Tuesday, August 19, 2008

வீக்கான லீக் - புதுக் கட்சி குத்பதீன் பாய்ச்சல்


வீக்கான லீக்
- புதுக் கட்சி குத்பதீன் பாய்ச்சல்

முஸ்லிம் சமுதாயத்திற்கான புதிய அரசியல் வரவு இந்திய தேசிய மக்கள் கட்சி (ஐ.டி.எம்.கே) "இஸ்லாமிய பணக்காரர்களும் இணைந்த அமைப்பாக மாறிவிட்டது முஸ்லிம் லீக்" என்ற குற்றச் சாட்டுடன் நம்மை சந்தித்தார் ஐ.டி.எம்.கே வின் மாநிலத் தலைவர் குத்புதீனு் ஐபக். 25 ஆன்டுகளுக்கு முன் நெல்லை மாவட்டம் மீனட்சிபுரத்தில் ஏற்ப்பட்ட மதக் கலவரத்தால் பாதிக்கப் பட்ட தலித் மக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு மாறினார்கள். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கூறியூர் கிராமத்தில் தேவேந்திர மக்கள் பலர் மதம் மாறினர். அதை முன்னின்று நடத்திய முன்னால் போலீஸ்காரர் முகம்மது அலி ஜின்னா, ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய வாரிசுகளில் ஒருவர்தான் குத்புதீன் ஐபக்.

இவருடைய முதன்மை கோபம் முஸ்லிம் லீக் மீதுதான். அதுகுறித்த விமர்சனத்துடன் வந்தவரிடம், ஐ.டி.எம்.கே வின் தேவை என்ன என்பது பற்றி கேட்டோம்.

"முஸ்லிம் மக்களுக்காக பல இயக்கங்கள் இருக்கும்போது ஐ.டி.எம்.கே கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன?"

இது குறிப்பிட்ட மதத்திற்கான கட்சி அல்ல. ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான கட்சி இது. அதே நேரத்தில் சிதறிக் கிடக்கும் முஸ்லிம்களை பெரும் அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டுமென்பதுதான்" எங்கள் லட்சியம்."

"திடீரென் முஸ்லிம் லீக் மீது குற்றம் சுமத்த என்ன காரணம்?"

"தனியாக ஒரு நாட்டையே (பாக்கிஸ்தான்) பெற முடிந்த கட்சிதான் முஸ்லிம் லீக் ஆனால், இன்றைக்கு தோடதலுக்காக ஏதாவது ஒரு கட்சியில் சீட் வாங்கி அந்த கட்சி சின்னத்திலேயே போட்டியிட்டு அதற்கு பிரதிநிதியாகிவிடுகின்ற நிலைமைதான் உள்ளது. அதற்கு இப்ப எம்.பி யாக இருக்கிற காதர்மொய்தீன் முஸ்லிம்கள் நலன் பற்றியோ, தமிழ்நாட்டு நலன் பற்றியோ பார்லிமென்டில் பேசியிருக்கிறாரா? லீக் இன்றைக்கு எங்க சமுதாயத்திலிருந்து லீக்காகி, சீக்காகி,வீக்காகி விட்டது அதனால்தான் புதிதாக தோன்றிய த.மு.மு.க தவ்ஹீத் ஜமாத் அமைப்புகள் வேகமாக வளர்ந்தன். ஆனால் அவர்களும் சரியில்லை, இவர்களை அடையாளம் காட்ட எங்கள் இந்திய தேசிய மக்கள் கட்சி பாடுபடும்.

என்று சொன்ன குத்புதீன் ஐபக் "தமிழகத்தன் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ஐ.டி.எம்.கே யின் கிளைகளை தொடங்கி வருகிறோம்" என்றார். இஸ்லாமியர்களுக்கான இந்த புதிய அமைப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஆதரவும் ஆலோசனையும் வழங்கி வருவதால் ஐ.டி.எம்.கே யின் கவனம் நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் மீது பதிந்துள்ளது.

- சேகுவேரா

நன்றி : நக்கீரன் 21.06.2008
.
"முஸ்லிம் மக்களுக்காக பல இயக்கங்கள் இருக்கும்போது ஐ.டி.எம்.கே கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன?"
.
சமூக ஒற்றுமைக்கு என்ன செய்வீர்கள்?
.
தமுமுக அரசியலுக்கு வந்துவிட்டதே ஐடிஎம்கே வை கலைத்து விடுவீர்களா?
.
.

1 comment:

Abu Waseema said...

முஸ்லிம் லீக்கை பற்றி விமர்சிக்காதவர்கள் இல்லை.
அந்த வரிசையில் அண்ணன் குத்புதீன் ஐபக்கும் ஒருவர். முஸ்லிம் லீக்குக்கு போட்டியாக புதிய கட்சிகள் ஆரம்பித்து வந்தவர்கள் போன இடம் தெரியவில்லை.
இந்திய வரலாற்றில் முஸ்லிம் லீக் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை மாறாக வாழ்ந்ததாகத் தான் சரித்திரம். உலகம் உள்ள வரை இன்ஷா அல்லாஹ் முஸ்லிம் லீக் இருக்கும்.
அபுவஸீமா. குவைத்