போராட்டங்களை தடை செய்வதற்கு இது அரசின் சதியா?
அயோத்தியில் ராமர் கோவில்: இந்து முன்னணி ரயில் மறியல்
சென்னை : அயோத்தியில் கோவில் எழுப்ப அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி, டிசம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநில அமைப் பாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 1949ம் ஆண்டு, ராமர் கோவில் இடம் யாருக்கு சொந்தமானது என்பதற்காக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்ந்து 60 ஆண்டு ஆகிவிட்டது.
இதில் 55 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. ஆனால், இந்த வழக்கின் தீர்ப்பை இதுவரை கூறாமல் இந்துக்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் அரசியல்வாதிகள் சண்டைமூட்டிவீட்டு ஓட்டு பெறுகின்றனர்.எனவே, கோர்ட் தீர்ப்பை உடனடியாக வெளிட்டு, அயோத்தி ராமர் கோவில் பிரச்னை யை நிரந்தரமாக முடிக்க வேண்டும். 100 கோடி இந்துக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய ராமர் கோவிலை அயோத்தியில் கட்ட மத்திய அரசு உடனே அனுமதி தரவேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 6ம் தேதி தமிழகமெங்கும் இந்து முன்னணி இயக்கம் ஆர்ப்பாட்டமும், ரயில் மறியல் போராட்டமும் நடத்தவுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி : தினமலர்
No comments:
Post a Comment