Wednesday, August 06, 2008

வக்பு வாரிய கல்லூரி விவகாரமும், ததஜவின் போராட்டமும்!

கேள்வி : வக்பு வாரியக் கல்லூரி விவகாரத்தில் வாரியத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ததஜ போராட்டம் நடத்தியுள்ளதே...?

பதில் : அணுசக்தி ஒப்பந்தம், மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற வற்றில் போராட்டங்களை நடத்தாதவர்கள், வக்பு வாரியத்தை மட்டும் குறிவைக்கிறார்கள் எனில், அவர்களது பொறாமை குணம்தான் இதற்கு காரணம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இனி விளக்கத்திற்கு வருவோம். அதாவது வக்பு வாரியக் கல்லூரியை முன்னேற விடாமலும், கண்ணியக் குறை வான செயல்களை செய்துக் கொண்டும் ஒரு கூட்டம் தொடர்ந்து செய்து வந்த பித்தலாட்டத்திற்கு, எதிராக மதுரை மக்கள் வெகுநாட்களாக குமுறிக் கொண் டிருந்தார்கள். அதனடிப்படையில் அக்கல்லூரியை எல்லா வகையிலும் மேம்படுத்துவதற்காக வக்பு வாரியத் தலைவர் செ.ஹைதர் அலி எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறார்.

இதற்கு சிலர் அழகிரி பெயரை சொல்லி இடையூறு செய்தனர். அங்கு புதிதாக போடப்படும் 9 பேராசிரியர் களையும் முஸ்லிம் அல்லாதவர் களையே போட வேண்டும் என அடம்பிடித்தனர். இதற்கு வக்பு வாரியத் தலைவர் அசைந்து கொடுக்கவில்லை. பிறகு முதல்வர் கலைஞரை சந்தித்து வாரியத் தலைவர் முறையிட்டார். அதன் பிறகுதான் ஒன்பது பேரில் குறைந்தது ஐந்து முஸ்லிம் பேராசிரியர்களையாவது நியமிக்க வேண்டும் என முடிவானது. ஹைதர் அலி இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் 9 பேராசிரியர்களும் முஸ்லிம் அல்லாத சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டிருப் பார்கள் என்பது மனசாட்சி உள்ளவர் களுக்கு தெரியும்.

முதல்வரின் மகன் பெயரை பயன் படுத்தி சிலர் துஷ்பிரயோகம் செய்ய வந்த போதும், அதை முதல்வரிடமே முறையிட்டு 9 பேரில் 5 பேரை முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக நியமித் ததற்கு முறைப்படி பார்த்தால் பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பொறாமை காரணமாக குறை சொல்கிறார்கள்.

இத்தனை வருடங்கள் மோசமான நிலையில் வக்ஃபு வாரியம் இருந்தபோது, அதற்கு எதிராக போராடாதவர்கள் இப் போது தமுமுகவின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்கள் வக்பு வாரியத்திற்கு தலைவராக பொறுப்பேற்ற பிறகு போராடுகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? யார் துண்டுதல் என்பதை மக்களின் முடிவுக்கு விட்டு விடுகிறோம்.

- தமுமுக இணையத்தளம்

14 comments:

Anonymous said...

http://abunoora.blogspot.com/2008/08/blog-post_09.html

Unknown said...

அபு நூறாவையெல்லாம் கவனித்து கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டிருக்காதீர்கள்.

நானும் அவர் பிளாக்கை பார்த்திருக்கிறேன். கம்மண்ட் பண்ணினேன் ஆனால் என்னுடைய கம்மண்ட்டை அபு நூறா பதிவு செய்ய வில்லை.

அவர்களுக்கு சாதகமாக இருந்தால்தான் பதிவாகும் என்று தெரிந்து கொண்டேன். மார்க்கத்தில் உண்டா இல்லையா என்று பார்க்காமல் அவர்களின் கொள்கைக்கு பாதகம் இல்லாமல், சாதகமாக இருந்தால் மட்டுமே பதிவாகும்.

அபு நூறாவுக்கும் ரிபாயி என்பவருக்கும் நடந்த இமெயில் தொடர்புகள் அபு நூறா என்பவரின் பிளாக்கிலே "அபு நூறாவும் அதிசய ரிபாயியும்" என்று தலைப்பிட்டு 6 பாகங்களாக வெளிவந்தது. அந்த ஆறு பாகத்தை படித்த நான் இது முழுமையடையவில்லையே என்று எண்ணி என்னுடைய கருத்தை

"ரிபாயி உங்களுக்கு அனுப்பிய மெயில்களை முழுவதுமாக வெளியிடுங்கள் அப்போதுதான் புரிந்து கொள்ள முடியும் இல்லை உங்களுக்கு மட்டுமே இது நியாயமாக இருக்கும்" என்ற கருத்து வருவது போல அபு நூறா பிளாக்கிற்கு Comment (குறிப்பு) அனுப்பினேன்.

பதிவாக வில்லை

சில மெயில்கள் ஆபாசமாக இருந்ததால் பதிவு செய்யவில்லையாம். (ஆபாசமாக இருப்பதால் அவர்களின் கண்ணியம் கருதி வெளியிடவில்லையாம் - அபு நூறா பிளாக்கில்தான் இந்த வாசகத்தை போட்டு தப்புகிறார்கள். ரொம்ப நல்ல ஜோக்) ஆபாசமாக ரிபாயி கடிதம் இருந்தால் இந்த அபு நூறாவுக்கு என்ன வந்தது? பதிவு செய்ய வேண்டியதுதானே?

அபு நூறாவும் அதிசய ரிபாயியும் என்று பாகம் போட்டு வெளியிடுவதற்கு முன்பாக யோசித்திருக்கவேண்டும்?

ததஜ தொண்டர்கள் நம்பலாம் மற்றவர்கள்?

அபு நூறாவுக்கும் ரிபாயிக்கும் நடந்த அனைத்து மெயில்களையும் பதிவு செய்தால்தானே படிப்பவர்களுக்கு உண்மை விளங்கும். அப்படியில்லாமல் வேண்டியதை மட்டும் பதிவு செய்வதை அவதூறு என்றுதானே சொல்லமுடியும்.

இப்படி உள்ள பிளாக்கை கவனிக்க வேண்டுமா?

எனவேதான் சொல்கிறேன் அபு நூறாவையெல்லாம் கவனித்து கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டிருக்காதீர்கள்.

Anonymous said...

அபு நூறா சைட்டுக்கு லிங் போட்டிருப்பது கூட அபு நூறாவாகத்தான் இருக்கும். ஏன் அதை அவர் பெயரில் போட வேண்டியது தானே?

Anonymous said...

நானும் இந்த http://abunoora.blogspot.com தளத்தைப் பார்த்தேன். தனக்குத்தானே புகழ்ந்து கொள்ளும் தளம். தான் சொல்வது மட்டுமே தான் சார்ந்திருக்கும் கொள்கை மட்டுமே சரி, அது தான் நியாயம் என்று சொல்பவர்களுக்கும், மற்றவர்கள் மீது அவதூறு, கண்மூடித்தனமாக புழுதி வாரி வீசுவோருக்கும் ஏற்ற தளம். இதை தவிர்த்து வேறு நியாயமான, நேர்மையான கருத்துக்களை இதில் காண முடியாது. தான் சார்ந்திருக்கும் அமைப்பு எதை செய்தாலும் நியாயம் என்றும் மற்றவர்கள் எதைசெய்தாலும் தவறு என்றும் சொல்லும் தளம்.

ஷேக் அலாவுதீன்

Anonymous said...

ஆபாசமாக ரிபாயி கடிதம் இருந்தால் இந்த அபு நூறாவின் பிளாக்கிற்கு எப்படி கண்ணியம் குறையும்? ஆபாசமாக மெயில் அனுப்பியது ரிபாயி என்றால் அவருக்குதானே கண்ணியத்தில் குறைவு ஏற்படும். அபு நூறாவின் பிளாக்கிற்கு ஒரு நஷ்டமும் இல்லையே.

ABU NOORA said...

அஸ்ஸலாமு அலைக்கும்

மதி (கெட்ட) வாணன் உண்மையில் யாரென்று அவரது எழுத்திலிருந்தே புலப்படும். இல்லையென்று மறுக்கட்டும். மதிவாணனுடன் நேரடியாக தொடர்பு கொள்ள நாம் தயார். வேறு இடம் கிடைக்காமலிருந்தால் அங்கும் இங்குமாக அலைவது மதியீனனின் வேலை.

அபூ நூறாவை அசிங்கப்படுத்த அவரது லிங்கைப்போட்டால்தான் அடுத்த குறிப்பு எழுத முடியும் என்பது இந்துத்துவக் கொள்கையே. இருந்தாலும் அதன் மூலம் அபூ நூறாவுக்கு லாபம் மட்டுமே.

போகுமிடமெல்லாம் அபூ நூறாவின் வலைதளத்தை பார்வையிடாதீர்கள். அவரது மெயிலுக்கு பதிலெழுதாதீர்கள் என்று அழுது புலம்புவதன் மூலம் அபூ நூறா அதிகமதிகம் அறிமுகமாகின்றார்.

அன்புடன் அபூ நூறா.

Anonymous said...

தமுமுக செய்யும், சமுதாய துரோகங்களை மறைத்து, அவர்கள் தர்ஹா கோஷ்டிகளுக்கு தமுமுக அடிக்கும் ஜால்ராவை மறைத்து, வக்பு வாரியத்தில் திருடனை வைத்தியிருக்கும் தமுமுகவிற்கு ஜால்ராடிக்கும் உங்களின் தளம் அறுமையிலும் அருமை.

- அபூஷஹீத்

Anonymous said...

அபூ நூறா என்பவர் அவருக்குரிய தற்பெருமையை வெளிப்படுத்தாமல் மதி வாணன் செய்திருக்கும் விமர்சனத்திற்கு பதில் சொல்லட்டும். மதி வாணனின் கொள்கை இந்துத்துவக் கொள்கையாகட்டும் வேறு எதுவாக இருந்துவிட்டு போகட்டும் அது பதில் அல்ல. ஏகத்துவ கொள்கையில் இருக்கிறேன் என்று சொல்லும் அபூ நூறாவுக்கு மதி வாணன் செய்திருக்கும் விமர்சனத்திற்கு பதில் சொல்வதுதான் ஏற்றதாகும் அதுவே முறையாகும். அதற்கு தயக்கம் ஏன்?

ஷேக் அலாவுதீன்

Anonymous said...

அபூ நூறா ஏன் புலம்புகிறார் என்று நமக்கு புலப்பட வில்லை. மதி வாணன் சொல்வதில் நியாயம் இருக்கிறது. தவறை சுட்டிக்காட்டும் போது திருந்திக்கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ரிபாயி மெயில்களை பதிவு செய்து விட வேண்டியது, பாகம் போட்டு மெயில்களை வெளியிட்ட அபூ நூறாவுக்கு கடமையாக தெரியவில்லையா? அபூ நூறா ஏன் சமுதாயத்தை குழப்ப வேண்டும்? ஏன் மறைக்க வேண்டும்? ரிபாயி எப்படி மெயில்களை அனுப்பினாரோ அப்படியே பிளாக்கில் வெளியிடுவதில் அபூ நூறாவுக்கு என்ன தயக்கம்? மெயில்களில் சாதகமானதை மட்டும் வெளியிடுவதுதான் ததஜ வின் கொள்கையா?

Anonymous said...

இம்மாம்புட்டும் கத்து கத்துணு கத்துறீங்களே? ஒலகம் அளிஞ்சது மாதிரி பெனாத்திறீங்களே? ரிஃபாய்கிட்ட இதுபத்தி வாய் தொறக்கச் சொல்லுங்கெ. அத உட்டுப்புட்டு மதிவாணன் பெயர்லெயும் அன்வர் பெயர்லெயும் அலம்பாதீங்க.

Anonymous said...

மறைக்கப்பட்ட மெயில்களை வெளியிட இவ்வளவு வெட்கமா? அபூ நூறா வகையறாக்களுக்கு மறைக்கப்பட்ட மெயில்களை வெளியிட சொன்னால் கோபம் பீறிடுகிறது. அபு நூறாவும் அதிசய ரிபாயியும் என்று பாகம் போட்டு வெளியிடுவதற்கு முன்பாக இதையெல்லாம் யோசித்திருக்கவேண்டும்? அபு நூறா என்பவர் ரிபாயிக்கு அனுப்பிய மெயில்களில் எவற்றையெல்லாம் abunoora.blogspot.com பிளாக்கில் வெளியிடாமல் வைத்திருக்கிறாரோ யாருக்கு தெரியும்? அது போல ரிபாயி மெயில்களில் எவற்றையெல்லாம் அபு நூறா வெளியிடாமல் வைத்திருக்கிறாரோ யாருக்கு தெரியும்? ரிஃபாய்கிட்ட இதுபத்தி வாய் தொறக்கச் சொல்லுங்கெ என்று Anonymous சொல்வது சரிதான். அபூ நூறா ரிபாயினுடைய email id ஐ இந்த விமர்சனம் பகுதியில் வெளியிட வேண்டும். அப்போதுதான் அவரிடம் மறைக்கப்பட்ட மெயில்களை அனுப்புமாறு மெயில் அனுப்ப முடியும். இருந்தாலும் ததஜ கொள்கையுடைய அபூ நூறா, தனக்கு சாதகமான மெயில்களை மட்டும் திறமையாக வெளியிட்டு மற்ற மெயில்களை மறைத்தது ததஜ கொள்கையா? அபூ நூறா தயக்கமின்றி மெயில்களை வெளியிட வேண்டியதுதானே?

ஷேக் அலாவுதீன்

Unknown said...

ரிஃபாயியே இதை பெரிது படுத்தாதபோது மற்றவர்கள் ஏன் இப்படி பிரச்சனை படுத்துகிறார்கள்?

அன்சாரி - தஞ்சை said...

அஸ்ஸலாமு அலைக்கும்!
தனக்கு சாதகமனதை மட்டும் உபயோகிப்பதுதனே ததஜவின் கொள்கை? ஆதாரமான கருத்தையும் யரைவது பொய்யராக்கி கருத்தை பலகீனப்படுத்துவது ததஜவிற்கு கைவந்த கலை என்பது உங்களுக்கு தெரியது போலும்.

Unknown said...

அபூ நூறா என்பவர் தனக்கு வந்த மெயில்களை பிளாக் போட்டு வெளியிடவேண்டிய அவசியம் இல்லை. வெளியிடும்பட்சத்தில் முறையாக அனைத்து மெயில்களையும் வெளியிட்டிருக்க வேண்டும். சாதகமான மெயில்களை வெளியிட்டு மற்றவைகளை மறைத்தது அபூ நூறாவின் தவறுதான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இருந்தாலும் ரிஃபாயியே இதை பெரிது படுத்தாதபோது மற்றவர்கள் ஏன் இப்படி பிரச்சனை படுத்துகிறார்கள்? தேவையில்லையே என்றுதான் சொல்கிறேன்.