கடந்த 25.05.2008 அன்று தினமலரில் ""தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி பின்னனி குறித்து போலிஸார் விசாரனை" என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது அதில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தறித்து எழுதியிருந்த அந்த செய்திக்கு மனித நீதிப் பாசறை தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தது அது குறித்து 27.05.2008 அன்றைய தினமலர் கீழக்கண்டவாறு மறுப்பு வெளியிட்டுள்ளது.
மனித நீதிப் பாசறை எதிர்ப்பு
சென்னை, மே 27- மனித நீதிப் பாசறை சார்பில் சுதந்திர தினத்தன்று அணிவகுப்பு நிகழச்சி நடக்கவுள்ளதாக அந்த அமைப்பு தெறிவித்துள்ளது.
மனித நீதிப் பாசறை மாநிலத் தலைவர் முகமது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கை :
மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் தேசிய இயக்கமான "பாப்புலர் பிண்ட் ஆப் இந்தியா" சார்பாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின அணிவகுப்பு நடத்த திட்மிட்டுள்ளோம். தமிழகம் கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் இந்த அணிவகுப்பு நடக்கிறது. அதற்கான அணிவகுப்பு பயிற்சி மற்றும் ஒத்திகைகளை தமிழகம் முழுவதும் நடததி வருகின்றோம்.
இது குறித்து மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரமும் செய்துள்ளோம். காவல் துறை அதிகாரிகளிடம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தெறிவித்துள்ளோம். இந்துக்களுடன் இணைந்து போராடிப்பெற்ற சுதந்திரத்தில் ஒற்றுமையை நிலை நிறுத்தும் முகமாகவும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது. நாங்கள் எப்போதும் வெளிப்படையான அமைப்பாகத்தான் செயல்பட்டு வருகின்றோம். பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பதில்லை. இவ்வாறு முகம்மது அலி ஜின்னா தெறிவித்துள்ளார்.
தினமலர், சென்னை பதிப்பு
செவ்வாய்கிழமை, 27.05.2008
பக்கம் 14
No comments:
Post a Comment