Friday, September 26, 2008

தமிழக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும்"குமுதம்"இதையும் தடைசெய்ய முயற்சிப்போம்!


ஐந்து இடங்களில் அரைமணி நேரத்தில் சுமார் இருபத்தைந்து பேரை காவு வாங்கிவிட்டது. இம்முறை டெல்லியில் அந்த பயங்கரம் நடந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஜெய்ப்பூர் `பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் இப்போதுதான் குண்டு வெடிப்புகள் நடந்து பல உயிர்களைப் பறித்தன.நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாக உள்ள அவலநிலை. மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலே பதவி விலக வேண்டும் என்று ஆளுங்கட்சியிலிருந்தே அதிருப்தி ஏற்படும் அளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.குண்டுவெடிப்பு நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் மூளையாகச் செயல்பட்டு வந்தது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ என்று நமது அரசு அடித்துக் கூறியது. பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகாவது இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறையும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் டெல்லி சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. `ரா'(ஸி.கி.கீ)வில் பணியாற்றிய ஒரு மூத்த அதிகாரியை நாம் சந்தித்தோம். ``பாகிஸ்தானில் ஆட்சிகள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் அந்த நாட்டின் உளவுத்துறையின் ஐ.எஸ்.ஐ. நடவடிக்கை மாறாது. அது அளவிற்கு அதிகமாக வளர்ந்து விட்டது. அதை அந்நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களே அடக்க முடியாது. உண்மையில் பாகிஸ்தானை ஆட்சி புரிவது அந்நாட்டின் ஐ.எஸ்.ஐ. தான்.ஆப்கானிஸ்தானை எப்போது ரஷ்யா ஆக்கிரமித்ததோ அப்போதிலிருந்தே இந்த தீவிரவாதம் ஆரம்பமாகிவிட்டது. ரஷ்யா ஆப்கானிஸ்தானைப் பிடித்தவுடன் எங்கே இந்தியத் துணைக் கண்டத்தின் பிடியும் ரஷ்யாவிடம் சென்றுவிடுமோ என்று அஞ்சியது அமெரிக்கா.அதனால் அமெரிக்கா, ரஷ்யாவின் பிடியிலிருந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளின் சுதந்திரத்திற்கு உதவியது.ஜியாவுல் ஹக் பாகிஸ்தானின் அதிபராக இருந்த போது ஒரு தீவிர இஸ்லாமியராக தன்னை வெளிப்படுத்தினார். `சமஸ்தே இஸ்லாம்' என்ற அமைப்பை உருவாக்கினார். பாகிஸ்தானில் இருந்த பள்ளிவாசல்கள் போல் மூன்று மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக்கினார். பாமரர்கள் அங்கு போய் தொழும் போது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டது. பிறகு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்கு அனுப்பிவைத்தார். அங்கு அவர்களுக்கு ஆறுமாதம் துப்பாக்கிச் சுடுதல், வெடிகுண்டு தயாரித்தல், வீசுதல் போன்ற பயிற்சிகளெல்லாம் கொடுக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு இஸ்லாமிய நாடுகள் பணம் கொடுத்து உதவியதோடு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யும் முழு ஆதரவு தந்தது. இவற்றுக்கும் மேலாக அமெரிக்கா அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கொடுத்து உதவியது. இதன் பலன் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பாகிஸ்தானிலுள்ள ஒரு சிறு பிரிவு கொஞ்சம், கொஞ்சமாக தீவிரவாத பக்கம் திரும்ப ஆரம்பித்தது. அவை கராச்சி, லாகூர் போன்ற இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கின. இப்போது பரபரப்பாக பேசப்படும் `லஸ்கர்_ இ_தொய்பா' இயக்கத்தின் தலைநகரமே `லாகூர்' தான்!'' என்கிறார் அந்த மூத்த அதிகாரி.லஸ்கர்-இ-தொய்பா, ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு இரண்டு விதமான வேலைகள் கொடுக்கப்பட்டன என்கிறார் மற்றொரு அதிகாரி. ``ஒரு பிரிவு ஜம்மு காஷ்மீர் பிரச்னையை கிளப்பிக் கொண்டே இருப்பதும், இரண்டாவது பிரிவு இந்தியாவில் மற்ற பகுதிகளில் கலவரத்தைத் தூண்டுவதும் அவர்களது `மாஸ்டர் பிளான்'. இதற்காக பயிற்சி பெற்ற 600 இளைஞர்களைத் தயார்படுத்தியது. அதில் 70 சதவிகிதம் பேர் பாகிஸ்தானியர்கள். 30 சதவிகிதம் பேர் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த இளைஞர்கள் நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்டு பத்துப் பேர் கொண்ட குழுவாக இந்தியாவிற்குள் நுழைய விடப்பட்டார்கள். பாதுகாப்பு போடப்படாத பனிமலைப் பகுதிகளில் அவர்கள் சாமர்த்தியமாக ஊடுருவினார்கள். அந்த இளைஞர்களுக்குச் சொல்லப்படும் மந்திரச் சொல் என்ன தெரியுமா? `ஜம்மு காஷ்மீர் நமது சொந்தம். அதைக் கைப்பற்ற வேண்டும். இந்தியா நமது முதல் எதிரி.'முதலில் இவர்களுக்கு ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகளைக் கொடுத்து வந்தது ஐ.எஸ்.ஐ. இது பாகிஸ்தானின் வேலை என்பது `சட்'டென்று இந்தியாவும், பிற நாடுகளும் தெரிந்து கொண்டதால் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளுக்கு அமோனியம் நைட்ரைட், பொட்டாசியம் குளோரேட், ஜெலட்டின் வைத்து வெடிக்கச் செய்கிறார்கள். இதுதான் இவர்களின் சமீபகால செயல்முறை.'' என்கிறார் அந்த அதிகாரி.``இந்தியாவைப் பொறுத்தவரை சமீபகாலமாக வெடிகுண்டுத் தாக்குதல் அனைத்தும் சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்)யின் ஒரு பிரிவான `ஜமாத் இஸ்லாமி-இ-ஹிந்த்'' என்கிறார் இந்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர். ``இந்த அமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை; தேசியவாதம் இந்த மூன்றுக்கும் எதிரி. ஆனால் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தியா. இப்பொழுது தெரிகிறதா நம் மேல் ஏன் இந்தத் தீவிரவாதிகளுக்குக் கோபம் என்று? இவர்களுக்கென்று சில கட்டளைகள் வைத்திருக்கிறார்கள். அவை : `அல்லா ஒருவரே கடவுள். நபிகள் நாயகம் நமது தலைவர். குரான் நமது சட்டதிட்டம். ஜிகாத் தான் நமது வழி! இந்த அமைப்பிற்கு வெளி நாட்டிலும், இஸ்லாமிய நாடுகளுடனும் தொடர்பு உண்டு. ஹவாலா மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது.'' என்கிறார் அவர்.``இஸ்லாமிய மாணவர்களின் இயக்கமான சிமியிலிருந்து பிரிந்த ஓர் அமைப்புதான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தன் கைவரிசையைக் காட்டியது. இப்போது அதன் தொடர்ச்சியாக ஹைதராபாத், ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத், டெல்லி என தங்கள் கோரத் தாண்டவத்தை நடத்தி இருக்கின்றன.இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமிக்கும் பாகிஸ்தான் உளவுத்துறை தனது முழு உதவிகளையும் செய்து வருகிறது என்பதுதான் வேதனை என்கிறார் அதே அதிகாரி. ``முஷாரஃப் பாகிஸ்தானின் அதிபராக இருக்கும் போது `தீவிரவாத இயக்கங்கள் உங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பயிற்சி பெற்று வருகிறார்கள்' என்று நமது உளவுத்துறை சொன்னால், `அப்படியா உடனே அதனை தடுத்து, ஒடுக்கி விடுகிறேன்' என்று சொல்லிவிட்டு முஷாரஃப் அந்தத் தீவிரவாதிகளின் முகாமை வேறொரு இடத்திற்கு புத்திசாலித்தனமாக மாற்றிவிடுவதாகச் சொல்வார் என நீண்ட மௌனத்திற்குப்பின் ஆரம்பித்தார் ஒரு பெண் அதிகாரி.``பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகள் தற்போது தனது முழு கவனத்தையும், தென் இந்தியாவை குறிப்பாக சென்னையை நோக்கிக் குறி வைத்துள்ளன'' என்று ஒரு திடுக்கிடும் தகவலைக் கூறியவர், ``இந்தியா உலகத்தில் வளர்ந்து வரும் முக்கிய நாடுகளில் ஒன்று. அதன் வளர்ச்சியை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். ஹைதராபாத், பெங்களூர், சென்னை இந்த மூன்று இடங்களில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. போதாக்குறைக்கு தங்கள் மதத்திற்கும் கொள்கைக்கும் எதிரான அமெரிக்காவோடு தொடர்பு வைத்திருக்கிறது. அதை ஆட்டம் காண வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறார்கள்'' என்கிறார் அவர் அழுத்தமாக.தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றால் இப்போது இருக்கிற இந்தியச் சட்டம் பயன்படாது. `பொடா' போன்ற கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தால்தான் இந்த தீவிரவாதிகளின் கொட்டம் அடங்கும் என்கிறார்கள் நாம் சந்தித்த அதிகாரிகள் அனைவரும் ஒரே குரலில். மத்திய அரசு என்ன செய்யப் போகிறது!? அரசியல், சொந்த லாப நஷ்ட கணக்குகள் கட்சியைக் காப்பாற்றலாம். ஆனால் நாட்டைக் காப்பாற்ற முடியாது. இரும்புக்கரம் கொண்டு தீவிரவாதக் கும்பலை விரட்டியடிக்க வேண்டிய நேரமிது!-திருவேங்கிமலை சரவணன்/24.09.08

No comments: