Sunday, June 08, 2008

காயிதே மில்லத் பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க சிந்திப்பீர்!! ஓர் இறை! ஓர் குலம்!!

காயிதே மில்லத் பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்
அவர் படம் அல்ல, பாடம்.


கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்கள்

WWW.IDMK.ORG

காயிதே மில்லத் என்கிற பெயர் தனி மனித பெயர் அல்ல. அது ஒரு சரித்திரம். விடுதலை வரலாற்றோடும், இந்திய அரசியலோடும், முஸ்லிம்களோடும், பின்னிப் பினைந்த பெயர்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத். காயிதே மில்லத் ஒரு விளம்பரப் பொருள் அல்ல. இஸ்லாமிய சமூகத்தின் அரசியல் விடியலுக்கு வித்திட்டவர். உன் வீடு தேடி ஓட்டுக்காகவும், சீட்டுக்காகவும் அரசியல்வாதிகள் வந்ததுண்டு, இன்றோ உன் கல்லறையை நோக்கி தன்னை விளம்பரப் படுத்தி ஓட்டு வாங்க சிலர் வருகிறார்கள்.

அரசியல் ஒரு சாக்கடை அந்த சாக்கடையை சந்தனக் காடாக மாற்றிய பங்கு உமக்கு மட்டும் உண்டு. ஒரு மனிதர் ஒரே நேரத்தில் அரசியல்வாதியாகவும், மனிதனாகவும் இருக்க முடியாது என்ற கூற்றை உடைத்து எரிந்த மாமனிதர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத். பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ணியம் என்ற வார்த்தை இந்த மண்ணில் இருக்கும் வரை காயிதே மில்லத் புகழ் இருக்கும் என்றார். இன்று அவரைப் பின்பற்றுவதாக போலி வேஷம் போடுபவர்கள் அவர் கட்டிக் காத்த கண்ணியத்தைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். பதவி என்பதே ஒரு கண்ணியம் அந்த கண்ணியத்தை இழந்து அற்ப எம்.பி. பதவியை பெறுவதற்கு தன்னை நிறம் மாற்றிக்கொண்டு தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராகி பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினராக கையெழுத்து இடுகிறார். அய்யோ பாவம்!! தாய்ச்சபை தடுமாறி, உருமாறி, நிறம்மாறி நிற்கிறது. வரலாற்று பேரியக்கம் வத்தலாய் வாடி வதங்கி தொத்தலாய் நிற்கிறது. ஆம்! மரணித்த பிறகு மணி விழாவா? மரணித்த இதயங்களால் மாற்றங்களைக் கொண்டு வரமுடியாது. இளைஞர்களே சிந்தியுங்கள்.

தி.மு.க.வின் கொறடா எப்பொழுது எதைப் பற்றி பேச அனுமதி அளிக்கிறாரோ அப்பொழுதுதான் பேச முடியும். இவர் எப்படி சமுதாயத்தின் குரலை ஒலிக்க முடியும்? திராவிட கட்சிகள் காயிதே மில்லத் கண்ட முஸ்லிம் லீக்கையும், முஸ்லிம் லீக்கை குறை சொல்லி எழுந்த இயக்கங்களையும் கற்கண்டாய் நினைத்து, கடவாய் பற்களில் போட்டு மென்று விழுங்கி ஏப்பம் விட்டு விட்டன. காயிதே மில்லத்தின் ஒற்றை அடையாளத்தை அழித்து விட்டனர். தயவு செய்து காயிதே மில்லத்தின் நினைவு நாளில் அவர் பெயரை களங்கப்படுத்தாதீர்கள். அவர் பெயர் கூட உங்களை காரி உமிழும். காயிதே மில்லத் வெறும் படம் அல்ல. அவர் ஒரு பாடம். அந்தப் பாடத்தை மறுபடியும் படியுங்கள். அவர் பிறந்த நாளில் சமுதாயச் சிந்தனைவாதிகளாக மாறுங்கள். சிந்திப்பவர்களுக்கு மட்டுமே.


இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

தமிழ்நாடு செல் : 9943802111, 9344510369, 9443021050

Qaid-e-Millat M. Muhammad Ismail Saheb

12 comments:

Anonymous said...

தமிழகத்தில் புதிதாக முஸ்லிம் அமைப்புகளை தொடங்குபவர்களும், முஸ்லிம்கள் அரசியல் கட்சி தொடங்குபவர்களும் காயிதே மில்லத் அவர்களால் ஆரமிபிக்கப்பட்ட தாய்ச்சபையான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கையும், அதன் தலைவர்களையும் விமர்சித்து அடையாளம் காட்டிக்கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். இது வாடிக்கையாகவே போய்விட்டது பாவம் என்ன செய்வது?

முகவரி தேடிக்கொள்ள இப்படித்தானே செய்ய வேண்டியிருக்கிறது.

இவர்களுக்கு தன்னுடைய சாதனையையும் விவேகமான செயல்பாட்டையும் சொல்ல என்ன இருக்கிறது? ஏதாவது சரக்கு இருந்தால்தானே சொல்லமுடியும்?

அதற்குத்தான் இப்படி காயிதே மில்லத் உருவாக்கிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கையும், அதன் தலைவர்களையும் விமர்சித்து அடையாளம் காட்டிக்கொள்ள குறுக்குவழி தேட வேண்டியிருக்கிறது.

காயிதே மில்லத் உருவாக்கிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கையும், அதன் தலைவர்களையும் குறைசொல்லாமல் இவர்களால் முஸ்லிம் அரசியல் கட்சியையோ அமைப்புகளையோ நடத்த முடியாது என்பது தெளிவாகிறது.

அந்த அளவிற்கு காயிதே மில்லத் உருவாக்கிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் 60 ஆண்டு கால சாதனைமிக்க வீரியமிக்க செயல்பாடு இவர்களை பாதித்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லாமல் இத்தனை வருடங்கள் தாம் ஆரம்பிக்கும் இயக்கம் உயிருடனும் உணர்வுடனும் இருக்குமா என்கிற கேள்வியும் அவர்களை தொத்திக்கொண்டிருக்கிறது.

எப்படி சுன்னத் ஜமாஅத் ஆலிம்களை தாக்காமல் குறை சொல்லாமல் அவர்கள் மீது வீண்பழி சுமத்தாமல் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தவ்ஹிது ஜமாஅத் நிர்வாகிகளால் ததஜ என்கிற அமைப்பை நடத்தமுடியாதோ அதுபோலத்தான் காயிதே மில்லத் உருவாக்கிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கையும் அதன் தலைவர் கே.எம். காதர் முகைதீன் அவர்களையும் விமர்சனம் செய்யாமல் மாற்று முஸ்லிம் அமைப்பையோ மாற்று முஸ்லிம் அரசியல் கட்சியையோ தமிழகத்தில் நடத்தமுடியாது என்கிற உண்மையை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

அன்சாரி - தஞ்சை said...

To the Anonymous Brother! your comment was well said, I totally agree with you even though I do not support any group.

Any political party or any groups they never tell about their stratagy without harrasing others. As a true (being siad them self) mulsim every groups are proving them self they are the wonderfull & best dirty politicians in the political drainage.

May Allah Give them the right guidence.

Ansari B A

பிறைநதிபுரத்தான் said...

‘தாய் சபை' க்கு ஆதரவு குரல் கொடுப்பவர் அடையாளம் மறைத்து 'அனானி' யாக பின்னூட்டமிட காரணமே தாய் சபையின் சுய நலமிக்க -சந்தர்ப்பவாத செயல்பாடுகள் தானே காரணம்?. ‘முஸ்லிம் லீகன்' என்று மார் தட்டும் காலமெல்லாம் கரையேறி விட்டது.

காயிதே மில்லத் என்ற தனிபட்ட ஒரு நபரின் பெயரைக் சொல்லிக்கொண்டே - தமிழக இஸ்லாமிய மக்களை ஏமாளிகளாக்கிய - கோமாளிகளின் கூடாரத்தில் (தாய்ச்சபை) புல் முளைத்து விட்டது.

60 ஆண்டுகால 'சாதனைமிக்க வீரியமிக்க செயல்பாடுகளை பட்டியலிட வேண்டியதில்லை - கடந்த 20 ஆண்டுகால செயல்பாடுகளில் - ஒரு சிலதையவது பட்டியலிட அனானி தயாரா?

சுய அடையாளம் இழந்து - சூரியன் சின்னத்தில் போட்டியிட்டுக்கொண்டு - 'தாய்ச்சபை' 'தாய்ச்சபை' என்று அனானி கூறுவது பிதற்றல் கலந்த - பினாத்தலாக தெரிகிறது. - காதர் முகையதீன் - 'கழக' முகையதீனாகி பல ஆண்டுகளாகிவிட்டது அனானிக்கு தெரியாதா?.

மறைந்து ‘மர்ஹூமான' 'தாய்ச்சபை'இன்னும் உயிருடன் இருப்பதாக அனானி கூறுவது சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.

நிறைவாக, சுன்னத் வல் ஜ்மாத்தை எதிர்த்து - தவ்ஹீத் ஜமாத இயங்க முடியும்;. தவ்ஹீத் ஜமாத்தை எதிர்த்து - த.மு.மு.க வளர முடியும் ஆனால் முடமாகி போன முஸ்லீம் லீக்கால் எதுவும் செய்ய இயலாது.

Anonymous said...

'தாய் சபை' க்கு ஆதரவு குரல் கொடுப்பவர் அடையாளம் மறைத்து 'அனானி' யாக பின்னூட்டமிட காரணமே தாய் சபையின் சுய நலமிக்க -சந்தர்ப்பவாத செயல்பாடுகள் தானே காரணம்?. 'முஸ்லிம் லீகன்' என்று மார் தட்டும் காலமெல்லாம் கரையேறி விட்டது.

கரையேறிய முஸ்லிம் லீக்கை, சுய அடையாளம் இழந்து - சூரியன் சின்னத்தில் போட்டியிட்டுக்கொண்டு - 'தாய்ச்சபை' 'தாய்ச்சபை' என்று அனானி கூறுவது பிதற்றல் கலந்த - பினாத்தலாக தெரிகிறது என்று சொல்லும் பிறைநதிபுறத்தான்,. - காதர் முகையதீன் - 'கழக' முகையதீனாகி பல ஆண்டுகளாகிவிட்டது அனானிக்கு தெரியாதா என்று கேட்கும் பிறைநதிபுறத்தானுக்கு முஸ்லிம் லீக்கை விமர்சனம் செய்வதில் பலனில்லை என்று தெரியவில்லையா?

60 ஆண்டுகால 'சாதனைமிக்க வீரியமிக்க செயல்பாடுகளை பட்டியலிட வேண்டியதில்லை - கடந்த 20 ஆண்டுகால செயல்பாடுகளில் - ஒரு சிலதையவது பட்டியலிட அனானி தயாரா? என்று கேட்கும் பிறைநதிபுறத்தானிடம் நான் கேட்பது என்னவென்றால் நீங்கள் ஆதரிக்கும் இயக்கத்தின் 10 மாத செயல்பாட்டை பட்டியலிடுங்கள்.

மறைந்து 'மர்ஹூமான' 'தாய்ச்சபை'இன்னும் உயிருடன் இருப்பதாக அனானி கூறுவது சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது என்று சொல்லி தனிமையில் சிரித்துக்கொண்டிருக்கும் பிறைநதிபுறத்தானிடம் நான் கேட்பது என்னவென்றால் 'மர்ஹூமான' 'தாய்ச்சபையை' இன்னும் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்? உங்கள் சிரிப்புக்கு என்ன அர்த்தம்? அதையாவது சொல்லுங்கள். நீங்களே சொல்கிறீர்கள் 'மர்ஹூமான' 'தாய்ச்சபை' என்று. அந்த 'செத்துப்போன' 'தாய்ச்சபையை' கண்டு ஏன் நீங்கள் அலறுகிறீர்கள்? ஏன் அதை கண்டு நடுங்குகிறீர்கள்? முகவரியுடைய பிறைநதிபுறத்தானுக்கே தெளிவாக தெரிகிறது 'செத்துப்போன' 'தாய்ச்சபையை' விமர்சனம் செய்துதான் விளம்பரம்' தேட முடியும் என்று. இது சிந்திப்பவர்களுக்குத்தான் தெரியும்.

ஆதரவாக விமர்சனம் செய்திருந்தால் முகவரி தெரியப்படுத்தாமல் அனானியாக பதிவு செய்திருந்தாலும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். இல்லையென்றால் இப்படித்தான். எதையாவது சொல்லனுமுல்ல. அனானி நான் - நீங்கள் பிறைநதிபுறத்தான் அவ்வளவுதானே அப்ப நீங்களும் முகவரி கொடுக்கலே அப்படித்தானே.

பிறைநதிபுறத்தானுக்கு ஏன் இவ்வளவு கோபம்? முஸ்லிம் லீக் செத்துப்போய்விட்டது என்றால் அறிவுடையவர்கள் விமர்சிப்பார்களா? அறிவுடையவர்கள் சொல்லட்டுமே. இல்லை செத்துப்போன முஸ்லிம் லீக்கை விமர்சனம் செய்வதால் என்ன பலன் கிடைக்கிறது என்றாவது சொல்ல பிறைநதிபுறத்தான் தயாரா? பதில் சொல்லிவிட்டு பிறைநதிபுறத்தான் தனிமையில் சிரித்தாலும் சரி, மேடை போட்டு சிரித்தாலும் சரி நமக்கு கவலையில்லை.

எப்படி சுன்னத் ஜமாஅத் ஆலிம்களை தாக்காமல் குறை சொல்லாமல் அவர்கள் மீது வீண்பழி சுமத்தாமல் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தவ்ஹிது ஜமாஅத் நிர்வாகிகளால் ததஜ என்கிற அமைப்பை நடத்தமுடியாதோ அதுபோலத்தான் காயிதே மில்லத் உருவாக்கிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கையும் அதன் தலைவர் கே.எம். காதர் முகைதீன் அவர்களையும் விமர்சனம் செய்யாமல் மாற்று முஸ்லிம் அமைப்பையோ மாற்று முஸ்லிம் அரசியல் கட்சியையோ தமிழகத்தில் நடத்தமுடியாது என்கிற உண்மையை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். சமுதாயச் சிந்தனைவாதிகளாக மாறுங்கள். சிந்திப்பவர்களுக்கு மட்டுமே.

சிந்திப்பவர்களே பதில் சொல்லுங்கள் முடமாகி போன முஸ்லீம் லீக்கை அறிவுடையவன் விமர்சிப்பானா?

பிறைநதிபுரத்தான் said...

சிந்திப்பவர்களே சொல்லுங்கள்! கேரள மாநிலத்தில் வடக்கு மாவட்டங்களில் மட்டும் - இயங்கி வரும் ஒரு கட்சியை 'இந்திய யூனியன்' என்ற அடைமொழியோடு - சிலாகித்து அழைப்பது கொஞ்சம் ‘ஓவராக' தெரியவிலையா?

அறிவுடையவர்களே சொல்லுங்கள்! காயிதே மில்லத் என்ற ஒற்றை நபருக்கு கொடுக்கப்பட்ட மரியாதையை – காயிதே மில்லத்தின் மறைவுக்கு 'கொள்கையை காற்றில் பறக்கவிட்ட' இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர்பார்ப்பது நியாயமா?

சமுதாயச் சிந்தனைவாதிகளே சொல்லுங்கள்! என்னுடைய பின்னூட்டத்தில் நான் விமர்சித்திருப்பது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கையா அல்லது அனானியின் கருத்தையா?

அறிவுடையவர்களே சொல்லுங்கள்! காயிதே மில்லத்த்தின் - கால் தூசிக்கு ‘காதர் மெய்தீன்' இணையாவாரா?

சமுதாய சிந்தனைவாதிகளே சொல்லுங்கள்! தலைவர்களை மட்டும் கொண்டுள்ள முஸ்லிம் லீக்கை – சுன்னத் வல் ஜமாத், த.த.ஜ மற்றும் த.மு.மு.க போன்ற மக்கள் ஆதரவு பெற்ற அமைப்புக்களோடு ஒப்பிடுவது சரியா?

Anonymous said...

பிறைநதிபுரத்தான் ஏன் இப்படி புலம்பிக்கொண்டிருக்கிறார்? பட்டிமன்றம் நடத்தாமல் யாராவது அவருக்கு ஆறுதல் சொல்லுங்களேன்.

Unknown said...

Dear Pirainathipurathan,

I fully agree with your assessment of IUML. I hope even Kader Mohideen will do the same.

I kindly request you not to argue with the 'addressless- anonymous fellow'.

Sorry for writing in English.

Anonymous said...

பிறைநதிபுரத்தான்,

கேரள மாநிலத்தில் வடக்கு மாவட்டங்களில் மட்டும் - இயங்கி வரும் ஒரு கட்சியை 'இந்திய யூனியன்' என்ற அடைமொழியோடு - சிலாகித்து அழைப்பது கொஞ்சம் ‘ஓவராக' தெரியவிலையா?

இந்த கேள்வியை, சென்னையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய தேசிய மக்கள் கட்சியை(IDMK)-வை பார்த்து கேட்க தயாரா?

Anonymous said...

பிறைநதிபுரத்தான் கேட்கும் முன்பு நான் கேட்கிறேன்..தமிழ் தேசிய உணர்வு பேசும் தமிழ் நாட்டில்
ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான கட்சிக்கு 'இந்திய தேசிய மக்கள் கட்சி(IDMK)- என்று பெயர் சூட்டியது சரியா?

-ஹாஜா மெய்தீன்

Anonymous said...

தமுமுக வாக இருந்தாலும் சரி, ததஜ வாக இருந்தாலும் சரி, ஐ டி எம் கே வாக இருந்தாலும் சரி, எந்த கட்சியையும் அமைப்பையும் சாராத தனி நபர் என்று சொல்பவராக இருந்தாலும் சரி நிதானமாகவும் நடுநிலைமையாகவும் செயல்படட்டும். ஐ யு எம் எல் லும் சரி.

Manali Magic Food (Sam N Raf) said...

விமர்சிப்பவனும் ஓர் நாள் விமர்சிக்க படுவான் என்பதை நினைவில் கொண்டு எழுதிருக்கிறாய். விமர்சிக்க படுவனுக்கு ஒரு தகுதி வேண்டும். நீங்கள் மற்றும் உங்கள் அமைப்பும் எந்த சாதனையும் கிழித்து விட வில்லை. சுய விள‌ம்பரம் தேடாதீர்கள். யாரையும் சாடுவதற்க்கு முன்பு உங்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா? என்று சுய பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். இக்கட்டுரை எழுதிய நீயோ உனது அமைப்போ இது வரை இந்த சமுதயத்திற்க்கு என்ன செய்திருக்கிறாய். சினிமாகாரர்கள் தான் பெட்டிகடை போன்று அரசியல் கட்சி தொடங்கிவிட்டனர். அதை போன்று தான் இருக்கிறது உங்கள் அறியாமையும்.

உங்கள் கொள்கை என்ன, உங்கள் இலட்சியம் என்ன, உங்கள் தகுதி என்ன, என்று முதலில் தெறிய படுத்துங்கள். என்னைவிட சிறியவர் என்று யாரையும் நான் குறைத்து மதிப்பிடுவதில்லை. ஆனால் உஙகள் சாதனைகளை குறைத்து மதிப்பிடுகிறேன்.

அறுவடை செய்ய ஆசைபடுபவன், முதலில் நிலத்தில் விதைக்கனும்,பராமரிக்கனும், ஊட்டதிற்க்கு உறம் கொடுக்கனும், பின்பு பதம் வரும் போது தான் அறுவடை செய்ய முடியும். இதில் ஒன்றும் செய்யாமல் அறுவடைக்கு ஆசைபடுவது, என் மகனின் மகன் அறிவுக்கும் குறைவனது. முதலில் விதையுங்கள், மக்கள் மன‌தில் விளையுங்கள், நாங்கள் உங்களுக்கு அறுவடை செய்து கொடுக்கிறோம்.

கேள்வி கேட்பவனுக்கு பதிலும் தேறிந்திருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு முதலில் விமர்சிக்கும் அல்லது விமர்சிக்கபடும் தகுதி பேற்ற பின்பு விமர்சிங்கள்

இதை கூறியது

மணலியார்
அல்‍‍‍கோபர்‍_சவுதி அரேபியா

Unknown said...

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கையும் அதன் தலைவர்களையும் எள்ளிநகையாடியவர்கள் தனக்குத்தானே வெட்கப்பட்டுக்கொள்ளுமளவிற்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் மணிவிழா மாநாடு சிறப்பாக நடந்தேரியது. 21-06-2008 அன்று நடைப்பெற்ற மணிவிழா மாநாடானது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கையும் அதன் தலைவர்களையும் விமர்சித்து பிழைப்பு நடத்துபவர்களின் முகத்தில் கரியைப்பூசிய மாநாடாகும். திராவிடர் கழக மாநில தலைவர் கி.வீரமணி அவர்களின் 'விடுதலை' (22-6-2008 இதழில்) பத்திரிக்கையில் 'தீவுத் திடலில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை இஸ்லாமிய மக்களின் கூட்டம் காணப்பட்டது' என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாவம் என்ன செய்வது முஸ்லிம் சமுதாயத்தில் புதிதாக அரசியல் கட்சி, அமைப்பு நடத்துபவர்களுக்கு கண் பொட்டையாகிவிட்டது போலும். நாங்கள் தான் சமுதாய இயக்கம் என்று சொல்லிக்கொள்ளக் கூடியவர்களுக்கும், விருப்பு வெறுப்பின்றி நடுநிலைமையாக பதிவு செய்வோம் என்று சொல்லிக்கொள்ளக் கூடியவர்களுக்கும் 21-06-2008 அன்று நடைப்பெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் மணிவிழா மாநாடு பற்றிய செய்தியை வெளியிடும் தகுதியை இழந்து விட்டார்கள் அல்லது வெட்கமடைந்துவிட்டார்கள் என்பது அவர்கள் பதிவு செய்யாததிலிருந்தே வெட்டவெளிச்சமாகிவிட்டது. எந்தக்கட்சியையும், அமைப்பையும் சாராதவர் என்று சொல்லிக்கொள்பவர்கள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் செய்தியை நாங்கள் பதிவு செய்வதில்லை என்றும் சொல்லிக்கொள்ளட்டும் அதுதான் எந்தக்கட்சியையும், அமைப்பையும் சாராதவர் என்று சொல்லிக்கொள்பவரின் நாகரிகமான செயலாக இருக்கும் அல்லது எந்தக்கட்சி, அமைப்பு சம்பந்தப்பட்ட செய்தியையும் பதிவு செய்வதில்லை என்று முடிவு செய்து வெளியிட்டாலும் அதுவும் எந்தக்கட்சியையும், அமைப்பையும் சாராதவர் என்று சொல்லிக்கொள்பவரின் நாகரிகமான செயலாக இருக்கும் அதை விட்டுவிட்டு ஒருதலைபட்சமாகவே பதிவு செய்துகொண்டிருக்கக்கூடியவர்கள் எந்தக்கட்சியையும், அமைப்பையும் சாராதவர் என்று சொல்லிக்கொள்ள தன்மானம் இருந்தால் வெட்கப்படட்டும். தன்மானம் உள்ளவன், எந்தக்கட்சியையும் அமைப்பையும் சாராதவன் என்று சொல்லிக்கொள்பவன் நடுநிலைமையாக இருப்பான்.