Friday, September 26, 2008

வக்ஃப் சொத்துக்கள் மோசடி - வாரியத் தலைவருக்கு தெறியாமலா?

தமிழக முதலவர் கருணாநிதியால் கடந்த 21 ஆம் தேதி திருச்சியில் திறந்து வைக்கப்பட்ட திருச்சி தி.மு.க.வின் தலைமையகமான "கலைஞர் அறிவாலயம்" அமைந்துள்ள இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வக்ஃபு சொத்து என்று தெரிய வந்துள்ளது. திருச்சிக்கும் கரூருக்கும் இடையிலுள்ள பைபாஸ் ரோட்டில் 80,000 சதுர அடியில் ரூபாய் 15 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த இடம் தனது தந்தையாரால் 1928 ஆம் ஆண்டு வக்ஃபு சொத்தாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது என்று திருச்சி, மேற்கு சிந்தாமனியைச் சேர்ந்த ஹெச்.செய்யது மதனி (வயது 60) தெரிவித்துள்ளார்.


87.5 சென்ட் அளவுள்ள இடத்தை தனது தந்தை 1928 ஆம் ஆண்டு, விலை கொடுத்து வாங்கி அதனை வக்ஃபுக்கு கொடுத்ததாகவும் அதில் தனது பங்கு மட்டும் 20,000 சதுர அடி என்றும் அவர் தெரித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கரூர் பைபாஸ் சாலைக்காக அதில் ஒரு பகுதியை அரசாங்கம் எடுத்துக்கொண்டது என்றார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, தவறான முறையில் அந்த இடத்தை தனது கட்சிக்கு சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளார். தற்போது பிரச்சனை வெளிவரவே அந்த இடத்தை லீசுக்கு எடுத்திருப்பதாக அமைச்சர் கூறுவதுகூட செல்லத்தக்கதாகாது. ஏனெனில் அந்த வக்ஃபு சொத்தை லீசுக்கு எடுத்தாலும் அதிக பட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே எடுக்க முடியும். அப்படி இருக்கும்போது ரூபாய். 15 கோடி செலவில் ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டியிருக்கிறார்கள் என்றால் இது ஆட்சியாளர்களின் அத்துமீறல் என்றுதான் சொல்ல வேண்டும்.

-sources from 'Deccan Chronicle' chennai - 26 09 2008

இது குறித்த செய்திகள் இன்றைய தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன. தமுமுக பொறுப்பு வகிக்கும் வக்ஃப் வாரியத்தில் வெளியாகியுள்ள அடுத்த ஊழல். விளக்கம் அளிப்பார்களா சமுதாய காவலர்கள்?

நன்றி : நீடுர் இன்ஃபோ

1 comment:

Anonymous said...

//////வாரியத் தலைவருக்கு தெறியாமலா?///////

அது எப்படி தெரியும் நம்ம தானே கொடுத்தோம்