிசம்பர் 6 வந்தால் அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் என்று சடங்கைப்போன்று கோஷமிட்டு ஆடி அமர்ந்து விடுகிறாய்.

இதயம் வெடிக்கிறது. சமுதாய இளைஞனே இது அல்ல தீர்வு. இங்கும், அங்கும் மாறி மாறி எத்தனை நாள் இரவல் அரசியலில் சமூகத்தை அடகு வைக்கப்போகிறாய். மார்க்கத்தையும், அரசியலையும் குழப்பி விரக்தியின் விளிம்பிற்கு இளைஞனை அழைத்துச்சென்றது போதும். கொடுக்காத இடஒதுக்கீட்டிற்கு நன்றி பாராட்டி கூனிக்குறுகி நின்றது போதும். இளைஞனே சிந்தி.

எத்தனை கலவரங்கள், எத்தனை உயிர் உடமை இழப்புக்கள், எத்துனை மனித உரிமை இயக்க குற்றச்சாட்டுகளின் சான்றுகள், எத்தனை விசாரணைக் கமிஷன்களின் ரிப்போர்ட்டுகள், இளைஞனே அரசியலை புறக்கணித்து விட்டு நீதி கேட்கிறாயே? நீதி கிடைத்ததாக வரலாறு உண்டா? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு உண்டா? இந்திய தேசத்தில் நிமிர்ந்து நிற்கவேண்டிய நீதிமன்றம் குனிந்து நிற்கிறது. குனிந்து நிற்கவேண்டிய குற்றவாளி நிமிர்ந்து நிற்கிறான். ஆம் பாபர் பள்ளியை இடித்த குற்றவாளிகள் அரசியலில் அதிகாரம் பெற்றதால் சிவப்பு நிற கம்பளத்தில் உலா வருகிறார்கள். நாங்கள் தாம் இடித்தோம் பள்ளியை என்று மார்தட்டுகிறார்கள்.

இன்றோ பள்ளி இடிப்பதற்கு துனை நின்ற காங்கிரஸிற்கு மத்தியில் ஆதரவு, பி.ஜே.பி யோடு கைகோர்த்து ஐந்து ஆண்டு பதவி சுகம் அனுபவித்த தி.மு.க விற்கு தமிழகத்தில் ஆதரவு உன் கோமாளி தனங்களை கணக்கிட்டால் இன்னொரு இமயமலையை உருவாக்கிவிடலாம். குதிரை போனபிறகு லாடத்தை தேடும். முட்டாள்களைப்போல் தேர்தல் முடிந்து விட்ட பிறகு நாங்களும் அரசியலுக்கு வருகிறோம் என்று குழப்பத்தை அறங்கேற்ற வருகிறாய். ரயிலில் ஏறுவதால் ரயில் நமக்கு சொந்தமாகி விடுவது இல்லை. ரயிலை மறிப்பதால் பாபர் பள்ளி மீண்டு விடுவது இல்லை. திட்டமிட்டு காலத்திற்கேற்ற செயலை செய்ய தவறுகிற சமுதாயம் அழிவை நோக்கி செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாபர் பள்ளி குஜராத், கோயம்புத்தூர்,முத்துப்பேட்டை என அநீதி தொடர்கிறது. வல்லவன் வைத்ததே வாய்க்கால் என்ற கூற்றுக்கு ஏற்ப அரசியலில் சிலர் ஆதிக்கம் பெற்றதால் உன்னை அசைக்கிறார்கள். காரணம் நீ அரசியல் அதிகாரம் பெறாததுதான். போதும் இளைஞனே பூக்கடையில் போர்வாள் கேட்கும் இழிநிலையை இதோடு நிறுத்திக்கொள். குறத்தி கூட்டத்தை கூட்டி வித்தை காட்டி களையும் செயலை நிறுத்திக்கொள். நம் உணர்வுகளுக்கு எண்ணக் குமுறல்களுக்கு இதயப் பொறுமல்களுக்கு வடிவம் கொடுத்திட, சட்ட மன்றம், பாராளுமன்றத்தில் சொந்த சின்னத்தில் நின்று நிமிர்ந்திட துயரத்தில் இருந்து ஞானம் பெற்றிட டிசம்பர் 6ல் IDMKல் உறுதிமொழி ஏற்ப்போம். உடன்பிறப்பே, கழிக்க முடியாத கடன் பிறப்பாய் வீழ்ந்த சமுகத்தை அரசியலில் தூக்கி நிறுத்திட சமுகத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் குள்ளநரிகளை கூண்டோடு விரட்டிட, தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயலாற்றிட, காட்டாற்று வெள்ளமாய் கடமையாற்றிட புறப்படுவீர் IDMK யை நோக்கி. பிறக்கட்டும் உன் உழைப்பில் அரசியல் வெற்றி. துடிக்கட்டும் ஜால்ரா போடும் சமுதாய துரோகிகள். துலங்கட்டும் உன் வெற்றி. தொடர்பு கொள்வீர். உன் பங்களிப்பை சமுகத்திற்கு பறைசாற்ற. IDMKல்


இவண் :

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தமிழ்நாடு தொடர்புக்கு : 9790318182, 9344510369

WWW.IDMK.ORG

2 comments:

Anonymous said...

ஆமாப்பா ரயில மறிச்சா பாப்ரி மஸ்ஜித் கட்டி தந்துருவானுகளா?

Anonymous said...

டிசம்பர்-06 வது நாள் பாபரி மஸ்ஜிது ஷஹீதாக்கப்பட்ட நாள் - சமய நல்லிணக்கக் கூட்டங்கள் இதுதான் முஸ்லிம் லீக்கின் செயல்பாடு. ஸஹாபாக்களும் நம் முன்னோர்களும் நம்முடைய மென்மையான அன்பான போக்கிலேதான் மற்றவர்களை வெற்றிக் கண்டார்களே தவிர இது போன்ற போராட்டத்தில் அல்ல. இது வெற்றிக்கு வழியும் கிடையாது என்பதை முஸ்லிம் லீக் நன்றாக உணர்ந்திருக்கிறது. அதனால்தான் சமய நல்லிணக்கக் கூட்டங்களை நடத்துகிறது.

அதுபோல நம் உணர்வுகளுக்கு எண்ணக் குமுறல்களுக்கு இதயப் பொறுமல்களுக்கு வடிவம் கொடுத்திட, சட்ட மன்றம், பாராளுமன்றத்தில் சொந்த சின்னத்தில் நின்று நிமிர்ந்திட துயரத்தில் இருந்து ஞானம் பெற்றிட டிசம்பர் 6ல் IDMKல் உறுதிமொழி ஏற்ப்போம். அருமையான திட்டம். ஆக்கப்பூர்வமான் திட்டம். இதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.

இப்படியில்லாமல் குடும்பத்தோடு வாரீர் என்று போராட்டத்துக்கு அழைப்பது தன்னையும் தன்னுடைய இயக்கத்தையும் அறிமுகப்படுத்திக் கொள்ளத்தான்.

ஒரு சில தினங்களுக்கு முன்னால் (தட்ஸ்தமிழ் என்ற இணையத்தில் - பிரக்யா: பாஜகவுக்கு இந்து மகா சபை கண்டனம் - என்ற செய்திக்கு)
பி.ஜெய்னுல்லபுதீன் மனைவி ஒரு போராட்டத்திலும் களந்து கொள்ளவில்லை௭ன்று யார் சொன்னது ௨ங்களாள் நிரூபிக்க முடியுமா? இப்படி உடனே கேட்கக் கூடாது. எங்கே கலந்துகொண்டார் என்று சொல்லனும். எந்தப் போராட்டம் எப்போது என்றெல்லாம் சொல்லனும். ஓ நீங்க அதைச் சொல்றிங்களா.. அது போராட்டம் இல்லைப்பா அது கடலூர் ததஜ வுக்கும் பி.ஜெய்னுல்லபுதீன் மனைவி மக்களுக்கும் கடலூரில் நடந்த முபாஹலா. முதலில் என்ன நடக்கிறது என்று தெளிவாக புரிஞ்சுக்கப்பா. என்றும்

//தலைவர்களின் மனைவி மகள்கள் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என்று இஸ்லாம் மார்க்கத்தில் தடை இருக்கிறதா? இதை தைரியத்துடன் கேட்க முறையாகப்பிறந்த ததஜ, தமுமுக தொண்டன் யாராவது இருக்கிறானா//

Very Good Question but there is nobody to answer this question. You should read this following article published one of Tamil Muslim's popular web blog.

விருந்தாக்கப்படும் தமிழ் முஸ்லிம் பென்கள் (EXCLUSIVE ARTICLE)tmpolitics என்றும்
கருத்து பதிவு செய்திருந்தார்கள்.

இதை நிருபிக்கும்பொருட்டு பி.ஜைனுல் ஆபிதீன், ஜவாஹிருல்லாஹ் மற்றும் ஹைதர் அலி போன்றவர்கள் தன் மனைவி மகள்ககை டிசம்பர்-06 போராட்டத்திற்கு அழைத்துவருவார்களா? அல்லது தொண்டர்கள் மாத்திரம்தான் குடும்பத்தோடு வரவேண்டுமா? இதுதான் இஸ்லாமிய கொள்கையா?

ததஜ விலும் தமுமுக விலும் இந்த அளவுக்குத்தான் பெண்களுக்கு மதிப்பா? விழிப்புணர்வு என்றால் பி.ஜைனுல் ஆபிதீன், ஜவாஹிருல்லாஹ் மற்றும் ஹைதர் அலி போன்றவர்களின் மனைவி மகள்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டாமா?